ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
 ayyasamy ram

மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
 ayyasamy ram

வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
 ayyasamy ram

மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
 ayyasamy ram

உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
 ayyasamy ram

வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
 ayyasamy ram

ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 T.N.Balasubramanian

In need of Antivirus Software
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ayyasamy ram

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ayyasamy ram

வணக்கம் நண்பர்களே
 ayyasamy ram

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

உணவே உணர்வு !
 SK

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

அரி சிவா இங்கிலையோ!
 SK

ஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
 krishnaamma

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....
 krishnaamma

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 krishnaamma

தினை மாவு பூரி!
 krishnaamma

காத்திருக்கிறேன் SK
 krishnaamma

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 krishnaamma

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 krishnaamma

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 SK

பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
 SK

இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
 ayyasamy ram

'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
 ayyasamy ram

5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 தமிழ்நேசன்1981

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

“வண்டியில 2 கோடி...” - தி.மு.க... நேர்காணல் சுவாரஸ்யங்கள்!

View previous topic View next topic Go down

“வண்டியில 2 கோடி...” - தி.மு.க... நேர்காணல் சுவாரஸ்யங்கள்!

Post by கார்த்திக் செயராம் on Tue Mar 15, 2016 1:31 pm

அ.தி.மு.க-வில் விருப்பமனு அளித்த 26 ஆயிரம் பேரில் ஐந்து பேரிடம் மட்டும் நேர்காணல் நடத்தினார் ஜெயலலிதா. ஆனால், தி.மு.க-வில் விருப்பமனு அளித்த அனைவரிடமும், தானே முன்னின்று நேர்காணல் நடத்தி முடித்துள்ளார் தலைவர் கலைஞர். அவரை நேராகச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்ததே மகிழ்ச்சிதான்” என்கிறார் நேர்காணலில் கலந்துகொண்ட தி.மு.க நிர்வாகி ஒருவர்.

மாவட்டவாரியாக அழைக்கப்பட்ட தேதியில் நேர்காணலுக்கு வந்திருந்தவர்கள், அறிவாலய வளாகத்தில் இருந்த பந்தலில் தொகுதிவாரியாக அமர வைக்கப்பட்டனர். கருணாநிதியின் அறையில் நேர்காணல் நடைபெற்றது. கருணாநிதி மையமாக அமர்ந்திருக்க, அவருக்கு இடதுபுறத்தில் ஸ்டாலினும், வலதுபுறத்தில் பேராசிரியர் அன்பழகனும், அவருக்கு அடுத்ததாக துரைமுருகனும், ஆர்.எஸ்.பாரதியும் அமர்ந்திருந்தனர். வெளியே பந்தலில் இருந்தவர்களில் ஆறு பேர் வீதம் உள்ளே அழைக்கப்பட்டனர். அவர்கள் கருணாநிதியின் அறைக்கு முன் இருந்த ஓர் அறையில் காத்திருக்க வைக்கப்பட்டு, ஒவ்வொரு நபராக வரிசைப்படி உள்ளே அனுப்பப்பட்டனர். இவர்களை பூச்சி முருகன், கு.க.செல்வம், உசேன் உள்ளிட்டோர் வரிசைப்படுத்தி உள்ளே அனுப்பிவைத்தனர். விண்ணப்பம் செய்திருந்தவரின் விருப்பமனுவினை ஸ்டாலின் வைத்திருந்தார். வந்தவர் இருக்கையில் அமர்ந்தவுடன், கருணாநிதியிடம் இருந்தே கேள்விகள் தொடங்கின. அவர் கேட்ட முதல் கேள்வி, “எந்தச் சமூகம் நீ?”, அடுத்ததாக, “எவ்வளவு செலவு செய்ய முடியும்?” என இரண்டு கேள்விகள் மட்டும் கேட்டார். கொஞ்சம் புதுமுகமாக இருப்பவர்களிடம், “கட்சிக்கு வந்து எத்தனை வருடங்கள் ஆகின்றன, என்ன பொறுப்பில் உள்ளீர்கள்?” என்ற கேள்விகளை எழுப்பினார். பலர் கருணாநிதியை சந்திக்க வேண்டும் என்ற ஆசையில் விருப்பமனு அளித்து இருந்தனர். அவர்கள், “எனக்கு சீட் தரவில்லை என்றாலும் பரவாயில்லை. எங்கள் மாவட்டச் செயலாளருக்குக் கொடுக்க வேண்டாம்” என்ற புகாரைப் பதிவுசெய்தனர்.நேர்காணலில் மு.க.ஸ்டாலினும் சில கேள்விகள் கேட்டார். அன்பழகன் யாரிடமும் எந்தக் கேள்விகளையும் கேட்கவில்லை. முகம் தெரிந்த சிலரிடம் மட்டும் அவர்களின் குடும்ப நிலவரங்களைக் கேட்டார். துரைமுருகன் விருப்பமனு அளித்தவர்களிடம், “உங்களைப் பற்றித் தெரியாதா? உங்களுக்கு வாய்ப்புக் கொடுத்திடலாம்” என நையாண்டி செய்துகொண்டிருந்தார். ஆர்.எஸ்.பாரதி தனது நோட்பேடில் நேர்காணலுக்கு வந்தவர்கள் கூறும் செலவுத் தொகையை மட்டும் குறிப்பெடுத்தார். தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் கருணாநிதி, “எவ்வளவு செலவு செய்ய முடியும்? எனக் கேட்க.. அந்தப் பெண் “ஒண்ணரை ரூபாய்” என்று சொன்னதும், ஆச்சர்யம் அடைந்த கருணாநிதி, “ஒண்ணரை ரூபாயை வைத்து என்ன பண்ண முடியும்” என திருப்பிக் கேட்டார். “தலைவரே, நான் ஒண்ணரைக் கோடின்னு சொல்ல வந்தேன்” எனக் கூறியதும், கருணாநிதி உட்பட அனைவரும் சிரித்துவிட்டனர்.

மற்றொரு நபர், “ரெண்டு கோடி செலவு செய்வேன்” என்றார். “இப்பவே அந்தத் தொகையைக் கட்ட முடியுமா?” என்று ஸ்டாலின் கேட்டவுடன், தனது டிரைவருக்கு செல்போனிலிருந்து மெசேஜ் செய்துள்ளார். டிரைவர் சூட்கேஸ் ஒன்றை எடுத்துக்கொண்டு அறை வாசலுக்கு வந்துவிட்டார். ஸ்டாலினிடம், “என் காரில்தான் சூட்கேஸில் பணத்தை வைத்திருந்தேன். டிரைவர் சூட்கேஸை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார்” எனக் கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். பல ‘சி’க்களை என்னால் செலவழிக்க முடியும் என்று கூறுபவர்களிடம் துரைமுருகன், “உனக்கு ஏது இவ்வளவு பணம், என்ன தொழில் பண்ற?” என்ற கேள்விகளால் குடைந்து எடுத்தார். நேர்காணலுக்கு வந்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முன்னணியினரிடம் கருணாநிதி, “உங்க ஏரியாவில் நமக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு, காங்கிரஸ் கூட்டணி பற்றி மக்கள் பேச்சு எப்படி இருக்கு?’’ என்ற விவரங்களையும் கேட்டுக்கொண்டார். திருப்பத்தூர் தொகுதிக்கு விருப்பமனு அளித்த எஸ்.எஸ்.தென்னரசு மகள் இளவரசியைப் பார்த்த கருணாநிதி, “எப்படி இருக்க?” என குடும்ப நிலவரங்கள் குறித்தும் விசாரித்துள்ளார்.காட்பாடி தொகுதி முறை வந்தபோது துரைமுருகனும் நேர்காணலில் கலந்துகொண்டார். அதேபோல், ஆர்.எஸ்.பாரதியும் ஆலந்தூர் தொகுதி நேர்காணலில் கலந்துகொண்டார். தலைவர்கள் தனக்கும் சீட், தனது வாரிசுக்கும் சீட் என வரக் கூடாது என தலைமை கடுமையாகக் கூறிவிட்டதால், ஐ.பழனிச்சாமி, துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் தங்களது வாரிசுகளைக் களம் இறக்க முடியாமல் போய்விட்டது. ஆற்காடு வீராசாமியின் மகன் டாக்டர் கலாநிதி அண்ணா நகர் தொகுதிக்கான நேர்காணலில் கலந்துகொண்டார். ஏழாம் தேதி இரவு சென்னை கிழக்கு மாவட்டத்துக்கு நேர்காணல் நடைபெற இருந்தது. கருணாநிதி சீக்கிரம் கிளம்பிய காரணத்தால் எட்டாம் தேதி காலை நடைபெற்றது. கொளத்தூர் தொகுதிக்கு ஸ்டாலின் மட்டுமே மனுசெய்து இருந்ததால், அவர் தனது இருக்கையில் இருந்து எழுந்து, வேட்பாளர் அமரும் இருக்கையில் வந்து அமர்ந்தார். அவரிடம் துரைமுருகன், “எவ்வளவு செலவு செய்வீர்கள்?” எனக் கேட்க, “தேவைக்குத் தகுந்தவாறு செலவு செய்வேன்” என்று ஸ்டாலின் பதில் அளித்தார். துரைமுருகன் சிரித்துக்கொண்டே அருகில் இருந்த அன்பழகனிடம், “நீங்கள் ஏதும் கேள்வி கேளுங்கள்” எனக் கூற அன்பழகன், சிரித்துக்கொண்டே மறுத்துவிட்டார்.

- அ.சையது அபுதாஹிர்
படங்கள்: சு.குமரேசன், ஆ.முத்துக்குமார்

அசத்திய கருணாநிதி!

விருப்பமனு அளித்த மகன் மு.க.ஸ்டாலினுக்கும் நேர்காணல் நடத்தி, தி.மு.க-வில் இன்னும் உட்கட்சி ஜனநாயகம் உயிர்ப்போடுதான் இருக்கிறது என்ற பிம்பத்தை அனைவரிடத்திலும் ஏற்படுத்திவிட்டார் கருணாநிதி. அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அறையில், கடந்த பிப்ரவரி 22-ம் தேதி கன்னியாகுமரி மாவட்ட தி.மு.க-வினரிடம் தொடங்கிய நேர்காணல், மார்ச் 8-ம் தேதி காலை ஸ்டாலினின் கொளத்துார் தொகுதிக்கு உட்பட்ட சென்னை கிழக்கு மாவட்டத்தோடு நிறைவடைந்தது.

இடையில் பிப்ரவரி 28-ம் தேதி முதல் மார்ச் 2-ம் தேதி வரை நான்கு நாட்கள் நேர்காணல் நடத்தப்படவில்லை. தி.மு.க-வில் குறுநில மன்னர்களாகச் செயல்படும் மாவட்டச் செயலாளர்களை மீறி நேர்காணலில் என்ன பேச முடியும் என்று தி.மு.க-வினர் புலம்பினர்.

எனவே, எந்த மாவட்டச் செயலாளரும் நேர்காணல் அறையில் அனுமதிக்கப்படவில்லை. காலை 9.30 மணிக்குத் தொடங்கிய நேர்காணல் மதியம் 12-30 மணி வரையும், பின்னர் 4-30 மணி முதல் 8.00 மணி வரையும் நடத்தப்பட்டது. 12 நாட்கள் நடைபெற்ற இந்த நேர்காணலில் ஸ்டாலின் மட்டும் ஒரே ஒரு நாள், உடல்நிலை சரியில்லாமல் வரவில்லை. ஆனால் கருணாநிதி அனைத்து நாட்களிலும் காலையும், மாலையும் தவறாமல் கலந்துகொண்டு அசத்திவிட்டார். தமிழகம் மற்றும் புதுவையில் 4,433 பேரிடம், நாள் ஒன்றுக்கு சராசரியாக 650 நபர்கள் வீதம் நேர்காணல் நடைபெற்றுள்ளது.

நன்றி விகடன்
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum