ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தீபாவளி என்றால் என்ன?
 T.N.Balasubramanian

வரலாற்றில் தீபாவளி
 T.N.Balasubramanian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
 ayyasamy ram

மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 ayyasamy ram

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 ayyasamy ram

போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீக்கு 30 பேர் பலி
 ayyasamy ram

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 kuloththungan

ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
 ayyasamy ram

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 TIMPLEKALYANI

6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
 ayyasamy ram

கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
 T.N.Balasubramanian

இன்றைய செய்தி(16.10.2017)
 thiru907

தமிழ் புக்
 Meeran

யார் இந்த முயல் குட்டி -சினிமா பாடல்
 ayyasamy ram

உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
 ayyasamy ram

20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
 ayyasamy ram

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
 ayyasamy ram

ஊக்கமருந்து சர்ச்சைக்கு பிறகு முதல்முறையாக பட்டம் வென்றார், ஷரபோவா
 ayyasamy ram

ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
 ayyasamy ram

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 ayyasamy ram

விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
 ayyasamy ram

இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
 ayyasamy ram

தீபாவ‌ளி நகை‌ச்சுவை வெடி‌க‌ள் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
 ayyasamy ram

அமெரிக்காவின் வெர்ஜினியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு, வளாகம் மூடப்பட்டது
 ayyasamy ram

உன் கண்ணீரைத் துடைப்பவர் யார் ? (பாரசீகப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை
 Dr.S.Soundarapandian

மனதில் உறுதி வேண்டும்
 Dr.S.Soundarapandian

ஒரு மனிதன் தன்னை வலிமையாக்கிக்கொள்ள வேண்டும்!(சீன நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

மொழிபெயர்ப்பு கவிதைகள்
 Dr.S.Soundarapandian

ஊதுவோம் சங்கு
 M.Jagadeesan

ஒரே ஒரு பஸ் ஜோக்...
 T.N.Balasubramanian

சோதனை எல்லாம் சொல்லிட்டா வருது...!!
 Dr.S.Soundarapandian

திற்பரப்பு அருவியில் கொட்டுகிறது தண்ணீர்
 Dr.S.Soundarapandian

நீயே என் முதற் காதலி! (ஹீப்ரு மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

இன்றைய செய்தித்தாள்(15.10.2017)
 thiru907

இணையதளத்தில் மெர்சல் படம்
 ayyasamy ram

கணினி அறிவியல் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்.
 M.Jagadeesan

டி.வி.சீரியல் பார்க்கும்போது உயிர் போகணும்...!!
 Dr.S.Soundarapandian

வேலைக்காரிக்கு ரொம்ப இடம் கொடுக்கிறீங்க,,,?
 Dr.S.Soundarapandian

சங்கீதம்னா உயிரையே விட்டுவார்....!!
 Dr.S.Soundarapandian

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
 ayyasamy ram

அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
 ayyasamy ram

கயிற்று பாலத்தில் நடந்து ஆட்சியர் விழிப்புணர்வு
 ayyasamy ram

சுவாசம்
 nahari

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மரணப் படுக்கையில் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்டி ஒரு புத்தகம்

View previous topic View next topic Go down

மரணப் படுக்கையில் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்டி ஒரு புத்தகம்

Post by கார்த்திக் செயராம் on Thu Jan 28, 2016 1:22 pm


[You must be registered and logged in to see this image.]

நம்மால் "முடியாது" என்று நினைக்கும் ஒரு செயலை, யாரோ ஒருவர் எங்கோ ஒர் இடத்தில அந்த செயலை செய்து "வெற்றி" அடைந்துதான் வருகிறார்கள். "நம்மால் முடியாது" என்று எதையும் நினைக்காமல், எல்லாவற்றையும் முயன்று பார்க்க வேண்டும்.அதுபோல் நம் வாழ்க்கையில் நம்பிக்கையுடன் போராடினால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதை மனதுக்குள் விதைக்கிறது "ழான் டொமினிக் பாபி" (Jean Dominique Bauby) என்ற எழுத்தாளனின் சுயசரிதையான "the diving bell and the butterfly" என்ற புத்தகம். பாபி எந்த மாதிரியான எழுத்தாளன்? அவன் நம்மிடம் எதை பகிர்ந்து கொள்ள விழைகிறான்? அவனின் எழுத்து எங்கிருந்து தொடங்கியது? அவனின் வாழ்க்கையில் முக்கியமான இடத்தை யார் வகித்தது என்பதை பார்க்கலாம்.

பாபியும் ஆரம்பத்தில் நம்மை போலத்தான் நல்ல ஆரோக்கியத்துடன், மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். புகழ்பெற்ற ஒரு பத்திரிகையில் வேலை செய்தும் வந்தார். சின்ன வயதிலேயே தாயை இழந்த பாபிக்கு தந்தைதான் தாயாகவும், எல்லாமுமாகவும் இருந்து வந்திருக்கிறார். நாற்பத்திரண்டு வயதில் அவரின் மூளைக்குள் மின்னல் கீற்றைப் போல பாய்ந்த அதிர்வுகள் மூளையை கடுமையாக தாக்கி நினைவிழக்க செய்கிறது, நாளடைவில் அவரின் இடது கண்ணை தவிர்த்து மற்ற உறுப்புகள் பக்கவாதத்தால் செயல் இழந்து விடுகிறது.

குழந்தைகளுடனும் நண்பர்களுடனும் ஆடி பாடி திரிந்த அவரால் படுக்கையிலிருந்து எழுந்து நடக்கவே முடிவதில்லை. அவரை சுற்றியும் அன்பானவர்கள் நிறைந்திருந்தாலும், அவர்களை பாபியும் நேசித்தாலும் தன் எண்ணங்களையோ, அன்பையோ வெளிப்படுத்த வழிகளின்றி தவிக்கிறார். அவரின் மனதுக்குள் இருந்து ஒலிக்கும் குரலில் வெளிப்படும் எண்ணங்களை, அன்பை காதுகளால் கேட்கக் கூட முடிவதில்லை. உடல் நலமும் குன்றிப் போவதால், மற்றவர்களுடன் எந்த வகையிலும் தொடர்பு கொள்ள முடியாமல் போவதால் மனதளவில் எந்த மனிதனும் அடையக்கூடிய வீழ்ச்சியை, இயலாமையை, பரிதாபத்தை நம்முன் திறந்து காட்டுகிற ஒரு கண்ணாடியாக இருக்கிறது பாபியின் வாழ்க்கை.வாழ்க்கையின் கசப்பான் சுவையை பருக அவருக்கு பிடிப்பதில்லை, மரணத்தை விரும்ப ஆரம்பிக்கிறார். இந்த நேரத்தில் அவரின் கண்கள் பேச ஆரம்பிக்கிறது. அவருக்கு பேச பயிற்சி கொடுக்க வரும் ஒரு பெண்ணின் வழியாக, அவரின் இடது கண், மற்றவர்களிடம் தொடர்பு கொள்ள ஒரு பாதையை காட்டுகிறது. நாவின் வேலையை கண்ணின் இமை அசைவுகள் செய்ய ஆரம்பிக்கிறது. கண்ணின் இமை அசைவுகளின் வழியாக அவர் எப்படி மற்றவர்களுடன் தொடர்பு கொள்கிறார் என்பதை பார்க்கலாம்.

அவர் ஒருமுறை கண் இமையை அசைத்தால் அது "ஆம்" என்று அர்த்தம். இரண்டு முறை தொடர்ந்து அசைத்தால் "இல்லை" என்று அர்த்தம். அவர் ஏதாவது சொல்ல நினைத்தால் அங்கிருக்கும் பேச பயிறசி கொடுக்கும் பெண் பிரஞ்ச் மொழியில் இருக்கும் எழுத்துக்களை ஆரம்பத்தில் இருந்து நிறுத்தி ஒவ்வொன்றாக சொல்லுவாள். பாபி தான் சொல்ல வந்த வார்த்தைக்கு ஏற்ற எழுத்து வந்தவுடன் ஒரு முறை கண் இமையை அசைப்பார், இதேமாதிரி அடுத்த பிற எழுத்துக்களை சேர்த்து தான் சொல்ல வந்த வார்த்தையை. கண்களின் இமை அசைவுகளின் வழியாக பாபி சொல்வார்.கண்களின் இமை அசைவுகளின் வழியாக தன் உணர்வுகளை, எண்ணங்களை, கருத்துகளை இன்னொரு மனிதனுடன் பகிர்ந்து கொள்வதன் வழியாக பாபி புதிய தொடர்பாடலை பரிணமிக்கிறார் தான் கடந்துவந்த வாழ்வை புத்தகமாக எழுத வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் துளிர்விடுகிறது. தனக்குள் சதா ஓடிகொண்டிருந்த மரணம் பற்றிய எண்ணமும், கழிவிரக்கமும் கலையால் காணாமல் போய்விடுகிறது. பாபி இப்போது எழுத வேண்டும்? எதை எழுத போகிறார்? எப்படி எழுத போகிறார்? என்பதை பார்க்கலாம்

பாபியின் கண் இமை அசைவுகளின் மொழியை எழுத்தாக மாற்ற புதிதாக ஒரு பெண் வருகிறாள் அவளின் வேலை ஆரம்பத்தில் பேச பயிற்சி கொடுத்த பெண்ணின் அதே வேலை தான். பிரஞ்ச் மொழியில் இருக்கும் எழுத்துக்களை ஆரம்பத்தில் இருந்து நிறுத்தி ஒவ்வொன்றாக சொல்லுவாள். பாபி தான் சொல்ல வந்த வார்த்தைக்கு ஏற்ற எழுத்து வந்தவுடன் ஒரு முறை கண் இமையை சிமிட்டி ஆமாம் என்று சொல்லி, இதைப் போல அடுத்த பிற எழுத்துக்களை சேர்த்து தான் சொல்ல வந்த வார்த்தையை சொல்வார் அதை அவள் எழுத வேண்டும். இப்படி ஒவ்வொரு வார்த்தையாக எழுதி உருவானது தான் the diving bell and the butterfly என்ற புத்தகம்.இந்தப் புத்தகத்தை ரொனால்ட் கார்வுட் அருமையான திரைக்கதையாக உருவாக்க, பாபி தன்னுடைய இடது கண்ணால் இந்த உலகத்தை எப்படி பார்த்தாரோ அதே கோணத்தில் காமிராவின் கண்கள் காட்சிகளை பதிவு செய்ய படத்தை இயக்கியவர் ஜூலியன் சினபால், பாபி இந்தப் புத்தகத்தை எழுத வேண்டும் என்பதற்காவே பிறந்திருக்கவேண்டும். அந்த எழுத்தின் மீதான நேசம் தான் அவரை உயிருடன் வைத்திருந்தது புத்தகம் வெளியான பிறகு அடுத்த இரண்டு தினங்களில் பாபி இறந்து விட்டார்.

பாபி இந்தப் புத்தகத்தை எழுத சுமார் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்ட வேண்டியிருந்தது. ஒரு வார்த்தையை உருவாக்க இரண்டு நிமிடங்கள் எடுத்துக் கொண்டார். தினமும் நான்கு மணி நேரம் என்று பத்து மாதங்கள் இந்தப் புத்தகத்துக்காக பாபியும் அவரின் உதவியாளரும் உழைத்திருக்கின்றனர். எல்லா இதயங்களிலும் நம்பிக்கையை விதைக்கும் இந்தப் புத்தகம் வெளியான முதல் நாளே 25,000 புத்தகங்களும், முதல் வாரத்தில் 1,50,000 புத்தகங்களும் விற்பனையானது.

உடல் வேதனையால் துவண்டு போன நெஞ்சங்களில் நம்பிக்கையை பாய்ச்சுகிற ஒரு வாழ்க்கையை நம்மிடம் விட்டு சென்று இருக்கிறார் "ழான் டொமினிக் பாபி". இவர் நம் வாழ்க்கையில் நம்பிக்கையுடன் போராடினால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதை மனதுக்குள் விதைத்திருக்கிறார்.

விகடன்
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: மரணப் படுக்கையில் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்டி ஒரு புத்தகம்

Post by யினியவன் on Thu Jan 28, 2016 1:38 pm

அருமையான பகிர்வு கார்த்திக்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மரணப் படுக்கையில் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்டி ஒரு புத்தகம்

Post by கார்த்திக் செயராம் on Thu Jan 28, 2016 1:40 pm

நன்றி அண்ணா
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: மரணப் படுக்கையில் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்டி ஒரு புத்தகம்

Post by யினியவன் on Thu Jan 28, 2016 1:45 pm

எல்லாத் திறனும் இருக்கையில் திறனற்று நிற்கிறோம்
மாற்றுத் திறனாளிகளோ திணறாமல் மிளிர்கிறார்கள்avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மரணப் படுக்கையில் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்டி ஒரு புத்தகம்

Post by கார்த்திக் செயராம் on Thu Jan 28, 2016 1:50 pm

கண் இருந்தும் குருடனாய்
கால்கள் இருந்தும் முடவானாய்
காது இருந்தும் செவிடனாய்
வாய் இருந்தும் ஊமையாய் .
உயிர் இருந்தும் பிணமாய் (இருப்பதை விட)
சாவதே மேல் .
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: மரணப் படுக்கையில் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்டி ஒரு புத்தகம்

Post by krishnaamma on Thu Jan 28, 2016 1:51 pm

வாவ் !........எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார்கள் ?.................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: மரணப் படுக்கையில் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்டி ஒரு புத்தகம்

Post by ayyasamy ram on Thu Jan 28, 2016 2:00 pm


-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31505
மதிப்பீடுகள் : 10007

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum