ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

திமிர் வரி
 sugumaran

சந்தானம் நாயகனாக நடிக்கும் `சக்க போடு போடு ராஜா
 ayyasamy ram

இருளில் ஒளிரும் மருதாணி
 ayyasamy ram

தயாராகிறார் சிம்பு
 ayyasamy ram

ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
 ஜாஹீதாபானு

நீதிபதிகள் உத்தரவு பிறப்பிக்கும்போது மைக்ரோபோனைப் பயன்படுத்த வேண்டும்: இளம் வழக்கறிஞர்கள் கோரிக்கை
 ayyasamy ram

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு
 ayyasamy ram

பெயர்களில் இத்தனை சுவாரசியமா!
 ayyasamy ram

காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே...?!
 ayyasamy ram

7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
 ஜாஹீதாபானு

அன்புடையவர் அழாமல் இருக்க முடியுமா?(ஆப்பிரிக்க நாட்டுப்புறப்பாடல்)
 Dr.S.Soundarapandian

நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
 Dr.S.Soundarapandian

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 Dr.S.Soundarapandian

'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
 Dr.S.Soundarapandian

இரும்புக்கூரை காயப்படுத்துகிறது ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
 ayyasamy ram

வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
 ayyasamy ram

'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
 ayyasamy ram

கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
 ayyasamy ram

4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
 ayyasamy ram

ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
 ayyasamy ram

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

உகாண்டா மாணவர்களின் வரவேற்புப் பாடல் !
 Dr.S.Soundarapandian

ரயில்களின் பயணநேரம் குறைகிறது
 ayyasamy ram

குறுங்கவிதைகள்....
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 Dr.S.Soundarapandian

2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
 Dr.S.Soundarapandian

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
 ayyasamy ram

இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
 ayyasamy ram

தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
 ayyasamy ram

வீர நாய்கள் - கவிதை
 ayyasamy ram

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

முதலிடத்தை இழந்தது இந்தியா
 ayyasamy ram

சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
 ayyasamy ram

காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
 ayyasamy ram

பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
 ayyasamy ram

என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன்
 ayyasamy ram

போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
 ayyasamy ram

நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
 ayyasamy ram

வேலன்:-புகைப்படங்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
 velang

‘தொட்ரா’​.​ -திரைப்படம்
 ayyasamy ram

கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
 ayyasamy ram

வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
 ayyasamy ram

முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
 ayyasamy ram

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

டாடா மின்சார நானோ கார்..!
 T.N.Balasubramanian

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
 T.N.Balasubramanian

மதன் நாவல்கள்
 thiru907

பிரமிப்பு - கவிதை
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 கண்ணன்

இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம் ; வடகிழக்கு மாநிலங்களில் அமோக விற்பனை
 ayyasamy ram

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 ராஜா

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
 Dr.S.Soundarapandian

கண்ணா நீ எங்கே? - கவிதை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

57.3% சதவிகித மருத்துவர்கள் மருத்துவம் படிக்கவில்லையாம்! - அதிர்ச்சி கிளப்பும் ஆய்வு

View previous topic View next topic Go down

57.3% சதவிகித மருத்துவர்கள் மருத்துவம் படிக்கவில்லையாம்! - அதிர்ச்சி கிளப்பும் ஆய்வு

Post by கார்த்திக் செயராம் on Tue Jul 19, 2016 9:57 pm

சென்ற ஆண்டின் பிற்பகுதி, வடதமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவிக் கொண்டிருந்த நேரம். வேலூர் மாவட்ட ஆட்சியர், டெங்கு காய்ச்சலுக்காக எடுக்கப்பட்ட முன்னேற்பாடுகளைப் பார்வையிடுவதற்காக, பள்ளிகொண்டா பகுதியில் இருந்த அகரம் கிராமத்திற்குச் செல்கிறார். அப்போது அங்கிருந்த சிறிய மருத்துவமனையைப் பார்த்தவருக்கு சந்தேகம் உண்டாகிறது. உடன் வந்த அதிகாரிகளை விசாரிக்கச் சொல்கிறார்.

அதிகாரிகள், தன் மருத்துமனைக்கு வருவதைக் கண்ட மருத்துவர், அங்கிருந்து தப்பிச் செல்கிறார். பின் அதிகாரிகள் தீவிர விசாரணை செய்தபோதுதான் தெரிகிறது, அந்தச் சிறிய மருத்துவமனையைப் பல ஆண்டுகளாக இயக்கியது ஒரு போலி மருத்துவர் என்று.

அது போல், தருமபுரியில் பிக்கிலி மலைப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் சந்தோஷிற்கு, விளையாடும்போது கண்களில் அடிபட்டுவிடுகிறது. சிறு காயம்தான். அஞ்சும் அளவிற்கெல்லாம் எதுவும் இல்லைதான் என்றாலும், கண்களில் அடிபட்டதால், அவனை உடனடியாக, அந்தப் பகுதியில் இயங்கிவந்த ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள் பெற்றோர்கள். அங்கிருந்த மருத்துவர், கண்களில் ஏதோ மருந்திடுகிறார். அதன் பின், அந்த சிறுவனின் கண்களும், முகமும் உடனடியாக வீங்கிவிடுகிறது. அவன் வலி தாளாமல் துடித்துள்ளான். மருத்துவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. உடனடியாக அவனை தூக்கிக் கொண்டு அந்தப் பகுதியில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விரைகிறார்கள் அவனது பெற்றோர்கள். அவனைப் பரிசோதித்த மருத்துவர், 'தவறான சிகிச்சையால் அவனது கண் மோசமாக பாதிக்கப்பட்டுவிட்டது' என்கிறார்.

பின்பு, மேற்கொண்ட ஒரு நீண்ட விசாரணையில்தான் தெரிகிறது, அவனுக்கு முதலில் சிகிச்சை அளித்த மருத்துவர், போலி மருத்துவர் என்று. அவரும் அந்தப் பகுதியில் ஏறாத்தாழ பத்து ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்திருக்கிறார்.

இது போன்ற செய்திகளை நீங்களும் கடந்து வந்திருக்ககூடும். அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் விஷயமாக இதுநாள் வரை இருந்தாலும், இந்தியாவில் போலி மருத்துவர்கள் குறித்து உலக சுகாதார மையம் அண்மையில் ஆய்வு செய்து வெளியிட்டுள்ள 104 பக்க அறிக்கை மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது. ஆம், அவர்களின் ஆய்வறிக்கையின்படி ஏறத்தாழ, இந்தியாவில் மொத்தம் உள்ள மருத்துவர்களில் 57.3 சதவீதம் பேர் போலி மருத்துவர்கள்.

இந்தியாவில் மருத்துவர்கள்:

வளர்ச்சி பொருளாதாரத்தில் நிபுணரான சுதிர் ஆனந்தும், ஹவாய் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் விக்டோரியா ஃபேனும் இணைந்து, இந்திய மருத்துவ பணியாளர்கள் குறித்து ஒரு விரிவான ஆய்வை, உலக சுகாதார மையம் சார்பாக மேற்கொண்டுள்ளார்கள். அவர்கள், தங்களது ஆய்வு முடிவுகளை ’The Heath workforce in India' என்ற தலைப்பில் கடந்த மாதம் வெளியிட்டு இருக்கிறார்கள்.

அவர்களது ஆய்வு முடிவுகள்

* இந்தியாவில் 2001 ம் ஆண்டின் மக்கள் தொகை, சுமார் நூற்றிரண்டு கோடி (சரியாக 1,028, 610, 328). அதில் இருபது லட்சத்து, அறுபத்தி ஒன்பதாயிரத்து ஐந்நூற்று நாற்பது பேர் மருத்துவப் பணியாளர்கள். அதில் 819, 475 பேர் மருத்துவர்கள், 630, 406 பேர் செவிலியர்கள் மற்றும் 24, 403 பேர் பல் மருத்துவர்கள்.

* மொத்தமுள்ள மருத்துவர்கள் எண்ணிக்கையில் 77.2 சதவீதம் பேர் அலோபதி மருத்துவர்கள், 22.8 சதவீதம் பேர் ஆயுர்வேத, ஹோமியோபதி, யுனானி மற்றும் பிற மருத்துவர்கள்.

* ஒரு லட்சத்திற்கு 79.7 பேர் என்ற கணக்கில் மருத்துவர்களும், 61.3 பேர் என்ற கணக்கில் செவிலியர்கள் மற்றும் தாதிகளும், 2.4 பேர் என்ற கணக்கில் பல் மருத்துவர்களும் இருக்கிறார்கள்.

* மொத்தம் உள்ள அலோபதி மருத்துவர்களில் 31.4 சதவீதம் பேர் வெறும் மேல்நிலைப்பள்ளியை மட்டுமே முடித்தவர்கள். மொத்தமாக 57.3 சதவீதம் பேர் மருத்துவக் கல்வி தகுதி இல்லாதவர்கள்.

* கிராமப்புறங்களில்தான் அதிகமாக போலி மருத்துவர்கள் இருக்கிறார்கள். நகர்ப் பகுதிகளில் 58.4 சதவீத மருத்துவர்கள் முறையாக பயின்று மருத்துவம் பார்க்கிறார்கள். கிராமப்புறங்களில் உள்ள மருத்துவர்களில் வெறும் 18.8 சதவீதம் பேர்தான் மருத்துவம் பயின்று இருக்கிறார்கள்.

* இந்திய மொத்த மக்கள் தொகையில் 3.1 சதவீதமாக உள்ள கேரளாதான், தேசத்திற்கு 38.4 சதவீத செவிலியர்களை வழங்கி இருக்கிறது.

இந்த ஆய்வு, 2001 -ம் ஆண்டின் மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டும், 593 மாவட்டங்களிலிருந்து கிடைத்த தரவுகளைக் கொண்டும் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் நிலையில், 2011 ம் ஆண்டு விரிவான மக்கள் தொகை கணக்கு கிடைத்தபின், இதுபோன்ற ஆய்வு மீண்டும் மேற்கொள்ளப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர்கள் மட்டுமல்ல, மருத்துவக் கட்டமைப்பும் மோசம்தான்!

அண்மையில் அருண் காத்ரே மற்றும் அபய் சுக்லே என்ற இரண்டு மருத்துவர்கள், “Dissenting Diagonisis" என்ற புத்தகத்தை வெளியிட்டு, மருத்துவத்துறையின் இருட்டுப் பக்கங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ள நிலையில், இந்த ஆய்வு முடிவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள, இந்திய மருத்துவக் கவுன்சிலின் செயலாளர் மருத்துவர் ரீனா நய்யார், “இன்னும் எங்களுக்கு அதிகாரபூர்வமாக ஆய்வு முடிவுகள் வந்து சேரவில்லை” என்று கூறி உள்ளார். மேலும், “நிச்சயம் உரிய மருத்துவப் படிப்புகள் படிக்காமல், மருத்துவத் தொழில் பார்ப்பவர்கள் அனைவரும் போலி மருத்துவர்கள்தான்” என்றார்.

தமிழ் நாடு நல்வாழ்வு இயக்கத்தின் தலைவர் மருத்துவர் ரெக்ஸ் சற்குணம், “அரசு முறையாக இதனைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி மருத்துவர்களுக்குக் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். ஆனால், அதே நேரம் நம் தேசத்தில் போலி மருத்துவர்கள் மட்டும் சிக்கல் இல்லை. நமது மருத்துவ உள் கட்டமைப்புகளும் மிக மோசமானதாகதான் இருக்கின்றன.


பெரும்பாலான மக்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் இடமாக, ஆரம்ப சுகாதார நிலையங்கள் தான் இருக்கின்றன. ஆனால், அதன் உள்கட்டமைப்பு வசதிகள் உண்மையில் கவலை அளிப்பதாக இருக்கிறது. அதிலும் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்.” என்றார்.- மு. நியாஸ் அகமது


நன்றி விகடன்.
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: 57.3% சதவிகித மருத்துவர்கள் மருத்துவம் படிக்கவில்லையாம்! - அதிர்ச்சி கிளப்பும் ஆய்வு

Post by krishnaamma on Wed Jul 20, 2016 12:02 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum