ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வாரத்தில் இரண்டு நாட்கள் முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்…!
 ayyasamy ram

ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்…
 ayyasamy ram

நீ…நீயாக இரு….!
 ayyasamy ram

நூல்கள் தேவையா !!!!!
 Senthil Krishna

ஜியோபோன் விநியோக தேதி மாற்றம்; வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!
 ayyasamy ram

மாற்றுதிரனாளிகள் சிறுதொழில் தொடங்கிட உதவி
 கனகராஜ் பசுமைசங்ககிரி

கக்கனுக்குப் பேரன் என்பதே பெரும் பாக்கியம்! - ஹரிசேகரன் ஐ.பி.எஸ்.
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
 ayyasamy ram

இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
 ayyasamy ram

அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
 ayyasamy ram

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 vashnithejas

2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் )
 MANOJMAHE

இது வாட்ஸ் அப் கலக்கல்
 ayyasamy ram

கிரிக்கெட் வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது
 ayyasamy ram

மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
 ayyasamy ram

போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
 ayyasamy ram

மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
 ayyasamy ram

2க்கு மேல் பெற்றால் வேலையில்லை : சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
 ayyasamy ram

மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணம்: டிராய் குறைப்பு
 ayyasamy ram

நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
 ayyasamy ram

ஆங்கில நாவல்கள் தமிழில்
 Saravana2945

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
 T.N.Balasubramanian

என்னவென்று நான் சொல்ல" - முத்துலட்சுமி ராகவன் 1 முதல்3 பாகம் வரை
 ANUSUYA DHURGAIMUTHU

12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
 ayyasamy ram

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
 ayyasamy ram

"தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்?
 Pranav Jain

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Pranav Jain

Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
 Pranav Jain

பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
 ayyasamy ram

சஸ்பென்ஷன்’ பாலம்
 ayyasamy ram

புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
 ayyasamy ram

முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
 ayyasamy ram

பாசனத்திற்கு காவிரி நீரை பயன்படுத்த அரசு தடை
 ayyasamy ram

ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
 ayyasamy ram

மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
 sinjanthu

இலவசமாக தரவிறக்கம் -லட்ஷ கணக்கில் புத்தகங்கள்
 sinjanthu

(REQ) சிவகாமி பர்வம் பாகுபலி பாகம் 1
 sinjanthu

மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
 ayyasamy ram

அரசியலில் விவகாரம் : துணை ஜனாதிபதி, ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் அடுத்தடுத்து ஆலோசனை
 M.Jagadeesan

உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
 ayyasamy ram

தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 T.N.Balasubramanian

சண்முகத்தின் சயாம் மரண ரயில் என்ற நாவல் தேவை
 pon.sakthivel

அறிமுகம்
 T.N.Balasubramanian

முத்துலட்சுமி ராகவன்- " அம்மம்மா கேளடி தோழி" 1 முதல் 5 பாகம் வரை
 ANUSUYA DHURGAIMUTHU

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 மகேந்திரன்

என். சீதாலக்ஷ்மி யின் " மலரும் இதழே" தமிழ் நவல்
 ANUSUYA DHURGAIMUTHU

என் . சீதாலக்ஷ்மி-யின் " அன்பில்லார் எல்லாம் " தமிழ் நவல்
 ANUSUYA DHURGAIMUTHU

ஏபிசிடியே தெரியாது, இவரெல்லாம் நாட்டை எப்படி ஆள்வார்? கமலுக்கு சுப்பிரமணியன் சுவாமி கேள்வி
 M.Jagadeesan

ஜாக்கியின் காதல் பரிசு..!
 vashnithejas

பூவே இளைய பூவே
 ayyasamy ram

இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..
 anikuttan

iசென்னையில் மழை -விளையாட்டில் வெற்றி மழை.-கிரிக்கெட் /பேட்மிண்டன்
 ayyasamy ram

நீ நடக்குமிடமெல்லாம் அழகு ! (ஸ்வீடன் மொழிப்பாடல்)
 sinjanthu

தொடத் தொடத் தொல்காப்பியம்(459)
 Dr.S.Soundarapandian

வீழ்வதற்கல்ல! - கவிதை
 Dr.S.Soundarapandian

தலைவருக்கு எது அலர்ஜி?
 Dr.S.Soundarapandian

முரண்கள்- கவிதை
 Dr.S.Soundarapandian

செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
 Dr.S.Soundarapandian

அழகுத் தேவதை ! (இத்தாலிய நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

விஜயகாந்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை இப்படித்தான் நடக்குமோ?!

View previous topic View next topic Go down

விஜயகாந்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை இப்படித்தான் நடக்குமோ?!

Post by கார்த்திக் செயராம் on Fri Dec 25, 2015 4:45 am

முன்குறிப்பு: இக் கட்டுரையில் இடம்பெறும் சம்பவங்களும் வர்ணனைகளும் முழுக்க கற்பனையே. ஆனால், அவை எதிர்காலத்தில் நிகழவும் வாய்ப்பிருக்கிறது என்பதை மறுப்பதிற்கில்லை! 

ஒரு பக்கம் விஜயகாந்தை கூட்டணிக்காக மக்கள் நலக் கூட்டணி கையைப் பிடித்து இழுக்க, மறுபக்கம் கருணாநிதி வாய்விட்டே வரவேற்பு கொடுக்கிறார். வழக்கம்போல விஜயகாந்த் முறுக்கிக் கொண்டிருக்கிறார். வரும் நாட்களில் இந்த கூட்டணிப் பேச்சுவார்த்தை இன்னும் கலகல அத்தியாயங்களை எட்டும். அதை நமது கற்பனையில் இப்போதே ஓட்டிப் பார்த்தோம். நீங்களும் உங்கள் மனத்திரையில் ஓட்டிப் பாருங்கள்..!  

தே.மு.தி.க. அலுவலகத்தில் காலை 9 மணிக்கு உள்ளூர் பா.ஜ.க. தலைவர்களுடன்  காஃபி குடித்துக் கொண்டே ஆரம்பிக்கும் பேச்சுவார்த்தை, 9.30 க்கு மக்கள் நல கூட்டணியோடு நீர்மோருடன் டெவலப்பாகி, 10 மணிக்கு ரோஸ்மில்க்கோடு திமுகவில் வந்து நிற்கிறது. இதுபோக, அதிமுக, காங்கிரஸ், ஜி.கே. வாசன்,  பாமக,  தமிழர் முன்னேற்றப் படை வீரலட்சுமி என கேப்டனின் கால்ஷீட் அடுத்த ஒரு மாசத்துக்கு ஃபுல். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுகிற டொனால்ட் ட்ரம்ப்பே தனது வெற்றிக்கு கேப்டன்தான் ட்ரம்ப் கார்டு என்பதால், கேப்டனின் அப்பாய்ன்ட்மென்ட் கேட்டு காத்திருப்பதாக பிபிசி பதைபதைக்கிறது.

உள்ளூர் எட்டுப்பட்டி  பஞ்சாயத்தை பேசித்தீர்ப்பதற்கே கேப்டனுக்கு நேரமில்லாத காரணத்தால், ட்ரம்ப்பை டீலில் விட்டுவிட்டதாக 'நெம்ப'த்தகுந்த கோயம்பேடு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கேப்டனின் அலுவலகத்தில் தமிழிசை அண்ட் கோ நீண்ட நேரமாக காத்திருக்கிறது. சற்றே பொறுமையாக உள்ளே வருகிறார் கேப்டன். தமிழிசை அண்ட் கோ வணக்கம் வைக்கிறார்கள். 'வெள்ள நிவாரணம்  எல்லாம் குடுத்து முடிஞ்சாச்சும்மா, நீங்க இனிமே உங்க ஏரியா கவுன்சிலரைத்தான் போய் பார்க்கணும்' என்கிறார் கேப்டன். தமிழிசைக்கு தூக்கி வாரிப்போடுகிறது. "கேப்டன்... நான் தமிழிசை, தமிழக பாஜக தலைவர், கூட்டணி சம்பந்தமா உங்ககிட்ட பேச வந்திருக்கோம்" என்கிறார் தமிழிசை.

சுதாரித்துக்கொண்ட கேப்டன்,  "இப்பதான் உங்களுக்கு நான் இருக்குறதே ஞாபகம் வந்துச்சா? டெல்லி யிலேர்ந்து யார் யாரோ வர்றாங்க, அந்தம்மாவைப் பாக்குறாங்க, ரஜினியை பாக்குறாங்க, விஜய் தம்பியைப் பார்க்குறாங்க, நம்மளை ஒருத்தர்கூட வந்துப் பாக்கலை, டெல்லில எல்லாம் ஸ்வெட்டர் டிசைன் டிசைனா கிடைக்கும்னு சொல்வாங்க, யாராவது வாங்கிட்டு வருவாங்கன்னு பார்த்தேன், ம்ஹூம். தேர்தல்ன்ன உடனே என்  ஞாபகம் வந்துடுச்சா..?" என கேப்டன் எகிற, "வாங்க கேப்டன் உள்ளப் போய் பேசுவோம்" என தமிழிசை சமாளிக்கிறார்.கேப்டன் கொஞ்சம் யோசித்துவிட்டு, "சரி, ஒண்ணு பண்ணுங்க, எங்க கண்டிஷன்ஸ் என்னென்னன்னு சுதீஷ் சொல்வாப்ல, அந்தா இருக்குல்லா முதல் ரூம், அங்கப் போயி காஃபி குடிச்சுக்கிட்டே பேசி முடிவு பண்ணுங்க. வைகோ வர நேரமாச்சு" என்கிறார். வேறு வழியில்லாமல் தமிழிசை அண்ட் கோ, சுதீஷ் அண்ட் கோவுடன் இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தைக்கு செல்கிறது. சற்று நேரத்தில் வைகோ தன் சகாக்களுடன் உள்ளே நுழைகிறார்.

இருகரம் விரித்துக்கொண்டே விஜயகாந்த்தை  நோக்கி பேராவலோடு முன்னே செல்லும் வைகோ "ரோமானிய பேரரசின் தெய்வமான ஜுபிடர்  போல உங்களை நினைத்து வந்திருக்கிறான் இந்த வைகோ" என்கிறார். "ஜில்லுன்னு நீர் மோர் இருக்கு, ஆளுக்கு ஒரு தம்ளர் குடிச்சிட்டு, அந்தா இருக்குற இரண்டாவது ரூம்ல நம்ம பேச்சுவார்த்தை டீம் காத்திட்டிருக்கு. போய் உட்கார்ந்து பேசிட்டு வாங்க, என்னென்ன கண்டிஷன்ஸ்னுன்னு சொல்வாங்க" எனும்போது பக்கத்து ரூமில் இருந்து அலறல் சத்தம் கேட்கிறது. விஜயகாந்த சாவகாசமாக, "சுதீசு, அங்கென்னப்பா சத்தம்"? என்க, அங்கேயிருந்து வந்த பதில் "பேசிகிட்டு இருக்கோம் மாமா".விஜயகாந்த் வைகோவிடம் "அது ஒண்ணுமில்ல, எங்க கண்டிஷன்ஸ் எல்லாம் சொன்னோம், அதான் பயந்துட்டாங்க போலருக்கு. ஃப்ர்ஸ்ட் ரவுண்ட் கண்டிஷன்ஸ் என்னான்னு நான் சொல்லிடறேன், நான்தான் முதல்வர் வேட்பாளர். 230 தொகுதில எங்க கட்சி போட்டி போடும், உங்க நாலு பேருக்கும் ஆளுக்கு ஒரு தொகுதி. உங்களுக்கு ஓகேன்னா அந்த இரண்டாவது ரூம்ல போய் உட்காருங்க" என்க, வைகோவைத்தவிர மற்ற மூவர் முகத்திலும் தளர்ச்சி. ஆனால், வைகோ விறுவிறுவென அந்த இரண்டாவது அறையை நோக்கி வேகமாக நடக்கிறார். அப்போது சரிந்துவிழும் தன்  துண்டை கம்பீரமாக தோளில் போடுகிறார்.

மூவரும் வேறு வழியில்லாமல் பின் தொடர்கிறார்கள். அவர்கள் உள்ளே செல்வதற்கும் அடுத்த அறையில் இருந்து தமிழிசை அண்ட் கோ வெளியே வருவதற்கும் சரியாக இருக்கிறது. ஓர் கணம் தமிழிசையின் பார்வை வைகோவின் மேல் நிலைகுத்தி நிற்கிறது. வைகோ அருகில் செல்லும் தமிழிசை "அண்ணே, என்ன இருந்தாலும் நீங்களும் நம்ம கூட்டணியில நாலைஞ்சு மாசம் இருந்தீங்கன்ற நல்லெண்ண அடிப்படையில சொல்றேன், தயவுசெய்து உள்ள போகாதீங்க" என்க, வைகோ பதில் சொல்லாமல் உள்ளே செல்கிறார்.

அவர்கள் உள்ளே செல்வதையேப் பார்த்துக் கொண்டிருக்கும் விஜயகாந்தின் செல்போன் அடிக்கிறது. செல்போனில், 'அணித்தலைவரே வணக்கம், நான் அன்புமணி பேசுறேன்" என்று குரல். விஜயகாந்த், "இப்பவாச்சும் நம்ம கூட்டணிக்கு நான்தான் தலைவர்னு ஒத்துக்கிட்டீங்களே" என சொல்ல, ’'அடடே நீங்க தவறாப் புரிஞ்சுகிட்டீங்க. கேப்டன்ற ஆங்கில வார்த்தையைத்தான் நான் தமிழ்ல சொன்னேன். மத்தபடிக்கு நம்ம கூட்டணிக்கு என்னைக்குமே நான்தான் முதல்வர் வேட்பாளர்.

பட்ஜெட் எல்லாம் போட்டு வச்சுருக்கோம். என் தலைமையிலான கூட்டணியை ஏத்துக்கிட்டு நீங்க நம்ம கூட்டணிக்கு வந்தீங்கன்னா, உங்களுக்கு துணை முதலமைச்சர் பதவி தர தயாரா இருக்கோம்" என்கிறார். "ஹலோ நீங்க நிலவரம் தெரியாமப் பேசுறீங்க, எங்க ரேஞ்சே தனி, இந்தமாதிரி என்கிட்ட நேர்ல பேசியிருந்தீங்கன்னா நடக்கிறதே வேற, உங்க நல்ல நேரம் போன்ல பேசிகிட்டு இருக்கீங்க" என்க லைன் கட்டாகிறது.

விஜய்காந்த் சேரில் அமர்ந்திருக்க, வாசற்கதவு தட்டப்படுகிறது. "எக்ஸ்க்யூஸ்மி கேப்டன்" என வெளியே இருந்து சத்தம். அருகில் இருக்கும் கட்சி நிர்வாகியிடம், "யாருப்பா அது, 'யூஸ் மீ'ன்னு அவுங்கள யூஸ் பண்ணிக்க சொல்லி கேட்கிறாங்க?" என்கிறார். நிர்வாகி மெர்சலாக, ஸ்டாலின் மருமகன் சபரீசனும் துரைமுருகனும் மெதுவாக கதவைத் திறந்து உள்ளே வருகிறார்கள். கேப்டன் அவர்களிடம், "மெதுவா கதவைத் தட்டத் தெரியாதா உங்களுக்கு? நீங்க தட்டுற தட்டுல கல்யாண மண்டபமே இடிஞ்சுடும் போலருக்கே" என்கிறார். "கேப்டன் தம்பிக்கு தலைவர் மாதிரியே குசும்பு... பழசை இன்னும் மறக்கலை போல... அதுக்காக என்ன, வேணும்னா அறிவாலயத்துல ஒரு பக்கத்தை நீங்களே புல்டோசர் விட்டு இடிச்சுக்கங்க. ஆனா, கூட்டணி மட்டும் வேணாம்னு சொல்லாதீங்க" என்கிறார் துரைமுருகன். 

பக்கத்து அறையிலிருந்து 'அய்யோ அம்மா' என அலறல் சத்தம். துரைமுருகன் "இது ரோமானிய பேரரசோட நெருங்கின சொந்தக்காரங்க சத்தம்  மாதிரி இல்ல இருக்கு?" என்க, திரும்பவும் அலறல் சத்தம். துரைமுருகன் "இது தம்பி  திருமாவோட சத்தம்... ஆஹா, அவுங்க முன்னாடியே வந்துட்டாங்களா, வெள்ள நிவாரண நிதி கணக்கெடுப்புக்கு வந்திருந்தாங்க. அவுங்ககிட்ட டோக்கன் வாங்கிட்டு வர்றதுக்கு கொஞ்சம் லேட்டாகிடுச்சு, அதுக்குள்ள இந்த குரூப் வந்துட்டாங்களா?’’ என்கிறார். சபரீசன் முகம் வெளிர்கிறது. துரைமுருகன் "என்ன கேப்டன்... வச்சு செய்றீங்க போல. நாங்க இதுக்கெல்லாம் அசரமாட்டோம், நாங்க பனங்காட்டு நரி, எங்களுக்கு என்னென்ன கண்டிஷன்ஸுன்னு சொல்லுங்க"என்கிறார்.விஜயகாந்த் "உங்க ஆஃபர் என்னன்னு நீங்க சொல்லுங்க" என்று கேட்க, துரைமுருகன்,  "எங்க கட்சி தலைமையில் கூட்டணி,  முதலமைச்சர் வேட்பாளர் எங்க கட்சியிலேர்ந்துதான், உங்களோட 'தமிழன் என்று சொல்' படத்தோட டிவிடியை தமிழ்நாடு முழுக்க ரேஷன் கடைகள்ல இலவசமா வினியோகம் செய்றோம். படத்தோட மொத்த ரைட்ஸையும் கலைஞர் டிவியே வாங்கிக்கும், இந்த மாதிரி ஒரு ஆஃபரை வேற யாராலையும் உங்களுக்கு தரவே முடியாது" என்கிறார். விஜயகாந்த் ஒரு புத்தகத்தைத் தூக்கி டேபிளில் வைக்கிறார்.


துரைமுருகன், "ஓ, நீங்களும் தேர்தல் அறிக்கை எல்லாம் ரெடி பண்ணிட்டீங்களா, வெரிகுட்" என்க, விஜய்காந்த் "இது தேர்தல் அறிக்கை இல்லீங்க, உங்ககூட கூட்டணிக்கு எங்களோட டிமான்ட் எல்லாம் இதுல இருக்கு" என்கிறார். அதிர்கிறார் துரைமுருகன்.

விஜயகாந்த்,  "மத்தவங்களுக்கு எல்லாம் ரெண்டு மூணு பக்க கையேடுதான், உங்ககூட நிறைய கொடுக்கல் வாங்கல் இருக்கில்லையா... அதான் புக்காவே போட்டுட்டோம். சாம்பிளுக்கு வேணும்னா சிலதை சொல்றேன் கேளுங்க. நான்தான் முதலமைச்சர் வேட்பாளர், பிரேமாதான் இணை முதலமைச்சர், சுதீஷ் துணை முதலமைச்சர், எங்க ஆட்சி வந்தா....." துரைமுருகன் மயங்கி சாய்கிறார். சபரீசன் அவரை கைத்தாங்கலாக வெளியே அழைத்து செல்கிறார்.


வெளியே வரும்போது வராண்டாவில் இருக்கும் மூவரைப் பார்த்துவிட்டு கலகலவென சிரிக்கிறார் துரைமுருகன்.  சபரீசனுக்கு ஒன்றும் புரியவில்லை. "ஏன்ணே சிரிக்கிறீங்க" என்க, துரைமுருகன் "இல்ல... யாருக்குமே தெரியாதுன்னு நினைச்சுக்கிட்டு முக்காடு போட்டுட்டு உக்கார்ந்திருக்காங் இவங்க. இவங்களை கேப்டன் என்ன பாடுபடுத்தப் போறாரோ தெரியலை. அதை நினைச்சுதான் சிரிச்சேன்" என்று சொல்லிக்கொண்டே, "என்ன ஓ.பி. சார், சவுக்கியமா?" என்க, முக்காட்டுக்குள்ளிருந்து ஒரு முகம்  வெளியே எட்டிப்பார்த்துவிட்டு தலையை அவசரமாக உள்ளிழுத்துக் கொள்கிறது.


துரைமுருகன் வாசலுக்கு வரும்போது அங்கே வளர்மதி, கோகுல இந்திரா தீச்சட்டியுடன் நிற்கிறார்கள். வேறு சிலரின் வெள்ளை சட்டை எல்லாம் அங்கப்பிரதட்சனம் செய்ததால் ஒரே அழுக்காக இருக்கிறது. துரைமுருகன் வளர்மதி அருகில் சென்று, "உங்ககூட கூட்டணிக்கு வருவார்னு என்ன நம்பிக்கையில இங்க வந்துருக்கீங்க?" எனக் கேட்க, வளர்மதி "நாங்க எங்ககூட கூட்டணி சேரச் சொல்லி கேப்டனைத் தேடி வரலை, உங்ககூட சேராதீங்கன்னு கேட்கத்தான் வந்தோம்" என்று சொல்லிவிட்டு கூட்டத்தை நோக்கி குலவைச் சப்தம் எழுப்ப,  கூட்டமே கைகளில் தீச்சட்டியுடன் கொந்தளிக்கிறது.

உள்ளே... கேப்டன் மொபைலில் ‘P.M Calling' என்று திரை ஒளிர்கிறது!  

நன்றி விகடன்செய்தி
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: விஜயகாந்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை இப்படித்தான் நடக்குமோ?!

Post by ayyasamy ram on Fri Dec 25, 2015 5:44 am

கட்டுரை மிகவும் நகைச்சுவையாக இருந்தது.
நல்ல சிரிப்பை வரவழைத்தது.

ஆனால், விஜயகாந்த் மிக மிக கவனமாக, சிந்தித்து,
தன் கட்சியின் நலன் மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும்
கருத்தில் கொண்டு ஒரு நல்ல முடிவு எடுத்து அவர் பங்கேற்கும்
வெற்றி பெற வாய்ப்புள்ள கூட்டனியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள
வேண்டும்.

அரசில் அவருக்கு ஒரு பொறுப்பு இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30900
மதிப்பீடுகள் : 9490

View user profile

Back to top Go down

Re: விஜயகாந்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை இப்படித்தான் நடக்குமோ?!

Post by ayyasamy ram on Fri Dec 25, 2015 6:36 am

விஜயகாந்த் : ஊழலை எதிர்க்க உங்களால தான் முடியும் சொல்லிருப்பாங்களே?
.
சகாயம் : சொன்னாங்க!
.
விஜயகாந்த் : இந்தியாவை காப்பாத்த உங்களால தான் முடியும் சொல்லிருப்பாங்களே?
.
சகாயம் : சொன்னாங்க!
.
விஜயகாந்த் : தமிழ்நாட்டோட நிரந்தர முதல்வர் நீங்க தானு சொல்லிருப்பாங்களே?
.
சகாயம் : இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும்?
.
விஜயகாந்த் : என்கிட்டயும் சொன்னாங்களே!
-
=======================
நகேந்திரன். நகேன் (டைம்பாஸ் விகடன்)
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30900
மதிப்பீடுகள் : 9490

View user profile

Back to top Go down

Re: விஜயகாந்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை இப்படித்தான் நடக்குமோ?!

Post by கார்த்திக் செயராம் on Fri Dec 25, 2015 7:43 am

ayyasamy ram wrote:விஜயகாந்த் : ஊழலை எதிர்க்க உங்களால தான் முடியும் சொல்லிருப்பாங்களே?
.
சகாயம் : சொன்னாங்க!
.
விஜயகாந்த் : இந்தியாவை காப்பாத்த உங்களால தான் முடியும் சொல்லிருப்பாங்களே?
.
சகாயம் : சொன்னாங்க!
.
விஜயகாந்த் : தமிழ்நாட்டோட நிரந்தர முதல்வர் நீங்க தானு சொல்லிருப்பாங்களே?
.
சகாயம் : இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும்?
.
விஜயகாந்த் : என்கிட்டயும் சொன்னாங்களே!
-
=======================
நகேந்திரன். நகேன் (டைம்பாஸ் விகடன்)
மேற்கோள் செய்த பதிவு: 1182874

மகிழ்ச்சி சிப்பு வருது சிரிப்பு
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: விஜயகாந்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை இப்படித்தான் நடக்குமோ?!

Post by T.N.Balasubramanian on Fri Dec 25, 2015 8:46 am

என்னே கற்பனை !
என்னே எதிர்பார்ப்புகள் !!
எனக்கெனவோ தொங்கும் சட்டசபைதான் 
கண்ணெதிரே காணப்படுகிறது !!!

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20482
மதிப்பீடுகள் : 7842

View user profile

Back to top Go down

Re: விஜயகாந்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை இப்படித்தான் நடக்குமோ?!

Post by ராஜா on Fri Dec 25, 2015 2:26 pm

2016இல் டாக்டர் ஐயா வேற தனியா ஆட்சி அமைக்க போறோம்னு பயமுறுத்துகிறார் புன்னகை


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30667
மதிப்பீடுகள் : 5530

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விஜயகாந்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை இப்படித்தான் நடக்குமோ?!

Post by T.N.Balasubramanian on Fri Dec 25, 2015 6:02 pm

தமிழகத்தை கிழக்கு ,மேற்கு ,வடக்கு ,தென் ,மத்திய தமிழகம் எனப் பிரித்து 
ஐந்து முதல்வர்களை தேர்ந்தெடுக்க வேண்டியதுதான் 
அப்போதுதான் அவரவர் தாகம் தீரும் 

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20482
மதிப்பீடுகள் : 7842

View user profile

Back to top Go down

Re: விஜயகாந்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை இப்படித்தான் நடக்குமோ?!

Post by யினியவன் on Fri Dec 25, 2015 8:47 pm

T.N.Balasubramanian wrote:தமிழகத்தை கிழக்கு ,மேற்கு ,வடக்கு ,தென் ,மத்திய தமிழகம் எனப் பிரித்து 
ஐந்து முதல்வர்களை தேர்ந்தெடுக்க வேண்டியதுதான் 
அப்போதுதான் அவரவர் தாகம் தீரும் 

ரமணியன்

அம்மா, கேப்டன், அன்புமணி, வைகோ, சீமான் - ஐந்து பேர், பாண்டவர்கள் அணி; அய்யா குடும்பம் பெரிது - 100 க்கும் மேல் எனவே அவர்கள் கவுரவர் அணியா இருக்கலாம் புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: விஜயகாந்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை இப்படித்தான் நடக்குமோ?!

Post by T.N.Balasubramanian on Sat Dec 26, 2015 10:38 am

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:தமிழகத்தை கிழக்கு ,மேற்கு ,வடக்கு ,தென் ,மத்திய தமிழகம் எனப் பிரித்து 
ஐந்து முதல்வர்களை தேர்ந்தெடுக்க வேண்டியதுதான் 
அப்போதுதான் அவரவர் தாகம் தீரும் 

ரமணியன்

அம்மா, கேப்டன், அன்புமணி, வைகோ, சீமான் - ஐந்து பேர், பாண்டவர்கள் அணி; அய்யா குடும்பம் பெரிது - 100 க்கும் மேல் எனவே அவர்கள்  கவுரவர் அணியா இருக்கலாம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1182962


குருஷேத்திரம் தான் பாக்கி என்கிறீர் .
நான் கணக்கு போட்டது 
அம்மா /அன்புமணி /கேப்டன் /கலைஞர் /வைகோ அணி 
நடவாத காரியங்கள் -கற்பனை குதிரை தறிகெட்டு ஓடுகிறது .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20482
மதிப்பீடுகள் : 7842

View user profile

Back to top Go down

Re: விஜயகாந்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை இப்படித்தான் நடக்குமோ?!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 26, 2015 7:23 pm

ayyasamy ram wrote:கட்டுரை மிகவும் நகைச்சுவையாக இருந்தது.
நல்ல சிரிப்பை வரவழைத்தது.

ஆனால், விஜயகாந்த் மிக மிக கவனமாக, சிந்தித்து,
தன் கட்சியின் நலன் மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும்
கருத்தில் கொண்டு ஒரு நல்ல முடிவு எடுத்து அவர் பங்கேற்கும்
வெற்றி பெற வாய்ப்புள்ள கூட்டனியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள
வேண்டும்.

அரசில் அவருக்கு ஒரு பொறுப்பு இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
-
மேற்கோள் செய்த பதிவு: 1182852
அவருக்கும் ஒருமுறை சந்தர்ப்பம் கொடுத்து தான் பார்ப்போமே நல்லது
நடந்தால் சரி.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3372
மதிப்பீடுகள் : 789

View user profile

Back to top Go down

Re: விஜயகாந்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை இப்படித்தான் நடக்குமோ?!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 26, 2015 7:30 pm

T.N.Balasubramanian wrote:தமிழகத்தை கிழக்கு ,மேற்கு ,வடக்கு ,தென் ,மத்திய தமிழகம் எனப் பிரித்து 
ஐந்து முதல்வர்களை தேர்ந்தெடுக்க வேண்டியதுதான் 
அப்போதுதான் அவரவர் தாகம் தீரும் 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1182926
ஐந்து முதல்வர் நல்ல யோசனை தான்
1.முதல்வர்- கிழக்கு
2.முதல்வர்- மேற்கு
3.முதல்வர்-வடக்கு
4.முதல்வர்- தெற்கு
5.முதல்வர்- மத்தியம்
வருமானத்தை பங்கிட வசதியாகும்
சண்டை குறைய வாய்ப்பு உள்ளது??????
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3372
மதிப்பீடுகள் : 789

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum