ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
குற்றப் பரம்பரை
 Meeran

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 நாகசுந்தரம்

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

வறட்சியும், விவசாயமும்
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

குறையொன்றுமில்லை - முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யார் - தொடர் பதிவு

View previous topic View next topic Go down

குறையொன்றுமில்லை - முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யார் - தொடர் பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Mon May 02, 2016 9:43 am

ஈகரை நண்பர்களுக்கு வணக்கம்முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யாரின் குறையொன்றுமில்லை என்ற நூல் எட்டுத் தொகுதிகளாக உள்ளன. அவை அனைத்தும் அவரது சொற்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்டவை. இந்த தொடர்பதிவில் தொடர்ந்து அவரது சொற்பொழிவை எழுத்துவடிவில் வாசிக்கப் போகிறோம்.


Last edited by தமிழ்நேசன்1981 on Mon May 02, 2016 9:46 am; edited 1 time in totalநீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: குறையொன்றுமில்லை - முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யார் - தொடர் பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Mon May 02, 2016 9:44 am


1

யமுனை நதி புண்ணியத்தைத் தேடிக் கொண்டது. கோதாவரியோ களங்கத்தைத் தேடிக் கொண்டது! எப்படி என்கிறீர்களா? 'தூய பெருநீர் யமுனைத் துறைவனை...' என்று பாடிய ஆண்டாள், கண்ணனுடைய அவதார காலத்தில் உபகாரம் பண்ணின யமுனை நதிக்கு நற்சான்றிதழ் தருகிறார். என்ன உபகாரம்...?
வசுதேவர் கண்ணனைத் துரக்கிக் கொண்டு நந்த கோகுலத்துக்குப் போகையில், அவர் கேட்காமலே இடுப்பளவுக்கு வடிந்து வழி விட்டது அந்த யமுனா நதி. புண்ணியத்தை, துய்மையைத் தேடிக் கொண்டது.
ஆனால் கோதாவரி நதியோ களங்கத்தைத் தேடிக் கொண்டது. எப்படி..? ஸ்ரீராமாவதாரத்தின் போது ராவணன் சீதாபிராட்டியை அபகரித்துப் போகிறான். அப்போது பிராட்டி கதறி அழுகிறார்: "ஹே, கோதாவரி! நீயும் பெண், நானும் பெண்...எனக்கு நேரும் துன்பத்தை இப்படி நீ பார்த்துக்கொண்டிருக்கியே...? என் பர்த்தா வந்து என்னைத் தேடுவார். அப்போதாவது சொல்லு, ராவணன் என்னை அபகரித்துப் போனான் என்று தவறாமல் சொல்லு."
ராமன் வந்து தேடியபோது, ''சீதையைக் கனடீர்களா?'' என்று மரம் மட்டையையெல்லாம் கேட்ட போது, கோதாவரி பதிலே சொல்லவில்லையாம். ஒரு அலை கூட அடிக்கலை! ராவணனிடம் இருந்த பயத்தினால் பேசாமல் இருந்து விட்டாள்!
உண்மை தெரிந்தவர்கள், உரிய சமயங்களிலே அதைச் சொல்ல வேண்டும். வெளிப்படுத்த வேண்டும். அப்படி யில்லாமல் 'நமக்கு அதில் நேரடி சம்பந்த மில்லை'ன்னு வாய் பொத்தி இருந்துட்டா களங்கம் வந்துடும். அப்பேர்ப்பட்ட களங்கம்தான் கோதாவரிக்கு ஏற்பட்டது.
திரேதா யுகத்திலே கோதாவரிக்கு ஏற்பட்ட இந்தக் களங்கம் கலியுகத்திலே தீர்ந்து போயிற்று. எப்போது தீர்ந்தது என்று கேட்டால், ஸ்ரீவில்லிபுத்துரிலே ஆண்டாள் பிறந்தப்போ, பெரியாழ்வார் அந்தக் குழந்தைக்கு கோதா (கோதை) என்று பெயர் வைத்தாரே. அப்போது தீர்ந்தது கோதாவரியின் களங்கம்!
இந்தக் கதையைச் சொல்லி அடியேன் ஆரம்பிக்கறதுக்கு ஒரு காரணம் இருக்கு. 'நாம சாம்யம் - பெயர் ஒற்றுமை' என்கிறதன் பெருமை நேயர்களுக்குப் புரிய வேண்டு மில்லையா...? அதனால் சொன்னேன்.
நம் குழந்தைகளுக்கும் தெய்வீகத் திருப்பெயர்களைச் சூட்டுவது இந்த நாம சாம்யம் கருதித்தான். பெயர் சூட்டப்படுபவர்களுக்கும் ராமா, கிருஷ்ணா என்று அந்தப் பெயர்களைச் சொல்லி அழைப்பவர்களுக்கும ஒருசேர நன்மைகள் உண்டாகும் என்றுதான்.
‘பாதேயம் புண்டரீகாட்ச நாம சங்கீர்த்தனாம்ருதம்' என்கிறது கருடபுராணம். பகவானின் கல்யாண் குணங்களைச் சொல்லும் திருநாமங்கள் ஒரு மூட்டை' என்று இதற்கு அர்த்தம்!
'மூட்டை என்றால் சுமையல்லவா...?' என்று யோசிக்கக்கூடாது! பூர்வகாலத்தில் ஊர் விட்டு ஊர் செல்பவர்கள் நடந்துதான் போவார்கள். கையில் ஒரு மூட்டையை எடுத்துப் போவார்கள். கட்டுச் சாத மூட்டை! வழியிலே குளக்கரையிருக்கும். மரத்தடியில், குளக் கரையில் மூட்டையைப் பிரித்து வைத்துச் சாப்பிடுவார்கள். களைப்பும் தீரும்; போய்ச் சேர வேண்டிய இடத்துக்கும் போய்ச் சேரலாம்.
வாழ்க்கை என்கிற பயணத்துக்கான கட்டுச்சாத மூட்டைதான் புண்டரீகாட்ச நாம சங்கீர்த்தனாம்ருதம். சிரமத்தை, களைப்பை, அலுப்பைப் போக்கும் மூட்டை பெரியாழ்வார் சொல்கிறார் பாருங்கள்:
'நினைந்திருந்தே சிரமம்
தீர்ந்தேன் நேமி நெடியவனே...'
பகவானை எண்ணிக்கொண்டே நாம சங்கீர்த்தனம் பண்ண வேண்டும். சங்கீர்த்தனம் என்றால் இடைவிடாது எப்பவும் சொல்லிக்கொண்டேயிருப்பது என்று பொருள்.
'இடைவிடாது சொல்கிற அளவுக்கு அப்படி என்ன பெருமையிருக்கிறது...? ஏன் சொல்ல வேண்டும்?' என்று தர்க்கம் பண்ணலாம். நமது ஹிந்து மதத்துக்குப் பரம ப்ரமாணம் வேதம் தான். பக்தி, ப்ரபத்தி, சரணாகதி, கர்ம யோகம், ஞானயோகம் - எல்லாம் வேதத்தில் உள்ளவை தான். பகவானே கூட அந்த வேதத்தைத்தான் மேற்கோள் காட்டிச் சொல்கிறார்.
ஏகாதசி தினம் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதருக்கு ஈரவாடை சேவை. ஆபரணங்களையெல்லாம் களைந்து விட்டு வெறும் துளசி மாலை அணிவித்திருக்கிறார்கள். ஈரம் படிந்த வஸ்திரம் திருமேனியில் கிடக்கிறது. கற்பூர ஹாரத்தி நடக்கிறது. கொள்ளமாளா இன்ப வெள்ளமாய் ஆச்சர்யமாய் தோற்றமளிக்கிறார் பகவான்.
அப்போது ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் பெரிய சண்டையே வந்ததாம். 'நான் சுதந்திரன்' என்று வாதாடியதாம் ஜீவாத்மா. 'இல்லை நீ எனக்குக் கட்டுப்பட்டவன்’ என்றான் பகவான். எதுனால அப்படிச் சொல்கிறாய்...? என்று எதிர்த்துக் கேட்டதாம் ஜீவாத்மா.
இந்தச் சமயத்திலே பகவான், நான் சொல்றேன். அதனால் நீ என் அடிமை என்று பதில் சொல்லல்லை.
'வேத மூல ப்ரமாணாத்' என்று பதில் சொல்கிறார்! அதாவது, வேதத்தின் மூலமான ஓம்காரத்தை ஆராய்ந்தால் உன் எதிர்க் கேள்விக்குப் பதில் கிடைக்கும் என்று சத்தியம் பண்ணுகிறார். ஈர ஆடையிலிருந்து ஜலம் சொட்டச் சொட்ட சத்தியம் பண்ணுகிறார்.
'நான்' என்ற சப்தமே ஒலிக்காமல், அந்தப் பெருமானே வேதத்தில் பதில் தேடு' என்று சொன்னதன் மூலம் வேதத்தின் உயர்வைப் புரிஞ்சுக்கணும். அவனையும் நம்மையும் சேர்த்து வைக்கிறது அந்த வேதம்தான்.
அப்பேர்ப்பட்ட வேதத்திலே. திருநாம வைபவம் பற்றிச் சொல்லியிருக்கிறதா...? திவ்யமாய்ச் சொல்லியிருக்கிறது! நம்மைப் பார்த்து ரொம்ப ஆதரவாக அந்த வேதம் சொல்கிறது:
பகவான் கட்டிப் பொன் போலே...
அவன் திருநாமம் ஆபரணங்களைப் போலே.
கட்டிப் பொன் மிக உசத்தியானதுதான். ஆனால் அதைத் தலையில் வைச்சுக்க முடியுமா? கழுத்திலே போட்டுக்க முடியுமா? அல்லது முதுகிலே தாங்கிக் கொண்டு நிற்கத்தான் முடியுமா?
ஆனால் பகவானின் திருநாமங்களோ உடனே எடுத்தாளக்கூடிய ஆபரணங்கள். அணிந்தும் அணியச் செய்தும் மகிழலாம்; அழகு பார்க்கலாம்.
பிள்ளைலோகாச்சார்யார் தமிழில் மூன்று அழகான சூத்திரங்கள் மூலம் இந்த வேதப் பொருளை விளக்குகிறார்:
'வாச்ய பிரபாவம் போலன்று வாசக பிரபாவம்'
வாச்யன் - பகவான்; வாசகம் - அவன் நாமம். பகவான் கைவிட்டாலும் விட்டுவிடுவான். ஆனால் அவன் நாமம் கைவிடாது.
'அவன் தூரஸ்தனானாலும் இது கிட்டி நின்று உதவும் 'ஹே விஷ்ணு! இதை எற்றுக்கொள்' என்று சொல்லி ஹோமம் பண்ணுகிறோம். அவன் எங்கே வேண்டுமானா லும் இருக்கட்டுமே; அவன் பெயரைச் சொல்லி அளிப்பது அவனுக்குப் போய்ச் சேருகிறது.
"திரெளபதிக்கு ஆபத்திலே ஆடை கரந்தது கோவிந்த நாமமிறே' வஸ்திர அபஹரணம் நடக்கும் போது திரெளபதி கூப்பிடுகிறாள்: 'ஹே கிருஷ்ணா. ரக்ஷமாம் சரணாகதாம்.' என்று. ஆனால் பகவான் அவளை ரக்ஷிக்கவில்லை. இதை அந்த பகவானே சொல்கிறார்:
"ஒவ்வொரு அவதாரத்திலும் ஒரு குறை உண்டு. கிருஷ்ணாவதாரத்திலே திரெளபதியை உடனடியாக ரக்ஷிக்காதது என் குறை. என்கிறார்.
"திரெளபதிக்கு ஆடை சுரந்ததே. உன்னாலன்றி வேறு யாரால் அது சாத்தியமானதாம்...? என்று கேட்டால் பகவான் சொல்கிறார்:
"நானில்லை; என் கோவிந்த நாமம் அவளை ரக்ஷித்தது.'
அதனால்தான் ஆண்டாள் பாடினாள். 'இப்படியெல்லாம் குறைப்பட்டுக் கொள்கிறாயே, உன்னிடம் கூட குறை என்பது இருக்குமா?' என்று
அர்த்தமாகும்படி திருப்பாவையில்
'குறையொன்றுமில்லாத கோவிந்தா' என்று அவனை அழைத்தாள்.
கோவிந்தா என்கிற நாமம் இருக்கும்போது உனக்குக் குறை இல்லை. உன்னை ஆச்ரயிக்கிறவர்களுக்கும் குறையில்லை...' என்றாள்.
பகவானின் நாமமே நம்மை ரக்ஷிக்கும். அவனை விட நம்மிடம் அதிகப் பரிவுடையது அவன் நாமம்.
'எல்லாம் சரிதான். இப்படி இடைவிடாது கோவிந்தா என்று சங்கீர்த்தனம் பண்ணிக் கொண்டிருந்தால் உலகக் கடமைகளைச் செய்ய வேண்டாமா...? அவனுடைய பல நாமங்கள் சமஸ்கிருதத்தில் உள்ளனவே. வாயிலே நுழைய வேண்டாமா? இப்படி நியாயமான சந்தேகங்கள் பல பேருக்கு வரத்தான் செய்யும்.
அவற்றுக்கான பதில்களை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

தொடரும்....நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: குறையொன்றுமில்லை - முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யார் - தொடர் பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Mon May 02, 2016 10:25 am

2

அதிக சம்ஸ்கிருத ஞானமில்லாத ஒருத்தர். ரொம்பவும் பக்தியோடு தினமும் 108 தடவை சொல்லி வந்தார்.
"பத்மநாபோ, மரப் பிரபு.”
'பத்மநாபோ அமரப் பிரபு! என்று பதம் பிரித்துச் சொல்றதுதான் சரி. அமரர்களின் (தேவர்களின்) பிரபுவே! அரசனே! என்று அதற்கு அர்த்தம்.
ஆனால் 'மரப் பிரபு!'ன்னு தப்பாகப் பதம் பிரித்தவர் மரங்களுக்கு அரசனே என்று அர்த்தம் பண்ணிக் கொண்டார்! அந்த அர்த்தத்துக்கு ஏற்ப, ஊர்க் கோடி யிலிருந்த அரச மரத்தைச் சுற்றி வந்து 'பத்மநாபோ மரப் பிரபு! பத்மநாபோ மரப் பிரபு'ன்னு தினமும் 108 பிரதட்சணம் பண்ணினார்.
அந்த வழியே போன ஒரு சம்ஸ்கிருத பண்டிதர் இதைப் பார்த்து நடுங்கிப் போயிட்டார்.
தவறாக உச்சரித்தவரை நிறுத்தினார். திருத்தினார். "நீர் ரொம்ப உசந்த காரியம்தான் பண்றீர். ஆனால் வாக்கு சரியில்லை. "பத்மனாபோ அமரப்பிரபு! அப்படின்னு சொல்லணும்." என்று கூறி அர்த்தத்தையும் விளக்கினார்.
தவறாக உச்சரித்தவர் ரொம்பவும் வேதனைப்பட்டு, "அடாடா! தெரியாமல் சொல்லிவிட்டேனே. எனக்குப் பாவம் சம்பவிக்குமா?'' என்று கவலையுடன் கேட்டார்.
“அதெல்லாம் சம்பவிக்காது. தெரியாமல் சொன்னதற்கு தோஷமில்லை; இனிமேல் அப்படிச் சொல்லாமல் சரியாகச் சொல்லு." என்றார் திருத்தினவர்.
மறுநாளிலிருந்து திருத்தி உச்சரிக்க ஆரம்பித்தார் முதலாமவர். மரப் பிரபு அல்ல என்பதால் மரத்தைப் பிர தட்சணம் பண்ணுவதையும் நிறுத்திவிட்டார். வாசல் திண்ணையில் உட்கார்ந்தபடியே 'பத்மநாபோ அமரப் பிரபு! என்று சொல்லி வந்தார்.
அன்று இரவு, திருத்திய வித்வானின் சொப்பனத்தில் பகவான் வந்தார்.
"உம்மை யாரு சமஸ்கிருதம் படிக்கச் சொன்னா..? அப்படியே படிச்சதுதான் படிச்சீர். அந்த பக்தரை யாரு திருத்தச் சொன்னா..? நீர் திருத்திய பிறகு அவர் மரத்தைப் பிரதட்சணம் செய்யறதை நிறுத்திட்டார். அப்படியானால் நான் மரங்களுக்குப் பிரபு இல்லையா? உமக்கு விஷ்ணு புராணம் தெரியாதா...?”
ஜோதீம்ஷி விஷ்ணு:
புவனானி விஷ்ணு:
வனானி விஷ்ணு?:
என்று பராசர மஹரிஷி சொன்னது தெரியாதா? (ஜோதீம்ஷி-ஒளி, புவனானி-உலகங்கள்; வனானி-காடுகள்) நீர் திருத்திச் சொன்னதால் 108 பிரதட்சணங்கள் செய்யறதை அவர் நிறுத்தினார். திரும்பவும் போய் அவரிடத்திலே சொல்லும்.. மரப் பிரபு: என்றே சொல்லச் சொல்லு.” என்று கோபித்துக் கொண்டார் பகவான்.
குழந்தை சரியாக உச்சரிக்காவிட்டாலும் மகிழ்ச்சியோடு நாம் கேட்கவில்லையா...? அது போல்தான் எல்லையற்ற கருணையுடைய பகவானும் நம்மைக் குழந்தைகளாய்ப் பாவித்துக் கேட்கிறான்.

ஒருவருக்கு 'க்ரு என்று சொல்ல வராது. 'க' வரும் இடத்தில் எல்லாம் 'த' என்று உச்சரிப்பார். அவருக்கு மந்திரம் சொல்லிக் கொடுக்க முயன்றார் ஒரு வித்வான்.
"ஸ்ரீ கிருஷ்ணாய நம:'' என்பதற்கு பதில் “ஸ்ரீ திருஷ்ணாய நம:'' என்று தவறாகவே உச்சரித்தார் மாணவர். ''உமக்கு என்னால் சொல்லித் தர முடியாது...'' என்று சலித்துக் கொண்டார் வித்வான்.
அங்கே இன்னொரு வித்வான் வந்தார். "அவர் ஸ்ரீ த்ருஷ்ணயே என்றே சொல்லட்டும். பாதகமில்லை...” என்றார் அந்த இரண்டாவது வித்வான்.
"ஏன்.?”
“ஸ்ரீ திருஷ்ணாய என்றால், ஸ்ரீயினிடத்திலே திருஷ்ணை உடையவன் என்று அர்த்தம்... (ஸ்ரீ-மகாலஷ்மி; திருஷ்ணை-அன்பு) அவர் சொல்வதும் பகவானையே குறிக்கும்..” என்றார்.
இந்தக் கதைகளைச் சொல்வதாலே, மந்திரங்களை, பகவான் நாமத்தைத் தப்பும் தவறுமாகச் சொல்லலாம் என்று அர்த்தம் இல்லை. அறியாமையாலும் இயலாமையா லும் அவ்வாறு தவறாகச் சொன்னாலும், மனத்திலே அவன் நினைவு ஆத்மார்த்தமா இருந்தால் அதை அவன் அப்படியே ஏற்பான் என்கிறதுக்காகச் சொன்னது.
அடியேன் திருப்பதி போயிருந்த சமயம். சுவாமி புஷ் கரணியில் ஸ்நானம் பண்ணப் போனேன். அப்போது அங்கே தெனாலியிலிருந்து வந்த ஒரு குடும்பம், முடி கொடுத்து விட்டு ஸ்நானம் பண்ணிக் கொண்டிருந்தது.
அந்தக் குடும்பத் தலைவர் முங்கி எழுந்து, தலைக்கு மேல் கைகூப்பி "கோஹிந்தா! கோஹிந்தா...!" என்று பெருமானை அழைத்துக் கொண்டிருந்தார்.
''கோஹிந்தா இல்லை; கோவிந்தான்னு சொல்லணும்..” என்று அவரைத் திருத்த அடியேன் எழுந்தேன். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் என்னை ஸ்தம்பித்துப் போகப் பண்ணின.
"ஏழுமலையானே! ஒவ்வொரு வருஷமும் இதே நாளில் உனக்கு வந்து முடிகொடுத்து விட்டு உன்னை சேவிச்சுட்டுப் போகிறேன். போன வருஷம் போலவே இந்த வருஷமும் நான் சந்தோஷமா இருக்க அனுக்கிரஹம் பண்ணு.” என்று உரக்க பிரார்த்தனை செய்தார் அந்த பக்தர்.
'அவரைத் திருத்தணும்' என்று எழுந்தவன் உடன் அப்படியே உட்கார்ந்து விட்டேன். போன வருஷமும் அந்த பக்தர் கோஹிந்தா கோஹிந்தான்னு தானே பகவானைக் கூப்பிட்டிருப்பார். அதற்காக பகவான் அவருக்கு அனுக்கிரஹம் பண்ணாமல் விட்டு விடவில்லையே... 'கோஹிந்தா'ன்னு சொன்னதற்கே ஒரு வருஷம் ஆனந்தமாக அவர் இருந்திருக்கிறாரே! இந்த வருஷமும் போன வருஷத்தைப் போன்ற சந்தோஷத்தைத் தானே பக்தர் கேட்கிறார்...!
இதை உணர்ந்ததும், அவரைத் திருத்தணும் என்கிற என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். எம்பெருமானுக்கு நம்மிடத்திலே என்ன வாத்ஸல்யம்! (கருணை) என்று சிலிர்ப்பு வந்தது.
பாண்டித்யம் இல்லாவிட்டாலும் பகவான் நாமத்தைச் சொல்லலாம். ஆனால் அதை இடைவிடாது சங்கீர்த்தனம் பண்ணனும்னு போன வாரம் சொன்னது எப்படி சாத்தியப்படும்...?
இதற்குத்தான் நாம சங்கீர்த்தனத்தை நமக்கு வாழ்க்கை முறையாகவே வைத்திருக்கிறது.
பெருமாளை எழுந்தருளப் பண்ணுகிறவர்களுக்குத் தோளிலே காய்த்துப் போயிருக்கும். அதுபோல நாம சங்கீர்த்தனத்தைப் பழக்கமாகப் பண்ணிக் கொள்ளணும். 'நாவிலேயே தழும்பு ஏற்பட்டுப்போகும் அளவுக்கு திரு நாமத்தை உச்சாடனம் பண்ணனும்; எத்தனை தடவைன்னு கேட்கக் கூடாது' என்கிறார், திருமங்கையாழ்வார்.
தழும்பு எப்படி உண்டாகும்? மீண்டும் மீண்டும் சொல்வதால். அதற்குத்தான் நியமம் ஏற்பட்டிருக்கிறது.
எழுந்திருக்கும் போது - துயிலெழும்போது, ஹரிர் ஹரி, ஹரிர் ஹரி: என்று ஏழு தடவை சொல்ல வேண்டும். உரக்க, பெரிசா சொல்லணுமா? மனசுக்குள்ளே சொன்னால் போதாதா? மனசுக்குள்ளே சொன்னால் பலன் நமக்கு மட்டும். பெரிசா சொன்னா அக்கம் பக்கத்திலே இருப்போரும் அதைக் கேட்டபடி எழுந்திருப்பார்கள். பரோபகரமாகவும் இருக்கும்.
வெளியிலே கிளம்பிப் போகும்போது 'கேசவா' என்று உச்சரிக்கணும்.
திருவனந்தபுரத்து அனந்த பத்மநாபசுவாமி குறித்து நம்மாழ்வார் பாடுகிறார்:
'கெடும் இடராயவெல்லாம் கேசவா என்ன...'
'கேசவா' என்று சொன்னால் இடர்களெல்லாம் கெடுமாம். அதனால்தான் ஒரு காரியமாகப் புறப்படும் போது 'கேசவா' என்று அழைப்பது.
ஆண்டாள் இந்த அனுஷ்டானத்தைக் கடைப்பிடித் திருக்கிறார்.
''கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்...''
என்கிறது திருப்பாவை. ''கேசவா கேசவா என்று பாடிக் கொண்டு புறப்பட்டுவிட்டோம். நீ அதைக் கேட்டும் கிடந்துறங்குகிறாயே...'' என்று துயிலெழுப்புகிறார்.
அடுத்தது உணவு கொள்வதற்கு முன்னால் 'கோவிந்தா' என்று சொல்லிவிட்டுச் சாப்பிட வேண்டும். கோவர்த்தன கிரியைக் குடையாய்ப் பிடித்தவனை இப்படி அழைப்பதன் மூலம் நித்ய அன்னம் கிடைக்க உத்தரவாதம் செய்து கொள்கிறோம்.
சிரமம் இல்லை, கஷ்டமான நியமமில்லை. ஹரீ, கேசவா, கோவிந்தா, மாதவா என்று எளிய நாமங்களை நாம் தினமும் செய்கிற காரியங்களோடு சேர்த்து விட்டிருக்கறதாலே எந்தவிதக் கூடுதல் முயற்சியு மில்லாமலே நாம சங்கீர்த்தனம் நடைபெற்று விடுகிறது.
ஆனால் சொல்கிற அந்த நேரத்திலே மனசு அளவு கடந்த பக்தியிலே நிரம்பியிருக்கணும். ''சொல்லிப் பார்ப்போமே, பலனிருக்கிறதாவென்று.” அப்படின்னு பரீட்சார்த்தமாகச் சொல்லக்கூடாது.
காரணம், அவனது நாமங்கள் சர்வ உத்தமமானவை: 'சர்வோத்தமஸ்ய கிருபையா...' சர்வ உத்தமமான அவனுடைய நாமங்களை நம்மை உச்சரிக்க வைப்பதும் அவனுடைய கிருபைதான். கருணைதான்!
முதலிலே இந்த நித்ய காரியங்களுடனான நாம உச்சாடனத்தைப் பழகிக் கொண்டு விட்டால் மனசு மேலும் மேலும் அந்த சத் அனுபவத்தைக் கேட்கும். அந்த மனசுக்கு தெய்வானுபவம் தரக்கூடியதாய் அமையப் பெற்றது விஷ்ணு சஹஸ்ரநாமம்.
நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: குறையொன்றுமில்லை - முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யார் - தொடர் பதிவு

Post by shobana sahas on Tue May 03, 2016 12:39 am

//'அவரைத் திருத்தணும்' என்று எழுந்தவன் உடன் அப்படியே உட்கார்ந்து விட்டேன். போன வருஷமும் அந்த பக்தர் கோஹிந்தா கோஹிந்தான்னு தானே பகவானைக் கூப்பிட்டிருப்பார். அதற்காக பகவான் அவருக்கு அனுக்கிரஹம் பண்ணாமல் விட்டு விடவில்லையே... 'கோஹிந்தா'ன்னு சொன்னதற்கே ஒரு வருஷம் ஆனந்தமாக அவர் இருந்திருக்கிறாரே! இந்த வருஷமும் போன வருஷத்தைப் போன்ற சந்தோஷத்தைத் தானே பக்தர் கேட்கிறார்...!
இதை உணர்ந்ததும், அவரைத் திருத்தணும் என்கிற என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். எம்பெருமானுக்கு நம்மிடத்திலே என்ன வாத்ஸல்யம்! (கருணை) என்று சிலிர்ப்பு வந்தது//
எனக்கு மிகவும் பிடித்தது .
அருமையான முயற்சி தமிழ்நேசன் . வாழ்த்துக்கள் . கண்டிப்பாக வாசிக்கிறோம் .
வி பொ பா .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: குறையொன்றுமில்லை - முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யார் - தொடர் பதிவு

Post by krissrini on Tue May 03, 2016 4:31 pm

மிக அருமையான முயற்சி. தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
avatar
krissrini
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 176
மதிப்பீடுகள் : 105

View user profile

Back to top Go down

Re: குறையொன்றுமில்லை - முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யார் - தொடர் பதிவு

Post by krishnaamma on Thu May 05, 2016 10:43 am

@தமிழ்நேசன்1981 wrote:ஈகரை நண்பர்களுக்கு வணக்கம்முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யாரின் குறையொன்றுமில்லை என்ற நூல் எட்டுத் தொகுதிகளாக உள்ளன. அவை அனைத்தும் அவரது சொற்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்டவை. இந்த தொடர்பதிவில் தொடர்ந்து அவரது சொற்பொழிவை எழுத்துவடிவில் வாசிக்கப் போகிறோம்.
மேற்கோள் செய்த பதிவு: 1205638

மிக்க நன்றி நேசன்... தொடருங்கள் ..........நான் எங்க அப்பாவின் தொகுப்பில் இருந்து கொஞ்சம் படித்து இருக்கேன் புன்னகை ............முக்கூர் மிகப்பெரிய மஹான் ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: குறையொன்றுமில்லை - முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யார் - தொடர் பதிவு

Post by krishnaamma on Thu May 05, 2016 10:57 am

முடிந்ததும் PDF ஆக தருகிறீர்களா நேசன், அல்லது நான் சேமித்துக் கொள்ளட்டுமா? .............கொஞ்சம் சொல்லுங்களேன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: குறையொன்றுமில்லை - முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யார் - தொடர் பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Thu May 05, 2016 10:59 am

@krishnaamma wrote:முடிந்ததும் PDF ஆக தருகிறீர்களா நேசன், அல்லது நான் சேமித்துக் கொள்ளட்டுமா? .............கொஞ்சம் சொல்லுங்களேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1205962

முடிந்து உடன் பிடிஎப் செய்கிறேன் அம்மா. சேமிக்க வேண்டாம்.
மொத்தம் எட்டு பாகங்கள் உள்ளது. ஒவ்வொரு பாகம் முடிந்த உடன் அதை பிடிஎப் ஆக செய்து தருகிறேன். புன்னகைநீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: குறையொன்றுமில்லை - முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யார் - தொடர் பதிவு

Post by krishnaamma on Thu May 05, 2016 11:26 am

இவரின் கதாகாலட்ஷேபங்கள் அனேக வருடங்கள் கேட்டிருக்கேன்; அப்படியே வளர்ந்திருக்கேன் நேசன், அவருக்குப் பிறகு வேறு யார் சொல்வதும் என் மனதுக்கு பிடிக்கலை..............அப்படியொரு பாண்டித்தியம், வர்ஷமாய் பொழிவார்............அவர் சொன்னது இன்றும் என் மனதில் இருக்கு என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்புன்னகை....நான் இவர் கதைகள் கேட்டது 70 களில் ...........85 இல் கல்யாணம் ஆனதும் சமாஜம் போவது விட்டுப்போச்சு, நாங்க ஹைதராபாத் போய்விட்டோம்......இப்போது போல whatus up இல்லையே அப்போ ...........அதனால் கதை கேட்பது விட்டுப்போச்சு.........கேட்டாலும் பிடிக்கலை புன்னகை
.
.
.

.
.
அப்புறம் இப்போ சிலவருடங்களாகத் தான் வேளுக்குடி கிருஷ்ணன் மாமா கதை சொல்லும் பாங்கு பிடித்து கேட்கிறேன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: குறையொன்றுமில்லை - முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யார் - தொடர் பதிவு

Post by krishnaamma on Thu May 05, 2016 11:28 am

@தமிழ்நேசன்1981 wrote:
@krishnaamma wrote:முடிந்ததும் PDF ஆக தருகிறீர்களா நேசன், அல்லது நான் சேமித்துக் கொள்ளட்டுமா? .............கொஞ்சம் சொல்லுங்களேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1205962

முடிந்து உடன் பிடிஎப் செய்கிறேன் அம்மா. சேமிக்க வேண்டாம்.
மொத்தம் எட்டு பாகங்கள் உள்ளது. ஒவ்வொரு பாகம் முடிந்த உடன் அதை பிடிஎப் ஆக செய்து தருகிறேன். புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1205963

மிக்க நன்றி நேசன் புன்னகை.............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
உங்களுக்கு ரொம்ப புண்ணியம் , ஷேமமாய் இருப்பீர்கள் !....என் மனமார்ந்த வாழ்த்துகள் ! ........... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் GOD BLESS YOU !
.
.
.
வி.பொ.பா.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: குறையொன்றுமில்லை - முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யார் - தொடர் பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Thu May 05, 2016 11:54 am

@krishnaamma wrote:இவரின் கதாகாலட்ஷேபங்கள் அனேக வருடங்கள் கேட்டிருக்கேன்; அப்படியே வளர்ந்திருக்கேன் நேசன், அவருக்குப் பிறகு வேறு யார் சொல்வதும் என் மனதுக்கு பிடிக்கலை..............அப்படியொரு பாண்டித்தியம், வர்ஷமாய் பொழிவார்............அவர் சொன்னது இன்றும் என் மனதில் இருக்கு என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்புன்னகை....நான் இவர் கதைகள் கேட்டது 70 களில் ...........85 இல் கல்யாணம் ஆனதும் சமாஜம் போவது விட்டுப்போச்சு, நாங்க ஹைதராபாத் போய்விட்டோம்......இப்போது போல whatus up இல்லையே அப்போ ...........அதனால் கதை கேட்பது விட்டுப்போச்சு.........கேட்டாலும் பிடிக்கலை புன்னகை
.
.
.

.
.
அப்புறம் இப்போ சிலவருடங்களாகத் தான் வேளுக்குடி கிருஷ்ணன் மாமா கதை சொல்லும் பாங்கு பிடித்து கேட்கிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1205964

நானும் வேளுக்குடியின் சொற்பொழிவுகளை கேட்டிருக்கிறேன் அம்மா.. விஜய் டிவி யில் அடிக்கடி காலையில் பேசுவார். தினுமும் காலையில் முதலில் வேளுக்குடி! அப்புறம் காபி குடி! என்று ஒரு சொலவடையே ஏற்படும் அளவிற்கு மக்கள் ரசித்து கேட்கும்படி பேசுவார். நல்ல ஞானம் இருந்தால்தான் அவ்வாறு பேச இயலும்.. நெட்டிலிருந்து அவரின் சுந்தரகாண்டம் சொற்பொழிவு எம்.பி3 பைல்களாக எடுத்து கேட்டிருக்கிறேன். அவர் பாணியில் சுந்தரகாண்டம் அற்புதமாக இருந்தது
முக்கூர லஷ்மி நரசிம்மாச்சார்யார் அவர்களின் சொற்பொழிவுகளை நான் கேட்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. புத்தகத்தின் மூலம் அதை சரிசெய்து கொள்ள முயற்சிக்கிறேன்.. புன்னகைநீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: குறையொன்றுமில்லை - முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யார் - தொடர் பதிவு

Post by krishnaamma on Thu May 05, 2016 12:40 pm

@தமிழ்நேசன்1981 wrote:

நானும் வேளுக்குடியின் சொற்பொழிவுகளை கேட்டிருக்கிறேன் அம்மா.. விஜய் டிவி யில் அடிக்கடி காலையில் பேசுவார். தினுமும் காலையில் முதலில் வேளுக்குடி! அப்புறம் காபி குடி! என்று ஒரு சொலவடையே ஏற்படும் அளவிற்கு மக்கள் ரசித்து கேட்கும்படி பேசுவார். நல்ல ஞானம் இருந்தால்தான் அவ்வாறு பேச இயலும்.. நெட்டிலிருந்து அவரின் சுந்தரகாண்டம் சொற்பொழிவு எம்.பி3 பைல்களாக எடுத்து கேட்டிருக்கிறேன். அவர் பாணியில் சுந்தரகாண்டம் அற்புதமாக இருந்தது
முக்கூர லஷ்மி நரசிம்மாச்சார்யார் அவர்களின் சொற்பொழிவுகளை நான் கேட்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. புத்தகத்தின் மூலம் அதை சரிசெய்து கொள்ள முயற்சிக்கிறேன்.. புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1205984

முக்கூர் காலத்தில் இவ்வளவு வசதிகள் இல்லையே நேசன், எங்களிடம் அப்பா செய்து வைத்துக் கொண்ட tape recorder ரில், அதன் கொர கொர சத்தத்துடன் தான் இருந்தது புன்னகை ....நிறைய தொலைக் காட்சிகளில் வேளுக்குடி மாமா நிகழ்ச்சிகள் வருகிறதே நேசன், you tube லும் நிறைய இருக்கு ! ...........தொடர்ந்து கேட்டாலும் நாம் ஒரு 15 - 20 வருடங்கள் கேட்கமுடியும் அவைகளை, அத்தனை இருக்கு புன்னகை ...........போறாததற்கு இப்போ தினமும் whatsup லும் தருகிறாரே!
.
.
பெப்பர்ஸ் டிவி இல் அவர் சொன்ன பாகவதம் மிக அருமை ! சூப்பருங்க கிருஷ்ணர் ராமர் இருவரைப் பற்றியும் சொல்வார் பாருங்கள் நமக்கு கண்ணில் தண்ணியே வந்துவிடும் அழுகை அழுகை அழுகை புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: குறையொன்றுமில்லை - முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யார் - தொடர் பதிவு

Post by krishnaamma on Wed Jun 08, 2016 10:18 pm

என்ன ஆச்சு நேசன்?...............தொடரலையே இந்த திரியை? சோகம்..ஆவலாய் காத்திருக்கிறேன்!


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum