ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 SK

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 SK

'ஸரிகமபதநி' - விளக்கம்
 T.N.Balasubramanian

அம்மா.
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 SK

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 SK

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
 SK

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 T.N.Balasubramanian

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
 SK

ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு?
 SK

பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
 SK

தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை
 SK

கோவாவின் 'மாநில பானம்'
 SK

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 SK

தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
 SK

குஜராத், இமாசலபிரதேசத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை
 ayyasamy ram

ஆயிரமாண்டு மர்மங்கள் நிறைந்த ஆலயம்
 பழ.முத்துராமலிங்கம்

இந்த வார சினி துளிகள்! –
 ayyasamy ram

மதுரை - திருச்செந்தூர் பயணிகள் ரயில் இன்று ரத்து
 ayyasamy ram

நான் இரசித்த பாடல்-தமிழா..
 மூர்த்தி

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 ManiThani

வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
 Meeran

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அம்பலம்! வெளிநாட்டில் பணம் பதுக்கிய தலைவர்களின் பெயர்...

View previous topic View next topic Go down

அம்பலம்! வெளிநாட்டில் பணம் பதுக்கிய தலைவர்களின் பெயர்...

Post by ayyasamy ram on Tue Apr 05, 2016 2:33 pm


-
பாரீஸ்:
வெளிநாடுகளில், போலி நிறுவனங்களின் பெயரில்,
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்,
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் உட்பட, பல்வேறு
உலகத் தலைவர்கள், கோடிக்கணக்கில் பணத்தை
பதுக்கி வைத்துள்ள அதிர்ச்சி தகவல் அம்பலமாகி
உள்ளது.
-
'பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரில் வெளியாகியுள்ள,
இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளவர்கள் பட்டியலில்,
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகை
ஐஸ்வர்யா ராய் உட்பட, 500 இந்தியர்களின் பெயரும்
இடம்பெற்றுள்ளன.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33052
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: அம்பலம்! வெளிநாட்டில் பணம் பதுக்கிய தலைவர்களின் பெயர்...

Post by ayyasamy ram on Tue Apr 05, 2016 2:33 pm


-
சுவிட்சர்லாந்து போன்ற சில ஐரோப்பிய நாடுகளில்
வரிச்சலுகை கிடைப்பதால், அந்நாட்டு வங்கிகளில்
பலர் முதலீடு செய்து வந்தனர்; குறிப்பாக கறுப்புப்
பணம், இவ்வாறு பதுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், போலியான பெயரில் நிறுவனங்களை
உருவாக்கி அதில் முதலீடு செய்வது, போன்ற
மோசடி நடக்கிறது. மத்திய அமெரிக்க நாடான
பனாமாவை தலைமையிடமாக வைத்து செயல்படும்,
'மோசக் பொன்சிகா' என்ற சட்ட நிறுவனம், இது
போன்ற மோசடியை மிகப்பெரிய அளவில் செய்து
வருவது தற்போது அம்பலமாகி உள்ளது.

இந்த நிறுவனத்துக்கு, உலகின் பல்வேறு நாடுகளில்
கிளைகள் உள்ளன.
ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி, போலியான
பெயரில் உள்ள நிறுவனத்தின் இயக்குனராக பதிவு
செய்து கொள்ளலாம். அந்த நிறுவனத்தின் பெயரில்
வங்கிகளில் பணத்தை முதலீடு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்
தங்களுடைய பணத்தை பதுக்கி வைத்துக் கொள்ள,
இந்த நிறுவனம் உதவி வருகிறது.

இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த, 1.15 கோடி
பக்கங்கள் அடங்கிய ஆவணங்கள் தற்போது
வெளியாகியுள்ளன. போலி நிறுவனங்களில், உலக
தலைவர்கள் மற்றும் பிரபலங்கள், முதலீடு செய்துள்ளது
தெரிய வந்துள்ளது.

இந்த மோசடியை, 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில
பத்திரிகை உட்பட, சர்வதேச புலன் விசாரணை
பத்திரிகையாளர் சங்கத்தைச் சேர்ந்த, உலகெங்கும்
உள்ள,100க்கும் மேற்பட்ட பத்திரிகைகளைச் சேர்ந்த
நிருபர்கள் அலசி ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர்.

இந்த மோசடியை அம்பலப்படுத்திய முயற்சிக்கு,
'பனாமா பேப்பர்ஸ்' என்று பெயரிடப்பட்டு உள்ளது.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33052
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: அம்பலம்! வெளிநாட்டில் பணம் பதுக்கிய தலைவர்களின் பெயர்...

Post by ayyasamy ram on Tue Apr 05, 2016 2:33 pm


பனாமா பேப்பர்ஸ் என்றால் என்ன?

'மோசக் பொன்சிகா'என்ற சட்ட நிறுவனம்,
சர்வதேச அளவில் இந்த மோசடியை செய்து வருகிறது.
பனாமா நாட்டில் உள்ள அதன் தலைமையகத்தில்
இருந்து இந்த மோசடி குறித்த ஆவணங்கள்
வெளியானதால், பனாமா பேப்பர்ஸ் என்று அழைக்கப்
படுகிறது.

அடையாளம் தெரியாத ஒருவர் அளித்த இந்த
ஆவணங்கள், முதலில் ஜெர்மனியைச் சேர்ந்த
பத்திரிகைக்கு கிடைத்தது. அதைத் தொடர்ந்து,
சர்வதேச புலன் விசாரணை பத்திரிகையாளர்
சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்து, கடந்த எட்டு
மாதங்களாக ஆய்வு செய்து பெயர் பட்டியலை
வெளியிட்டுள்ளனர்.

கடந்த, 40 ஆண்டுகளாக, உலகெங்கும், 2.14 லட்சம்
நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள்குறித்த
விவரம்வெளியாகியுள்ளது.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33052
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: அம்பலம்! வெளிநாட்டில் பணம் பதுக்கிய தலைவர்களின் பெயர்...

Post by ayyasamy ram on Tue Apr 05, 2016 2:34 pm



சர்வதேச பிரபலங்கள்:
-

இந்த பட்டியலில், பல்வேறு நாடுகளின் தற்போதைய
மற்றும் முந்தைய அதிபர்கள், பிரதமர்கள், 12 பேர்
உட்பட, 140 முக்கிய பிரமுகர்கள் சிக்கி உள்ளனர்.

*விளாடிமிர் புடின், ரஷ்ய அதிபர்*லியோனல் மெஸ்ஸி,
அர்ஜென்டினா கால்பந்து வீரர்*சிக்முண்டர் டேவிட்
கன்லாக்சன் , ஐஸ்லாந்து பிரதமர் *நவாஸ் ஷெரீப்,
பாகிஸ்தான் பிரதமர்*பெட்ரோ போரோசென்கோ,
உக்ரைன் அதிபர்
*சல்மான் பின் அப்துல்அஜீஸ் அல் சவுத்,
சவுதி அரேபிய மன்னர் *ஜாக்கி சான், பிரபல நடிகர்
*சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் குடும்பம்*பிரிட்டன்
பிரதமர் டேவிட் கேமரூனின் தந்தை

இந்தியர்கள் யார் யார்?

*அமிதாப் பச்சன், பாலிவுட் நடிகர் *ஐஸ்வர்யா பச்சன்,
பாலிவுட் நடிகை *டி.எல்.எப்., குழுமத் தலைவர்
கே.பி.சிங் மற்றும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த
ஒன்பது பேர்*அதானி குழுமத் தலைவர் கவுதம்
அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி
*'இண்டியாபுல்ஸ்' நிறுவன தலைவர் சமீர் குலாடி
*'அப்பல்லோ டயர்ஸ்' தலைவர்
ஓன்கார் கன்வர்
*லோக்சத்தா கட்சித் தலைவர் அனுராக் கெஜ்ரிவால்
*மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே*
முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜியின்
மகனும், பிரபல டாக்டருமான ஜகாங்கீர் சோலி சொராப்ஜி*
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மல்லிகா
ஸ்ரீனிவாசன்
-
====================================
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33052
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: அம்பலம்! வெளிநாட்டில் பணம் பதுக்கிய தலைவர்களின் பெயர்...

Post by ayyasamy ram on Tue Apr 05, 2016 8:27 pm

அமிதாப் பச்சன் தனது மறுப்பில் கூறியிருப்பதாவது:
-
இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ள எந்த ஒரு
நிறுவனத்தையும் எனக்குத் தெரியாது. சீ பல்க் ஷிப்பிங்
நிறுவனம், லேடி ஷிப்பிங் லிட், ட்ரெஷர் ஷிப்பிங் லிட்,
மற்றும் டிராம்ப் ஷிப்பிங் லிட்., ஆகிய நிறுவனங்களுக்கும்
எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.

மேலே குறிப்பிட்ட நிறுவனங்களில் எதிலும் நான் இயக்குநராக
இருந்ததில்லை. என்னுடைய பெயர் தவறாகப் பயன்படுத்தப்
பட்டிருக்க சாத்தியமுள்ளது.

நான் வரிகளை ஒழுங்காகச் செலுத்தியுள்ளேன்,
அயல்நாடுகளில் செலவழித்த தொகைக்கும்
நான் வரி செலுத்தியே வந்துள்ளேன்.

தாராள பணம் அனுப்புதல் திட்டம் உட்பட அயல்நாட்டுக்கு
நான் அனுப்பிய தொகைகள் அனைத்தும் சட்டபூர்வமானது,
இதற்கு வரியையும் செலுத்தியுள்ளேன்.

எது எப்படியிருந்தாலும், இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான
செய்தி அறிக்கையிலும் கூட என் பக்கத்தில் சட்டவிரோத
நடவடிக்கை இருந்ததாக கூறவில்லை என்பதை தெரிவித்துக்
கொள்கிறேன்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33052
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: அம்பலம்! வெளிநாட்டில் பணம் பதுக்கிய தலைவர்களின் பெயர்...

Post by krishnaamma on Wed Apr 06, 2016 12:10 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54429
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: அம்பலம்! வெளிநாட்டில் பணம் பதுக்கிய தலைவர்களின் பெயர்...

Post by சிவனாசான் on Wed Apr 06, 2016 4:38 am

பலநாள் திருடன் ஒருநாள் அகப்பட்டுத்தானே ஆகனும்,????>>>>> பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது பழமொழிங்க.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2745
மதிப்பீடுகள் : 1001

View user profile

Back to top Go down

Re: அம்பலம்! வெளிநாட்டில் பணம் பதுக்கிய தலைவர்களின் பெயர்...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum