ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 பழ.முத்துராமலிங்கம்

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 பழ.முத்துராமலிங்கம்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 SK

12 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 பழ.முத்துராமலிங்கம்

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

புத்தகம் தேவை : அஞ்சலை - கண்மணி குணசேகரன்
 ManiThani

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 SK

கொஞ்ச நேரம் நடிக்கலாம்
 SK

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 SK

போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
 SK

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 SK

எல்லா வித்தையும் தெரிந்தவன்...(விடுகதைகள்)
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 ayyasamy ram

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ayyasamy ram

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 ayyasamy ram

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 ayyasamy ram

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 ayyasamy ram

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 T.N.Balasubramanian

காரடையான் நோன்பு அடை !
 T.N.Balasubramanian

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 krishnaamma

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 krishnaamma

குருப் 2 தேர்வுக்கு IMPACT IAS ACADAMY 2018(general english & general Tamil)
 thiru907

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 ayyasamy ram

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 ayyasamy ram

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 ayyasamy ram

மதித்திடுவோம் மாதர் தம்மை
 SK

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - அடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் செய்ததை ஆந்திராவிலும் செய்வதா? மோடி மீது சந்திரபாபு புகார்
 M.Jagadeesan

ஒளியை விட வேகமான ஒன்று இருக்கிறது... உணர்த்தும் எளிய அறிவியல் பரிசோதனை!
 T.N.Balasubramanian

மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்:ஜெகன் மோகன்,நாயுடு கைகோர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பா.ஜ., வுக்கு எதிராக 19ல் நம்பிக்கையில்லா தீர்மானம்
 M.Jagadeesan

இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பா.ஜ.க. தமிழகத் தலைவர் தமிழிசை, தங்கள் இணையதளத்தில் செல்போன் எண்ணுடன் பதிவு செய்துள்ளதாக ஆதாரத்துடன் மக்கள் நீதி மய்யம் விளக்கமளித்துள்ளது.
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
 SK

காலம் உருக்குலைத்தாலும் எங்கள் காதல் மாறாது என்கிறதா இந்த மனித எலும்புக் கூடுகள்?
 SK

படமெடுத்த பாம்பை ஆத்திரத்தில் கடித்துத் துப்பிய விவசாயி!
 பழ.முத்துராமலிங்கம்

விமானத்தில் இருந்து மழையாக பொழிந்த தங்கம் - வைர குவியல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான முறையில் சிக்ஸர்... இது நியூசிலாந்தில் நடந்துள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

Video: ரசிகர்களை அதிர வைக்கும் Afridi-யின் Catch!
 SK

வீராணம் ஏரி நீர் திடீர் நிறுத்தம்: சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா?
 SK

வட தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு
 SK

விஜய்யும் ரஜினியும் படைத்த சாதனைகள்; வேறெவரும் இடம்பெறவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் முதன்முறையாக தமிழ்
 பழ.முத்துராமலிங்கம்

தினகரன் அறிமுகப்படுத்திய கொடிக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் அதிமுக தரப்பு மனு
 SK

முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா: வாஷிங்டன் சுந்தரின் மாயாஜால பந்துவீச்சால் வெற்றி பெற்றோம்
 ரா.ரமேஷ்குமார்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

அரசு வேலையில் சேர 5 ஆண்டு ராணுவ பணி கட்டாயம்
 ரா.ரமேஷ்குமார்

அரிசியில இருக்கற கல்லை நல்லா பொறுக்கினா என்ன?
 krishnaamma

ஒரு பக்கக் கதை - தலைவர்
 krishnaamma

நான் மலரோடு தனியாக...
 krishnaamma

தாத்தா கதாபாத்திரத்தில் பேரன்
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நவீன குடும்ப விளக்கு _சசி

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

நவீன குடும்ப விளக்கு _சசி

Post by சசி on Sun Jan 24, 2016 11:32 am

கோழிகள் கூவவில்லை என்றாலும் 
சட்டென்று எழுந்திருக்க முடியவில்லை என்றாலும் 
சிறிது படுக்கையில் உருண்டு புரண்டு 
பார்த்தால் மணி 5:30 ஆகா! 

மணி ஆகிவிட்டதே! 
எழுந்திருத்து தன் சுத்தம் பேணி 
வாசல் தெளித்து கோலமிட்டு 
குதூகலமாய் புத்துணர்ச்சியோடு 
அடுக்களைக்குள் நுழைந்தால் 
அவள் மட்டும் தான் அடுக்களையின் ராணி! 

ராஜாவிற்கு அடுக்களைக்குள் வேலை உண்டு 
ஆனால் ராஜா செய்வது இல்லை! 

ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும் 
அடுக்களையை ஆள்பவள் பெண் தான்! 
மனதுக்குள் தனக்கு பிடித்த பாடல்களையே 
ஸ்லோகன்களையோ இல்லை கணவனை 
வறுத்துக் கொண்டே அன்றைய இரு வேளைக்கான உணவு இருமணி நேரத்தில் 
சமைத்தாக வேண்டுமே!

என்ற கவலை அவளுக்கு! 

குழந்தைக்கும் கணவனுக்கும் 
மாமா மாமிக்கும் சூடாக உணவு 
பரிமாற இயலவில்லையே! 
அவள் வேலையை பதப்படுத்தி 
செய்து கொண்டு இருக்கிறது!! 

அதுக்கு ஒரு நன்றி மனதுக்குள்! 

அதற்குள் குழந்தைகள் சிணுங்கல் 
அம்மா அம்மா! 
இதோ வருகிறேன் என் கண்ணே! 
என் வைரமே! அம்மா உன்னோடு தான் இருக்கிறேன்!! 

ஆரத்தழுவி அணைத்து அன்பு பரிசாக 
குழந்தைகளுக்கு முத்தம்!! 
அதற்குள் பெரிய குழந்தையும் சிணுங்கும் 
இருந்தாலும் கணவனுக்கும் ஒரு முத்தம்!! 

ஆச்சா? மீண்டும் அடுப்படியில் 
காலை காபி டீ 
மாமிக்கு டிகிரி காபி 
மாமனாருக்கு டீ 
குழந்தைகளுக்கு பால்! 
கணவருக்கு வரடீ! 
முடிந்ததா! 
தனக்கு நேரம் இல்லாததால் (டீ)குடிப்பது இல்லை!! 

காலை உணவு ;;மதிய உணவு 

அவசர கதியானாலும் ஆரோக்கிய உணவு 
என்பதில் உடன்பாடு _சத்தான உணவை சிறிது சிரமப்பட்டு செய்து முடித்து உணவை கணவனுக்கும் குழந்தைகளுக்கும் அடைத்து வைத்து  அடுக்களைக்களையை சுத்தம் செய்தால் மணி 7:30!


ஆகா 
மணி ஆகிவிட்டதே! 
கிளம்பு கிளம்பு குழந்தையை 
குளிக்க வைத்து குழந்தைக்கு தேவையானவற்றவை 
பையில் எடுத்து வைத்தாகி விட்டது!! 

குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல தயாராகிவிட்டது! 

இந்த வீட்டு ராஜா 
நிதானமாக உறக்கம் கலைந்து 
ஆரஅமர எழுந்திருந்தால் மனைவி 
கையால் டீ கிடைக்கும்! 

டீ யோடு பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமாம் அவர்களுக்கு அதனால் 
கண் விழிப்பது செய்தி தாளில் தான்!! 

பாவம் பெண்களுக்கு அறிவு வேண்டாம் என்று நினைத்து விட்டார்கள் போலும்! 
நிதானமாக எழுந்திருத்தாலும் 
அவசர கதியில் அலுவலகம் செல்வதை 
வழக்கமாக கொண்டிருப்பவர்கள் 
ஆண்கள்! 
அப்படியும் கிளம்பியாகி விட்டது! 

வீட்டை பூட்ட வேண்டிய வேலை 
இல்லை பெரியவர்கள் இருக்கின்றனர்! 


அலுவலகம் செல்ல வெளியே வந்தாகி விட்டது! 
கணவனுக்கும் மனைவிக்கும் பெரிய சம்பாஷணை எதுவும் இல்லை! 

அவள் அவசரமாக பேருந்துக்குள் ஏறி உட்கார்ந்தாள்! உட்கார இடம் கிடைத்தால் 
சற்று ஓய்வு தான்! 

அதுவும் இல்லை என்றால் அவள் பாடு திண்ட்டாட்டம் தான்!! 

கழுகு பார்வையில்லிருந்தும் 
கண்டவனின் உரசுதலில் இருந்தும் 
தன்னை பாதுகாத்து கொள்ள கொஞ்சம் 
மெனக்கெடத்தான் வேண்டி இருக்கிறது! 

அலுவலகம்! ;

அலுவலகம் வந்தாச்சு 
அவசரகதியில் வந்தாலும் 
நான்கு தோழிகளை பார்த்து 
ஆசுவாசப்படுத்தி மகிழ்ச்சியில் 
வாய்விட்டுச் சிரிக்கும் நேரம் 
சில மணித்துளிகள் தான்! 

தொடரும் __-
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by சசி on Sun Jan 24, 2016 11:54 am

அலுவலக வேலைகள் ஆரம்பமாயின 
முதலாளிக்கு கோவம் வந்தால் 
மாட்டுபவர்கள் பெண்கள் தான்!

ஏனெனில் எதிர் பதில் பேசாதவள் 
பெண் தான்! 
இருக்கட்டும் "இதுவும் கடந்து போகும் "
என்று பெண் நினைப்பதாலோ 
என்னவோ எல்லா துன்பங்களும் 
பெண்ணின் தலையில் தான்!! 

கொஞ்சம் சிரித்து பேசினாலும் 
முதலாளியை கண்களால் பேசியும் 
வசியம் செய்கிறாள் என்பதை கூறுபவர் 
ஆண் அல்ல! 
பெண் தான்! இன்றும் சில பெண்கள் 
இப்படி இருக்கத்தான் செய்கிறார்கள்! 

அவர்கள் போகட்டும் தேவையில்லை என 
விட்டு விடுகிற பெண்களால் தான் 
சாதிக்க முடிகிறது! 

அனைத்து வேலைகளையும் நேர்த்தியாகவும் அழகாகவும் ஒரு வேலையை செய்ய முடிகிறது என்றால் அது பெண்கள் தான்!! 

இந்த வீட்டுப் பெண்ணும் இதுக்கு 
விலக்கு அல்ல!! அவள் காரியத்தை சுறுசுறுப்பாகவும் நேர்த்தியாகவும் 
செய்து நன்றாக வேலை செய்பவள் 
படைப்பு திறன் மிக்கவள் என்று பெயர் எடுத்தவள்!! 
அனைவராலும் மதிக்க படுபவள்! 
இதில் சற்று பொறாமை கணவனுக்கு 
தன்னைக் காட்டிலும் திறமைசாலியாக 
இருக்கிறாளே என்று!! 

தன் மனைவியாச்சே! 
விட்டு கொடுக்க முடியாது 
வெளியில் அதைக் காட்டிக் கொள்ளாமல் 
அமைதியாக இருந்து விடுவான்!! 

அன்றைய அலுவலக வேலைகள் சற்றே அமைதியாக நிறைவுற்றது! 
அதில் கொஞ்சம் ஆறுதல் அவளுக்கு! 

தொடரும்
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by Dr.S.Soundarapandian on Sun Jan 24, 2016 12:17 pm

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by சசி on Sun Jan 24, 2016 12:33 pm

அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வருவதற்கு முன்பு தேவையானவற்றை 
வாங்கியாக வேண்டுமே! 

வழியில் சில கடைகள் உண்டு 
அதில் சில நல்லவர்களும் உண்டு 
அவர்களுடன் பேசிக்கொண்டே 
காய்கறிகள் பழங்களை 
வாங்கி வைத்துக் கொண்டு 
மாநகர பேரூந்தில் மாட்டிக் கொண்டு 
விழி பிதுங்கி வீடு வந்து சேர்வதற்குள்
அப்பாடா என்றாகிவிடும்! 

வரும் போதே மாமி வந்தாச்சா மா 
வா! வா! எனக்கு தலை வலிக்கிறதே 
என்னவோ போல் இருக்கிறது 
உன் கையால் கொஞ்சம் காபி கொடும்மா! 
உனக்கு புண்ணியமா போகும்! 

இதோ வருகிறேன் மாமி! 

தான் பேரூந்தில் இடிபட்டது 
தன் உடல் வலி தலைவலி 
தனக்கான நேரம் எதுவும் இல்லாமலேயே 
அடுத்த யுத்ததிற்கு தயாராக வேண்டியவள் பெண் தான்! 

இவளும் முகம் சுளிக்காமல் 
வந்தாள் காபியுடன்! 
காபி குடித்து விட்டு 
நல்ல இருடி மகாராசி! 
நல்ல மாமியார்! அதனால் வேறு பிரச்சினை இல்லை! 
இல்லையேல் குடிக்கிற காபி கூட பிரச்சினை ஆகிவிடும்! 
நல்ல வேளை புண்ணியம் செய்திருக்கிறாள்! 

குழந்தைகள் வீடு வரும்போதே 
அம்மா! என்று கட்டி அணைத்து கொள்ளும் 
குழந்தைகள் என்றால் குதூகலம் தானே! 

வாரி அணைத்து கொண்டு என் 
செல்லமே வைரமே கட்டிக் கரும்பே 
என கொஞ்சி சிறிது நேரம் மகிழ்ச்சியை 
வெளிப்படுத்துவாள்!! 

ஆனாலும் குழந்தைகளுக்கான 
சத்தான மாலை உணவு பரிமாற வேண்டுமே!

தொடரும்
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by சசி on Sun Jan 24, 2016 2:40 pm

சிறிதும் சங்கடம் இல்லாமல் 
செய்து முடித்து ஊட்டி 
மாமா மாமிக்கும் பரிமாறி முடிப்பதற்குள் 
கணவனும் வந்து விடவும் 
கணவனுக்கும் சேர்த்து பரிமாறினாள்! 

மிச்சம் சொச்சம் இருக்கிற 
வேலையையும் செய்து முடித்தால் தான் 
இரவு உணவுக்கு தயார் செய்ய ஏதுவாக இருக்கும்! 

அப்பாடா என்று ஆசாசுவாசப்படுத்தி
அமர்ந்தாள். குழந்தைகளுக்கு 
கல்வி செல்வத்தையும் தாய் தான் வழங்க வேண்டும்!
தந்தைக்கு இதில் பொறுமை இருக்காது! 

ஆசையாய் அமர்ந்து அழகு குழந்தைகளுக்கு 
பாடம் சொல்லி கொடுத்தாள்! 
மணிகள் ஆயிற்று! 

மீதம் இருக்கும் வேலைகள் 
துணிமடிப்பது பள்ளி செல்லும் 
குழந்தைகளுக்கு சீருடை துவைப்பது 
வீட்டை சுத்தம் செய்வது 
என பலப்பல வேலைகள் 
செய்து முடித்து, 
குழந்தைகள் ஆசையாய் விரும்பும் 
சப்பாத்தியும் மசாலாவும் 
செய்து தன் கையால் ஊட்டி 
மகிழ்ந்து தன் கணவனுக்கும் 
மாமி மாமாவுக்கும் பரிமாறி
தானும் உணவருந்தினாள்!

குழந்தைகளை உறங்க வைத்து 
அமைதியாய் குழந்தைகள் சலனம் இல்லாமல் 
உறங்குவதை பார்த்து ரசிப்பாள்! 

அதற்குள் கணவனும் படுக்கையறைக்கு வந்து விடவே தன் கணவனிடம் 
தனக்கான நேரத்தை செலவிடுவாள்! 

பேசுகையில் சில சமயம் 
ஊடல்கள் வருவதும் உண்டு! 
ஊடல்களை அதிகம் விரும்பாத 
கணவன், மனைவி ஆதலால் 
ஊடலும் சிறிது நேரம் தான்! 

விடிந்தால் சரியாகிவிடும் 
மனமொத்த தம்பதிகள் 
கருத்து வேறுபாடுகள் இருப்பினும் 
சரியான காரணம் இருப்பின் 
இருவரும் விட்டு கொடுக்க தயங்குவதில்லை! 

இப்படி இருப்பதால் அனைவருக்கும் 
இவர்களை பிடிக்கும்! 

மீண்டும் பொழுது விடியும் நேரம் 
கனவுகள் கலைந்து 
காலை சூரியன் மீண்டும் ஓர் 
நாளை படைக்க தொடங்கி விட்டான்! 

சிலருக்கு கனவுகள் நிறைவேறும் நாள் 
சிலருக்கு கஷ்டங்கள் தீரும் நாள் 
சிலருக்கு துன்பத்தை தானே 
தேடி வருவித்துக் கொள்ளும் நாள்! 

இப்படியாக பல பேருக்கு ஒவ்வொரு 
நாளும் விடிந்து கொண்டு தான் 
இருக்கிறது! 

விடியலைத்தேடி நாமும் 
ஓடிக் கொண்டு தான் 
இருக்கிறோம்!!

ஓடும் பயணத்தில் 
பெண்களின் பயணம் 
கற்களும் முட்களும்
பாதைகள் கரடுமுரடாகவும் 
இருக்கத்தான் செய்கிறது!! 

தொடரும்
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by சசி on Sun Jan 24, 2016 3:27 pm

இவையெல்லாவற்றையும் மீறி தினமும் பெண்கள் வெற்றி கனியை சுவைத்து கொண்டே தான் இருக்கிறார்கள்! 

ஒவ்வொரு குடும்ப பெண்களும் ணும் 
லட்சிய வாதி தான்! 

தன் குடும்பத்தை முன்னேற்றும் 
பொ று ப்புகள் ஆணுக்கு இருப்பதை 
விட ஒரு படி மேலே தான் பெண்களுக்கு இருக்கிறது! 

ஒவ்வொரு குடும்ப பெண்ணும் 
தன் வாழ்க்கையில் வெற்றியை ருசிக்க 
துன்பத்திற்கு ஒப்புக் கொடுத்து தான் 
வெற்றிக் கனியை பறிக்க வேண்டிய காலம் இது! 

நூற்றாண்டுகள் மாறினாலும் 
பெண்ணுக்கான வேலையையும் 
பண்பும் குணமும் மாறாமல் இருக்கிறது!! 

தன் துணை சரியாக அமைந்து விட்டால் 
தப்பித்தாள்! 

கணவனும் கால் வயிற்றுக்கு கூட 
வழியில்லாத வாழ்க்கை வாழ்ந்தால் 
பெண்களின் பாடு சொல்லி மாளாது!! 

குடி குடித்தனத்தை குட்டிச்சுவராக்கும் 
சமூதாயம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது! 

இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது 
பெண்கள் தான்! 

ஒரு சமூகம் என்றைக்கு பெண்ணை பெண்ணாகவும் அவளை மனுஷியாகவும் 
மதிக்க தொடங்குகிறதோ அன்றைக்கு அந்த சமூதாயம் வெற்றி பெற்ற சமூதாயம்!! 


இப்படி பல எண்ணங்கள் கருத்து பரிமாற்றங்கள் இருந்தாலும் 
தன் உள்ள கிளர்ச்சியை 
வெளிப்படுத்த முடியாத நிலைதான் 
குடும்ப பெண்களுக்கு!! 

இதற்கு இவளும் விலக்கு அல்ல!! 

தானும் ஆண் செய்யும் அதே வேலைகள் 
செய்து குடும்பத்தில் உள்ள 
அனைத்து வேலைகளையும் செய்து குடும்ப 
முன்னேற்றத்திற்கு வழி வகுத்து 
வெற்றி பெற தானும் முழு காரணமாக 
இருந்தாலும், 

ஆண்களும் குடும்பத்தாரும் 
இதை ஏற்பதில்லை!! 

"என் புள்ள எவ்வளவு கஷ்டப்பட்டு 
சம்பாதித்து குடும்பத்தை 
காப்பாத்தறான் பாரு ""

என தாய் தந்தையர் புலம்பல் காதில் ஒலித்து கொண்டு இருக்கும்!! 

கோவம் தலைக்கேறினாலும் 
இது தான் சமூக கட்டமைப்பு 
இதை மாற்றுவதற்கான 
யோசனையும் வழிமுறையும் யாருக்கும் இல்லை!! 

பெண்களுக்கான அடிப்படை பிரச்சனைகளை களைய 
யாரும் முன்வரவில்லை! 

பெண்கள் பாலியல் இச்சைக்கு மட்டும் பயன்படுத்தும் கணவன்மார்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்!! 

பாலியல் கொடுமைகளுக்கு 
பச்சை கொடி காட்டும் விதமாக 
ஊடகங்களும் புத்தகங்களும் 
ஓர் அசிங்கமான வாயிலை திறந்து வைத்துக் கொண்டு ""
""
""காதலையும் காமத்தையும் கற்று மற ""

என்று வியாக்கியானம் பேசிக்கொண்டு திரிகிறது! 
இந்த இளைய சமுதாயம்! 

இதில் இருந்து எல்லாம் ஒரு பெண் 
தன்னை விடுவித்துக் கொண்டு 
வாழ்க்கையில் ""
""வெற்றிக் கனியை 
பறிப்பதில் தான் பெண் நிற்கிறாள் ""
அது தான் பெண்களின் தனித்துவம் ""

ஒவ்வொரு பெண்ணும் தனித்துவமானவள் தான்! 

தான் நினைத்த காரியம் 
நிறைவேறாமல் உறக்கம் 
கொள்ள மாட்டாள்!! 

இப்படியாக பல எண்ணங்கள் 
உதித்தாலும் ஓர் நாள் பிறந்தால்
ஓர் யுத்ததிற்கு தயாராக வேண்டியவள் 
பெண்!! 

இந்த வீட்டு பெண்ணும் அதற்கு தயாரானாள்!! 

அன்று ஞாயிறு! 

தொடரும்...
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by K.Senthil kumar on Sun Jan 24, 2016 3:56 pm

ம்ம் .....ம்ம்......வர்ணனை நன்றாகத்தான் இருக்கிறது தோழியே...அது இருக்கட்டும் முதலில் உங்கள் கணவரின் மின் அஞ்சல் முகவரியை கொடுங்கள் இந்த பதிவின் லிங்கை அவருக்கு அனுப்பிவிடுகிறேன் அதில் இந்த தகவலையும் சேர்த்து அனுப்பிவிடுகிறேன்

இந்த பதிவை நன்றாக படியுங்கள் அண்ணா..
பிறகு சசி வந்ததும் இறுக்கமாக
தலைமுடியை நன்றாக பிடியுங்கள் அண்ணா..
என்று  அனுப்பிவிடுகிறேன் ...ஹா..ஹா..ஹா.. சிரி சிரி  சிரி சிரி  சிரி சிரி  சிரி சிரி

இவன்
ஆண்கள் பாதுகாப்பு சங்க நிரந்தர பொதுசெயலாளராக விரும்பும்
கே.செந்தில்குமார்
(குட்டு ஏதும் வைக்க வேண்டாம் நகைச்சுவைக்காக மட்டுமே ..)
avatar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 815
மதிப்பீடுகள் : 312

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by T.N.Balasubramanian on Sun Jan 24, 2016 5:03 pm

இந்த காலத்தில் எல்லாப் பெண்களும்
இது மாதிரி இல்லாவிடினும்
சராசரி பெண்களின் வாழ்க்கை
சரியாகவே கணித்துள்ளாய்
தினசரி வாழ்வின் நெருடல்களை
திகட்டாவண்ணம் தீட்டியுள்ளாய்.

நல்ல மாமியார் அமைந்தது போல்
நல்ல கணவன்மார்களும் நானிலத்தில் உண்டே .
தற்கால கணவன்மார்கள்
தாமாகவே தரமாகவே
தாரத்திற்கு உதவும்கரமாகவே  
தம்மை வெளிக்காட்டாதுள்ளனரே .

போட்டீக்கென கூறவில்லை ,
பொன்னான கணவன்மார்களை கண்டுளேன்
இரு சக்கிர வண்டியென
இருவரும் அறிந்து போற்றுகிற உலகம்மா இது
உன்னத உலகமென்பதை உணர்வாய் பெண்ணே .
உந்தன் கவிதையிலும் குறையொன்றும் இல்லைப் பெண்ணே .

வாழ்த்துகள் ,சசி .
ரசித்தேன் . அருமை .
ரமணியன்

(ஓரிரு எழுத்துப் பிழைகள் )


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21453
மதிப்பீடுகள் : 8148

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by சசி on Sun Jan 24, 2016 6:08 pm

காலை 

ஞாயிறு அன்று ஞாயிறு 
துள்ளி குதித்து முன்னமே 
தங்க நிற கதிர்களை 
ஒளி வீசி கண்களை 
மிளிரச் செய்யும் அழகோடு 
புதியதாய் பிறக்கும் குழந்தையைப்போல் 
ஓர் காலை பிறந்தது!! 

ஞாயிறு என்ன திங்கள் என்ன 
எல்லா நாளும் பெண்களுக்கே 
உரித்தானதாயிற்றே!! 

தூக்கத்தோடு தூக்கம் 
கலைகிறதே என்று 
துக்கம் தலை தூக்கினாலும் 
விரட்டி அடித்து 
விடியலில் 
எழுந்து விழிக்கு வியப்பு தரும் 
விடியலை ரசிக்க எழுந்து விட்டாள்!! 

இளம் காலை செங்கதிர்கள் 
இவள் மீது வீச இவளும் 
ஜொலிப்புடன் புத்துணர்வு 
பெற்று புதுப்பொலிவுடன் 
காலையை வரவேற்றாள்!! 

வாசலில் மங்கை 
வண்ணக்கோலமிட்டாள் 
வருவோர் போவோர் 
விழி திறந்து வியப்பினில் 
ஆழ்ந்தனர் மங்கை அவள் 
கைவண்ணத்தை கண்டு! 

சிட்டென்று பறக்கும் 
சிட்டுக்குருவி போல் 
பட்டென்று பறக்கும் 
பச்சைக்கிளிப்போல் 
பம்பரமாய் சுற்றினாள்!! 

வீடு வீடாக இல்லை 
வீட்டை பெருக்கி ஒட்டடை 
அடித்து சுத்தம் செய்தனள்

தரையை
துடைத்து வீட்டிற்கு மீண்டும் 
அழகு சேர்ப்பதில்
இவளுக்கு நிகர் இவளே தான்!! 

அடுக்களைக்குள் வந்தாள் 
இன்று ஒன்றும் பெரிய 
அவசரமில்லை அவளுக்கு 
நிதானமாய் அழகு குழந்தைகளுக்கு 
அன்பொழுக ஆசை ஆசையாய் சூடாக 
சமைத்தனள்! 

வழிந்தோடும் நெய்யில் 
தினைப் பொங்கல் 
வடை சகிதம் சுடச்சுட 
தயார் செய்தனள்!! 

குழந்தைகள் குதூகலமாய் 
மகிழ்ச்சியுடன் மங்கை இவளை 
கட்டிக் கொள்ள கட்டிக் கரும்பாய் 
கட்டி அணைத்து கொஞ்சி மகிழ்ந்தாள்!! 

மகனும் மகளும் 
பிறந்திட மாதவம் 
செய்தேனோ மங்கை நான் 
என மகிழ்ச்சியால் 
உறைந்தனள்!! 

கணவன் முன் கண் 
கண்விழித்து 
இவள் நாணமாய் 
கொண்டவனை கண்டாள்! 
கட்டுண்டாள் காதலால் 

அழைத்தாள் அழகு 
தமிழில் பெயர் சொல்லி 
அவன் அருகே வந்தான் 
தலைக்கோதி நெற்றியில் முத்தம் 
தந்து நெடிதுயில் களைய 
எழுந்திருங்கள் என்று 
கொஞ்சி கெஞ்சினாள்!! 

கணவன் கட்டி 
அணைத்து மனைவியை 
மகிழ்ச்சியில் ஆழ்த்த 
இதழ் பதித்து இன்பம் 
சேர்த்து துள்ளிக் குதித்து 
மகிழ்ச்சியாய் பொழுதை 
வரவேற்றான்!! 

காபியுடன் கை நீட்டினாள்! 
கைக்கொரு முத்தம் தந்து 
காபியை பெற்றுக் கொண்டு 
காலாட்டி தினசரியை வாசித்து கொண்டே 
இன்ப உலகில் இன்னும் என்னென்ன 
இருக்கிறது என்று 
விலாவாரியாக படித்துக் கொண்டிருந்தான்!! 

எழுந்து வாருங்கள் 
குழந்தைகள் பசியுடன் இருக்கின்றனர் 
என்ற சத்தம் வந்தவுடன்
வந்து குழந்தைகளுடன் 
காலை உணவு குடும்பமாய் 
உணவு அருந்தினர்!!

தொடரும்
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by சசி on Sun Jan 24, 2016 8:52 pm

நேரம் போவது தெரியாதிருக்கையில் 
குழந்தைகள் ஓடி விளையாடி 
ஒளிந்து விளையாடி இருக்கையில் 
அழைத்தனள்! 
பாடம் சொல்லித்தர 
குழந்தைகள் வந்தனர் 
பாடம் படித்தனர் 
பாடத்தோடு பண்பையும் புகட்டினள் 
வாழ்க்கைப்பாடமும் 
பணிவும் பண்பும் 
ஒவ்வொரு நாளும் 
குழந்தைகளுக்கு 
கற்பிக்க தவறுவதில்லை! 


பண்போடு வாழ்ந்தால் 
பாரதம் செழிக்கும் என்பதில் மாற்றுக் 
கருத்து இல்லை!! 


அதிகமாக குழந்தைகள் 
படிக்க வேண்டிய கட்டாயம் 
கல்வி காசாகி விட்டதே!! 


படிக்க வைத்து விட வேண்டும் 
என்ற பெயரில் குழந்தைகளை 
படுகுழியில் தள்ளும் பெற்றவர்களின் 
நடுவில் இவர்கள் கொஞ்சம் 
வித்தியாசமானவர்கள்!! 

ஏட்டுச்சுரைக்காய் 
கறிக்கு உதவாது 

என்பதால் கல்வி மட்டுமே 
வாழ்க்கையை செழுமை படுத்தி விடாது 
என்று உணருபவள்!! 

குழந்தைகளுடன் கொஞ்சம் 
மணித்துளிகள் கரைந்தன! 

ஆறு நாட்களும் ஆறியதை 
சாப்பிடுபவர்களுக்கு 
இன்று சுடச்சுட உணவு 
தட்டில் வைத்தாக வேண்டும்! 

மதிய உணவுக்கு விருந்தினர் 
வருவதாக அலைபேசியில் அழைப்பு 
வந்தது!! ம்ம் 
என்று சொல்லிவிட்டு 
அவசரமாக அடுக்களைக்குள் நுழைந்தாள்
அதற்குள் கணவன் 
ஓடுவது பறப்பது நடப்பது 
நீந்துவது எல்லாவற்றையும் 
வாங்கி வந்தாகி விட்டது!! 

வரப்போவது தனது தம்பி தங்கை 
அல்லவா?! 

பார்த்ததும் பிரமிப்பு 
ஆனால் வருகின்றவர்களை 
உபசரிப்பது தனது கடமையல்லவா!

அனைத்தும் சமைத்து முடித்தாள் 
ஒத்தாசைக்கு வீட்டில் ஒருவர் 
கூட இல்லை! மாமிக்கு உடம்பு முடியாது! 

ம்ம் நாம் தான் செய்ய வேண்டும் 
என்ற எண்ணம் எப்பொழுதும் 
இருப்பதால் சலிப்பில்லாமல் 
செய்பவள்! 

வந்தனர் விருந்தினர்கள் 
சிறிது நேரம் பேச்சில் கரைந்து 
மணித்துளிகள்! 

தலைவாழை இலை வைத்து 
தங்க கைகளால் 
அறுவை உணவு படைத்தனள்!! 

ஆனந்தமோ ஆனந்தம் 
அவர்களுக்கு! 
அண்ணியை மிஞ்ச 
பெண்களே கிடையாது! 
இது கொழுந்தன்! 
அண்ணிக்கு நிகர் அண்ணி தான் 
இது நாத்தி!! 
குழந்தைகளும் மகிழ்ச்சியாய் 
உணவு அருந்தினர்! 

மணியோ நான்கு! 
வேலைகளால் அலுத்து
சலுத்தாலும் 
பசி லேசாக எட்டிப் பார்க்க 
ஆரம்பித்தது!! 

அவசரகதியில் சுத்தம் 
செய்து தானும் 
உணவு அருந்துகையில்
மணி:4:30
உடல் சற்று தரையில் 
தலை வைத்து சாயலாம் 
என்று மனம் நினைத்தது!! 

ம்ம் அதற்கு நேரமில்லை 
கொழுந்தனும் நாத்தியும் 
இருக்கிறார்கள்! 
சிறிது நேரத்தில் கிளம்பி விடுவார்கள் 
அவர்களுக்கான பிரச்சினைக்கு 
தீர்வு காணவே தன்னை தேடி 
வந்துள்ளனர்!! 
அதனால் மீண்டும் புத்துணர்வு 
பெற்று அவர்களிடம் பேசிக் கொண்டே 
சிறு சிறு வேலைகள் செய்து கொண்டிருந்தாள்!! 

பிரச்சினைகளின் தீவிரம் 
புரிந்து பிரச்சனைகளை கையாளும் 
விதம் அனைவருக்கும் வாய்த்து விடாது!! 

இவள் சற்று வித்தியாசமானவள் 
பிரச்சினையின் விளிம்பில் 
நின்று கொண்டு 
எப்படி சமாளிப்பது என்று 
தீர்க்கமாய் யோசிப்பவள்!! 

பிரச்சினையை அதன் போக்கில் விட்டு 
விட வேண்டும் என்று நினைப்பவள்!! 

அவர்களுக்கான பிரச்சினைக்கு 
தீர்வு சொல்லி அவர்களை 
சங்கடத்தில் இருந்து விடுவித்த
மகிழ்ச்சி இவளுக்கும் 
தொற்றிகொண்டது!! 

மாலைக்கு காபி தயார் 
செய்து கொடுத்து விருந்தினர்கள் 
செல்வதாக கூறியதும் 
அவர்களை வழியனுப்ப 
தயாரானாள்!! 
இருவரும் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் 
தான்!! 
அவர்களாலும் தங்க இயலாது! 
மகிழ்ச்சியாய் சென்றார்கள்!!! 

மாடியில் 
காய்கின்ற துணிகளை 
எடுக்க சென்றவள் மகிழ்ச்சியாய் 
மாலையை வரவேற்றாள்!! 

ஞாயிறு மெல்ல திங்களை 
வரவேற்க தயாராகி கொண்டிருந்தது!! 

தொடரும்
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by T.N.Balasubramanian on Sun Jan 24, 2016 8:52 pm

இன்பமாக இருக்கிறது .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21453
மதிப்பீடுகள் : 8148

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by சசி on Sun Jan 24, 2016 11:10 pm

செவ்வானம் சூரியனை விழுங்கும் காட்சியை காண்பதில் ஆர்வம் அவளுக்கு! 

எத்தனை எத்தனை மலைப்பான 
விஷயங்கள் இவ்வுலகத்தில் 
தகதகவென்றிருக்கும் சூரியன் 
சாந்தம் கொள்வதுபோல் 
செங்கதிர்கள் கொஞ்சம் 
கொஞ்சமாய் விழுங்கி 
வெண்மையாய் வெண்ணிலவை 
பரிசளிக்கிறது!! 
ஆஹா இது தான் இயற்கை! 

நாட்டிலும் சில ஞாயிறுகள் 
இருக்கத்தான் செய்கின்றனர்!! 

பெண்களை கண்களால் 
விழுங்கும் கயவர்களுக்கு 
வெண்ணிற ஆடை தான் 
சிறந்த பரிசு என்று மனதில் 
நினைத்துக் கொண்டு 
மாடியில் இருந்து துணிகளை
எடுத்துக் கொண்டு இறங்கினாள் ! 

குழந்தைகள் வெளியே செல்ல 
விருப்பம் தெரிவித்து இருந்தனர் 
ஆனால் உடல் ஒத்துழைக்க வில்லை! 
வேறு வழியில்லை குழந்தைகள் அம்மா
கிளம்புங்கள்! வெளியே செல்ல வேண்டும்!! 

கணவனும் கிளம்பேன் என்று கூறவும் 
கிளம்பினாள்!! 

கடற்கரையில் காலாற நடப்பது 
இவளுக்கு பிடித்த விஷயம் 
குழந்தைகளுடன் மகிழ்ச்சியாய் செலவிடும் 
நேரத்தை விட வேறு ஏது ஆனந்தம்?? 

குழந்தைகளுடன் தானும் குழந்தையாக 
மாறி குழந்தைகளை மகிழ்வித்தாள்!! 

அன்று பவுர்ணமி வேறு 
இரவு உணவை சமைத்து கொண்டு வந்ததால் பவுர்ணமியில் பாய் விரித்து 
பந்தி பரிமாறினாள்!! 

நிலவின் குளிர்ச்சியில் 
நித்திரை லேசாக எட்டிப் பார்க்க 
குழந்தை வீடு திரும்ப ஆயத்தமாயின!

நிலவின் ஒளி வெண்மை 
அவளுக்கு ஏதோ சொல்ல வருவது போல் 
உணர்ந்தாள்!! 

களங்கமில்லாத மனதோடு 
இருங்கள்! 
உங்களின் எண்ணங்கள் 
ஒருவரையும் காயப்படுத்தி 
விடக்கூடாது! 
நான் குளிர்ச்சி
தருவது போல 
வார்த்தைகளால் அன்பாய் பேசுங்கள் 
அடுத்தவர்கள் குளிர்ந்தது போவார்கள்! 

கடுஞ்சொற்களை கோவத்தை 
தவிர்த்தாலே வெற்றி நம் வசமாகி விடும்! 
என்று நிலவு சொல்வது போல் 
எண்ணிக் கொண்டு எண்ணங்களை 
கணவனிடம் சொல்லி 
தானும் அவ்வாறே இருக்கப் போவதாகவும் 
கூறினாள்!!! 

இருவரும் இவ்வாறு பேசிக் 
கொண்டு பயணிக்கையில் 
குழந்தைகள் உறங்கி விட்டன!! 

வீடு வந்து சேர்கையில் 
மணி 10:00 மாமா மாமிக்கும் 
உணவு எடுத்து வைத்தாகி விட்டது 
அவர்களும் உறங்கும் நிலையில் தான் 
இருந்தார்கள்!! 

படுக்கையில் குழந்தைகளை 
படுக்க வைத்து விட்டு 
கணவன் அருகில் அமர்ந்தாள்! 

அப்பாடா..... 

ஓர் பொழுது 
ஓர் அமைதியான யுத்தம் தான் 
மனதில் நினைத்துக் கொண்டு 
அமர்ந்தாள்!! 

அனைத்து நாட்களிலும் 
அலுவலகம் வேலை என்று சென்று 
கொண்டே இருக்கிறது! 

மகிழ்ச்சியான தருணம்? 

இல்லறத்தை இனிதே 
மேற் கொண்டு செல்ல 
கணவனையும் 
கவனித்தாக வேண்டுமே!! 

வந்து அமர்ந்ததும் 
கணவனின் காமப் பார்வைக்கு 
கரைந்து போனாள்!! 

மட்டற்ற மகிழ்ச்சியை தருவது
 மனைவி தரும் சுகம் தானே! 
அதை உணர்ந்து நடந்து கொள்வாள்!! 

இரவின் மடியில் இறுக்கம் நெருக்கம் 
அதிகமானது!!

மணிகள் கரைந்தது 
இரவின் மடியில் அயர்ந்து 
போனார்கள்!!! 

ஞாயிறு கரைய திங்கள் 
உதயமாயிற்று!! 

மீண்டும் ஓர் யுத்தம் 
பெண்ணுக்கு ஆரம்பமாயிற்று!!!!! 

தொடரும்
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by சசி on Sun Jan 24, 2016 11:55 pm

பெண் காலங்கள் மாறினாலும் 
பெண்களுக்கான வேலையும் 
நேரமும் என்றும் அப்படியேதான் 
இருக்கிறது!! 

பம்பரமாய் சுழன்று சுழன்று 
தன் வேலையை தானே 
செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் 
பெண்களுக்கு தான் அதிகம்! 

வசதி வாய்ப்புகள் இருந்தாலும் 
வீட்டு வேலைக்கு ஆட்கள் 
இருந்தாலும் பெண்களுக்கான 
பொறுப்புகள் குடும்ப பராமரிப்பும் 
இன்னும் பெண்களிடம் தான் 
இருக்கிறது!! 

வேலைக்கு ஆட்கள் இருந்தாலும் 
பெரும்பாலும் அந்த வேலையை 
செய்வது பெண்கள் தான்! 

நமது சமூக கட்டமைப்பு 
அப்படி ஒரு மாய வலையில் 
பின்னப்பட்டுள்ளது!!!

இன்று நடுத்தர குடும்பத்தில் 
இருக்கும் பெண்களுக்கு தான் 
தெரியும் ஒரு நாளின் அருமை 
என்னவென்று?! 

உடல் ஓய்வெடுக்க நினைத்தாலும் 
ஓய்வு என்பது ஏது?? 
அந்த வேலையை யார் செய்வார்கள்?? 

இப்படியான எண்ணங்கள் 
இருந்தாலும் அனைத்தையும் 
மேற்கொண்டு குடும்பத்தை 
நடத்தி செல்பவள் பெண் தான்!!

ஆணிற்கு பங்கு இல்லையா? 
என்று கேட்கலாம் 
நிச்சயம் உண்டு! 

எல்லோர் வீட்டிலும் ஆண்களுக்கான 
பங்கு என்பது குறைவாகவே உள்ளது! 

இந்த காலத்து ஆண்கள் 
குடி பழக்கத்துக்கு அடிமையாகி 
சின்னா பின்னமாக்குகிறார்கள் 
குடும்பத்தை!! 

பொறுப்புகள் பெண்கள் தலையில் 
தான்!! 

தனக்கான நேரத்தை பெண் எப்பொழுது எடுத்துக் கொள்வாள் 
என்று கேட்டால் இல்லை என்று தான் 
செல்வேன்!! 

நான் சொல்வது ஏழை எளிய 
நடுத்தர வர்க்கதிற்கு மட்டுமல்ல 
எந்த உயர்ந்த பணியில் 
இருந்தாலும் பெண்களுக்கான 
கடமைகளும் பொறுப்புகள் 
அதிகம்!!! 

இந்த சமூகம் பெண்ணிற்கான 
பொறுப்புகளையும் கடமைகளையும் 
பகிர்ந்தளிக்கும் போது 
முன்னேற்றமான சமூகமாக மாறும் 
என்பதில் மாற்றுக் கருத்து 
இல்லை!!! 

பெண் நிர்வகிக்கும் திறன் 
பெற்றவள்!! 
அன்பானவள் 
அறிவானவள் 
அடக்குமுறைக்கு 
எதிரானவள்!! 

ஒரு தாயாய் 
தங்கையாய் 
சகோதரியாய்
காதலியாய்
மனைவியாய் 

எல்லாமுமாய் 
இருந்து மகிழ்விப்பவள் 
பெண்!! 

அந்த பெண்ணை 
இந்த சமூகம் எப்படி நடத்த 
வேண்டும்?? 
என்பதை இன்னும் கற்றுக் 
கொள்ளவில்லை!! பார்வையில் பதறவைக்கும் 
ஆண்களே? 
பெண்ணிற்கான வலி என்ன 
என்பதை உணருங்கள்! 


பெண்களுக்கான பாதையில் பாலியல் 
வன்மத்தை வரவழைக்காமல் 
இருந்தாலே நீங்கள் செய்யும் மிகப் பெரிய 
மரியாதை! 
அவளை நிலை கொள்ள வைப்பது 
அது ஒன்று தான்!!! 

மிகைப்படுத்துதல் 
ஏதும் இல்லை 
உள்ளதை உள்ளபடி 
பதிவு செய்து இருக்கிறேன்!! 

எந்த ஆணையும் காயப்படுத்த விரும்பவில்லை!! 

பெண்களுக்கான பாதை முட்கள் 
நிறைந்தது!! 
அதில் நீங்கள் கண்ணாடி 
துகள்களை வைத்து விடாதீர்கள்!! 

பெண்ணை பெண்ணாக
நடத்துங்கள்! தெய்வமாக அல்ல!! 

நான் எழுதியது சாதாரண நிலையில் 
இருக்கும் 
ஒரு பெண்ணின் நாட்கள் 
எப்படி பட்டது? 
என்பதை உணர்த்தத்தான்!!! 

வலி நிறைந்த வாழ்வின் 
பெண்ணின் பயணம் 
இன்னொரு தருணத்தில் 
என் வழியே தொடரும்!!!!! 

முற்றும்
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by விமந்தனி on Mon Jan 25, 2016 12:47 am

இன்று தான் முழுவதுமாக படித்தேன் சசி. வெகு அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். இது கவிதை அல்ல, கண்ணாடி...
தொடரட்டும் இந்த முடிவில்லா பயணம்!


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by சசி on Mon Jan 25, 2016 8:51 am

@K.Senthil kumar wrote:ம்ம் .....ம்ம்......வர்ணனை நன்றாகத்தான் இருக்கிறது தோழியே...அது இருக்கட்டும் முதலில் உங்கள் கணவரின் மின் அஞ்சல் முகவரியை கொடுங்கள் இந்த பதிவின் லிங்கை அவருக்கு அனுப்பிவிடுகிறேன் அதில் இந்த தகவலையும் சேர்த்து அனுப்பிவிடுகிறேன்

இந்த பதிவை நன்றாக படியுங்கள் அண்ணா..
பிறகு சசி வந்ததும் இறுக்கமாக
தலைமுடியை நன்றாக பிடியுங்கள் அண்ணா..
என்று  அனுப்பிவிடுகிறேன் ...ஹா..ஹா..ஹா.. சிரி சிரி  சிரி சிரி  சிரி சிரி  சிரி சிரி

இவன்
ஆண்கள் பாதுகாப்பு சங்க நிரந்தர பொதுசெயலாளராக விரும்பும்
கே.செந்தில்குமார்
(குட்டு ஏதும் வைக்க வேண்டாம் நகைச்சுவைக்காக மட்டுமே ..)
மேற்கோள் செய்த பதிவு: 1189263

நன்றி தோழரே 
வர்ணனை ஏதும் இல்லை 
வாழ்வியல் எதார்த்ததை தான் 
பதிவு செய்து உள்ளேன். 
கணவர் படித்து விட்டார். குட்டு ஏதும் வைக்க வில்லை
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by krishnaamma on Mon Jan 25, 2016 9:58 am

வாவ் !..சூப்பருங்க ...........அருமை சசி, முதலது மட்டும் படித்தேன், எல்லாமும் படித்ததும் பின்னூட்டம் போடுகிரேன் .........மிக நேர்த்தியாக எழுதுகிறீர்கள்............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி .....தொடருங்கள் சசி புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by சசி on Mon Jan 25, 2016 3:33 pm

நன்றி ரமணியன் ஐயா 
முழுவதும் படித்தீர்களா ஐயா 
நான் ஆண்களை குறை கூறவில்லை 
பெண்களுக்கான ஓர் நாளின் வலி என்ன என்பதை தான் பதிவு செய்து உள்ளேன் ஐயா
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by ஜாஹீதாபானு on Mon Jan 25, 2016 6:09 pm

முதல் பாகம் படித்தேன் அருமை சசி
avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30076
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by T.N.Balasubramanian on Mon Jan 25, 2016 6:41 pm

முழுதும் படித்தேன் சசி .

அருமையாக கோர்வையாக எழுதி உள்ளீர்.
அழகாக வடித்த 48 மணி நேர சுயானுபவம் என்று கூறலாமா ?
வாழ்த்துகள் . அன்பு மலர் அன்பு மலர்

மேலெழுந்தவாரியாக , அதிக விழுக்காடுகள் நிறைந்த  யதார்த்தத்தை
சுவைபட பதிவிட்டுள்ளீர் . மனதை வருடிய நெருடிய வரிகள் பல .

கவிதை  எந்த திசையில்  செல்லும் என்று மனதில் பட்டதின் விளைவுதான் எந்தன் முதல்
பின்னூட்டம் . பார்த்த அனுபவம் ,பார்கின்ற அனுபவம் தான் அது .

நீங்கள் ஆண்களை குறை கூறுவதாக சொல்லவே இல்லையே நான் .
அதே சமயத்தில் நீங்கள் சிலாகித்த  பெண்மணிகள்  100% இல்லை என்றே கூற வருகிறேன்.
ஏன் , எந்தன் கணிப்பில் 40% இருந்தால் அதிகம்
அதற்காக பெண்களை குறைவாக மதிப்பிடவில்லை . அவர்கள் ஈடுபட்டுள்ள வேலைகள் ,
அதன் எதிர்பார்ப்புகள் .
ஆண்கள் பேப்பர் ,காபி  காலை நேரம் கடத்துவது ,இப்போது வெகுவாக மாறிவிட்டனவே .
வீட்டில் வாஷிங் மெஷினில் துணிப்போட்டு /துவைப்பது ,அதை உலர்த்துவது , மடித்து அழகாக அடுக்கி பீரோவில் வைத்து , விடுமுறை நாட்களில் இஸ்த்ரி பண்ணி , கறிகாய்கள் நறுக்கி தருவது , பேங்க்,
இன்சூரன்ஸ் , வரிகள் கட்டுவது போன்ற காரியங்கள் , வெளியாருடன் பேசுதல் போன்ற காரியங்கள்
பலவும் செய்து , குடும்பத்தை சீராக நடத்தி செல்லும் கணவன்கள் பலரையும் கண்டுள்ளேன்

இவை யாவும் கருத்து பரிமாறல்களே தவிர , வேறு எதுவும் இல்லை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  சிரி  சிரி  சிரி  சிரி  

உங்கள் கவிதைக்கு  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21453
மதிப்பீடுகள் : 8148

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by விமந்தனி on Tue Jan 26, 2016 12:51 am

ஆண்கள் பேப்பர் ,காபி காலை நேரம் கடத்துவது ,இப்போது வெகுவாக மாறிவிட்டனவே .
வீட்டில் வாஷிங் மெஷினில் துணிப்போட்டு /துவைப்பது ,அதை உலர்த்துவது , மடித்து அழகாக அடுக்கி பீரோவில் வைத்து , விடுமுறை நாட்களில் இஸ்த்ரி பண்ணி , கறிகாய்கள் நறுக்கி தருவது , பேங்க்,
இன்சூரன்ஸ் , வரிகள் கட்டுவது போன்ற காரியங்கள் , வெளியாருடன் பேசுதல் போன்ற காரியங்கள்
பலவும் செய்து , குடும்பத்தை சீராக நடத்தி செல்லும் கணவன்கள் பலரையும் கண்டுள்ளேன்
அதிர்ச்சி அதிசயம் தான்.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by K.Senthil kumar on Tue Jan 26, 2016 3:02 am

அருமை சசி ...

கவிதாயினி சசி கதை எழுதினாலும் அருமையே..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 815
மதிப்பீடுகள் : 312

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by ayyasamy ram on Tue Jan 26, 2016 6:28 am

அரசியல் கட்சிகளில் சகிப்பின்மை பெருகி விட்டது
என்று ஒருவரை ஒருவர் சாடிக் கொள்கிறார்கள்...!
-
ஆனால் வீட்டரசி சகிப்புத்தன்மையோடு குடும்ப
உறுப்பினர்களை அரவணைத்து ஆதரவு தருகிறாள்...
-
அதனால்தான் கணவன் பாடுகிறான்:
-
ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன
வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்

-
குடும்ப பெண்கள் படும் பாட்டை யதார்த்தமாக
சொல்லியிருக்கிறீர்கள்...!!
-
   
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34956
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by சசி on Tue Jan 26, 2016 8:19 am

@T.N.Balasubramanian wrote:முழுதும் படித்தேன் சசி .

அருமையாக கோர்வையாக எழுதி உள்ளீர்.
அழகாக வடித்த 48 மணி நேர சுயானுபவம் என்று கூறலாமா ?
வாழ்த்துகள் . அன்பு மலர் அன்பு மலர்

மேலெழுந்தவாரியாக , அதிக விழுக்காடுகள் நிறைந்த  யதார்த்தத்தை
சுவைபட பதிவிட்டுள்ளீர் . மனதை வருடிய நெருடிய வரிகள் பல .

கவிதை  எந்த திசையில்  செல்லும் என்று மனதில் பட்டதின் விளைவுதான் எந்தன் முதல்
பின்னூட்டம் . பார்த்த அனுபவம் ,பார்கின்ற அனுபவம் தான் அது .

நீங்கள் ஆண்களை குறை கூறுவதாக சொல்லவே இல்லையே நான் .
அதே சமயத்தில் நீங்கள் சிலாகித்த  பெண்மணிகள்  100% இல்லை என்றே கூற வருகிறேன்.
ஏன் , எந்தன் கணிப்பில் 40% இருந்தால் அதிகம்
அதற்காக பெண்களை குறைவாக மதிப்பிடவில்லை . அவர்கள் ஈடுபட்டுள்ள வேலைகள் ,
அதன் எதிர்பார்ப்புகள் .
ஆண்கள் பேப்பர் ,காபி  காலை நேரம் கடத்துவது ,இப்போது வெகுவாக மாறிவிட்டனவே .
வீட்டில் வாஷிங் மெஷினில் துணிப்போட்டு /துவைப்பது ,அதை உலர்த்துவது , மடித்து அழகாக அடுக்கி பீரோவில் வைத்து , விடுமுறை நாட்களில் இஸ்த்ரி பண்ணி , கறிகாய்கள் நறுக்கி தருவது , பேங்க்,
இன்சூரன்ஸ் , வரிகள் கட்டுவது போன்ற காரியங்கள் , வெளியாருடன் பேசுதல் போன்ற காரியங்கள்
பலவும் செய்து , குடும்பத்தை சீராக நடத்தி செல்லும் கணவன்கள் பலரையும் கண்டுள்ளேன்

இவை யாவும் கருத்து பரிமாறல்களே தவிர , வேறு எதுவும் இல்லை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  சிரி  சிரி  சிரி  சிரி  

உங்கள் கவிதைக்கு  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

ரமணியன்
[url=http://www.eegarai.net/t127802p15-_#1189526]மேற்கோள் செய்த பதிவு: 1189526[/


தங்களின் மிகப்பெரிய பின்னூட்டத்திற்கு 
எனது மிகப் பெரிய வணக்கங்கள் 
மிகவும் நன்றி ஐயா. 
தங்களின் பின்னூட்டம் என் எழுத்துகளுக்கு 
மிகப்பெரிய பலம். நீங்கள் சொல்வது போல் 
சில பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். 
எல்லோரும் அவர்கள் போல மாறவேண்டும். 
இன்னும் குடும்பம் அழகாகும்.
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by சசி on Tue Jan 26, 2016 8:25 am

@ayyasamy ram wrote:அரசியல் கட்சிகளில் சகிப்பின்மை பெருகி விட்டது
என்று ஒருவரை ஒருவர் சாடிக் கொள்கிறார்கள்...!
-
ஆனால் வீட்டரசி சகிப்புத்தன்மையோடு குடும்ப
உறுப்பினர்களை அரவணைத்து ஆதரவு தருகிறாள்...
-
அதனால்தான் கணவன் பாடுகிறான்:
-
ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன
வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்

-
குடும்ப பெண்கள் படும் பாட்டை யதார்த்தமாக
சொல்லியிருக்கிறீர்கள்...!!
-
   
-
மேற்கோள் செய்த பதிவு: 1189584


மிக்க நன்றி ஐயா 
[size=34]பாடல் தந்து விட்டீர்கள்.[/size]
அழகான ஆலம்விழுது படம் பதிவு 
செய்தால் மகிழ்வேன் ஐயா
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by சசி on Tue Jan 26, 2016 8:27 am

@விமந்தனி wrote:
ஆண்கள் பேப்பர் ,காபி  காலை நேரம் கடத்துவது ,இப்போது வெகுவாக மாறிவிட்டனவே .
வீட்டில் வாஷிங் மெஷினில் துணிப்போட்டு /துவைப்பது ,அதை உலர்த்துவது , மடித்து அழகாக அடுக்கி பீரோவில் வைத்து , விடுமுறை நாட்களில் இஸ்த்ரி பண்ணி , கறிகாய்கள் நறுக்கி தருவது , பேங்க்,
இன்சூரன்ஸ் , வரிகள் கட்டுவது போன்ற காரியங்கள் , வெளியாருடன் பேசுதல் போன்ற காரியங்கள்
பலவும் செய்து , குடும்பத்தை சீராக நடத்தி செல்லும் கணவன்கள் பலரையும் கண்டுள்ளேன்
அதிர்ச்சி  அதிசயம் தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1189572

ஆம் அக்கா,
ஐயாவும் அதிசயம் தான்
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: நவீன குடும்ப விளக்கு _சசி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum