ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 viyasan

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 மூர்த்தி

செய்க அன்பினை
 மூர்த்தி

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 sugumaran

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

பண்டைய நீர்மேலாண்மை
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 மூர்த்தி

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)

Post by krishnaamma on Wed Apr 06, 2016 1:55 am

'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? புன்னகை

கூடுதல் தகவல் : திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் | by Dr.G.Sadakopan M.A., Ph.D | Publisher: Alliance

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)

Post by pkselva on Wed Apr 06, 2016 9:00 am

இது வரை கேள்விபடாத புத்தகமாக உள்ளது. தேடி பார்கிறேன்

செல்வா!
avatar
pkselva
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 106
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)

Post by ChitraGanesan on Wed Apr 06, 2016 9:52 am

ஸ்ரீ மதே ராமனுஜாய நம:
திருநெல்வேலிக்கு அருகிலுள்ள நூற்றெட்டு திவ்ய தேசங்களுள், முக்கியமான நவதிருப்பதிகளில் ஒன்றான திருக்கோளூர் “வைதமாநிதிபெருமாள்” கோவிலில், சுவாமி எம்பெருமானார் ராமானுஜரிடத்தில், ஒரு பெண்பிள்ளை பேசிய அற்புத பக்திச் செறிவு மிகுந்த வாக்கியங்கள் இவை. இந்தவாக்கியங்களை பொருளை உணர்பவர்களுக்கு பாகவத சம்பந்தம் கிடைப்பது நிச்சயம் . . . . . . . ,
1. அழைத்து வருகிறேன் என்றோனோ அக்ரூரரைப் போலே!
2. அகமொழித்து விட்டேனோ விதுரரைப்போலே!
3. தேகத்தை விட்டேனோ ரிஷி பதினியைப் போலே!
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே!
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப்போலே!
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப்போலே!
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயையைப் போலே!
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப்போலே!
9. மூன்றெழுத்து சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப்போலே!
10. முதலடியை பெற்றேனோ அகலிகையைப் போலே!
11. பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே!
12. எம்பெருமான் என்றேனோ பட்டர்பிரானைப் போலே!
13. ஆராய்ந்து விட்டேனோ திருமழிசையார் போலே!
14. அவன் சிறியனென்றேனோ அழ்வாரைப் போலே!
15. ஏதேனும் என்றேனோ குலசேகரரைப் போலே!
16. யான் சத்யம் என்றேனோ அழ்வாரைப் போலே!
17. அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே!
18. அந்தரங்கம் சொன்னேனோ திரிஜடையைப் போலே!
19. அவன் தெய்வம் என்றேனோ மண்டோதரியைப் போலே!
20. அஹம் வேத்மி என்றேனோ விஸ்வாமித்திரரைப் போலே!
21. தேவுமற்றரியேனோ மதுரகவியாரைப் போலே
22. தெய்வத்தை பெற்றேனோ தேவகியைப் போலே!
23. ஆழிமறை என்றேனோ வசுதேவரைப் போலே!
24. ஆயனை(னாய்) வளர்த்தேனோ யசோதையைப் போலே!
25. அநுயாத்திரை செய்தேனோ அணிலங்கனைப் போலே!
26. அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே!
27. ஆயுதங்கள் ஈந்தேனோ அகஸ்தியரைப் போலே!
28. அந்தரங்கம் புக்கேனோ சஞ்சயனைப் போலே!
29. கர்மத்தால் பெற்றேனோ ஜநகரைப் போலே!
30. கடித்து அவனைக் கண்டேனோ திருமங்கயாரைப் போலே!
31. குடை முதலானதானேனோ ஆனந்தால்ழ்வான் போலே!
32. கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே!
33. இளைப்பு விடாய் தீர்தேனோ நம்பாடுவான் போலே!
34. இடைக்கழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே!
35. இருமன்னரைப் பெற்றேனோ வால்மீகரைப் போலே!
36. இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப்போடியார் போலே!
37. அவனுரைக்க பெற்றேனோ திருக்கசியார் போலே!
38. அவன்மேனி ஆனேனோ திருப்பாணரைப் போலே!
39. அனுப்பி வையுமேன்றேனோ வசிஷ்டரைப் போலே!
40. அடி வாங்கினேனோ கொங்கில் பிராட்டியைப் போலே!
41. மண்பூவை இட்டேனோகுரவ நம்பியைப் போலே!
42. மூலமென்றழைத்தேனோ கஜராஜனைப் போலே!
43. பூசக் கொடுத்தேனோ கூனியைப் போலே!
44. பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போலே!
45. வைத்தவிடத்து இருந்தேனோ பரதரைப் போலே!
46. வழி அடிமை செய்தேனோ இலக்குவணனைப் போலே!
47. அக்கரைக்கே விட்டேனோ குகப்பெருமாளைப் போலே!
48. அரக்கனுடன் பொருதேனோ பெரியவுடயாரைப் போலே!
49. இக்கரைக்கே செற்றேனோ விபீஷணனைப் போலே!
50. இனியதென்று வைத்தேனோ சபரியைப் போலே!
51. இங்கும் உண்டென்றேனோ பிரஹலாதனைப் போலே!
52. இங்கில்லை என்றேனோ திதிபாண்டனைப் போலே!
53. காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே!
54. கண்டுவந்தேன் என்றேனோ திருவடியைப் போலே!
55. இருகையும் விட்டேனோ திரௌபதியைப் போலே!
56. இங்குபால் பொங்கும் என்றேனோ வடுகனம்பியைப் போலே!
57. இருமிடறு பிடித்தேனோ செல்வப்பிள்ளையைப் போலே!
58. நில்லென்று(னப்) பெற்றேனோ இடையற்றூர்நம்பியைப் போலே!
59. நெடுந்தூரம் போனேனோ நாதமுனியைப் போலே!
60. அவன் போனான் என்றேனோ மாருதியாண்டான் போலே!
61. அவன் வேண்டாம் என்றேனோ அழ்வானைப் போலே!
62. அத்வைதம் வென்றேனோ எம்பெருமானாரைப் போலே!
63. அருளாழங் கண்டேனோ நல்லானைப் போலே!
64. அனந்தபுரம் புக்கேனோ ஆளவந்தாரைப் போலே!
65. ஆரியனைப் பிரிந்தேனோ தெய்வவாரியாண்டானைப் போலே!
66. அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே!
67. அனுகூலம் சொன்னேனோ மால்ய்வானைப் போலே!
68. கள்வனிவன் என்றேனோ லோககுருவைப் போலே!
69. கடலோசை என்றேனோ பெரியநம்பியைப் போலே!
70. சுற்றிக்கிடந்தேனோ திருமாலையாண்டான் போலே!
71. சூலுறவு கொண்டேனோ திருக்கோட்டியூரார் போலே!
72. உயிராய பெற்றேனோ ஊமையைப் போலே!
73. உடம்பை வெறுத்தேனோ திருனறையூரார் போலே!
74. என்னைப்போல் என்றேனோ உபரிசரனைப் போலே!
75. யான் சிறியன் என்றேனோ திருமலைநம்பியைப் போலே!
76. நீரில் குதித்தேனோ கணப்புரதாளைப் போலே!
77. நீரோருகம் கொண்டேனோ காசிசிங்கனைப் போலே!
78. வாக்கினால் வென்றேனோ பட்டரைப் போலே!
79. வாயிற் கையிட்டேனோ எம்பாரைப் போலே
80. தோள் காட்டி வந்தேனோ பட்டரைப் போலே!
81. துறை வேறு செய்தேனோ பகவரைப் போலே!

இதுதான் கிடைத்தது
avatar
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 634
மதிப்பீடுகள் : 234

View user profile http://chitrafunds@gmail.com

Back to top Go down

Re: 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)

Post by balakarthik on Wed Apr 06, 2016 10:23 am

ஆங்கிலத்தில் உள்ளது

எழுதியவர் மதுரகவி  தாசன் TCA Venkatesan

Rightclick செய்து தரவிறக்கிகொள்ளலாம்

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)

Post by krishnaamma on Wed Apr 06, 2016 10:27 am

நன்றி கணேசன், இது எனக்கு தெரியும், ஆனால் ஒவ்வொன்றுக்கும் விரிவாக கதைகள் உண்டு, நான் வேளுக்குடி கிருஷ்ணான் மாமாவிடம் கேட்டுள்ளேன்....ஆனால் புத்தகம் கிடைக்கும் என்று நேர்த்ற்று பார்த்தேன். அது தான் கிடைக்குமா என்று நண்பர்களைக் கேட்டிருக்கேன் இங்கு புன்னகைஇது முதல் பகுதி, இது போல மொத்தமும் இருக்கு அங்கு புன்னகை

சக்தி விகடனில் தொடராக வருகிறது என்று நினைக்கிறேன், அது கிடைத்தால் கூட போறும் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)

Post by krishnaamma on Wed Apr 06, 2016 10:28 am

@balakarthik wrote:ஆங்கிலத்தில் உள்ளது

எழுதியவர் மதுரகவி  தாசன் TCA Venkatesan

Rightclick செய்து தரவிறக்கிகொள்ளலாம்

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்
மேற்கோள் செய்த பதிவு: 1201055

நன்றி பாலா, ஆனால் தமிழில் வேண்டும்.........மேலே நான் கொடுத்துள்ள தகவலில் ஒரு லிங்க் இருந்தது, அது வேலை செய்யவில்லை சோகம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)

Post by balakarthik on Wed Apr 06, 2016 10:35 am

தேடிபார்கிறேன் அக்கா

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)

Post by krishnaamma on Wed Apr 06, 2016 11:01 am

@balakarthik wrote:தேடிபார்கிறேன் அக்கா
மேற்கோள் செய்த பதிவு: 1201062

மிக்க நன்றி பாலா புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)

Post by ayyasamy ram on Wed Apr 06, 2016 11:18 am

அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப்போலே..!

-

---
வட மதுரையை ஆண்ட கம்சன் தன் தங்கை
தேவகியின் மகன் கிருஷ்ணன் தன்னைக் கொல்லப்
பிறந்தவன் என்றறிந்து அவனைக் கொல்வதற்குப்
பலவிதங்களிலும் முயன்று தோல்வியுற்றான்.

கிருஷ்ணனை வஞ்சகமாகக் கொல்ல எண்ணிய கம்சன்
வில்விழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்து அதில் தனது பட்டத்து
யானை குவலாயாபீடம் மற்றும் மல்லர்கள் மூலம்
கிருஷ்ணனைக் கொன்றுவிட முடிவு செய்தான்.

கிருஷ்ணனை அழைத்து வர நந்தகோபனின் நண்பரும்
தனது அமைச்சருமான அக்ரூரரை கம்சன் அனுப்பினான்.
உற்றார், உறவினர் கிருஷ்ணனை கம்சனிடம் அனுப்ப
மறுத்தனர். ஆனால் கிருஷ்ணர் வடமதுரை செல்ல ஒப்புக்
கொண்டார்.

அன்று மாலை யமுனையில் அக்ரூரர் சந்தியா வந்தனம்
செய்து கொண்டிருந்தபோது கிருஷ்ணர் மாயா ஜாலங்கள்
புரிந்து, அக்ரூரருக்குக் காட்சி கொடுத்தருளினார்.

அக்ரூரருடன் வடமதுரை சென்று கிருஷ்ணர் பட்டத்து
யானையையும் மல்லர்களையும் வீழ்த்தி கம்சனையும் கொன்றார்.
மக்கள் அனைவரும் காக்கப்பட்டனர். இவ்வாறு

அக்ரூரர் கிருஷ்ணனை அழைத்து வந்ததால் தீயவர்கள்
அழிந்து நல்லோர் காக்கப்பட்டனர்.

இதைப்போல் நல்லாரைக் காக்கவும் தீயோரை அழிக்கவும்
"அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலோ'
என்று அந்தப் பெண்மணி வருந்திக் கூறுகிறார்.
-
-
படம்- இணையம்

Last edited by ayyasamy ram on Wed Apr 06, 2016 11:29 am; edited 1 time in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34330
மதிப்பீடுகள் : 11085

View user profile

Back to top Go down

Re: 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)

Post by ayyasamy ram on Wed Apr 06, 2016 11:20 am

அகம் ஒழிந்து விட்டேனா விதுரரைப் போலே..!

பாண்டவர்களுக்கு உரிய நாட்டை அவர்களுக்குக்
கொடுக்க துரியோதனன் மறுத்துவிட்டான். எனவே
பாண்டவர்கள் கண்ணனை துரியோதனனிடம் தூது
அனுப்பினர்.

அஸ்தினாபுரத்தில் கண்ணனை வரவேற்க பீஷ்மர்,
துரோணர், விதுரர் போன்றவர்கள் கூடியிருந்தனர்.
கண்ணன் தங்கள் வீட்டில்தான் தங்குவான் என்று
ஒவ்வொருவரும் நினைத்தனர்.

அவர்கள் கண்ணனை அழைத்துக் கொண்டு சென்ற
போது வழியில் இருந்த வீடுகளை ஒவ்வொன்றாகக்
காட்டி, "இது யாருடைய வீடு' என்று கேட்டுக் கொண்டே
வந்தார். அவர்கள் அவரவர் வீடுகளைக் காட்டிபோது
அவரவரும் தம் இல்லம் என்று கூறினர்.

விதுரருடைய வீட்டைக்காட்டிக் கேட்டபோது "இது தங்கள்
மாளிகை' என்று விதுரர் கூறினார். கிருஷ்ணன், அவர்கள்
அனைவரது எண்ணங்களையும் புரிந்து கொண்டார்.

யான், எனது எனும் அகங்கார மமகாரங்கள் சிறிதும் இல்லாத
விதுரர் மாளிகையில் தங்கினார். ""நாம் நமக்கு உரியவர்
அல்லர். எம்பெருமானுக்கு அடிமைப்பட்டவர்கள்'' என்பதை
நன்குணர்ந்தவர் விதுரர். அவரது பக்தியே சிறந்தது.
அவரே உண்மையான வைஷ்ணவர். ஆகவேதான் கிருஷ்ணர்
அவரது இல்லத்தில் தங்கினார்.
-

இதனையே, "அடியேன் விதுரரைப்போல் அகம் (அகம்பாவம்) ஒழிக்கவில்லையே' என்று வருந்திக் கூறினாள்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34330
மதிப்பீடுகள் : 11085

View user profile

Back to top Go down

Re: 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)

Post by ayyasamy ram on Wed Apr 06, 2016 11:21 am

தேகத்தை விட்டேனா ரிஷி பத்தினியைப் போலே..!
---
கண்ணன் பசுக்களையும் கன்றுகளையும் மேய்ப்பதில்
விருப்பம் கொண்டவன். ஆயச் சிறுவர்களுடன் அவனும்
செல்வான்.

ஒருநாள், ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த
சிறுவர்கள் கண்ணனிடம் வந்து, ""கண்ணா, எங்களுக்குப்
பசிக்கிறது'' என்றனர். கண்ணன் அவர்களைப் பார்த்து,
-
"இங்கு யாகம் செய்யும் அந்தணர்களிடம் சென்று என்
பெயரைச் சொல்லி உணவு பெற்று வாருங்கள்'' என்றான்.
-

சிறுவர்கள் அந்தணர்களிடம் சென்று கண்ணன் பெயரைச்
சொல்லி உணவு கேட்டனர். அவர்கள் கம்சனுக்குப் பயந்து
உணவு கொடுக்கவில்லை. கண்ணனிடம் சென்று இதைக்
கூறியபோது, ""ஊருக்குள் சென்று முனிபத்தினிகளிடம்
நான் சொன்னதாகச் சொல்லி உணவு கேளுங்கள்'' என்று
கூறி அனுப்பினான்.

முனிபத்தினிகளிடம் சென்று கேட்டபோது அவர்கள் மிகுந்த
மகிழ்ச்சியுடன் சிறுவர்களுக்கும் உணவு கொடுத்து கண்ணன்
மற்றும் அங்கிருந்தோர் அனைவருக்கும் உணவளித்து
பாகவதத் தொண்டு செய்து மகிழ்ந்தனர்.
-

அவர்களை மீண்டும் ஆசிரமத்துக்குச் செல்லும்படி கண்ணன்
கூறியபோது கண்ணனைப் பிரிய மனமின்றியும் தங்கள் க
ணவருக்குப் பயந்தும் விருப்பமின்றிச் சென்றனர்.

ஒரு பெண்மணி மட்டும் கண்ணனைப் பிரிய மனமின்றி
கண்ணனை நினைத்து உயிர்விட்டாள்.

"கண்ணனுக்காகத் தன் உயிரைவிட்ட அந்தப் பெண்மணியைப்
போல்தானும் உயிரை விடவில்லையே' என்று மனமுருகிக்
கூறினாள் அந்தப் பெண்பிள்ளை.
-

- கே. சுவர்ணா.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34330
மதிப்பீடுகள் : 11085

View user profile

Back to top Go down

Re: 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)

Post by krishnaamma on Wed Apr 06, 2016 11:36 am

@ayyasamy ram wrote:
அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப்போலே..!

-

---
வட மதுரையை ஆண்ட கம்சன் தன் தங்கை
தேவகியின் மகன் கிருஷ்ணன் தன்னைக் கொல்லப்
பிறந்தவன் என்றறிந்து அவனைக் கொல்வதற்குப்
பலவிதங்களிலும் முயன்று தோல்வியுற்றான்.

கிருஷ்ணனை வஞ்சகமாகக் கொல்ல எண்ணிய கம்சன்
வில்விழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்து அதில் தனது பட்டத்து
யானை குவலாயாபீடம் மற்றும் மல்லர்கள் மூலம்
கிருஷ்ணனைக் கொன்றுவிட முடிவு செய்தான்.

கிருஷ்ணனை அழைத்து வர நந்தகோபனின் நண்பரும்
தனது அமைச்சருமான அக்ரூரரை கம்சன் அனுப்பினான்.
உற்றார், உறவினர் கிருஷ்ணனை கம்சனிடம் அனுப்ப
மறுத்தனர். ஆனால் கிருஷ்ணர் வடமதுரை செல்ல ஒப்புக்
கொண்டார்.

அன்று மாலை யமுனையில் அக்ரூரர் சந்தியா வந்தனம்
செய்து கொண்டிருந்தபோது கிருஷ்ணர் மாயா ஜாலங்கள்
புரிந்து, அக்ரூரருக்குக் காட்சி கொடுத்தருளினார்.

அக்ரூரருடன் வடமதுரை சென்று கிருஷ்ணர் பட்டத்து
யானையையும் மல்லர்களையும் வீழ்த்தி கம்சனையும் கொன்றார்.
மக்கள் அனைவரும் காக்கப்பட்டனர். இவ்வாறு

அக்ரூரர் கிருஷ்ணனை அழைத்து வந்ததால் தீயவர்கள்
அழிந்து நல்லோர் காக்கப்பட்டனர்.

இதைப்போல் நல்லாரைக் காக்கவும் தீயோரை அழிக்கவும்
"அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலோ'
என்று அந்தப் பெண்மணி வருந்திக் கூறுகிறார்.
-
-
படம்- இணையம்

நீங்கள் சக்தி விகடன் வாங்கரீங்களா ராம் அண்ணா?.......இது போல எல்லா வாக்கியங்களுக்கும் இருக்கா அண்ணா?.......இருந்தால் போடுங்களேன்...தனி பதிவாகவே போடுங்கள்...ரொம்ப புண்ணியம் உங்களுக்கும், படிப்பவர்களுக்கும் புன்னகை ........ :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)

Post by ayyasamy ram on Wed Apr 06, 2016 12:20 pm

அன்புள்ள தங்கைக்கு..
-
இங்கு நான் பதிவிட்ட மூன்று வாக்கியங்களுக்கான
விளக்கங்கள், தினமணி இதழில் கே.சுவர்ணா
எழுதியவை...
-
ஆனால் இணையத்தில் பரவலாக அனைத்து
வாக்கியங்களுக்கும் விளக்கம் கிடைக்க கூடும்
-
அவ்வப்போது கிடைக்கும் தகவல்கள் இந்த திரியிலேயே
போடுகிறேன்...பின்னர் வாக்கியங்கள் வரிசைப்படுத்தி
தனித் திரியாக போட்டுக் கொள்ளலாம்
-
மற்றவர்களும் பதிவிடலாம்...
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34330
மதிப்பீடுகள் : 11085

View user profile

Back to top Go down

Re: 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)

Post by ayyasamy ram on Wed Apr 06, 2016 12:30 pm

அனுப்பி வையும் என்றேனோ வசிஷ்டரைப் போலே ?-

இதற்கான பொருள்:
--
புத்திர பாசம் காரணமாக அடிக்கடி வாக்கு மாறும்
தன்மையுள்ள தசரதன் விசுவாமித்திரருடன் அரக்கவதம்
செய்ய இராமனை அனுப்ப மறுக்கிறான்.

விசுவாமித்திரர் கோபம் கொண்டு கிளம்ப எத்தனிக்கிறார்.
வசிஷ்டருக்கு நடக்கப் போகும் மகா சம்பவங்களின்
கோர்வை ஞானதிருஷ்டியில் வந்து போகிறது. இராவணன்
அழிந்தால் என்ன அழியாவிட்டால் என்ன இராமனுக்கும்
பிராட்டிக்கும் திருமணம் நடக்கவேண்டியது கட்டாயமல்லவா?
-
சட்டென்று தசரதனைப் பார்த்து “உன் பிள்ளைகளுக்கு
ஒரு நல்லது நடந்தால் அதனை மன்னனே நீ தடுப்பாயோ ?
என்று கேட்கிறார். இதனை கம்பன் தனது வரிகளில்
அழகாகக் கூறுகிறான்.

கறுத்த மா முனி கருத்தை உன்னி.

‘நீ பொறுத்தி’ என்று அவற் புகன்று.

‘நின் மகற்கு உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள் மறுத்தியோ?’
எனா. வசிட்டன் கூறினான்.

அத்துடன் நில்லாமல் “ வெள்ளம் பெருகி ஒரு நாட்டிற்கு
வளம் சேர்வதைப் போல உன் பிள்ளைகளுக்கு நிறைய
நல்லவைகள் பெருகி வரப் போகின்றது. அதனை தடுக்கப்
போகிறாயா? “ என்று கேட்கிறார். இதனையும் கம்பர் தனது
கவித் திறத்தால்,

‘பெய்யும் மாரியால் பெருகு வெள்ளம் போய்
மொய் கொள் வேலைவாய் முடுகும் ஆறுபோல்.
ஐய! நின் மகற்கு அளவு இல் விஞ்சை வந்து
எய்து காலம் இன்று எதிர்ந்தது’ என்னவே.

இதன்பிறகே தசரதன் மனம் மாறி தனது புதல்வர்களான
ஸ்ரீராமனையும், இலக்குவனையும் விசுவாமித்திரருடன்
அனுப்ப சம்மதிக்கிறான்.

சீதாபிராட்டிக்கும், ஸ்ரீராமனுக்கும் திருமணவைபவத்தை நடத்தி
வைக்கும் பொருட்டு ஸ்ரீராமனை விசுவாமித்திரருடன் அனுப்பி
வையும் என்று தசரத சக்கரவர்த்தியிடம் சொன்னதைப் போன்ற
எந்த நல்ல செயலையும் நான் எங்கள் வைத்தநிதி பெருமானுக்கு
செய்யவில்லையே பிறகு எதற்கு இந்த ஊரில் இருக்கவேண்டும்
என்று திருக்கோளூர் பெண்பிள்ளை கேட்டபடி கிளம்புகிறாள்.

——————

சத்தியப்பிரியன், ஓவியம்:ஸ்யாம்

நன்றி- சக்தி விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34330
மதிப்பீடுகள் : 11085

View user profile

Back to top Go down

Re: 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)

Post by badri2003 on Wed Apr 06, 2016 12:58 pm

அம்மா, சக்தி விகடனில் வெளியாகிக் கொண்டிருக்கும் தொடரில், 38 வாக்கியங்களுக்கு விளக்க கதைகள் வந்துள்ளன. கடைசி இதழ் வரை. வந்துள்ள விளக்கங்கள் வரை என்னிடம் இமெயிலில் உள்ளது. அதை வோர்ட் அல்லது பிடிஎப் ஆக அளிக்க முயல்கிறேன்.
avatar
badri2003
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 108
மதிப்பீடுகள் : 67

View user profile

Back to top Go down

Re: 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)

Post by ayyasamy ram on Wed Apr 06, 2016 1:03 pm

-
38. அவன் மேனி ஆனேனோ திருப்பாணரைப் போலே ?
---
காவிரியின் தென்கரையில் காற்று இதமாக வீசிக்
கொண்டிருந்தது.
திருப்பாணர் தமது தோளில் தொங்கவிட்ட உரையிலிருந்து
யாழ் எனப்படும் தந்தி இசைக் கருவியை வெளியில் எடுத்தார்.
திருவரங்கன் இருக்கும் திசை நோக்கி சேவித்தார். யாழுக்கு
சுருதி சேர்த்தார்.

கல்லும் கரைந்துருகும் வண்ணம் அரங்கன் மேல் பாக்களைப்
பாடத் தொடங்கினார்.

“ ஆஹா என்ன ஒரு கானம். கேட்பவர்களை மதி மயங்க
வைக்கும் இசை” என்றார் ஒரு பக்தர்.

“ எதற்காக இவர் இப்படி கோயிலுக்கு வெகுதொலைவில்
நின்றுகொண்டு பாட வேண்டும்? அரங்கன் சன்னதியில்
பாடலாமே? “ என்றார் உடன் வந்த வேறொரு பக்தர்.

“ என்ன ஓய் புரியாத மாதிரி பேசறீர்? இவர் நான்காவது
வர்ணத்தைச் சேர்ந்தவர். தீண்டத்தகாதவர்.”

“ திருவரங்கனுக்கு அடிமைப்பட்ட ஆத்மாவுக்கு ஏதுங்காணம்
குலமும் ஜாதியும்? “

“ இது உமக்கு எமக்கு தெரியும். கோயிலைச் சேர்ந்தவாளுக்குத்
தெரிய வேண்டாமோ?”

‘ஜீயர் வர்றார் ஜீயர் வர்றார் நான்காம் வருணத்தினர் எதிரில்
நிற்க வேண்டாம். ஒதுங்கி போங்கள்‘ என்ற ஒலி எழுந்தது.

அந்த பக்தர்கள் திரும்பிப் பார்த்தனர். திருவரங்கன் கோயிலைச்
சேர்ந்த லோகசாரங்கர் என்ற ஜீயர் தனது தொண்டர் கூட்டம்
புடை சூழ காவிரியில் குளிப்பதற்கு வந்து கொண்டிருந்தார்.

திருப்பாணரின் செவிகளில் எம்பெருமானுடன் சுருதி சேர்ந்த
பண்ணின் ஒலியைத் தவிர வேறு ஒலி எதுவும் விழவில்லை.
ஜீயருடன் வந்தவர்கள் அவரை விலகிப்போகச் சொன்னர்.
கேட்காமல் போகவே ஜீயரைப் பார்த்தனர்.

ஜீயருக்கு திருமஞ்சனத்துக்கு பொற்குடத்தில் நீர்கொண்டு
போகவேண்டிய அவசரம். “ஏதாவது பண்ணி அவனை
அப்புறப்படுத்துங்கோ“ என்று உத்தரவிட்டார். உடன் வந்த
தொண்டர் கூட்டம் திருப்பாணரை கல்லால் அடிக்கத் தொடங்கினர்.
-
தனது சுயநினைவுக்கு வந்த திருப்பாணர்
ஜீயருக்கு இப்படி ஒரு அபச்சாரம் செய்து விட்டோமே என்று
மன்னிப்பு கேட்டுக்கொண்டு அந்த இடத்தைவிட்டு அகன்றார்.
-
இவரைக் கண்ணுற்ற அந்த இரண்டு பக்தர்களும் “இது என்ன
இப்படி ஒரு அக்கிரமம்“ என்றபடி ஜீயர் கூட்டத்துடன் உள்ளே
சென்றனர்.

தனது பாகத்தன் மேனியில் கல்லால் அடித்து இரத்த
காயமாக்கியதால் கோபாவேசமான திருவரங்கன் தனது
அர்ச்சாவதார மேனியில் இரத்தம் வழியச் செய்தான்.
-
ஜீயருக்கு கைகால் நடுங்கிவிட்டது. வெளியில் நின்று தரிசித்த
அந்த பக்தர்களுக்கும் மெய் சிலிர்த்தது. நாளை அவசியம்
இங்கு வருவோம் என்று கூறிவிட்டு அகன்றனர்.

திருவரங்கச் செல்வன் சிலை மேனியில் இரத்தம் வழிந்ததன்
அர்த்தம் புரியாமல் லோக சாரங்க முனிவர் கலங்கியபடி கண்
துயின்றார். கனவில் அரங்கன் தோன்றினான்.

“என் பரமபாகவதனை கல்லால் அடித்து பெரும்பழி தேடிக்
கொண்டு விட்டீர். நாளை அந்த திருப்பானரை உமது தோளில்
சுமந்து எம் சன்னதிக்குள் வாரும். அப்போதுதான் உமது
பாவமும் எமது குருதியும் வடியும்“ என்றார்.

மறுநாள் லோகசாரங்கர் திருப்பாணர் வரும்வரை காத்திருந்தார்.
திருப்பாணர் வந்ததும் அவரிடம் தனது தோளில் ஏறிக்கொள்ளச்
சொன்னார்.

திருப்பாணர் தீயை மிதித்தவர் போல பதறினார்.

“இது அரங்கனின் கட்டளை. எம்முடைய விருப்பமும் இதுவே.
ஒரு பாகவதனின் நெஞ்சம் நோகும்படி நடந்துகொள்வது
மற்றொரு பாவதோத்தமனுக்கு அழகில்லை“ என்றார் ஜீயர்.

“ஜீயருக்கு இது நேற்று ஏன் தெரியாமல் போனது?“ என்று
நேற்று வந்த அதே பக்தர்கள் நினைத்துக் கொண்டனர்.

லோகசாரங்கர் தோள்களில் ஏறிக்கொண்டு பிரகார வீதிகளின்
வழியாக திருப்பாணர் அரங்கன் சன்னதிக்குள் நுழைகிறார்
என்ற செய்தி காட்டுத்தீ போல் காவேரிக் கரையில் பரவத்
தொடங்கியது. நாற்புரத்திலிருந்தும் பக்தர்கள் திரண்டனர்.
ஒரு திருவிழா உற்சவம் போல திருப்பாணர் அரங்கன்
சன்னதிக்குள் நுழைந்தார்.

ஊரே கொண்டாடும் ஒருவனை அதுவரை நேரில் காணாமல்
திடீரென்று இப்படி ஒருநாள் இப்படி ஒருவிதமாக பார்த்ததும்
திருப்பாணருக்கு வாய் அடைத்துவிட்டது என்றுதான் சொல்ல
வேண்டும்.

பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத்தன்

வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி யென்னுள் புகுந்தான்

கோர மாதவம் செய்தனன்கொ லறியே னரங்கத் தம்மான்திரு

வார மார்பதன் றோஅடி யேனை யாட்கோண்டதே.

என்று கதறி பண்ணிசைத்தார்.
அமலனாதிபிரான் என்று தொடங்கி மொத்தமே பத்த
பாசுரங்கள்தான் மங்கள சாசனம் செய்திருப்பார்.

கொண்டல் வண்ணனைக் கோவல னாய்வெண்ணெய்

உண்ட வாயன்என் னுள்ளம் கவர்ந்தானை

அண்டர் கோனணி யரங்கன்என் னமுதினைக்

கண்ட கண்கள்மற் றொன்றினைக் காணாவே.

என்ற பாசுரம் பாடிமுடித்தவுடனேயே அரங்கன் அவரை
தம்முடன் ஐக்கியப்படுத்திக் கொண்டான்.

வெளியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த இரண்டு பக்தர்களும்
கண்களில் நீர் மல்க“ பக்தி என்றால் இதுதான் பக்தியாக
இருக்க முடியும்” என்றனர்.

அப்படி ஒரு பக்தியுடன் பண்ணிசைத்து அவன் மேனியுடன்
கலந்து ஐக்கியமான, திருப்பாணரைப் போல தான் பாக்கியம்
செய்யவில்லையே என்று அந்தத் திருக்கோளூர் பெண்பிள்ளை
வெளியேறுகிறாள்.
-
--------------------------------------
சத்தியப்பிரியன்,
நன்றி- சக்தி விகடன்
படம் - இணையம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34330
மதிப்பீடுகள் : 11085

View user profile

Back to top Go down

Re: 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)

Post by badri2003 on Wed Apr 06, 2016 2:06 pm

இதோ தங்களுக்காக. இதுவரை சக்தி விகடனில் வந்த விளக்கங்களின் தொகுப்பு. நன்றி சக்தி விகடன்.
mediafire.com download/61720vv527kh61i/ThirukkolurPenPillaiRahasiyamm_Part1_Tamil.pdf
avatar
badri2003
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 108
மதிப்பீடுகள் : 67

View user profile

Back to top Go down

Re: 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)

Post by badri2003 on Wed Apr 06, 2016 2:17 pm

avatar
badri2003
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 108
மதிப்பீடுகள் : 67

View user profile

Back to top Go down

Re: 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)

Post by shobana sahas on Wed Apr 06, 2016 7:46 pm

@badri2003 wrote:இதோ தங்களுக்காக. இதுவரை சக்தி விகடனில் வந்த விளக்கங்களின் தொகுப்பு. நன்றி சக்தி விகடன்.
mediafire.com download/61720vv527kh61i/ThirukkolurPenPillaiRahasiyamm_Part1_Tamil.pdf
மேற்கோள் செய்த பதிவு: 1201092
மிக்க நன்றி பத்ரி அவர்களே .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)

Post by தமிழ்நேசன்1981 on Wed Apr 06, 2016 8:08 pm

@krishnaamma wrote:'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? புன்னகை

கூடுதல் தகவல் : திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் | by Dr.G.Sadakopan M.A., Ph.D | Publisher: Alliance

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1201013

சக்தி விகடன் தொடரில் வருவதை நான் சேமித்து தருகிறேன்... ஓரிரு நாளில் தர முயற்சிக்கிறேன். சக்திவிகடனில் தொடர் முடிவடையவில்லை. முடிந்தவுடன் தருகிறேன்.. அல்லது தனி திரியில் அல்லது இதே திரியில் வந்த பகுதி வரை பதிவிட்டடுமா என்று கூறுங்கள்.. மின்நூல் தொடர் முடிந்த உடன் தருகிறேன்.

Last edited by தமிழ்நேசன்1981 on Wed Apr 06, 2016 8:18 pm; edited 1 time in totalநீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 963

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)

Post by krishnaamma on Wed Apr 06, 2016 8:08 pm

@badri2003 wrote:அம்மா,  சக்தி விகடனில் வெளியாகிக் கொண்டிருக்கும் தொடரில், 38 வாக்கியங்களுக்கு விளக்க கதைகள் வந்துள்ளன. கடைசி இதழ் வரை.  வந்துள்ள விளக்கங்கள் வரை என்னிடம் இமெயிலில் உள்ளது. அதை வோர்ட் அல்லது பிடிஎப் ஆக அளிக்க முயல்கிறேன்.  

வாவ் ! மிக்க நன்றி பத்ரி புன்னகை..உங்களுக்கு கோடி புண்ணியம் உண்டாகட்டும் ........ :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)

Post by krishnaamma on Wed Apr 06, 2016 8:09 pm

@ayyasamy ram wrote:அன்புள்ள தங்கைக்கு..
-
இங்கு நான் பதிவிட்ட மூன்று வாக்கியங்களுக்கான
விளக்கங்கள், தினமணி இதழில் கே.சுவர்ணா
எழுதியவை...
-
ஆனால் இணையத்தில் பரவலாக அனைத்து
வாக்கியங்களுக்கும் விளக்கம் கிடைக்க கூடும்
-
அவ்வப்போது கிடைக்கும் தகவல்கள் இந்த திரியிலேயே
போடுகிறேன்...பின்னர் வாக்கியங்கள் வரிசைப்படுத்தி
தனித் திரியாக போட்டுக் கொள்ளலாம்
-
மற்றவர்களும் பதிவிடலாம்...
-

மிக்க நன்றி ராம் அண்ணா, முதலில் இங்கு வந்ததும் பத்ரி இன் பதிவை பார்த்துவிட்டேன், ரொம்ப சந்தோசம் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)

Post by krishnaamma on Wed Apr 06, 2016 8:11 pm

@badri2003 wrote:இதோ தங்களுக்காக. இதுவரை சக்தி விகடனில் வந்த விளக்கங்களின் தொகுப்பு. நன்றி சக்தி விகடன்.
mediafire.com download/61720vv527kh61i/ThirukkolurPenPillaiRahasiyamm_Part1_Tamil.pdf
மேற்கோள் செய்த பதிவு: 1201092

இதோ downloadkku போட்டுவிட்டேன் பத்ரி.............. ஜாலி ஜாலி ஜாலி .என் சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை, ரொம்ப நாளாய் தேடிக்கொண்டு இருக்கேன் இதை புன்னகை............. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)

Post by krishnaamma on Wed Apr 06, 2016 8:18 pm

கொடுத்துள்ள லிங்க் களுக்கும் மிக்க நன்றி பத்ரி புன்னகை............ நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
அருமையாக தெளிவாக இருக்கு PDF அதுவும் மனதை கொள்ளை கொள்ளும் படங்களுடன்............... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)

Post by krishnaamma on Wed Apr 06, 2016 8:21 pm

@தமிழ்நேசன்1981 wrote:
@krishnaamma wrote:'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? புன்னகை

கூடுதல் தகவல் : திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் | by Dr.G.Sadakopan M.A., Ph.D | Publisher: Alliance

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1201013

சக்தி விகடன் தொடரில் வருவதை நான் சேமித்து தருகிறேன்... ஓரிரு நாளில் தர முயற்சிக்கிறேன். சக்திவிகடனில் தொடர் முடிவடையவில்லை. முடிந்தவுடன் தருகிறேன்.. அல்லது தனி திரியில் அல்லது இதே திரியில் வந்த பகுதி வரை பதிவிட்டடுமா என்று கூறுங்கள்.. மின்நூல் தொடர் முடிந்த உடன் தருகிறேன்.

மிக்க நன்றி நேசன், நீங்கள் தான் பதில் தருவீர்கள் என்று எதிர்பார்த்தேன், அதற்குள் பத்ரி தந்துவிட்டார் புன்னகை.........தொடர் இன்னும் முடிய வில்லை தான் நேசன், பத்ரி இதுவரை வந்ததை தொகுத்து கொடுத்திருக்கிறார், அதில் 38 கேள்விகள் வரை வந்திருக்கு புன்னகை

நீங்கள் முழுவதும் தொகுத்து கொடுங்கள், நான் இதைப் படிக்கிறேன் !...:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: மிக்க நன்றி நேசன்! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum