ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யாரு இவரு கண்டுபுடிங்க
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 SK

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 SK

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 ayyasamy ram

ஆதார் காட்டுங்க....!!
 SK

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 SK

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 SK

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 SK

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 M.Jagadeesan

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அணைக்கட்டு சுவரின் அறிவியல்

View previous topic View next topic Go down

அணைக்கட்டு சுவரின் அறிவியல்

Post by T.N.Balasubramanian on Fri Jan 01, 2016 7:31 pm

அணைக்கட்டு சுவரின் அறிவியல்உங்கள் அம்மா, அப்பாவுடன் சுற்றுலா போகும்போது அணைக்கட்டுகளைப் பார்த்திருக்கிறீர்களா? அணைக்கட்டு சுவரின் அடிப்பகுதி அகலமாகவும் மேற்பகுதி குறுகியதாகவும் இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? இதற்குக் காரணம் என்ன? வாங்க, ஒரு சின்ன சோதனை செய்து தெரிந்துகொள்வோம்.

தேவையான பொருட்கள்:

உயரமான பிளாஸ்டிக் பாட்டில் அல்லது ஆய்வக அளவு ஜாடி, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, தடித்த ஊசி, தண்ணீர்.

சோதனை:


# ஓர் உயரமான பிளாஸ்டிக் ‘ஆய்வக அளவு ஜாடி’யை எடுத்துக்கொள்ளுங்கள்.

# மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக்கொள்ளுங்கள்.

# ஊசியை மெழுகுவர்த்திச் சுடரில் சூடுபடுத்திச் சமமாக இடைவெளி விட்டு நேர்க்கோட்டில் துளையிடுங்கள்.

# அளவு ஜாடியைக் கைப்பிடிச் சுவர் மீது நேராக வைத்துக்கொள்ளுங்கள்.# இப்போது அளவு ஜாடி முழுவதும் தண்ணீரை ஊற்றுங்கள். இப்போது என்ன நடக்கிறது எனப் பாருங்கள்?

துளைகளிலிருந்து தண்ணீர் பீய்ச்சி அடிப்பதைப் பார்க்கலாம். ஜாடியின் அடியில் உள்ள துளையிலிருந்து வெளிவரும் தண்ணீர் அதிக தொலைவிலும், ஜாடியின் மேற்பகுதியில் உள்ள துளையிலிருந்து வரும் தண்ணீர் குறைந்த தொலைவிலும் பீய்ச்சி அடிப்பதைப் பார்க்கலாம். இதற்குக் காரணம் என்ன?நடந்தது என்ன?

ஒரு பொருள் மீது செயல்படும் விசைக்கும் பரப்புக்கும் இடையே உள்ள விகிதம் அழுத்தம் எனப்படும். ஓரலகு பரப்பில் செயல்படும் விசை அழுத்தம் ஆகும். திட, திரவ வாயுப் பொருட்கள் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி வைத்தால், பாத்திரத்தின் வடிவத்தை அது பெறுகிறது. பாத்திரத்தின் அடிப்பாகத்தில் ஓரலகு பரப்பில் செயல்படும் நீரின் எடையே அடிப்பகுதியில் உள்ள அழுத்தம் ஆகும்.

திரவத்தில் ஒரு புள்ளியில் செயல்படும் அழுத்தம், புள்ளியிலிருந்து திரவமட்டத்தின் உயரத்தையும் திரவத்தின் அடர்த்தியையும் பொறுத்தது. திரவத்தில் ஏதேனும் ஒரு கிடைமட்டப் பரப்பில் உள்ள எல்லாப் புள்ளிகளிலும் அழுத்தம் சமமாக இருக்கும்.

திடப்பொருள்கள் எப்போதும் கீழ்நோக்கியே அழுத்தத்தைக் கொடுக்கின்றன. ஆனால், திரவங்களும் வாயுக்களும் எல்லாத் திசைகளிலும் அழுத்தத்தைக் கொடுக்கின்றன.

செங்குத்துக் கோட்டில் ஒரே அளவில் துளைகள் இடைப்பட்ட அளவு ஜாடியில் நீரை ஊற்றும்போது, தண்ணீர் வெவ்வேறு தொலைவுகளில் பாய்கின்றன. அளவு ஜாடியில் உள்ள தண்ணீரின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க அழுத்தமும் அதிகரிக்கிறது. மேலே உள்ள துளையிலிருந்து வரும் தண்ணீர், மிகக் குறைந்த தொலைவுக்குப் பாய்கிறது. ஜாடியின் அடியில் உள்ள துளையிலிருந்து தண்ணீர் அதிகத் தொலைவுக்கு வெளியே பாய்கிறது. அதற்கு மேல் உள்ள துளையில் உயரத்துக்கு ஏற்றாற்போல் தண்ணீர் வெளியே பாய்கிறது. ஜாடியில் உள்ள துளைகளிலிருந்து நீர் வெளியே பீய்ச்சி அடிக்கப்படும் தொலைவு, நீரின் அழுத்தத்தைக் குறிக்கிறது.

திரவ மட்டத்திலிருந்து கீழே செல்லச் செல்ல துளையிலிருந்து வெளியேறும் நீரின் தொலைவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுவே சோதனையின் முடிவு. திரவத்தின் ஆழம் அதிகரிக்கும்போது, அழுத்தமும் அதிகரிக்கிறது.

பயன்பாடு:

ஏரிகள், குளங்கள், அணைக்கட்டுகள் ஆகியவற்றின் சுற்றுச்சுவரை அமைக்கும்போது, நீரின் அழுத்தம் கவனத்தில் கொள்ளப்படும். சில அணைக்கட்டுகளில் நீர் திறந்துவிடப் பயன்படும் மதகுகள் வெவ்வேறு உயரங்களில் அமைக்கப் பட்டிருக்கும்.

இப்போது அளவு ஜாடியை அணையாகவும், அளவு ஜாடியில் உள்ள தண்ணீரை அணையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் தண்ணீராகவும், ஜாடியில் உள்ள துளைகளை அணைக்கட்டின் மதகுகளாகவும் கற்பனை செய்துகொள்ளுங்கள். அளவு ஜாடியிலிருந்து வெளியேறும் தண்ணீர், வெவ்வேறு தொலைவுகளுக்குப் பீய்ச்சி அடித்ததல்லவா?

அதைப் போலவே அணைக்கட்டில் வெவ்வேறு உயரங்களில் உள்ள மதகுகளிலிருந்து வெளியேறும் தண்ணீரும் வெவ்வேறு தொலைவுகளுக்கு வேகமாகப் பாயும். அணைக்கட்டின் அடிப்பாகத்தில் உள்ள மதகிலிருந்து அதிக வேகத்துடனும் அதிக தொலைவுக்கும் தண்ணீர் பாயும். அணைக்கட்டின் மேற்பகுதியில் அமைந்த மதகிலிருந்து வெளியேறும் தண்ணீர் குறைந்த தொலைவுக்குப் பாயும். அணைக்கட்டு நீர்த்தேக்கத்தின் அடிப்பகுதியில் தண்ணீரின் அழுத்தம் அதிகம். மேற்பகுதியில் நீரின் அழுத்தம் குறைவு.

அணைக்கட்டுகளின் அடிப்பகுதியில் நீரின் அதிக அழுத்தத்தை தாங்குவதற்காகவே அணைக்கட்டுச் சுவரின் அடிப்பகுதி அகலமாக வடிவமைக்கப்படுகிறது. மேற்பகுதியில் நீரின் அழுத்தம் குறைவாக இருப்பதால் அணைக்கட்டுக்களின் மேற்பகுதி கீழ்ப்பகுதியைவிட அகலம் குறைவாகக் கட்டப்படுகின்றன.

கட்டுரையாளர்: இயற்பியல் பேராசிரியர், அறிவியல் எழுத்தாளர்

நன்றி

தி ஹிந்து (தமிழ்)


ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21546
மதிப்பீடுகள் : 8154

View user profile

Back to top Go down

Re: அணைக்கட்டு சுவரின் அறிவியல்

Post by விமந்தனி on Fri Jan 01, 2016 7:44 pm

நல்ல பதிவு. மறுபடியும் பள்ளியில் அறிவியல் பாடம் படித்த அனுபவம்.  என் பெண்ணிற்கும் இந்த பதிவை படித்து பார்க்க சொல்லி விளக்கினேன் ஐயா. நன்றி!


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: அணைக்கட்டு சுவரின் அறிவியல்

Post by கார்த்திக் செயராம் on Fri Jan 01, 2016 7:59 pm

நல்ல பதிவு பயனுள்ள தகவல் ஒரு கடினமான பௌதீக கருத்தை எளிமையாக விளக்கிய விதம் அருமை..
நன்றி ஐயா .. சூப்பருங்க மகிழ்ச்சி
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: அணைக்கட்டு சுவரின் அறிவியல்

Post by யினியவன் on Fri Jan 01, 2016 8:40 pm

நல்ல எளிய விளக்கம் - அருமை

இந்த டாஸ்மாக் தண்ணீர் எப்படி பாயும்?

ஒவ்வொன்னா உள்ளார போக போக அழுத்தம் கூடி
ஒரே தூக்கலா தூக்கி தலைக்கேறி போதை பாஞ்சுடுது போல புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அணைக்கட்டு சுவரின் அறிவியல்

Post by T.N.Balasubramanian on Fri Jan 01, 2016 9:45 pm

@யினியவன் wrote:நல்ல எளிய விளக்கம் - அருமை

இந்த டாஸ்மாக் தண்ணீர் எப்படி பாயும்?

ஒவ்வொன்னா உள்ளார போக போக அழுத்தம் கூடி
ஒரே தூக்கலா தூக்கி தலைக்கேறி போதை பாஞ்சுடுது போல புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1184570

அருமை , செய்முறை படம் போட்டு விளக்கவும் !
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21546
மதிப்பீடுகள் : 8154

View user profile

Back to top Go down

Re: அணைக்கட்டு சுவரின் அறிவியல்

Post by Dr.S.Soundarapandian on Sat Jan 02, 2016 9:23 am

நான் மராட்டிய மாநிலத்தில் இரண்டு ஆண்டுகள் விஞ்ஞான ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளேன் ! அப்போது நான் மாணவர்களுக்குச் செய்து காட்டிய சோதனைகளை நினைப்பூட்டிவிட்டீர்கள் !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: அணைக்கட்டு சுவரின் அறிவியல்

Post by யினியவன் on Sat Jan 02, 2016 12:26 pm

@T.N.Balasubramanian wrote:
அருமை , செய்முறை படம் போட்டு விளக்கவும் !
ரமணியன்

ராஜா, பாலாஜியை செல்பி எடுத்து போட சொல்றேன் அய்யா புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அணைக்கட்டு சுவரின் அறிவியல்

Post by சசி on Sat Jan 02, 2016 1:14 pm

ஐயா அருமையான பதிவு 
மீண்டும் பள்ளிக்கு செல்வது போன்ற உணர்வு. நன்றி ஐயா
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: அணைக்கட்டு சுவரின் அறிவியல்

Post by T.N.Balasubramanian on Sat Jan 02, 2016 1:34 pm

@யினியவன் wrote:
@T.N.Balasubramanian wrote:
அருமை , செய்முறை படம் போட்டு விளக்கவும் !
ரமணியன்

ராஜா, பாலாஜியை செல்பி எடுத்து போட சொல்றேன் அய்யா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1184653

ஹாஹ்ஹா கூடவே இருந்து குழியை பறிப்பது என்பது இதுதானோ !
பாவம் பாலாஜி ராஜா !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21546
மதிப்பீடுகள் : 8154

View user profile

Back to top Go down

Re: அணைக்கட்டு சுவரின் அறிவியல்

Post by T.N.Balasubramanian on Sat Jan 02, 2016 1:42 pm

@சசி wrote:ஐயா அருமையான பதிவு 
மீண்டும் பள்ளிக்கு செல்வது போன்ற உணர்வு. நன்றி ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1184656

ஆம் பள்ளிக்கு சென்ற நினைவு வந்தாலும் ,
இப்போது , அப்போது புரிந்ததை விட நன்றாக புரிகிறது அல்லவா ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21546
மதிப்பீடுகள் : 8154

View user profile

Back to top Go down

Re: அணைக்கட்டு சுவரின் அறிவியல்

Post by T.N.Balasubramanian on Sat Jan 02, 2016 1:50 pm

@Dr.S.Soundarapandian wrote:நான் மராட்டிய மாநிலத்தில் இரண்டு ஆண்டுகள் விஞ்ஞான ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளேன் ! அப்போது நான் மாணவர்களுக்குச் செய்து காட்டிய சோதனைகளை நினைப்பூட்டிவிட்டீர்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1184641

அப்பிடியா சந்தோஷம் .
நான் 6 வருடங்கள் சந்திராபூர் /நாக்பூரில் இருந்துள்ளேன் .
நீங்கள் பணி புரிந்த இடம் எங்கே சௌந்தரபாண்டியன் அவர்களே ?

ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21546
மதிப்பீடுகள் : 8154

View user profile

Back to top Go down

Re: அணைக்கட்டு சுவரின் அறிவியல்

Post by யினியவன் on Sat Jan 02, 2016 2:14 pm

@T.N.Balasubramanian wrote:
நான் 6 வருடங்கள் சந்திராபூர் /நாக்பூரில் இருந்துள்ளேன் .
எந்த ஊர்ல இருந்தாலும் நம்ம ஊர்ல இருக்கறாப்ல வருமா?

மாம்பலம் வந்தவுடன் தானே மாம்பலத்து மைனர் ஆனீங்க அய்யா புன்னகை


Last edited by யினியவன் on Sun Jan 03, 2016 7:50 am; edited 1 time in totalavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அணைக்கட்டு சுவரின் அறிவியல்

Post by ayyasamy ram on Sat Jan 02, 2016 2:53 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35102
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: அணைக்கட்டு சுவரின் அறிவியல்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Jan 02, 2016 10:00 pm

நல்ல விளக்க பாடம் .பள்ளியில் சயின்ஸ் பாடம் சொல்லிக்கொடுப்பது போல் இருந்தது.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7062
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: அணைக்கட்டு சுவரின் அறிவியல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum