ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 ayyasamy ram

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 பழ.முத்துராமலிங்கம்

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 heezulia

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 ayyasamy ram

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 ayyasamy ram

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 ayyasamy ram

சூரிய ஒளி கம்ப்யூட்டர் வகுப்பறை நெல்லை அரசு பள்ளியில் அசத்தல்
 ayyasamy ram

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 மூர்த்தி

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 T.N.Balasubramanian

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 பழ.முத்துராமலிங்கம்

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 பழ.முத்துராமலிங்கம்

பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
 பழ.முத்துராமலிங்கம்

தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

நீராதாரம் இன்றி நம் வாழ்க்கை அழிவை நோக்கி
 பழ.முத்துராமலிங்கம்

Lotus academy வெளியிட்ட காவலர் தேர்வுக்கான usefull மாதிரி வினா விடைகள்
 Meeran

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 Meeran

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
 பழ.முத்துராமலிங்கம்

நாச்சியார் விமர்சனம்
 பழ.முத்துராமலிங்கம்

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

வறுமையால் மகன் உடலை கல்லூரிக்கு தானமளித்த தாய்
 பழ.முத்துராமலிங்கம்

தனி ரயில் வேண்டுமா? ஆன் லைனில், 'புக்' செய்யலாம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 sudhagaran

மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
 பழ.முத்துராமலிங்கம்

2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று திரிபுராவில் ஓட்டுப்பதிவு; ஆட்சியை பிடிக்கபோவது யார்?
 ayyasamy ram

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 பழ.முத்துராமலிங்கம்

தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
 ayyasamy ram

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

TNUSRB தேர்வு notes
 thiru907

பல புது முதலாளிகள்
 krishnanramadurai

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கை கோள் விரைவில் விண்ணில்: மயில்சாமி
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

என்ன அதிசயம் இது.
 T.N.Balasubramanian

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…
 ராஜா

வாட்ஸ் அப் பகிர்வில் ஈர்த்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: ‘நாச்சியார்’ பட அப்டேட்
 SK

ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
 SK

மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்
 SK

ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
 SK

நீரிழிவு நோய் உள்ளவர்கள் எளிதாக மூலிகைகளை கொண்டு சர்க்கரை அளவை குறைக்க முடியும்.
 ayyasamy ram

கனத்தைத் திறக்கும் கருவி – கவிதை
 ayyasamy ram

பாகிஸ்தானில் எம்.பி.ஆகிறார் முதல் இந்து பெண்:
 ayyasamy ram

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
 ayyasamy ram

சாயம் – கவிதை
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

முதன்முதலில் பகவத்கீதை உபதேசிக்கப்பட்டது யாருக்கு தெரியுமா?

View previous topic View next topic Go down

முதன்முதலில் பகவத்கீதை உபதேசிக்கப்பட்டது யாருக்கு தெரியுமா?

Post by கார்த்திக் செயராம் on Tue Jul 19, 2016 4:56 pm

பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையை உபதேசம் செய்தார். இதை யாருக்கு உபதேசம் செய்தார் என்று கேட்டால் அனைவரும் அர்ஜுனனுக்கு என்று தான் சொல்வார்கள். ஆனால் இந்த பகவத்கீதை முதன் முதலில் சூரிய பகவானுக்கு தான் உபதேசம் செய்யப்பட்டது என்பதே உண்மை. ராமாயணமும், மகாபாரதமும் பாரத தேசத்தின் ஒப்பற்ற இதிகாசங்கள். இவற்றைக் கதை என்றோ, காப்பியம் என்றோ சொல்லாமல், வடமொழியில் இதிகாசம் என்று சொல்லுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. வால்மீகியும் வியாசரும் எழுதிய இவை உண்மையாக நம் தேசத்தில் நடந்தவை. இதி-ஹாசம் என்றால் இது நடந்தது என்று ஒரு பொருள் உண்டு. வால்மீகிக்கும் வியாசருக்கும் பின்னால் வந்தவர்கள், அவர்கள் வாழ்ந்த காலத்தின் நடைமுறையைக் கொண்டு சில மாற்றங்களை மூலக் கதையைச் சிதைக்காமல் சிறப்பாக எழுதித் தொகுத்தார்கள். ராமனை ஆரம்பம் முதல் இறுதி வரை கடவுளாகவே கருதினார் வால்மீகி. ஆனால் மானுடனாகவே கருதி முடிவில் கடவுளாக்குகிறார். இப்படி சில வேற்றுமைகள் காலத்திற்கேற்பவும் எழுதியவர்களின் சிறந்த கற்பனைக்கு ஏற்பவும் நமது காவியங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. ஆனால் கருத்து ஒன்றுதான் தர்மம் நிலைபெற வேண்டும் என்பான் ராமன். அதர்மம் அழிய வேண்டும் என்பான் கிருஷ்ணன். இவை இரண்டினுடைய பொருளும் ஒன்றுதான். ஆனால் அவர்கள் வாழ்ந்து காட்டிய முறைகள் வேறு. ராமனுடைய வழியைப் பின்பற்ற வேண்டும். கிருஷ்ணனுடைய பேச்சை கேட்க வேண்டும்.

இதுதான் சாரம். பித்ருவாக்ய பரிபாலனம் என்னும் தாய்-தந்தை சொல் கேளல், அனைவரையும் சகோதரனாக ஏற்றல் (உதாரணம்-குகன், சுக்ரீவன், விபீடணன்) மனையாளேயானாலும் மற்றவரால் குறை சொல்லப்பட்டாள் அவள் மாசற்றவள் என்பதை உணர்த்த தீக்குளிக்க வைப்பது என்பவை ராமனுடைய தர்மம். தாத்தா பீஷ்மர், குலகுரு கிருபர், ஆசிரியர் துரோணர், சகோதரர்களான துரி யோதனாதியர்கள் அனைவரும் அதர்மத்தின் பக்கம் நின்றதால் அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்றான் கிருஷ்ணன். முடிவில் இரு காவியங்களும் தர்மத்தை நிலைநாட்டவே எழுதப்பட்டு இன்றளவும் பேசப்படுகின்றன. ஆனால் மகாபாரதத்திற்கு மட்டும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. புல்லையும் புண்ணாக்கையும் தின்று வாழும் பசு, தன் குருதியால் நல்ல பாலைத் தருகிறது. அந்தப் பாலிலிருந்து தயிர் கடைகிறோம்; தயிரிலிருந்து வெண்ணெயும், அதிலிருந்து நெய்யையும் பெறுகிறோம். அதேபோல் மகாபாரதம் எனும் இதிகாசத்திலிருந்து விதுர நீதி என்கிற தர்ம சாஸ்திர நூலையும்; பகவத்கீதை எனும் அதி அற்புதமான கடவுளின் வாக்கினையும், பின்னர் விஷ்ணு சகஸ்ர நாமத்தையும் நாம் படிக்க நேர்கிறது. இது மகாபாரதத்தின் கதைப்போக்கில் தானாகவே நிகழும் ஓர் அற்புதம். குறிப்பாக பகவத்கீதையில் சொல்லப்பட்ட பல விஷயங்கள் மானுட வாழ்க்கைக்கு மிகவும் தேவையானதாகும். இந்த பகவத் கீதை மகாபாரதத்தில் வெகுவாகச் சொல்லப்பட்டாலும், பகவானான மகாவிஷ்ணுவால் அல்லது ஸ்ரீ கிருஷ்ணரால் சூரிய பகவானுக்கு இது போதிக்கப்பட்டது. பின்னர் சூரிய பகவானின் சீடர்கள் மூலம் பரம்பரை பரம்பரையாகச் சொல்லப்பட்டது.

இமம் விஸ்வதே யோகம் ப்ரோக்தவான் அஹம் அவ்யயம்
விவஸ்வான் மனவே ப்ராஹ மனுர் இஷ்வாகுவே அப்ரவீத்

என்பது சுலோகம். இதில் விவஸ்வான் என்பது சூரிய தேவனைக் குறிக்கும். பகவானே இந்த கீதையை சூரியன் மூலமாக மனித குலத்தின் தந்தையான மனுவிற்கும், மனு இஷ்வாகுவிற்கும் உபதேசம் செய்தனர் என்கிறார் கிருஷ்ணர். இதில் இஷ்வாகு என்பவர் ஸ்ரீராமனுக்கு மூதாதையர் ஆவார். இப்படி சில யுகங்களில் ஓதப்பட்ட அல்லது உணர்த்தப்பட்ட பகவத்கீதை பல காலங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாலும், உண்மையான கருத்துகள் சிதைவுண்டதாலும் மீண்டும் ஸ்ரீ கிருஷ்ணர் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு உபதேசித்ததாக கிருஷ்ண பரமாத்மாவே கூறுகிறார். இதுவே கடைசியில் இன்று வரை நிலைத்துக் கொண்டிருக்கிறது. இன்றுகூட பகவத்கீதையின் சரியான உள்ளர்த்தம் உணராத பண்டிதர்களும் நம்மிடையே உண்டு. ஒரு சமயம் ஷீரடி சாய்பாபாவின் காலை வலி தீர வருடிக் கொண்டும் பிடித்துக் கொண்டும் இருந்தார் மகா பண்டிதரான ஒரு பிரமாணர். அவருடைய கண்கள் மூடியிருந்தாலும், வாய் ஏதோ சுலோகங்களைச் சொல்லிக் கொண்டிருந்தது.

என்ன சுலோகம் சொல்லிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டார் பாபா. பாபா நான் பகவத்கீதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்றார் அந்தப் பண்டிதர். உடனே பாபா அந்த சுலோகத்தைச் சொல்லி இதைத் தானே சொல்லிக் கொண்டிருக்கிறாய் என்ற கேட்டார். அந்த பண்டிதருக்கு வியப்பு தாளவில்லை. தான் மனத்திற்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டிருந்த சுலோகம் இவருக்கு எப்படித் தெரிந்தது என்று வியந்தார். சரி; அதற்குப் பொருள் கூறு என்றார் பாபா. பண்டிதரும் கூறினார். தவறு.. தவறு.. நீ சொன்ன பதில் தவறு. அது தான் உண்மையான பதில் என்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். ஸ்ரீ வியாசர் அந்த அர்த்தத்தில் எழுதியிருக்க மாட்டார் என்று சொல்லி சரியான பொருளைக் கூறி அந்த வேத பண்டிதரை மேலும் வியக்க வைத்தார் பாபா. அப்படித்தான் சூரியபகவானுக்கு ஆதிகாலத்தில் உபதேசிக்கப்பட்ட பகவத்கீதை பலரால் கற்கப்பட்டாலும், பல சமயங்களில் சரியான பதில் சொல்லப்படாததாலும், ஸ்ரீ கிருஷ்ணர் இரண்டாவது முறையாக அர்ஜுனன் மூலமாக நமக்கு உபதேசித்தார். இதுவே கீதை பிறந்த கதை.


நன்றி பாரிஜாதம்.
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: முதன்முதலில் பகவத்கீதை உபதேசிக்கப்பட்டது யாருக்கு தெரியுமா?

Post by ayyasamy ram on Tue Jul 19, 2016 5:48 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34295
மதிப்பீடுகள் : 11082

View user profile

Back to top Go down

Re: முதன்முதலில் பகவத்கீதை உபதேசிக்கப்பட்டது யாருக்கு தெரியுமா?

Post by சிவனாசான் on Tue Jul 19, 2016 8:37 pm

அப்படியா? ராம் அன்பரே நன்றி>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 1007

View user profile

Back to top Go down

Re: முதன்முதலில் பகவத்கீதை உபதேசிக்கப்பட்டது யாருக்கு தெரியுமா?

Post by சரவணன் on Tue Jul 19, 2016 11:23 pm

இதை நம்ப முடிய வில்லை.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: முதன்முதலில் பகவத்கீதை உபதேசிக்கப்பட்டது யாருக்கு தெரியுமா?

Post by krishnaamma on Tue Jul 19, 2016 11:33 pm

பகவானே இந்த கீதையை சூரியன் மூலமாக மனித குலத்தின் தந்தையான மனுவிற்கும், மனு இஷ்வாகுவிற்கும் உபதேசம் செய்தனர் என்கிறார் கிருஷ்ணர். இதில் இஷ்வாகு என்பவர் ஸ்ரீராமனுக்கு மூதாதையர் ஆவார். இப்படி சில யுகங்களில் ஓதப்பட்ட அல்லது உணர்த்தப்பட்ட பகவத்கீதை பல காலங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாலும், உண்மையான கருத்துகள் சிதைவுண்டதாலும் மீண்டும் ஸ்ரீ கிருஷ்ணர் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு உபதேசித்ததாக கிருஷ்ண பரமாத்மாவே கூறுகிறார்.

சத்யம் சத்யம் சத்யம்.......இது முக்கலும் உண்மை ! புன்னகை :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
மிக நல்ல பகிர்வு கார்த்தி ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: முதன்முதலில் பகவத்கீதை உபதேசிக்கப்பட்டது யாருக்கு தெரியுமா?

Post by krishnaamma on Tue Jul 19, 2016 11:35 pm

@சரவணன் wrote:இதை நம்ப முடிய வில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1216727

இது நிஜம் தான் சரவணன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: முதன்முதலில் பகவத்கீதை உபதேசிக்கப்பட்டது யாருக்கு தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum