ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கண்மணி வார நாவல் 25.04.2018
 தமிழ்நேசன்1981

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 ayyasamy ram

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 ayyasamy ram

என்னைப் பற்றி...
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கந்தர் அலங்காரம் 38 , 40 , 47

View previous topic View next topic Go down

கந்தர் அலங்காரம் 38 , 40 , 47

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Thu Dec 24, 2015 2:17 am
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
  கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
     தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
        தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.   ...     38

சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
  மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
     வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
        கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே.   ...     40

பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
  தித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப்
     புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்
        தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே.   ...     47  


நாள் சரியில்லை நான் செய்த வினை என்னை விடாதுபோல தெரிகிறது கோள்கள் கோசாரம் எனக்கு சாதகமாக இல்லை .கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனால் அங்கும் ரெண்டு கொடுமை திங்கு திங்குன்னு குதிக்கிதே வம்பா வருது சாமி

அப்படியே மூச்சை பிடித்துக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கும் நிலையை நாம் கடந்திருப்போம்

ஆனால் சோதனைகளைப்பற்றி வேதங்கள் என்ன சொல்கின்றன ?


I கொரிந்தியர் 10:13 மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக,சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.

கஷ்டமான காலங்களில் நாம் முக்கிக்கொண்டும் முனகிக்கொண்டும் கடந்து வந்தோமே அவைகள் மீண்டும் சம்பவித்தால் நம்மால் இப்போது தாங்கிக்கொள்ள பலம் உள்ளது என்று சொல்வீர்களா ?

நிச்சயமாக முடியாது . அவ்வளவு கஷ்டத்திலும் அதை தாங்கிக்கொள்ளும் உள்ளார்ந்த பலத்தை இறைவனே அனைவருக்கும் வழங்குகிறார்

நாம் அமைதியாக மன ஆறுதலுக்கு முடிந்தளவு கோவிலுக்கு சென்று சமயம் வாய்க்கும் அளவும் பிரார்த்தனை தியானம் செய்துகொண்டிருந்தாலே போதும் அல்லது விளக்கு போட்டுக்கொண்டிருந்தால் போதும்

கஷ்ட்டங்களை விட அவைகளைப்பற்றி நமக்கு நாமே அலட்டிக்கொள்வதுதான் அதிக உபத்திரவம் கொடுப்பது நமது மனம் இருக்கிறதே அது உயர்வாகவோ தாழ்வாகவோ எதையாவது அலட்டிகொண்டே இருக்கும்

சும்மாயிரு சும்மாயிரு – முருகன் அருணகிரிநாதருக்கு உபதேசித்த ஒரே ஒரு வார்த்தை

இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற்
றென்றுவரு மோஅறியேன் எங்கோவே-துன்றுமல
வெம்மாயை யற்று வெளிக்குள் வெளிகடந்து
சும்மா இருக்கும் சுகம்.

வள்ளலாரின் ஞானப்புலம்பல் இவ்வரிகள்

சும்மாயிருக்கும் சுகம் . வெளிக்குள் வெளி கடந்து நாம் பரலோகத்தில் நுழைந்தால் அங்கு என்ன செய்வோமாம் ? சும்மாயிருப்போமாம்

நம்மிடம் துன்றும் துள்ளிக்குதிக்கும் கரைதிரைகள் மாயைகள் சுயம் என்ற உணர்வைத்துண்டி இறைவனுக்காக காத்திருப்பதற்கு பதிலாக எதையாவது செய்யவைத்து பூமியில் குழப்பம் விளைவிக்கிறது  

தேவர்கள் எவ்வளவு ஆற்றல் உள்ளவர்களாக இருந்தாலும் சுயமாக எதுவும் செய்யமாட்டார்கள் . இறைவன் கட்டளையை மட்டமே நிறைவேற்றுவார்கள் மற்ற நேரங்களில் சும்மாவே இருப்பார்கள் அதனால்தான் பரலோகத்தில் குழப்பம் எதுவும் நேர்வதில்லை


நாமாக ஏதாவது செய்வதால்தான் பிரச்சினைகள் வருகின்றன . ஆனால் இறைவா என இறைஞ்சிக்கொண்டு இறைவனையே நம்பிக்கொண்டு இறைவனையே எதிர்பார்த்து சும்மா இருக்க கற்றுக்கொண்டால் இறைவன் சித்தம் எதுவோ அதை மட்டும் செய்யவும் நம்மை சுற்றிலும் இறை சித்தம் எதுவோ அதுமட்டுமே தானாக நடப்பதையும் பார்ப்போம்

கந்தரலங்காரத்தில் செயல் மாண்டு அடங்குதல் வேலையை ஒழித்தல் சும்மாயிருத்தல் என்ற வார்த்தைகளை அருணகிரியார் அடிக்கடி உச்சரித்துள்ளார்

இதை சரியாக புரிந்துகொள்வது கிருபையாலன்றி முடியாதது சோம்பேறித்தனத்தை கொண்டுவந்து விடும்

நம் மேல் சுமரும் கடமைகளை பிரார்த்தனை செய்துகொண்டே கிடைக்கும் வழியில் செய்து கொண்டே இருப்பது இறைவனைத்தான் நம்பி இருக்கிறேன் என மனதில் சொல்லிக்கொண்டே இருப்பது காரியம் நடந்ததும் அதைப்பற்றி மனதில் பெருமை பாராட்டாமல் இறைவனுக்கு நன்றி சொல்வது இப்படியே இறைவனிடம் வேண்டுவதால் அவர் காரியம் செய்வதாக செயல்படுவது . இது மனநிலை சார்ந்த விசயம் ஒரு யோகமும் கூட.

உலகிற்கு அவன் சும்மாயிருக்கும் போதும் மனத்தால் அவன் இறைவனிடம் பிரார்த்தனை என்ற செயல் செய்துகொண்டே இருப்பான்

உலகிற்கு அவன் செயல்படும்போதும் இறைவன் தன்னை அச்செயல் செய்யவைப்பதாக அவன் மனம் கருதிக்கொள்வதால் அவனைப்பொருத்து அவன் செயல்படாதவனாக இருக்கிறான் எந்த உணர்வும் வயப்படுவதில்லை படபடப்பதில்லை கொந்தளிப்பதில்லை முடிந்தளவு நேர்த்தியாக அக்காரியத்தை செய்துவிட்டு அதன் பலனை இறைவனுக்கு அர்ப்பனித்துவிடுகிறான்

கீதை 4:18 யார் தன் மீது சுமறும் எல்லா செயல்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டு வினையாற்றினாலும் செயலில் செயலை கடந்த மனநிலையும் செயல்படாத போதும் செயலை நிர்வகிக்கிற மனநிலையும் அடையப்பெறுகிறானோ அவனே அறிவுதிறமுடையவன்! நித்திய ஜீவனை அடைவதற்கான பரிபக்குவத்தில் பயனிக்கிறவன்!!  

குழப்பங்களுக்கு காரணம் நமது சுய அலட்டலே . இறைவன் மீது பாரத்தைப்போட்டு இறைவனுக்காக காத்திருந்தால் குழப்பங்கள் வராது

இறைவனுக்காக காத்திருப்பது எவ்வாறு ?

கும ரேசரிரு
     தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
        தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே

குமார் ராம் ரோம் முருகன் என்பதெல்லாம் அதிதேவர்களில் ஒருவரான நாராயணன் பூமிக்கு மனிதனாக வரும் அவதாரம் ஆகும் . அவர் பூமியில் மனிதனாக வரும்போது ஈசனுக்கு பிள்ளை அதாவது குமரேசன் சிவக்குமார் மனுஷகுமாரன்  . இயேசு பூமியிலிருந்த போது தன்னை மனுஷகுமாரன் என்றே அழைத்தார்

பூமிக்கு அவதாரமாக வருகிற யாரும் முருகனே . அல்லது அவர்களின் அருள் பெற்ற இறைதூதர்கள் அருளாளர்கள் யார் மூலமாக நமக்கு இறைவனின் வழிகாட்டல்கள் வருகிறதோ அவர்களை அன்டிக்கொள்வது . அவர்களிடம் நம் இடறல்களை ஒப்புவிப்பதும் விடுதலையை கொடுக்கும்

நமக்கு ஆவிமண்டலத்தில் யார் குரு வழிகாட்டி என்பதை கண்டறிவது அவரின் தொடர்பில் பூமியில் நம் முன்னோடியான மனிதன் யார் என்பதை பிரார்த்தித்தால் இறைவனே காட்டித்தருவார்

சர்குருவாம் முருகனின் பாதங்களை சரணடைந்து அவரோடு ஐக்கியம் புண்ட சிலம்புகலான மனிதர்களை கண்டறியவேண்டும் . அவர்களின் முலமாக வரும் வழிகாட்டுதல்களே சதங்கை ஒலி . இந்த ஒலிகளோடு வழிகாட்டுதல்களோடு இயைந்து வாழபழகினால் அடுத்த படி நோக்கி உயர்வோம்

அப்போதே சண்மார்க்கங்களாக ஆறு மார்க்கங்களாக வெளிப்பட்டுள்ள இறைநடத்துதல் தத்துவங்கள் நமக்கு வெளிப்படும் அதன் சிறப்புகளான தண்டை அணிகலன்கள் தரிசிக்கப்படும் இறைவனோடு கட்டப்பட்ட கடம்ப வாசனை நம்மிடமும் பெருக்கெடுக்கும்

முருகனின் அம்சங்களான இறை அடியவர்களின் பார்வை பட்டால் பொக்குபாறை போன்ற மாயைகள் அழியும் . கிரவுஞ்ச மலை என்ற மாய மலையை உருவாக்கி அதில் சூரன் மறைந்துகொண்டு உலகை தாக்கிகொண்டுள்ளான் . அந்த மாயையை முருகனின் ஞானவேல் மட்டுமே உடைக்கமுடியும் . திருச்செந்தூரில் வள்ளி குகை என்பது பொக்குபாறையாக அடையாளமாக இருக்கும்

இறைதூதர்களின் வார்த்தைகள் என்ற ஞானமே செந்தூர் என்ற மாயைகளின் பொழிலை அழிக்கவல்லது . மாயைகள் அழியும்போது இறைஞானம் என்ற கடம்பவாசனை அடியவர்களான வள்ளிக்குரத்திகளின் சுயம் என்ற மனத்தை அழிக்கும் இவையெல்லாம் சம்பவிக்கும்போது என்ன நடக்குமாம் ?

மாமயிலோன்
     வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
        கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே

ஞானம் சூரன் என்ற அசுரனையும் அவன் மாயைகளை மட்டுமா அழிக்கும் ; நம் தலையெழுத்தையும் மாற்றி செயல் மாண்டு அடங்க கற்றுக்கொடுத்துவிடும்

பக்தியோகம் கைகூடினால் ஒழிய குண்டலினியை ஏற்றி இறக்குவதால் வந்துவிடாது

பக்த்திதிரு முகங்களான ஆறு மார்க்கங்களையும் பன்னிரு தோழ்களுமான அமுதத்தை சமரச வேதத்தை சமரச சண்மார்க்கத்தை கண்டுணர்ந்து சரணாகதி அடையவேண்டும்

அப்போது தானாகவே மனிதனின் உச்சியிலுள்ள கமலமான சகஸ்ரத்தில் குண்டலினியும் இறைஅருளும் உருகி பொங்கி வழிந்து உலகம் முழுமையும் பேரானந்த சகாரத்தை உண்டாக்குமாம்

புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்
        தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே

கடவுளின் பரமானந்த சாகரம் என்ற அன்பை பக்தியோகத்தால் மட்டுமே நாம் ருசி பார்த்து உலகம் முழுவதிலும் அதை நிரப்ப முடியும்

நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


 avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: கந்தர் அலங்காரம் 38 , 40 , 47

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 24, 2015 11:19 am

avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7676
மதிப்பீடுகள் : 1794

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum