ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வே, வோ, கா, கி
 devaragul@gmail.com

என் அறிமுகம்
 ஜாஹீதாபானு

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 ஜாஹீதாபானு

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

பூரானை அடிக்காதீர்கள்!
 M.Jagadeesan

நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
 ந.க.துறைவன்

தமிழகத்திற்கு நாளை முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று 'ஸ்டிரைக்'
 ayyasamy ram

அதிசயமான சூரிய கிரகணம்
 T.N.Balasubramanian

My Introduction.
 prajai

பாரிஜாதம் என்பது பவளமல்லிகை - பொது அறிவு தகவல்
 ayyasamy ram

பாரீசில் இன்று தொடக்கம்: உலக மல்யுத்தத்தில் பதக்கம் வெல்வாரா சாக்ஷி மாலிக்?
 ayyasamy ram

உலக சாம்பியன் பட்டம் பெற்ற பளு தூக்கும் வீரர் தெருச்சண்டையில் பலி
 ayyasamy ram

இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
 ayyasamy ram

சர்ச்சைக்குரிய நூலின் மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருதா?
 ayyasamy ram

சிங்கப்பூரில் அமெரிக்க போர் கப்பல் விபத்து: 10 மாலுமிகள் மாயம்
 ayyasamy ram

அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு
 ayyasamy ram

திருவரங்கன் உலா - ஸ்ரீ வேணுகோபாலன்
 kovarthanan

சினி துளிகள்! -தொடர் பதிவு
 ayyasamy ram

தாயை வணங்க வேண்டும்...! -
 ayyasamy ram

தமிழ்வாணன் - கேள்வி - பதில்களில் சில
 ayyasamy ram

உ.பி.யில் பயங்கரம்; போலீஸ், கிராம தலைவரால் 15 வயது சிறுமி பலாத்காரம், அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு
 ayyasamy ram

Putthagam vendi சோழ கங்கம் - சக்தி ஸ்ரீ
 Haneefhse1988

புத்தகம் வேண்டி
 Haneefhse1988

கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
 ayyasamy ram

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 M.Jagadeesan

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
 M.Jagadeesan

மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
 ayyasamy ram

இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினார்
 ayyasamy ram

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
 ayyasamy ram

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

நம்மைப் போல் - கவிதை
 ayyasamy ram

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
 ayyasamy ram

கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் !

View previous topic View next topic Go down

புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் !

Post by seltoday on Sat Jun 11, 2016 7:07 pm

புத்தக வாசிப்பிறகும் சமுக மாற்றத்திற்கும் நெருங்கிய தொடர்பிருப்பதை யாராலும் மறுக்க முடியாது.நம் சமூகம் குறித்து நாமே நம்மை குறை கூறிக்கொள்வதற்கு காரணம் , புத்தக வாசிப்பு குறைவாக இருப்பது தான் .பரவலாக்கப்பட்ட புத்தக வாசிப்பின் முலமே சமூக மாற்றம் நிகழும். சமூக மாற்றத்தை விரும்புபவர்கள் புத்தக வாசிப்பை மற்றவர்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். நமது நண்பர்கள் , சொந்தங்கள் , குழந்தைகள் எல்லோருக்கும் குறைந்தபட்சம் ஓராண்டுக்காவது எல்லா நிகழ்வுகளுக்கும் புத்தகங்களையே பரிசளிப்போம். அவர்களை ஒரு புத்தகத்தை முழுதாக வாசிக்க வைத்துவிட்டால் போதும் ,வாசிப்பின் ருசியை உணர்ந்து கொள்வார்கள். அடுத்தடுத்த புத்தகங்களை அவர்களே தேடிக் கொள்வார்கள்.

புத்தக வாசிப்பை நாமெல்லோரும் இணைந்து ஒரு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும். முடிந்தால் நாலைந்து பேர் இணைந்து குறு நூலகங்கள் அமைக்கலாம். பரந்து வாசிக்கக்கூடிய சமூகமே சமூக நீதிக்காக சிந்திக்க ஆரம்பிக்கும் ; குரல் கொடுக்கவும் தொடங்கும். சாதி , மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு சுயத்தை பற்றிய தேடல் வாசிப்பின் முலமே தொடங்கும்.

பள்ளி , கல்லூரி நூல்களைத் தவிர மற்ற நூல்களை வாசிக்க அனுமதிக்கக்கூடிய சூழல் பெரும்பாலும் நமது வீடுகளில் இல்லை. சுயநலத்தை மட்டுமே மக்களின் மனங்களில் வளர்த்துவிட்டு மக்களைக் குறை கூறிக்கொண்டிருக்கிறோம். சமீபத்திய தேர்தலில் படித்தவர்கள் , படிக்காதவர்கள் என்ற பாகுபாடில்லாமல் எல்லோரும் ஓட்டுக்காக பணத்தைப் பெற்றுக்கொண்டனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்நிலைக்கு காரணம் படித்தவர்களாக இருந்தாலும் கூட மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு இல்லாதது.

நமது அண்டை மாநிலமான கேரளத்தில் எந்தக்கட்சியும் காசு கொடுத்து ஓட்டு கேட்டுவிட முடியுமா ? முடியாது. காரணம், கேரள மக்கள் அரசியல் விழிப்புணர்வு மிக்கவர்கள். பத்திரிகையாளர் சமஸ் சொன்னது போல கேரள மக்களின் இத்தகைய அரசியல் விழிப்புணர்விற்கு காரணம் அவர்களின் பரந்துபட்ட வாசிப்பு தான்.
படித்தவர்களாக இருந்தாலும் சாதி , மத பேதங்களுக்குள் புதைந்து கிடக்கிறோம். மூடநம்பிக்கைகள் இன்னும் மண்டிக்கிடக்கின்றன. தமிழகத்தில் படிப்பறிவு உயர்ந்த விதத்தில் இங்கே சமூக மாற்றம் நிகழவில்லை. காரணம் , அறியாமை . சுயநலத்தைத் தாண்டி எதையும் அறியாமை. உலகுக்கே நீதி சொல்லும் வகையில் பல நீதி நூல்கள் நம்மிடையே இருக்கின்றன. நாம் தான் வாசிப்பதில்லை.

சக மனிதனை மனிதனாக மதித்து நடக்க ஆரம்பித்தாலே போதும் இங்கே சமூக மாற்றம் நிகழ ஆரம்பித்து விடும். அதற்கு புத்தக வாசிப்பு ஒரு தொடக்கமாக இருக்கட்டும்.

வாசிப்போம் ! மாற்றமடைவோம் !

ஜெ.செல்வராஜ் .
avatar
seltoday
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 124
மதிப்பீடுகள் : 50

View user profile http://jselvaraj.blogspot.in/

Back to top Go down

Re: புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் !

Post by krishnaamma on Sun Jun 12, 2016 12:53 am

நல்ல பகிர்வு !..........மிக்க நன்றி !....... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11389

View user profile

Back to top Go down

Re: புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் !

Post by M.Jagadeesan on Sun Jun 12, 2016 6:44 am

மக்களை மடையர்களாக்கியது திராவிடக் கட்சிகள்தான் . இந்தியாவிலேயே காசுக்கு ஓட்டுப்போடும் மக்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளனர் . நடந்து முடிந்த தேர்தலில் ஜனநாயகம் செத்துப்போனது . தமிழ்நாட்டில் ஆட்சிமாற்றம் நடக்கப்போகிறது என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்த உடனேயே ஆளுங்கட்சியினர் உஷாராகிவிட்டனர். பணத்தைத் தண்ணீராக செலவுசெய்து , தேர்தல் முடிவுகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிவிட்டனர்.

சிந்திக்கத் தெரியாத மக்களால் எந்தப் பயனும் இல்லை;  கல்வியின் நோக்கமே சிந்தனையைத் தூண்டுவதுதான் . படிக்காத மக்கள் காசுக்கு விலைபோனால் , அதில் வியப்பு எதுவுமில்லை . ஆனால் படித்தவன்கூட , காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப் போட்டால் , அவனை ஆறறிவு படைத்த மனிதன் என்று சொல்லலாமா ? சிந்தியுங்கள் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4663
மதிப்பீடுகள் : 2174

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum