புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறியாயோ.... அஞ்சுகமே ..... Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... Poll_c10 
83 Posts - 55%
heezulia
அறியாயோ.... அஞ்சுகமே ..... Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
அறியாயோ.... அஞ்சுகமே ..... Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
அறியாயோ.... அஞ்சுகமே ..... Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
அறியாயோ.... அஞ்சுகமே ..... Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அறியாயோ.... அஞ்சுகமே ..... Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அறியாயோ.... அஞ்சுகமே ..... Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறியாயோ.... அஞ்சுகமே ..... Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
அறியாயோ.... அஞ்சுகமே ..... Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
அறியாயோ.... அஞ்சுகமே ..... Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறியாயோ.... அஞ்சுகமே .....


   
   

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Jan 08, 2016 7:24 pm

அறியாயோ.... அஞ்சுகமே .....

மருதாணி பறிச்சுவந்து
ஆட்டுரலில் அரச்சுவந்து
என் விரலில் உருட்டி உருட்டி –உன்
உள்ளங்கையில ஒட்டிவச்சா
உச்சந்தல குளுரடிச்சு
கூச்சத்துல சிலுத்துக்குவ
சின்ன  பொண்ணே  தெரியாதா..??

உன் மூக்குகீழ  தூசு அத
ஒனக்கு நான் தொடச்சிவிட
காலையில நீ வந்து
கண்ணாடி பாக்கையில
செவந்த மீச கொஞ்சம்
செரப்பத்தான் மொளச்சிருக்கும்
ஊரே குலுங்கி அத
ஒக்காந்து சிரிச்ச கத
ஒனக்குந்தான் தெரியாதா..???

பாண்டி வெளையாட்ட
பக்குவமா நீயாட
நொண்டி வெளையாட்ட –நீ
நொனசொல்லி நானாட
உப்புமூட்ட ஒன்ன தூக்கி
ஒருவீதி சுத்திவந்து
எறங்க சொல்லி நான் கேக்க
எறங்காம நீ இருக்க –நான்
இடுச்சி விட்டதால –நீ
இடுப்போடிஞ்சி போனகத
எலஞ்சியமே தெரியாதா ...??  

ஆளுக்கொரு பிடிச்ச
அரிசியத்தான் எடுத்துவந்து
கரிசமர வெறகு கொல்லி
கணக்கத்தான் பொருக்கிவந்து
ஆத்துகோயில் பக்கத்துல
அடுப்பத்தான் பத்தவச்சு
கூட்டாஞ்சோறு ஆக்கிதின்னு
கொண்டாடி குளுந்தோமே
கொஞ்சங்கூட தெரியாதா...??

கரடோரம் மாடுமேய்க்க
கயிர்புடிச்சி நடக்கையில
ஓமாடு முன்ன போக
ஏமாடு பின்ன வர
கோமியத்த ஓமாடு
கொடங்கோடமா  அடிச்சிவிட
பாவாட நனைஞ்சதால
பசங்க கண்ணு பட்டுடாம –நீ
பதுங்கி பதுங்கி நடந்த கத
பச்சமண்ணே தெரியாதா..??

ஒங்க ஊட்டு வாசலுல
பொங்கலுக்கு கோலம்போட
நீ கொஞ்சம் கோடிழுக்க
நான் கொஞ்சம் கலரடிக்க
ஒரு நாள் முழுக்க அத
ஒக்காந்து ரசிப்போமே
ஒனக்கு அது தெரியாதா..??

வாழதோப்பு ஓரத்துல
வரப்போரம் நடக்கையில
வாழக்கா நான் பறிக்க
வாஞ்சையோட நீ கடிக்க
வரிபல்லு கரையாள –நீ
அர கெழவியான கத –என்
அஞ்சுகமே தெரியாதா...??

வயசுக்கு நீ வந்த பின்ன
வெளையாட வாரத்துக்கு
ஓஊட்டுல தடவிழுகவிழ
ஏமனசுல இடிவிழுகவிழ
இடிஞ்ச மனசோட
இத்தன நாள் இருக்கேனே
இந்த கத ஒனக்குந்தான்
இப்பவரைக்கும் தெரியாதா..??



                கே.செந்தில்குமார்



மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 08, 2016 8:21 pm

அருமையான உங்கள் இளமை நினைவை
அழகாக கொண்டுவந்துள்ளீர் .அறியாயோ.... அஞ்சுகமே ..... 103459460

ஓரிரு எழுத்துபிழை . திருத்துகிறேன் .
ஓரிரு வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியவில்லை .
"நொனசொல்லி " " எலஞ்சியமே"........

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Jan 09, 2016 1:09 am

நோனசொல்லி –குறைசொல்லுதல் , குற்றம் சாட்டுதல் , தப்பு கண்டு பிடித்தல்
எலஞ்சியமே- இளஞ்சியமே, அஞ்சுகமே, ரஞ்சிதமே

நாட்டுபுற வடிவம் அதை நாட்டுபுற பாடல் ராகத்தில் நான் சொல்லி பார்க்கும் பொழுது மனதிற்கு இனிமையாக இருக்கிறது அந்த சுவையை மற்றவர்களும் உணரட்டுமே என்றுதான் அவ்வாறு பதிவிட்டிருந்தேன். முடிந்த அளவு எளிமை படுத்தி மீண்டும் பதிவிட்டிறிக்கிறேன் ஐயா....
நாட்டுபுற பாடல் வடிவம் புரிந்துகொள்ள கடினமாக இருப்பது போல் தெரிந்தால்  சொல்லுங்கள் ஐயா. அந்த நடையை நான் கைவிட்டுவிடுகிறேன்.



மருதாணி பறித்துவந்து
ஆட்டும் உரலில் அரைத்து வந்து
என் விரலில் உருட்டி உருட்டி –உன்
உள்ளங்கையில் ஒட்டிவைத்தால்  
உச்சந்தலை  குளிரடித்து
கூச்சத்தில் சிலிர்த்து கொள்வாயே  
சின்னபொன்னே தெரியாதா..??

உன் மூக்குகீழ்  தூசு அதை
உனக்கு நான் துடைத்துவிட
காலையிலே நீ வந்து
கண்ணாடி பார்க்கையிலே
சிவந்த  மீசை  கொஞ்சம்
சிறப்பாக முளைத்திருக்கும்
ஊரே குலுங்கி அதை
உட்கார்ந்து  சிரித்த  கதை  
உனக்குதான் தெரியாதா..???

பாண்டி விளையாட்டை
பக்குவமாய் நீ ஆட  
நொண்டி விளையாட்டை –நீ
குறைசொல்லி  நான் ஆட
உப்புமூட்டை உன்னை  தூக்கி
ஒருவீதி சுற்றி வந்து
இறங்க சொல்லி நான் கேக்க
இறங்காம நீ இருக்க –நான்
இடித்து  விட்டதால் –நீ
இடுப்போடிந்து போனக்கதை
இளஞ்சியமே  தெரியாதா ...??  

ஆளுக்கொரு பிடித்தல்
அரிசியைத்தான் எடுத்துவந்து
கரிசல் மர விறகுகளை
கணக்காக பொருக்கிவந்து
ஆற்று கோயில் பக்கத்தில்
அடுப்பு ஒன்று பற்ற வைத்து  
கூட்டம் சோறு ஆக்கி தின்று
கொண்டாடி குளிர்ந்தோமே
கொஞ்சம் கூட தெரியாதா...??

கரடு ஓரம் மாடுமேய்க்க -மாட்டு  
கயிர் பிடித்து  நடக்கையிலே
உன் மாடு  முன்னால் போக
என் மாடு பின்னால் வர
கோமியத்தை உன் மாடு
குடம் குடமாய் அடித்து விட
பாவாடை  நனைந்தால்
பசங்க கண்ணு பட்டுடாம –நீ
பதுங்கி பதுங்கி நடந்த கத
பச்சை மண்ணே தெரியாதா..??

உங்க வீட்டு வாசலிலே  
பொங்கலுக்கு கோலம்போட
நீ கொஞ்சம் கோடு இழுக்க  
நான் கொஞ்சம் கலர் அடிக்க
ஒரு நாள் முழுக்க அதை
உட்க்கார்ந்து ரசிப்போமே
உனக்கு அது தெரியாதா..??

வாழை தோப்பு ஓரத்திலே  
வரப்பு ஓரம் நடக்கையிலே  
வாழக்காய் நான் பறிக்க
வாஞ்சையுடன் நீ கடிக்க –இரண்டு
வரி பல்லு கரையானதில்  –நீ
அரை கிழவியான கதை  –என்
அஞ்சுகமே தெரியாதா...??

வயதுக்கு நீ வந்த பின்னர்
விளையாட வருவதற்கு
உன் வீட்டில்  தடை விழவே
என் மனதில்  இடி விழவே
இடிந்த  மனதுடனே  
இத்தனை நாள் இருக்கிறேனே
இந்த கதை உனக்குந்தான்
இன்றுவரையில் தெரியாதா..??



மெய்பொருள் காண்பது அறிவு
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Jan 09, 2016 2:22 am

அஹ்ஹா ... கவிதை (நாட்டுப்புற பாடல் ) அருமை .
இரண்டுமே பிரமாதம் . அசத்திடீங்க செந்தில் .
அறியாயோ.... அஞ்சுகமே ..... 3838410834 அறியாயோ.... அஞ்சுகமே ..... 3838410834 அறியாயோ.... அஞ்சுகமே ..... 103459460 அறியாயோ.... அஞ்சுகமே ..... 1571444738

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Jan 09, 2016 6:40 am

shobana sahas wrote:அஹ்ஹா ... கவிதை (நாட்டுப்புற பாடல் ) அருமை .
இரண்டுமே பிரமாதம் . அசத்திடீங்க செந்தில் .
அறியாயோ.... அஞ்சுகமே ..... 3838410834 அறியாயோ.... அஞ்சுகமே ..... 3838410834 அறியாயோ.... அஞ்சுகமே ..... 103459460 அறியாயோ.... அஞ்சுகமே ..... 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1186422

நன்றி சோபனா அவர்களே....



மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 09, 2016 11:37 am

sendhilkumar wrote:நாட்டுபுற பாடல் வடிவம் புரிந்துகொள்ள கடினமாக இருப்பது போல் தெரிந்தால்  சொல்லுங்கள் ஐயா. அந்த நடையை நான் கைவிட்டுவிடுகிறேன்.

நடையை மாற்றவேண்டாம் . அவசியமுமில்லை .
புதிதாக சில விஷயங்களை கற்றுக் கொள்வதில் எனக்கு விருப்பமே !
நன்றி ,தொடர்ந்து உங்கள் பணியை தொடருங்கள் .
சந்தேக விளக்கங்களுக்கு நன்றி , செந்தில் .
நேற்று உங்களுடன் பேசியதில் மகிழ்ச்சி . அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 09, 2016 12:10 pm

அறியாயோ.... அஞ்சுகமே ..... 3838410834 அறியாயோ.... அஞ்சுகமே ..... 3838410834

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Jan 09, 2016 12:55 pm

T.N.Balasubramanian wrote:
sendhilkumar wrote:நாட்டுபுற பாடல் வடிவம் புரிந்துகொள்ள கடினமாக இருப்பது போல் தெரிந்தால்  சொல்லுங்கள் ஐயா. அந்த நடையை நான் கைவிட்டுவிடுகிறேன்.

நடையை மாற்றவேண்டாம் . அவசியமுமில்லை .
புதிதாக சில விஷயங்களை கற்றுக் கொள்வதில் எனக்கு விருப்பமே !
நன்றி ,தொடர்ந்து உங்கள் பணியை தொடருங்கள் .
சந்தேக விளக்கங்களுக்கு நன்றி , செந்தில் .
நேற்று உங்களுடன் பேசியதில் மகிழ்ச்சி . அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1186545

நன்றி ஐயா ...

நொனசொல்லி என்பது நம்ம திருச்சி ஊர்பகுதியின் வட்டார வழக்குதான் ஐயா ..

உங்களுக்கு இப்பொழுது புரியவரும் என்று நினைக்கிறேன்.
மருமகள் தன் மாமியாரை பற்றி இப்படி சொல்கிறாள்.
என் மாமியார் எப்ப பார்த்தாலும் தோன தொணன்னு என்னபத்தி நொனசொல்லி கொண்டே இருப்பதே வேலையா போச்சு



மெய்பொருள் காண்பது அறிவு
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jan 09, 2016 1:16 pm

நாட்டுப்புற கவிதை மிகவும் நன்று . தொடர்க !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 09, 2016 1:37 pm

நாட்டுப்புற கவிதை ரொம்ப நல்லா இருக்கு செந்தில்...........தொடருங்கள்................ அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
.
.
.நொனசொல்லி என்பது போலவே "நொட்டை சொல்லறாங்க" என்று கூட சொல்வார்கள் தானே? 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக