ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

டாடா மின்சார நானோ கார்..!
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 ayyasamy ram

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இனிய தீபாவளி
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 M.Jagadeesan

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
 ayyasamy ram

கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..!
 ayyasamy ram

கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
 ayyasamy ram

ஆத்தாடி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 Dr.S.Soundarapandian

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
 ayyasamy ram

தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)
 Dr.S.Soundarapandian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 Dr.S.Soundarapandian

அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அடடே - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

அன்பானவளே! (காசுமீரப் பாடல்)
 Dr.S.Soundarapandian

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

உன் தங்கையை கல்யாணம் பண்ணியிருக்கலாம்டி...!!
 Dr.S.Soundarapandian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 Dr.S.Soundarapandian

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 Dr.S.Soundarapandian

அப்பப்பா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

தீபாவளி என்றால் என்ன?
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 M.Jagadeesan

நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
 ayyasamy ram

மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீக்கு 30 பேர் பலி
 ayyasamy ram

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 kuloththungan

ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
 ayyasamy ram

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 TIMPLEKALYANI

6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
 ayyasamy ram

கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
 T.N.Balasubramanian

இன்றைய செய்தி(16.10.2017)
 thiru907

தமிழ் புக்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கீதையில் மனித மனம்

View previous topic View next topic Go down

கீதையில் மனித மனம்

Post by அபிராமிவேலூ on Thu Nov 19, 2009 12:25 pm

கீதையில் மனித மனம்




‘கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்’ நூலிலிருந்து
அர்ஜுனனுக்குப் பரந்தாமன் உபதேசித்தது பகவத் கீதை.
மனிதனின் மனதைப் பற்றி அர்ஜுனனுக்கும் கண்ணனுக்கும் வாக்கு வாதம் நடக்கிறது.
கண்ணன் சொல்கிறான் :
“அர்ஜுனா, எவன் தன்னையே உதாரணமாகக் கொண்டு இன்ப – துன்பங்கள்
இரண்டையும் சமமாகப் பார்க்கிறானோ, அந்த யோகிதான் சிறந்தவன் என்பது துணிவு.”
அர்ஜுனன் கேட்கிறான் :
“மதுசூதனா! உன்னால் கூறப்படும் சமநோக்கத்துடன் கூடிய யோகத்தின்
ஸ்திரமான நிலையை என்னால் உணர முடியவில்லை. காரணம், உள்ளம் சஞ்சலமுடையது.”
“கிருஷ்ணா! மனித மனம் சஞ்சலமுடையது; கலங்க வைப்பது; வலிமையுடையது; அடக்க முடியாதது; காற்றை அடக்குவது போல் அதை அடக்குவது கடினமானது,”
பகவான் கூறுகிறான் :
“தோள் வலி படைத்த காண்டீபா! மனம் அடக்க முடியாதது; சலனமடைவது; இதில்
ஐயமில்லை. ஆனால் குந்தியின் மகனே! பழக்கத்தால் அதை அடக்க முடியும்.”
இதையே ராமகிருஷ்ண பரமஹம்சர் இப்படிக் கூறுகிறார் :
“கீழே கொட்டிய கடுகைப் பொறுக்கி எடுப்பது வெகு சிரமம். அதுபோலப் பல
திசைகளிலும் ஓடும் மனத்தை ஒருமைப்படுத்துவது எளிதன்று. ஆனால்
வைராக்கியத்தால் அதைச் சாதித்துவிட முடியும்.”
- மனித மனத்தின் சலனங்களை, சபலங்களை, எப்படி அடக்குவது என்பதுபற்றி
பரந்தாமன் அர்ஜுனனுக்கு உபதேசித்த பகுதி, பகவத் கீதையின் தியானயோகமாகும்.
சகல காரியங்களுக்கும் – இன்பத்திற்கும் துன்பத்திற்கும், நன்மைக்கும்
தீமைக்கும், இருட்டுக்கும் வெளிச்சத்திற்கும், பாவத்திற்கும்,
புண்ணியத்திற்கும், அன்புக்கும் வெறுப்புக்கும் மனமே காரணம்.
மனத்தின் அலைகளே உடம்பைச் செலுத்துகின்றன.
பகுத்தறிவையும் மனம் ஆக்ரமித்துக் கொண்டு வழி நடக்கிறது.
கருணையாளனைக் கொலைகாரனாக்குவதும் மனம்தான். கொலைகாரனை ஞானியாக்குவதும் மனம்தான்.
அது நோக்கிச் செல்லும் தடங்களின் அனுபவத்தைப் பெற்றுப் பேதலிக்கிறது. அப்போதுதான் அறிவு வேலை செய்கிறது.
எந்த அனுபவங்களையும் கொண்டு வருவது மனம் தான்.
இது சரி, இது தவறு என்று எடை போடக்கூடிய அறிவை, மனத்தின் ராகங்களை அழித்துவிடுகின்றன.
உடம்பையும் அறிவையும் மனமே ஆக்ரமித்துக் கொள்வதால், மனத்தின் ஆதிக்கத்திலேயே மனிதன் போகிறான்.
என்ன இந்த மனது?
காலையில் துடிக்கிறது. மதியத்தில் சிரிக்கிறது. மாலையில் ஏங்குகிறது. இரவில் அழுகிறது.
“இன்பமோ, துன்பமோ எல்லாம் ஒன்றுதான். நடப்பது நடக்கட்டும்.” என்றிருக்க
மனம் விடுவதில்லை. ஒரே சீரான உணர்ச்சிகள் இந்த மனத்துக்குத் தோன்றுவதில்லை.
எவ்வளவு பக்குவப்பட்டாலும் மனத்தின் அலைகளாலேயே சஞ்சலிக்கிறான்.
கடிவாளம் இல்லாத இந்த மனக் குதிரையை அடக்குவது எப்படி?
“வைராக்கியத்தால் முடியும்” என்கிறது கீதை
avatar
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2492
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: கீதையில் மனித மனம்

Post by nandhtiha on Thu Nov 19, 2009 4:10 pm

வணக்கம்
ந்ல்ல பதிவினைத் தந்த சகோதரிக்கு நன்றி. நான் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் காலை எனது பேராசிரியர் கூறியதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

பாரதப் போர் முடிவடைந்து விட்டது. தர்ம புத்திரனின் வேள்வியும் முற்றுப் பெற்று விட்டது. துவராபதியில் கண்ணன் ஒரு சோலையில் வாடிய முகத்துடன் அமர்ந்திருக்கிறான். கண்ணனுடைய உயிர்த்தோழர் உத்தவர் வருகிறார். அவர் ஒரு பிறவிக் குருடர்.

அவருக்கும் கண்ணனுக்கும் நடந்த உரையாடல்

உத்தவர்: கண்ணா! எவ்வளவு துயர் மிக்க சம்பவம் நடந்து விட்டது! துரோணர்,பீஷ்மர்,கர்ணன்,அபிமன்யு,கடோத்கஜன் போன்ற மாவீரர்கள் மாண்டுவிட்டனரே. இதைத் தடுத்து நிறுத்தி இருக்கக் கூடாதா கண்ணா ?

கண்ணன்: என்னால் முடியவில்லையே உத்தவா? நான் என்ன செய்வது?

உத்தவர்: என்ன? உன்னால் முடியவில்லையா?

கண்ணன்: ஆம். என்னால் முடியாமல் போய் விட்டது.

உத்தவர்: கண்ணா! விளக்கமாகச் சொல்வாயா?

கண்ணன்: உத்தவா! கவனமாகக்கேள்! நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய் இது பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையில் நடந்த போர் என்று. அது உண்மையன்று. இது எனக்கும் சகுனிக்கும் நடந்த
போர்.

எல்லாம் சூதாட்டத்திலே தானே ஆரம்பமாயிற்று? துரியோதனன் தனக்குப் பதிலாகத் தன் மாமன் சகுனி ஆடுவான் என்று சொன்ன பொழுது தருமன் என்ன செய்திருக்க வேண்டும். தனக்குப் பதிலாகக் கண்ணன் ஆடுவான் என்று சொல்லி இருக்க வேண்டாமா? செய்ய வில்லையே? கண்ணா காப்பாற்று என்றாவது கேட்டிருக்கலாமல்லவா? திரெளபதிக்கு உதவவில்லையா? அக்ஞாத வாசத்தின் போது வந்த துர்வாசர் கோபத்திலிருந்து அவர்களைக் காப்பாற்ற எச்சிற் சோற்றினை நான் உண்ண வில்லையா? அவை போகட்டும். தம்பிகளை வைத்து ஆடினான். தாரத்தை வைத்து ஆடினான். நாட்டை வைத்து ஆடினான், அப்பொழுது கூட என் நினைவு வரவில்லையே. கண்ணனை வைத்து ஆடுகிறேன் என்று ஒரு சொல் சொல்லி இருந்தாலும் கூட அந்தச் சதுரங்கக் காயகளுக்குள் புகுந்து காப்பாற்றி இருப்பேனே. செய்ய வில்லையே. இப்பொழ்து கூறு உத்தவா! என் மேலென்ன தவறு?

இது என்னுடைய பேராசிரியர் கூறியது. ஆதார பூர்வம் உள்ளதோ இல்லையோ தெரியாது. ஆனால் நல்லதொரு உண்மை உள்ளே புதைந்து இருக்கிறது அதனால் பதிவு செய்தேன்.
அன்புடன்
நந்திதா


Last edited by nandhtiha on Thu Nov 19, 2009 5:24 pm; edited 1 time in total

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1590
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: கீதையில் மனித மனம்

Post by தாமு on Thu Nov 19, 2009 4:53 pm

அபி நல்ல தகவல்... நந்திதா அக்கா நல்ல விளக்கம்.... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

நன்றி அபி, அக்கா.... [You must be registered and logged in to see this image.]
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: கீதையில் மனித மனம்

Post by அபிராமிவேலூ on Thu Nov 19, 2009 4:57 pm

மிகவும் உண்மையான கருத்து உண்மையில் எந்த ஒரு செயலையும் செய்யும் பொழுது ஒரு நம்பிக்கையுடன் செய்ய வேண்டும் நன்றி அக்கா
avatar
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2492
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum