புதிய பதிவுகள்
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 20:46

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 20:43

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 20:37

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 20:35

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_c10ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_m10ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_c10 
65 Posts - 52%
heezulia
ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_c10ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_m10ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_c10 
47 Posts - 37%
T.N.Balasubramanian
ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_c10ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_m10ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_c10ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_m10ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_c10ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_m10ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_c10ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_m10ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_c10ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_m10ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_c10ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_m10ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_c10ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_m10ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_c10ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_m10ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_c10 
206 Posts - 39%
mohamed nizamudeen
ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_c10ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_m10ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_c10ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_m10ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_c10 
15 Posts - 3%
prajai
ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_c10ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_m10ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_c10ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_m10ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_c10 
9 Posts - 2%
jairam
ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_c10ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_m10ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_c10ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_m10ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_c10ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_m10ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_c10ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_m10ஜாக்கிரதை ! -   'சென்னைஸ் அமிர்தா' !! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாக்கிரதை ! - 'சென்னைஸ் அமிர்தா' !!


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 13 Jun 2016 - 12:12

A forward only-but very serious implications!

முன்குறிப்பு: இக்கட்டுரையில் இடம்பெறும் உரையாடல்கள் அனைத்தும் உண்மையே. எங்கும் வாசிப்பு சுவாரஸ்யத்துக்காகவோ, வெற்று பரபரப்புக்காகவோ சொல்லாத/இல்லாத விஷயத்தை எழுதவில்லை. அனைத்தும் ஒரு நிருபரின் நேரடி அனுபவமே! ✍)

எங்கு திரும்பினாலும் ‘Dக்கு முன்னால E என்ற’ சென்னைஸ் அமிர்தாவின் விளம்பரங்கள் அணிவகுக்கின்றன. 'சென்னைஸ் அமிர்தாவில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்தால் 100% வேலை உறுதி. படிக்கும்போதே பத்தாயிரம் வரை சம்பளம், பட்டம் பெற்ற பின்னர் ஃபாரினில் வேலை' என விளம்பரத்தில் வரும் ஒவ்வொரு வரியும் நம்மை ஈர்க்கின்றன. ஆனால், சமூக வலைதளங்களில் 'சென்னைஸ் அமிர்தா'வைப் பற்றிவரும் செய்திகள், கலாய்கள் பதற வைக்கின்றன.

⚓இதை தேங்காய் எண்ணெய் விளம்பரமாகவோ, ஊறுகாய் விளம்பரமாகவோ நினைத்து, கடந்து விட முடியாது. கிராமப்புற மாணவர்கள், 'சென்னைஸ் அமிர்தாவில் படித்தால் ஃபாரினில் வேலை பார்க்கலாம் என நினைத்து வருகிறார்கள். லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் இதில் அடங்கியிருக்கிறது. ’சென்னைஸ் அமிர்தா விளம்பரங்கள் உண்மையா... அங்கு படிக்கும் மாணவர்கள் இதைப் பற்றி என்ன சொல்கிறார்கள்.?’ எனக் கேட்டு விகடனுக்கு வாசகர்களிடமிருந்து ஏகமாகக் குவிகிறது விசாரணைகள். எனவே, வாசகர்களின் கோரிக்கையை ஏற்று 'சென்னைஸ் அமிர்தா'வின் கிளைகளுக்கு கிளம்பினோம்.

'சென்னைஸ் அமிர்தா'வில் சேர விரும்பும் மாணவராக நந்தனம், ஓ.எம்.ஆர் ஆகியப் பகுதிகளில் இருக்கும் சென்னைஸ் அமிர்தா கல்லூரிகளுக்கும், நந்தனத்தில் இருக்கும் தலைமை அலுவலகத்துக்கும் சென்ற அனுபவங்கள் அப்படியே இங்கே....

முதலில், காம்ப்ளக்ஸ் மாதிரி இருக்கிற நந்தனம் கிளை. கல்லூரியின் நுழைவாயிலிலேயே நான்கைந்து மாணவர்கள் அமர்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தார்கள். அருகில் ஓர் ஆசிரியர் அமர்ந்திருந்தார். சில மாணவர்கள் வெளியே சென்று கொண்டிருந்தார்கள். அதில் ஒருவரை, ‘ஃபீஸ் கட்டலன்னா எக்ஸாம் எழுத முடியாது’ என்று எச்சரித்துக் கொண்டிருந்தார் ஓர் ஆசிரியர். அந்த சமயத்தில், ‘சார்... அட்மிஷன்..’ என்றவாறு அவரருகில் போய் நின்றோம். உடனே அவரது முகம் உற்சாகமானது. அந்த பீஸ் கட்டாத மாணவனை போகச் சொல்லிவிட்டு நம்மிடம் தொடர்ந்தார்.

‘வாங்க.. வாங்க.. எங்கிருந்து வர்றீங்க.?’

‘சார் தஞ்சாவூரிலிருந்து வர்றோம் சார்...’

‘ஓ.. அப்படியா? நானும் அந்த ஊருதாங்க... என்ன படிச்சிருக்கீங்க?’

‘சார் பத்தாவது முடிச்சிட்டு ஒரு வருஷம் சென்னைல சி.என்.சி ஓட்டிக்கிட்டு இருந்தேன். உங்க விளம்பரத்தை பார்த்ததும் இங்க சேரலாம்னு தோணுச்சி சார்.’

‘டைரக்ட்டா விளம்பரத்த பார்த்து வந்தீங்களா... இல்ல அதுல உள்ள நம்பருக்கு கால் பண்ணீங்களா.?

'இல்ல சார், நேரா இங்க வந்துட்டோம்.’

‘நல்ல வேளை அந்த நம்பருக்கு கால் பண்ணியிருந்தா உங்ககிட்ட 300 ரூபாய் எக்ஸ்ட்ரா வாங்கியிருப்பாங்க. நம்ம ஊருக்காரரா வேற போயிட்டீங்க. நான் உங்களுக்கு ஃபுல் சப்போர்ட் பண்றேன். என் பேரு திலக். யாரு கேட்டாலும் திலக் சார் ரெஃபரன்ஸ்னு சொல்லுங்க என்ன...?

‘ம்ம்ம். ஓ.கே சார்.. சார் இங்க படிச்சா வேலை கிடைக்குமா...? வீட்ல ரொம்பக் கஷ்டம் சார்...’

‘கண்டிப்பா கிடைக்கும். உங்களுக்கு 3 மணி நேரம்தான் கிளாஸ். மத்த நேரத்துல நீங்க பாக்குற வேலையக் கூட பார்ட்டைமா பாத்துக்கலாம். அதுக்கு நான் ஏற்பாடு பண்றேன்’ என்றவாறு கோர்ஸ் டீட்டெய்ல்களையும் ஃபீஸ் டீட்டெய்ல்களையும் விளக்க ஆரம்பித்தார். அந்த உரையாடல் முடிந்ததும்... ‘சார்.. காலேஜை பாக்கலாமா சார்?’ என்றோம். ‘ஓ... தாராளமாக வாங்க பாக்கலாம்!’ என்று உள்ளே அழைத்தார். பின் தொடர்ந்தோம்.

‘இங்க பாருங்க... இதுதான் க்ளாஸ் ரூம்’ என்று ஒரு கண்ணாடி அறையை காட்டினார். உள்ளே ஏறக்குறைய 20 டெஸ்க்குகள் இருந்தன. ‘ஃபுல்லா ஏ.சி. க்ளாஸ் முடிஞ்சதால ஆஃப் பண்ணி வச்சிருக்கோம்’ என்றபடியே ஹவுஸ் கீப்பிங் அறைக்கு அழைத்துச் சென்றார். ஒரே ஒரு பெட் இருந்தது. ‘இங்கதான் உங்களுக்கு டவல் ஃபோல்டிங் எப்டி பண்றது? எப்படி பெட்ஷீட் செட் பண்றதுன்னு கத்துக் கொடுப்போம்’ என்றார். விளம்பரத்தில் வரும் உலகத்தரத்தை விடுங்கள், உள்ளூர் தரத்தையே உணரமுடியவில்லை. ‘மேலதான் கிச்சன்லாம் இருக்கு. ஆனா, இப்ப அங்க போக முடியாது. லாக் பண்ணி வச்சிருக்காங்க’

‘ஓ.... ஓ.கே சார்’

‘எப்ப அட்மிஷன் போடுறீங்க.?’

‘எந்த கோர்ஸ்னு டிஸ்கஸ் பண்ணிட்டு வந்து, அட்மிஷன் போட்டுடுறோம் சார்’

‘சரி ஓ.கே. இப்ப 1750 ரூபாய் கட்டி ரெஜிஸ்டர் பண்ணிருங்க இல்லன்னா சீட் கிடைக்காது. கொஞ்ச இடம்தான் இருக்கு.'

சார், பணம் எடுத்துட்டு வரல சார். இப்ப ஜஸ்ட் விசாரிக்கலாம்னுதான் வந்தோம். ஃப்ரெண்ட் பக்கத்துலதான் இருக்கான். பணம் வாங்கிகிட்டு ஈவ்னிங்குக்குள்ள வந்து கட்டிடுறோம் சார்’

‘ஓ... அப்படியா சீக்கிரம் வந்துருங்க. வந்துட்டு என் நம்பருக்கு கால் பண்ணுங்க. உங்க நம்பரையும் கொடுங்க, நான் கால் பண்றேன்’ என்றார். நம்பரை கொடுத்துவிட்டு வெளியேறினோம்.

வெளியில் நின்றுகொண்டிருந்த மாணவர்கள் நம்மை பாவமாக பார்த்தபடி இருக்க, ஒருவர் வந்து, "இங்கயெல்லாம் வந்துடாதீங்க. +2 படிங்க. ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கணும்னு விருப்பப்பட்டா வேற காலேஜுக்குப் போங்க. இங்க ஒண்ணுமே சரி இல்ல. பார்ட் டைம் ஜாப்னு சொல்லுவாங்க. 12 மணி நேரம் வேலை பாக்கணும். 3 மணி நேரம் கூட தூங்க முடியாது. 3 வருஷம் கழிச்சித்தான் 10 ஆயிரம் சம்பளம் வாங்க முடியும். எனக்கு சொந்த ஊரு திருநெல்வேலி. என்ஜினியரிங் படிச்சிகிட்டு இருந்தேன். விளம்பரத்தை பாத்துட்டு. படிச்சிகிட்டு இருந்த என்ஜினியரிங்கை டிஸ் கண்டினியூ பண்ணிட்டு இங்க வந்தேன். விளம்பரத்துல வர்றதெல்லாம் உண்மை இல்லை. நான் இங்க வரும்போது 60 பேர் படிச்சாங்க. இப்ப இருக்குறது வெறும் 25 பேர். அதெல்லாம் விளம்பரத்துல காட்டுறாங்களா? முக்கால்வாசி பேர் பாதியிலேயே ஓடிடுறாங்க. நான் ஏற்கவே என்ஜினியரிங்கை டிஸ்கன்டினியூ பண்ணிட்டேன். இதுலயும் பாதியிலேயே போனா... வீட்ல சங்குதான். வேற வழி இல்லாம இங்க படிக்கிறேன்" என்றார் சோகமாக. அவர் அருகில் இருந்த மாணவர்களும், "இந்த ஃபீல்டுல நல்லா சம்பாதிக்கலாம். ஆனா, இந்த காலேஜ் வேணாம் பாஸ்" என்றார்கள். ‘யோசிக்கிறேன்’ என்று கைகொடுத்துவிட்டு கிளம்பினோம்.

அடுத்து சென்றது நந்தனத்தில் இருக்கும் சென்னைஸ் அமிர்தாவின் தலைமை அலுவலகம். உள்ளே செல்வதற்கு முன் கேட்டில் என்ட்ரி போட சொன்னார்கள். போட்டுவிட்டு உள்ளே நுழைந்தோம். விளம்பரத்தில் வருவது போலவே ஹைட்டெக்காக இன்ட்டீரியர் டிசைன் செய்து வைத்திருந்தார்கள். எல்.சி.டி டிவியில் நாலாபுறமும் அமிர்தா விளம்பரம் ஓடிக்கொண்டிருந்து. அழகழகான பெண் வரவேற்பாளர்களை நிறுத்தியிருந்தார்கள். தனித்தனி அறையில் சேர்க்கை நடந்து கொண்டிருந்தது. கிராமப்புறத்திலிருந்து ஏராளமான பெற்றோர்கள் பிள்ளைகளோடு வந்து காத்திருந்தார்கள். ஒரு ஃபார்ம் கொடுத்து பூர்த்தி செய்யச் சொன்னார்கள். கொஞ்ச நேரத்தில் உள்ளே அழைத்தார்கள்.

‘எங்கிருந்து வந்திருக்கீங்க’ என்று ஆரம்பித்தார் உள்ளே இருந்த பெண்.

‘தஞ்சாவூரிலிருந்து வர்றோம் மேடம்’

‘நானும் உங்களுக்கு பக்கத்து ஊருதான். எப்டி இங்க வந்தீங்க.?’

‘விளம்பரத்த பாத்துதான் மேடம் வந்தோம்’

‘என்ன படிச்சிருக்கீங்க.?’

‘+2 மேடம்’

‘எத்தன மார்க்.?’

‘833 மேடம்’

‘நீங்க +2 படிச்சிருக்கதால த்ரீ இயர்ஸ் டிகிரி கோர்ஸே பண்ணலாம். இங்க வர்றவங்க அதிகமா டென்த் முடிச்சவங்க. இல்லன்னா டென்த் ஃபெயிலானவங்கதான். நீங்க ப்ளஸ் டூ முடிச்சிருக்கீங்க. டென்த் படிச்சவங்க ஒரு கட்டத்துக்கு மேல முன்னேற முடியாது. நீங்க ஒரு பெரிய லெவலுக்கு வந்துடலாம். என் பிரதர் கூட என்ஜினியரிங் முடிச்சிட்டு வேலையில்லாம அழுது புலம்பிக்கிட்டு இருந்தான். அப்புறம், நான்தான் இங்க வந்து சேருடானு சொல்லி படிக்க வச்சேன். இப்ப ஃபாரின்ல வேலை பாக்குறான். ஹோட்டல் மேனேஜ்மென்ட்டுங்கிறது. பெரிய ஃபைவ் ஸ்டார் ஹோட்டலை நிர்வாகம் பண்றதுக்கான படிப்பு. நீங்க, அததான் பண்ணப் போறீங்க. எந்த கோர்ஸ் படிக்கப் போறீங்க.?’

‘நோ.. ஐடியா மேடம். விளம்பரத்த பாத்துட்டு வந்தேன்’

‘ம்ம்ம்... நீங்க என்ன படிக்கலாம்னா.. (யோசிக்கிறார்) அப்பா என்ன பண்றாங்க.?’

‘விவசாயம் மேடம்’

‘வயல்ல என்ன போட்டுருக்கீங்க.?’

‘நெல்லு மேடம்’

‘ஓ... அப்டியா..? அம்மா என்ன பண்றாங்க....?’

‘சும்மாதான் மேடம் இருக்காங்க’

‘எல்லா கோர்ஸ் டீட்டெய்ல்ஸையும் சொல்றேன். உங்களுக்கு ஏத்தத செலக்ட் பண்ணுங்க’ என்றவாறு சொல்ல ஆரம்பித்தார்.

அதில் ஒன்றை செலக்ட் செய்தோம்.

‘ஒரு செமஸ்டருக்கு 41,500 ரூபாய் செலவாகும். உங்க ஊர்ல இருந்து வேற யாரையாவது கூட்டிக்கிட்டு வந்தா உங்களுக்கு ஃபீஸ் குறையும் என்றார்’

‘ஒரு பத்து பேர கூட்டிக்கிட்டு வந்தா ஃபீஸ் ரொம்ப குறையுமா மேடம்..?’

‘கண்டிப்பா. அதுமாதிரி நிறையபேர் அழைச்சிக்கிட்டு வந்து ஃபீஸ் குறைச்சிருக்காங்க.'

' எங்க ஊர்ல நிறைய பசங்க இருக்காங்க கூட்டிக்கிட்டு வர்றேன் மேடம். ஊருக்கு போயிட்டு அப்பாகிட்ட சொல்லிட்டு வர்றேன் மேடம்...'

'இங்க பாருங்க... அட்மிஷனெல்லாம க்ளோஸாகிக்கிட்டே இருக்கு. நீங்க செலக்ட் பண்ணிருக்க கோர்ஸ்ல ரெண்டு மூணு சீட்தான் இருக்கு. உங்களுக்கு சீட் ஹோல்ட் பண்ணி வைக்கணும்னா 1750 ரூபாய் கட்டி, ரிஜிஸ்டர் பண்ணிட்டுப் போயிடுங்க’

‘மேடம் பணம் எடுத்துட்டு வரலை மேடம். சும்மா விசாரிச்சுட்டு போகலாம்னு வந்தோம்’

‘இப்ப நீங்க பணம் கட்டாம போனீங்கன்னா, என்னால ஒண்ணுமே பண்ண முடியாது. ஒரு 1750 ரூபாய் கட்டி ரிஜிஸ்டர் பண்ணிட்டீங்கன்னா உங்க சீட்டை ஹோல்ட் பண்ணி வச்சிருவேன். பூட்டு போட்டது மாதிரி. அதை, யாரும் திறக்க முடியாது. அப்புறம் வந்து நீங்க அட்மிஷன் போட்டுக்கலாம்’

‘இல்ல மேடம் சுத்தமா கையைல காசு இல்ல. அம்பத்தூர்ல ஃப்ரெண்டு இருக்கான். நான் போய் ஈவ்னிங்குக்குள்ள வாங்கிட்டு வந்துடவா.?’

‘அக்கவுன்ட்ல போட்டுவிடச் சொல்லி எடுத்து கட்டிருங்களேன்.’

‘இல்ல மேடம். போயிட்டு உடனே வந்துடுறேன்’

‘சீக்கிரம் வந்துருங்க. இல்லன்னா, சீட் முடிஞ்சிரும். என்னால எதுவும் பண்ண முடியாது' என்றவாறு அக்கறையாக ரிஷப்ஷனுக்கு ஃபோன் செய்தார். இவுங்க 3 மணிக்குள்ள பணம் கட்டி ரிஜிஸ்டர் பண்ணிடுறாங்களாம். சீட்டை ஹோல்ட் பண்ணி வையுங்க’ என்று சொன்னார்.

‘ரொம்ப தாங்க்ஸ் மேடம். இப்ப காலேஜை சுத்தி பாக்கலாமா மேடம்.?’

‘கண்டிப்பா பாக்கலாம். ஆனா, ரிஜிஸ்டர் பண்ணதுக்கு அப்புறம் நாங்க ஒரு கார்டு தருவோம். அது இருந்தாதான் உங்கள காலேஜுக்குள்ள அனுமதிப்பாங்க’ என்றார். அங்கிருந்து பணம் கட்டாமல் கிளம்புவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது.

அடுத்ததாக ஓ.எம்.ஆரில் இருக்கும் கல்லூரிக்கு சென்றோம். உள்ளே செல்வதற்கு முன்பு வெளியில் கும்பலாக நின்று கொண்டிருந்த மாணவர்களிடம் பேசினோம். " அட்மிஷனா... போட்டுட்டியா..? தல வேணாம் தல... போயிரு தல... எங்கிருந்து வந்துருக்க...? விளம்பரத்த பாத்து வந்தியா...? உள்ள போயிறாத... உன்ன அப்படியே மைண்ட் வாஷ் பண்ணி சேர வச்சிருவாங்க”

“இல்லங்க விளம்பரத்துல ஃபாரின்ல வேலைனு சொல்றாங்களே..?

"அப்டிதான் சொல்லுவாங்க. ஆனா, ஒண்ணும் இருக்காது. நான் ரெண்டு லட்சம் கட்டியிருக்கேன். காலேஜ் நல்ல ஷோவாதான் இருக்கும். டெய்லியும் டெக்கரேஷன பாத்துட்டே உட்காந்துருக்க முடியுமா.? சொல்லியே தரமாட்டாங்க. ஹோட்டல்ல ட்ரெய்னிங்க்கு போய் அமிர்தானு பேர சொன்னாலே அடிச்சி துரத்துறானுங்க. ப்ராக்டிகலுக்கு பெரிய பெரிய ஹோட்டல்ல இருந்து செஃப்களை அழைச்சிக்கிட்டு வந்து சொல்லித்தரணும். ஆனா, இங்க இவுங்களேதான் நடத்துவாங்க. மலேசியா யுனிவர்சிட்டிம்பாங்க. அது மலேசியாவுல டுபாக்கூர் யுனிவர்சிட்டியா இருக்கும். உன் நல்லதுக்கு சொல்றேன் வேணாம் போயிடு. இப்ப உன்ன அழைச்சிகிட்டு போய் என் ஃப்ரெண்டுதான்னு சொன்னா போதும்... எங்களுக்கு 2500 ரூபா கிடைக்கும். ஆனா, அதுக்காக உன் வாழ்க்கையை பாழாக்க விரும்பல. நாலு லட்சம் வரைக்கும் பணம்கட்டிட்டு என்ன பண்றதுனு தெரியாம முழிச்சிகிட்டு இருக்காங்க பசங்க. அந்தமான், கேரளாவுல இருந்தெல்லாம் இங்க வந்து சிக்கிகிட்டு இருக்காங்க. ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிச்சா நல்ல வேல்யூதான். ஆனால், இங்க படிச்சா வேஸ்ட். ஆறு மாசத்துக்கு முன்னாடிவரைக்கும் விளம்பரத்துல நடிச்ச ராதிகா ஏன் இப்ப நடிக்கல? 50 பசங்க சேர்ந்து கேஸ் போட்டுட்டாங்க. உனக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட்தான் படிக்கணும்னா வேற ஏதாவது நல்ல காலேஜ் பாத்துப் படி. இப்போ dக்கு முன்னால eன்னு சொல்லுவாங்க. ஆனா a க்கு (அட்மிஷனுக்கு) பின்னால என்னானு சொல்லமாட்டாங்க. இவ்ளோ தூரம் வந்துட்ட காலேஜுக்குள்ள போய் பாத்துட்டுப்போ. சுத்திக்காட்டுவாங்க ஏசி காத்து வாங்கிக்கிட்டு கிளம்பிரு.. வாழ்க்கையை பறிகொடுத்துறாத. இங்க படிக்கிற யார வேணும்னாலும் கேட்டுக்கோ. இதையேதான் சொல்லுவாங்க” என்று தோளில் தட்டி அனுப்பினார்கள்.

கல்லூரிக்குள் நுழைந்து அட்மிஷன் என்றதும்... கையோடு அழைத்துச் சென்றார் ஒருவர். அந்த அறையில் "இந்த விளம்பரத்த பாத்துருக்கீங்களா..? இந்த விளம்பத்துல வர்ற பொண்ணு தாம்பரத்துல உள்ள பிராஞ்ச்ல படிக்குது. இப்ப ஃபாரின்ல வேலை கிடைச்சிருக்கு. என் மச்சான் கூட வேலை இல்லாம சுத்திக்கிட்டு இருந்தான்.அப்புறம் இங்க சேர்த்து படிக்க வச்சேன்.. அவனும் இப்ப ஃபாரின்ல இருக்கான்" என போய்க் கொண்டிருந்தது உரையாடல். நமக்கு தலை கிறுகிறுக்க ஆரம்பித்துவிட்டது

நமக்கு விளக்கம் கொடுக்க ஒரு பெண் வந்தார். "நான் கவுன்சிலர் இல்லப்பா.. நான் இந்த காலேஜோட சீனியர் வைஸ் பிரின்சிபல்" என்று ஆரம்பித்து, முன்பு கேட்ட அதே டயலாக்குகளை அள்ளிவிட்டார். "ஃபாரின் போகலாம்... படிக்கும்போதே பத்தாயிரம் சம்பாதிக்கலாம்..." என விளம்பரத்தை மிஞ்சும் அளவுக்குப் பேசினார். கடைசியில், LSBF (LONDON SCHOOL OF BUSINESS &FINANCE) யுனிவர்சிட்டி டை அப் கோர்சில் சேர்ந்துகொள்வதாக அழுத்தமாக சொன்னோம். "மத்த கோர்ஸில் கூட இடம் இருக்குது. ஆனா நீங்க செலக்ட் பண்ணிருக்க கோர்ஸ்ல ரெண்டு மூணு சீட்தான் இருக்குது" என ஆரம்பித்து, முன் இரு இடங்களில் சொல்லப்பட்ட அதே 1750 ரூபாயில் வந்து நிறுத்தினார்.

நாமும் பணம் இல்லை என்ற அதே டயலாக்கை சொன்னோம். " இன்னைக்கு நீங்க 1750 ரூபாய் கட்டி ரெஜிஸ்டர் பண்ணிட்டு வெள்ளிக்கிழமைக்குள்ள பீஸ் பணம் 52,750 ரூபாயை கட்டிட்டா உங்களுக்கு ஒரு டேப்லெட் ஃப்ரீ. இது இந்த கோர்ஸுக்கு மட்டும்தான். அதுவும் வெள்ளிக்கிழமை வரைக்கும்தான்" என ஸ்பாட் ஆஃபர் ஒன்றைச் சொன்னார். நாம் சமாளித்தோம். அதற்கு அவர், “சரி.. காலேஜை சுத்திப்பாத்துட்டு போயிருங்க” என்று ஒருவரோடு அனுப்பி வைத்தார். “இதுதான் பார்.. இதுதான் ரூம் சர்வீஸ், இதுதான் கிச்சன்.. கிளாஸ் ரூம் ஃபுல்லா ஏ.சி..." என ஒவ்வொரு டிப்பார்ட்மெண்டாக காட்டி விவரித்துக்கொண்டே போனார். 'விளம்பரத்தில் வருவது மாதிரியே இருக்கிறதே...' என சந்தோஷப்படும் நேரத்தில் காத்திருந்தது ஷாக்..

கிச்சனை காட்டிவிட்டு அடுத்த அறைக்கு சென்றுவிட்டார். அதற்குள் இருந்த முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள், 'சேர்ந்துடாத... சேர்ந்துடாத..." என கையை ஆட்டினார்கள்.

♻இதன் பின்னர் ஒரு நிருபராக, மாணவர்கள் சொன்னவற்றைச் சொல்லி, ஓ.எம்.ஆர் கிளையின் சீனியர் வைஸ் பிரின்சிபல் ஆண்டனியிடம் விளக்கம் கேட்டோம்.

"மாணவர்கள் குற்றச்சாட்டுகளை சொல்ல டோல் ஃப்ரீ நம்பர் இருக்கிறது. அதற்கென்றே ஒரு துறை வைத்திருக்கிறோம். அதில் அவர்களது குற்றச்சாட்டுகளை சொன்னால் 24 மணி நேரத்தில் தீர்த்து வைத்துவிடுவோம். வேலை கிடைக்கவில்லை என்று சொல்வதெல்லாம் சுத்தப் பொய். எங்க கிளையில் மட்டும் 1300 அப்பாயின்ட்மென்ட் வாங்கி கொடுத்திருக்கிறோம். மொத்தமாக 2396 பேருக்கு வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறோம். ஆஃபர் லெட்டர்ஸ்... டாக்குமெண்ட்ஸ். எல்லாமே பக்காவாக இருக்கிறது. இப்பக் கூட இங்க படிச்ச ஒரு பையனை அழைச்சிக்கிட்டு வாங்க 2 நிமிஷத்துல என்னால வேலை வாங்கி கொடுக்க முடியும்" என்கிறார்.

பணம் கட்டிய மாணவர்கள் பொய் சொல்கிறார்களா... பணம் வாங்கிய நிர்வாகம் சமாளிக்கிறதா?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 13 Jun 2016 - 12:15

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி படிக்கவே ரொம்ப அதிர்ச்சியா இருக்கு ! ...அது தான் இங்கே பகிர்ந்தேன்............பாவம் , எத்தனையோ கஷ்டங்களுக்கு நடுவில் வேலை வேண்டும் என்று வராங்க, அவங்களை இப்படி அலைக்கழிக்கலாமா?....முன்னெல்லாம் வெளிநாட்டுக்கு போய்தான் ஏமாந்தாங்க........ இப்போ கிராமத்திலிருந்து பட்டணம் வந்து ஏமாறுகிறார்கள்...நல்ல முன்னேற்றம் சோகம்சோகம்சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon 13 Jun 2016 - 18:53

ஒரு கல்லூரியில் சேரும் முன்பாக ஆயிரம் முறை யோசிக்கவேண்டும் . எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவெடுக்கக் கூடாது .

இதுபோன்ற டுபாக்கூர் கல்லூரிகளில் சேருவதற்கு செலவழிக்கும் பணத்தில் , நாமே ஒரு மெஸ்ஸை ஆரம்பித்து நான்கு பேருக்கு சமைத்துப்போட்டு , நாலு காசு சம்பாதிக்கலாம் .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 13 Jun 2016 - 19:18

இதைத்தான் advertisement குக்கிங் என்போம் .
ஹோட்டல் மேனேஜ்மென்ட் முதல் பாடம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82195
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 13 Jun 2016 - 19:34

நரி பாட்டு பாடச் சொன்னால்,
வடையை காலில் வைத்து பத்திரப்படுத்தி விட்டு
காக்கா ராகம் பாடுவதாக கதை சொல்கிறோம்....
-
காக்கா ஏமாறுவதில்லை, நரிதான் ஏமாந்து
போகிறது...!!
-
-------------------------------------------
வேலை வாய்ப்பு இல்லாததால்
விளம்பரத்தை நம்பி மாணவர்கள் ஏமாறுகிறார்கள்...!
-


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 13 Jun 2016 - 19:34

சென்னை அமிர்தாவின் விளம்பரமே யாதர்த்தமாக இல்லை . அப்படி இருக்கும் போது மாணவர்கள் சொல்லுவது உண்மையாக இருக்கலாம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Mon 13 Jun 2016 - 21:52

பணத்துக்காக ஏழை மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள்...சோகம்சோகம்சோகம்




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 13 Jun 2016 - 23:22

M.Jagadeesan wrote:ஒரு கல்லூரியில் சேரும் முன்பாக ஆயிரம் முறை யோசிக்கவேண்டும் . எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவெடுக்கக் கூடாது .

இதுபோன்ற டுபாக்கூர் கல்லூரிகளில் சேருவதற்கு செலவழிக்கும் பணத்தில் , நாமே ஒரு மெஸ்ஸை ஆரம்பித்து நான்கு பேருக்கு சமைத்துப்போட்டு , நாலு காசு சம்பாதிக்கலாம் .

ஆமாம் ஐயா, இவர்களுக்கெல்லாம் நம்பிக்கை ஊட்ட 'வெற்றிக் கொடி கட்டு' போன்ற படங்களை போட்டுக் காட்டனும்......பாவம் பசங்க சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 13 Jun 2016 - 23:22

T.N.Balasubramanian wrote:இதைத்தான் advertisement குக்கிங் என்போம் .
ஹோட்டல் மேனேஜ்மென்ட் முதல் பாடம்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1211033

ம்ம்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 13 Jun 2016 - 23:24

ayyasamy ram wrote:நரி பாட்டு பாடச் சொன்னால்,
வடையை காலில் வைத்து பத்திரப்படுத்தி விட்டு
காக்கா ராகம் பாடுவதாக கதை சொல்கிறோம்....
-
காக்கா ஏமாறுவதில்லை, நரிதான் ஏமாந்து
போகிறது...!!
-
-------------------------------------------
வேலை வாய்ப்பு இல்லாததால்
விளம்பரத்தை நம்பி மாணவர்கள் ஏமாறுகிறார்கள்...!
-

ஆமாம் அண்ணா, விளம்பரம் மிக பிரமாதமாமே ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக