ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 T.N.Balasubramanian

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 ayyasamy ram

நண்பன் - கவிதை
 ayyasamy ram

என்னவள்! – கவிதை –
 ayyasamy ram

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

உருமாற்றம்
 Dr.S.Soundarapandian

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
 Dr.S.Soundarapandian

ஒரு இன்னிங்ஸ்... மூன்று சாதனைகள்... கேப்டன் கோலி அதிரடி!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)
 Dr.S.Soundarapandian

நாயுடன் சேர்ந்த நரி!
 Dr.S.Soundarapandian

திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
 Dr.S.Soundarapandian

என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
 Dr.S.Soundarapandian

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் 45 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து சாவு
 Dr.S.Soundarapandian

சீன விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு அவமரியாதை
 Dr.S.Soundarapandian

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய ராணுவ டாங்கிகள் வெளியேறின
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் அனைத்து விமான சேவைகளிலும் தமிழிலும் அறிவிப்பு இருக்க வேண்டும் -நடிகர் விவேக்
 Dr.S.Soundarapandian

அறிமுகம்---- மு.தமிழ்ச்செல்வி  
 Dr.S.Soundarapandian

இந்திய தேச சுதந்திர தின விழா (15 -8 -2017 )
 Dr.S.Soundarapandian

பழைய பாடல்கள் காணொளிகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
 Dr.S.Soundarapandian

சொற்குற்றமா? பொருட்குற்றமா?
 Dr.S.Soundarapandian

முல்லா கதை.
 Dr.S.Soundarapandian

பாப்பி - நகைச்சுவை
 Dr.S.Soundarapandian

மனம், பாசம் – கவிதை
 Dr.S.Soundarapandian

பசு உடலை மரியாதையுடன் அடக்கம் செய்த முஸ்லிம்கள்
 Dr.S.Soundarapandian

நீங்கதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்....!!
 Dr.S.Soundarapandian

கவலையில் இருங்கள் ;அது நல்லது ! (சிற்றாராய்ச்சி)
 Dr.S.Soundarapandian

[REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்
 ajaydreams

பொதுவாக எம்மனசு தங்கம் பட விமர்சனம்
 ayyasamy ram

இன்று "புதிய இந்தியா" உறுதிமொழி ஏற்க பிரதமர் மோடி அழைப்பு
 ayyasamy ram

கோகுலாஷ்டமி
 T.N.Balasubramanian

கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்!
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

செருப்புகடையில், வேலைபார்த்த ரூ.6000 கோடி சொத்துக்கள் கொண்ட கோடீஸ்வரரின் மகன்
 T.N.Balasubramanian

தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
 Dr.S.Soundarapandian

ஒன்றை மட்டும் பார், இரண்டிருக்காது…!!
 Dr.S.Soundarapandian

ஞாபக மறதியைப் போக்க வழி !
 ayyasamy ram

மனைவி அமைவதெல்லாம் இறைவன்..........
 ayyasamy ram

நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு; தமிழக அரசு அவசர சட்டம்
 M.Jagadeesan

-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்."
 T.N.Balasubramanian

தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
 Dr.S.Soundarapandian

தரமணி - நவீன அவள் அப்படித்தான் !
 Dr.S.Soundarapandian

தலை கீழாக நின்றாலும் மாறமாட்டேன்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

போலியான சிம் கார்டுகள் உஷார் !!!

View previous topic View next topic Go down

போலியான சிம் கார்டுகள் உஷார் !!!

Post by கார்த்திக் செயராம் on Thu Jul 21, 2016 12:58 am

கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களுக்கு செல்போன்களும் ஒரு காரணமாககூறப்படும் நிலையில், ஒரே விலாசத்தில் ஏராளமான சிம் கார்டுகளை விற்பனை செய்துள்ளதாக கோவையில், சிம் கார்டு விநியோகிப்பாளர் கிருஷ்ணன் என்பவர், துணிச்சலாக போலீசுக்குப் போய் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு புகாரைக் கொடுத்தார்.

"தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர் கூட்டத்தை விரிவுபடுத்தி, விற்பனை இலக்கை எட்ட ஒருவருடைய இருப்பிட சான்றிதழை மட்டுமே பயன்படுத்தி கணக்கிலடங்கா சிம்கார்டுகளை புழக்கத்தில் விடுகின்றன... ஒரே காலனியில் மட்டும் 584 போலி சிம் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன " என்று குமுறலுடன் கிருஷ்ணன் கொடுத்த புகாரின் நிலை இதுவரை என்னவாயிற்று என்றே தெரியவில்லை.

கோவை செல்வபுரம் பகுதிவாசி, நாகநந்தினி, "எனக்கே தெரியாமல் என் பெயரில் பல சிம்கார்டுகள் உலவுகின்றன " என்று கோவை மாநகர காவல் நிலையத்திலும், மத்திய தொலைத் தொடர்புத் துறையிலும் புகார் அளித்தார். இதுவும் கிருஷ்ணன் கொடுத்த புகார் போலவே அமுங்கிப் போய்க் கிடக்கிறது.

ஒரு வழியாக தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நாக நந்தினியின் ஆவணங்களை வைத்து 4 போலி சிம்கார்டுகள் புழக்கத்தில் உள்ளதை உறுதிப்படுத்திய மத்திய தொலைத் தொடர்புத் துறை, அவரது பெயரில் பெறப்பட்டுள்ள எண்கள் குறித்த பட்டியலையும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. கூடுதல் நடவடிக்கை தேவை என்றால், உள்ளூர் காவல் துறை மூலம் விசாரித்து நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தொலைத்தொடர்புத் துறை தெரிவிக்கவே, நாக நந்தினி சைபர் க்ரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

"நாடு முழுவதுமுள்ள பல லட்சக்கணக்கான போலி சிம்கார்டுகள் குறித்து மத்திய தொலைத் தொடர்புத் துறையிடம் ஆவணங்களைச் சமர்ப்பித்தும் நடவடிக்கை எடுக்க தொலைத் தொடர்பு துறையினர் மறுக்கின்றனர். தமிழகத்தில் உள்ள தனியார் செல்லிடப்பேசி சேவை நிறுவனத்தின் மூலம் மட்டும் 15 லட்சம் பேரின் ஆவணங்களைப் பயன்படுத்தி, 42 லட்சம் நபர்களுக்கான சிம்கார்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. கோவையில் மட்டுமே 3 லட்சம் போலி சிம் கார்டுகள் உள்ளன. இந்த போலி சிம்கார்டுகளை கொண்டு, பல்வேறு விதமான குற்றச் செயல்கள் அரங்கேறுகின்றன.

கோவையில் பீளமேடு, பிஆர்பி காலனி பகுதியில் சிலரது ஆவணங்களை வைத்து நான்கே நாட்களில் 580 சிம் கார்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. இதில் பல முக்கிய அரசு அதிகாரிகளது ஆவணங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது கூடுதல் அதிர்ச்சியான விஷயம். சந்தை மதிப்பை உயர்த்திக் கொள்ளவும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையைக் காட்டவும் தொலைத்தொடர்பு நிறுவனங்களே போலிகளை ஊக்குவிக்கின்றன என்பது பாதிக்கப்பட்டவர்களின் வேதனை முறையீடு.

இது குறித்து தொலைத்தொடர்புத் துறையில் புகார் அளித்தும் சரியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இதனால் நாளுக்குநாள் போலிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. ஒரு நிறுவனம் தனது சிம்கார்டுகளை ஏராளமான வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதை வைத்து, அலைக்கற்றை ஒதுக்கீட்டைக் கூட ஏலமே இல்லாமல் பெற முடியும் " என்று அன்றே, கோவை கிருஷ்ணன் குறிப்பிட்டார்.

'போலி சிம்கார்டுகள் எப்படி உருவாக்கப் படுகின்றன. யார் யார் அதில் அதிகமாக ஈடுபடுகின்றனர்?' என கேள்வியுடன் சிலரைத் தேடினேன்.

'சிம் வாங்கிக்குங்க சார்' என்று கூவிக் கூவி அழைத்தபடி சாலையோரக் குடைகளின் கீழ் கடை விரித்திருக்கும் நபர்களிடம் இது தொடர்பாகப் பேசியதில்,

"பல இடங்களில் போலி ஆவணங்கள் தயாரிக்கும் இடங்களே உள்ளன. கொஞ்சம் பணம் கொடுத்தால் போதும் ஒரே நேரத்தில் 50 முகவரிகள் வரை உரிய போட்டோ ஆதாரங்களுடன் கைக்கு வந்து விடும். அதை ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு விற்று விடுவோம். 3 மாதம் வரை அதை எங்கள் பொறுப்பில் வைத்திருந்து, அதன் பின்னர் வேறு நெட்வொர்க்கிற்கு மாற்றி விற்பது என்றும் செய்வோம். தொலைத்தொடர்பு டிபார்ட் மென்ட்டிலேயே அப்படி பலர் எங்களின் நட்புறவில்(?!) உள்ளனர்.

வாக்காளர் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு அதிலிருந்து பெயர், முகவரி, தேர்தல் ஆணைய அட்டையின் ஜெராக்ஸ் போன்றவற்றைக் காட்டி, தனி சிம்கார்டு ரெடி செய்து விடுவோம். எங்களுக்கு மாதத்துக்கு இவ்வளவு சிம்கார்டு விற்பனை செய்யணும் என்கிற நெருக்கடி இருப்பதால், ஆர்.டி.ஓ. ஆபீஸ், ரேசன் கடைகள், ஆதார் உள்ளிட்ட முகாம்கள் நடத்தும் இடங்களைத் தேர்வு செய்து அங்கேயும் போய் விடுவோம். அங்கே குப்பைக்குப் போன விண்ணப்பங்களைக் கொஞ்சம் திருத்தங்கள் செய்து உயிர் கொடுத்து விடுவோம்.

அந்த சிம் கார்டுகளை வைத்துக் கொண்டு நாங்கள் பெரிதாய் ஒன்றும் செய்து விடமுடியாது. எங்களுக்கு 'சிம்-கார்டு' விற்பனையை அதிகப்படுத்தும் ஒரு டார்கெட் மட்டும்தான்." என்கின்றனர்.

போலியான முகவரிகளில் பெறப்பட்டு இந்த வழியில் சுற்றும் சிம்-கார்டுகளை, கல்லூரி மாணவர்கள், கள்ளக் காதல் ஜோடிகள்தான் அதிகளவில் விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்துகின்றனர் என்பது நமக்குக் கிடைத்த இன்னொரு அதிர்ச்சித் தகவல்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு சிம் கார்டு அல்லது டெலிபோன் இணைப்பு வாங்க வேண்டுமென்றால் அது மிகவும் சிரமமானது. தீவிரவாதிகள் கைகளில் அது போய் விட்டால் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் என்று பயப்படுகிறார்கள். இங்கேயோ, சிம் கார்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அலைந்து கொண்டிருக்கத் தேவையில்லை. பெட்டிக் கடைகளிலும் கிடைக்கிறது சிம் கார்டு. சாலைகளில் குடைகள் அமைத்து, எக்ஸிகியூட்டிவ்கள் பிளாட் பாரத்தின் ஓரமாக உட்கார்ந்து கொண்டு, 50 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை இலவச டாக் வேல்யூவுடன், சிம் விநியோகம் செய்து கொண்டிருப்பார்கள்.

திருச்சி மத்திய சிறையில், நவம்பர் 2009-ல் 5 செல்போன்கள், 2 சிம்கார்டுகள், கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. செல்போன் பயன்படுத்தி சிக்கிய கைதிகளிடம் தனியாக விசாரணை நடத்தப்பட்டது. செல்போன் பதுக்கி வைத்த இடத்தை அவர்கள் தெரிவித்தனர். அந்த இடங்களில் தோண்டிய போது கார்பன் காகிதம் சுற்றப்பட்ட பொட்டலங்கள் சிக்கின.

அவற்றை பிரித்தபோது அதில் செல்போன்கள் இருந்தன. சோதனையில் 6 செல்போன்கள், 4 சிம்கார்டுகள், 7 பேட்டரிகள் சிக்கின.

"கார்பன் காகிதத்தை மேலே சுற்றி செல்போன், சிம் கார்டுகளை மண்ணுக்குள் புதைத்து வைத்தால் செல்போன் டிடெக்டர் கருவியாலோ, மோப்பநாய் மூலமோ அங்கே செல்போன் இருப்பதைக் கண்டுபிடிக்க முடியாது" என்ற தொழில் நுட்பத்தை (?!) திருச்சி மத்திய சிறையில் நடந்த செல்போன் ரெய்டு மூலமாகத்தான் போலீசாரே தெரிந்து கொண்டனர். இந்த ரெய்டு முடிந்து ஏழாண்டுகள் (2009) கடந்துவிட்டன. சிறைவாசிகள், சிறைக்குள்ளே இருந்தபடியே இவ்வளவு விபரமாக அப்போதே இருந்தனர். இப்போது இன்னும் நுட்ப வளர்ச்சி பெற்றிருக்கக் கூடும். 'டெலிகாம் ரெகுலாரிட்டி அத்தாரிட்டி ஆஃப் இண்டியா' (ட்ராய்) தன் பங்குக்கு அவ்வப்போது, "சிம்- கார்டு கொடுப்பதில் இன்னின்ன ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் " என்று பெரிதாய் கொடுக்கும் சுற்றறிக்கையை யாரும் பெரிதாய் எடுத்துக் கொள்வதில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மாணவர்கள், கள்ளக் காதலர்களோடு மட்டும் இந்த போலி சிம் கார்டுகள் சுற்றவில்லை. தமிழகத்தின் சிறைகள் தொடங்கி வடக்கில் திகார் சிறைச்சாலை வரையிலும், அதையும் தாண்டி, தீவிரவாதத்தின் பிடியிலும் சுற்றிக் கொண்டுதான் இருக்கின்றன.

ட்ராய், சிறைத்துறை, செல்போன் நிறுவனங்கள் மூன்றையும் ஒன்றிணைத்து அரசுகள் வேகமாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது.


நன்றி விகடன்.
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 437

View user profile

Back to top Go down

Re: போலியான சிம் கார்டுகள் உஷார் !!!

Post by ராஜா on Thu Jul 21, 2016 11:13 am

மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் அரசாங்கம் இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த முடியாது உள்ளது.


இங்கு கத்தாரில் , Qatar ID card இல்லாமல் எதுவும் பண்ண முடியாது. அனைத்து சேவைகளுக்கும் இது ரொம்ப அவசியம். ஏதாவது ஒரு தொலைத்தொடர்பு அலுவலக கிளையில் சென்று நமது ID கார்டை காமித்து இதில் எத்தனை sim card உள்ளது என்று தெரிந்துகொள்ளலாம் , பயன்படுத்தாமல் உள்ளவைகளை எளிதாக நீக்கிவிடலாம்.


இதே போல் , நாம ஊரிலும் அனைத்துவித சேவைகளுக்கும் ஆதார் கார்டையே அடிப்படியாக கொண்டு இருக்க வேண்டும் , அப்ப தான் இவற்றை கட்டுக்குள் கொண்டுவரமுடியும்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30658
மதிப்பீடுகள் : 5520

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: போலியான சிம் கார்டுகள் உஷார் !!!

Post by krishnaamma on Thu Jul 21, 2016 11:17 am

நல்ல பதிவு கார்த்தி, இங்கு சௌதியை பொறுத்த வரை, இக்காமா (Iquma ) என்கிற ID கார்டைத்தவிர, நாம் நம் கட்டைவிரல் ரேகையும் பதிவு செய்ய வேண்டும் அப்போது தான் சிம், நெட் connection அல்லது டெலிபோன் இணைப்பு பெறமுடியும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11371

View user profile

Back to top Go down

Re: போலியான சிம் கார்டுகள் உஷார் !!!

Post by ayyasamy ram on Thu Jul 21, 2016 12:52 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30517
மதிப்பீடுகள் : 8836

View user profile

Back to top Go down

Re: போலியான சிம் கார்டுகள் உஷார் !!!

Post by சிவனாசான் on Thu Jul 21, 2016 8:30 pm

நல்ல தகவல் நன்று. நன்றி.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2712
மதிப்பீடுகள் : 970

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum