ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 56: தட்பவெப்பத்தைப் புரிந்துகொள்ளுதல்
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 57: தமிழர்களின் பருவநிலை அறிவு
 பழ.முத்துராமலிங்கம்

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 18/11/17
 Meeran

முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 ayyasamy ram

கடலூர், சிதம்பரத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் 21–ந் தேதி தர்ணா போராட்டம்
 ayyasamy ram

ஏசுநாதர் ஓவியம் ரூ.2,925 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
 ayyasamy ram

மகனை மனம் திருந்த வைத்த தாய்ப்பாசம்
 ayyasamy ram

டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
 ayyasamy ram

மகனுக்கு முடிசூட்டுகிறார் சவூதி மன்னர் சல்மான்
 ayyasamy ram

India Today ????27.11.17
 Meeran

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 ayyasamy ram

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 ayyasamy ram

ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க...!!
 ayyasamy ram

மூச்சிக்கலை
 Meeran

பயம் - கவிதை
 ayyasamy ram

மேய்ச்சல் - கவிதை
 ayyasamy ram

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 ayyasamy ram

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 ayyasamy ram

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 ayyasamy ram

மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
 ayyasamy ram

புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
 Dr.S.Soundarapandian

நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
 Dr.S.Soundarapandian

நாணயம் விகடன் 19.11.17
 Meeran

ஒரு நிமிடக் கட்டுரை: ‘மோட்டல்’ எனும் சுயாட்சிப் பகுதிகள்!
 Dr.S.Soundarapandian

நெஞ்சத்தில் தோன்றுவதும்!
 Dr.S.Soundarapandian

கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
 Dr.S.Soundarapandian

இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
 பழ.முத்துராமலிங்கம்

ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
 Dr.S.Soundarapandian

நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஆஹா என்ன ஒரு அழகு..! மிஸ் பண்ணிடாதீங்க...அப்புறம் பின்னாடி பீல் பண்ணுவீங்க...!
 Dr.S.Soundarapandian

போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
 Dr.S.Soundarapandian

மாலை பேப்பர் 17.11.17
 Meeran

குங்குமம் & முத்தராம் 24.11.17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 aeroboy2000

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
 பழ.முத்துராமலிங்கம்

நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat
 பழ.முத்துராமலிங்கம்

17-11-17
 பழ.முத்துராமலிங்கம்

உலகச் சிறுகதைகள் புத்தக வடிவில்
 ajaydreams

சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
 ayyasamy ram

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 ayyasamy ram

‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
 ayyasamy ram

தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
 ayyasamy ram

ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
 ayyasamy ram

கல்வி வேலை வழிகாட்டி குங்குமம் டாக்டர் 16.11.17
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

இனி உங்க வீட்டுக்கு விலாசம் இல்லை, 6 இலக்க எண் மட்டுமே.. மோடி அரசின் அடுத்த அதிரிபுதிரி..!
 பழ.முத்துராமலிங்கம்

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 பழ.முத்துராமலிங்கம்

காவிரிக்கே முடிவு தெரியல.. மைசூர் பாக் யாருக்கு சொந்தம் என்பதில் தமிழ்நாடு-கர்நாடகா சண்டை
 பழ.முத்துராமலிங்கம்

சிந்தித்தவன் முன்னேறுகிறான்
 Dr.S.Soundarapandian

ராமாயணக் கதாபாத்திரங்கள் அறிவோமா..?
 Dr.S.Soundarapandian

மான் வடிவம் கொண்டு வந்த அசுரன் யார்?
 Dr.S.Soundarapandian

சிவபெருமான் கிருபை வேண்டும்
 Dr.S.Soundarapandian

மல்லிகா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
 Dr.S.Soundarapandian

நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அருட்பாடல்கள்..

View previous topic View next topic Go down

அருட்பாடல்கள்..

Post by ayyasamy ram on Tue Mar 01, 2016 4:45 pm

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லாம் செயல் கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம் வல்லான் தனையே ஏத்து
திருச்சிற்றம்பலம்

அனுபவ மாலை
(ஆறாம் திருமுறை)
-
பொய்பிடித்தார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப்
பொதுநடங்கண் டுளங்களிக்கும் போதுமண வாளர்
மெய்பிடித்தாய் வாழியநீ சமரசசன் மார்க்கம்
விளங்கஉல கத்திடையே விளங்குகஎன் றெனது
கைபிடித்தார் நானும்அவர் கால்பிடித்துக் கொண்டேன்
களித்திடுக இனியுனைநாம் கைவிடோம் என்றும்
மைபிடித்த விழிஉலகர் எல்லாரும் காண
மாலையிட்டோம் என்றெனக்கு மாலையணிந் தாரே.

-
பொருத்தமிலார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப்
பொதுநடங்கண் டுவந்துநிற்கும் போதுதனித் தலைவர்
திருத்தமுற அருகணைந்து கைபிடித்தார் நானும்
தெய்வமல ரடிபிடித்துக் கொண்டேன்சிக் கெனவே
வருத்தமுறேல் இனிச்சிறிதும் மயங்கேல்காண் அழியா
வாழ்வுவந்த துன்தனக்கே ஏழுலகும் மதிக்கக்
கருத்தலர்ந்து வாழியஎன் றாழிஅளித் தெனது
கையினில்பொற் கங்கணமும் கட்டினர்காண் தோழி.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32432
மதிப்பீடுகள் : 10703

View user profile

Back to top Go down

Re: அருட்பாடல்கள்..

Post by ayyasamy ram on Tue Mar 01, 2016 4:45 pm


இங்கு, இந்த அருட்பாடல்கள் உண்மை-ஆன்மீக அருள்-உலகின்
முடிவான சித்திவல்லப அனுபவத்தை, நம் எல்லோருக்கும் தெளிவாக
உணர்த்துகின்றன.

ஆனால், இந்த அருட்பாடல்களின் உண்மை புரியாமல் சிலருக்குக்
கீழ்வரும் சில கேள்விகளும் எழக்கூடும்.

1."பொய்பிடித்தார் எல்லாரும் புறத்திருக்க" - என்று வள்ளலார் யாரைக்
குறிப்பிடுகிறார்?

2.வள்ளலார் பேருபதேசத்தில் கடவுளுக்குக் கைகள், கால்கள், வாகனங்கள்,
ஆயுதங்கள், இடங்கள் போன்றவைகள் இருப்பதாகக் கற்பிப்பது, பொய்
பிடித்தவர்களின் வீணான கற்பனையே என்று சாடுகின்றாறே, ஆனால்
அவரே ஆண்டவரின் காலைப் பிடித்தாக இங்கு சொல்கிறாரே? -
இது பொய்பிடித்தல் அல்லவா அல்லது இல்லையா ?

3. "மைபிடித்த விழிஉலகர்" - என்பது பெண்களை அல்லவா குறிக்கும்.?

இப்படிப் பல ஐயப்பாடுகள் நம்முள்ளே ஏற்படக்கூடும் எனினும்,
இச்சலனங்கள் இயற்கையே! நல்லது.

ஆனால், இந்த அருட்பாடல்களின் உண்மையை உணரும் போது, நம்முள்ளே
நீண்ட ஞானானந்தம் விரவி நிலவும். அதைப் பெறுவோமாக இன்று, இங்கு,
இப்பொழுது!

நாம் அறிவோம், "புறம்' - மாறும் தன்மையுடையது" - என்று.
அதாவது, அநித்தியம்; அதாவது 'பொய்' - என்று. உலகிலுள்ள சமயமத
ஆச்சாரங்களெல்லாம், மனம்-உடல் சார்ந்த அனுபவங்களே அன்றி,
வேறொன்றும் விசேசம் இல்லை அவற்றில். எனவே, இவற்றைச் சார்ந்தவர்கள்
எல்லாரும் அநித்தியமாகிய பொய்பிடித்தவர்களே. மனமும், உடலும் நமக்குப்
புறம் என்பதால், அவர்கள் புறத்தேதான் இருக்க முடியும். இதுதான்
இயற்கையுண்மையின் நியதியும் ஆகும்.

அடுத்து, 'கை' - என்பது தழிழில், 'ஒழுக்கம் ' - என்பதாம். ஆகவே, 'எனது கைபிடித்தார்' -
என்பது, 'என்னுடைய சுத்த சன்மார்க்க ஒழுக்கத்தை இறைவன் ஏற்றுக்கொண்டார்' -
என்று பொருள் கொள்ளவேண்டும்.

அப்படியானால், 'நான் அவர் கால்பிடித்துக் கொண்டேன்' - என்பது என்னவெனில்?

தமிழில் எண்ணும் எழத்தும் இரு கண்களாம். பலருக்குத் 'தமிழ் எண்கள்' -
என்னும் ஒரு கண் குருடாகவே உள்ளது. வள்ளலார் போன்று எண்ணையும் எழத்தையும்
இணைத்துச் சீரோடு சிறப்புற அற்புதமாய் எழுதியவர்கள் தமிழுலகில் யாரும் இல்லை.
எடுத்துக்காட்டுகள் ஏராளம்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32432
மதிப்பீடுகள் : 10703

View user profile

Back to top Go down

Re: அருட்பாடல்கள்..

Post by ayyasamy ram on Tue Mar 01, 2016 4:46 pm


அதில் ஒருசில இதோ;
'எட்டிரண்டும் என்என்றால் மயங்கியஎன் றனக்கே எட்டாத நிலைஎல்லாம் எட்டுவித்த
குருவே...'

"எட்டோடே இரண்டுசேர்த் தெண்ணவும் அறியீர் எத்துணை கொள்கின்றீர்
பித்துல கீரே."

"இருபத்து நான்கு (24 = 2 + 10 = 4)" - என்ற குறிப்பில், "இரண்டை (2 - ஜீவகாருண்யம் மற்றும்
சத்துவிசாரம்), பத்து (பற்றினால்/பிடித்தால்), காயத்திரிக்கும் அதீதமான பிரமானுபவ
சொரூப-ரூப-சுபாவ-வியாபகமாகிய உயர் நான்கைப் (4 - ஜீவகாருண்யம், ஈசுவர பக்தி,
பாச வைராக்கியம், பிரமஞானம்) பெறலாம்" - என்கிறார், நம் பெருமான் அருள்
உரைநடையில் மிக அற்புதமாக.

இதுபோலவே,"கால்" - என்னும் சொல்லுக்கு நாம் சரியாகப் பொருள் காணல் வேண்டும்.
இங்கு, "கால்" - என்னும் சொல் வடிவிற்கு, எண் வடிவம் 1/4 ஆகும். இந்த எண்ணைத்
தமிழில் 'வ' -என்னும் வகரத்தால் குறிக்கின்றோம்.

அதாவது, கால் = 1/4 = வ

இங்கு, 'வ' - என்னும் வகரம், சிவத்தின் இயற்கை விளக்கமாகிய 'அருட்பெருஞ்ஜோதி' -
என்று நாம் அனைவரும் அறியவேண்டும்.

" சிகரமும் வகரமுஞ் சேர்தனி யுகரமும் அகரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி " -
என்ற அகவல் அருட்குறிப்பையும் அறிந்திடுவோமாக.

ஆகவே, "நான் அவர் கால்பிடித்துக் கொண்டேன்" - என்பதற்கு நாம் முறையாகப்
பொருள்கண்டால், "ஒழுக்கம் நிரம்பிக் கருணையே வடிவாக நாம் நிற்கும்போது,
எல்லாம்வல்ல திருவருட்சக்தியை நாம் இயல்பாகப் பெற்று, அருளறிவு விளக்கம்
பெறுகின்றோம் ." - என்பது, நமக்கு நன்கு புலனாகும்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32432
மதிப்பீடுகள் : 10703

View user profile

Back to top Go down

Re: அருட்பாடல்கள்..

Post by ayyasamy ram on Tue Mar 01, 2016 4:46 pmஅடுத்து, "மைபிடித்த விழிஉலகர்" - என்பது, அகவினத்தாரையே குறிக்கும்.

யார் இவர்கள்? தயவுடைய சுத்தஞானிகளே!

கண்ணுக்கு அழகு கண்-மை. அதபோலவே, ஆன்மாவிற்கு இயற்கை அழகு
எவையெனில்; கருணை, தயவு, அன்பு, உண்மை /சத்தியம் என்பன.

தமிழல் 'மை' - என்றால் 'பொய், மருள்' மற்றும் 'உண்மை, அருள்' - என்ற,
இந்த இரு வேறுபட்ட எதிர்பதங்களையும் அது குறிக்கும்.

ஆனால், மருளுக்கு ஒளி பொருந்திய விழியில்லை ஆகையால், இந்த அருட்பாவில்,
"மைபிடித்த விழிஉலகர் " - என்பது, 'உண்மைத் தயவொளியில் விழித்திருக்கும்
அகவினத்தாரையே குறிக்கும்' - என்று, அறிந்து இன்புறுவோமாக!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்றுவாழ்க!
வள்ளல் மலரடி வாழ்க! வாழ்கவே!

திருச்சிற்றம்பலம்
-
-------------------------

Srini
வாட்ஸப்- பகிர்வு
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32432
மதிப்பீடுகள் : 10703

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum