புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாட்ஸ் - அப் வனிதா! Poll_c10வாட்ஸ் - அப் வனிதா! Poll_m10வாட்ஸ் - அப் வனிதா! Poll_c10 
59 Posts - 50%
heezulia
வாட்ஸ் - அப் வனிதா! Poll_c10வாட்ஸ் - அப் வனிதா! Poll_m10வாட்ஸ் - அப் வனிதா! Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
வாட்ஸ் - அப் வனிதா! Poll_c10வாட்ஸ் - அப் வனிதா! Poll_m10வாட்ஸ் - அப் வனிதா! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
வாட்ஸ் - அப் வனிதா! Poll_c10வாட்ஸ் - அப் வனிதா! Poll_m10வாட்ஸ் - அப் வனிதா! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
வாட்ஸ் - அப் வனிதா! Poll_c10வாட்ஸ் - அப் வனிதா! Poll_m10வாட்ஸ் - அப் வனிதா! Poll_c10 
1 Post - 1%
Shivanya
வாட்ஸ் - அப் வனிதா! Poll_c10வாட்ஸ் - அப் வனிதா! Poll_m10வாட்ஸ் - அப் வனிதா! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வாட்ஸ் - அப் வனிதா! Poll_c10வாட்ஸ் - அப் வனிதா! Poll_m10வாட்ஸ் - அப் வனிதா! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
வாட்ஸ் - அப் வனிதா! Poll_c10வாட்ஸ் - அப் வனிதா! Poll_m10வாட்ஸ் - அப் வனிதா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாட்ஸ் - அப் வனிதா! Poll_c10வாட்ஸ் - அப் வனிதா! Poll_m10வாட்ஸ் - அப் வனிதா! Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
வாட்ஸ் - அப் வனிதா! Poll_c10வாட்ஸ் - அப் வனிதா! Poll_m10வாட்ஸ் - அப் வனிதா! Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
வாட்ஸ் - அப் வனிதா! Poll_c10வாட்ஸ் - அப் வனிதா! Poll_m10வாட்ஸ் - அப் வனிதா! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
வாட்ஸ் - அப் வனிதா! Poll_c10வாட்ஸ் - அப் வனிதா! Poll_m10வாட்ஸ் - அப் வனிதா! Poll_c10 
12 Posts - 2%
prajai
வாட்ஸ் - அப் வனிதா! Poll_c10வாட்ஸ் - அப் வனிதா! Poll_m10வாட்ஸ் - அப் வனிதா! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வாட்ஸ் - அப் வனிதா! Poll_c10வாட்ஸ் - அப் வனிதா! Poll_m10வாட்ஸ் - அப் வனிதா! Poll_c10 
9 Posts - 2%
Guna.D
வாட்ஸ் - அப் வனிதா! Poll_c10வாட்ஸ் - அப் வனிதா! Poll_m10வாட்ஸ் - அப் வனிதா! Poll_c10 
4 Posts - 1%
Jenila
வாட்ஸ் - அப் வனிதா! Poll_c10வாட்ஸ் - அப் வனிதா! Poll_m10வாட்ஸ் - அப் வனிதா! Poll_c10 
4 Posts - 1%
jairam
வாட்ஸ் - அப் வனிதா! Poll_c10வாட்ஸ் - அப் வனிதா! Poll_m10வாட்ஸ் - அப் வனிதா! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வாட்ஸ் - அப் வனிதா! Poll_c10வாட்ஸ் - அப் வனிதா! Poll_m10வாட்ஸ் - அப் வனிதா! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாட்ஸ் - அப் வனிதா!


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 16, 2016 10:36 am

ஞாயிற்றுக்கிழமை காலை, 9:00 மணி -

கோயம்பேடு பஸ் நிலையம், வழக்கமான ஜன நெரிசலில் சிக்கியிருக்க, ஸ்கூட்டி ஆன்டிகளும், பார்மல்ஸ் அணிந்து, பவர் கிளாசில் இருந்த ஹீரோ ஹோண்டா அங்கிள்களும், தலையில் வெங்காய சாம்பாரைக் கவிழ்த்தது போல, ஹேர் கலரிங் செய்து, 'ஸ்பைக்ஸ்' வைத்திருந்த இளைஞர்களும், சிக்னலில், வாகன வெள்ளத்தில் ஊர்ந்தனர்.

அக்கூட்டத்தில், தன் மோட்டார் சைக்கிளை மெதுவாக நகர்த்தியபடி, பின்னால் டிராவல் பேக்கோடு அமர்ந்திருந்த பிரவீணிடம், ''என்னடா... டிராபிக் நகரும் வேகத்த பாத்தா, நாம பஸ் ஸ்டாண்ட் போய்ச் சேர்றதுக்குள்ள, நீ ரிசர்வ் செய்த பஸ் கிளம்பிடும் போல,'' என்றான் ரவி.

''ஆரம்பிச்சிட்டியா... நீ என்னிக்கு நல்ல வார்த்த பேசியிருக்க... ராயல் சுந்தரம் கம்பெனில, சர்வர் மெய்ன்டன்சுக்கு கால்பர் வந்ததும், நாம ரெண்டு பேரும் ஒண்ணாத்தான் இன்டர்வியூ போயி, 'செலக்ட்'டானோம். இதோ நாம வேலையில சேர்ந்து, ரெண்டு வருஷம் முடிஞ்சிடுச்சு... நான் கம்பெனியோட
ஹெச். ஆர்., ஆயிட்டேன்; நீ இப்படியே எதை எடுத்தாலும் எதிர்மறையா பேசிப் பேசியே ஜி.எம்., கிட்ட உன், 'இமேஜை' கெடுத்து, புரோமோஷன் கிடைக்காம அல்லாடுற...'' என்றான் பிரவீண்.

''சரி விடு... சின்ன விஷயத்த ஏன் பெருசு பண்ற... புரமோஷன் கிடைக்காததுக்கு காரணம் இருக்கு. ஜி.எம்., மனைவி அந்த பஞ்சாபி ஆன்டி, அடிக்கடி, என்னைப் பாத்து, 'ஜொள்' விடும்; நானும், நேரம் போறதுக்காக கடலை போடுவேன். அதை எவனோ ஜி.எம்.,கிட்ட வத்தி வச்சுட்டான். அந்த கடுப்புல அந்தாள் புரமோஷன இழுத்தடிக்கிறான்...'' என்றான்.

''அடப்பாவி... எப்படிடா பொம்பளைங்கள இவ்ளோ சீப்பா உன்னால வர்ணிக்க முடியுது. அவங்களும் நம்மள மாதிரி தாண்டா. எல்லார்கிட்டேயும் பிரண்ட்லியா, ஜோவியலா பழகுவாங்க. ராஸ்கல்... நீ ஏதாவது, 'மிஸ் பிகேவ்' செய்ய பாத்திருப்ப. உன்ன பத்தி எனக்கு தெரியாதா...'' என்றான் பிரவீண்.
அவன் சொன்னதை காதில் வாங்காதவன் போல, விசிலடித்தபடியே வண்டியை, 'பார்க்கிங்' பகுதிக்குள் செலுத்தினான் ரவி.

சேலம் செல்லும் பஸ் நிற்கும் இடத்தில், நடத்துனரிடம் ஆன் - லைனில் முன்பதிவு செய்திருந்த இ - டிக்கெட் குறுஞ்செய்தியை தன் ஸ்மார்ட் போனில் காட்டினான் பிரவீண். அதை உற்று நோக்கிய கண்டக்டர், ''இன்னும், 10 நிமிஷத்துல பஸ் வந்திரும்; காத்திருங்க,'' என்றார்.
டிராவல் பேக்கை பயணிகள் நாற்காலியில் போட்டு விட்டு, தானும் சாய்ந்தான் பிரவீண்.

''தங்கச்சி கல்யாணத்துக்கு சொந்த ஊருக்கு போறே... வரும் போது, ஏதாவது சொந்தக்கார பொண்ண, 'கரக்ட்' பண்ணிட்டு வந்துடுவியா...'' என்றான் ரவி.
''ம்... பாக்கலாம்...'' என்றான் சோம்பல் முறித்தபடி பிரவீண்.

''நீ ரொம்ப யோக்கியனாச்சே... பொண்ணுங்களக் கண்டாலே ரெண்டடி தள்ளி நின்னு, குனிந்த தலை நிமிராம பேசுவியே... இந்த பூனையும் பால் குடிக்குமான்னு நினைச்சேன். இப்ப, 'புல் பாம்'ல இருக்க போலிருக்கே...'' என்றான் ரவி.

''பின்ன... நான் என்ன உன்ன மாதிரியா... சுடிதார், துப்பட்டா வாசனைய முகர்ந்தாலே, நாய் மாதிரி பின்னால ஓடறதுக்கு,'' என்றான் பிரவீண்.

''சரி சரி விடு... உன் சொந்தத்துலயே நல்ல பொண்ணா அமைய வாழ்த்துகள்,'' என்று கூறி, பிரவீண் கையை பிடித்து குலுக்கினான் ரவி.

பஸ் ஹார்ன் ஒலித்ததும், ''பஸ் வந்திடுச்சுடா...'' என்று கூறி, பேக்கை எடுத்து முதுகில் மாட்டியபடி பஸ்சில் ஏறி, ஜன்னலோர சீட்டில் அமர்ந்தவன், வெளியே நின்றிருந்த ரவியிடம், ''டேய்... ஜி.எம்., டில்லி கான்பிரன்ஸ் பத்தி தகவல் கேட்டா, உடனே எனக்கு தகவல் தெரிவி,'' என்றான்.

''யப்பா சின்சியர் சிகாமணி... போதும்பா காலையில இருந்து இதை இருபது தடவை சொல்லிட்ட. நீ ரெண்டு நாள் லீவ் போடுறதால, கம்பெனி ஷேர்ஸ் ஒண்ணும் நஷ்டத்துல போயி, எம்.டி., போண்டி ஆகிடமாட்டாரு...'' போலியாகக் கையெடுத்து கும்பிட்டான் ரவி.
மெதுவாக நகரத் துவங்கியது பஸ்.

''ஓகேடா... ஊருக்கு போனதும், 'வாட்ஸ் - அப்' பண்ணு. டேக் கேர்,'' என்று, விடை பெற்றான் ரவி.
பஸ் மெதுவாக நகரத் துவங்கிய வேளையில், ''நிறுத்துங்க... நிறுத்துங்க...'' என, இளம் பெண்ணின் குரல் கேட்க, ஜன்னல் வழியாக பிரவீணும், மற்றவர்களும் எட்டிப் பார்த்தனர். வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் சுடிதாரில், தோளில் டிராவல் பேக்குடன், பஸ் பின்னால், மூச்சிரைக்க ஓடி வந்தாள், அந்த இளம் மங்கை. வியர்வையில், 'மேக் - அப்' லேசாகக் கலைந்திருந்தது.

கண்டக்டரிடம், 'ரிசர்வேஷன்' என்றபடி, தன் கையிலிருந்த ஸ்மார்ட் போனைக் காட்டினாள்.
''ஏம்மா சீக்கிரம் வரக் கூடாது... ஏறு...'' கண்டக்டர் கத்தியபடி வழி விட, ஹை ஹீல்ஸ் சத்தம் எழுப்ப, மேலேறினாள்.

அவள் போட்டிருந்த, 'பாடி ஸ்ப்ரே' பஸ் முழுக்க மணத்தது. பயணிகள் அனைவரின் பார்வையும், ஒரு விநாடி அவள் மேல் நிலைத்தது. டூ சீட்டரில், ஜன்னலோரத்தில், பிரவீணுடன் சேர்த்து, அடுத்தடுத்து மூன்று இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். 'இவ, நம்ம பக்கத்தில உட்கார மாட்டாளா...' என மூவரும் ஏங்கினர்; எச்சில் விழுங்கியபடி அவளையே பார்த்தான் பிரவீண்.

இருக்கை எண்ணை உற்றுப் பார்த்துக் கொண்டே வந்தவள், பிரவீண் அருகில் அமர்ந்ததும், மனதில் டூயட்டுக்கு, 'செட்' போடத் துவங்கி விட்டான், பிரவீண்.

'டேய் ரவி... என்னடா சொன்னே... நான் பால் குடிக்கும் பூனையா... இப்பப் பாருடா என் திறமைய...' என்று எண்ணியவன், தொண்டையை மெல்ல செருமி, ''எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்...'' என்றான்.

மஸ்காரா போட்ட இமைகளை அகட்டி, ஒயிலாக அவனைப் பார்த்து புன்னகைத்து, ''யெஸ்...'' என்றாள்.
பிரவீண் பேச எத்தனித்த வேளையில், அவனது போனிலிருந்து, 'அழகு மலராட, அபிநயங்கள் கூட...' என, ரிங்டோன் ஒலிக்க, ''ஒரு நிமிஷம்...'' என்று போன் டிஸ்பிளேவை பார்த்தான்; அம்மாவின் அழைப்பு.
''சொல்லும்மா... பஸ் ஏறிட்டேன். 5:00 மணிக்கு சேலம் புது ஸ்டாண்ட் வந்துடுவேன். 'பிக்கப்' பண்ண அப்பாவ வரச் சொல்லு. மதியம் பிரட் சாப்பிட்டுக்கிறேன்; வெச்சிடட்டா...'' என்றான் வேகமாக!

''ஏண்டா ஒப்பிக்கறே... மெதுவா தான் பேசேன். கல்யாண விஷயமா உங்கப்பா திருச்சி போயிருக்காரு; ஷேர் ஆட்டோ பிடிச்சு வந்திடு. இத சொல்லத்தான் போன் செய்தேன்,'' என்றாள் அம்மா.

சற்று நிதானித்து, வியர்வையை கர்ச்சீப்பில் ஒற்றியபடி, அவளையே பார்த்தான் பிரவீண்.
பேக்கிலிருந்து வாட்டர் பாட்டிலை எடுத்து ஒரு வாய் பருகியவள், அவன் தன்னையே உற்றுப் பார்ப்பதை ஏதேச்சையாக பார்த்தாள்.

உடனே சுதாரித்த பிரவீண், ''என் பேக் மேல இருக்கு... அதிலிருந்து, புத்தகம் எடுக்கணும், கொஞ்சம்...'' என்றபடி மெல்ல எழுந்தான்.
''ஓ ஷ்யூர்...'' அவள் எழுந்து, வழிவிட்டாள்.

பஸ் குலுங்கலில், தடுமாறியபடி பையை திறந்து, நாவல் ஒன்றை உருவி, தன் சீட்டில் சாய்ந்தவன், ஓரக்கண்ணில் அவளை கவனித்தபடி, புத்தகத்தை புரட்டினான்.

அவள் ஸ்மார்ட் போனை கையில் எடுத்தாள். இனி, காதில் ஹெட்போன் மாட்டி, பாட்டு கேட்பாள் அல்லது 'வாட்ஸ் - அப்'பில், தோழிகளோடு, 'சாட்' செய்வாள், பேஸ்புக் பார்ப்பாள் என்று நினைத்தான். ஆனால், அவள், இ - புக்கை திறந்து, அவனைப் போலவே கதை படிக்கத் துவங்கினாள்.

தொடரும்..............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 16, 2016 10:38 am

இக்காலத்தில் புத்தக ஆர்வமுள்ள பெண்ணா...' என்று வியந்தான். அவள் புத்தகத்தில் மூழ்க, சலித்துப் போய், தானும் நாவலில் மும்முரமானான்.

'விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், சேலம்...' தாம்பரம் பஸ் நிலையத்தில், கண்டக்டர் உரத்த குரலில் கத்த, புத்தகத்தில் மனம் ஒன்றாமல் மூடி வைத்தான் பிரவீண். டிரைவர் பிரேக் அடித்ததும், முன் நெற்றியில் கற்றையாக வந்து விழுந்த கேசத்தை, ஒதுக்கியபடி, அவன் வைத்திருந்த புத்தகத்தின் அட்டையைப் பார்த்தவள், ''எக்ஸ்கியூஸ் மீ...'' என்றாள்.

அவளது காந்த குரலில், விசுக்கென்று திரும்பிப் பார்த்தான் பிரவீண்.
''யெஸ்...''
''இது பாலகுமாரனோட, பிருந்தாவனம் நாவல் தானே?''
''ஆமா... நீங்க பாலகுமாரன் ரசிகையா?''
''ஆமாம்.''
''நானும் தான்,'' என்றான் பிரவீண்.

எட்டு மணி நேர பஸ் பயணத்தில் பொழுது போக்குவதற்காக, ஏதாவதொரு புத்தகம் எடுக்க அலமாரியைத் துழாவிய போது, எதேச்சையாக கைக்குத் தட்டுப்பட்ட பாலகுமாரனின் பிருந்தாவனம் புத்தகம், இப்படி சமயத்தில் உதவும் என்று, அவன் எதிர்பார்க்கவில்லை.

''இது எனக்கு பிடிச்ச நாவல்; ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன்...'' என்றாள்.
''ஒண்ணும் பிரச்னையில்ல... நான் படிச்சு முடிச்சுட்டேன்; நீங்களே வச்சுக்கங்க,'' மனதில் தன்னை கர்ணனாக எண்ணி, புத்தகத்தை அவள் பக்கம் நீட்டினான்.

''ஐயோ வேணாம்... நான், 'ஹார்ட் காப்பி' புத்தகம் படிச்சு ரொம்ப நாளாச்சு; இன்போசிஸ்ல சேர்ந்ததுல இருந்து, வேலைக்கு நடுவுல நேரம் கிடைக்கும் போது, ஆன்ட்ராய்ட் இ - புக் தான் படிக்குறேன்...''
''ஓ... நீங்க இன்போசிஸ்ல வேலை பாக்குறீங்களா... நான், ராயல் சுந்தரம்ல,

ஹெச்.ஆர்.,''
''ஓ... தட்ஸ் நைஸ்...'' சிநேக புன்னகை பூத்தாள்.
''இன்போசிஸ்ல நீங்க என்னவா இருக்கீங்க...'' அடுத்த கல்லை விட்டெறிந்தான்.
''சிஸ்டம் அட்மின்.''
''சொந்த ஊரு சேலமா?''
''இல்ல... விழுப்புரம்; வார விடுமுறைக்கு போறேன்!''

'சே... இன்னும் ஒரு மணி நேரம் தான் பக்கத்தில இருப்பா. அதுக்குள்ள பேசி, 'வாட்ஸ் - அப்' நம்பர் வாங்கிறணும். அப்பறம், விடிய விடிய சாட்டிங் செய்யலாம். இதுவரை இவ கிட்ட கண்ணியமாகத் தானே பேசிகிட்டு இருக்கேன்... நான் என்ன ரவி மாதிரி ப்ளேபாயா... நான் ஜென்டில்மேன். இவளிடம் பேச, சாட் பண்ண எல்லாத் தகுதியும் எனக்கு இருக்கு. தைரியமாக முன்னேறு பிரவீண்...' அவனது உள்மனது பலம் அளித்தது.

''நீங்க எங்க போறீங்க...'' பல நாள் பழகியது போல், அவள் இயல்பாகக் கேட்க, பிரவீணுக்கு தைரியம் வந்து, ''சொந்த ஊர் சேலம்; நாளைக்கு தங்கச்சிக்கு கல்யாணம். சென்னை, வில்லிவாக்கத்துல, நண்பனோட தங்கி...'' எனத் துவங்கி, காலை எத்தனை மணிக்கு எழுவான், பல் தேய்ப்பான், குளிப்பான், ராஜிவ் காந்தி ஐடி எக்ஸ்பிரஸ் சாலையில் எவ்வளவு வேகத்தில வண்டியில போவான்.

என்ன வேலை, சாயங்காலம் வீடு திரும்பி, சிகரெட் பிடிக்காமல் காபி மட்டும் குடித்து, பாட்டு கேட்டு, நாவல் படித்து, 9:00 மணிக்கு சாப்பிட்டு, 10:30 மணிக்கு படுக்கும் வரை ஒன்று விடாமல் ஒப்பித்து முடித்து, மூச்சு வாங்கிக் கொண்டான்.
அதுவரை கண்களை விரித்தபடி கேட்ட அவள், அவன் சொல்லி முடித்ததும், சோழிகளை உருட்டியது போல், 'கலகல'வென்று சிரித்தாள்.

''ஏங்க... நான் போறடிக்கிறேனா?''
''நோ நோ... திக்காம, திணறாம நீங்க சரளமா பேசறதப் பாத்தா, பார்ட் டைம் மேடை பேச்சாளர் ஆயிடலாம்,'' என்றாள்.
''பாத்திங்களா... கிண்டலடிக்குறீங்களே...''

''அப்படியெல்லாம் இல்ல,'' என்றபடி, மறுபடியும் இ - புக்கை படிக்கத் துவங்கினாள்.
பதிலுக்கு அவள் புராணத்தை சொல்வாள் என எதிர்பார்த்து ஏமாந்த பிரவீண், 'நம்பர் வாங்கிட்டா, 'வாட்ஸ் - அப்'பில் பேசிக்கலாம்...' என நினைத்து, ''நீங்க, பிருந்தாவனம் நாவல் கேட்டிங்கல்ல... அதோட சாப்ட் காபி, இ - புக் ஏதாவது இருக்கான்னு பாக்கிறேன்,'' என்று கூறியபடி, மொபைலை ஆராய்வது போல் பாவனை செய்தான்.

அவள் சற்று சோர்வாக, ''நான் எல்லாத்திலயும் தேடிப் பாத்துட்டேன்; பாலகுமாரனோட, பிருந்தாவனம் நாவல், 'அப்டேட்' ஆகல,'' என்றாள்.
''டெய்லிஹண்ட்ல தேடிப் பாத்தீங்களா?''
''இல்லயே...''
''இப்ப பாருங்க...''

''என் மொபைல்ல, '௩ஜி' பேக் நேத்தே முடிஞ்சுடுச்சு; ரீசார்ஜ் செய்யல,'' என்றாள்.
''பரவாயில்ல,'' என்றபடி, தன், ஸ்மார்ட் போனில், 'டெய்லிஹண்ட் ஆப்ஷனை' ஓப்பன் செய்து, தமிழ் புத்தகங்கள் வரிசையில் தேடினான். மனதிற்குள், 'கடவுளே... 'பிருந்தாவனம்' அப்டேட் ஆயிருக்கணும்...' என்று வேண்டிக் கொண்டான்.

அவளும், ஆவலோடு எட்டிப் பார்த்ததில், முன்னால் விழுந்த முடி, பிரவீண் கையில் உரசியது. 'இவ்வளவு இயல்பாக இருக்காளே... இவளுக்கும் நம்மிடம் அன்யோன்யம் உள்ளது...' என நினைத்துக் கொண்டே புத்தக வரிசையை பார்த்துக் கொண்டு வந்தவனின் கண்களில், 'பிருந்தாவனம்' நாவல் அகப்பட்டது; மனதுக்குள் விசிலடித்து, ''உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கு; இருங்க டவுண்லோட் செய்றேன்,'' என்றான்.

''தேங்க்யூ சோ மச்,'' என்றவளின் முகத்தில் பரவசம் தெரிந்தது.

''இந்த பி.டி.எப்., பைலிலிருந்து, என் போனுக்கு எப்படி அனுப்புவீங்க,'' என்று அவள் கேட்டபோது தான், பிரவீணுக்கு உறைத்தது. பிரைவேட் ஆப், இ - புக்ஸ் பைல்சை, வேறு யாருக்கும் மாற்ற முடியாதென்று!
சிறிது நேரம் யோசித்தவன், பின், ''ஆங்... இப்படி செய்யலாம்... இந்த நாவல், ௩௦ பக்கம் பி.டி.எப்., பைலா இருக்கு; ஒவ்வொரு பக்கத்தையும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து, 30,'ஜேபெக் இமேஜா' உங்களுக்கு, வாட்ஸ் - அப்'ல அனுப்புறேன்,'' என்றான் துள்ளலுடன்!

'ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்; கதையை அனுப்பும் சாக்கில், 'வாட்ஸ் அப்' நம்பர் வாங்கிடலாம்...' என நினைத்தான்.

''நல்ல யோசனை தான்; ஆனா, ஸ்கிரீன் ஷாட் எடுத்து எடுத்து, உங்க மொபைல் பட்டன் தேய்ஞ்சு போகப் போகுது,'' என்றாள் குறும்பாக!

''போனா போகட்டுமே... உங்க இலக்கிய ரசனைக்கு முன், அதெல்லாம் எம்மாத்திரம்?''
'கலகல'வென சிரித்தாள்; தெற்றுப் பல் அழகாக இருந்தது.
கண்டக்டர் விசில் சத்தம், காதைத் துளைத்தது. ''விழுப்புரம் இறங்கறவங்கலாம் சீக்கிரமா இறங்குங்க,'' என்றார்.

''பேசிட்டிருந்ததுல நேரம் போனதே தெரியல... விழுப்புரம் வந்துடுச்சு,'' என்றபடி, அவசரமாக எழுந்து, பேக்கை முதுகில் மாட்டினாள்.

பதற்றத்துடன், ''உங்க, 'வாட்ஸ் அப்' நம்பர் சொல்லவே இல்லயே...'' என்றான் பிரவீண்.
தலையில் லேசாகத் தட்டி, ''சாரி... 98422 37384...'' என அவள் சொல்ல, அவரசமாக, 'டச்' கீ பேடில் எண்களை ஒற்றினான் பிரவீண். ''ஏம்மா சீக்கிரம் இறங்கு... அங்க என்ன ஓடிட்டிருக்கு பேச்சு!'' என்றார் கண்டக்டர். அவள் இறங்கியதும், பஸ் கிளம்ப, ஜன்னல் வழியாக டாடா காட்டினான் பிரவீண்; அவளும், மெலிதாக கையசைத்தாள்.

பிரவீண் முகத்தில் தென்றல் வீசியது. 'எப்படியோ நம்பர் வாங்கியாச்சு; இனி கவலையில்லை. டேய் ரவி... பஸ் ஸ்டாண்டுல போட்ட சபதத்தை, ஒரு மணி நேரத்தில் சாதிச்சுட்டேன் பாத்தியா...' என, உடனே அவனுக்கு சொல்ல வேண்டும் போல் இருந்தது. 'இனிமே, இவங்கிட்ட நமக்கென்ன பேச்சு... என் தேவதை இருக்கா. அவ பேரென்ன... அடக்கடவுளே... ஒரு மணி நேரம் பேசி, அவ பேர கேட்கலயே...

ஓ... இதுக்கு பேர் தான் காதலா... சரி இருக்கவே இருக்கு, வாட்ஸ் - அப்! இனி, விடிய விடிய சாட்டிங் தான். உலக மக்களே... எனக்கும் ஒரு காதலி கிடைச்சுட்டா...' என, மொபைல், 'டேட்டா ஆன்' செய்து, அவள், 'டிபி' பார்த்தான்; அதே ரம்யமான முகம்; கொஞ்சம் ஒல்லியாக இருந்தாள். பழைய படம் போல! சில வினாடிகளில் ஆன்லைனில் வந்திருந்தாள்.

''ஹாய்... உன் பேரக் கேட்க மறந்துட்டேன்; உன் பேரென்ன?'' என்றான்.
பதிலை எதிர்பார்த்து, ஆவலுடன் மொபைல் போனையே பிரவீண் பார்க்க, எதிர்தரப்பில், ''ஓ... ஸாரி சொல்ல மறந்துட்டேன்; ஐ அம் வனிதா! உங்க பேர் என்ன அண்ணா?''

விமோ



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 16, 2016 11:31 am

'ஹாய்... உன் பேரக் கேட்க மறந்துட்டேன்; உன் பேரென்ன?'' என்றான்.
பதிலை எதிர்பார்த்து, ஆவலுடன் மொபைல் போனையே பிரவீண் பார்க்க, எதிர்தரப்பில், ''ஓ... ஸாரி சொல்ல மறந்துட்டேன்; ஐ அம் வனிதா! உங்க பேர் என்ன அண்ணா?''


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Feb 16, 2016 1:01 pm

கதை ....சூப்பர்   மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி , ட்விஸ்ட்  ..... ரொம்ப ...ஷாக் அடித்தது  பிரவீனுக்கும் எனக்கும் சோகம்
K.Senthil kumar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் K.Senthil kumar



மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 16, 2016 1:08 pm

K.Senthil kumar wrote:கதை ....சூப்பர்   மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி , ட்விஸ்ட்  ..... ரொம்ப ...ஷாக் அடித்தது  பிரவீனுக்கும் எனக்கும் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1193896

ஹா..ஹா..ஹா... பஸ் இல் வரவா போறவாளை எல்லாம் இப்படி நினைக்கக் கூடாது செந்தில் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Feb 16, 2016 1:36 pm

krishnaamma wrote:
K.Senthil kumar wrote:கதை ....சூப்பர்   மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி , ட்விஸ்ட்  ..... ரொம்ப ...ஷாக் அடித்தது  பிரவீனுக்கும் எனக்கும் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1193896

ஹா..ஹா..ஹா... பஸ் இல் வரவா போறவாளை எல்லாம் இப்படி நினைக்கக் கூடாது செந்தில் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1193898

என்(ங்)கா(த்)தில் அடிக்கடி  இடிக்கும்.... சாரி..... இனிக்கும் வாசகம் அம்மாவுக்கு எப்படி தெரிந்ததோ தெரியலையே...? ஒன்னும் புரியல



மெய்பொருள் காண்பது அறிவு
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 16, 2016 1:53 pm

ஹா ஹா வச்சாளா வேட்டு...

கதை அருமை . எதிர்பார்க்காத முடிவு.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82188
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 16, 2016 2:02 pm

கதையின் முடிவு.... வாட்ஸ் - அப் வனிதா! 3838410834
-
வாட்ஸ் - அப் வனிதா! I2HNAARR5erHRa8Ooa8Q+comic1

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 16, 2016 9:52 pm

K.Senthil kumar wrote:
krishnaamma wrote:
K.Senthil kumar wrote:கதை ....சூப்பர்   மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி , ட்விஸ்ட்  ..... ரொம்ப ...ஷாக் அடித்தது  பிரவீனுக்கும் எனக்கும் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1193896

ஹா..ஹா..ஹா... பஸ் இல் வரவா போறவாளை எல்லாம் இப்படி நினைக்கக் கூடாது செந்தில் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1193898

என்(ங்)கா(த்)தில் அடிக்கடி  இடிக்கும்.... சாரி..... இனிக்கும் வாசகம் அம்மாவுக்கு எப்படி தெரிந்ததோ தெரியலையே...? ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1193904

அது தான் அம்மா !......சரியா செந்தில் புன்னகை .ஹா..ஹ..ஹா...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 16, 2016 9:53 pm

ஜாஹீதாபானு wrote:ஹா ஹா வச்சாளா வேட்டு...

கதை அருமை . எதிர்பார்க்காத முடிவு.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக