ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 T.N.Balasubramanian

பூரானை அடிக்காதீர்கள்!
 T.N.Balasubramanian

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

என் அறிமுகம்
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

நம்மைப் போல் - கவிதை
 ayyasamy ram

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
 ayyasamy ram

கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 Dr.S.Soundarapandian

நாயகன், கையெழுத்து – கவிதை
 Dr.S.Soundarapandian

போதை குறையாமல் இருக்க….!!
 Dr.S.Soundarapandian

போடி, நீ தான் லூசு...!
 Dr.S.Soundarapandian

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 Dr.S.Soundarapandian

டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

வெளிச்சம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

ஓஷோவின் குட்டிக் கதைகள..
 Dr.S.Soundarapandian

ஏக்கம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
 Dr.S.Soundarapandian

மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
 Dr.S.Soundarapandian

படமும் செய்தியும்!
 Dr.S.Soundarapandian

இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
 ayyasamy ram

இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: சீனா பாய்ச்சல்
 ayyasamy ram

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
 M.Jagadeesan

ஆரோக்கியத்தில் மெல்லோட்டத்தின் பங்கு
 T.N.Balasubramanian

ஓட்டுப்போட்ட அப்பாவி
 M.M.SENTHIL

வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
 ayyasamy ram

ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
 ayyasamy ram

பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக சித்தரிப்பு: விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
 ayyasamy ram

அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
 ayyasamy ram

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 M.Jagadeesan

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week

Admins Online

சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது

View previous topic View next topic Go down

சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது

Post by பாலாஜி on Sat Jul 02, 2016 12:38 pm

சென்னை இளம் பெண் சுவாதி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி என சந்தேகிக்கப்பட்ட நபரை போலீஸ் தனிப்படை நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தில் கைது செய்தது.

போலீஸ் தகவல்:

கைது நடவடிக்கை குறித்து 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு போலீஸ் உயரதிகாரி ஒருவர் அளித்தப் பேட்டியில், "நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்திலிருந்து ராம்குமாரை கைது செய்தோம்.ராம்குமார் பொறியியல் பட்டதாரி. வயது 22. இவர் கடந்த சில மாதங்களாக சென்னை சூளைமேட்டில் ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில், சுவாதியை கொலை செய்த ராம்குமார் மறுநாளே சொந்த ஊருக்குச் திரும்பியிருக்கிறார்.

சுவாதியின் செல்போன் சிக்னல் செங்கோட்டை அருகே இருந்து கிடைக்கப்பெற்றதையடுத்து போலீஸ் தனிப்படை அங்கு விரைந்தது. சுவாதி கொலையில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்பட்ட அந்த நபரின் வீட்டை முற்றுகையிட்ட போது ராம்குமார் பிளேடால் தனது கழுத்து உள்ளிட்ட பல பகுதிகளில் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதனையடுத்து ராம்குமாரை உடனடியாக மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காயம் ஆழமாக இல்லை என கூறிய மருத்துவர்கள் ஆபரேஷன் செய்து அவரை காப்பாற்றியுள்ளனர். ராம்குமார் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். தற்போது அவர் இருக்கும் நெல்லை அரசு மருத்துவமனையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது" என்றார்.குற்றவாளி ஒப்புதல்:

சுவாதி கொலையை தான் செய்ததாக ராம்குமார் ஒப்புக்கொண்டதாக போலீஸார் வட்டாரம் தெரிவிக்கின்றது. அதிகாரபூர்வ அறிவிப்பை போலீஸ் உயரதிகாரிகள் விரைவில் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுவாதி வீட்டருகேயே தங்கியிருந்த ராம்குமார்:

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் சென்னை சூளைமேட்டில் சுவாதி வீட்டில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு மேன்சனில் தங்கியிருந்திருக்கிறார்.

சுவாதி கொலை வழக்கு இதுவரை:

கடந்த ஜூன் 24-ம் தேதி சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த இளம் பெண் சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் 2-வது நடைமேடையில் நின்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால் குற்றவாளி யார் எனத் தெரியாமல் ரயில்வே போலீஸார் திணறி வந்தனர்.

இந்நிலையில், ரயில் நிலையத்துக்கு அருகே ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில் கொலையாளியாக இருக்கக்கூடும் என்ற சந்தேக நபரின் உருவம் பதிவாகியிருந்தது. தொடர்ந்து கிடைக்கப்பெற்ற சிசிடிவி பதிவில் அதே நபர் ரயில் நிலையத்தின் நடை மேடையில் கொலை நடந்த சில விநாடிகளில் வேகமாக ஓடும் காட்சி பதிவானது தெரியவந்தது. இதைவைத்து போலீஸார் கொலையாளியை உறுதி செய்தனர். ஆனால் அவரைப் பற்றிய கூடுதல் விவரம் ஏதும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், சுவாதி கொலை வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் வழக்கில் ஏன் தொய்வு ஏற்படுகிறது எனக் கடும் கண்டனம் தெரிவித்தது.

இதனையடுத்து வழக்கு ரயில்வே போலீஸாரிடம் இருந்து சென்னை காவல்துறைக்கு மாற்றப்பட்டது. சென்னை போலீஸ் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் சுவாதி கொலையாளியைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைத்தார். சுவாதியின் குடும்பத்தினர், நண்பர்கள், அவர் பணி செய்த அலுவலகம் பெங்களூரூ, மைசூரூவில் அவர் பயிற்சி பெற்ற அலுவலகங்கள் என பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் ஜூலை 2 அதிகாலை நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்திலிருந்து சுவாதியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்பட்ட ராம்குமார் என்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.
--தி இந்து


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19822
மதிப்பீடுகள் : 3995

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

காதலிக்க மறுத்ததால் சுவாதியை கொன்றேன்: கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்

Post by பாலாஜி on Sat Jul 02, 2016 12:41 pm

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதியை கொலை செய்த ராம்குமார் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.நெல்லை மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த இவர் காவல் துறை கைது செய்ய வருவதை அறிந்து தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு தென்காசி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் அவரை நெல்லை அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் கொண்டு சென்றனர்.

ராம்குமாருக்கு கழுத்தில் அறுவை சிகிச்சை நடந்த பின்னர் ராம்குமார் பேச ஆரம்பித்ததாகவும், காவல் துறை அவரிடம் பேச்சு கொடுத்து வாக்குமூலம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

ராம்குமார் தனது வாக்குமூலத்தில், நெல்லையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்பை முழுமையாக முடிக்காமல் சென்னை சூளைமேட்டில் தங்கி இருந்து ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்ததாகவும், அப்போதுதான் சுவாதியுடன் அறிமுகம் கிடைத்து கடந்த 4 மாதமாக பழகி வந்ததாக கூறினார்.

மேலும், தான் வேலைக்கு நடந்து செல்லும் போது சுவாதியுடன் பேச ஆரம்பித்ததாகவும், தன்னை பொறியியல் பட்டதாரி என அறிமுகம் செய்துகொண்ட ராம்குமார் நாளடவில் சுவாதியை காதலிக்க ஆரம்பித்ததாகவும் கூறினார்.

நான், பொறியியல் படிப்பை முடிக்காததும், ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருவதும் தெரிந்த சுவாதி என்னிடம் பேசுவதை தவிர்த்தார். இந்நிலையில் என்னுடைய காதலை சுவாதியிடம் கூறினேன். சுவாதி என்னுடைய காதலை ஏற்றுக்கொள்ளாமல் என்னை சந்திப்பதையும் தவிர்த்தார்.

பின்னர் வேலைக்கு ரயில் நிலையத்துக்கு வரும்போது அவரது தந்தையுடன் வர ஆரம்பித்தார். இதனால் சுவாதியை சந்திக்க என்னால் முடியவில்லை. பின்னர் 2 முறை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை சந்தித்து எனது காதலை ஏற்றுக்கொள்ளும் படி அவரிடம் கெஞ்சினேன்.

ஆனால் எனது காதலை ஏற்றுக்கொள்ளாத சுவாதி, உனக்கும் எனக்கும் எந்தவித பொருத்தமும் இல்லை என திட்டி எனது காதலை நிராகரித்தார். இதனால் ஆத்திரமடைந்து சுவாதியை கொல்ல திட்டமிட்டு இரண்டு நாட்களாக பின் தொடர்ந்தேன்.

இறுதியாக கடந்த 24-ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை சந்தித்து எனது காதலை ஏற்றுக்கொள்ளும் படி மீண்டும் கெஞ்சினேன். ஆனால் அவள் அப்பொழுதும் எனது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சுவாதியை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பினேன் என ராம்குமார் தனது வாக்குமூலத்தில் கூறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் ராம்குமாரிடம் வாக்குமூலம் வாங்கப்பட்டதா என கேள்வி எழுப்பப்பட்டது. ஆனல் அவர் அந்த கேள்விக்கு பதில் ஏதும் சொல்லவில்லை.
வெப்துனியா


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19822
மதிப்பீடுகள் : 3995

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது

Post by M.Jagadeesan on Sat Jul 02, 2016 12:55 pm

பாவம் ! இனி அவன் வாழ்க்கை நரகம்தான் !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4653
மதிப்பீடுகள் : 2174

View user profile

Back to top Go down

Re: சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது

Post by ராஜா on Sat Jul 02, 2016 5:18 pm

இதற்கெல்லாம் ஒரே காரணம் சினிமா தான்.

வேலைவெட்டிக்கு போகாத / படிக்காத எந்த பொறுக்கியும் பணக்காரன் அல்லது படித்த மேற்பதவியில் உள்ள பெண்ணை காதலிக்கலாம்!! கடத்திக்கொண்டு போய் திருமணம் செய்துகொள்ளலாம் என்று திரைப்படங்களில் காட்டப்படும் போது அதையே இவனை போன்றவர்கள் நடைமுறையில் செயல்படுத்த பார்க்கிறார்கள்.


பொறியியல் படித்து உலகளவில் முன்னணியில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்ணை பொறியியல் படிப்பை முடிக்காமல் ஜவுளிக்கடையில் வேலைபார்த்துக்கொண்டிருக்கும் ஒரு பொறுக்கி தனது தராதரம்தெரியாமல் காதல் என்ற போர்வையில் சுற்றி வந்து இப்ப அந்த பெண்ணின் உயிரை எடுத்துருக்கிறான்.
உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30658
மதிப்பீடுகள் : 5520

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது

Post by M.Jagadeesan on Sat Jul 02, 2016 6:08 pm

இது ஒருதலைக் காதல் . அந்தப் பெண் காதலிக்கவில்லை என்பது தெரிகிறது. இருவருக்கும் இடையில் மலைக்கும் , மடுவுக்கும் உள்ள வேறுபாடு . ஆனாலும் காமம் அவனை விடவில்லை . காமம் இல்லாத அந்தப் பெண்ணைத் துன்புறுத்தியும் ,பழித்துப் பேசியும் இன்புற்றிருக்கிறான் .ஆனால் இவனுக்குச் சாதகமாக அந்தப் பெண் எதையும் செய்யவில்லை . அதுவே அவனைக் கொலைசெய்யத் தூண்டியது .

ஒருதலைக்காதல் கைக்கிளை எனப்படும் . அதன் இலக்கணம் ,

காமஞ்சாலா இளமை யோள்வயின்
ஏமஞ்சாலா இடும்பை எய்தி
நன்மையும் தீமையும் என்றிரு திறத்தான்
தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச்
சொல்லெதிர் பெறான் சொல்லி இன்புறல்
புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே .

- தொல்காப்பியம் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4653
மதிப்பீடுகள் : 2174

View user profile

Back to top Go down

Re: சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது

Post by யினியவன் on Sat Jul 02, 2016 6:49 pm

மூன்றாம் தர அப்படங்கள் தான் சூப்பர் ஹிட் படங்கள். நடித்தவர்களுக்கு அவார்ட். வாழ்க வாழ்க.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

Re: சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது

Post by M.M.SENTHIL on Sat Jul 02, 2016 7:16 pm

அவன் கொன்றது, அவனை பிடித்தது, நாளை அவனை என்கவுண்டர் செய்வது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

இந்தப் பொறுக்கி பொறம்போக்கு கொலை பண்ணியது போலவே, அம்மா மற்றும் 3 பெண் குழந்தைகளை கொன்றவனின் வழக்கு என்னாச்சு.

விஷ்ணுப்பிரியா தற்கொலை(?????) வழக்கின் நிலை என்ன?

இதுபோன்ற கேள்விகள் எழுகிறது மனதில்.

இவ்வளவு துரிதமாய் செயல்பட்டது போலவே, மற்ற வழக்கினையும் முடிக்கலாம்தானே, ஏன் இயலவில்லை.

இன்னும் பல என் மனதில், பதிவிட தோன்றவில்லை.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3365

View user profile

Back to top Go down

Re: சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது

Post by சிவனாசான் on Sat Jul 02, 2016 8:36 pm

யாரிடமும் விதி விளையாடாமல் விட்டு விடுவதில்லை. எல்லாம் வல்ல அவனின் திருவிளையாடல்களே>>>>>>>>>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2712
மதிப்பீடுகள் : 970

View user profile

Back to top Go down

Re: சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது

Post by யினியவன் on Sat Jul 02, 2016 10:57 pm

வழக்கு முடியவில்லை செந்தில். இனிமே தான் ஆரம்பம் ஆகும் ஆட்டம். இதுக்குன்னு ஒரு வக்கீல் கூட்டம் இருக்கு, அது களத்தில் இறங்கும் அவனுக்காக வாதாடும்.

அடுத்த வீட்டு பிள்ளைக்கு அருவாள், இவனுக்கு அரை ப்ளேடா? இவனை அதே இடத்தில் போட்டுத் தள்ளி இருக்க வேண்டும்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

Re: சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது

Post by ராஜா on Sun Jul 03, 2016 12:27 am

@யினியவன் wrote:வழக்கு முடியவில்லை செந்தில். இனிமே தான் ஆரம்பம் ஆகும் ஆட்டம். இதுக்குன்னு ஒரு வக்கீல் கூட்டம் இருக்கு, அது களத்தில் இறங்கும் அவனுக்காக வாதாடும்.

அடுத்த வீட்டு பிள்ளைக்கு அருவாள், இவனுக்கு அரை ப்ளேடா? இவனை அதே இடத்தில் போட்டுத் தள்ளி இருக்க வேண்டும்.
உடனே கொல்லக்கூடாது அண்ணா ,

ஒரு படத்தில் (நடிகர் கரண் படமென்று நினைக்கிறேன் ) கதாநாயகனுக்கு கொடுமையான தண்டனை கொடுப்பார்கள் , உடம்பில் உயிரை மட்டும் வச்சுட்டு நடைபிணமாக ஆக்கியிருப்பார்கள் . எனக்கு இந்தப்படமும் அதன் கதையும் நினைவில்லை , ஆனால் அந்த தண்டனைக்கு பிறகு அந்த கதாநாயகன் தன் உயிரை போக்கிக்கொள்ள கூட இயலாதவனாக இருப்பான். அது போல இவனுங்களை செய்யவேண்டும்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30658
மதிப்பீடுகள் : 5520

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது

Post by கார்த்திக் செயராம் on Sun Jul 03, 2016 7:33 am

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல ......
மிருக காதல்!

ஈஸியா இந்த பொருக்கி மேல் காறி உமிழ்ந்து விட்டு திரும்பும்
எமது தமிழ் சமூகம்.

இந்த இளைஞனை உருவாக்கியது .....
தமிழ் சமூகமும் ..
தமிழ் சினிமாவும்தான்.

தனது வாழ்வை நிர்ணயிக்கும்
அனைத்து உரிமையும் ஒரு பெண்ணுக்கு உண்டு.
இதை பல தமிழ் இளைஞர்கள் புரிந்து கொள்வதில்லை.

இன்று இரண்டு வாழ்வு அநியாமாகி இருக்கிறது
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 437

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum