ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் புக்
 Meeran

வரலாறு பகுதி முழுவதும் எளிதில் புரிந்து கொள்ள வகையில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை SHORTCUT PDF
 Meeran

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

விவாக ரத்து ! (கிரேக்கப் பாடல்)
 krishnanramadurai

ஏர்செல் நிறுவனம் திவால்
 krishnanramadurai

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 Dr.S.Soundarapandian

இளமையான குடும்பம்..!
 Dr.S.Soundarapandian

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

செய்க அன்பினை
 மூர்த்தி

திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த உழைப்பு
 மூர்த்தி

ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!
 Pranav Jain

மனங்களை மையல் கொள்ள செய்த மயிலு!
 Pranav Jain

கடைசி நிமிடம் வரை திக்...திக்...! கோப்பையை வென்றது இந்தியா
 ayyasamy ram

பச்சை நிற ஆடையில் ஜொலித்த ஸ்ரீதேவி! - கடைசி தருணங்கள்
 ayyasamy ram

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ponsubha74

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 ayyasamy ram

நடிகை ஸ்ரீதேவி காலமானார்
 ayyasamy ram

மதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா
 ayyasamy ram

என்னை பற்றி
 T.N.Balasubramanian

தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
 krishnanramadurai

முன்னும் பின்னும் திரும்பிய நந்தி!
 ayyasamy ram

அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
 ayyasamy ram

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்?

View previous topic View next topic Go down

கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்?

Post by மூர்த்தி on Wed Jun 22, 2016 12:34 am

இந்த உலகில் எத்தனையோ பிரபல கவிஞர்கள்,எழுத்தாளர்கள், மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றியவர்கள் என வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் இந்த உலகுக்கு தந்த பலவற்றை நாம் பயன்படுத்தினாலும் கூட, அந்த உத்தமர்கள், அறிஞர்களை நாம் மறந்து விடுகிறோம்.
இந்த நிலையில் கந்த சஷ்டி கவசம் பாடிய, பாலன் தேவராசன் பற்றி சிறிது காணலாம்.

தேவராயசுவாமிகள் என்று நாம் போற்றுகின்றவரின் இயற்பெயர் தேவராயன். நல்ல வசதியான கணக்குப்பிள்ளை குடும்பத்தில், 1837 இல் பிறந்த இவரது சொந்த ஊர் தொண்டை நாட்டு வல்லூராகும். இவரது தந்தையார் பெயர் வீராச்சாமிப் பிள்ளை. தாயார் பெயர் தெரியவில்லை. நீண்ட நாட்கள் குழந்தையில்லாமல் இருந்து பிறந்தவர் தேவராயன்.
வல்லூரிலேயே தமிழும் கணக்கும் பயின்றார். பிறப்பு ஓரிடம். செல்வம் தேடுவது ஓரிடம் என்னும் பொதுமொழிக்குத் தேவராயனும் விலக்காகவில்லை.இருபது வயதிலேயே பெங்களூர் சென்று கணக்குப்பிள்ளை தொழிலில் நல்ல செல்லவமும் சேர்த்திருந்தார் தேவராயர்.

பெங்களூரின் தட்பவெட்பநிலை. அருகில் பெற்றோர் இல்லாத நிலை. கணக்குத் தொழிலில் கொழிக்கும் செல்வம். இருபது வயது. இவையனைத்தும் ஒருவர் கெட்டுப்போவதற்குப் பலவிதங்களில் காரணமாக இருக்கும். ஆனால் தேவராயனிடம் இவையனைத்தும் தமிழார்வத்தைத்மட்டுமே தூண்டின.வேலை நேரம் போக மற்ற நேரங்களில் தமிழ் வாசிப்பில் செலவழித்தார்.(என்னைப்போல் என்று வைத்துக் கொள்ளுங்களேன்)

இவ்வாறாக இயல்பாக இருந்த தமிழார்வம் ஒரு மாமேதையின் பெங்களூர் வரவால் மிகவும் தூண்டப்பட்டது. தூண்டிய விளக்கிற்கும் தூண்டப்பட்ட விளக்கிற்கும் பேரொளி கொடுத்த நல்ல வரவு அது.அந்த மாமேதை தமிழ் தாத்தா என தமிழுலகம் அழைக்கும் உவேசா இன் ஆசிரியரும் பிற்காலக் கம்பர் என அழைக்கப்பட்டவருமான மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை (சித்திரை 6, 1815 - தை 2, 1876) அவர்களாவர்.பிள்ளை அவர்களின் மாணாக்கர்களில் மாயூரம் வேதநாயகம்பிள்ளை (தமிழில் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதியவர்) உ.வே.சுவாமிநாத ஐயர்,பூவாளூர் தியாகராசச் செட்டியார்,சவுரிராயுலு பிள்ளை,வல்லூர் தேவராசப்பிள்ளை ஆகியோர் பெயர் சொல்லக்கூடிய பலரில் சிலராவர்.பிள்ளை அவர்களின் வழிகாட்டலே உவேசா வை ஓலைச்சுவடிகளை தேட வைத்தது என்றால் மிகையாகாது.

இருபதாவது வயதில் வியாபாரம் செய்து பணமீட்ட பெங்களுர் சென்ற தேவராசன்,தமிழ் இலக்கியத்தை எங்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கில் இருந்த பிள்ளை அவர்கள் பெங்களூருக்கு வந்த போது, அவரை தேடிச் சென்று தமிழ் இலக்கியம் கற்றார்.

அவரிடம் தமிழ் படித்ததோடு மட்டுமன்றி இலக்கியம்,பாடல் எழுதுவதிலும் தன்னை வளர்த்துக் கொண்ட தேவராசனாரிடம், செய்யுள் பாடல்கள் எழுதும் ஆர்வத்தை கண்ட பிள்ளை அவர்கள், அடுத்து பாடல் மற்றும் தமிழ் இலக்கணத்தையும் கற்றுக் கொடுத்தார்.
ஆரம்பத்தில் அவர் எழுதியவற்றை பிள்ளை அவர்கள் சரிபார்த்து திருத்திக் கொடுத்தார்.

பிள்ளை அவர்கள் பெங்களூரில் இருந்த குறுகிய காலத்தில் குசேலோபாக்கியானம் போன்ற நூல்கள் சிலவற்றை  எழுதியதுடன் பிள்ளை அவர்களைக் கொண்டு திருத்தமும் செய்து கொண்டார்.

ஒருசமயம் அவர் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை.பெங்களூர் மருத்துவ மனைகள் அவரைக் கைவிடவே, வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார். அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது!

அப்போது அவருக்கு, திருநாவுக்கரசர் அதே போல் சூலை நோயால்(வயிற்றுவலி) தவித்ததையும், இறைவன் அருளால் குணமானது நினைவுக்கும் வரவே,தற்கொலை முடிவை மாற்றிக் கொண்டு விரதம் இருந்து கவசம் பாட ஆரம்பித்தார்.

கந்த சஷ்டி கவசத்தை பால தேவராய சுவாமிகள் அரங்கேற்றிய தலம் ஈரோடு அருகில் உள்ள சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகும்.கந்த சஷ்டி கவசத்தில் வரும் சிரகிரி வேலவன் எனும் வரிகள் சென்னிமலை இறைவனைக் குறிப்பவை.

இறைவனை வேண்டி பால தேவராசனால் பாடப்பட்ட கவசங்கள் - சிவ கவசம், கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் , சத்தி கவசம், விநாயகர் அகவல் , நாராயண கவசம் என்ற ஆறாகும்.
avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 885
மதிப்பீடுகள் : 452

View user profile

Back to top Go down

Re: கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்?

Post by krishnaamma on Wed Jun 22, 2016 1:14 am

அருமையான தகவல் பகிர்வு மூர்த்தி ........... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
.
இந்தப் பதிவை 'இந்து' வுக்கு மாற்றிவிடுகிறேன் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்?

Post by siva.c.r on Wed Jun 22, 2016 7:31 am

ஷண்முக கவசம் 1891-ஆம் ஆண்டு
பாம்பன் சுவாமிகளால் இயற்றப்பட்டது.
avatar
siva.c.r
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 73
மதிப்பீடுகள் : 47

View user profile

Back to top Go down

Re: கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்?

Post by ராஜா on Wed Jun 22, 2016 11:47 am

@siva.c.r wrote:ஷண்முக கவசம் 1891-ஆம் ஆண்டு
பாம்பன் சுவாமிகளால் இயற்றப்பட்டது.
நானும் இப்படி தான் கேள்விப்பட்டுள்ளேன் ,

avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30722
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்?

Post by krishnaamma on Thu Jun 23, 2016 12:20 am

@மூர்த்தி ............... இதற்கு உங்களின்  பதில் வேண்டுமே? புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்?

Post by siva.c.r on Thu Jun 23, 2016 3:20 pm

கந்தர் சஷ்டி கவசம், ஷண்முக கவசம் போலல்லாது

சிவ கவசம் என்பது சமஸ்கிருதத்தை மூலமாகக் கொண்டது.

சிவ கவசத்தின் ஆரம்ப ஸ்லோகம் கீழுள்ளது.

॥ श्रीशिवकवचम् ॥

अस्य श्री शिवकवच स्तोत्रमहामन्त्रस्य
ऋषभयोगीश्वर ऋषिः ।
अनुष्टुप् छन्दः । श्रीसाम्बसदाशिवो देवता ।
ॐ बीजम् ।
नमः शक्तिः ।
शिवायेति कीलकम् ।
मम साम्बसदाशिवप्रीत्यर्थे जपे विनियोगः ।

இந்த கவசத்தை இயற்றியவர் ரிஷபயோகீஸ்வர முனிவர்

என்று சைவ நூலாசிரியர்கள் கூறுகிறார்கள்.

பாலதேவராய ஸ்வாமிகள் அதைத் தமிழ்ப்படுத்தியிருக்கிறாரா

என்றறியேன்.
avatar
siva.c.r
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 73
மதிப்பீடுகள் : 47

View user profile

Back to top Go down

Re: கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்?

Post by siva.c.r on Thu Jun 23, 2016 3:38 pm

பாகவத புராணம் ஆறாவது ஸ்கந்தம் எட்டாவது அத்தியாயத்தின்

ஒரு பகுதியே நாராயண கவசம்.

விநாயகர் அகவல் அவ்வையாரால் இயற்றப்பட்டது.
avatar
siva.c.r
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 73
மதிப்பீடுகள் : 47

View user profile

Back to top Go down

Re: கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்?

Post by T.N.Balasubramanian on Thu Jun 23, 2016 7:03 pm

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21175
மதிப்பீடுகள் : 8099

View user profile

Back to top Go down

Re: கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்?

Post by மூர்த்தி on Thu Jun 23, 2016 9:30 pm

எதற்கு என் பதில் வேண்டும் கிருஷ்ணாஅம்மா?

ஐயா ஏன் சோகமாய் மேலே இருக்கிறார்?
avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 885
மதிப்பீடுகள் : 452

View user profile

Back to top Go down

Re: கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்?

Post by krishnaamma on Thu Jun 23, 2016 11:05 pm

@siva.c.r wrote:ஷண்முக கவசம் 1891-ஆம் ஆண்டு
பாம்பன் சுவாமிகளால் இயற்றப்பட்டது.

@siva.c.r wrote:பாகவத புராணம் ஆறாவது ஸ்கந்தம் எட்டாவது அத்தியாயத்தின்

ஒரு பகுதியே நாராயண கவசம்.

விநாயகர் அகவல் அவ்வையாரால் இயற்றப்பட்டது.  

என்ன ஆச்சு உங்களுக்கு?...........சந்தேகம் கேட்கரீங்களா ?............விவரம் சொல்கிறீர்களா ..........புரியலை .......பாருங்க ஐயா சோகத்தில் ஆழ்ந்து விட்டார் சோகம்சோகம்சோகம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்?

Post by krishnaamma on Thu Jun 23, 2016 11:07 pm

@மூர்த்தி wrote:எதற்கு என் பதில் வேண்டும் கிருஷ்ணாஅம்மா?

ஐயா ஏன் சோகமாய் மேலே இருக்கிறார்?
மேற்கோள் செய்த பதிவு: 1212375

ஷண்முக கவசம் பற்றி அறியத்தான் கேட்டேன் மூர்த்தி........அந்த பதிவர் மாத்தி மாத்தி ஏதோ சொல்ல வருகிறாரா ....இல்லை தனக்கு தெரிந்ததை இங்கு பதிகிறாரா என்று தெரியலைசோகம்...........அது தான் ஐயாவும் சோகமாய் இருக்கார்......நீங்கள் ஏற்கனவே கொடுத்த விளக்கமே சூப்பர், போறும் புன்னகை

Post by மூர்த்தி on Fri Jun 24, 2016 2:07 am

கண்ணனின் வரலாற்றைக் கூறுவது பாகவதம் .அதில் நாராயண கவசம் என்ற நூல் பகுதி பாகவதம் ஆறாம் கந்தம் என்னும் பிரிவில் நாராயண வர்ம-நாராயண மந்த்ர என்ற பெயரில் சொல்லப்பட்டிருக்கிறது.

சிவ கவசம் என்னும் நூலை தமிழில் எழுதியவர் வரதுங்கராமர் என்ற பாண்டிய மன்னனாவன்.
சிவகவசம் (சமஸ்கிருதம்) எழுதியவர் சூதமாமுனிவர்.பல முனிவர்கள் கொண்ட இடத்தில் இவை சொல்லப்பட்டதால் ரிஷப யோகி எழுதியதாகவும் சிலரால் சொல்லப்படுகிறது.ஆயினும் சூதமாமுனிவரால் எழுதப்பட்டதையே பலரும் ஏற்றுக் கொள்கிறார்கள் காரணம் சூதமாமுனிவர் வியாசரின் மாணாக்கராவர்.

கந்தர் சஷ்டி கவசம் எழுதியவர் தேவராசசுவாமிகள்.

சண்முககவசம் எழுதியது பாம்பன் சுவாமிகள். கந்த சஷ்டிக் கவசத்திற்கும் சண்முக கவசத்திற்கும் உள்ள வேறுபாடு தேவராச சுவாமிகள் வட சொற்களைக் கலந்து எழுதியுள்ளார்.ஆனால் பாம்பன் சுவாமிகள் எழுதிய சண்முக கவசம் வட சொற்கள் எதுவும் கலவாது முழுவதும் தமிழில் பாடப்பட்டுள்ளது.

விநாயகர் அகவல் நூலைப் பாடியவர் ஔவையார் . ஆனால் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்ககால ஔவையார் அல்லர். விநாயகர் அகவலை எழுதிய ஔவையார் 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவராவர். ஆத்திசூடி,கொன்றைவேந்தனை எழுதியவர் கம்பர் காலத்தைய 12 ஆம் நூற்றாண்டு ஔவையார் ஆவர்.

வரலாறு முக்கியம் அமைச்சரே!
avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 885
மதிப்பீடுகள் : 452

View user profile

Back to top Go down

Re: கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்?

Post by T.N.Balasubramanian on Fri Jun 24, 2016 9:03 am

கந்த சஷ்டி அன்று பிறந்து இருந்தாலும் ,
கந்தசஷ்டி கவசம் , ஷண்முக   கவசம் 12, 14 ஆண்டு ஔவையார் முதலிய அரிய செய்திகளை  அறிய முடிந்தது .

சோகம் நீங்கி , புன்னகை முகத்தில் .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21175
மதிப்பீடுகள் : 8099

View user profile

Back to top Go down

Re: கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்?

Post by Dr.S.Soundarapandian on Sat Jun 25, 2016 9:10 pm

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4446
மதிப்பீடுகள் : 2377

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்?

Post by siva.c.r on Sun Jun 26, 2016 7:38 am

@krishnaamma wrote:
@மூர்த்தி wrote:எதற்கு என் பதில் வேண்டும் கிருஷ்ணாஅம்மா?

ஐயா ஏன் சோகமாய்  மேலே இருக்கிறார்?
மேற்கோள் செய்த பதிவு: 1212375

ஷண்முக கவசம் பற்றி அறியத்தான் கேட்டேன் மூர்த்தி........அந்த பதிவர் மாத்தி மாத்தி ஏதோ சொல்ல வருகிறாரா ....இல்லை தனக்கு தெரிந்ததை இங்கு பதிகிறாரா  என்று தெரியலைசோகம்...........அது தான் ஐயாவும் சோகமாய் இருக்கார்......நீங்கள் ஏற்கனவே கொடுத்த விளக்கமே சூப்பர், போறும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1212388

உண்மை நிலையை பதிவிட்டது தவறானால், அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
avatar
siva.c.r
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 73
மதிப்பீடுகள் : 47

View user profile

Back to top Go down

Re: கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்?

Post by மூர்த்தி on Sun Jun 26, 2016 4:41 pm

ஐயா! கோபம் ஏன்? மன்னிப்பு ஏன்? நீங்கள் உண்மையாக சரியானதை புரியும்படி சொல்வதுதான் முறையே தவிர மன்னிப்ப்புக் கேட்பது அல்ல.உண்மையை உங்களிடம் மட்டும் வைத்திருந்தால் நாங்கள் எப்படி தெரிந்து கொள்வது?

நீங்கள் எழுதியது கிருஷ்ணாஅம்மாவிற்குப் புரியவில்லை. எனக்குப் புரிந்தபடி விளக்கம் தரப்பட்டது.அவ்வளவுதான்.

இங்கே நாம் புரிந்துகொள்ள வேண்டியது.................பல ஆன்மீக நூல்கள் தமிழிலும்,சமஸ்கிருதத்திலும் எழுதப்பட்டிருக்கின்றன. கந்தபுராணம் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் உள்ளது.கந்தபுராணம்,சிவகவசம் தமிழிலும் எழுதப்பட்டுள்ளது .

இதைவிட 18 புராணங்களில் ஒன்றான கந்தபுராணத்தில் ஒரு பிரிவாக உள்ளது சிவகவசம் அல்லது அமோகசிவகவசம் என்பதாகும்.இதை எழுதியது நீங்கள் குறிப்பிடும் ரிஷபயோகி (ரிஷபயோகீஸ்வரரிஷி).

நாராயணகவசம் பாகவதபுராணத்தில் உள்ளது. சிவகவசம் கந்தபுராணத்தில் உள்ளது. எல்லாவற்றையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. கொஞ்சம் புரியும்படி சொன்னால் புரிந்து கொள்ளப் போகிறோம்.அவ்வளவுதான்.
avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 885
மதிப்பீடுகள் : 452

View user profile

Back to top Go down

Re: கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்?

Post by krishnaamma on Mon Jun 27, 2016 12:25 am

@siva.c.r wrote:
@krishnaamma wrote:
@மூர்த்தி wrote:எதற்கு என் பதில் வேண்டும் கிருஷ்ணாஅம்மா?

ஐயா ஏன் சோகமாய்  மேலே இருக்கிறார்?
மேற்கோள் செய்த பதிவு: 1212375

ஷண்முக கவசம் பற்றி அறியத்தான் கேட்டேன் மூர்த்தி........அந்த பதிவர் மாத்தி மாத்தி ஏதோ சொல்ல வருகிறாரா ....இல்லை தனக்கு தெரிந்ததை இங்கு பதிகிறாரா  என்று தெரியலைசோகம்...........அது தான் ஐயாவும் சோகமாய் இருக்கார்......நீங்கள் ஏற்கனவே கொடுத்த விளக்கமே சூப்பர், போறும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1212388

உண்மை நிலையை பதிவிட்டது தவறானால், அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1212625

மன்னிப்பெல்லாம் எதுக்கு சிவா? புன்னகை........நீங்க உங்கள் பதிவுகளால் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எங்களுக்கு புரியலை அது தான்.........கந்த சஷ்டி கவசம் பற்றிய திரி இல் மத்ததைப் பற்றி சொல்லவரும்போது, சற்று விரிவாக சொல்லி இருக்கலாம் புன்னகை...............நான் குறிப்பிட்டது அதைத்தான் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்?

Post by krishnaamma on Mon Jun 27, 2016 12:26 am

@மூர்த்தி wrote:ஐயா! கோபம் ஏன்? மன்னிப்பு ஏன்? நீங்கள் உண்மையாக சரியானதை புரியும்படி சொல்வதுதான் முறையே தவிர மன்னிப்ப்புக் கேட்பது அல்ல.உண்மையை உங்களிடம் மட்டும் வைத்திருந்தால் நாங்கள் எப்படி தெரிந்து கொள்வது?

நீங்கள் எழுதியது கிருஷ்ணாஅம்மாவிற்குப் புரியவில்லை. எனக்குப் புரிந்தபடி விளக்கம் தரப்பட்டது.அவ்வளவுதான்.

இங்கே நாம் புரிந்துகொள்ள வேண்டியது.................பல ஆன்மீக நூல்கள் தமிழிலும்,சமஸ்கிருதத்திலும் எழுதப்பட்டிருக்கின்றன. கந்தபுராணம் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் உள்ளது.கந்தபுராணம்,சிவகவசம் தமிழிலும் எழுதப்பட்டுள்ளது .

இதைவிட 18 புராணங்களில் ஒன்றான கந்தபுராணத்தில் ஒரு பிரிவாக உள்ளது சிவகவசம் அல்லது அமோகசிவகவசம் என்பதாகும்.இதை எழுதியது நீங்கள் குறிப்பிடும் ரிஷபயோகி (ரிஷபயோகீஸ்வரரிஷி).

நாராயணகவசம் பாகவதபுராணத்தில் உள்ளது. சிவகவசம் கந்தபுராணத்தில் உள்ளது. எல்லாவற்றையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. கொஞ்சம் புரியும்படி சொன்னால் புரிந்து கொள்ளப் போகிறோம்.அவ்வளவுதான்.
மேற்கோள் செய்த பதிவு: 1212660

ஆமாம் புன்னகை .....நன்றி மூர்த்தி ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்?

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum