புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பளீர் டிப்ஸ்! Poll_c10பளீர் டிப்ஸ்! Poll_m10பளீர் டிப்ஸ்! Poll_c10 
72 Posts - 53%
heezulia
பளீர் டிப்ஸ்! Poll_c10பளீர் டிப்ஸ்! Poll_m10பளீர் டிப்ஸ்! Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
பளீர் டிப்ஸ்! Poll_c10பளீர் டிப்ஸ்! Poll_m10பளீர் டிப்ஸ்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பளீர் டிப்ஸ்! Poll_c10பளீர் டிப்ஸ்! Poll_m10பளீர் டிப்ஸ்! Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
பளீர் டிப்ஸ்! Poll_c10பளீர் டிப்ஸ்! Poll_m10பளீர் டிப்ஸ்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பளீர் டிப்ஸ்! Poll_c10பளீர் டிப்ஸ்! Poll_m10பளீர் டிப்ஸ்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பளீர் டிப்ஸ்! Poll_c10பளீர் டிப்ஸ்! Poll_m10பளீர் டிப்ஸ்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பளீர் டிப்ஸ்! Poll_c10பளீர் டிப்ஸ்! Poll_m10பளீர் டிப்ஸ்! Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பளீர் டிப்ஸ்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2016 11:27 am

* உளுந்தம் பருப்பு வடை செய்யும்போது மிருதுவாக உப்பி வர, ஐஸ்கட்டி சேர்த்து நைசாக அரைக்கவும், வடை தட்டும் போது இரண்டு ஸ்பூன் நெய், உப்பு, காரம் சேர்த்து தட்டி மிதமான தீயில் போட்டு எடுக்க, சூப்பரான மெதுவடை தயார்.

* சப்பாத்தி, சன்னா மற்றும் சைடு டிஷ் செய்யும் போது இறக்கியவுடன் வெண்ணெய் சேர்த்துக் கிளறி, புதினா இலைகள் சிறிது சேர்த்துச் சூட்டில் மூடி விட, அலாதி சுவையாக இருக்கும்.

* பிளாஸ்டிக், எவர்சில்வர், பித்தளைப் பாத்திரங்களைவிட செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடிப்பதுதான் சிறந்தது. இதில் கனிமச்சத்து கிடைக்கிறது.

* மிளகை பொன் வறுவலாக வறுத்து, தும்பைப் பூ, சிறிது வெங்காயம் சேர்த்து உருண்டையாக்கி சாப்பிட்டு வர, வாத சுரம், குளிர் சுரம் குணமாகும்.

* முளைகட்டிய வெந்தயம், நறுக்கிய கேரட், வௌ்ளரியுடன் எலுமிச்சைச் சாறு பிழிந்து சாலட் தயாரிக்கலாம். வெந்தயத்தை முளைகட்டி ஒரிரு முறை களைந்தால் அதன் கசப்பு கணிசமாகக் குறைந்துவிடும். இதை உண்ண, ரத்தத்தில் இரும்புச் சத்து கூடும்.

* உடல் மெலிந்தவர்கள் குண்டாக வேண்டுமா? பழுத்த மாம்பழங்களை மூன்று வேளையும் சாப்பிட்டு, பால் அருந்துங்கள். உடல் பெருக்கும். அத்துடன் ரத்தசோகையும் நீங்கும்.

* சிலரைப் பித்தம் ரொம்பவே பாடாய்ப்படுத்தும். இவர்கள் காலை வேளையில் மாம்பழச் சாறுடன் தேன், மிளகுத்தூள் சேர்த்து அருந்தினால் பித்தநீர் வெளியேறிவிடும்.

* வெங்காயத்தையும், தக்காளியையும் சம அளவு எடுத்துப் பொடியாக நறுக்கவும். தேவையான உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை சேர்த்து ஜாடியில் போட்டு நன்கு குலுக்கி மூடவும், ஊறிய பிறகு தயிர் சாதத்திற்குத் தொட்டுக் கொண்டு சாப்பிட, சுவையாக இருக்கும்.

* குறுமிளகு நமது உடலில் நோய்களை எதிர்த்துப் போராடும் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்குகிறது. குறுமிளகையும், உப்பையும் பொரித்து சாதத்தோடு சேர்த்துச் சாப்பிட்டால் ஜலதோஷம் குணமாகி விடும்.

* பசும்பாலுடன் பப்பாளிச் சாறு கலந்து உடம்பில் தேய்த்து, 15 நிமிடங்கள் கழித்து கடலை மாவால் தேய்த்துக் குளித்து வந்தால் உடலில் தேமல் போன்ற சரும வியாதிகள் வராது.

* பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவரம் பருப்புடன் கடைந்து சிறிது நெய் விட்டுச் சாப்பிட்டு வந்தால் நன்கு சதை பிடிக்கும்.

* தர்ப்பூசணியின் தோலை வீணாக்காமல் எண்ணெயில் வதக்கி, உப்பு மிளகாய், புளி, உளுத்தம் பருப்பு, சேர்த்து அரைத்தால் அருமையான சைட் டிஷ் ரெடி.

* நீர் மோர் கரைக்கும் போது அதனுடன் சிறிது புளிக் காய்ச்சலையும் சேர்த்துக் கரைத்தால் சூப்பராக இருக்கும்.

* கத்தரிக்காயை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி எண்ணெயில் பொரித்து கெட்டித் தயிரில் போடவும். அத்துடன் தேவையான உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய் போடவும். கத்தரிக்காய் தயிர் பச்சரடி ரெடி. கத்தரிக்காயை நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்து பின் எடுக்கலாம். இல்லையெனில் கறுத்துவிடும்.
- எம். வசந்தா, திருச்சி.

*தேங்காய் துருவல் சேர்த்து சாப்பிட முடியாதவர்கள் கேரட் துருவல், பீட்ரூட், வௌ்ளரி, முட்டைக்கோய் போன்ற காய்கறித் துருவல்களில் ஏதேனும் ஒரு காய்கறித் துருவலையோ அல்லது பல துருவல்களின் கலவையையோ உணவுடன் கலந்து சாப்பிட, இயற்கைச் சத்து கிடைப்பதுடன், உடலுக்கும் நல்லது.

* சமைக்க வாங்கி வைத்துள்ள காளான்களை பிளாஸ்டிக் கவரினுள் போட்டு வைப்பதற்கு பதிலாக சாதாரண பேப்பரில் சுற்றி வைத்தால் நீண்ட நேரத்துக்கு ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

* ரவா தோசை செய்வதற்கு அரிசி மாவிற்குப் பதிலாக வேண்டிய அளவு சாதத்தை மிக்ஸியில் குழைய அடித்து செய்யலாம். தோசை மொறுமொறுவென மறுகலாக இருக்கும்.

* கொண்டைக்கடலை சுண்டல் தாளிக்கும்போது இரண்டு கேரட்டைத் துருவி வெங்காயத்துடன் சேர்த்து வதக்கினால் சுவை அதிகமாகும்.

* எந்த வகை தொக்கு செய்தாலும் அதில் சிறிது எலுமிச்சை சாறு பிழிய, நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.

* உட்டுமா செய்வதற்காக ஊறவைத்திருந்த அவல் அதி நேரம் உறிவிட்டால், அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அவலோடு பிசைந்து எண்ணெயில் பொறித்தால் அவல் பக்கோடா ரெடி.

* இட்லி/தோசை மாவு அரைத்த பிறகு உளுந்து அதிகமாகி விட்டால், அதில் இட்லி சுட வருமா, தோசை சுட வருமா என்ற சந்தேகம் வரலாம். ஒரு கண்ணத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் மாவை உருட்டிப் போட, மாவுநீரில் மிதந்தால் இட்லி, அடியில் தங்கினால் தோசை.

* எண்ணெயில் பொரித்த அப்பளம் மீந்து விட்டால் அதை பாலிதீன் பையில் போட்டு கட்டி ஃபிரிஜ்ஜில் வைத்தால் கரகரப்பாகவே இருக்கும்.

* எந்தக் கறை ஆடையில் பட்டாலும், வினிகர் சேர்த்துத் துவைத்தால் கறை மறைந்து விடும்.

* மண் பாத்திரம் வாங்கியதும் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் வைத்து சற்றுநேரம் சுட்டதும், அலம்பி விட்டால் மண் வாசனையோ, விரிசலோ ஏற்படாது.

* எந்த கேசரி செய்தாலும், மூன்று மேஜைக்கரண்டி தேங்காய்ப் பால் சேர்க்க, சூப்பர் ருசியாக இருக்கும்.

* துளசிச் செடியை நடும்போது, கூடவே வெங்காயச் செடியையும் நட்டு வைத்தால், துளசியின் வேரைப் புழு அரிக்காமல் நன்கு செடி வளரும்.

நன்றி : மங்கையர் மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jun 02, 2016 8:53 am

மங்கையருக்கு>>> மலருக்கு... நன்றி, பதிவுக்கு பாராட்டு>>>>>>>>>>>>
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 11:42 am

நன்றி ராஜன் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 1:04 pm

* சுக்குப்பொடியுடன் வெல்லம், தேன் இரண்டையும் சேர்த்து நன்கு கலந்து சிறுசிறு உருண்டைகளாக பிடித்து சாப்பிடலாம். டேஸ்ட்டாக இருப்பதோடு, சுக்கு ஜீரண சக்திக்கு நல்லது.

* குலோப்ஜாமூன் பாகு மீதமாகி விட்டால், அதில் மைதா மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்து பிசைந்து சப்பாத்தி போல திரட்டி சிறுசிறு துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்தால் சுவையான பிஸ்கெட் ரெடி!

* வீட்டிலேயே ஜாம் தயாரிக்க விரும்பினால், சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜாம் விரைவில் கெடாமல் இருக்கும்.
   
* உருளைக்கிழங்கு வறுவல் செய்யும் போது அதில் சிறிது சோம்பைத் தூளாக்கி தூவினால் உருளைக்கிழங்கு வறுவல் ‘கமகம’ வாசனையுடன் இருக்கும்.
   
* இரவு நேரங்களில் சமையலறையில் ஜீரோ வாட் பல்பை எரிய விட்டால், சமையலறையில் கரப்பான் பூச்சி நடமாட்டம் குறையும்.
   
* கேக் செய்யும் போது கலவையில் சிறிதளவு தேன் சேர்த்தால் கேக் சுவையாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
 
*  வாடிப்போன காய்கறிகளை வினிகர் கலந்த தண்ணீரிலோ, உப்புத் தண்ணீரிலோ 10 நிமிடம் போட்டு வைத்த பிறகு எடுத்து சுத்தம் செய்து பயன்படுத்தினால் புதியது போலவே இருக்கும்.
  
 
* குழம்பு வைக்க வெங்காயம், தக்காளி, காய்கறிகளை வதக்கும் போது, வெங்காயம், காய்கறிகளை முதலில் வதக்கி விட்டு, அதன் பின்னர் தக்காளியைச் சேர்த்து வதக்கினால் குழம்பைப் பார்க்கவே அழகாக இருக்கும். ருசியும் அதிகமாகும்.
   
* ஆப்பத்துக்கு மாவு அரைக்கும் போது தேங்காய்த் துருவலுடன், தேங்காய் தண்ணீரையும் சேர்த்து அரைத்தால், பஞ்சு பஞ்சாக அருமையான ஆப்பம் தயார்!
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
   
* குருமா, கிரேவி, நூடுல்ஸ் போன்றவற்றுக்கு தக்காளி சேர்ப்பதற்குப் பதில் தக்காளி கெச்சப் சேர்த்து சமைத்துப் பாருங்கள். நிறமும் சுவையும் சூப்பராக இருக்கும்!
   
* காரம் சேர்த்துச் செய்யும் பலகாரங்களுக்கு காரப்பொடி போடாமல், பச்சை மிளகாயுடன் காய்ந்த மிளகாய்கள் சேர்த்து அரைத்து, வடிகட்டி, அந்த தண்ணீரைப் பயன்படுத்தினால் பலகாரங்கள் சூப்பராகவும் நல்ல நிறமாகவும் இருக்கும்.
   
* கறிவேப்பிலை துவையல் அரைக்கும் போது சுக்கை உப்பு தடவி தணலில் சுட்டால் அது உப்பிக் கொண்டு வறுபடும். அந்த சுக்கையும் கறிவேப்பிலை சாமானோடு சேர்த்து அரைத்தால் இந்தத் துவையல் மிகவும் ருசியாகவும் இருக்கும். வாயு உபத்திரவம், சளித்தொல்லை, உடல் வலியும் போகும்.
   
* பிஸிபேளா ஹுளி செய்யும் போது அரிசியுடன் சிறிதளவு ஊற வைத்த ஜவ்வரிசியையும் சேர்த்து செய்தால், சாதம் மிக மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். ஆழாக்கு அரிசிக்கு 1 அல்லது 2 டீஸ்பூன் ஜவ்வரிசி போதுமானது.

* பப்பாளி இலை சாறை எடுத்து தேமலின் மீது தேய்த்து வந்தால் நாளடைவில் குணம் கிடைக்கும். பப்பாளி பழத்தை நன்கு மசித்து பால் ஏட்டுடன் முகத்தில் தேய்த்து கடலைமாவும் தயிரும் கலந்து முகத்தைக் கழுவினால் முகம் பளிச்சென இருக்கும்.

நன்றி குங்குமம் தோழி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக