ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 மூர்த்தி

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 மூர்த்தி

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 மூர்த்தி

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 மூர்த்தி

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 மூர்த்தி

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 மூர்த்தி

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 T.N.Balasubramanian

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

புதிய சமயங்கள்
 gayathri gopal

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 M.Jagadeesan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

View previous topic View next topic Go down

அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Post by கார்த்திக் செயராம் on Thu Jan 28, 2016 11:10 am

சென்னை: அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க.வைச் சேர்ந்த பழ.கருப்பையா துறைமுகம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இந்நிலையில், அவரை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பழ.கருப்பையா நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பழ.கருப்பையா கட்சியின் கொள்கை-குறிக்கோள், கோட்பாட்டிற்கு முரணான வகையில் பழ.கருப்பையா செயல்பட்டதால் அவர் நீக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில், ஆளும் அ.தி.மு.க. அமைச்சர்கள் அவதூறாக பேசியதால் பழ.கருப்பையா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடசி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

நன்றி விகடன்
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Post by T.N.Balasubramanian on Thu Jan 28, 2016 11:51 am

நான் இந்த நீக்கத்தை ஜனுவரி 17/18 தேதி வாக்கிலேயே எதிர்பார்த்தேன் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21535
மதிப்பீடுகள் : 8154

View user profile

Back to top Go down

Re: அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Post by M.Jagadeesan on Thu Jan 28, 2016 12:33 pm

ஒருவரை கட்சியை விட்டு நீக்கும் முன்பாக , அவர் என்ன குற்றம் செய்தார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் .

முதலில் அவரை நேரில் கூப்பிட்டு ஏன் இப்படி பேசினீர்கள் என்று விளக்கம் கேட்கலாம் .

அல்லது


அவருக்கு SHOW CAUSE நோட்டீஸ் அனுப்பி , அவருடைய பதில் வரும்வரையில் காத்திருக்கலாம் .அவசர கதியில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எடுக்கப்படும் முடிவுகள் ,கட்சிக்கும் , தலைமைக்கும் கெட்ட பெயரையே உருவாக்கும் . சில நாட்களுக்கு முன்பு முன்னாள் DGP நடராசன் விஷயத்தில் , நடந்தது என்னவென்று தெரியாமல் கட்சியை விட்டு நீக்கினார் . பிறகு உண்மை தெரிந்தவுடன் , அவரைக் கட்சியில் சேர்த்துக்கொண்டார் . நடந்த தவறுக்கு முதல்வர் ஒரு வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை.


எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. (தெரிந்து செயல் வகை-467 )
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4998
மதிப்பீடுகள் : 2363

View user profile

Back to top Go down

Re: அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Post by ayyasamy ram on Thu Jan 28, 2016 1:12 pm


-
என் கைப்பட ராஜினாமா கடிதத்தை எழுதிவிட்டேன்.
அவைத் தலைவர் ஊரில் இல்லை என்பதால்,
ராஜினாமா கடிதத்தை கொடுக்க முடியவில்லை என்று
தெரிவித்துள்ளார்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35080
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Post by கார்த்திக் செயராம் on Thu Jan 28, 2016 1:44 pm
சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த பழ.கருப்பையா, அதிமுக ஆட்சியில் கவுன்சிலர் தொடங்கி அமைச்சர்கள் வரையில் லஞ்சம் வாங்கும் போக்கு அதிகரித்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டதற்கு எதிர்வினையாற்றும் வகையில், தன் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து விலகுவதாக பழ.கருப்பையா விளக்கம் அளித்தார்.

இது தொடர்பாக அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது:

"கட்சியில் இருந்து நான் நீக்கப்பட்டதாக வெளிவந்த செய்தி எனக்கு வியப்பாக இருந்தது. ஆனால், அப்படி விலக்கப்படுகின்ற அளவுக்கு நான் எந்தத் தவறையும் செய்யவில்லை என்றே கருதுகிறேன். எனக்கும், கட்சியின் தலைமைக்கும் சிறு இடைவெளி இருந்தது. அது பற்றி ஜனநாயகத்தில் வெளிப்படையாக விவாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் காமராஜர் மீது பற்று கொண்டு, அவரைப் பின்பற்றி நடப்பவன். ஒருவேளை, இதுவே என் மீதான நடவடிக்கைக்கு காரணமாக இருக்கலாம்.

நான் 'துக்ளக்' விழாவில் பொதுவான அரசியல் குறித்தும், அரசின் செயல்பாடுகள் குறித்தும் பேசிய பேச்சு காரணமாகவே கட்சியில் இருந்து என்னை நீக்கியிருக்கிறார்கள் என்று அறிகிறேன். கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக அரசு எப்படி செயல்படுகிறது, நிர்வாகம் எப்படி நடக்கிறது என்பதை அறிந்து வைத்திருக்கிறேன். அதையொட்டிதான் பொதுவாக பேசினேன். அதற்காக நீக்கியிருக்கிறார்கள்.

என் தரப்பு நியாங்களைச் சொல்லி, கட்சித் தலைமையிடம் நான் சமாதானம் பேசப்போவது இல்லை. அவர்கள் கட்சி நடத்தும் பாங்கு என்பது வேறு. அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, அனுபவம் கருதியும், ஈடுபாடு கருதியும் என்னை அழைத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவ்வப்போது பேசுவார். ஆனால், ஆளும் கட்சியாக ஆன பிறகு, அவரை என்னால் நெருங்க முடியவில்லை. எனினும், அவர் மீதான மதிப்பு இன்னும் குறையவில்லை.

என் அனுபவத்தையும் கருத்துகளையும் சுதந்திரமாகச் சொல்வதற்கு கட்சியின் பொதுக்குழு, செயற்குழு மற்றும் சட்டமன்றத்தில் இடம் இருக்காது. ஆளும் கட்சிக்கு எதிராக சட்டமன்றத்தில் பேச அனுமதிக்காதது ஏற்கத்தக்கதுதான். ஆனால், கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவில் கூட பேச அனுமதிக்காதது எந்த வகையிலும் நியாயமில்லை. அதனால், கட்சியின் தலைமையை நேரடியாக சந்தித்து என் பிரச்சினைகளைச் சொல்ல பல முறை முயற்சி செய்திருக்கிறேன். என்றாலும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

ஆடு, மாடு மேய்ப்பது போன்ற அளவில்தான் கட்சியில் நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கு மதிப்ப் இருக்கிறது. இந்தப் போக்கை எந்தச் சூழலிலும் ஏற்க முடியாது. இப்படிப்பட்ட பின்னணியில், என்னை கட்சியில் இருந்து நீக்கியதை ஏற்கிறேன். அதற்கு எதிர்வினையாக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன். சில காலம் இருந்தாலும் அந்தப் பதவியை வகிப்பது நெறி சார்ந்தது அல்ல. எம்.எல்.ஏ பதவிக்கு வருவதற்கு முதல்வர் ஜெயலலிதாதான் காரணம். அதற்காக அவருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது. நான் மக்களுக்குத்தான் பதிலளிக்க வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதாவும் அதிமுகவும் சேர்ந்துதான் என்னை எம்.எல்.ஏ. ஆக்கினார்கள். ஆனால், நான் எதை எதிர்க்கட்சியாக இருந்து போராடி போராடி செயல்படுத்த நினைத்தேனோ, அதை செயல்படுத்தவே எம்.எல்.ஏ. ஆனேன். அதைச் செய்ய முடியவில்லை என்ற நிலையில், ராஜினாமா செய்துவிடலாம் என்று அடிக்கடி நினைத்தது உண்டு. எனினும், எப்படியாவது கட்சியின் தலைமையைச் சந்தித்துவிடலாம் என்றும், அவரிடம் நம் பிரச்சினைகளை கொண்டு செல்லலாம் என்றும் நம்பிக்கையுடன் இருந்தேன். அது நடக்கவே இல்லை.

எனவே, நான் நீக்கப்பட்ட இந்தத் தருணத்தில் என் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். இதுகுறித்து பேரவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பினேன். (ராஜினாமா கடித்ததின் நகலை காண்பித்தார்). நான் மனபூர்வமாக ராஜினாமா செய்கிறேன் என்று அதில் என் கைப்பட எழுதியிருக்கிறேன். அந்தக் கடிதத்தை பேரவைத் தலைவரிடம் அளிக்கச் சென்றால், அவர் ஊரில் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அவருக்கு அடுத்த நிலையில் உள்ள எவரிடம் நேரடியாக கொடுக்க முடியவில்லை. எனவே, என் ராஜினாமாவை இங்கு அறிவிக்கிறேன்.

இந்த ஆட்சியில் கழிவுநீர் கால்வாய் இணைப்புக்கு கூட லஞ்சம் தந்தாக வேண்டிய அவல நிலை. கவுன்சிலர் தொடங்கி அமைச்சர்கள் வரையில் அனைத்து மட்டத்திலும் லஞ்சம் - ஊழல் பெருகிவிட்டது. அதிகாரிகளும் இதற்கு உறுதுணையாக இருக்கின்றனர். இந்தப் போக்கு சரியானது அல்ல.

தமிழகத்தில் மதுவிலக்கு என்பது அவசியம். ஏழைகளின் பணத்தை வாங்கி, அவர்களிடம் இலவசம் வழங்குவது நியாயம் இல்லை.

பான்பராக் தடை செய்யப்பட்ட பொருள். அது புற்றுநோய்க்கு வழிவகுக்கும். அந்த பான்பராக் அதிகம் புழங்குவது என் துறைமுகம் தொகுதிதான். ஆனால், எல்லா மட்டத்திலும் போராடி முயற்சி செய்தும் தடை செய்ய முடியவில்லை. ஒரு எம்.எல்.ஏ.வாக தோற்றுப்போனேன். என் தொகுதி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

அரசியலில் நீடிக்க விரும்புகிறேன். பொதுத் தொண்டில் தொடர்ந்து ஈடுபடுவேன். தமிழகத்தில் எதிர்க்கருத்துகள் சொல்வதற்கே முடியாத நிலை உள்ளது. இந்த மோசமான சூழல் மாற வேண்டும். எதிர்க்கருத்தை ஏற்காக எந்தக் கட்சியும் வளராது" என்றார் பழ.கருப்பையா.

முன்னதாக, அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட செய்திக்குறிப்பில், ' அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கொள்கை - குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும், முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், வட சென்னை தெற்கு மாவட்டத்தைச் சார்ந்த துறைமுகம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பழ.கருப்பையா கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளாதாக அறிவித்தார்.

2011 சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பழ.கருப்பையா. இவர் பேச்சாளர், எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி ஹிந்து
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Post by யினியவன் on Thu Jan 28, 2016 1:51 pm

தன்மானம், சுயமரியாதை, சூடு சொரணை இருப்பவர் எவரும் அங்கே இருக்க முடியாது.

அதை எல்லாம் இழந்தாலே அங்கே இருக்க இயலும். அடிப்படைத் தகுதியே முதுகெலும்பு உடைக்கப்பட்ட பின் தான் பெறுகிறார்கள்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Post by ayyasamy ram on Thu Jan 28, 2016 2:13 pm

பதவி சுகத்தை அனுபவித்து விட்டு, பதவிக்காலம்
முடியும்போதுதான் ஞானோதயம் வரும் போலும்...!!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35080
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Post by K.Senthil kumar on Fri Jan 29, 2016 3:40 am

வெளியில் தெரியாமல் வாங்கிகொல்வது அல்லது வாங்கி கட்டிகொல்வது பிறகு வெளியே வந்து வீர வசனம் பேசுவது ......
avatar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 815
மதிப்பீடுகள் : 312

View user profile

Back to top Go down

Re: அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Post by T.N.Balasubramanian on Fri Jan 29, 2016 8:13 am

@K.Senthil kumar wrote:வெளியில் தெரியாமல் வாங்கிகொல்வது அல்லது வாங்கி கட்டிகொல்வது பிறகு வெளியே வந்து வீர வசனம் பேசுவது ......
மேற்கோள் செய்த பதிவு: 1190561

வாங்கி கொல்வதா ? கிரிமினல் குற்றமாயிற்றே !!

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21535
மதிப்பீடுகள் : 8154

View user profile

Back to top Go down

Re: அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Post by முனைவர் ம.ரமேஷ் on Fri Jan 29, 2016 10:59 am

முதல்வர் ஜெயலலிதாவும் அதிமுகவும் சேர்ந்துதான் என்னை எம்.எல்.ஏ. ஆக்கினார்கள். ஆனால், நான் எதை எதிர்க்கட்சியாக இருந்து போராடி போராடி செயல்படுத்த நினைத்தேனோ, அதை செயல்படுத்தவே எம்.எல்.ஏ. ஆனேன். அதைச் செய்ய முடியவில்லை என்ற நிலையில், ராஜினாமா செய்துவிடலாம் என்று அடிக்கடி நினைத்தது உண்டு. எனினும், எப்படியாவது கட்சியின் தலைமையைச் சந்தித்துவிடலாம் என்றும், அவரிடம் நம் பிரச்சினைகளை கொண்டு செல்லலாம் என்றும் நம்பிக்கையுடன் இருந்தேன். அது நடக்கவே இல்லை.

இந்நிலை இனியும் தொடரும்... அனைவரும் அறிந்ததே... எல்லா அரசில்வாதிகளிடமும் குறைகள் இருக்கின்றன. கொஞ்சமாவது மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் (இலவசங்கள் கொடுத்து அல்ல). ஒக்கேனக்கல் கூட்டுநதிநீர் திட்டம் வேலூர் மாவட்டத்திற்கும் வந்தது. என் தெருவில் கூட இணைப்பு கொடுத்தார்கள்... 13000 கேட்டார்கள். 6 ஆயிரத்துக்குப் பில் கொடுத்தார்கள். தண்ணீர் இன்னும் வரவில்லை. மீதி பில் தொகை 7000க்குக் கேட்டால்... கேட்டால்... கேட்டால்... பதில் இல்லை. ஒரு வீட்டிற்கே 7 ஆயிரம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்...

அவர் தொகுதியில் ஆக்கரமிப்பு செய்த இடத்தை அம்மா அவர்கள் ஆக்கிரமித்தவரைக் கூப்பிட்டு அதை கொடுத்துவிடு என்றால் ஒரு வாரத்திற்குள்ளாகவே உச்சநீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டு வந்து அந்த இடத்தைக் கொடுத்துவிடுவார். அம்மா அவரை அழைத்து சொல்வாரா?
avatar
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2156
மதிப்பீடுகள் : 233

View user profile http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum