ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 மூர்த்தி

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 ayyasamy ram

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 மூர்த்தி

தெரிஞ்சதும் தெரியாததும்
 மூர்த்தி

திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

இதை சரி செய்ய முடியுமா?
 மூர்த்தி

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 மூர்த்தி

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 மூர்த்தி

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 M.Jagadeesan

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

ஏழு நாடுகளின் சாமி
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 ayyasamy ram

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை ; 2வது முறையாக வென்றது இந்தியா.!
 பழ.முத்துராமலிங்கம்

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 ayyasamy ram

பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்
 ayyasamy ram

சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் கலைக்கென ஓர் இணையதளம்!
 பழ.முத்துராமலிங்கம்

தக்காளி குருமா| Thakkali kurma
 பழ.முத்துராமலிங்கம்

என் மனக்கோவிலின் அழிவில்லா ஓவியமே!!
 kandhasami saravanan

என் அருகில் நீயிருந்தால்.....
 kandhasami saravanan

நானும் அப்பாவானேன்!!
 kandhasami saravanan

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

அல் குர். பகவத் கீதை. பைபிள் . தமிழாக்கம்
 Meeran

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

அமைதியும்????ஆரோக்கியமும்
 Meeran

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

சூப்பரான பன்னீர் பிரியாணி செய்வது எப்படி...?
 பழ.முத்துராமலிங்கம்

உப்பு தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ரொம்ப நல்லது. ஏன் தெரியுமா? வாசிங்க தெரியும்...
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

அறிமுகம் உங்களில் ஒருவனாக
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டணம் திடீர் உயர்வு தமிழகத்தில் இன்று முதல் அமல் ஆகிறது
 M.Jagadeesan

சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கமல்ஹாசனின் கவிதைகள்
 Dr.S.Soundarapandian

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV 1,2,3,4,5,6,7,8,9
 thiru907

விளைச்சல் அமோகம்: பொன்னி அரிசி விலை மூட்டைக்கு ரூ.150 வரை... குறைந்தது!
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டண உயர்வு: எந்த ஊருக்கு எவ்வளவு?
 பழ.முத்துராமலிங்கம்

டாக்டர் ஏன் ரொம்ப படப்பாக இருக்குறாரு...?
 SK

ஆப்பிள் போன ஏண்டா இரண்டா பிளந்தே...?!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (206)
 Dr.S.Soundarapandian

TARGET TNPSC மையம் இன்று வெளியிட்ட (20-01-2108) தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

உடைந்த ஓட்டு வீட்டில் பாடகி 'கொல்லங்குடி கருப்பாயி: பள்ளிக்கு பட்டா கேட்டவரின் ஆசை நிறைவேற்றப்படுமா
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 2
 thiru907

கீ பட இசைவெளியீட்டு விழா: பிரபல நடிகரை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

2015 -இல் தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த 10 படங்கள்

View previous topic View next topic Go down

2015 -இல் தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த 10 படங்கள்

Post by ayyasamy ram on Tue Dec 29, 2015 3:46 pm

மக்கள் நல்ல படங்களை ஓட வைப்பார்கள் என்பது கற்பனையான
நம்பிக்கை.
நல்லதோ கெட்டதோ, தங்களுக்குப் பிடித்தமானதை மட்டுமே ரசிகர்கள்
பார்க்கிறார்கள், ஓட வைக்கிறார்கள். அந்தவகையில் பல நல்ல படங்கள்
இந்த வருடம் கண்டுகொள்ளப்படாமல போயின.
-
அவற்றை யார்தான் பாராட்டி அந்தப் படங்களை உருவாக்கிய கலைஞர்களை
ஊக்குவிப்பது?
-

-
இந்த வருடம் தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த பத்து படங்களைப் பார்ப்போம்.
-
10. தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்
தமிழுக்கு புதிதான அறிவியல் தொழில்நுட்ப களத்தில் இந்தப் படத்தின் ஒருபகுதி
கதை பயணித்தது. அறிவுஜீவித்தனமான களம் ரசிகர்களுக்குப் பிடிக்காது என்ற
ஆகம விதியை உரசிப் பார்த்ததே இதன் முக்கியத்துவம்.

கமர்ஷியல் ஃபார்முலாவைத் தாண்டி கவனிக்க வைத்தது இந்த வித்தியாசமான
கதைக்களம் என்பதில் சந்தேகமில்லை.
----------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33626
மதிப்பீடுகள் : 11007

View user profile

Back to top Go down

Re: 2015 -இல் தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த 10 படங்கள்

Post by ayyasamy ram on Tue Dec 29, 2015 3:49 pm

9. கத்துக்குட்டி
-
கலாபூர்வமாகச் சொல்ல இந்தப் படத்தில் அதிகமில்லை.
மீத்தேன் வாயு எடுப்பது போன்ற அடிப்படையான வாழ்வாதாரப்
பிரச்சனையை நகைச்சுவையுடன் சொன்ன பாங்குக்காக கத்துக்குட்டி
கவனிக்க வைத்தது.

தமிழ் சினிமாவின் அரதபழசான பிரேமுக்குள்ளேயே சமூகப் பிரச்சனைகளை
கோடிட்டு காட்டியதற்காக கத்துக்குட்டிக்கும் தரலாம் ஒரு ஸ்டார்.

-
------------------------------------
8. ராஜதந்திரம்
--
-

-
க்ரைம் த்ரில்லர் கதைகள் தமிழில் அதிகம் வருவதில்லை.
அப்படியே வந்தாலும் காதல், காமெடி, சென்டிமெண்ட் என்று அவியலாக்கி
பார்ப்பவர்களை அவதிக்குள்ளாக்குவார்கள்.
ராஜதந்திரம் அதிலிருந்து மாறுபட்டு க்ரைம் த்ரில்லர் ஜானருக்கான நியாயத்தை
செய்தது. வரவேற்கத்தக்க முயற்சி.
--
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33626
மதிப்பீடுகள் : 11007

View user profile

Back to top Go down

Re: 2015 -இல் தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த 10 படங்கள்

Post by ayyasamy ram on Tue Dec 29, 2015 3:58 pm

7. 36 வயதினிலே
-
-

-
பெண்களை மையப்படுத்திய படங்கள் தமிழில் குறைவு.
அப்படியே வெளிவந்தாலும் லாபம் ஈட்டாது என்பதை 36 வயதினிலேயே
நொறுக்கியது. சாதனை புரிவதுதான் பெண்ணின் அடையாளம் என்றது
கமர்ஷியல் வேல்யூவுக்கு சரி, மற்றபடி ஒவ்வொரு பெண்ணும் தாங்கள்
செய்யும் வேலைகளிலேயே கௌரவத்தை பேணுவதே உண்மையான
பெண் விடுதலை.

எத்தனை பேருக்கு ஜனாதிபதி மாளிகையில் விருந்து சாப்பிடுகிற வாய்ப்பு
கிடைக்கும்? அது கிடைக்காதவர்கள் எல்லாம் கௌரவமாக வாழ
முடியாதவர்களா இல்லை அதற்கு தகுதியில்லாதவர்களா?

இந்த நெருடலைத் தாண்டியும் 36 வயதினிலே முக்கியமானதே.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33626
மதிப்பீடுகள் : 11007

View user profile

Back to top Go down

Re: 2015 -இல் தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த 10 படங்கள்

Post by ayyasamy ram on Tue Dec 29, 2015 3:58 pm

6. எனக்குள் ஒருவன்
-

-
கன்னட திரையுலகில் கத்தி செருகிற லூசியா படத்தின் தமிழ் ரீமேக். இந்த வருடத்தின் மகத்தான தோல்விப் படங்களில் ஒன்றாக இருந்தாலும் இதன் நான் லீனியர் திரைக்கதையும், கதைக்குள் கதை ஊடுபாவும் திரைக்கதையும் புதியதொரு காட்சி அனுபவத்தை தந்தன. வித்தியாசமான திரைக்கதைக்கு முயற்சிக்கும் இயக்குனர்களுக்கு இந்தப் படம் ஒரு முன்மாதிரி.
-
5. இன்று நேற்று நாளை
-

-
தமிழின் முதல் டைம் மெஷின் திரைப்படம். சயின்ஸ் ஃபிக்ஷன் தமிழுக்கு வெகு அந்நியம். அதிலும் டைம் ட்ராவல் என்ற கருவை எடுத்து அதனை வெற்றிகராமாகச் சொன்ன படம். தமிழின் வருங்கால சயின்ஸ் ஃபிக்ஷன் முயற்சிகளுக்கு தன்னம்பிக்கையளித்தது என்ற வகையில் இப்படம் முக்கியமாகிறது.
-
4. கிருமி
-

-
போலீஸ் இன்பார்மர் என்ற அதிகம் அறியப்படாத பிரதேசத்தை கிருமி காட்சிப்படுத்தியது. சென்னையில் இருந்து கொண்டே மனைவியை பார்க்க வராத கணவன், கணவனின் தான்தோன்றித்தனத்தை கேள்வி கேட்காமல் அனுசரிக்கும் மனைவி, வருடங்களாக இன்பார்மராக இருந்தும் போலீஸிடம் பம்மும் சார்லியின் கதாபாத்திரம், சூதாட்டம் நடக்கும் பார் என நம்பகத்தன்மை கிருமியில் மிகவும் குறைவு. என்றாலும் ஹீரோயிசம் இல்லாத திரைக்கதைக்காகவும், யதார்த்தமான காட்சிப்படுத்துதலுக்காகவும் கிருமி கவனிக்க வைக்கிறது.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33626
மதிப்பீடுகள் : 11007

View user profile

Back to top Go down

Re: 2015 -இல் தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த 10 படங்கள்

Post by ayyasamy ram on Tue Dec 29, 2015 4:05 pm

3. பாபநாசம்
-
க்ரைம் த்ரில்லர்களில் இது புது மாதிரி. குடும்பத்துடன் பார்க்கிற மாதிரியான இதன் கதையும், திரைக்கதையும் வெகு அபூர்வம். நெல்லை வட்டார வழக்கில் கமல் சுயம்புலிங்கமாக வாழ்ந்தார். அடுத்து என்ன என்ற கேள்வியுடன் நகர்ந்த திரைக்கதை ரசிகர்களை சீட் நுனியில் கட்டிப்போட்டது. தமிழின் கௌரவமான முயற்சிகளில் இதனையும் சேர்க்கலாம்.

--
2.குற்றம் கடிதல்
-
ஆசிரியர் அடித்ததால் பாதிக்கப்படும் மாணவன் என்ற சின்ன விடயத்தை எடுத்து திரைக்கதை பண்ணப்பட்ட படம் குற்றம் கடிதல். மத்தியதர வர்க்க மனிதர்களை அச்சு அசலாக படம் காண்பித்தது. அருமையான இந்த முயற்சி இன்னும் அதிகம் பேரை சென்றடைந்திருக்க வேண்டும். பிரபலங்களை வைத்து படத்தை விளம்பரப்படுத்தியிருந்தால் இன்னும் அதிகம் பேரை சென்றடைந்திருக்குமோ என்ற ஆதங்கம் படம் பார்த்த அனைவருக்குமே உள்ளது. சமூக உணர்வுள்ள இளைஞனின் கதாபாத்திரம் மட்டுமே இதில் நெருடல். தரத்துக்கேற்ற கவனிப்பு கொஞ்சமும் கிடைக்காத படமிது.

-
1. காக்கா முட்டை
-
சேரி மனிதர்களின் ஒரு துளி, காக்கா முட்டை. ஆம், ஒருதுளிதான். அதையும், பீட்சா ஆசையில் அலையும் இரு சிறுவர்கள் என்ற கருணையின் பாதையில் சஞ்சரித்ததால்தான் இவ்வளவு அதிக பார்வையாளர்களை படம் சென்றடைந்தது. ஹீரோயிசம், காதல் போன்ற எந்த குணமும் இல்லாமல் ஒரு படத்தை எடுக்க முடியும், லாபம் தர முடியும் என்று நிரூபித்ததற்காக காக்கா முட்டை முதலிடத்தை பிடிக்கிறது.
=
நன்றி- தமிழ் வெப்துனியா காம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33626
மதிப்பீடுகள் : 11007

View user profile

Back to top Go down

Re: 2015 -இல் தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த 10 படங்கள்

Post by ராஜா on Tue Dec 29, 2015 5:07 pm

தூங்காவனம் இந்த லிஸ்ட்ல இல்ல , ஒருவேளை இது வேற 2015 போல


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: 2015 -இல் தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த 10 படங்கள்

Post by shobana sahas on Tue Dec 29, 2015 10:02 pm

இதில் பல படங்களை இன்று தான் நாள் கேள்வி படுகிறேன் . சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: 2015 -இல் தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த 10 படங்கள்

Post by ராஜா on Wed Dec 30, 2015 11:24 am

@shobana sahas wrote:இதில் பல படங்களை இன்று தான் நாள் கேள்வி படுகிறேன் . சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1183761tamilrockers.net தளத்தில் அனைத்து படங்களும் துல்லியமான HD தரத்தில் கிடைக்கும் ஷோபனா.. Bittorrent எனும் மென்பொருள் மூலம் தான் தரவிறக்க வேண்டும். புதிய படங்கள் 1 மாதத்திற்குள் HD1080p தரத்தில் வந்துவிடும் புன்னகை


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: 2015 -இல் தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த 10 படங்கள்

Post by krishnaamma on Wed Dec 30, 2015 11:49 am

@shobana sahas wrote:இதில் பல படங்களை இன்று தான் நாள் கேள்வி படுகிறேன் . சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி
நான் அல்மோஸ்ட் எல்லாம் பார்த்துவிட்டேன் ஆனால் எனக்கு எதுவுமே மனதில் நிற்கலை ஷோபனா சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

Re: 2015 -இல் தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த 10 படங்கள்

Post by shobana sahas on Wed Dec 30, 2015 10:37 pm

@krishnaamma wrote:
@shobana sahas wrote:இதில் பல படங்களை இன்று தான் நாள் கேள்வி படுகிறேன் . சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி
நான் அல்மோஸ்ட் எல்லாம் பார்த்துவிட்டேன் ஆனால் எனக்கு எதுவுமே மனதில் நிற்கலை ஷோபனா சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1183980

உண்மை தான் க்ரிஷ்ணாம்மா . 36 வயதினிலே கூட சுமார் தான் .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: 2015 -இல் தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த 10 படங்கள்

Post by shobana sahas on Wed Dec 30, 2015 10:40 pm

@ராஜா wrote:
@shobana sahas wrote:இதில் பல படங்களை இன்று தான் நாள் கேள்வி படுகிறேன் . சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1183761tamilrockers.net தளத்தில் அனைத்து படங்களும் துல்லியமான HD தரத்தில் கிடைக்கும் ஷோபனா.. Bittorrent எனும் மென்பொருள் மூலம் தான் தரவிறக்க வேண்டும். புதிய படங்கள் 1 மாதத்திற்குள் HD1080p தரத்தில் வந்துவிடும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1183967

நன்றி ராஜா அண்ணா . செய்து பார்கிறேன் .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: 2015 -இல் தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த 10 படங்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum