ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வானில் பறவைகளை பின் தொடர்ந்த பறவைகள் ஆர்வலர்
 ayyasamy ram

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 ayyasamy ram

40,000 ஆண்டு பழமை; சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்ம பின்னணி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 ayyasamy ram

உலகின் தீரா மர்மங்கள் அதன் ரகசியங்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனைகளில் ஒன்றை சமன் செய்தார் விராட் கோலி
 ayyasamy ram

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கி வீரர் அஜய்க்கு கார் பரிசு
 ayyasamy ram

CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
 thiru907

ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 பழ.முத்துராமலிங்கம்

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 பழ.முத்துராமலிங்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 பழ.முத்துராமலிங்கம்

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!
 பழ.முத்துராமலிங்கம்

intro
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 பழ.முத்துராமலிங்கம்

முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)
 ayyasamy ram

வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
 ayyasamy ram

தென் மாவட்ட மக்களை வெறுப்பேற்றும் தெற்கு ரயில்வே: வருஷம் ஒண்ணாச்சு; வண்டிகள் என்னாச்சு? ரயில்களை இயக்காமலிருக்க, 'பெட்டி' போவதாக சந்தேகம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
 thiru907

தை நன்னாளில் நைஜீரியா வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமாக சுன்னாகத்தில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

சிறந்த துணை நடிகருக்கான விருது: இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் விஜய்!
 பழ.முத்துராமலிங்கம்

வெள்ளை யானைக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

தென்னாபிரிக்கா தொடரில் இந்தியா வீரர் அஸ்வின் புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

''பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
 T.N.Balasubramanian

தேவை
 T.N.Balasubramanian

கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி!
 பழ.முத்துராமலிங்கம்

உலக புகழ் சூரிய கோவிலின் பிரதி கோவில் ரூ.300 கோடியில் விரைவில் உருவாக்கம்!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

​கோவிலுக்குள் வந்து தினந்தோறும் வழிபாடு நடத்தும் காட்டு யானை!
 பழ.முத்துராமலிங்கம்

பால் பண்ணை தொழில் செய்ய விருப்பமா? இதோ உங்களுக்கு அதனைப் பற்றிய முழுமையான தகவல்...
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் மிகச் சிறிய ரக தக்காளியை உருவாக்கி சாதித்த நாடு
 பழ.முத்துராமலிங்கம்

'சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
 ayyasamy ram

இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
 ayyasamy ram

டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
 ayyasamy ram

ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
 ayyasamy ram

ஆண்டு விழாவில் பத்மாவதி பட பாடல்: பள்ளி சூறை
 ayyasamy ram

ஜூலை 1 முதல் ஆதாரில் முகம் கண்டறியும் வசதி
 ayyasamy ram

விலைவாசி உயர்வு - ஹைகூ
 ayyasamy ram

அழகிய புருவங்கள்! - ஹைகூ
 ayyasamy ram

ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
 ayyasamy ram

\பவுர்ணமி விரத பூஜை தரும் பலன்கள்
 ayyasamy ram

ஏ+ கிரேட் வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தோனி?
 ayyasamy ram

கேட்ச் பிடித்து 23 லட்ச பரிசுத்தொகையை அள்ளிய பார்வையாளர்
 ayyasamy ram

மதக் கலவரத்தைத் தூண்டுவதாக எச்.ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்
 ayyasamy ram

சீனாவுடன் கைகோர்த்த நேபாளம்; அதிர்ச்சியில் இந்தியா
 ayyasamy ram

தமிழர்களால் பெருமை படுகிறோம்; இங்கிலாந்து பிரதமர் பொங்கல் வாழ்த்து
 ayyasamy ram

செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

About Me
 Ganeshji

Book Required
 Ganeshji

சினிக்கூத்து
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தமிழ்த்திரைப்படத்துறைக்கு அம்மா செய்யவேண்டியது-எஸ்.வி.சேகர்

View previous topic View next topic Go down

தமிழ்த்திரைப்படத்துறைக்கு அம்மா செய்யவேண்டியது-எஸ்.வி.சேகர்

Post by ayyasamy ram on Sun May 29, 2016 9:37 am

திருட்டு விசிடி, தியேட்டர் அதிபர்கள்- தயாரிப்பாளர்கள்
பிரச்னை, விநியோகஸ்தர் -பிரபல நடிகர்களுக்கிடையேயான
பிரச்னை என தமிழ்சினிமா பிரச்சனைகளால் தெறித்துக்
கொண்டிருக்கிறது.

சரத்குமார், ராதாரவி இன்னும் சிலர் கோலோச்சிக்
கொண்டிருந்த தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தில்
விஷால், கார்த்தி, நாசர் என புது ரத்தம் பாய்ந்து யாரும்
எதிர்பாராத க்ளைமேக்ஸ் அமைந்துவிட்டது.

எந்த மாற்றங்கள் நிகழ்ந்தாலும் தமிழகத்தில் அரசியல்
அதிகார மையங்களின் ஒத்துழைப்பின்றி எதையும் நிகழ்த்தி
விடமுடியாது என்பது குழந்தைகளுக்குக் கூடத் தெரிந்த
விஷயம்.

இந்நிலையில் பல்வேறு பிரச்னைகளில் சிக்கித்தவிக்கும்
சினிமாத்துறையை மேம்படுத்த புதியதாக பொறுப்பேற்ற
அரசு செய்யவேண்டிய விஷயங்களை பட்டியலிடுகிறார்
நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏ வுமான எஸ்.வி சேகர்.

நடிகர் சங்கம் புதிய ஆடை போர்த்திக்கொண்டதில் இவரது
பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. தேசிய திரைப்பட தணிக்கைக்
குழு உறுப்பினராகவும் தற்போது உள்ளார்.
திரைப்படத்துறையில் சீனியர் என்ற முறையில்
சினிமாத்
துறையை மேம்படுத்த அரசு என்ன செய்யவேண்டும் என
நினைக்கிறீர்கள் என்ற கேள்வியை முன்வைத்தோம்.


“திரையுலகம் பல நடைமுறைச் சிக்கல்களில் சிக்கித்
தவித்துவருகிறது. சினிமாவின் சீனியர் என்ற முறையிலும்
ஜெயலலிதா நிறைய சீர்திருத்தங்களை சினிமாத்துறையில்
செய்யவேண்டி உள்ளது.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33526
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: தமிழ்த்திரைப்படத்துறைக்கு அம்மா செய்யவேண்டியது-எஸ்.வி.சேகர்

Post by ayyasamy ram on Sun May 29, 2016 9:37 am

ஆண்டுக்கு 400 படங்கள் வெளிவந்தால் அதில் 350 படங்கள்
சிறு பட்ஜெட் படங்கள். இந்தப்படங்களை திரையிட
தியேட்டர்கள் கிடைக்காமல் தயாரிப்பாளர்கள் 500 கோடிக்கு
மேல் நட்டமடைகிறார்கள்.

கேரளா, கர்நாடக மாநிலங்களில் தங்களின் மொழிப்
படங்களுக்கு அடுத்த முக்கியத்துவத்தைதான் மற்ற
மொழிகளுக்கு தருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் டப்பிங்
படங்கள், மற்ற மொழிப்படங்களே பெரும்பாலான
தியேட்டர்களை ஆக்கிரமித்துள்ளன.

நேரடி தமிழ்த்திரைப்படங்களுக்கு 75 சதவீதம், மற்ற மொழிப்
படங்களுக்கு 25 சதவீதம் என்பதாக அரசாணை வெளியிட
வேண்டும். அப்போதுதுான் சினிமாத்துறையைக் காக்க
முடியும்.

சிறந்த தமிழ்ப்படங்ளுக்கு அரசு தரும் மானியத் தொகை
கடந்த 2007 முதல் தரப்படாமல் உள்ளது. அவற்றைத் தர
நடவடிக்கை எடுக்கவேண்டும்.

திரைப்படங்களுக்கான வரிவிலக்கிலும் மாற்றங்கள் செய்ய
வேண்டும். பொதுவாக ஒரு படத்திற்கு அளிக்கப்படும் வரி
விலக்கு அதன் தயாரிப்பாளருக்கான லாபமாக மட்டுமே
இருக்கிறது. படத்தின் வெற்றிக்குக் காரணமான ரசிகர்களுக்கு
அதனால் ஒரு பயனுமில்லை. அதனால் இந்த வரிவிலக்கை
ரசிகர்களுக்கான கட்டணச் சலுகையாக அறிவிக்கவேண்டும்.

120 ரூபாய் டிக்கெட்டை 80 லிருந்து 90 ஆக்க வேண்டும்.
அரசின் நோக்கம் நேரிடையாக பொதுமக்களைச் சென்று
அடைவதோடு தன் பட்ஜெட்டில் சினிமாவுக்கான செலவு
அடங்கினால் திருட்டு விசிடி, நெட்டில் பார்ப்பது ஆகியவற்றை
தவிர்த்து ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள்.
அது சினிமாவை இன்னும் நுாறாண்டு வாழவைக்கும்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33526
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: தமிழ்த்திரைப்படத்துறைக்கு அம்மா செய்யவேண்டியது-எஸ்.வி.சேகர்

Post by ayyasamy ram on Sun May 29, 2016 9:37 am

மேலும் பொத்தாம் பொதுவாக எல்லாப் படங்களுக்கும் வரி
விலக்கு அளிப்பதைத் தவிர்க்கவேண்டும். அந்த வகையில்
100 முதல் 150 தியேட்டர் எண்ணிக்கைகளில் ரிலீசாகும் திரைப்
படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு சலுகையை தரவேண்டும்.

பெரிய பட்ஜெட் படங்களுக்கும் வரிச்சலுகை என்பது பென்ஸ்
காரில் வந்திறங்குபவர்களுக்கு ‘அம்மா உணவக’ உணவு
தருவதுபோலதான். 500 முதல் 1000 தியேட்டர்களில் தங்கள்
படத்தைத் திரையிடுபவர்களுக்கு இந்த வரிச்சலுகையால் பெரிய
லாபமுமில்லை. அதை அவர்கள் எதிர்பார்ப்பதுமில்லை.

ஆனால் சிறு தயாரிப்பாளர்களுக்கு அது பெரிய வரப்பிரசாதம்.
நட்டத்தில் சிறு ஆறுதல். அதனால் வரிச்சலுகையிலும் மறு
பரிசீலனை செய்யவேண்டும்.

மேலும் சமீப காலமாக தவறான வழிமுறை உருவாகியுள்ளது.
வரிச்சலுகைக்காக கமிட்டி முன் படம் வருவதற்கு யு சான்றிதழ்
அவசியம் என்பதால் அந்தச் சான்றிதழைப் பெற சில
தயாரிப்பாளர்கள் ‘பலவித’ முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.
இது தவறான முன்னுதாரணமாகிவிட்டது.

இதைத் தவிர்க்க யு அல்லது யுஏ சான்றிதழ் என்று விதிமுறை
தளர்த்தப்படவேண்டும். இதை தீர்மானிக்கும் அதிகாரத்தை அந்த
வரிவிலக்கு அளிக்கும் தேர்வுக் கமிட்டியிடமே விடலாம்.
இது முறைகேடுகளைத் தவிர்க்க உதவும்.

கேரளாவிலும் மற்ற மொழித் திரைப்படங்களிலும் திருட்டு
விசிடி என்ற ஒருபிரச்னை இல்லை. ஆனால் தமிழகத்தில் அது
பெரும்பிரச்னை. இதைத் தவிர்க்க சினிமா வெளியிடும்போதே
அதற்கான டிவிடிக்களையும் தயாரிப்பாளர்களே வெளியிட
நடவடிக்கை எடுக்கவேண்டும்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33526
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: தமிழ்த்திரைப்படத்துறைக்கு அம்மா செய்யவேண்டியது-எஸ்.வி.சேகர்

Post by ayyasamy ram on Sun May 29, 2016 9:38 am

மேலும் தமிழகத்தில் பல இடங்களில் சர்வசாதாரணமாக அரசு
கேபிள்டிவிகளில், புதிய படங்கள் தியேட்டரில் ஓடிக்
கொண்டிருக்கும்போதே ஒளிபரப்பும் அவலம் நடக்கிறது.
இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழ்சினிமாவில் முன்புபோல் சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்கள்
உருவாகவில்லை. காரணம் குறைந்தபட்ச தயாரிப்புச் செலவே
இப்போதெல்லாம் பல கோடிகளைத் தொடுகிறது. சினிமாத்துறை
தொய்வின்றி வளர சிறுதயாரிப்பாளர்கள் அவசியம்.

அதனால் எம்.ஜி.ஆர் திரைப்பட நகரை மீண்டும் நவீனமாக அரசு
புதுப்பிக்கவேண்டும். அப்படிச் செய்வதால் சிறுதயாரிப்பாளர்கள்
தங்கள் படங்களின் படப்பிடிப்பிற்கு பல கோடிகள் செலவழித்து
வெளிநாட்டிற்கு போகவேண்டிய அவசியமிருக்காது.

நீங்கள் நாடக நடிகரும் கூட…நாடகத்துறைக்கு என்ன
கோரிக்கைகள் வைத்திருக்கிறீர்கள்…?

சினிமாவின் தாய்வீடான நாடகத்துறை சினிமாவை விட
மோசமான நிலையில் உள்ளது. புதுப்பிக்கப்பட்ட கலைவாணர்
அரங்கில் சினிமா அரங்கம் மட்டுமே நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
நாடகங்கள் இல்லையேல் இன்று சினிமா இல்லை. கலைவாணர்
அரங்கில் நாடகங்களையும் நடத்தும் வகையில் அரங்கம் கட்டினால்
நல்ல விஷயம்.

இதற்கு பெரிய செலவொன்றும் ஆகாது. ஒரு லட்சம்
செலவழித்தால் சினிமா அரங்கையே நாடகத்திற்குமானதாக மாற்ற
முடியும். கலைவாணர் பெயரில் இயங்கும் அரங்கத்தில் இந்த வசதி
செய்யப்பட்டால் கலைவாணருக்கான மரியாதையாக அது இருக்கும்.

மேலும் தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட நாடக விருதுகளைப்
பெற்ற 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அவர்களுடன் செல்லும்
ஒருவருக்கும் இலவச பயணச் சலுகை அளிக்கவேண்டும்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33526
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: தமிழ்த்திரைப்படத்துறைக்கு அம்மா செய்யவேண்டியது-எஸ்.வி.சேகர்

Post by ayyasamy ram on Sun May 29, 2016 9:38 am

நானோ கார்த்தியோ விஷாலோ இதை பயன்படுத்தப்போவதில்லை.
நலிந்த கலைஞர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும்.

அதிருக்கட்டும் அதிமுகவில் இணைந்தீர்கள், தேர்தலிலும் வென்றீர்கள்,
இருவரும் ஒரே துறையிலிருந்தாலும் ஜெயலலிதாவுக்கும் உங்களுக்கும்
எதனால் பிரச்னை வந்தது?


எங்கிருந்தாலும் நான் நானாகவே இருக்க விரும்புவதுதான் பிரச்னை
(பகபகவென சிரிக்கிறார்.)…முதல்வருடன் எனக்கு 1992 லிருந்து பழக்கம்.
கட்சியிலிருந்து விலகிவிட்ட நிலையிலும் இன்றும் அவருடைய
பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கடிதம் தொடர்ந்து அனுப்பிவருகிறேன்.

அவர் எனக்குக் கட்சியில் அளித்த கவுரவத்திற்கு அவர் மீது நான்
வைத்திருக்கும் மரியாதை இது. 1992 முதல் 2009 ல் கட்சியை விட்டு
வெளியேறியதுவரை 30 தடவைகள் சந்தித்திருக்கிறேன்.
எப்போதும் என்னை அவர் நிற்கவைத்துப் பேசியதில்லை. மிஸ்டர்
என்று விளிக்காமல் என்னை அவர் அழைத்ததுமில்லை.

பத்து பைசா கொடுக்காமல் மைலாப்பூர் தொகுதியில் வென்றேன்.
தொகுதி நிதியை பரிசுத்தமாக மக்களுக்கே செலவிட்டேன். மக்கள்
பணத்தில் கைவைக்கும் நிலையில் என்னை ஆண்டவன்
வைத்திருக்கவில்லை. சேகர் ஏதோ சில காரணங்களுக்காக
அதிமுகவிற்கு தேவைப்படாதவனாக இருந்திருக்கலாம். அதனால்
வெளியேற்றியிருக்கலாம். அது ஒரு கட்சியின் முடிவு.

அதை இப்போது பேசுவதில் பயனில்லை. நான் இன்னொரு கட்சியின்
உறுப்பினர். பொறுப்பிலும் இருக்கிறேன். பாஜகவோ அதிமுகவோ
எதுவானாலும் நான் நானாகவே இருக்கிறேன். என் இருப்பை
கட்சிகள்தான் தீர்மானிக்கின்றன.

ஜெயலலிதாவை புகழ்ந்து தள்ளுகிறீர்கள், பிரதான எதிர்க்கட்சி சார்பாக
பதவியேற்பு விழாவுக்கு சென்ற ஸ்டாலின் அவமதிக்கப்பட்டிருக்கிறாரே…?

சார் ஒரு உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள்.
அதிமுகவில் முக்கிய விஷயங்கள் மட்டுமே ஜெயலலிதாவின்
பார்வைக்குக் கொண்டுசெல்லப்படும். எல்லா விஷயங்களும் அவருக்குத்
தெரிந்தே நடக்கும் என்று சொல்லிவிடமுடியாது. ஜெயலலிதாவை
குஷிப்படுத்துவதாக நினைத்து அதிகாரிகள் இப்படிச் செய்திருக்கலாம்.

இத்தனை பெரிய கொண்டாட்டத்தில் தன் மீது ஒரு விமர்சனம் வர
அவரே காரணமாகியிருப்பாரா? என்கிற எஸ்.வி சேகர், “அதைவிடுங்கள்…
சினிமாவின் எதிர்காலத்திற்கு மேற்சொன்னவற்றை முதல்வர் செய்தால்
திரைப்படத்துறை என்றும் நன்றியுடன் இருப்போம்”
-மெல்லிதாக சிரித்து பேட்டியை முடித்துவைக்கிறார்.

——————————————

விகடன்.காம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33526
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: தமிழ்த்திரைப்படத்துறைக்கு அம்மா செய்யவேண்டியது-எஸ்.வி.சேகர்

Post by krishnaamma on Sun May 29, 2016 10:18 am

கேரளா, கர்நாடக மாநிலங்களில் தங்களின் மொழிப்
படங்களுக்கு அடுத்த முக்கியத்துவத்தைதான் மற்ற
மொழிகளுக்கு தருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் டப்பிங்
படங்கள், மற்ற மொழிப்படங்களே பெரும்பாலான
தியேட்டர்களை ஆக்கிரமித்துள்ளன.


இதை சொன்னா, 'வந்தாரை வாழவைக்கும் தமிழகம்' என்று டயலாக் பேசுவாங்க சோகம்......சுவர் இருந்தாத்தானே சித்திரம் எழுத ?.....அது யோசிக்க மாட்டாங்க .....


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54954
மதிப்பீடுகள் : 11476

View user profile

Back to top Go down

Re: தமிழ்த்திரைப்படத்துறைக்கு அம்மா செய்யவேண்டியது-எஸ்.வி.சேகர்

Post by krishnaamma on Sun May 29, 2016 10:21 am

சிறந்த தமிழ்ப்படங்ளுக்கு அரசு தரும் மானியத் தொகை
கடந்த 2007 முதல் தரப்படாமல் உள்ளது. அவற்றைத் தர
நடவடிக்கை எடுக்கவேண்டும்.


இதுலே தெரியலையா நல்ல படம் வந்து எத்தனை வருஷம் ஆச்சுன்னு? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

120 ரூபாய் டிக்கெட்டை 80 லிருந்து 90 ஆக்க வேண்டும்.
அரசின் நோக்கம் நேரிடையாக பொதுமக்களைச் சென்று
அடைவதோடு தன் பட்ஜெட்டில் சினிமாவுக்கான செலவு
அடங்கினால் திருட்டு விசிடி, நெட்டில் பார்ப்பது ஆகியவற்றை
தவிர்த்து ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள்.
அது சினிமாவை இன்னும் நுாறாண்டு வாழவைக்கும்.


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54954
மதிப்பீடுகள் : 11476

View user profile

Back to top Go down

Re: தமிழ்த்திரைப்படத்துறைக்கு அம்மா செய்யவேண்டியது-எஸ்.வி.சேகர்

Post by krishnaamma on Sun May 29, 2016 10:27 am

கேரளாவிலும் மற்ற மொழித் திரைப்படங்களிலும் திருட்டு
விசிடி என்ற ஒருபிரச்னை இல்லை. ஆனால் தமிழகத்தில் அது
பெரும்பிரச்னை. இதைத் தவிர்க்க சினிமா வெளியிடும்போதே
அதற்கான டிவிடிக்களையும் தயாரிப்பாளர்களே வெளியிட
நடவடிக்கை எடுக்கவேண்டும்.


அவங்க இதை எப்படி சமாளிக்கிறார்கள் என்று நம் ஆட்களும் பார்க்கலாமே? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54954
மதிப்பீடுகள் : 11476

View user profile

Back to top Go down

Re: தமிழ்த்திரைப்படத்துறைக்கு அம்மா செய்யவேண்டியது-எஸ்.வி.சேகர்

Post by krishnaamma on Sun May 29, 2016 10:28 am

தமிழகத்தில் பல இடங்களில் சர்வசாதாரணமாக அரசு
கேபிள்டிவிகளில், புதிய படங்கள் தியேட்டரில் ஓடிக்
கொண்டிருக்கும்போதே ஒளிபரப்பும் அவலம் நடக்கிறது.
இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.


பயம் பயம் பயம் ...இங்கும் அரசா?..........


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54954
மதிப்பீடுகள் : 11476

View user profile

Back to top Go down

Re: தமிழ்த்திரைப்படத்துறைக்கு அம்மா செய்யவேண்டியது-எஸ்.வி.சேகர்

Post by krishnaamma on Sun May 29, 2016 10:33 am

அதிமுகவில் முக்கிய விஷயங்கள் மட்டுமே ஜெயலலிதாவின்
பார்வைக்குக் கொண்டுசெல்லப்படும். எல்லா விஷயங்களும் அவருக்குத்
தெரிந்தே நடக்கும் என்று சொல்லிவிடமுடியாது.....

“அதைவிடுங்கள்…
சினிமாவின் எதிர்காலத்திற்கு மேற்சொன்னவற்றை முதல்வர் செய்தால்
திரைப்படத்துறை என்றும் நன்றியுடன் இருப்போம்”
-மெல்லிதாக சிரித்து பேட்டியை முடித்துவைக்கிறார்.


ரொம்ப சரி, இதெல்லாம் அம்மா காது வரை போகுமா?.............யோசிக்க வேண்டிய விஷயம்  தான்..........சில சமயங்களில் நாம் பின்னூட்டம் போடுவதே பதிவர்கள் கண்ணில் படாமல் போகிறது...........நிலைமை இப்படி இருக்க இப்படி ஒரு பேட்டி, அந்தம்மா கண்ணில் படுமா?...யாராவது சொல்வாங்களா?...பொறுத்துத்தான் பார்க்கணும்.....நல்ல பகிர்வு அண்ணா, ரசித்து படித்தேன் ! சூப்பருங்க அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54954
மதிப்பீடுகள் : 11476

View user profile

Back to top Go down

Re: தமிழ்த்திரைப்படத்துறைக்கு அம்மா செய்யவேண்டியது-எஸ்.வி.சேகர்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum