ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பச்சைப்பட்டாணி பனீர் ரைஸ்
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 T.N.Balasubramanian

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 பழ.முத்துராமலிங்கம்

18 புராணம்
 Sixmay

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 krishnaamma

அம்மா.
 krishnaamma

பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு
 krishnaamma

'ஸரிகமபதநி' - விளக்கம்
 krishnaamma

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 பழ.முத்துராமலிங்கம்

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 பழ.முத்துராமலிங்கம்

- பொடி வகைகள் - அவள் விகடன்
 krishnaamma

பித்தத்தை தடுக்கும் இஞ்சி தொக்கு செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க
 krishnaamma

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 krishnaamma

கலப்பை சனீஸ்வரர்!
 krishnaamma

2018 புத்தாண்டு பலன்கள்
 krishnaamma

ஆலிவ் ரிட்லி - சிறிய வகை ஆமைகள்
 ayyasamy ram

அவ்வையாரை தும்பிக்கையால் தூக்கி கைலாஸத்தில் விட்ட விநாயகர்!
 ayyasamy ram

பாதுகாப்பில்லாத பழநி! பக்தர்களே உஷார்!
 ayyasamy ram

கந்தனுக்கு அரோகரா...’ பழநி பாதயாத்திரை விரதம் தொடங்கியது!
 ayyasamy ram

நரியின் தந்திரம் - சிறுவர் கதை
 ayyasamy ram

தீ தின்ற உயிர் - கவிதை - மணிமாலா மதியழகன்
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 SK

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 SK

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
 SK

“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
 SK

ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு?
 SK

பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
 SK

தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை
 SK

கோவாவின் 'மாநில பானம்'
 SK

தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
 SK

குஜராத், இமாசலபிரதேசத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை
 ayyasamy ram

ஆயிரமாண்டு மர்மங்கள் நிறைந்த ஆலயம்
 பழ.முத்துராமலிங்கம்

இந்த வார சினி துளிகள்! –
 ayyasamy ram

மதுரை - திருச்செந்தூர் பயணிகள் ரயில் இன்று ரத்து
 ayyasamy ram

நான் இரசித்த பாடல்-தமிழா..
 மூர்த்தி

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 ManiThani

வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பதக்கப் பெண் லாவண்யா!

View previous topic View next topic Go down

வாழ்த்து பதக்கப் பெண் லாவண்யா!

Post by krishnaamma on Sun Mar 06, 2016 12:06 pmதமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய பட்டமளிப்பு விழாவில் 9 தங்கப் பதக்கங்கள் உட்பட 32 பதக்கங்களை அள்ளிச்சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் ஓர் இளம்பெண். அவர் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த லாவண்யா. மேடையில் 32 பதக்கங்களை வழங்க லாவண்யாவை அழைத்தபோது எழுந்த கரவொலியால் அந்தக் குளிரூட்டப்பட்ட அரங்கமே அதிர்ந்தது.

ஐந்து வயதில் தந்தையை இழந்தவர் லாவண்யா. கிராமச் சூழலில் தமிழ்மொழி வழிக் கல்வி பயின்றவர். கால்நடை மருத்துவக் கல்லூரிக்குச் சென்றபோது அங்கு நிலவிய முற்றிலும் புதுமையான சூழல் லாவண்யாவுக்கு தொடக்கத்தில் பிடிக்கவில்லை.

நகரச் சூழலில் படித்து, நுனி நாக்கில் ஆங்கிலம் உச்சரிக்கும் மாணவ, மாணவிகள் கிராமியச் சூழலில் வளர்ந்த லாவண்யாவை அலட்சியமாகப் பார்த்தனர். அவர்களது அலட்சியப் பார்வையை ஆச்சரியப் பார்வையாக மாற்ற வேண்டும் என வைராக்கியம் வைத்தார். அதன் விளைவு கால்நடை மருத்துவத்தில் சமீப ஆண்டுகளில் யாரும் செய்யாத சாதனையான 32 பதங்கங்களைக் குவித்துள்ளார்.

பதக்கம் வாங்கி மேடையை விட்டு இறங்கியதுமே தன் அம்மாவை அழைத்து பக்கத்தில் நிறுத்திக்கொண்ட லாவண்யாவில் செயல், தன் அத்தனை சாதனைகளுக்கும் தன் தாய்தான் அச்சாணி என்பதைச் சொல்லாமல் சொன்னது.

“என் அம்மாவோட ஊக்கமும் வழிகாட்டுதலும் இல்லைன்னா இந்த லாவண்யா இல்லை” என்கிற லாவண்யாவின் வார்த்தைகளில் அன்பின் ஈரமும் வெற்றியின் பெருமிதமும்!

32 பதக்கங்களை அள்ளிக் குவித்த லாவண்யாவை தமிழக ஆளுநர் ரோசய்யா, கால்நடைத் துறை அமைச்சர் சின்னையா, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மத்திய கால்நடை பராமரிப்புத் துறை ஆணையர் சுரேஷ்.ஷி.ஹோனப்பகோல் ஆகியோர் தலையில் கைவைத்து ஆசீர்வதித்தனர்.

லாவண்யாவின் பதக்கங்களுக்காக ஒரு பிரத்யேக ஆடை தயார் செய்து அதில் அனைத்து பதக்கங்களையும் பொருத்தி அணிவித்தது பல்கலைக்கழக நிர்வாகம். பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை அவரால் சுமக்க முடியவில்லை.

“என் அப்பாவோட இறப்புக்குப் பிறகு, என் அம்மா ராதாதான் எனக்கு எல்லாமே. அவங்க ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையா இருந்தாங்க. அதனால அவங்களுக்குக் கல்வியோட அருமை தெரியும். படிப்பு விஷயத்துல என்னை எப்பவும் ஊக்கப்படுத்திக்கிட்டே இருப்பாங்க.

நான் 6-ம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்புவரை எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்தேன். 2009-ல் நடைபெற்ற ப்ளஸ் டூ தேர்வில் விலங்கியல் பாடத்தில் மாநிலத்திலேயே நூற்று நூறு மதிப்பெண் எடுத்த ஒரே மாணவி நான்.

தொடரும்...................


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54450
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: பதக்கப் பெண் லாவண்யா!

Post by krishnaamma on Sun Mar 06, 2016 12:07 pm

அம்மாவுடன் லாவண்யா!என்னோட அம்மாவும் உறவினர்களும் நான் மருத்துவராகப் பணியாற்றணும்னு விரும்பினாங்க. ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை. எனக்குச் சிறு வயதிலிருந்தே விலங்குகள் மீது அதீத பாசம் உண்டு. வீட்டில் நாய், பூனை வளர்த்து வருகிறேன். அதனால் விலங்கின மருத்துவம் அல்லது விவசாயம் படிக்க வேண்டும் என விரும்பினேன்.

எனது முதல் விருப்பமான கால்நடை மருத்துவத்தில் கால்நடை பராமரிப்பு பிரிவைத் தேர்வு செய்தேன். நாமக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 5 ஆண்டு படிப்பில் சேர்ந்தேன்.

பாடங்கள் ஆங்கிலத்தில் நடத்தப்பட்டதாலும், அதற்கான புத்தகங்கள் ஆங்கிலத்தில் இருந்ததாலும் ஆரம்பத்தில் எனக்குக் கொஞ்சம் சிரமமாக இருந்தது” என்று சொல்லும் லாவண்யா, அதற்குப் பிறகு அதிக ஈடுபாட்டுடன் படிக்கத் தொடங்க, ஆங்கில மொழியறிவும் வசப்பட்டது. பிறகென்ன? வெற்றி மேல் வெற்றிதான்!

“நான் எப்பவும் புத்தகமும் கையுமாகத் திரியும் புத்தகப் புழு அல்ல. டி.வி., அரட்டை, விளையாட்டு என எதையும் தியாகம் செய்தது கிடையாது. வகுப்பில் பாடம் நடத்தும்போது மிகுந்த ஈடுபாட்டுடன் உள்வாங்கிக் கொள்வேன். பின்னர் கூடுதல் கவனம் எடுத்து பாடங்களை படிப்பேன் அவ்வளவுதான்.

தேர்வு முடிவில் ஒரு சில பதக்கங்கள் கிடைக்கும் என நினைத்தேன். ஆனால், இத்தனை பதக்கங்களை குவிப்பேன் என எதிர்பார்க்கவில்லை” என்று சொல்லும் லாவண்யா, கால்நடை மருத்துவம் படித்துவிட்டு அரசு வேலை வாய்ப்பை மட்டும் நம்பிக்கொண்டிருக்கத் தேவையில்லை என்கிறார்.

“தனியாக கிளினிக் வைத்து விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கலாம். தனியார் நிறுவனங்களிலும் எண்ணற்ற வேலை வாய்ப்புகள் உள்ளன. மனநிறைவு தரும் வகையில் வாழ்க்கையை நடத்த நிச்சயம் இந்தத் துறை உதவும்” என்கிறார் நம்பிக்கையோடு. திருத்தமாகத் தன் மகள் பேசுவதைப் பெருமிதத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறார் லாவண்யாவின் அம்மா ராதா!

நன்றி தி ஹிந்து


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54450
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: பதக்கப் பெண் லாவண்யா!

Post by krishnaamma on Sun Mar 06, 2016 12:09 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி தமிழ் மீடியம் மாணவர்களும் மிகப்பெரிய அளவில் சாதிக்கலாம் என்பதற்கு லாவண்யா ஒரு நல்ல முன்னுதாரணம் என்று சொல்லலாம் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54450
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: பதக்கப் பெண் லாவண்யா!

Post by ayyasamy ram on Mon Mar 07, 2016 6:36 am


-
எட்டிப் பற்றத் தெம்பெனும்
ஏற்றம் தன்னால் வாய்க்குமோ
கட்டி வைத்த தந்திரக்
காட்சி மட்டும் போதுமோ
தட்டிக் காக்க நட்புடன்
தாவி நிற்கும் கைகளின்
கொட்டும் அன்பும் சேர்ந்திடல்
கோடி ஊக்கம் நல்குமே!

- நாகினி.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33065
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: பதக்கப் பெண் லாவண்யா!

Post by krishnaamma on Mon Mar 07, 2016 10:24 am

நன்றி ராம் அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54450
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: பதக்கப் பெண் லாவண்யா!

Post by ராஜா on Mon Mar 07, 2016 11:36 am

வாழ்த்துகள் லாவண்யா


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

வாழ்த்து Re: பதக்கப் பெண் லாவண்யா!

Post by T.N.Balasubramanian on Mon Mar 07, 2016 8:38 pm

நல்லத் தகவல் .
இருப்பினும் ஈகரையில் ஏற்கனவே படித்த மாதிரி ஒரு நெருடல். ரிலாக்ஸ்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20653
மதிப்பீடுகள் : 7985

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: பதக்கப் பெண் லாவண்யா!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum