ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சொர்க்கத் தீவு
 பரத்வாஜன்

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 M.Jagadeesan

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 ரா.ரமேஷ்குமார்

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

இயற்கையின் மொழிகள்!
 ayyasamy ram

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 T.N.Balasubramanian

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 SK

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 ஜாஹீதாபானு

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 SK

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ரா.ரமேஷ்குமார்

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 SK

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 SK

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 பழ.முத்துராமலிங்கம்

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 பழ.முத்துராமலிங்கம்

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 பழ.முத்துராமலிங்கம்

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 பழ.முத்துராமலிங்கம்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 SK

12 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 பழ.முத்துராமலிங்கம்

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
 SK

புத்தகம் தேவை : அஞ்சலை - கண்மணி குணசேகரன்
 ManiThani

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்?

View previous topic View next topic Go down

உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்?

Post by கார்த்திக் செயராம் on Wed Jan 20, 2016 9:07 pm

பணம் எங்கே?

உலக பொருளாதாரம் குறித்து விவாதிக்க உலகத் தலைவர்கள் இந்த வாரம் சுவிஸ்ஸிலுள்ள டாவோஸில் கூடுகின்றனர். இந்த மாநாட்டில் பொருளாதார ஏற்றத் தாழ்வு முக்கியமாக விவாதிக்கப்படும் ஒரு விஷயம்.


 உலகளவில் அதிகப்படியான பெரும் கோடீஸ்வரர்கள் அமெரிக்காவிலேயே உள்ளனர்
இச்சூழலில் உலகளவில் செல்வம் எங்கு எப்படி பரவியுள்ளது அது எப்படி மாறிவருகிறது என்பது குறித்த ஒரு பார்வை.

பொருளாதார ஏற்றத் தாழ்வு அதிகரித்து வரும் ஒரு உலகளாவியப் பிரச்சினை.

ஆண்டுதோறும் கிரெடிட் ஸ்விஸ் எனும் ஸ்விஸ் வங்கி, உலகப் பொருளாதாரம் மற்றும் அது எங்கு எப்படி குவிக்கப்பட்டுள்ளது என்பதை நாடு வாரியாக, பிரதேச வாரியாக ஆய்வு செய்து வெளியிடுகிறது.

இதன் அடிப்படையில் உலகின் செல்வந்த மற்றும் ஏழை பகுதிகள் எவை? அவை எப்படி மாறுகின்றன?

இந்தப் படம் கடந்த 2015 ஆம் ஆண்டு உலகளவில் செல்வம் எப்படி பரவியிருந்தது என்பதை, கிரெடிட் ஸ்விஸ்ஸின் தகவலின் அடிப்படையில் காட்டுகிறது.

 உலகின் எந்தப் பகுதியில் செல்வம் குவிந்துள்ளது என்பது இப்படத்தில் மூலம் தெரிகிறது
உலகின் பெரும்பாலான செல்வம் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பாவிலேயே குவிந்துள்ளது.

மெக்ஸிகோ நீங்கலாக உள்ள வட அமெரிக்காவில் உள்ளவர்களின் சராசரி செல்வம் 342,000 டாலர் என அந்த வங்கி கணக்கிட்டுள்ளது.

மெக்ஸிகோவின் தரவுகள் லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் செல்வம் எனக் கூறியுள்ளது, அவர்களிடம் உள்ள பொருட்கள், சேமிப்பு மற்றும் சொத்து ஆகியவற்றிலிருந்து இருக்கும் கடனை கழித்த பிறகு இருப்பதே அளவுகோலாக கருதப்படுகிறது.

அந்த மூன்று பகுதிகளில் இருக்கும் செல்வம் என்பது உலகின் இதர நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகமிக அதிகம்.

உதாரணமாக ஆப்ரிக்கா அல்லது இந்தியாவிலுள்ள ஒருவரின் சராசரி சொத்து மதிப்பைவிட அது 75 மடங்கு அதிகமானது.

அதேபோல் சீனா மற்றும் லத்தீன் அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது இது 15 மடங்கு அதிகம்.

 லண்டனும் செல்வச் சீமான்கள் அதிகம் வாழும் இடமாகவுள்ளது
ஐரோப்பிய அளவுகோலை ஒப்பிடும்போது கூட, அமெரிக்கா மற்றும் கனடாவிலுள்ளவர்கள் 2.5 மடங்கு அதிக சொத்துக்களைக் கொண்டுள்ளனர்

எனினும் இதில் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது அமெரிக்க டாலரை அளவுகோலாகக் கொண்டு இந்த ஒப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன.

இருந்தபோதிலும் வெவ்வேறு நாடுகளில் மக்களுக்கு இருக்கும் சமமான வாங்கும் சக்தி கணக்கில் எடுக்கப்படவில்லை.

இதனால் இருக்கும் செல்வத்துக்கும் வாழ்க்கைச் செலவினத்துக்குமான தொடர்பை உறுதியாக கணிக்கக்கூடிய வழிமுறைகள் இல்லை.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், உங்களிடம் அதிகமான அளவுக்கு டாலர்கள் இருக்கலாம், ஆனால் அதன்மூலம் அந்தப் பணத்தின் மூலம் வேறு நாடுகளில் கிடைக்கும் பொருட்களின் தரமோ அல்லது சேவைகளின் தரமோ கிடைக்கும் என்பதாகாது.

செல்வத்தில் வீடு அல்லது நிலம் என்பது மிக முக்கியமான ஒரு அம்சமாக இருப்பதால், ஒவ்வொரு நாட்டிலும் நிலம் மற்றும் வீடுகளின் மதிப்பு மாறுபடும். இதனால் ஏற்றத்தாழ்வுகளில் பெரிய வித்தியாசங்கள் தெரியும்.

இப்படியான பல காரணங்களால், இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையேயான வித்தியாசம் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு தெரிகிறது.

உலகில் பெரும் பணக்காரர்களாக இருக்கும் ஒரு சதவீத மக்கள் எங்கு வாழ்கிறார்கள்?

1 அமெரிக்கா 20,680,000 (2014ஆம் ஆண்டை விட 15% அதிகம்

2 பிரிட்டன் 3,623,000(25% அதிகம்)

3 ஜப்பான் 3,417,000(15% குறைவு)

4 பிரான்ஸ் 2,762,000(22% குறைவு)

5 ஜெர்மனி 2,281,000(17% குறைவு)

6 சீனா 1,885,000(19% அதிகம்)

7 இத்தாலி 1,714,000(25% குறைவு)

8 கனடா 1,500,000(7% குறைவு)

9 ஆஸ்திரேலியா 1,480,000(17% குறைவு)

10 சுவிட்சர்லாந்து 831,000(3% அதிகம்)

இந்தப் புள்ளி விபரங்களைப் பார்க்கும்போது சீனா, வட அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிகிறது.

அதே நேரம் ஐரோப்பா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.

 சீனா ஏராளமான பணக்காரர்களை உருவாக்கியுள்ளது
சீனாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம் கூடுதலான பெரும் பணக்காரர்களை உருவாக்கியுள்ளது அல்லது பெரும் கோடீஸ்வரர்கள் லண்டன் அல்லது நியூயார்க்கில் தமது செல்வத்தை கொண்டு சென்று அதன் மூலம் பயனடைகிறார்கள் என்பது இந்த ஆய்வின் மூலம் தெளிவாகிறது.

எனினும் மனை விற்பனை சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்கள் இதன் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

லண்டனில் கடன் இல்லாமல் நீங்கள் ஒரு வீட்டை வைத்துள்ளீர்கள் என்றால் நீங்கள் கிரெடிட் ஸ்விஸ் வங்கியின் கணக்கீட்டின்படி நிச்சயம் பெரும் பணக்காரர்தான்.

நன்றி பிபிசி தமிழ்
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்?

Post by Muthumohamed on Thu Jan 21, 2016 11:30 pm

இந்தியாவின் குறியீடு என்னவாக இருக்குமோ ?
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்?

Post by யினியவன் on Thu Jan 21, 2016 11:45 pm

நம்ம ஊழல் அரசியல்வாதிகளை மட்டும் கணக்கில் எடுத்துக்
கொண்டால் உலகத்துல ஒரு பய நம்ம கிட்ட வர முடியாதுல்லavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்?

Post by கார்த்திக் செயராம் on Fri Jan 22, 2016 6:36 am

எண்ணெய் வளமிக்க அரபு நாடுகள் மிகவும் பணக்கார நாடுகள் ஆச்சே. ...இந்த பட்டியலில் இல்லை ஏன் அண்ணா? ??
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்?

Post by யினியவன் on Fri Jan 22, 2016 6:19 pm

@கார்த்திக் செயராம் wrote:எண்ணெய் வளமிக்க அரபு நாடுகள் மிகவும் பணக்கார நாடுகள் ஆச்சே. ...இந்த பட்டியலில் இல்லை ஏன் அண்ணா? ??

பெரும்பாலும் அவர்களது சொத்து விபரம் வெளியிடப்படுவதில்லை. நாடே அவர்களது தான். வியாபாரத்தில் இருக்கும் நபர்களின் சொத்து மதிப்பு மட்டுமே ஓரளவு தெரிய வரும்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்?

Post by M.Jagadeesan on Fri Jan 22, 2016 6:23 pm

கடனில்லாமல் , நோயில்லாமல் வாழ்பவர்கள்தான் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4989
மதிப்பீடுகள் : 2360

View user profile

Back to top Go down

Re: உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்?

Post by ayyasamy ram on Fri Jan 22, 2016 6:29 pm

@Muthumohamed wrote:இந்தியாவின் குறியீடு என்னவாக இருக்குமோ ?
மேற்கோள் செய்த பதிவு: 1188774
-
புன்னகை புன்னகை
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34973
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum