ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ரசாயனம் பூச்சு நிறைவு: வள்ளுவர் சிலையை இன்று முதல் பார்வையிடலாம்
 ayyasamy ram

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ஜாஹீதாபானு

மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன்
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 Dr.S.Soundarapandian

போதை ஏறிட்டா பொய் பேச வரமாட்டேங்குது!
 Dr.S.Soundarapandian

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 Dr.S.Soundarapandian

அவல் பக்கோடா!
 Dr.S.Soundarapandian

வாளிப்பான பெண்ணின் துருப்புச் சீட்டு ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

25 வயது மனநலமற்ற பொண்ணு ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

அவள் என்னைக் கரங்களால் அணைத்தபோது! (அயர்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

'மாநிலங்களில் மகளிர் ஆணையங்கள் செயல்படுகின்றவா
 ayyasamy ram

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் போட்டி
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

*'என் கடன் பணி செய்து கிடப்பதே'
 Dr.S.Soundarapandian

''தாய்மையின் உன்னதத்தை இந்தியாவில்தான் கண்டேன்'' - நெகிழும் புகைப்படக் கலைஞர்
 Dr.S.Soundarapandian

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

‛லாலு மகனை அறைந்தால் ரூ.1 கோடி பரிசு': இது அடுத்த சர்ச்சை
 ayyasamy ram

எகிப்து மசூதியில் பயங்கரவாதிகள் தாக்குதல்:
 ayyasamy ram

தமிழர் மதம்
 Meeran

ஒரே டிக்கெட்டில் மாநகர பஸ், மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம்
 ayyasamy ram

கல்கி 03.12.17
 Meeran

Malayalam magazine
 Meeran

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 pkselva

2 ரன்னில் ஆல் அவுட்: ஸ்கோரை பார்த்து அதிர்ந்த பிசிசிஐ!!
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த நேரத்தில் 4 விநாடி வித்தியாசம், ஜாதகக் கணிப்பு மற்றும் எதிர்காலப் பலன்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துமா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 25/11/17
 Meeran

காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மார்ச் 7, மகா சிவராத்திரி!

View previous topic View next topic Go down

மார்ச் 7, மகா சிவராத்திரி!

Post by krishnaamma on Sun Mar 06, 2016 10:35 am

மார்ச் 7, மகா சிவராத்திரி!'சிவராத்ர' என்பதையே, சிவராத்திரி என்கிறோம். 'ராத்ர' என்ற சொல்லுக்கு, 'உலகிலுள்ள எல்லாமும் செயலிழந்து நிற்பது' என்று பொருள். எனவே தான், உயிர்கள் செயலற்று உறங்கும் இரவுப் பொழுது, ராத்திரி எனும் பெயர் பெற்றது.

தீபாவளி மற்றும் கார்த்திகை தீபம் போன்ற நாட்களில், விளக்கேற்றி ஒளியை உண்டாக்குகிறோம்; ஆனால், சிவராத்திரியில் அந்த வழிபாட்டை செய்வதில்லை. கண்விழித்து சிவனை வழிபடுகிறோம். இப்படி கண்விழிக்க காரணம் என்ன?

காலையில் சூரியன் உதயமானதும், கண் விழித்து நம் அன்றாடக் கடமைக்கு தயாராகிறோம். எழுந்தது முதல் உறங்கச் செல்லும் வரை, நாம் செய்யும் செயல்கள் அனைத்தையும் நம்மால் உணர முடிகிறது. ஆனால், உறங்கி விட்டாலோ நம்மைச் சுற்றி என்ன நடக்கிறதென்றே தெரிவதில்லை. இந்நிலையிலும் நாம் மூச்சு விடுவதுடன், நம் உள் உறுப்புகள் செயல்படவே செய்கின்றன. அதைச் செய்பவர், சிவபெருமான்!
இறப்புக்கு சமமான தூக்கத்திலும், நம்மைக் காக்கும் அவனுக்கு, ஒருநாள் இரவாவது கண்விழித்து நன்றி சொல்ல வேண்டும் என்பதற்காகத் தான், சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்கிறோம்.

சிவராத்திரியன்று விழித்திருக்கும் போது, நேரம் செல்லச் செல்ல உடல் அசதியாகி, அப்படியே படுத்து விடலாமா என்று தோன்றும். வைராக்கியம் உள்ளவர்களால் மட்டும் தான் தொடர்ந்து கண்விழிக்க முடியும். மற்றவர்கள் தானாகவே படுக்கையில் சரிந்து விடுவர். மற்ற நாட்களில் அப்படியல்ல, 10:00 மணியானால் பாயைப் போட்டு சுகமாக தூங்கி விடுகிறோம். அந்த சுகமான தூக்கத்தை தருபவன் சிவன். அப்படியானால் அவன் எப்பேர்ப்பட்ட கருணையுள்ளவன்!

சிவராத்திரி குறித்த புராணக்கதை ஒன்று உண்டு. ஒரு சமயம், உலகம் அழிந்து, எங்கும் இருள் சூழ்ந்திருந்த அந்த வேளையில், சிவபெருமான் ஒருவரே செயலாற்றினார். அவரது துணைவியான பார்வதி தேவி, தன் பிள்ளைகளான உயிர்கள் மீண்டும் உயிர் பெற்று எழ வேண்டும் என, இரவு முழுவதும் விழித்து, சிவனை நோக்கி தியானம் செய்தாள். அவள் சிவ வழிபாடு செய்ததை நினைவு கூரும் விதமாக அமைந்த இரவே, சிவராத்திரி!

'இந்நாளில் விரதம் இருந்து, இரவில் நான்கு கால சிவ பூஜை செய்வோருக்கு, மங்களங்கள் யாவும் தந்து, நிறைவில் மேலான பதமும் தர வேண்டும்...' என, சிவனிடம் வேண்டினாள், பார்வதி தேவி. அவ்வாறே வரம் அளித்தார் சிவபெருமான்.

ராத்திரி என்ற சொல்லுக்கு, 'அளித்தல்' என்ற பொருளும் உண்டு. உயிர்களுக்கு மோட்சத்தை அளிப்பவர் சிவபெருமான். ராத்ர என்றால், பூஜித்தல் என்றும் ஒரு பொருள் உண்டு. சிவபெருமானை பூஜிக்கத் தகுந்த இரவே சிவராத்திரி!

இந்நாளில், உணவையும், உறக்கத்தையும் தவிர்க்க காரணம், உணவு என்பது நாம் செய்யும் வினைகள்; நல்வினை, தீவினை என எதைச் செய்தாலும் புண்ணிய - பாவங்களை அனுபவிப்பதற்காக நாம் மீண்டும் மீண்டும் பிறக்க நேரிடும். நல்வினைகளின் பயனை இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டால், அதன் பலன் நம்மைச் சேராது. ஆனால், இதற்கு மிக உயர்ந்த மனப்பக்குவமும், தியாக உணர்வும் வேண்டும். தீய வினைகளைச் செய்யவே கூடாது.

உறக்கம் என்பது, இந்த உலக வாழ்வு நிலையானது என்ற எண்ணத்தைக் குறிக்கிறது. சிவராத்திரியன்று விழித்திருப்பது ஏன் என்றால், 'இந்த வாழ்வு என்றாவது முடிந்து விடும்...' என்ற விழிப்புணர்வை பெறுவதற்கு தான். இதை உணர்ந்து, வாழும் காலம் வரை நல்லதைச் செய்து, அதன் பலனை சிவனுக்கே அர்ப்பணித்து, பிறப்பற்ற நிலைக்கு வித்திடுவோம்!

தி.செல்லப்பா


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: மார்ச் 7, மகா சிவராத்திரி!

Post by krishnaamma on Sun Mar 06, 2016 10:38 am

ஓம் நமச்சிவாய!................. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
எங்காத்தில் ஸ்படிக லிங்கம் இருந்தது, என் அப்பா அல்லது என் அம்மா அல்லது என் தம்பி, சிவராத்திரி அன்று 6 காலமும் குளித்துவிட்டு அபிஷேகம் செய்வா, ருத்திரம் , சமகம் tape இல்  போடுவோம் , அம்மா சளைக்காமல் நைவேத்தியத்துக்கு தயார் செய்வா. முக்கியமாய் சர்க்கரை வெள்ளிக் கிழங்கில் வெல்லம் போட்டு ஒரு ஸ்பெஷல் நைவேத்தியம் செய்வா புன்னகை..........ஹும்.....எல்லாம் அந்தக்கால நினைவுகளாகிப் போனது இப்போ !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: மார்ச் 7, மகா சிவராத்திரி!

Post by சிவனாசான் on Sun Mar 06, 2016 10:49 am

சிவாய நம ஓம் சிவாய நமஹ.....நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க........
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2734
மதிப்பீடுகள் : 986

View user profile

Back to top Go down

Re: மார்ச் 7, மகா சிவராத்திரி!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum