ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 பழ.முத்துராமலிங்கம்

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 பழ.முத்துராமலிங்கம்

சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய ருத்ராட்சம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

நெல்லிக்காய்
 KavithaMohan

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 KavithaMohan

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 மூர்த்தி

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 ayyasamy ram

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

ஏழு நாடுகளின் சாமி
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 ayyasamy ram

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை ; 2வது முறையாக வென்றது இந்தியா.!
 பழ.முத்துராமலிங்கம்

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்
 ayyasamy ram

சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் கலைக்கென ஓர் இணையதளம்!
 பழ.முத்துராமலிங்கம்

தக்காளி குருமா| Thakkali kurma
 பழ.முத்துராமலிங்கம்

என் மனக்கோவிலின் அழிவில்லா ஓவியமே!!
 kandhasami saravanan

என் அருகில் நீயிருந்தால்.....
 kandhasami saravanan

நானும் அப்பாவானேன்!!
 kandhasami saravanan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

அல் குர். பகவத் கீதை. பைபிள் . தமிழாக்கம்
 Meeran

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

அமைதியும்????ஆரோக்கியமும்
 Meeran

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

சூப்பரான பன்னீர் பிரியாணி செய்வது எப்படி...?
 பழ.முத்துராமலிங்கம்

உப்பு தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ரொம்ப நல்லது. ஏன் தெரியுமா? வாசிங்க தெரியும்...
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

அறிமுகம் உங்களில் ஒருவனாக
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மருது - திரைப்பட விமர்சனம்

View previous topic View next topic Go down

மருது - திரைப்பட விமர்சனம்

Post by ayyasamy ram on Sat May 21, 2016 6:17 pm


-

லோடுமேன் வேலை பார்க்கும் விஷாலுக்கு,
அப்பத்தா என்றால் அவ்வளவு பாசம்.
'நீயெல்லாம் மனுஷியே கிடையாது, தெய்வம்!'
என்று தன்னிடம் நெகிழ்ந்து உருகும் பேரன்
விஷாலிடம் ஸ்ரீதிவ்யாவைக் காதலிக்கச்
சொல்கிறார் அப்பத்தா.
-
காதல் கடந்துபோக, கலவரம் துரத்த, அப்பாத்தாவை
வில்லன் கடத்த... அப்புறமென்ன... வழக்கம்போல
வில்லனுக்கும் விஷாலுக்கும் டிஷ்யூம் டிஷ்யூம்தான்!
-
பட விளம்பரங்களில் ‘விஷால் நடிக்கும்..’ என்று
இருக்கிறது. அதை, ‘விஷால் அடிக்கும்...’ என்று கூட
மாற்றலாம். அந்தளவுக்கு அடிக்கு அடி அடிதடிதான்!
-
'குட்டிப்புலி', 'கொம்பன்', 'மருது' என டைட்டில்கள்தான்
வித்தியாசமே தவிர, கதைக்களமும், இடமும் அதே
தெக்கத்திப் பக்கம். ஆர்ம்ஸ் ஏற்றிய உடம்போடு
லோடுமேன் கேரக்டருக்குக் கச்சிதமாய்ப் பொருந்தி
இருக்கிறார் விஷால்.
-


Last edited by ayyasamy ram on Sat May 21, 2016 6:20 pm; edited 1 time in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33638
மதிப்பீடுகள் : 11007

View user profile

Back to top Go down

Re: மருது - திரைப்பட விமர்சனம்

Post by ayyasamy ram on Sat May 21, 2016 6:18 pm-
அவர் போடும் 'கொக்கி'யில் மூட்டைகளைவிட
அதிகமாகக் கிழிவது வில்லன்களின் உடம்புதான்.
அந்தளவுக்கு பார்க்கும் வில்லன்களையெல்லாம் கத்தி,
கடப்பாறை, அரிவாளால் குத்தி எடுக்கிறார். ஆனால்,
மனிதர் என்ன செய்தாலும் நம்பத் தோன்றுமளவுக்கு
செம கெத்து. அதுவும் சங்கம், பஞ்சாயத்து, பொறுப்பு
என்று கிடைக்கும் இடைவெளிகளில் எல்லாம் ‘நடிகர்
சங்க விவகாரத்தை’ வைத்து பில்டப். நன்றாகவே
எடுபடுகிறது!
-
அப்பத்தாவாக நடித்திருக்கும் பாட்டி கொளப்புள்ளி லீலா,
மலையாள நடிகை. தமிழ் சினிமாவின் ’பாட்டி
க்ளப்புக்கு நல்வரவு. சச்சின் இடத்தைப் பிடிக்கிற கோலி
கணக்காக, மனோரமாவின் சாயலைக் காட்டுகிற நடிப்பில்,
தமிழ் படங்களில் நிரந்தர இடம்பிடிக்கும் வாய்ப்பு
தெரிகிறது.
-
பயப்படும்போது கண்கள், உதடுகள், தோள்கள் எல்லாமே
நடிக்கிறது இவருக்கு. விஷால், சூரியிடம் பேசும்போது
பாசமிக்க பாட்டியாகி அன்பைப் பொழிகிறார்.
-
வழக்கமாக படங்களில் ஹீரோவின் நண்பன் செய்யும்
லவ்வுக்கு ஐடியா வேலையை, இவரே விஷாலுக்கு
செய்கிறார். சபாஷ் அப்பத்தா. ஆனால், பல இடங்களில்
பின்னணிக் குரல்தான் ‘சிங்க்’ ஆகவே இல்லை
-
(பாட்டிக்கு மட்டுமல்ல... படத்தில் பலருக்கும் டப்பிங்
உதைக்கிறது!)


Last edited by ayyasamy ram on Sat May 21, 2016 6:21 pm; edited 1 time in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33638
மதிப்பீடுகள் : 11007

View user profile

Back to top Go down

Re: மருது - திரைப்பட விமர்சனம்

Post by ayyasamy ram on Sat May 21, 2016 6:18 pm-
தமிழ் சினிமாவின் பாரம்பரிய ரசிகர்கள் விரும்பும்
குடும்பக் குத்துவிளக்கு, பொறுப்பு பொண்டாட்டி கேரக்டரில்
ஸ்ரீதிவ்யா. தோற்ற மாற்றம் முதல் புருவ ஏற்ற இறக்கம்
வரை அழகிக்கு அத்தனை பாந்தமாகப் பொருந்துகிறது.

ஆனால், கல்யாணத்துக்கு முன் கோவிலுக்குள் எச்சில்
துப்புபவனை அடிப்பதில் இருந்து, வில்லனை மிரட்டுவது
வரை துடுக்கும் துணிச்சலுமாக இருந்தவரை, கல்யாணம்
முடிந்ததும் ஒரே பாட்டில் ’படுக்கையறை, துணி துவை,
அடுப்படியில் சமை’ என ‘சின்சியர் மனைவி’
மோடுக்கு மாற்றிவிட்டார்கள்!
இதனால் இயக்குநர் இந்த உலகத்துக்கு சொல்ல வரும்
சேதி என்னவோ!?

வில்லனாக 'தாரை தப்பட்டை' ஆர்.கே.சுரேஷ் அவ்வளவு
கச்சிதம். பதவிக்காக அவர் எடுத்துவைக்கும் ஒவ்வொரு
அடியும் ரணகளம், ரத்தக்களம். தாடிக்குள் புதைந்திருக்கும்
அந்தக் கண்களிலும், குட்டியூண்டு தெரிகிற சதைகளிலும்
அனல் ஆக்ரோஷம்.

ராதாரவி ஸ்க்ரீனில் இருந்தாலே, அவரது ஆளுமை
சூழ்நிலையை சூடாக்குகிறது. நடிகர் சங்கத் தேர்தலில்
ராதாரவி - விஷால் இடையிலான சம்பவ சாயலிலேயே
படத்திலும் இருவருக்கும் சிற்சில சிச்சுவேஷன், பற்பல
வசனங்களை வைத்திருப்பது... சூப்பரப்பு!
-


Last edited by ayyasamy ram on Sat May 21, 2016 6:21 pm; edited 1 time in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33638
மதிப்பீடுகள் : 11007

View user profile

Back to top Go down

Re: மருது - திரைப்பட விமர்சனம்

Post by ayyasamy ram on Sat May 21, 2016 6:18 pm-
-
(சாம்பிள்: ராதாரவியின் வலதுகை நமோ நாராயணன்
‘அண்ணன் நெனைச்சா உன் பேரனுக்கு என்ன பதவி
வேணும்னாலும் கிடைக்கும்’ என்று விஷாலின்
அப்பத்தாவிடம் சொல்ல, அந்த அப்பத்தா, ’யாரும் என்
பேரனுக்குப் பதவி வாங்கிக் குடுக்க வேண்டிய
அவசியமில்லை. என் பேரன் நெனைச்சா எந்தப்
பதவிலயும் அவனே போய் ஒக்கார்ந்துக்குவான்.
உங்கொண்ணனுக்கு பதவி வேணும்னா என் பேரன்கிட்ட
கேளு”!) வழக்கம் போல, படத்தில் ஆங்காங்கே
கிச்சுகிச்சு மூட்டுகிறார் சூரி.
-
இடைவேளை வரை ஒரு மாதிரி இழுத்துப் பிடித்துப்
போகும் படம், இடைவேளைக்குப் பிறகு இழுவையோ
இழுவை என்று இழுக்கிறது. பொறுமையைச்
சோதிக்கும் ஃப்ளாஷ்பேக்குகள் வேறு. இமானின் இசையில்
’அக்கா பெத்த ஜட்கா வண்டி’ பாடல் ஈர்க்க, ரணகள
அடிதடி அத்தியாயங்களில் பின்னணி இசையே புழுதி
கிளப்புகிறது.
-
பார்த்த கதை, பழகிய களம்... ஆனால், அதிலும்
சண்டைக் காட்சிகளில் அடி ஒவ்வொன்றையும் இடி
மாதிரி இறக்குகிறது அனல் அரசுவின் சண்டைப் பயிற்சி.
களத்துமேட்டுப் புழுதிகளில் கூட அதகளம்.
-
இயக்குநர் முத்தையாவுக்கு இது மூன்றாவது படம்.
குட்டிப்புலி, கொம்பன் என்று அதே மாவை வேறு வேறு
கதாபாத்திரங்களை வைத்து அரைக்கிறார்.
அது வெந்தும் வேகாமல் இருந்தாலும்,
’பழக்கப்பட்டவர்களுக்கு’ப் பிடிக்கலாம். தமிழ் சாயலைப்
பிரதிபலிக்கும், தமிழர்களுக்குப் பிடித்த பல
விஷயங்களைக் கொண்டிருக்கிறது படம்.


Last edited by ayyasamy ram on Sat May 21, 2016 6:22 pm; edited 1 time in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33638
மதிப்பீடுகள் : 11007

View user profile

Back to top Go down

Re: மருது - திரைப்பட விமர்சனம்

Post by ayyasamy ram on Sat May 21, 2016 6:19 pm-
எல்லாம் சரி.... ஆனால், காட்சிப் பின்னணி, வசனம்,
பாடல் வரிகளில் கூட சாதிப் பெருமை தொனிக்கும்
பெருமிதம் தேவையா?! முந்தைய படங்களில்
'பூசுனதுபோலவும், பூசாததுபோலவும்!' சாதிப் பெருமை
பேசிய இயக்குநர், இதில் நேரடியாகவே
இறங்கியிருக்கிறார். ஒரு குறிப்பிட்ட பிரிவினர் எப்போதும்
வன்மமும் குரோதமுமாக வன்முறை வெறியுடனே
இருப்பார்கள் என்று ‘பூஜிப்பது’ ஆரோக்யமா?!
-
இதைவிடக் கொடுமை படத்தில் ஒருவரை
வித்தியாசமாகக் கொலை செய்வதை, ‘படம் போட்டுப்
பாகம் வரையும்’ விதமாக விவரிக்கிறார்கள்.
அவ்வளவு விரிவான விவரணைகள் தேவையா?
‘குடும்பக் காவியம்’ என்று விளம்பரப்படுத்தக் கூடிய
’டீஸர் கட்’ காட்சிகள் படத்தில் ஏகம். அதை நம்பி
படத்துக்கு குழந்தைகளோடு வந்தால், அந்தக் காட்சிகள்
குழந்தைகள் மனதில் என்ன தாக்கத்தை உண்டாக்கும்.
-
இதில் ஆங்ரி பேர்ட் போன்ற விளையாட்டுகள்
குழந்தைகள் மனதில் வன்முறையை விதைக்கும்
என்று கதறிக் கொண்டிருக்கிறோம்..!
(படத்துக்கு UA என சென்சார் சான்றிதழ்)
-
இயக்குநர் முத்தையாவுக்கு ஒரு வேண்டுகோள்:
நாலு பாட்டு, ஏழு ஃபைட்டு, காதல், அப்பத்தா
சென்டிமென்ட், வில்லத்தனம், இடையிடையே
கொஞ்சம் சிரிப்பு... என ஆதிகால டிரெண்டில்
கமர்ஷியல் வெற்றியைக் குறிவைத்துக் கூட படம்
எடுங்கள்.
ஆனால், அதில் சாதி, வன்முறை வன்மம் விதைத்து....
பார்வையாளர்கள் மனதில் ஆதிகால பகையுணர்ச்சியை
விதைக்காதீர்கள்!
-
----------------------------
நன்றி- விகடன்.காம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33638
மதிப்பீடுகள் : 11007

View user profile

Back to top Go down

Re: மருது - திரைப்பட விமர்சனம்

Post by krishnaamma on Mon May 23, 2016 12:50 am

படம் ஓகே தான், ஆனால் நம் ஹீரோக்கள் எப்போ புத்திசாலியாவர்கள்?................, எல்லோரும் எதாவது சம்பவம் நடந்ததும் தான் தன் வீரத்தைக் காட்டுகிறார்கள்.........இந்தப்படமும் அதே அழகுதான் சோகம் ....தேவை இல்லாமல் அந்த பாட்டி சாகிறார், விஷால் கொஞ்சம் 'ஷார்ப்'ஆக இருந்திருந்தால் காப்பாத்தி இருக்கலாம் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

Re: மருது - திரைப்பட விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum