ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போதை ஏறிட்டா பொய் பேச வரமாட்டேங்குது!
 ayyasamy ram

'மாநிலங்களில் மகளிர் ஆணையங்கள் செயல்படுகின்றவா
 ayyasamy ram

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் போட்டி
 ayyasamy ram

அவல் பக்கோடா!
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

*'என் கடன் பணி செய்து கிடப்பதே'
 Dr.S.Soundarapandian

''தாய்மையின் உன்னதத்தை இந்தியாவில்தான் கண்டேன்'' - நெகிழும் புகைப்படக் கலைஞர்
 Dr.S.Soundarapandian

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

‛லாலு மகனை அறைந்தால் ரூ.1 கோடி பரிசு': இது அடுத்த சர்ச்சை
 ayyasamy ram

எகிப்து மசூதியில் பயங்கரவாதிகள் தாக்குதல்:
 ayyasamy ram

தமிழர் மதம்
 Meeran

ஒரே டிக்கெட்டில் மாநகர பஸ், மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம்
 ayyasamy ram

கல்கி 03.12.17
 Meeran

Malayalam magazine
 Meeran

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 pkselva

2 ரன்னில் ஆல் அவுட்: ஸ்கோரை பார்த்து அதிர்ந்த பிசிசிஐ!!
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த நேரத்தில் 4 விநாடி வித்தியாசம், ஜாதகக் கணிப்பு மற்றும் எதிர்காலப் பலன்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துமா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 25/11/17
 Meeran

காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

விநாயகப் பெருமான்

View previous topic View next topic Go down

விநாயகப் பெருமான்

Post by ayyasamy ram on Mon Jul 11, 2016 3:18 pm


-
விநாயகப் பெருமான் அரவத்தை தனது இடுப்புக் கச்சையாக
அணிந்திருக்கும் தத்துவம் என்ன?


… மாயையினைத் தமது விருப்பம்போல இயக்கும் வல்லமை
பெற்றவர் என்பதாகும்.

விநாயகரின் பெருச்சாளித் தத்துவத்தின் விளக்கம் என்ன?


… பெருச்சாளி இருளை விரும்பும், கீழறுத்துச் சென்று கேடு விளைவிக்கும்.
அதனால் அது அறியாமை அல்லத ஆணவ மலத்தைக் குறிக்கும்.
எனவே அப் பெருச்சளியைப் பிள்ளையார் தமது காலின்கீழ் கொண்டிருப்பது
அவர் அறியாமையையும், செருக்கையும் அடக்கி ஆட்கொள்பவர் என்பதை
உணர்த்துகின்றது.
-

காகவடிவாக வந்து கமண்டல தணணீரை தட்டி ஊத்திய தத்துவம்
உணர்துவது எதனை?


… அகத்தியரின் கமண்டலத்தில் உள்ள காவிரி நதியினை காகவடிவத்தில்
வந்த விநாயகப் பெருமான் கவிழ்த்துவிட இந்த நதி பெருகி பல
சோலைகளைக் கடந்து இறுதியில் கடலுடன் கலந்தது என்றகதை என்ன
தத்துவத்தை விளக்குகின்றது என்றால், கமண்டலம் மனித உடல் அதற்கள்
இருந்த காவிரிநீர் ஆனமசக்தி.

ஆன்மா அறியாண்மை காரணமாக இவ்வுடலே நிலையானது என்று
நினைத்திருக்கின்ற காலத்தில் குரு வந்து நினைப்பது பிழை நீ போக
வேண்டிய தூரம் வெகுதொலைவு என்பதைப்போல
காக வடிவத்தில் வந்த விநாயகர் கமண்டலத்தை கவிழ்த்துவிட. வெறும்
உடம்புக்குள் இருந்த ஆன்மா இறுதியில் இறைவனைப்போய் சேருவது
போல காவிரி நீரானது இறைவனைப்போய் சேருகின்றது என்ற
பரந்த ஆழமான தத்துவத்தை அர்த்தப்புடுத்தி விளக்குகின்றது.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32533
மதிப்பீடுகள் : 10796

View user profile

Back to top Go down

Re: விநாயகப் பெருமான்

Post by ayyasamy ram on Mon Jul 11, 2016 3:21 pm


-
விநாயகரின் பெருவயிற்றின் தத்துவ விளக்கம் என்ன?


… பிரபஞ்சம் முழுவதும் இறைவனுக்குள் அடக்கம் என்பதை
உணர்த்துகின்றது விநாயகருக்கு அமைந்துள்ள பெருவயிற்றின்
தத்துவம்.

இருபெருங் காதுகளின் விளக்கம் என்ன?


… பலகோடி உயிர்களின் முறையீடுகளைக் களைவதற்காகப் பெரிய
இரு காதுகளை கொண்டுள்ளார் என்பதாகும்.

பஞ்சபூத தத்துவத்தின் விளக்கம் என்ன?


… பஞ்சபூதங்களை தம்முள் அடக்கி ஆள்பவர் என்பதைக் காட்டுவதற்காக.
அவர் மடித்து வைத்தள்ள ஒருபாதம் பூமியையும், சரிந்த தொந்தி நீரையும்,
அவருடைய மார்பு நெருப்பையும், இரண்டு புருவங்களும் சேர்ந்த
அரைவட்டம் காற்றையும், அதன் நடுவில் வளைந்திருக்கும் கோடு
அகாயத்தையும் உணர்தி நிற்கின்ற னஎன்பதாகும்.

அவர் வைத்திருக்கம் ஆயுதங்கள் எதை விளக்குகின்றன?


… விநாயகப் பெருமான் திருக்கரங்களில் ஏந்தியுள்ள ஆயுதங்கள்
ஐந்தொழிலை உணர்த்துகின்றன. அவரது பாசம் படைத்தலையும்,
அங்குசம் அழித்தலையும், ஒடிந்த தந்தம் காத்தலையும், துதிக்கை
மறைத்தலையும், மோதகம் அருளலையும் உணர்த்தி நிற்கின்றன.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32533
மதிப்பீடுகள் : 10796

View user profile

Back to top Go down

Re: விநாயகப் பெருமான்

Post by ayyasamy ram on Mon Jul 11, 2016 3:23 pm


-
கணபதி தத்துவம் என்றால் என்ன?

பதில்:கணபதி தத்துவ விளக்கம் யாதெனில் கணபதி என்ற
சொல்லில் உள்ள (‘க்’) என்ற எழுத்துஞானத்தைக் குறிக்கின்றது. ‘
(ந’) என்ற எழுத்து மோட்ஷத்தை குறிக்கின்றது
(‘பதி’) என்பது பரம்பொருளைக் குறிக்கின்றது. அதாவது தன்னை
வழிபடுவோருக்கு ஞானத்தையும் மோட்ஷத்தையும்
கொடுப்பவர் கணபதியாவார் என்பதேயாகும்.
--
விநாயகருக்குமுன் நெற்றிப்பொட்டில் குட்டிக்கொள்வது, தோப்புக்கரணம்
போடுவதின் விளக்கம் என்ன?


… விநாயகருக்கு முன் நெற்றிப்பொட்டில் குட்டிக் கொள்வதற்கான
தத்துவ விளக்கமானது நெற்றிப் பொட்டில் குட்டிக்கொள்வதால்
குண்டலினி சக்தி தட்டி எழுப்பப் படுகின்றது. தொடர்ந்த இறைவழிபாட்டில்
ஈடுபடுவதற்கு எற்ற முறையில் மனதைக் கட்டுப்படுத்துகின்றது

இதைவிட மனிதரின் நெற்றிப்பொட்டில்தான் உடலின் சகல நரம்புகளும்
ஒன்றிணைவதால் ஞாபக சக்தியும் பலப்படுகின்றது. உடலுக்கும்
உற்சாகம் தருகின்றது. தோப்புக் கரணம் போடுவதற்கான காரணம.;
அகந்தையும், ஆணவமும் அழிவதைக் காட்டுவது என்பதும், உடல் இயக்க
ரீதியாக பெரும்பயன் தருகின்றது என்பதுவும் ஆகும்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32533
மதிப்பீடுகள் : 10796

View user profile

Back to top Go down

Re: விநாயகப் பெருமான்

Post by ayyasamy ram on Mon Jul 11, 2016 3:25 pm


-
விநாயகரின் திருக்கரங்கள் உணர்த்துகின்ற தத்துவங்கள் என்ன?

… “சிவாய நம” என்ற திருவைந்தெழுத்தை உணர்த்துவதாக
விநாயகரின் அங்குசம் தாங்கிய வலக்கை, சிகரம், பாசம் பற்றிய
இடக்கை வகரம், தந்தம் ஏந்திய வலக்கை யகரம்,
மோதகம் உள்ள இடக்கை நகரம், துதிக்கை மகரம், இவ்வாறு
“சிவாய நம” என்ற திருவைந்தெழுத்தை விநாயகரின் ஐந்து
திருக்கரங்களும் உணர்த்துகின்றன.

சிதறுதேங்காய் உணர்த்தும் தத்துவம் என்ன?


… விநாயகருக்கு முன் சிதறு தேங்காய் உடைப்பது என்பது இரண்டு
தத்துவங்களை கொண்டுள்ளது. ஒன்று மனிதருக்குள் இருக்கின்ற
தான் என்ற அகம்பாவ உணர்ச்சி தேங்காயின் ஓட்டைப்போல
உறுதியானது.
-
அது தேங்காயைப்போல உடைந்து சிதறிவிட்டால் இனிய நீரும்,
வெண்மையான தேங்காயும், கிடைப்பதைப் போல. பக்குவமான ஞான
உணர்வு நமக்குள் கிடைக்கின்றது. இப்படி நாம் விநாயகருக்கு முன்
நாம் பக்குவம் பெற முயலுவதாக உணர்த்துவது ஒரு தத்துவம்.
-
இரண்டாவதாக இறை சன்னிதானத்தில் தேங்காய் உடைக்கும் போது
தேங்காய் சிதறுவதுபோல் நம் மனக் கவலைகளும் சிதறிப்போகும்
என்பதாகும்.

அறுகம்புல்லின் தத்துவம் என்ன?


… தான் என்ற அகங்காரம் இல்லாமல் இருக்கவேண்டும்
என்பதற்காகவே விநாயகப்பெருமான் எளிதான அறுகம் புல்லை
விரும்பி ஏற்கின்றார். மேலும் அந்த அறுகம்புல் ஒரே காம்பில்
மூன்று முனைகள் உடையதாக இருக்கவேண்டும் என்றும்.
மனம், வாக்கு, காயம். ஆகிய மூன்றையும் கூர்மைப்படுத்தி
இறையருளை பெறவேண்டும் என்பதை காட்டவேயாகும்
---

( இவை அனைத்தும் வலைப்பூ பதிவு படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. )
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32533
மதிப்பீடுகள் : 10796

View user profile

Back to top Go down

Re: விநாயகப் பெருமான்

Post by T.N.Balasubramanian on Mon Jul 11, 2016 8:03 pm

(இவை அனைத்தும் வலைப்பூ பதிவு படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. )

அரிய செய்திகளை மறுபதிவிட்ட உங்களுக்கு ஒரு பெரிய :நன்றி :ayyasami ram  ,

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: விநாயகப் பெருமான்

Post by ஸ்ரீரங்கா on Mon Jul 11, 2016 9:40 pm

avatar
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 321
மதிப்பீடுகள் : 167

View user profile

Back to top Go down

Re: விநாயகப் பெருமான்

Post by சிவனாசான் on Mon Jul 11, 2016 9:50 pm

முழு முதற்கடவுள் வினாயகப்பெருமான். அருமை அய்யா!! அருமை>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2734
மதிப்பீடுகள் : 986

View user profile

Back to top Go down

Re: விநாயகப் பெருமான்

Post by விமந்தனி on Mon Jul 11, 2016 10:53 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: விநாயகப் பெருமான்

Post by M.Jagadeesan on Tue Jul 12, 2016 8:38 pm

மலம் = குற்றம்
விமலம் என்றால் " குற்றம் இல்லை " என்று பொருள் .
விமலா என்றால் " குற்றம் இல்லாதவள் " என்று பொருள் .

ரசம் X விரசம்

நயம் X விநயம்

நாயகன் X விநாயகன்

நாயகன் என்றால் தலைவன் என்று பொருள் .
விநாயகன் என்றால் தலைவன் இல்லாதவன் என்று பொருள் . அதாவது விநாயகக் கடவுளுக்கு மேலே ஒரு கடவுள் இல்லை என்பது பொருள் . அவனே முழுமுதற் கடவுள் .

avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: விநாயகப் பெருமான்

Post by T.N.Balasubramanian on Tue Jul 12, 2016 9:23 pm

வாவ் நன்றி நன்றி

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: விநாயகப் பெருமான்

Post by விமந்தனி on Tue Jul 12, 2016 9:41 pm

நாயகன் என்றால் தலைவன் என்று பொருள் .
விநாயகன் என்றால் தலைவன் இல்லாதவன் என்று பொருள் . அதாவது விநாயகக் கடவுளுக்கு மேலே ஒரு கடவுள் இல்லை என்பது பொருள் . அவனே முழுமுதற் கடவுள்
.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: விநாயகப் பெருமான்

Post by ஸ்ரீரங்கா on Tue Jul 12, 2016 11:14 pm

@M.Jagadeesan wrote:மலம் = குற்றம்
விமலம் என்றால் " குற்றம் இல்லை " என்று பொருள் .
விமலா என்றால் " குற்றம் இல்லாதவள் " என்று பொருள் .

ரசம் X விரசம்

நயம் X விநயம்

நாயகன் X விநாயகன்

நாயகன் என்றால் தலைவன் என்று பொருள் .
விநாயகன் என்றால் தலைவன் இல்லாதவன் என்று பொருள் . அதாவது விநாயகக் கடவுளுக்கு மேலே ஒரு கடவுள் இல்லை என்பது பொருள் . அவனே முழுமுதற் கடவுள் .

மேற்கோள் செய்த பதிவு: 1215437

avatar
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 321
மதிப்பீடுகள் : 167

View user profile

Back to top Go down

Re: விநாயகப் பெருமான்

Post by krishnaamma on Tue Jul 12, 2016 11:29 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா மற்றும் ஜெகதீசன் ஐயா.....மிக்க நன்றி !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: விநாயகப் பெருமான்

Post by பாலாஜி on Thu Jul 14, 2016 1:37 pm

@M.Jagadeesan wrote:மலம் = குற்றம்
விமலம் என்றால் " குற்றம் இல்லை " என்று பொருள் .
விமலா என்றால் " குற்றம் இல்லாதவள் " என்று பொருள் .

ரசம் X விரசம்

நயம் X விநயம்

நாயகன் X விநாயகன்

நாயகன் என்றால் தலைவன் என்று பொருள் .
விநாயகன் என்றால் தலைவன் இல்லாதவன் என்று பொருள் . அதாவது விநாயகக் கடவுளுக்கு மேலே ஒரு கடவுள் இல்லை என்பது பொருள் . அவனே முழுமுதற் கடவுள் .

மேற்கோள் செய்த பதிவு: 1215437

நன்றி ... நல்ல பதிவு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: விநாயகப் பெருமான்

Post by பாலாஜி on Thu Jul 14, 2016 1:37 pm

நல்ல பகிர்வு ..பகிர்வுக்கு நன்றி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: விநாயகப் பெருமான்

Post by கார்த்திக் செயராம் on Thu Jul 14, 2016 3:02 pm

விநாயகர் பூஜையில் பயன்படும் 21 பத்திரங்கள்
மாசிப்பச்சை,2 கத்திரி, 3,வில்வம்,4,அருகம்புல்,5 ஊமத்தை, 6,எலந்தை,7,நாயுருவி, 8,துளசி, 9,மாவிலை,10,அரளி, 11,விஷ்ணுகிரந்தம்,12,மாதுளம், 13,நெல்லி, 14,மருதாணி,15,நொச்சி,16,ஜாதி 17,வன்னி, 18,கரிசிலாங்கன்னி 19,நீர்மருது 20,எருக்க இலை, 21 கண்டலீ பத்ரம்.
பெண்வடிவமாக சித்தரிக்கப்பட்ட விநாயகர்கள் விநாயகிகள் எனப்படும். இந்தியாவில் 30 இடங்களில் இந்த விநாயகி சிற்பங்கள் உள்ளன. அவைகளில் சில மதுரை மீனாட்சியம்மன் கோயில் முன்மண்டபம், வடீவீஸ்வரம் வைப்புத்தலம் நாகர்கோயில், சுசீந்தரம் தாணுமாலைய சுவாமி கோயில் ஆகிய இடங்களில் உள்ளது.
மோதகத்தத்துவம்:


அரிசி மாவினால் செய்யப்பட்டு அதற்குள் பூரணம் வைக்கப்பட்ட கொழுக்கட்டையை விநாயகருக்கு படைக்கிறோம் இதன் பொருளை அறிந்து கொள்வோம் அரிசி மாவு சுவையற்றது ஆனால் அதனுள் இருக்கும் பூரணம் சுவையானது. யானைக்கு பிடித்தமான உணவும் கூட. சுவையில்லாத அரிசி மாவுடன் சுவையான வெல்லம் சேரும்போது விரும்பி உண்ணும் பண்டமாக மாறுகிறது. பக்தி கலந்த வாழ்க்கையே சுவையாக இருக்கும் என்று உணர்த்துகிறது இந்த மோதக தத்துவம்.
பிள்ளையார் சுழி ஏன்?
உலகின் முதல் சுருக்கெழுத்தர் விநாயகர் என்று வேடிக்கையாக கூறுவார்கள். வியாசர் வேகமாக பாரதம் கூற அதை எழுதியவர் விநாயகர். தன் தந்தத்தை உடைத்து பாரதம் எழுதிய பிள்ளையாரை நினைவு கூர்ந்து பெருமானை சிந்தித்து ஒரு விஷயத்தை எழுத துவங்குகிறோம் அதுவே பிள்ளையார் சுழி.


விநாயகரும் விருட்சங்களும்:
வன்னி மரத்து விநாயகரை வழிபட திருமணத்தடை நீங்கும்.
புன்னை மரத்து விநாயகரை வழிபட தம்பதியர் ஒற்றுமை ஆவர்.
மகிழமரத்து விநாயகரை வழிபட இடமாற்ற பிரச்சனைகள் தீரும்.
மாமரத்து விநாயகரை வழிபட கோபம், பொறாமை நீங்கி வியாபாரம் செழிக்கும்.
வேப்ப மரத்து விநாயகரை வழிபட மனம் போல் மாங்கல்யம் கிடைக்கும்.
ஆலமரத்து விநாயகரை வழிபட தீராத வியாதி தீரும்.
அரசமரத்து விநாயகரை வழிபட விளையுள் கூடும்.
வில்வமரத்து விநாயகரை வழிபட பிரிந்த தம்பதியர் இணைவர்.
விநாயகர் தத்துவம்:
தலை ஞானத்தையும், பெரிய காதுகள் வேதாந்த உண்மைகளை கேட்டறியவும், ஐங்கரங்கள் ஐந்தொழிலை செய்யும் ஆற்றலையும், தும்பிக்கை புத்தியினையும் இன்பம் துன்பம் இனிப்பு கசப்பு செல்வம்,வறுமை, என கலந்து அமைவது வாழ்க்கை என்பதை ஒற்றைக் கொம்பு விளக்குகிறது. அண்டங்கள் அனைத்தையும் உயிர்களையும் தன்னகத்தே கொண்டதாக பானை வயிறு அமைந்துந்துள்ளது.
அருகம்புல் தத்துவம்:
அருகம்புல்லானது ஓரிடத்தில் வளர்ந்து ஆறு இடங்களில் பரவக்கூடிய மூலிகை. இதே போன்றே கழுமுனையின் வழியில் செல்லும் குண்டலினி சக்தியும் யோகாசனப் பயிற்சி மூலம் ஆறு பிரதான பரவக் கூடியது. எளிமையின் வெளிப்பாடாக அருகம் புல் அமைந்துள்ளது. எளிதில் கிடைக்க கூடியது. விஷ முறிவு தரும். இதை எளிமையின் உருவமான விநாயகருக்கு சமர்ப்பித்து அவரது அருளை பெறுவதாக ஐதீகம்.
விநாயகரின் ஆறுபடை வீடுகள்;
1.திருவண்ணாமலை ஆயிரம் திரை கொண்ட விநாயகர்
2.திருமுதுகுன்றம் ஆழத்துப் பிள்ளையார்
3.திருக்கடவூர் கள்ளவாரணப் பிள்ளையார்.
4.மதுரை ஆலால சுந்தர விநாயகர்
5.பிள்ளையார்ப்பட்டி கற்பக விநாயகர்
6.திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார்.
வெயிலுக்குகந்த விநாயகர்:
இராமநாதபுரம் தேவி பட்டினம் அருகே உப்பூர் தலத்தில் எழுந்தருளி உள்ள விநாயகர் ஆலயத்திற்கு மேற்கூரை கிடையாது. காசி துண்டி கணபதியும் மேற் கூறை இல்லாமல் உள்ளார்.

நன்றி தளிர் சுரேசு
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: விநாயகப் பெருமான்

Post by T.N.Balasubramanian on Thu Jul 14, 2016 4:28 pm

நல்ல தகவல் கார்த்திக் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: விநாயகப் பெருமான்

Post by பாலாஜி on Thu Jul 14, 2016 4:32 pm

நல்ல பகிர்வு கார்த்திக்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: விநாயகப் பெருமான்

Post by ராஜா on Thu Jul 14, 2016 5:39 pm

பிள்ளையார் பற்றிய பதிவு அருமை


@M.Jagadeesan wrote:மலம் = குற்றம்
விமலம் என்றால் " குற்றம் இல்லை " என்று பொருள் .
விமலா என்றால் " குற்றம் இல்லாதவள் " என்று பொருள் .
அப்ப கமலா என்றால் என்ன அர்த்தம்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விநாயகப் பெருமான்

Post by ஸ்ரீரங்கா on Thu Jul 14, 2016 5:55 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
avatar
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 321
மதிப்பீடுகள் : 167

View user profile

Back to top Go down

Re: விநாயகப் பெருமான்

Post by T.N.Balasubramanian on Thu Jul 14, 2016 6:00 pm

@ராஜா wrote:பிள்ளையார் பற்றிய பதிவு அருமை


@M.Jagadeesan wrote:மலம் = குற்றம்
விமலம் என்றால் " குற்றம் இல்லை " என்று பொருள் .
விமலா என்றால் " குற்றம் இல்லாதவள் " என்று பொருள் .
அப்ப கமலா என்றால் என்ன அர்த்தம்
மேற்கோள் செய்த பதிவு: 1215844

கமலம் என்றால் தாமரை
கமலா என்று பெயர் சொல்லிக் கூப்பிடுவது .
இந்த விளக்கம் போதாது , என்று நிர்பந்தித்தால் ,

பின்னாலே பாருங்க a lady , அல்லது Lady A

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: விநாயகப் பெருமான்

Post by ராஜா on Thu Jul 14, 2016 7:30 pm

@T.N.Balasubramanian wrote:கமலம் என்றால் தாமரை
கமலா என்று பெயர் சொல்லிக் கூப்பிடுவது .
இந்த விளக்கம் போதாது , என்று நிர்பந்தித்தால் ,
பின்னாலே பாருங்க a lady , அல்லது Lady A
சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
ரமணியன்
என்ன ஐயா பேசிகிட்டு இருக்கும்போதே பயம் காட்டுறீங்க அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விநாயகப் பெருமான்

Post by சிவனாசான் on Fri Jul 15, 2016 4:38 am

நாயகன் @ தலைவன். முதல்வன்>>>>>>>>>>>முதலில் வணங்கத்தக்கவன். :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2734
மதிப்பீடுகள் : 986

View user profile

Back to top Go down

Re: விநாயகப் பெருமான்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum