ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பசு மாடு கற்பழிப்பு
 அம்புலிமாமா

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

வணக்கம் நண்பர்களே
 அம்புலிமாமா

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 ayyasamy ram

ட்விட்டரில் ரசித்தவை
 ayyasamy ram

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ayyasamy ram

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ayyasamy ram

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 ayyasamy ram

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 சிவனாசான்

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 சிவனாசான்

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 ayyasamy ram

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 ayyasamy ram

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 ayyasamy ram

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 T.N.Balasubramanian

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ஜாஹீதாபானு

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்!

View previous topic View next topic Go down

திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்!

Post by krishnaamma on Sun May 29, 2016 1:45 am

படம் இப்ப வருது.. அப்ப வருதுன்னு மூன்று ஆண்டுகளாக இழுத்தடித்து ஒருவழியாக இன்று வெளியாகியிருக்கிறது பாண்டிராஜ் இயக்கத்தில், சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா நடிப்பில் ‘இது நம்ம ஆளு’.இவ்வளவு இழுவைக்குப் பிறகும் ரசிகர்கள் இந்தப் படத்தின் மீதான ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ளாமல் இருந்ததற்கான காரணம் சிம்பு, நயன்தாரா மீண்டும் இணைந்து நடிக்கும் படம் என்பதால் தான்.

அதோடு, படத்தில் சிம்பு, நயன்தாரா நடித்தது போலவே இருக்காது. நிஜக் காதலர்களாக இருந்த போது அவர்களுக்குள் இருந்த நெருக்கம், காதலில் ஏற்பட்ட பிரச்சனைகள் போன்றவை படத்தில் அப்படியே பிரதிபலிக்கும் இப்படியெல்லாம் அவ்வப்போது பேட்டிகளின் மூலமாக ரசிகர்களின் சூடு குறையாமல் பார்த்துக் கொண்டனர் படக்குழுவினர்.

சரி.. அப்படி என்னதான் இருக்கு படத்தில்?

ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் சிம்புவுக்கு அவரது அப்பா ஜெயப்பிரகாஷ் பெண் பார்க்கிறார். அந்தப் பொண்ணு தான் நயன்தாரா. சிம்புவுக்கு நயன்தாராவைப் பார்த்தவுடன் பிடித்துவிடுகிறது. (இருக்காதா பின்னே?).

நயன்தாராவும், சிம்புவும் முதல் தடவை சந்தித்துப் பேசும் போதே, சிம்புவின் லீலைகளைப் புட்டுப் புட்டு வைக்கிறார் நயன்தாரா. அங்கு தான் கதையில் ஆண்ட்ரியா வருகிறார்.

ஆண்ட்ரியாவுடனான காதல் பற்றி சிம்பு ஒரு பிளாஷ்பேக் சொல்கிறார். அந்தக் காதல் ஒரு உப்பு சப்பில்லாத பிரச்சனையால் முடிவுக்கு வருகிறது.

இவ்வளவும் தெரிந்து கொண்ட பின்னர், சிம்பு-நயன்தாரா இடையே ஏற்படும் காதல், கல்யாணத்தில் முடிகிறதா? கட் ஆகிறதா? என்பது தான் மீதிக் கதை.
.......................


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்!

Post by krishnaamma on Sun May 29, 2016 1:46 am

நடிப்பு !சிம்பு .. மூன்று ஆண்டுகளாக படம் இழுத்துக் கொண்டே சென்றதாலோ என்னவோ.. ஒல்லியாக, சற்று உப்பலாக, ஒரு பாடல் காட்சியில் மிகவும் எடை கூடி என மூன்று விதமாகத் தெரிகிறார்.

ஒரு காலத்தில் விரலை ஆட்டி, தலையை சிலிப்பி ஹீரோயிசம் காட்டிக் கொண்டிருந்த சிம்புவா இது? என்று எண்ணும் அளவிற்கு இந்தப் படத்தில் அதற்கு நேர்மாறாக அடங்கி ஒடுங்கி நடித்திருக்கிறார்.

ஒரு காட்சியில் கூட சிம்பு முஷ்டி முறுக்கவோ, முகத்தில் கோபத்தை வெளிப்படுத்தவோ, 10 பேரைப் பந்தாடவோ அவசியம் இருக்காத அளவிற்கு அவரது கதாப்பாத்திரம் அமைந்திருக்கிறது.

மயிலா கதாப்பாத்திரத்தில் நயன்தாரா.. அழகாக இருக்கிறார். சிம்புவை அலையவிட்டு பல சோதனைகள் செய்த பிறகே காதலிக்கத் தொடங்குகிறார். முதலில் திமிர் பிடித்த பெண் போல் தெரியும் அவரது கதாப்பாத்திரம், பின்னர் “குட்டிம்மா” என்றழைக்கும் படி அன்னியோன்யமாக மாறுவது பெண்களின் மனோபாவத்தைப் பிரதிபலிக்கிறது.

கொஞ்ச நேரம் வந்தாலும் ஆண்ட்ரியா ரசிக்க வைத்துவிட்டு, அப்படியே கதையோட்டத்தில் காணாமல் போய்விடுகிறார்.

சிம்புவோடு, கடைசி வரை வந்து காமெடியில் கலக்கியிருப்பது சூரி தான். இந்தப் படத்தில் சிம்புவின் ஆஸ்தான காமெடியன் சந்தானம் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை. ஒரு 5 நிமிடக் காட்சிக்காக சந்தானம் வருகிறார். அவ்வளவு தான். மற்றபடி சூரி தான் எல்லாம்.

இவர்களோடு, ஜெயப்பிரகாஷ், உதய் மகேஷ், தீபா, மதுசூதனன் ஆகியோரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்.

.......................


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்!

Post by krishnaamma on Sun May 29, 2016 1:47 am

திரைக்கதைஒரு முழு நீளப் படமாக எடுக்கும் அளவிற்கு இந்தப் படத்தில் கதை இருக்கா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே குறுகிய காலத்தில் நடக்கும் உரையாடல்கள், பிரச்சனைகள், கொஞ்சல்கள், எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்கள் ஆகியவற்றை வைத்து திரைக்கதை அமைத்து ஒரு முழுப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.

மம்முட்டி, பானுப்பிரியா நடித்த ‘அழகன்’ என்றொரு படம். அதில் ஒரு பாடல் காட்சியில் இரவு பேசத் தொடங்கும் இருவரும், விடிய விடிய பேசிக் கொண்டே இருப்பார்கள். அது ஒரு பாடல் காட்சி மட்டுமே. ஆனால் அந்தப் பாடல் காட்சியே ஒரு மணி நேரம் நீடித்தால் எப்படி இருக்கும்? அப்படி தான் இருக்கிறது இந்தப் படத்திலும்.

சிம்பு, நயன்தாரா இடையேயான காதல் வெறும் போன் உரையாடல்களிலேயே செல்வது நடைமுறை வாழ்க்கையோடு ஒத்துப் போனாலும் கூட, படம் பார்க்கும் நமக்கு அலுப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. அந்தக் காட்சிகளின் நீளத்தைக் குறைத்திருக்கலாம்.

நல்ல வேளையாக, அந்தக் காட்சிகளில் இடையே சூரியை திணித்து, “இந்த பாரு.. எக்ஸ் லவ்வரு பேராச் சொல்றாங்க”, “நடிங்கடா.. நடிங்கடா.. எமன் கையில லெமன் கெடச்ச மாதிரி.. ஜூஸ் புளியாம விடமாட்டாங்க” இப்படியாகக் காமெடி வசனங்களை பேச வைத்திருப்பதால், தொடர்ந்து நம்மால் படம் பார்க்க முடிகின்றது.

படத்தின் தொடக்கத்தில் வரும் ஐடி நிறுவனங்களின் அறிமுகம் ரசிக்க வைத்தது. ஆனால் அவ்வளவு நீண்ட அறிமுகத்திற்கும், படத்தின் கதைக்கும் ஒரு தொடர்பும் இல்லை. சிம்பு ஒரு ஐடி நிறுவனத்தில் டீம் மேனேஜர் என்பதைத் தவிர.

இப்படியாக கதைக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு தொடக்கம், காரணமே இல்லாமல் பிரியும் ஒரு காதல், அழுத்தமே இல்லாத காட்சிகள் என திரைக்கதை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி நகர்வதை ரசிக்க முடியவில்லை.
...........................


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்!

Post by krishnaamma on Sun May 29, 2016 1:48 am

ஒளிப்பதிவு, இசை, வசனம்பால சுப்ரமணியன் ஒளிப்பதிவில் சென்னையில் வளர்ச்சியடைந்த பகுதிகள் அனைத்தும் மிகச் சிறப்பாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளன. டாப் ஆங்கிலில் காட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகள், இரயில், சாலைகள் ஆகியவை மிகவும் ரசிக்க வைக்கின்றன.

குரளரசன் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை.. “காத்தாக வந்த பெண்ணே”, “என் இராகம் ஒரு தலராகம்” போன்றவை மனதில் பதியும் அளவிற்கு புதுமை.

படத்தில் காதல் காட்சிகளில் வரும் வசனங்கள் எவ்வளவு அலுப்பைத் தருகிறதோ, அதற்கு நேர்மாறாக சிம்பு – சூரி பேசிக் கொள்ளும் காமெடி வசனங்கள் ரசிக்க வைக்கின்றன.

உதாரணமாக, சிம்பு “நான் அவளை லவ் பண்றேன் டா” என்பார்.. உடனே சூரி.. “எவ்வளவு நாளைக்கு சகோ?” என்று பதிலுக்கு கேள்வி கேட்பார். இப்படியாக படத்தில் ரசிப்பதற்கான இடமும் உள்ளது.

ஆக, படத்தில் வரும் இயல்பான, எதார்த்தமான கதையோட்டம் தான் பலமாகவும், பலவீனமாகவும் தெரிகின்றது.

மொத்தத்தில், இப்படம் நவீன சூழலுக்கு ஏற்ப இளைஞர்களையும், காதலில் இருப்பவர்களையும் கவரும். ஆனால் எல்லா தரப்பினரையும்? என்பது கேள்விக் குறி தான்.

ஃபீனிக்ஸ்தாசன்
நன்றி: செல்லியல்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்!

Post by krishnaamma on Sun May 29, 2016 1:50 am

ரொம்ப போர் படம் சோகம்.......இதுக்கா இத்தனை வருடங்கள் இழுத்தடித்தார்கள்?...................இதுல stay ஆர்டர் வெறியா...........ஒருவேளை இந்தப்படத்தை பார்த்து தமிழ்நாட்டு மக்கள் நொந்து போகக்கூடாது / கஷ்டப்படக் கூடாது என்று தான் stay ஆர்டர் வாங்க முயன்றார்களோ?................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்!

Post by M.Jagadeesan on Sun May 29, 2016 8:15 am

இந்தக் காலத்துப் படங்களைப் பார்ப்பதெல்லாம் சுத்த வேஸ்ட் ! அந்தநேரத்தில் உருப்படியாக ஏதேனும் ஒரு வேலையைச் செய்யலாம் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5087
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்!

Post by ayyasamy ram on Sun May 29, 2016 8:42 am

சண்டை இல்லை, பன்ச் இல்லை,
விரலை ஆட்டும் வித்தைகள் இல்லை.
அட, டான்ஸில்கூட குட்டிக்கரணம்
அடிக்கவில்லை.

எந்தவிதமான பூச்சும் இல்லாத இயல்பான
நடிப்பால் ஸ்கோர் செய்கிறார் சிம்பு.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35976
மதிப்பீடுகள் : 11337

View user profile

Back to top Go down

Re: திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்!

Post by krishnaamma on Sun May 29, 2016 9:47 am

@M.Jagadeesan wrote:இந்தக் காலத்துப் படங்களைப் பார்ப்பதெல்லாம் சுத்த வேஸ்ட் ! அந்தநேரத்தில் உருப்படியாக ஏதேனும் ஒரு வேலையைச் செய்யலாம் .
மேற்கோள் செய்த பதிவு: 1209048

ஆமாம் ஐயா, இதை வேற 500 , 1000 என்று பணம் கொடுத்து பார்க்கிறார்கள் ................ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
'
'
'
முன்பெல்லாம் சினிமாவில் ஏதாவது 'மெசேஜ்' இருக்கும், அப்புறம் பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த படங்கள் வந்ததன..........இப்போ?????.....எதுக்கு இந்த படம்  எடுத்தாங்க?........எடுத்ததும் போட்டு பார்க்க மாட்டாங்களா?..............பணத்தை இப்படி வேஸ்ட் பண்ணறாங்களே ............என்னடா இது?.......... என்று புரிவதற்குள் படமே முடிந்துவிடுகிறது...........சோகம்............... ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum