ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 SK

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 SK

'ஸரிகமபதநி' - விளக்கம்
 T.N.Balasubramanian

அம்மா.
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 SK

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 SK

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
 SK

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 T.N.Balasubramanian

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
 SK

ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு?
 SK

பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
 SK

தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை
 SK

கோவாவின் 'மாநில பானம்'
 SK

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 SK

தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
 SK

குஜராத், இமாசலபிரதேசத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை
 ayyasamy ram

ஆயிரமாண்டு மர்மங்கள் நிறைந்த ஆலயம்
 பழ.முத்துராமலிங்கம்

இந்த வார சினி துளிகள்! –
 ayyasamy ram

மதுரை - திருச்செந்தூர் பயணிகள் ரயில் இன்று ரத்து
 ayyasamy ram

நான் இரசித்த பாடல்-தமிழா..
 மூர்த்தி

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 ManiThani

வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
 Meeran

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பொள்ளாச்சி பண்ணை வீட்டில் சிறைவைக்கப்பட்ட ஓ.பி.எஸ்?! -ஜெயலலிதாவின் அதிரடி மூவ்

View previous topic View next topic Go down

பொள்ளாச்சி பண்ணை வீட்டில் சிறைவைக்கப்பட்ட ஓ.பி.எஸ்?! -ஜெயலலிதாவின் அதிரடி மூவ்

Post by கார்த்திக் செயராம் on Fri Mar 18, 2016 6:30 pm

இன்றைக்குக் காலையில் பொள்ளாச்சியில்தான் பொழுது விடியும் என்று ஓ.பி.எஸ் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். சட்டமன்ற சீட் பேரத்தின் பின்னணியில் சமீபநாட்களாக நடக்கும் அதிரடி வேட்டைகள் ஓ.பி.எஸ் கூடாரத்தை கலங்கடித்துவிட்டது. தற்போது பொள்ளாச்சியில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் ஓ.பி.எஸ் சிறை வைக்கப்பட்டிருக்கிறாராம்!

சமீபநாட்களாக, நிதியமைச்சர் ஓ.பி.எஸ்ஸின் நெருங்கிய வட்டாரங்களை தேடித் தேடி வேட்டையாடி வருகிறது மத்திய குற்றப் பிரிவு காவல்துறை. இதுவரையில், ஓ.பி.எஸ்ஸுக்கு நெருக்கமான நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓ.பி.எஸ்ஸுன் நெருங்கிய நண்பர் சீனி கந்தசாமியை ஏற்கெனவே மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர் கொடுத்த தகவலின் பேரில் விருதுநகர் சுந்தரபாண்டியனைக் கைது செய்திருக்கிறார்கள். முன்னதாக, போயஸ் கார்டனின் ஊழியர் ரமேஷ், சிவகுமார், சுற்றுலாத் துறை அமைச்சர் சண்முகநாதனின் உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ஓ.பி.எஸ்ஸின் பரிவர்த்தனைகள் அனைத்தும் ஜெயலலிதாவின் கவனத்துக்கு உடனுக்குடன் கொண்டு செல்லப்படுகிறது. " யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யம் பார்க்க வேண்டாம். ஒட்டுமொத்த நெட்வொர்க்கின் செயல்பாடுகளும் வந்தாக வேண்டும்" என அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறார் ஜெயலலிதா. இதனால், இதுவரையில் ஓ.பி.எஸ் தயவோடு கோலோச்சி வந்த அமைச்சர்களும் நடுக்கத்தில் உள்ளனர். ' சீட் கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை. அம்மாவின் கோபப் பார்வைக்கு ஆளாகாமல் இருந்தால் போதும்' என கோவில் கோவிலாக பூஜை செய்து வருகிறார்கள்.

ஆர்.எஸ்.முருகன். நெல்லை மாவட்டத்தின் முதன்மையான கான்ட்ராக்டர். அந்த மாவட்டத்தில் உள்ள 120 ஒப்பந்ததாரர்களும் ஆர்.எஸ்.முருகனின் கண்ணசைவுக்குக் கட்டுப்பட்டுவர். இவர் நாங்குநேரி தொகுதியின் அ.தி.மு.க செயலாளராகவும் இருக்கிறார். ஓ.பி.எஸ்ஸுக்கு ஆல் இன் ஆலாக இருந்து வந்த முருகன், இப்போது தலைமறைவாகிவிட்டார். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களில் முருகனின் திருவிளையாடல்கள் அதிகம். தான் எடுக்கும் வேலைகளை சப் காண்ட்ராக்ட் மூலம் தனக்குக் கீழ் உள்ளவர்களுக்கு வேலை கொடுப்பார். இதற்காக, 30 முதல் 40 சதவீத கமிஷனை ஓ.பி.எஸ்ஸிடம் சேர்க்கும் பணி முருகனுடையது. சட்டமன்றத் தேர்தலில் நாங்குநேரி, பாளை சட்டமன்றத் தொகுதிகளில் சீட் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார் முருகன். சில மாதங்களுக்கு முன்பு குமாரசாமி என்ற சப் காண்ட்ராக்டர் முருகன் மீது புகார் கொலை மிரட்டல் புகார் ஒன்றைக் கொடுத்தார். முருகனின் செல்வாக்கை அறிந்த போலீஸார், புகாரைக் கிடப்பில் போட்டுவிட்டனர். ஓ.பி.எஸ்ஸின் பரிவர்த்தனையில் முருகன் இருப்பதை அறிந்த போலீஸார், முருகன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொடும் காயம் விளைவித்தல், அவதூறாகப் பேசுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முருகனின் இருப்பிடத்தைக் கண்டறிய பாளை இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தீவிரமாகத் தேடி வருகிறார். முருகன் பிடிபட்டால் ஓ.பி.எஸ்ஸின் நிதி பரிவர்த்தனை தொடர்பான அனைத்து விபரங்களும் தெரிய வரலாம் என்பதால், சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாரும் வலைவீசி தேடி வருகின்றனர்.

அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால், அதிர்ந்து போயிருக்கிறார் ஓ.பி.எஸ். இதன் உச்சகட்டமாக கைது நடவடிக்கை வரை போகலாம் என்பதால் அவரது கூடாரமே அதிர்ந்து போயிருக்கிறது. இதற்குக் காரணமாக, நடந்த சில அபசகுன சம்பவங்களை பட்டியல் போட்டார் ஓ.பி.எஸ் நண்பர் ஒருவர். தேனி, பழனிசெட்டிப்பட்டி அதிமுக தலைமைக் கழக கட்டிட திறப்பு விழாவில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் ஒருவர் பலியானார். பெரியகுளம் தொகுதியில் நடந்த நலத்திட்ட விழாவில் ஜெயலலிதா படம் சரிந்து விழுந்தது, போடி திருமண விழாவில் மின்சார ஒயர் அறுந்து முத்துராஜ் என்பவர் படுகாயம் அடைந்தது என தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களால் அதிர்ந்து போயிருக்கிறார் ஓ.பி.எஸ்.

சட்டமன்ற தேர்தல் சீட்டுக்காக வாங்கப்பட்ட பணம், 5 ஆண்டுகளில் குவிந்த பணம், வாங்கிக் குவித்த சொத்துக்கள், பினாமிகளின் விவரம் என அனைத்து புள்ளிவிபரங்களும் ஜெயலலிதா வசம் சென்றிருக்கிறதாம். இவை அனைத்தையும் கைப்பற்றும் நடவடிக்கையில் கார்டன் இறங்கியிருக்கிறது. இதையடுத்து, 'விசாரணை முடியும் வரையில் வெளியில் எங்கும் செல்ல வேண்டாம்' என ஓ.பன்னீர்செல்வத்திற்கு கார்டன் உத்தரவிட்டிருக்கிறது. இந்நிலையில், பொள்ளாச்சியில் சசிகலாவின் உறவினரான மருத்துவர் ஒருவருக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார் ஓ.பி.எஸ். கார்டனுக்கு நெருக்கமான மன்னார்குடி உறவினர்களும், சில காவல்துறை அதிகாரிகளும் ஓ.பி.எஸ்ஸிடம் தீவிர விசாரணையைத் தொடங்கிவிட்டனர். முடிவில், ஓ.பி.எஸ் வாங்கிக் குவித்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம். உச்சகட்டமாக, ஓ.பி.எஸ் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் அதிரடிக்கிறது.


நன்றி விகடன்.
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: பொள்ளாச்சி பண்ணை வீட்டில் சிறைவைக்கப்பட்ட ஓ.பி.எஸ்?! -ஜெயலலிதாவின் அதிரடி மூவ்

Post by M.Jagadeesan on Fri Mar 18, 2016 7:48 pm

மூதறிஞர் ராஜாஜி ஒருமுறை காரில் பயணம் செய்துகொண்டு இருந்தார்; அப்போது அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் . அருகில் அவருடைய உதவியாளர் . ராஜாஜிக்குக் காபி குடிக்கவேண்டும்போல இருந்தது. அவர் ஒரு காபி பிரியர் . டிரைவரிடம் ஒரு ஓட்டலுக்கு அருகில் காரை நிறுத்தச் சொன்னார் . உதவியாளர் ஓட்டலுக்குச் சென்று காபி ஆர்டர் செய்தார் . காபி வந்தது . அதற்கான பணத்தை , (அப்போது காபியின் விலை ஒன்றரை அணா ) உதவியாளர் கொடுத்தார் . காபி குடித்தபின் அந்த ஒன்றரை அணாவை , ராஜாஜி கொடுத்தபோது உதவியாளர் வாங்க மறுத்தார் . வாங்க மறுப்பது தவறு என்று சொல்லி ராஜாஜி கடிந்து கொண்டார் . பிறகே அந்தப் பணத்தை உதவியாளர் வாங்கிக்கொண்டார் .

ராஜாஜிக்குப் பிறகு காமராஜர் முதலமைச்சர் ஆனார் . அவருடைய சொந்த ஊரான விருதுநகரில் , அவருடைய வீட்டில் , அவருக்குத் தெரியாமல் குடிநீர் இணைப்புக் கொடுத்துவிட்டார்கள் . இதையறிந்த காமராஜர் கொதித்துப் போய்விட்டாராம். 'காமராஜர் அவருடைய வீட்டுக்கு மட்டும் குடிநீர் இணைப்புக் கொடுத்துக்கொண்டார் " என்று நாலுபேர் பேசக்கூடாது என்பதற்காகக் கொடுத்த இணைப்பைத் துண்டிக்கச் செய்தாராம் .

இருவருடைய ஆட்சியிலும் , மந்திரிகள் லஞ்சம் வாங்கினார்கள் என்ற பழிச்சொல்லே வந்ததில்லை !

தலை ஆடாமல் இருந்தால் வால் ஆடாது; தலை ஆடினால் வாலும் ஆடத்தான் செய்யும் !

இதுதான் தற்போது நடக்கின்ற சம்பவங்களுக்குக் காரணங்கள் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4778
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: பொள்ளாச்சி பண்ணை வீட்டில் சிறைவைக்கப்பட்ட ஓ.பி.எஸ்?! -ஜெயலலிதாவின் அதிரடி மூவ்

Post by T.N.Balasubramanian on Fri Mar 18, 2016 9:25 pm

அது ஒரு பொற்காலம் ,Jagadeesan
நினைத்து மகிழமுடியுமே அன்றி ,
இனி வருமோ அது போல் ஒருநாள் என
ஏங்கத்தான் முடியும் இனிவரும் நாள்களில் ,

ராஜாஜி /காமராஜர் /அறிஞர் அண்ணாவுடன்
ஊழலற்ற அரசு முடிவுக்கு வந்துவிட்டன .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20650
மதிப்பீடுகள் : 7975

View user profile

Back to top Go down

Re: பொள்ளாச்சி பண்ணை வீட்டில் சிறைவைக்கப்பட்ட ஓ.பி.எஸ்?! -ஜெயலலிதாவின் அதிரடி மூவ்

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Fri Mar 18, 2016 10:42 pm

அமேரிக்கா முறையில் ஒரு குறிப்பிட்ட தகுதி உள்ள பதவிகளை யாரும் இரண்டு முறைக்கு மேல் இருக்க கூடாது அரசியலை விட்டு ஒதுங்கி செல்லவேண்டும் என வந்தால் ஒழிய இந்த கொள்ளைக்காரர்களை இந்திய அரசியலை விட்டு ஒதுக்கவே முடியாது

அதிலும் இந்தியாவில் கொள்ளைக்கார அரசியல்வாதிகள் தமிழகத்தில் தான் அதிகம் உள்ளனர்

இவைகளுக்கு பின்னணியில் இடும்பர் கொடும்பர் அசுர ஆவிகள் உள்ளன இவைகளை அடக்குவேன் என முருகன் வாக்களித்துள்ளார் அதற்கு ஒரு அவதாரம் வரவேண்டும்
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: பொள்ளாச்சி பண்ணை வீட்டில் சிறைவைக்கப்பட்ட ஓ.பி.எஸ்?! -ஜெயலலிதாவின் அதிரடி மூவ்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum