ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 தமிழ்நேசன்1981

கண்மணி வார நாவல் 25.04.2018
 தமிழ்நேசன்1981

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 ayyasamy ram

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 ayyasamy ram

என்னைப் பற்றி...
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

முன்னேறு கண்ணு – நடிகை சச்சுவுடன் சிநேக சந்திப்பு

View previous topic View next topic Go down

முன்னேறு கண்ணு – நடிகை சச்சுவுடன் சிநேக சந்திப்பு

Post by ayyasamy ram on Tue Jan 05, 2016 4:21 pm


-
மங்கையர் மலர் வாசகர் சிறப்பிதழுக்காக வாசகப் பிரமுகர் என்ற
வகையில் யாரைச் சந்திக்கலாம் என்று யோசித்தபோது, ஒட்டு
மொத்தமாக அனைவரது நினைவிலுமே நிழலாடிய முகம் –
இன்று சின்னத்திரையில் கலக்கிக் கொண்டிருக்கும் விளம்பர பாட்டி
(ஸாரி, ஆன்ட்டி) சச்சுதான்.

நம் வாசகிகளுக்கு ஏற்கெனவே பரிச்சயமானவர் சச்சு என்பதாலும்,
அவர் மங்கையர் மலரின் வாசகி என்பதாலும் அவரைத் தொடர்பு
கொள்வது எளிதாயிற்று 2009- 2010ல் தொடர்ந்து 12 அத்தியாயங்கள்
(அப்போது மங்கையர் மலர் மாத இதழாக மலர்ந்து கொண்டிருந்தது)
ரோஜா மலரே ராஜகுமார் என்ற பெயரில் தன் நடிப்புலக அனுபவங்கள்,
வாழ்க்கை நிகழ்வுகளைச் சுவாரஸ்யமாக நம்மிடம் பகிர்ந்து
கொண்டிருந்தார் சச்சு.

அவரது பகிர்வுகளை படித்து ரசித்த வாசகிகள் பெரிதும் மகிழ்ந்துபோய்,
பாராட்டுக் கடிதங்களை எழுதிக் குவித்திருந்தார்கள். அதையெல்லாம்
இப்போதும் பொக்கிஷமாய் நினைவில் பதித்து வைத்திருக்கிறார் சச்சு.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36068
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: முன்னேறு கண்ணு – நடிகை சச்சுவுடன் சிநேக சந்திப்பு

Post by ayyasamy ram on Tue Jan 05, 2016 4:24 pm


-

--

-

இந்த வாசகர் சிறப்பிதழுக்காக அவரைச் சந்திக்க விரும்புவதாகக்
கூறியவுடன், உடனடியாக அப்பாயின்ட்மென்ட் தந்தார்.
அபிராமபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் நடந்த சிநேகச் சந்திப்பிலிருந்து…
-
ரோஜா மலரே ராஜ குமாரி தொடருக்குப் பிறகு மங்கையர் மலர் ரசிகர்கள்
மத்தியில் ஏற்பட்ட வரவேற்பை எப்படி உணர்ந்தீர்கள்? என்று நமது
வாசகர்களை மையப்படுத்திய கேள்வியோடு தொடங்கினோம்.

2015 ஜனவரியில அமெரிக்கா போயிருந்தேன். அப்போது என்னை
அடையாளம் தெரிஞ்சு போன ரசிகர்கள் பலர், மங்கையர் மலர்ல நான்
எழுதின தொடர் பத்தி நினைவு கூர்ந்தாங்க.

ஐந்து வருடத்துக்குப் பிறகும் அந்தத் தொடரை யாரும் மறக்கலை. அந்தத்
தொடருக்காக பேபி சரோஜாவை சந்திச்சு நான் கண்ட பேட்டியக்கூட,
சிலாகிச்சு பேசினவங்க பலர். நாடகம், சினிமா, சின்னத்திரை, விளம்பரம்னு
பலதுலயும் நடிச்சிருந்தாலும், என்னுடைய நினைவுகளை ஒருசேரத் திரும்பிப்
பார்க்க அந்தத் தொடர் ரொம்பவும் உதவியது. சும்மா படிச்சோம்,
தூக்கிப் போட்டோம்னு இல்லாம, அதை அப்படியே நினைவில் நிறுத்திப்
பாராட்டியது மங்கையர் மலர் வாசகர்களின் அன்பைக் காட்டுது.
நானும் அந்தத் தொடரை அழகா டிஜிட்டல் ரெகார்டா மாத்தி வெச்சுருக்கேன்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36068
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: முன்னேறு கண்ணு – நடிகை சச்சுவுடன் சிநேக சந்திப்பு

Post by ayyasamy ram on Tue Jan 05, 2016 4:29 pm


-
-
மங்கையர் மலர்ல உங்களுக்குப் பிடித்த பகுதிகள்…

-
கல்கி குழும இதழ்கள்னாலே தரம் நிச்சயம்.. மங்கையர் மலரும்
அப்படித்தானே! அதுல வர்ற டிப்ஸ், கோலங்கள், சமையல் குறிப்புகள்,
பேட்டிகள், தன்னம்பிக்கை கட்டுரைகள், கதைகள்னு எல்லாமே பிடிக்கும்.
அதுல வர்ற ஒவ்வொரு தகவலும் வாழ்க்கைக்குப் பயனுள்ளதா,
பாதுகாத்து வெச்சுக்கிறதா இருக்கும்.
-
எம்.எஸ். அம்மாவோட நூற்றாண்டு விழா கொண்டாடப்படற இந்த நேரத்துல,
அவங்களைப் பற்றின நினைவுகளைப் பகிர்ந்துக்கலாமே…

-
எம்.எஸ்., அம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவங்களோட தெய்வீக முகம்,
ஜொலி்க்கிற மூக்குத்தி, பேசற விதம்னு எல்லாமே பிடிக்கும். எனக்கு விவரம்
தெரியாத வயசிலிருந்தே அவங்க பாடல்களைக் கேட்டு வந்திருக்கேன்.
அப்ப அவங்களோட அருமை தெரியாது. விவரம் தெரிய ஆரம்பித்தும்,
அவங்க ஒரு பெரிய இசை மேதைங்கிறது புரிஞ்சது. அப்போ எங்க வீடு
மைலாப்பூர்ல இருந்தது. எங்க எதிர்வீட்ல இருந்த ஒரு மாமியோட வீட்டுக்கு
எம்.எஸ்.அம்மாவும், ராதா, ஆனந்தியும் வருவாங்க. நான், ராதா, ஆனநதியோட
சேர்ந்து விளையாடப் போயிடுவேன்.
-
என்னைப் பார்த்துட்டு, அவ்வையார் படத்துல நடிச்ச குழந்தைதானே நீன்னு
எம்.எஸ். அம்மா என்னோட கன்னத்தை வருடுவாங்க. நான் நடிச்ச காதலிக்க
நேரமில்லை படம் அவங்களுக்கு மிகவும் பிடித்த படம்.
-
1992ல் தியாக பிரம்ம கான சபா சார்புல எனக்கு விருது கொடுத்தாங்க.
அதை எம்.எஸ். அம்மா கையால வாங்கினதைப் பெரிய பாக்கியமா நினைக்கிறேன்.
அப்ப எடுத்த போட்டோவை பொக்கிஷமா பாதுகாத்து வெச்சிருக்கேன்.
-
எம்.எஸ். பாடின காற்றினிலே வரும் கீதம், குறையொன்றும் இல்லை,
பாவயாமினு நிறையப் பாடல்கள் எனக்குப் பிடிக்கும்.
-
என் மனசுல அவங்க ஏற்படுத்தின தாக்கம் எப்படிப்பட்டது தெரியுமா?
ஆனந்த பவன்கிற ஒரு டி.வி. சீரியல்ல எனக்க பிராமணப் பெண் வேஷம்.
அந்த கேரக்டரை எம்.எஸ். அம்மாவை மனசுல நினைச்சுக்கிட்டேதான்
செய்தேன். அவங்களைப் போலவே மூக்குல ஜொலிக்கிற வைரபேஸரி,
நெற்றிக்கு முன்பக்கத்துல வந்து விழற நெளி நெளியான முடினு எல்லாமே
அதுபோலவே அமைச்சுக்கிட்டேன்.
அந்த சீரியலைப் பார்த்தவங்க எம்.எஸ். போலவே இருக்கேனு பாராட்டினப்போ,
அவ்வளவு சந்தோஷமா இருந்தது.
-
வேலைக்குப் போகிற பெண்கள், இல்லத்தரசின்னு பெண்களின் முன்னேற்றம்
எப்படி இருக்கணும்னு நினைக்கறீங்க?

-
இயல்பாகவே பெண்களுக்கு நிர்வாகத்திறன் உண்டு. இந்தத் திறன்தான்
அவர்கள் வீட்லயும் பணி இடத்துலயும் சமாளித்துக் கொள்ள உதவுது. பெண்கள்
வேலைக்குப் போய் பெரிய போஸ்டிங்ல இருக்கணும். அப்பத்தான் மத்தவங்களுக்கு
நல்லது செய்ய முடியும். இந்தக் காலத்துப் பெண்கள் நிறைய சிந்திக்கறாங்க.
சாதனை படைக்கிறாங்க. சுதந்திரம்கிறது நமது நடை, உடைகள்ல இல்ல.
நமக்கு இருக்கும் சுதந்திரத்தை நல்ல முறையில பயன்படுத்திச் சாதிக்கணும்.
என்னதான் வேலைக்குப் போனாலும், பெண்கள்தான் வீட்டைப் பராமரிக்கணும்.
அப்பதான் குடும்பம் சிறக்கும்.
-
குடும்பத்துக்காக நேரம் ஒதுக்கணும். எந்த நிலையிலும் எல்லை மீறிப் போகக்கூடாது.
துணிச்சலா இருக்க வேண்டிய விஷயங்கள்ல துணிச்சலா இருக்கணும்.
அதே நேரம் நமக்குனு சில எல்லைக்கோடுகளை வகுத்துட்டு, ஒரு சில விஷயங்கள்ல
இருந்து ஒதுங்கி இருக்கறது நல்லது. தேவையில்லாத சிக்கல்களுக்கு நாமே
சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்துடக்கூடாது.
-
எந்தப் பிரச்னையையும் எதிர்கொண்டு சமாளிக்கக்கூடிய துணிச்சல் பெண்களுக்கு
வேணும். எதிர்மறை சிந்தனைகளை விட்டுட்டு வாழப் பழகிக்கணும்.

இப்ப நடிச்சுட்டு இருக்கற சினிமா, விளம்பரப் படங்கள்?
-

கெத்து திரைப்படத்துல எமி ஜாக்சனோட பாட்டியா நடிச்சிருக்கேன். நிறைய
விளம்பரப் படங்கள்ல நடிச்சிருக்கேன். சமீபத்துல நான் நடிச்ச OLX விளம்பரத்துக்கு
நல்ல வரவேற்பு. அந்த விளம்பரத்துல ‘வித்துடு கண்ணு’னு நான் சொல்றதை
பலரும் ரசிச்சுப் பாராட்டறாங்க. நான் எந்த துறையில் நடிச்சாலும் நல்ல கருத்தை
வலியுறுத்தி நடிக்கணும்னுதான் விரும்புவேன். என்னோட பேச்சிலோ,
நடிப்பிலோ தவறான வார்த்தைகள் வந்துடக்கூடாதுங்கறதுல ரொம்பவும் கவனமா
இருப்பேன். டபுள் மீனிங் உள்ள வார்த்தைகளைப் பேசவே மாட்டேன்.
கலைவாணரோட காமெடியில நல்ல மெசேஜ் இருக்கும். என் காமெடியிலயும் அப்படி
இருக்கணும்னு கவனமா இருப்பேன்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36068
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: முன்னேறு கண்ணு – நடிகை சச்சுவுடன் சிநேக சந்திப்பு

Post by ayyasamy ram on Tue Jan 05, 2016 4:31 pm


-
உங்களாட பர்சனாலிட்டியை எப்படி மேம்படுத்திக்கறீங்க?

-
ஆக்டிவ்வா இருக்கறதுதான் ஒருத்தருக்கு ஆக்ஸிஜன். நான் ரொம்ப
ஆக்டிவ் பர்ஸன். உணவுப் பழக்கவழக்கங்கள்லயும் கட்டுப்பாடா இருப்பேன்.
சுத்த சைவம்கிறதால கீரை, பழங்கள், காய்கறிகள் விரும்பிச் சாப்பிடுவேன்.
ஆனா, எதுலயும் ஒரு கட்டுப்பாடோட இருப்பேன். சின்ன வயசுலயிருந்தே
வீட்ல சமைச்ச, சத்தான உணவுகளைத்தான் சாப்பிட்டு வர்றேன்.

எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். சமையல், செடிகள் பராமரிப்பு,
நாய் வளர்ப்புனு ஏதாவது ஒரு விஷயத்துல என்னை ஈடுபடுத்திப்பேன்.
என்னால முடிஞ்ச வரைக்கும் மத்தவங்களுக்கு உதவி செய்யறேன்.
குழந்தையைப் போல வெகுளித்தனமா இருக்கறது கடவுள் எனக்குக் கொடுத்த
பரிசு.

உங்களாட டிரஸ்சென்ஸ் சூப்பர். எப்படி இவ்வளவு கச்சிதம்?

-
வயசுக்குத் தகுந்தமாதிரி டிரஸ் பண்ணிக்கிறதுலதான் நம்ம மரியாதை
இருக்கு. எனக்குப் பொருத்தமான உடைகளைத்தான் நான் போட்டுக்குவேன்.
சினிமா ஷூட்டிங், கலை நிகழ்ச்சிகளுக்காக வெளிநாடு போகும்போது
நிறைய ஷாப்பிங் பண்ணுவேன். எந்தக் கடைக்குப் போனாலும், எனக்கு
ஏற்ற உடையை ஒரு சில நிமிஷங்கள்லயே சட்னு தேர்ந்தெடுத்துடுவேன்.

உங்களை ரொம்பவும் இம்பரஸ் பண்ணினவங்க யார்?


நாட்டிய பேரொளி பத்மினியோட எளிமை, அர்ப்பணிப்பு உணர்வு, நாட்டிய
பாவங்கள்னு எல்லாமே எனக்கு ரொம்பவும் பிடிக்கும். புகழோட உச்சத்துல
இருந்தபோதும், தன்னை ஒரு மாணவி போல நினைத்து தன் வேலையில
ஈடுபாட்டோட இருப்பாங்க. தமிழக முதல்வர் ஜெயலலிதாவோட தைரியம்,
தன்னம்பிக்கை, துணிச்சல் பிடிக்கும். நான் அவங்ககூட நடிச்சுருக்கேன்.
அவங்க அம்மா சந்தியா கூடவும் நடிச்சுருக்கேன். ஜெய லலிதாவோட அறிவு,
ஒருமுகத்தன்மை, எதையும் சட்டுனு புரிஞ்சுக்கிற இயல்புனு பல விஷயங்கள்
எனக்குப் பிடிக்கும்.

இன்னிக்கு இருக்கற அரசியல் சூழல்ல, மத்தவங்க எதிர்ல நின்னு தைரியமா
ஆட்சி நடத்தற அவங்களோட துணிச்சலுக்காகவே நாம பெருமைப்படணும்.

தனிமை உங்களை வாட்டினதில்லையா?

-
என் அக்காக்கள், உறவினர்கள், பேரன் பேத்திகள்னு நிறைய பேர் இங்க
சென்னையில, கூப்பிடும் தூரத்துலதான் இருக்காங்க. அவங்கள்லாம் என் வீட்டுக்கு
வருவாங்க. நானும் அவங்க வீடுகளுக்குப் போவேன். ஊர்வசி, சாரதா, ஜமுனா,
சௌகார் ஜானகி, ராஜஸ்ரீ, காஞ்சனா, பாடகி பி.சுசீலானு நாங்க ஒரு பெரிய குரூப்.
அடிக்கடி போன்ல பேசிப்போம். எங்களுக்குத் தெரியாத விஷயங்களை ஒருத்தரை
ஒருத்தர் கேட்டுத் தெரிஞ்சுப்போம்.

அப்பப்ப சந்திச்சுப்போம். நாடகம், சினிமா, டி.வி., சீரியல், விளம்பர மாடல்னு
எப்பவும் என்னை என்கேஜ்ட்டா வெச்சுக்கறதால தனியா இருக்கறோம்கிற
நினைப்பே வந்ததில்லை. மனச்சோர்வுக்கு இடமும் கொடுத்ததில்லை.
-
நமது வாசகர்களுக்கு 2016 புத்தாண்டு மேஸேஜ் ஒண்ணு சொல்லுங்களேன் சச்சு மேம்…

-
முன்னேறு கண்ணு!

-
-----------------------------------------
– ஜி. மீனாட்சி

மங்கையர் மலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36068
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: முன்னேறு கண்ணு – நடிகை சச்சுவுடன் சிநேக சந்திப்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum