ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 ayyasamy ram

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

தலையில்பொடுகு அரிப்பு
 T.N.Balasubramanian

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

'மாதங்களில் நான் மார்கழி'
 SK

நன்றி
 SK

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 SK

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பெண்களை வருத்தும் பிங்க் வரி

View previous topic View next topic Go down

பெண்களை வருத்தும் பிங்க் வரி

Post by ayyasamy ram on Sat Mar 12, 2016 10:31 am


-
இங்கே மத்திய பட்ஜெட்டில் எது எதற்கெல்லாம் வரி போடுவார்கள்
என பதைபதைத்தே நம் பிப்ரவரி கழிந்தது. அதே நேரம், உலகம்
முழுவதும் பேசப்பட்ட ஹாட் டாபிக், ‘பிங்க் வரி’. ஓட்டுரிமையில்
துவங்கி லெக்கிங்ஸ் வரை பெண்ணுரிமைப் போராட்டங்கள் பல
கட்டங்களைத் தாண்டியிருக்கின்றன.
-
இந்தப் பெண்கள் தினத்தில் தீப்பிடித்திருக்கும் சப்ஜெக்ட்தான் இந்த
Pink Tax! அதென்ன பிங்க் வரி? இது அரசாங்கம் விதிக்கும் வரி
அல்ல. ஆனால் பெண்ணாய்ப் பிறந்ததற்காகவே ஒவ்வொருவரும்
கொடுத்தாக வேண்டிய தொகை. அதாவது, ஒரு ஆண் முடி வெட்டிக்
கொள்ள அரச மரத்தடியிலிருந்து ஹைஃபை பியூட்டி பார்லர் வரை
ஆப்ஷன்கள் நிறைய உண்டு.
-
சராசரியாக 100 ரூபாயில் ஒரு ஆண் முடி வெட்டிக்கொள்ள முடியும்.
ஆனால் பெண்கள் ஹேர் கட் செய்ய பார்லருக்குத்தான் போக வேண்டும்.
குறைந்தபட்சக் கட்டணமே 300 ரூபாய் ஆகும். சில ஆயிரங்களில்
கட்டணம் வசூலிக்கும் சலூன்களும் உண்டு. ஆக, ஆண்களைவிட
பெண்களிடம் இந்தச் சமூகம் 200 ரூபாய் அதிகம் கொள்ளையடிக்கிறதே...
அதுதான் பிங்க் வரி. பிங்க் என்பது பெண்களுக்கான நிறம் என்பதால்
இந்தப் பெயர்!
-


Last edited by ayyasamy ram on Sat Mar 12, 2016 10:32 am; edited 1 time in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33016
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: பெண்களை வருத்தும் பிங்க் வரி

Post by ayyasamy ram on Sat Mar 12, 2016 10:31 am

இப்படி முடிவெட்டுவதில் மட்டுமல்ல... உணவுப் பொருட்களில்,
ஊட்டச்சத்து பானங்களில், சில மருந்துகளில், மேக்கப் அயிட்டங்களில்
என அனைத்திலும் பெண்களுக்கென உருவாக்கப்படும் பிரத்யேகப்
பொருட்களின் விலை அதிகம். சமீபத்தில் இதுபற்றி ஆய்வு செய்த
நியூயார்க் டிபார்ட்மென்ட் ஆஃப் கன்ஸ்யூமர் அஃபயர்ஸ், ‘ஆண்களுக்கான
பொருட்களை விட பெண்களுக்கான அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள்
42 சதவீதம் வரை விலை அதிகமாக உள்ளன’ என அறிவித்துள்ளது.
-
ஒரு பேனாவில் கூட பிங்க் நிறத்தில் பூப்போட்ட பேனாக்கள்
பெண்களுக்கானதாக விளம்பரப்படுத்தப்பட்டு, அதிக விலைக்கு விற்கப்
படுகின்றன. இதையெல்லாம் பார்த்துக் கொதித்துப் போயிருக்கிறார்கள்
பெண்ணியவாதிகள்.
-
இதையெல்லாம் ‘கார்ப்பரேட் சதி’ என சொல்லி முஷ்டி உயர்த்தலாம்.
ஆனால் மற்ற மட்டங்களிலும் நிலை இதேதான். நார்த் வெஸ்டர்ன்
பல்கலைக்கழகம் ஒரு ஆய்வு நடத்தியது. வழியில் டூ வீலர் நின்று
விட்டதாக பதற்றத்துடன் ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும்
மெக்கானிக்குகள் பலருக்கும் போன் செய்யச் சொன்னார்கள். ஒரே வண்டி...
அதில் ஒரே மாதிரி பிரச்னை... நேரில் வந்து அதை சரி செய்து கொடுக்க
எவ்வளவு சார்ஜ் என ஆணும் பெண்ணும் தனித்தனியே கேட்டார்கள்.
மெக்கானிக்குகள் ஆணுக்குச் சொன்ன ரேட்டை விட பெண்ணுக்கு
10 சதவீதம் வரை அதிக தொகை சொல்லியிருக்கிறார்கள்.
-
‘பெண்களுக்கு வழங்கப்படும் சம்பளம் ஆண்களை விடக் குறைவு. ஆனால்,
கொள்ளையடிப்பது மட்டும் அதிகமா?’ என ஃபோரம்களில் காரம்
ஏற்றியிருக்கிறது இந்த விஷயம். ‘‘நம்ம ஊரில் பெண்கள் இதையெல்லாம்
ஃபீல் பண்ணியிருக்கிறோம். ஆனால், ‘பிங்க் வரி’ எனப் பெயர் வைத்துப்
போராடியதில்லை. அப்படி ஒரு விழிப்புணர்வு தேவைப்படும் காலகட்டம்
வந்துவிட்டதாகவே தோன்றுகிறது!’’ என்கிறார் பெண்ணியவாதியும்
ஆவணப்பட இயக்குநருமான கீதா இளங்கோவன்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33016
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: பெண்களை வருத்தும் பிங்க் வரி

Post by ayyasamy ram on Sat Mar 12, 2016 10:32 am


‘‘ஒரு டி-ஷர்ட் வாங்கப் போனால் கூட ஆண்களுக்கு 150, 200 ரூபாய்க்கு
எல்லாம் நல்ல டி-ஷர்ட்டே கிடைக்கிறது. ஆனால் பெண்களுக்கு மினிமம்
400 ரூபாய். இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இப்படி எல்லா
உடைகளிலும் பொருட்களிலும் பேதம், விலை வித்தியாசம் இருக்கிறது.
கொஞ்சம் அடர்த்தியான நிறம் என்றால் அது ஆண்களுக்கானது, லைட்
கலர்கள் எல்லாம் பெண்களுக்கானவை எனப் பிரிக்கிறார்கள். அதன்
விலையையும் உயர்த்தி விடுகிறார்கள்.
-
பெண்கள் என்றால் நளினமானவர்கள்,
மென்மையானவர்கள், பூக்களைத்தான் அவர்கள் விரும்ப வேண்டும் என்ற
பொதுப்புத்தியைப் பயன்படுத்திக் கொள்ளும் வியாபாரிகள் இவர்கள். முகப்பரு
ஆண்களுக்கும் வரும்; பெண்களுக்கும் வரும்... காலில் பித்த வெடிப்பு
ஆண்களுக்கும் வரும்; பெண்களுக்கும் வரும். ஆனால் இவற்றுக்கான கிரீம்
விளம்பரங்களில் ஆண்கள் வந்து பார்த்திருக்கிறீர்களா? ‘ஆணுடைய பாதம்
எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்... ஆனால், பெண்ணுடைய பாதம்
வெடிப்புகள் இன்றி பளபளவென இருக்க வேண்டும்... அப்போதுதான் அவள்
பெண்’ என இந்த விளம்பரங்கள் சட்டம் போடுகின்றன. எனவே பொதுப்
பொருட்களாக இருக்க வேண்டிய இவையெல்லாம் பெண்களுக்கான
பொருட்களாகிவிட்டன. விலையும் உயர்த்தி வைக்கப்படுகின்றன.
-
சிறு வயதிலிருந்தே ஒரு பெண் அழகாக இருக்க வேண்டும், தன்னை
அழகாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என வற்புறுத்தப்படுகிறாள். அந்த
வளர்ப்பும் பழக்கமுமே பெண்களை அழகுக்காக அதிகம் செலவு செய்ய
வைக்கிறது. பெண்கள் முடிவெட்டிக் கொள்ள அதிக தொகை தர
வேண்டியிருக்கிறது என்று சொல்லும்போதே அப்படி அதிக தொகை வாங்கும்
பியூட்டி பார்லர்களையும் பெண்கள்தான் நடத்துகிறார்கள் என்பதை நாம்
கவனத்தில் கொள்ள வேண்டும். பியூட்டிஷியன் ஆனால் நிறைய சம்பாதிக்கலாம்
என ஆசைப்பட்டே அதில் கால் பதிக்கிறார்கள் பலர். யாரேனும் இதில் இருந்து
விடுபட்டு, ஆண்களுக்கான சலூன் போல குறைந்த விலையில் பார்லர் நடத்த
முன்வர வேண்டும். அப்படி முன்வந்தால் இந்த நிலை கொஞ்சம் மாறலாம்!’’
என்கிறார் அவர். சென்னையில் நுகர்வோர் தொடர்பான பிரச்னைகள்
பலவற்றைக் கையில் எடுத்துப் போராடும் கன்ஸ்யூமர் அசோஸியேஷன் ஆஃப்
இந்தியா, இந்த பிங்க் வரி பற்றி என்ன நினைக்கிறது?
-
‘‘நாங்க இதுவரைக்கும் நுகர்வோர் பிரச்னையை இப்படி ஆண், பெண் எனப்
பிரிச்சுப் பார்த்ததில்லை. ஆனா, பெண்களுக்கான பிரத்யேகப் பொருட்கள் அதிக
விலைக்கு விற்கப்படுறதை உணர்ந்திருக்கோம். அதன் தரம் குறைவா
இருக்கறதைப் பற்றி ஆய்வு செய்திருக்கோம். பொதுவா பெண்கள் விலை அதிகமா
இருந்தா அது நல்ல பொருள்னு நினைக்கிறாங்க. அதைத்தான் இப்படிப்பட்ட
நிறுவனங்கள் பயன்படுத்திக்கிறாங்களோனு தோணுது. பெண்கள்னா அவங்களுக்கு
டெக்னிக்கல் விஷயங்கள் அதிகம் தெரியாதுங்கற நினைப்பும் இன்னொரு காரணம்.
அழகா தெரியிற விஷயம் நம்ம உடம்புக்கு ஆரோக்கியமானதான்னும் பெண்கள்
யோசிக்கணும். அதில் என்ன இருக்குனு ஆராய்ந்து பார்க்கணும். ஆண் பெண் பேதம்
இல்லாம நுகர்வோருக்கான விழிப்புணர்வு எல்லாருக்கும் வரும்போது, இந்தப்
பிரச்னைக்கும் நிச்சயம் தீர்வு கிடைச்சிடும்னு நம்புறேன்’’ என்கிறார், இந்த
அமைப்பின் தொடர்பு அதிகாரியான சோமசுந்தரம். அதுவரை பெண்கள் பிங்க்
டாக்ஸை அழுதுதான் ஆகவேண்டும் போல!
-
ஆண்களுக்கான பொருட்களை விட பெண்களுக்கான அன்றாடப் பயன்பாட்டுப்
பொருட்கள் 42 சதவீதம் வரை விலை அதிகமாக உள்ளன!’
-
-----------------------------
- கோகுலவாச நவநீதன்
குங்குமம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33016
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: பெண்களை வருத்தும் பிங்க் வரி

Post by krishnaamma on Sat Mar 12, 2016 12:42 pm

பெண்களுக்கு வழங்கப்படும் சம்பளம் ஆண்களை விடக் குறைவு. ஆனால்,
கொள்ளையடிப்பது மட்டும் அதிகமா?’ என ஃபோரம்களில் காரம்
ஏற்றியிருக்கிறது இந்த விஷயம். ‘‘நம்ம ஊரில் பெண்கள் இதையெல்லாம்
ஃபீல் பண்ணியிருக்கிறோம். ஆனால், ‘பிங்க் வரி’ எனப் பெயர் வைத்துப்
போராடியதில்லை. அப்படி ஒரு விழிப்புணர்வு தேவைப்படும் காலகட்டம்
வந்துவிட்டதாகவே தோன்றுகிறது!’’ என்கிறார் பெண்ணியவாதியும்
ஆவணப்பட இயக்குநருமான கீதா இளங்கோவன்.


அருமை அருமை அருமை........தேவைதான் இந்த போராட்டம் புன்னகை............ சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
-


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: பெண்களை வருத்தும் பிங்க் வரி

Post by ayyasamy ram on Sat Mar 12, 2016 1:08 pm


-
கீதா இளங்கோவன்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33016
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: பெண்களை வருத்தும் பிங்க் வரி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum