ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்னைப் பற்றி...
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

அறிமுகம்-சத்யா
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

சில்லுகள்...
 T.N.Balasubramanian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தினம் தினம் திருமணம் : திருவிடந்தை

View previous topic View next topic Go down

தினம் தினம் திருமணம் : திருவிடந்தை

Post by ayyasamy ram on Mon Apr 25, 2016 7:30 pm

கடலலை கூட சற்று அலுப்போடு ஓய்ந்து போனாலும்
போகலாம். ஆனால், அதே கடலின் அருகிலிருக்கும்
திருவிடந்தை நித்ய கல்யாணப் பெருமாள் கோயிலில்
நடைபெறும் திருமணத்திற்கு முடிவேயில்லை.

இந்தப் பெண்ணுக்கு கல்யாணம் ஆக வேண்டுமே,
இந்தப் பையனுக்கு சீக்கிரம் நல்ல பெண் அமைய
வேண்டுமே என்று பெற்ற தந்தை-தாயைவிட ஒரு படி
கூடவே கருணையும் கவலையும் கொண்டு அருள்
பாலித்து வருகிறார், திருவிடந்தை வராகப் பெருமாள்.

புராண காலத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட
ஞானப்பிரான், சரித்திர காலத்திலும் லீலைகளை
நிகழ்த்தியிருக்கிறான். காலங்களில் இடைவெளி
இருந்தாலும் எப்போதும் மணக்கோலக் காட்சிதனில்
மாறாது அருள்பாலித்துக் கொண்டிருக்கிறான்.

சம்பு தீவில் சரஸ்வதி ஆற்றங்கரையில் குனி எனும்
முனிவர் தவமியற்றி வந்தார். அந்த ரிஷியை அண்டி
அவருக்கு பணிவிடை செய்ய கன்னிகை ஒருத்தி
வந்தாள். ஆனால், அவளுடைய விருப்பம் நிறைவேற
முடியாதபடி, முனிவர் வீடுபேறு அடைந்தார்.

எப்படியேனும் ஏதேனும் ஒரு ரிஷிக்கு பணிவிடை
செய்து, அவரின் தர்ம பத்தினியாகி தானும் இறைவனின்
பதம் அடையலாம் என்று நினைத்தாள் அவள்.

என்ன செய்வது என்று தெரியாது பல காடுகளைச்
சுற்றினாள். அவளது உண்மையான விருப்பத்தை அறிந்த
காலவ முனிவர் அவளை ஏற்க முன் வந்தார்.
அவளை மணம் புரிந்தார். பெரிய பிராட்டியார்
மகாலட்சுமியின் அனுக்கிரகத்தால் முன்னூற்று அறுபது
பெண்கள் பிறந்தார்கள்.

தன்பத்தினி காலத்தின் கோலத்தால் பரமபதம் அடைய,
காலவ முனிவர் முன்னூற்று அறுபது கன்னிகைகளையும்
காப்பாற்ற வேண்டுமே என்று கவலையானார்.

வேதமூர்த்தியாகவும் ஞானப்பிரானாகவும் விளங்கும்
ஆதி வராகரை வேண்டினார். பக்தர்களுக்கு ஒரு
குறையெனில் ஓடிவரும் தெய்வமான வராக மூர்த்தி
அவருக்கு காட்சி தந்தார்.

‘‘கவலையுறாதீர்கள் காலவ முனிவரே, நானே நாள்
தோறும் பிரம்மச்சாரியாக வந்து தங்களின் கன்னிகைகளை
திருமணம் செய்து கொள்கிறேன்’’ என்று அருளினார்.

காலவ முனிவர் தந்தை என்ற முறையில் நிம்மதியானார்.
அதற்குள் உள்ள சூட்சுமத்தை உணர்ந்தார். உலகில்
எல்லோரும் ஜீவாத்மாக்கள். இவர்கள் அனைவரும் காலவ
முனிவர் போன்ற குருவை துணைகொண்டால்
பரமாத்மாவான, பெருமாள் ஆதி வராகரை அடையலாம்.

இங்கு திருமணம் என்பது புறத்தில் நிகழ்ந்தாலும்,
அகத்திலே இனி ஒரு ஜென்மம் எடுக்காது, இந்த
மாயையிலிருந்து மீட்டு தன்பதம் சேர்த்துக் கொள்வான்
என்று பொருளும் உண்டு.

வராகர் யக்ஞ மூர்த்தி. வேதம் சொல்லும் தர்மங்கள்,
யாகங்கள் எல்லாவற்றையும் கொண்ட திருமணம் என்ற
இல்லற தர்மத்தையும் சொல்லும் தெய்வம். வேதத்தில்,
திருமண நிகழ்வில் கன்னிகா தானம் மிகமிக
முக்கியமானது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

திருமணம் என்பது தெய்வத்தால் நிச்சயிக்கப்படுகிறது
எனும் வார்த்தையிலுள்ள சத்தியம் இதுதான்.

எனவேதான் வராகர் காலவ முனிவரின் முன்னூற்று
அறுபது கன்னிகைகளையும் திருமணம் செய்துகொண்டார்.
முன்னூற்று அறுபத்தோராம் நாள் அனைத்து
கன்னிகைகளையும் ஒருவராக்கி அகிலவல்லித் தாயார்
எனும் திருநாமம் சூட்டி வராகப் பெருமாள் எழுந்தருளச்
செய்தார். காலவ முனிவர் வராகரின் கருணையை
எண்ணி கண்ணீர் விட்டார்.

‘‘திருவிடந்தை எனும் இத்தலத்தில் நான் என்றும்
நித்திய கல்யாணப் பெருமாளாகவே அருள்புரிவேன்’’
என்றும் உறுதி கூறினார் பெருமாள். அதனாலேயே
இத்தலத்திற்கு ‘நித்தியகல்யாணபுரி’ என்றும் பெயர்
உண்டு.

பல்லவ மன்னன் ஒருவன் இத்தலத்தின் மகாத்மியத்தை
அறிந்து தினமும் ஒரு பெண்ணுக்கு இத்தலத்தில்
திருமணம் செய்து வைப்பேன் என்று அறிவித்தான்.
அதுபோல தினமும் ஒரு தம்பதியாக திருமணம் நடத்தி
வைத்தான்.

ஆனால், ஒருநாள் ஒரு பெண்ணுக்கு வெகுநேரமாகியும்
மணமகன் கிடைக்கவில்லை. காத்திருந்து காத்திருந்து
நாழிகைகள் கரைந்து கொண்டிருந்தன. ஆனால், அவன்
வேண்டுதல் வீணாகவில்லை

அதிசுந்தரனாக பேரழகு பொருந்திய மணமகன் வந்தான்.
மணம் செய்து கொண்டான். ‘‘மன்னா என்னைப் பார்’’
என்று சொல்லி வராகராக காட்சி தந்து மறைந்தான்.
மன்னன் மூலவரே வராக மூர்த்தியாக அமையும் படியாக
ஆலயம் எழுப்பினான். உதிரிப் பூக்களாக வந்த வரன்கள்
எல்லோரும் தொடுத்த மாலையாக சென்றனர்.
வெகுவிரையில் மணமுடித்து வந்து பகவானின் திருப்பாதம்
பணிந்தனர்.

எந்தை என்றால் எம் தந்தை என்று பொருள்.
எம் தந்தையாக பெருமாள் திரு என்கிற லட்சுமி தாயாரை
இடப் பாகத்தில் கொண்டுள்ளதால் திருவிடவெந்தை எனப்
பெயர் பெற்றது. அதுவே திருவிடந்தை என்று மறுவியது.
பெரியதுமல்லாது சிறியதுமல்லாது நடுவாந்திரமான கோயில்.
ஆனால், தொன்மை கீர்த்தியில் ஈடு இணையற்ற தலம்.
கருவறையில் வராகர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு
நோக்கிய திருமுகமண்டலத்தோடு சேவை சாதிக்கிறார்.

இடது காலை மடித்து அந்த மடியில் தாயாரை அமர்த்தி
அவரின் காதருகே சரம ஸ்லோகம் எனும் மந்திரத்தை
உபதேசிக்கும் கோலம், காணக் கண்கோடி வேண்டும்.

பெருமாளின் இடது திருவடி ஆதிசேஷன் தம்பதியினரின்
சிரசில் படுமாறு அமைந்தது அரிய அமைப்பாகும். இவரை
தரிசிப்பவர்களுக்கு ராகு-கேது தோஷ நிவர்த்தியும் ஏற்பட்டு
விடுகிறது.

உற்சவர்களான பெருமாள், தாயார் இருவருக்கும் கன்னத்தில்
இயற்கையிலேயே திருஷ்டி பொட்டு அமைந்திருக்கிறது.
எப்போதும் கல்யாண வீட்டின் குதூகலம் நிரம்பியிருக்கிறது.
தனிக்கோயில் கொண்டுள்ள தாயாரின் திருப்பெயர்
கோமளவல்லித் தாயார் என்பதாகும். அருளும், அழகும்
ஒருசேர வீற்றிருந்து செல்வ வளத்தை பெருக்குவதில்
இவளுக்கு நிகர் எவருமில்லை.

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார்
இத்தலத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார்.
திருமணத்திற்கான பரிகாரம் இத்தலத்தில் எப்படி நிகழ்த்தப்
படுகிறது என்று பார்ப்போம். திருமணமாகாத ஆணோ,
பெண்ணோ அருகிலுள்ள கல்யாண தீர்த்தத்தில் குளித்து
தேங்காய், பழம், வெற்றிலை, மாலைகளோடு லட்சுமி
வராகரை சேவித்து, அர்ச்சனை செய்து கொண்டு அர்ச்சகர்
கொடுக்கும் ஒரு மாலையை கழுத்தில் அணிந்து ஒன்பது
முறை கோயிலை வலம் வரவேண்டும்.

திருமணம் முடிந்த பிறகு தம்பதி சமேதராக பழைய
மாலையோடு வந்து அர்ச்சனை செய்து வராகரை சேவித்து
செல்வது இத்தலத்தின் வழக்கம். பெரும்பாலான பக்தர்களுக்கு
அந்த மாலை காயும் முன்பே திருமணம் நிச்சயமாகிவிடுவது
சகஜமானது.

சென்னை-மாமல்லபுரம் பாதையில் 42 கி.மீ. தொலைவிலும்,
மாமல்லபுரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது
திருவிடந்தை.

—————————
– கிருஷ்ணா
படங்கள்: விவேகானந்தன்
நன்றி- குங்குமம்- ஆன்மிகம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum