புதிய பதிவுகள்
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளையாட்டு போசாக்கு உணவு Poll_c10விளையாட்டு போசாக்கு உணவு Poll_m10விளையாட்டு போசாக்கு உணவு Poll_c10 
64 Posts - 58%
heezulia
விளையாட்டு போசாக்கு உணவு Poll_c10விளையாட்டு போசாக்கு உணவு Poll_m10விளையாட்டு போசாக்கு உணவு Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
விளையாட்டு போசாக்கு உணவு Poll_c10விளையாட்டு போசாக்கு உணவு Poll_m10விளையாட்டு போசாக்கு உணவு Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
விளையாட்டு போசாக்கு உணவு Poll_c10விளையாட்டு போசாக்கு உணவு Poll_m10விளையாட்டு போசாக்கு உணவு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளையாட்டு போசாக்கு உணவு Poll_c10விளையாட்டு போசாக்கு உணவு Poll_m10விளையாட்டு போசாக்கு உணவு Poll_c10 
106 Posts - 60%
heezulia
விளையாட்டு போசாக்கு உணவு Poll_c10விளையாட்டு போசாக்கு உணவு Poll_m10விளையாட்டு போசாக்கு உணவு Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
விளையாட்டு போசாக்கு உணவு Poll_c10விளையாட்டு போசாக்கு உணவு Poll_m10விளையாட்டு போசாக்கு உணவு Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
விளையாட்டு போசாக்கு உணவு Poll_c10விளையாட்டு போசாக்கு உணவு Poll_m10விளையாட்டு போசாக்கு உணவு Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளையாட்டு போசாக்கு உணவு


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 20, 2009 4:47 pm

ஒரே விடயத்தை திரும்ப திரும்ப செய்துகொண்டு வேறுபட்ட விளைவை எதிர்பார்ப்பதென்பதே பித்துப் பிடித்ததென்பதன் (பைத்தியம்) வரைவிலக்கணமாகும்.



- பெஞ்சமின் பிறாங்கிலின்

உங்களால்:

1. பயிற்ச்சிக் கூடங்களில் (ஐpம்) கடுமையாக அப்பியாசித்த பொழுது தசைக் கட்டைப் பெற முடியாமலுள்ளதா?


2. உடல் எடையை அதிகரிக்க முடியாமலுள்ளதா?

தசைக்கட்டை எவ்வாறு விருத்தி செய்யலாம்?



உணவுக் குறை நிரப்பிகளே தசைக்கட்டை விருத்தி செய்வதற்கு வேண்டியவற்றைக் கொண்டிருக்கின்றன. பெரும்பான்மையானவர்கள் உயிர்ச் சத்துகளின் கலவை (மல்ரி விற்றமின்) புரதம், சற்.எம்.ஏ, கிறியேற்றின் போன்றவற்றை பயிற்சி ஆரம்பிக்கும் போது எடுப்பார்கள்.



தசை வளர்ச்சி, மீளப்பெறுதல், விரைவாக மீளக்கட்டியமைத்தல் போன்ற செயற்பாடுகளுக்காக பல வகையான உணவுக் குறைநிரப்பிகள் கிடைக்கின்றன. பின்வரும் பட்டியலில் மிகவும் சிறந்த பயன்பெறுவதற்கான உணவுக் குறைநிரப்பிகள் தரப்பட்டுள்ளன.


- புரதம்

- கூட்டு உயிர்ச்சத்துக்கள்

- வளர்ச்சி ஓமோன்கள்

- கிறியேற்றின

- இயற்கையான ஆண்களின் ஓமோன்கள்

- நைற்றிக் ஒக்சைட்

- குளுரமின்

- புரத உணவு

- அமினோ அமிலங்கள

- சற்.எம்.ஏ




மேற்கண்டவற்றில் தசைவிருத்தியை நோக்கில் கொண்டு எதைத் தெரிவு செய்வீர்? தசை விருத்தி செய்வதற்கு கீழ்காணும் குறைநிரப்பிகள் போதியளவில் நன்மை பயப்பனவாகும்.



புரதம்

புரதம் அமினோ அமிலங்களானது, அமினோ அமிலம் எனப்படுவது சிறியதொரு மூலக்கூறாகும். இதுவே கலக்கட்டமைப்பின் கூறாகும். ஆகவே புரதம் தசையை விருத்தி செய்வதற்கு வேண்டிய கட்டாயமான மூலப்பொருளாகும். புரதமின்றி தசையை விருத்தி செய்யமுடியாது. காபோவைதரேற்றுக்கள் - மாப்பொருள் கலங்களில் சக்தியை விடுவிக்கின்றன. ஆனால் கலவளர்ச்சிக்கும், அமைப்பைப் பேணுவதற்கும் அமினோ அமலங்கள் தேவைப்படுகின்றன.



எந்தவித உடலப்பியாசத்தை செய்யப்போகும் பொழுதும், உடலிற்கு புரதத்தின் அளவு கூடுதலாக தேவைப்படுகின்றது. ஒழுங்காக உடலப்பியாசத்தைத் தொடர்ந்து செய்யும் பொழுது, நல்ல தரமான புரதத்தை உள்கொள்ளாத பொழுது தசை நலிவடைந்து, தசையிறுக்கம் குறைந்து உடலின் நோயெதிர்ப்புச் சக்தி தரத்தில் குறைவதோடு, தாமதமாகவே உடல் பழைய நிலைக்கு மீள்வதோடு, உடலின் சக்தியளவும் குறைவாகவே காணப்படும். உங்களின் நோக்கம் கட்டுமஸ்தான வலுவுடைய தசையை, கொழுப்பினளவைக் குறைவாகவே வைத்துக்கொள்ளும் வேளை கட்டியெழுப்புவதாகவிருந்தால், நல்;ல தரமான புரதத்தை மேலதிகமாக எடுக்கவேண்டியிருக்கும்.


நாளொன்றிற்கு, உடல் எடையின் ஒவ்வொரு இறாத்தலிற்கும் 1 - 2கி. புரதத்தை எடுக்கவேண்டியிருக்கும். ஒருவர் 150 இறா. எடையுடையவராக இருந்தால் 150 - 300 கி. புரதத்தை ஒரு நாளுக்கு எடுக்கவேண்டும். புரத பானம் (புறோற்ரின் சேக்ஸ்), புரத உணவுத் துண்டுகள் போன்றவை, உயர்தர புரதத்தை வசதியான முறையில் உள்ளெடுக்க இலகுவானதாகும்.


முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியவை
- நல்ல தரமான புரதத்தை உண்ணவேண்டும்.




உ-ம் தயிர் எடுத்த பின் எஞ்சும் திரவம ; (வேய் - புறோற்ரின்), மீன், பால்.
- ஒவ்வொரு உணவிலும் புரதம் சேர்க்கவேண்டும்.


- தயிர் எடுத்தபின் எஞ்சும் திரவப்பகுதியில் (வேய்) நல்ல தரமான இலகுவில் சமிபாடடையக் கூடிய புரதம் கிடைக்கிறது. இதில் இலக்ரோசு என்னும் பால் வெல்லத்தினளவு குறைவாக இருப்பதோடு, கொழுப்புக் குறைந்த தசை வளர்ச்சிக்கு ஆதரவாகவுள்ளது. மேலும் சைவ உணவுண்போருக்கும், பசுப்பால் சகியாத்தன்மை உடையோருக்கும் உகந்ததாகும்.



உணவினூடு போதியளவு புரதம் உள்ளெடுக்காத பொழுது, உடலானது சக்திக்காக, சேமிக்கப்பட்ட புரதத்தைப பயன்படுத்த ஆரம்பிக்கும். உடல் எங்கிருந்து புரதத்தை பெற்றுக்கொள்ளுமென ஊகிக்கிறீர்கள்? தசைகளிலுள்ள புரதத்திலேயே இது ஆரம்பிக்கின்றது. இப்பொழுது உடலின் ஆக்கச்சிதைவுத் தொழிற்பாடுகள் மந்தமாவதுடன், தசைவலு குறைந்து போகும் வேளை, தசை வளர்ச்சி திடீரென நிறுத்தப்படுகிறது. மேலும் கொழுப்பு இழப்பு நிகழ்வுகளிலும் புரதம் முக்கியமான பங்களிக்கிறது. உடல் எடையைக் குறைக்கவேண்டுமாயின் உள்ளெடுக்கும் உணவிலுள்ள கலோரியளவைக் கட்டுப்படுத்தவேண்டும். எப்படியாயினும் உணவினளவைக் குறைக்கும் பொழுது, தசையிலுள்ள புரதம் சக்திக்காக பயன்படுத்தப்பட ஆரம்பிக்கப்படுகிறது. அதாவது நீங்களே உங்களை உண்ண ஆரம்பிக்கிறீர்கள். எனவே இப்படியான இழப்புக்களை ஈடுசெய்ய உணவில் போதியளவு புரதம் வேண்டும்.


நீங்கள் சில காலமாக நிறை தூக்கும் வகையிலான பயிற்சி செய்துவந்த போதிலும், குறிப்பிடத்தக்கதொரு மாற்றம் காணப்படவில்லையாயின், உங்கள் உணவில் போதியளவு புரதம் இருக்கிறதாவென கவனித்துப் பாருங்கள். புரதம் கோழி இறைச்சி, மீன் அல்லது கொழுப்பு குறைந்த சிவப்பு இறைச்சி அல்லது புரதக் குறை நிரப்பிகள் ஆகிய வடிவங்களின் எடுக்கப்படலாம். புரதக் குறைநிரப்பிகளை எடுப்பது உடலுக்கு தேவையான புரதத்தை எடுப்பதற்கான இலகுவானதும், வசதியாசனதுமான முறையாகும். ஆயினும் புரதமென்றால் எல்லாம் ஒன்றையே குறிக்குமென எண்ணிவிட வேண்டாம். அவற்றில் வேறுபாடுகளுண்டு.


மேலும் சொல்லப்;போனால், சரியான வகையான புரதத்தை உட்கொண்டால் தசை விருத்தியடையும் வேகம் அதிகரிக்கும். பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஆய்வுகளின் படி, தயிர் நீக்கிய பின் கிடைக்கும் திரவத்தில் இருந்து பெறப்பட்ட (வேய் - புறோற்ரின்) புரதம், சாதாரண விலை குறைவான பால் புரதங்களிலிருந்து பெறப்பட்ட புரத உணவை விட 119வீதம் அதிகமாக தசை வளர்ச்சியை ஏற்ப்படுத்தியதைக் காட்டிநிற்கின்றன. மேலும் பல ஐரோப்பிய முதல் தர ஆய்வாளர்கள், தயிரகற்றிய திரவத்தில் கிடைக்கும் புரதம், தசையை விரயம் செய்யும் ஓமோனை இழந்துவிடுகிறது எனக் கண்டிருக்கிறார்கள். சுருங்கக் கூறின், உணவுக்காலவாயில் அகத்துறிஞ்சப்படும் (வேய் - புறோற்ரின்) புரதம், குருதியினூடாக நேரடியாக புரதத்திற்கு தவிக்கும் தசைகளுக்கு வினியோகம் செய்கிறது.


ஏ.ரி.பி. கிறியற்ரின் கெம்பிளக்ஸ்:

இதுவொரு கிறியற்ரின், அல்பா லிப்பொயிக் ஆகிய அமினோ அமிலங்களின் விசேடமான சேர்மானமாகும். இது தசை வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, கலங்களைப் பெருக்கச் செய்வதால் முழுதாக நிரம்பிய, இறுக்கமான தசைக் கட்டுக்களைத் தருவதோடு, வலுவான, நீண்ட நேரம் நிலைக்க கூடியதுமான தசையைத் தருகிறது.



கிறியற்ரின் இயற்கையாக உடலில் காணப்படும் ஒரு பதார்த்தமாகும். தீவிரமான உடற்பயிற்சி செய்யும் ஒவ்வொரு வேளையும் (உ-ம் வேகமாக ஓடுதல், எடை தூக்கும் பயிற்சி) உடலானது கிறியற்ரின்னைப்; பயன்படுத்தி உடற்செயற்பாடுகளுக்கு சக்தியை வழங்குகிறது. ஆனால் கிறியற்ரின் ஏறக்குறைய 10 வினாடிகளுக்கு மட்டுமே சேமிப்பைக் கொண்டிருக்கும். இதன் விளைவாகவே நீண்ட தூரத்திற்கு விரைவாக ஓடமுடியாது. ஏனெனில் கிறியற்ரின் விரைவில் தீர்ந்து விடும், சக்தி கிடைக்காது.


கிறியற்ரினை உணவில் சேர்த்துக்கொளவதனால், உடலில் கிறியற்ரினின் அளவை உயர்த்தலாம். இதனால் பயிற்சிக் கூடத்தில் அல்லது விளையாட்டுத் திடலில் உங்களின் செயற்திறனை அதிகரிக்கலாம். கிறியற்ரின் தசைக்கல வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது, ஏழு நாட்களுக்குள்ளாக 3 - 4 இறாத்தல் தசை எடையதிகரிப்பை தந்துவிடக்கூடும கிறியற்ரினை குறைநிரப்பிகளாக எடுத்தபோது தசை வலுக்கூடியதாகவும், காற்பந்து வீரர்களின் விளையாட்டு மேம்பட்டதாகவும், கொழுப்பு குறைந்த தசையனளவு அதிகரித்ததாகவும் ஆராட்சிகள் காட்டிநிற்கின்றன.


அண்மைக்கால ஆராய்ச்சியின் படி கிறியற்ரின் பயன்படுத்தியவர்களில் பலம் பொருந்திய தசை வளர்ச்சி, கிறியற்ரினை எடுக்காதவர்களை ஒப்பிடும் பொழுது மிகவும் துரிதமாக கிடைக்கப்பெற்றதைக் காட்டிநிற்கின்றன. உதாரணமாக கிறியற்ரினை 12 கிழமைகள் பெற்றுக்கொண்டு எடை தூக்கல் அப்பியாசம் செய்துவந்த சோதனைக் குட்பட்டோர் முறையே 24 வீதம், 32 வீதம் அதிகமாக வலுவுடன் பெஞ்ச் பிறஸ்இ ஸ்குவாட்ற் ஆகிய பயிற்சிகளைச் செய்ததுடன், கொழுப்புக் குறைந்த தசையினளவை இருமடங்காகப் பெற்றிருந்தனர்.


இப்படியான பெறுபேறுகள் கிறியற்ரினை எடுக்கும் எவருக்கும் கிடைக்கக் கூடியதே. தசையில் பலமும, அளவும் விரைவாக அதிகரிக்க வேண்டுவோருக்கு வேண்டியது கிறியற்ரின் ஆகும்.


கிறியற்ரின்இறைச்சி, மீன் வகைகளிலிருந்து கிடைக்கிறது. (உ+-ம் சல்மன், ரியுனா, மாட்டிறைச்சி.)


கிறியற்ரின் மிகுந்த உணவை போதியளவில் உட்கொண்டபோதிலும், ஏதாவதொரு குறிப்பிடத்தக்க செயற்திறனைக் காண்பிப்பதற்கு வேண்டியளவில் கிறியற்ரினை உணவிலிருந்து மட்டும் பெற்றுக்கொள்ள முடியாது. உணவு சமைக்கப்படும் பொழுது கிறியற்ரின் சிதைக்கப்படுகின்றது. இதனால்தான் பல தடகள வீரர்கள், கிறியற்ரின் குறைநிரப்பிகளை, உடற் செயற்திறனை அதிகரிக்கும் வண்ணம் எடுத்துக்கொள்கிறார்கள்.


வேறெந்த குறைநிரப்பிகளுக்கும் நடைபெறாத அளவில் கிறியற்ரின் குறைநிரப்பிகளுக்கு ஆராட்சிகள் செய்யப்பட்டிருக்கின்றன. பல்வேறு விளையாட்டு வீரர்க்ளிலும், தனிப்பட்டோரின் குறிக்கோள்களை அடைவதிலும்,; ஆச்சரியப்படும் படியான சிறந்த முடிவுகளைத் தந்திருக்கிறது. கிறியற்ரின் எவ்வளவு, எவ்வாறு எடுப்பது என்பதனை மாற்றுவதன் மூலம் தசைக் கட்டினளவையும் வலுவையும் விரைவாக பெற்றுக்கொள்ளலாம். இன்னுமொரு தடவை எடுக்குமளவை மாற்றும்போது (டோசேச்), தசையின் நீடித்து நிற்குமளவையும், வற்றாத ஆற்றலுடன் சக்திமிக்க செயற்திறனைப் பெற்றுக்கொள்ளலாம்.


மிக அண்மைக்கால ஆய்வொன்று, மத்தியளவு தூர ஓட்டக்காரனின் ஓட்டத்திறனை, கிறியற்ரின் குறிப்பிடத்தக்களவு அதிகரித்ததாக குறிப்பிட்டுள்ளது. துவிச்சக்கர ஓட்ட வீரர்களின் திறன் 2 மணி நேரத்திற்கு மேற்பட்டதொரு பயிற்சியின் பொழுது 9வீதம் அதிகரித்ததாக இன்னுமொரு ஆய்வு காட்டிநிற்கின்றது. இவற்றிற்கும் மேலாக, கால்பந்து வீரர்களின் திறனையும் அதிகரிப்பதாக உறுதியான ஆதாரங்கள் உள்ளன.


உயிர்ச்சத்துக் கலவை, கனியுப்புகள்

நல்லதொரு பல உயிர்ச்சத்துக் கலவை (மல்ரிவிற்றமின்), தசை விருத்திக்கு இன்றியமையாதாகும். இதுவே நல்ல ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது என்பதை இங்கு குறிப்பிட தேவையில்லை. தீவிர உடற்பயிற்சி செய்பவர்களுக்கு கூடுதலான உயிர்ச்சத்துக்கள் தேவைப்படுகின்றன.



புதிதாக பெறப்பட்ட பழங்கள், மரக்கறிகள், முழுத்தானியங்கள், விதைகள், கொட்டைகளிலிருந்து பெறப்படும் முக்கியமான கொழுப்பமிலங்கள, எண்ணெய்த்தன்மை கொண்ட மீன்வகைகள், தரமான புரதவகைகள் ஆகியன நல்ல ஆரோக்கியத்தின் அடித்தளமாகும். இருந்தபொழுதிலும் ஒவ்வொருவரினதும் உயிரியல் இரசாயனம் வேறுபாடானதாகும் என்பதனால் ஒவ்வொருவரினதும் தேவைகள் அவரவரின் குறிப்பிட்ட உடல்சார்ந்ததாகவுள்ளது. இந்த தேவைகள் கூட வாழ்க்கை முறை சார்ந்த நிலைகளான, மனவழுத்தம், எடைகுறைய உணவுக் கட்டுப்பாடு, தவிர்க்கப்பட்ட உணவு நேரங்கள், முன்தயாரிக்கப்பட்ட மாச்சத்து மட்டும் கொண்ட உணவுகள், புகைத்தல், மதுவருந்துதல், ஒழுங்கான உடலப்பியாசமின்மை, நோய்களுக்கான மருந்துகள் எடுத்தல் போன்ற காரணங்களால் வேறுபடுகின்றன. சூழல் காரணிகள் கூட எமதுடலின் போசாக்குகளின் சமநிலையைக் குழப்பலாம்.

உணவினூடு கிடைப்பதோடு, உயிர்ச்சத்து, கனியுப்புகள் கொண்ட நல்ல குறைநிரப்பிகளை எடுக்கும் பொழுது, உணவிலுள்ள குறைபாடுகள் நிரப்பப்படுவதோடு, ஆரோக்கியம் தரும் நிறையுணவும் கிடைக்கிறது.


வன் ஏ டே மல்ரிவிற்றமின் அன் மினறல்ஸ் என்பது பல உயிர்ச்சத்துக்களையும், கனியுப்புக்களையும் மிகவும் உயர் அளவுகளில் கொண்டுள்ளது. அத்துடன் கனியுப்புக்கள் சேதன (ஓபகானிக்) வடிவங்களில் காணப்படுகின்றது. இவற்றுடன் கூடவே கட்டாக்காலி நிரம்பாத அணுக்களுக்கு எதிராக செயற்படும் (அன்ரி ஒக்சிடன்ற்) லூற்ரின், பீரா கறட்டீன் போன்றன காணப்படுவதனால் குருதிச் சுற்றோட்டம் சிறப்பாக நடைபெறுவதுடன், விழி நலனும், நோயெதிர்ப்பும் நன்றே பேணப்படுகிறது.




மூலிகைகள:; ரிபியுளஸ்;, அஸ்வக்கநதா:

ரிபியுளஸ் என்னும் மூலிகையில் இயற்கையாக ரெஸ்ரொஸ்ரொறோன் தூண்டும் தன்மையுண்டு. இதனை பாவிப்பதனால் தசை வலு அதிகரிக்கிறது. ஆனால் கொழுப்பு படிவதில்லை. முதல்தர விளையாட்டு வீரர்கள், தடகள வீரர்கள், கட்டு மஸ்தான உடல் வளர்ப்போர் அவர்களின் உடலில் ரெஸ்ரொஸ்ரொறோனின் அளவு கூடும்பொழுது வினைத்திறனும் பன்மடங்கு அதிகரித்திருந்ததை அறிந்திருப்பார்கள். இந்நிலையை அடைவதற்கான இயற்கையான, பாதுகாப்பான, சட்டத்திற்குட்பட்ட, தீய பக்கவிளைவுகளற்ற மூலிகை ரிபியுளஸ் ஆகும். ரிபியுளஸைப் பயன்படுத்தியவர்கள் தமது தசையின ;அளவும் பலமும் அதிகரித்ததோடு, உற்சாகமதிகரித்து உயர் சக்தி மட்டம் கிடைத்ததாக அறிவித்திருக்கிறார்கள்.



ரெஸ்ரொஸ்ரொறோன்; வலுவான தசையை வளர்க்கக்கூடிய ஓமோனாகும். இது தசைக்கலங்களை அதிக புரதத்தை உள்ளெடுக்குமாறு தூண்டி செயற்படுவதனால் தசையின் பருமனதிகரிப்பதோடு தசையின் வலுவும் கூடுகிறது. ரெஸ்ரொஸ்ரொறோன் இனின் அளவை பாதுகாப்பான முறையில் இயற்கையாக உயர்த்தும் பொழுது, இதனளவை நீண்ட நேரம் வைத்திருக்க முடியுமாதலால், வலுவும் வினைத்திறனும் அதிகரிக்கின்றது. மேலும் ரிபியுளஸ் உடலில் ரெஸ்ரொஸ்ரொறோன் ஓமோன் உற்பத்தியின் வழிமுறையில் ஒரு முன்னோடியாக (பிறக்கேசர்) செயற்படாமல், நேரடியாக லூட்ரினைசிங் ஓமோனின் அளவை அதிகரிக்கின்றது. லூட்ரினைசிங் ஓமோனின் அளவு அதிகரிக்கும் பொழுது ரெஸ்ரொஸ்ரொறோன் ஓமோனின் அளவும் அதிகரிக்கின்றது. லூட்ரினைசிங் ஓமோன்; காமக்கிளர்ச்சியை தூண்டிவிடுவதாகவும் செயற்படுவதனால்; தான், மலட்டு நிலைகளிலும் ஆண்மையின்மையின்மையின் போதும் பயன்படுத்தப்படுகிறது.

அஸ்வக்கந்தா:

இதுவொரு உடற் உடசூழலின் தேவைக்கு தக்கவாறு இசைந்து செயலாற்றக்கூடியதொரு மூலிகையாகும். இதனால் உடலின் சக்திநிலை அதிகரிப்பதோடு, பலவிருத்தியும் உட்கொண்ட குறுகிய காலத்தினுள்ளேயே உணரப்பட்டுள்ளது. மேலும் நீண்ட நேரம் நீடித்து நின்று விளையாடவும் அல்லது நன்கு உடலப்பியாசம் செய்யவும் உதவி செய்கிறது.


அஸ்வக்கந்தா நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துவதோடு, கட்டாக்காலி நிறைவுறாத அணுக்களுக்கு (ஒக்சிடன்ற்) எதிராக செயற்படும் தன்மையையும் கொண்டுள்ளது. அஸ்வக்கந்தா ஆனது விளையாட்டு வீரர்களிலுடலில், கோட்டிசோலின் அளவைக் குறைத்து, சக்திமட்டத்தை அதிகரித்து, நீடித்து நின்று விளையாடவைத்து, பயிற்சி இடைவேளைகளில் நடைபெறும் உடல் மீள்பெறும் நேரத்தைக் குறைத்தும், பொதுவில் உடல் வினைத்திறனை அதிகரிக்க உதவுகிறது.

சற்.எம்.ஏ

சற்.எம்.ஏ எனப்படுவது உடலின் ஆக்கச்சிதைவு (மெற்ராபோலிசம்) செயற்பாடுகளில் ஆக்கச் செயற்பாடுகளிற்காக விஞ்ஞான ரீதியில் இயற்கையில் கிடைக்கும் தாவரங்களில் பெறப்பட்ட கனிப்பொருள் சேர்மானக் கலவையாகும் (சிங் மொனோமெதியோனின் அஸ்பறேற், மக்னீசியம் அஸ்பறேற், விற்றமின் பி6). பயிற்றப்பட்ட விளையாட்டு வீரர்களின் தசைப் பலத்தை அதிகரித்தாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன. சற்.எம்.ஏ. ஐப் பாவித்தவர்களின் பலம் 11.6வீதம் இருந்தபொழுது, பாவிக்காதவர்களின் பலம் 4.6 வீதமாக இருந்ததை பிறிதொரு ஆய்வு சுட்டிநிற்கிறது.



விளையாட்டு வீரர்களினுடலில் சிங், மங்னீசியம் குறைபாடுகள் காணப்படுவது சாதாரணமானதாகும். இதனால் ரெஸ்ரொஸ்ரொறோன் அளவு குறைவு, செயற்திறனாற்றல் குறைவு, மீளப்பெறுதலில் தாமதம், தசைப்பிடிப்பு, சோர்வு போன்றன விளைவாகக் கிடைக்கின்றன. கனியுப்புக்களான சிங், மக்னீசியம் இரண்டும் உடலில் பல செயற்பாடுகளில் முக்கியபங்கை வகிக்கின்றன. சிங், ரெஸ்ரொஸ்ரொறோன் உற்பத்தியுடன் தொடர்பானது, மேலும் வளர்ச்சிக்கான ஓமோனின் அதிகரிப்பிலும் பங்குடையது. இவையிரண்டுமே தசையளவை அதிகரிக்க முக்கியமாக வேண்டியவையாகும். உடலில் 300 க்கு அதிகமான இரசாயத் தாக்கங்களுக்கு மக்னீசியம் முக்கியமானதாகும், இது கொழுப்பை எரித்தழிக்கும் தாக்கத்தையும் உள்ளடக்குகிறது. பெரும்பான்மையான மக்கள் போதியளவு கனியுப்புக்களை தமதுணவின் மூலம் பெற்றுக்கொள்வதில்லை.


சற்.எம்.ஏ தயாரிப்பு, சற்.எம்.ஏ மருந்துளி, உயிர்;ச்சத்துக்களையும் கொண்டிருப்பதனால் மேற்குறிப்பிட்ட குறைபாடுகளை எதிர்த்து நிற்கிறது.

சற்.எம்.ஏ தயரிப்பை கொழுப்புக் குறைந்த தசையை பருமனாகவும், பலத்துடனும் கட்டியெழுப்பவிரும்பும் விளையாட்டு வீரர்கள், உடல் வளர்ப்;போர், றக்பி விளையாட்டுவீரர், வேக ஓட்டக்காரர், ஏனைய விளையாட்டு வீரர் யாவரும் இதனைப் பயன்படுத்தலாம். மேலும் சற்.எம்.ஏ நெடுநேரம் நிலை நின்று விளையாட வேண்டிய நெடுந்தூர ஓட்டக்காரர், மரதனோட்ட வீரர்கள், துவிச்சக்கர போட்டியாளர், முத்தள வீரர்கள், போன்றோரின் ரெஸ்ரொஸ்ரொறோன் குறைவடையாமல் வைத்திருப்பதில் உதவி செய்கின்றது.


வாழ்க்கை முறை:
உங்கள் வாழ்க்கை முறையை மறுபரிசீலித்தல் முக்கியமாகும். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை உடல் எடையை அதிகரிக்கமேயன்றி தசையளவை அதிகரிக்காது.

நீர் அருந்துதல் மிகவும் முக்கியமானதாகும். போதியளவு நல்ல நீர் அருந்துவதனால், உடலிருந்து கழிவகற்றப்படுவதுடன், உடல் நீரிழந்து போகாமல் உடலில் நீரினளவைப் பேண உதவும்.

கிழமைக்கு ஆகக்குறைந்தது 1 மணித்தியாலத்திற்கு குறையாமல் மூன்று தடைவ உடற்பயிறசி செய்யவேண்டும். உடலின் பயிற்சி அளவு பேணப்படும் பொழுது சக்தி பயன்படும். (உடற்பயிற்சி) உடலை அப்பியாசம் செய்வதே உடலின் ஆக்கச்சிதைவு செயற்பாடுகளை திறம்பட செய்யும் வழியாகும். நீங்கள் அடையவிரும்பும் உடற்கட்டுக்குமேற்ப குறைநிரப்பிகளை எடுக்கலாம்.

-- marunthu.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக