ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இரவு முழுவதும் விழித்திருந்த மக்கள் குளச்சலில் சுனாமி பீதியால் பரபரப்பு
 பழ.முத்துராமலிங்கம்

சீனாவை தூக்கி அடித்து உலக அளவில் இந்தியா முதலிடம்..! எதில் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

டிச.,31க்குள் இந்தியக் கடலில் நடக்கப் போகும் பேரழிவு; இத யாராலும் தடுக்க முடியாதாம்!
 பழ.முத்துராமலிங்கம்

முதலிடத்தை பிடித்த தமிழகம்...! - எதில் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம்; கடற்கரை வள மையம் எச்சரிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
 பழ.முத்துராமலிங்கம்

மகனை மனம் திருந்த வைத்த தாய்ப்பாசம்
 பழ.முத்துராமலிங்கம்

ஏசுநாதர் ஓவியம் ரூ.2,925 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

அறம் - ஒரு கலைஞனின் அறம் !
 seltoday

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 56: தட்பவெப்பத்தைப் புரிந்துகொள்ளுதல்
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 57: தமிழர்களின் பருவநிலை அறிவு
 பழ.முத்துராமலிங்கம்

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 18/11/17
 Meeran

முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 ayyasamy ram

கடலூர், சிதம்பரத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் 21–ந் தேதி தர்ணா போராட்டம்
 ayyasamy ram

மகனுக்கு முடிசூட்டுகிறார் சவூதி மன்னர் சல்மான்
 ayyasamy ram

India Today ????27.11.17
 Meeran

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 ayyasamy ram

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 ayyasamy ram

ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க...!!
 ayyasamy ram

மூச்சிக்கலை
 Meeran

பயம் - கவிதை
 ayyasamy ram

மேய்ச்சல் - கவிதை
 ayyasamy ram

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 ayyasamy ram

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 ayyasamy ram

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 ayyasamy ram

மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
 ayyasamy ram

புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
 Dr.S.Soundarapandian

நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
 Dr.S.Soundarapandian

நாணயம் விகடன் 19.11.17
 Meeran

ஒரு நிமிடக் கட்டுரை: ‘மோட்டல்’ எனும் சுயாட்சிப் பகுதிகள்!
 Dr.S.Soundarapandian

நெஞ்சத்தில் தோன்றுவதும்!
 Dr.S.Soundarapandian

கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
 Dr.S.Soundarapandian

இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
 பழ.முத்துராமலிங்கம்

ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
 Dr.S.Soundarapandian

நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஆஹா என்ன ஒரு அழகு..! மிஸ் பண்ணிடாதீங்க...அப்புறம் பின்னாடி பீல் பண்ணுவீங்க...!
 Dr.S.Soundarapandian

போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
 Dr.S.Soundarapandian

மாலை பேப்பர் 17.11.17
 Meeran

குங்குமம் & முத்தராம் 24.11.17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 aeroboy2000

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
 பழ.முத்துராமலிங்கம்

நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat
 பழ.முத்துராமலிங்கம்

17-11-17
 பழ.முத்துராமலிங்கம்

உலகச் சிறுகதைகள் புத்தக வடிவில்
 ajaydreams

சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
 ayyasamy ram

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 ayyasamy ram

‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
 ayyasamy ram

தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
 ayyasamy ram

ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
 ayyasamy ram

கல்வி வேலை வழிகாட்டி குங்குமம் டாக்டர் 16.11.17
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

இனி உங்க வீட்டுக்கு விலாசம் இல்லை, 6 இலக்க எண் மட்டுமே.. மோடி அரசின் அடுத்த அதிரிபுதிரி..!
 பழ.முத்துராமலிங்கம்

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 பழ.முத்துராமலிங்கம்

காவிரிக்கே முடிவு தெரியல.. மைசூர் பாக் யாருக்கு சொந்தம் என்பதில் தமிழ்நாடு-கர்நாடகா சண்டை
 பழ.முத்துராமலிங்கம்

சிந்தித்தவன் முன்னேறுகிறான்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நாகேஸ்வரர் ஆலய உலா

View previous topic View next topic Go down

நாகேஸ்வரர் ஆலய உலா

Post by ayyasamy ram on Thu Jan 28, 2016 1:55 pm


-
குடமூக்கு, குடந்தை என்ற பெயர்களால் கும்பகோணம்
அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல் 22 வரை நிகழவுள்ள
மகாமகத்தை முன்னிட்டு மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி
காணும் சைவக் கோயில்கள், காவிரியாற்றில் தீர்த்தவாரி
காணும் வைணவக் கோயில்கள் உள்ளிட்ட பல கோயில்களில்
குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
-
இக்கோயில்களில் முக்கியமானது நாகேஸ்வரர் கோயில்.
ஒவ்வொரு முறை செல்லும்போதும் புதியதாகச் செல்லும்
உணர்வை ஏற்படுத்தும்.
-
ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு அழகு

-
கும்பகோணத்திலுள்ள கோயில்களில் சாரங்கபாணி கோயில்
அழகான கோபுரத்திற்குப் பெயர்பெற்றது. ராமசாமி கோயிலின்
அழகான சிற்ப மண்டபமும், ராமாயண ஓவியங்களும் சிறப்பு
வாய்ந்தவை.
-
நாகேஸ்வரர் கோயிலுக்குத் தேர் வடிவ நடராசர் மண்டபமும்,
கருவறையைச் சுற்றியுள்ள அழகிய சிற்பங்களும், கருவறையுடன்
கூடிய விமானமும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
-
மகாமகத்தின்போது மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி காண்கின்ற
காசி விஸ்வநாதர் கோயில், கும்பேஸ்வரர் கோயில், நாகேஸ்வரர்
கோயில், சோமேஸ்வரர் கோயில், கோடீஸ்வரர் கோயில்,
காளஹஸ்தீஸ்வரர் கோயில், கௌதமேஸ்வரர் கோயில்,
அமிர்தகலசநாதர் கோயில், பாணபுரீஸ்வரர் கோயில்,
அபிமுகேஸ்வரர் கோயில், கம்பட்ட விஸ்வநாதர் கோயில்,
ஏகாம்பரேஸ்வரர் கோயில்
ஆகிய 12 கோயில்களில் 10 கோயில்கள் கும்பகோணம் நகரில்
உள்ளன.
-
மற்ற இரு கோயில்களான கோடீஸ்வரர் கோயில் கொட்டையூரிலும்,
அமிர்தகலசநாதர் கோயில் சாக்கோட்டையிலும் உள்ளன.
-

நாகராஜனும் சூரியனும் பூஜித்த ஆலயம்
-
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், காவிரியின் தென் கரையில்
அமைந்துள்ள 27ஆவது தலம் நாகேஸ்வரன் கோயில்.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் செங்கற்கோயிலாக இருந்து
கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் ஆதித்த சோழனால் கற்கோயிலாக
வடிவம் பெற்ற பெருமையுடையது

இக்கோயில். நாகராஜனும், சூரியனும் பூசித்த பெருமை பெற்றது.
இத்தலத்தில் உறையும் இறைவனை நாகேசப்பெருமான் என்றும்,
தலத்தினை நாகேஸ்வரம் என்றும் அழைப்பர்.
-
பாஸ்கர சேத்திரம் என்று பெயர் பெற்றதற்கு இத்தலம் சான்றாக
உள்ளது. இத்தலத்தில் இன்றும் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய
நாள்களில் சூரிய கிரகணங்கள் கருவறையில் உள்ள
லிங்கத்திருமேனியின்மீது நேராக விழுகிற அரிய காட்சியைக்
காணமுடியும்.
-
திருநாவுக்கரசர் இங்குள்ள இறைவனைப் போற்றிப்பாடும்போது
இத்தலத்தினைக் குடந்தைக்கீழ்க்கோட்டம் என்கிறார்.
-
ஐந்து நிலைகளுடன் உள்ள ராஜகோபுரம் கிழக்கு நோக்கிய
நிலையில் உள்ளது. உள்ளே செல்லும்போது வலப்புறம் அம்பிகையின்
சன்னதி உள்ளது. இடப்புறம் சிங்கக்கிணறு உள்ளது.
-
அடுத்து இக்கோயிலில் திருப்பணி மேற்கொண்டு 1923-ல்
குடமுழுக்கு செய்த பாடகச்சேரி ராமலிங்கசுவாமிகளுக்கான தனி
சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
-
12 ராசிகள் 12 ஆரங்கள்

-
நுழைவாயிலின் இரு புறமும் விநாயகரும், சுப்பிரமணியரும்
காணப்படுகின்றனர். நுழைவாயிலைக் கடந்து செல்லும்போது
கொடி மரம், பலிபீடம் காணப்படுகின்றன.

இடப்புறம் பதினாறு கால் மண்டபமும், வலப்புறமும் நடராஜர்
சன்னதியும் உள்ளன. நடராஜர் சன்னதி நகர்ந்து செல்லும் தேர்
வடிவில் அமைந்துள்ளது. மண்டபத்தில் இருபுறங்களிலும் கல்லால்
ஆன சக்கரங்கள் உள்ளன.

இரு குதிரைகளும், நான்கு யானைகளும் இழுத்துச் செல்லும்
நிலையில் இம்மண்டபம் அமைந்துள்ளது. சக்கரங்களின்
ஆரங்களாக 12 ராசிகளும் இடம்பெற்றுள்ளன.

இக்கோயிலின் உள்மண்டபத்தில் படைவெட்டி மாரியம்மன்,
நவக்கிரக சன்னதிகள் உள்ளன. கருவறையைச் சுற்றி வரும்போது
கருவறைக் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர்,
பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறையின் பின்புறம்
வீதிவிடங்கர் (திருவாரூர்), சோளிங்கநாதர் (திருக்குவளை),
கண்ணாயிரநாதர் (திருக்காரவாயில்), வாய்மூர்நாதர்
(திருவாய்மூர்), மறைகாட்சி மணாளநாதர் (வேதாரண்யம்),
தர்பாரண்யேஸ்வரர் (திருநள்ளாறு) ஆகியோரைக் குறிக்கும்
லிங்கத்திருமேனிகள் காணப்படுகின்றன.

அடுத்து சுப்பிரமணியர், கஜலட்சுமி, சரஸ்வதி ஆகியோர்
காணப்படுகின்றனர்.

திருச்சுற்றில் சண்டிகேஸ்வரர் சன்னதி, சூரியன் சன்னதி,
சோமாஸ்கந்தர் சன்னதியும், நடராசர் சன்னதியும் அருகேயுள்ளன.
சூரியன் சன்னதி, வடகிழக்குப் பகுதியில் மேற்கு நோக்கிய நிலையில்
அமைந்துள்ளது.
-
ராமாயணச் சிற்பங்கள்

-
கருவறையில் லிங்கத்திருமேனியாக உள்ள மூலவர் நாகேஸ்வரர்
என்றும் நாகநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். கருவறையின்
வெளியே கோஷ்டத்திற்குக் கீழே அதிட்டானப்பகுதியில் சிறிய
அளவிலான சிற்பங்கள் காணப்படுகின்றன. இவற்றில் ராமாயணச்
சிற்பங்கள் உள்ளிட்ட சிற்பங்கள் அமைந்துள்ளன.
இவை போன்ற சிற்பங்களை திருப்புறம்பியத்திலும்,
புள்ளமங்கையிலும் காணமுடியும்.
-
பெரியநாயகி என்றும் பிரகந்நாயகி என்றும் அழைக்கப்படும்
அம்மன் சன்னதி தெற்கு நோக்கிய நிலையில் தனியாக அமைந்துள்ளது.
இச்சன்னதியில் ஆடிப்பூர அம்மன் சன்னதியும், பள்ளியறையும் உள்ளன.
-
அருகே பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி,
இந்திராணி, சாமுண்டி ஆகியோர் உள்ளனர். கருவறையைச் சுற்றி
வரும்போது சண்டிகேஸ்வரி சன்னதி உள்ளது.
-
இக்கோயிலில் உள்ள சன்னதிகளில் முக்கியமானதாகக் கருதப்படுகின்ற
மற்றொரு சன்னதியான நாகர் சன்னதி வெளிச்சுற்றில் உள்ளது.
இங்குள்ள நாக கன்னி அம்மன் சன்னதியைச் சுற்றி அதிகமான நாக
சிற்பங்கள் காணப்படுகின்றன.
-
----------------------------
தமிழ் தி இந்து காம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32432
மதிப்பீடுகள் : 10703

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum