ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 ஜாஹீதாபானு

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 SK

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 T.N.Balasubramanian

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 ayyasamy ram

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 T.N.Balasubramanian

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
 krishnaamma

சாப்பாட்டுப் புராணம் சமஸ்
 ajaydreams

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 ayyasamy ram

பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
 SK

சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
 Meeran

சிரிப்பின் பயன்கள்
 ஜாஹீதாபானு

முடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்
 SK

தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
 SK

இன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்
 SK

மான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி
 SK

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 ஜாஹீதாபானு

புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை
 T.N.Balasubramanian

பாதை எங்கு போகிறது...?
 SK

நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
 SK

சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
 SK

குழந்தை பிறந்த விழா கொண்டாட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி
 T.N.Balasubramanian

கடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...!!
 SK

தலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்?
 SK

வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

குருப்பெயர்ச்சி பலன் : 12 ராசிகளுக்கும் என்ன மார்க்?

View previous topic View next topic Go down

குருப்பெயர்ச்சி பலன் : 12 ராசிகளுக்கும் என்ன மார்க்?

Post by ayyasamy ram on Fri Jul 29, 2016 5:32 pm

பிரகஸ்பதி என்று பிரபஞ்சமே போற்றித் துதிக்கும்
குருபகவான்தான் ஞானத்தின் பிதாமகனாய்த் திகழ்கிறார்.

காலசர்ப்ப தோஷம், பிரம்மஹத்தி தோஷம் போன்ற சகல
தோஷங்களையும் நீக்கும் ஆற்றல் கொண்டவர்.
குருவின் பார்வை பட்டால்தான் திருமணம் நடைபெறும்.

ஒருவரின் ஜாதகத்தில் மற்ற கிரகங்கள் எப்படி இருந்தாலும்,
குரு மட்டும் நல்ல நிலையில் இருந்தால் எதையும் சாதிக்கும்
சக்தி கிடைக்கும்.
-
இந்த துர்முகி வருடம், ஆடி மாதம் 18 ம் தேதி (2.8.16) செவ்வாய்க்கி
ழமை கிருஷ்ண பட்சத்து அமாவாசை திதி மேல்நோக்குள்ள
பூசம் நட்சத்திரம், ஸித்தி நாமயோகம், சதுஷ்பாத நாமகரணம்,
நேத்திரம், ஜீவனம் மறைந்த சித்தயோகத்தில், புதன் ஹோரையில்,
இரண்டாம் ஜாமத்தில், பஞ்ச பட்சியில் ஆந்தை துயில் கொள்ளும்
நேரத்தில், தட்சிணாயன புண்ணிய கால கிரீஷ்ம ருதுவில் காலை
மணி 9.24-க்கு கன்யா லக்னத்தில் பிரகஸ்பதி எனும் தேவ
குருவாகிய வியாழபகவான் சிம்ம ராசியிலிருந்து உபய வீடான
கன்னி ராசிக்குள் சென்று அமர்கிறார்.

1.9.17 வரை கன்னி ராசியில் அமர்ந்து தன் அதிகாரத்தை
வெளிப்படுத்துவார்.
-
இந்த குருப்பெயர்ச்சியால், எந்த ராசி எப்படி இருக்கும்,
எந்த ராசி எத்தனை மதிப்பெண்கள் பெறும், என்பதைப்
பார்க்கலாம். இந்த துர்முகி வருடம் ஆடி மாதம் நடைபெறும்
குருப்பெயர்ச்சி பலன்கள் குறித்து விவரிக்கிறார்
'ஜோதிடரத்னா' கே.பி.வித்யாதரன்.

-

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35936
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சி பலன் : 12 ராசிகளுக்கும் என்ன மார்க்?

Post by ayyasamy ram on Fri Jul 29, 2016 5:35 pm

மேஷம் 55/100
-
எதையுமே உடனே கிரகித்துக்கொள்ளும் ஆற்றல்
மிக்கவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில்
அமர்ந்து சுப பலன்களைத் தந்த குருபகவான், 2.8.16 முதல்
1.9.17 வரை 6-வது வீட்டுக்குள் பிரவேசிக்கிறார்.

சின்னச் சின்ன இழப்புகளும், ஏமாற்றங்களும் இருக்கும்
என்றாலும், அதற்காக அஞ்ச வேண்டாம். எந்த ஒரு
காரியத்தையும் நன்கு யோசித்துச் செய்தால்
ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம்.
-
----------------------------------------------
-
ரிஷபம் 80/100


எந்தச் சூழலிலும் மற்றவர்களின் தயவில் வாழ
விரும்பாதவர்கள் நீங்கள். இதுவரை உங்களின் ராசிக்கு
சுக ஸ்தானமான 4-ம் இடத்தில் அமர்ந்து, உங்களைப் பல
வகைகளிலும் சிரமப்படுத்திய குருபகவான்,
2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய
ஸ்தானமான 5-ம் வீட்டில் அமர்கிறார்.

இதனால் உங்களுடைய அடிப்படை வசதி வாய்ப்புகள்
பெருகும். எதிலும் வெற்றி உண்டாகும். கடன் தொல்லைகள்
குறையும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம்
உண்டாகும். சேமிக்கத் தொடங்குவீர்கள். மகளுக்குத்
திருமணம் நிச்சயமாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.
-
-----------------------------------------

மிதுனம் 60/100


யதார்த்த நிலையை உணர்ந்து செயல்படுபவர்கள், நீங்கள்.
இதுவரை உங்களின் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்து
உங்களை முடக்கி வைத்திருந்த குருபகவான், 2.8.16 முதல்
1.9.17 வரை 4-ம் வீட்டில் அமர்வதால், எதிலும் உணர்ச்சி
வசப்படாமல் பிரச்னைகளை அறிவுபூர்வமாகவும்,
அனுபவ பூர்வமாகவும் அணுகுங்கள்.

சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதை
அறிவதில் குழப்பம் ஏற்படும். எவ்வளவு பணம் வந்தாலும்
செலவுகள் துரத்தும். வேலைச் சுமையால் டென்ஷன்
அதிகரிக்கும். உத்தியோகத்தின் பொருட்டோ, வீண்
சந்தேகத்தாலோ தம்பதிக்கு இடையே பிரிவுகள் ஏற்படலாம்.
-
---------------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35936
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சி பலன் : 12 ராசிகளுக்கும் என்ன மார்க்?

Post by ayyasamy ram on Fri Jul 29, 2016 5:36 pm

-
கடகம் 70/100

-
உலக நடப்புகளை உன்னிப்பாக கவனிப்பவர்கள்,
நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்ந்து
பலன்களை அருளிய குருபகவான், இப்போது 3-ம் வீட்டில்
அடியெடுத்து வைக்கிறார். 2.8.16 முதல் 1.9.17 வரை
உங்களின் சஷ்டம-பாக்கிய ஸ்தானாதிபதியான
குருபகவான் மூன்றாம் வீட்டில் மறைவதால், உங்களின்
அணுகுமுறையை மாற்றிக்கொள்வது நல்லது.

வேலைகளை முடிப்பதில் இழுபறி நீடிக்கும். தன்னம்பிக்கை
குறையும். கணவன்-மனைவிக்குள் சச்சரவுகள் வந்தாலும்,
அன்பும், அந்நியோன்யமும் குறையாது.
-
--------------------------------------------
-
சிம்மம் 85/100

-
காரியத்தில் கண்ணாக இருந்து காய் நகர்த்தும் அன்பர்கள்
நீங்கள். இதுவரை ஜன்ம குருவாக அமர்ந்து, பல வகைகளிலும்
இன்னல்களைத் தந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை
2-ம் வீட்டில் அமர்வதால், புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்ப ஸ்தானத்தில்
குரு அமர்வதால், குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். தடைப்பட்ட
சுபநிகழ்ச்சிகள் நல்லபடியாக நிறைவேறும். பிரிந்த தம்பதிகள்
ஒன்று சேருவார்கள். நோய்களில் இருந்து விடுபடுவீர்கள்.
-
---------------------------------------------------
-


avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35936
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சி பலன் : 12 ராசிகளுக்கும் என்ன மார்க்?

Post by ayyasamy ram on Fri Jul 29, 2016 5:39 pm

கன்னி 52/100
-
கலாரசனை உள்ளவர்கள் நீங்கள்.
இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் இருந்து வீண்
விரயங்களையும், பணப் பற்றாக்குறையையும் ஏற்படுத்தி
வந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள்
ராசிக்குள் அமர்கிறார்.

ஜன்ம குரு என்று கலக்கம் கொள்ள வேண்டாம்.
பொறுப்புகள் அதிகரிக்கத்தான் செய்யும்.
ஒரே சமயத்தில் பல வேலைகளை இழுத்துப் போட்டு
செய்ய வேண்டி இருக்கும்.

கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவுகள் வரக்
கூடும். ராசியிலேயே குரு அமர்வதால், உடல் நலனில் கூடுதல்
கவனம் செலுத்தப் பாருங்கள். பணம் எவ்வளவுதான் வந்தாலும்
எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும்.
அவ்வப்போது அவநம்பிக்கை வந்து நீங்கும்.
-
------------------------------------------

துலாம் 70/100
-
நடுநிலைமை தவறாதவர்கள் நீங்கள். இதுவரை உங்கள்
ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து கொண்டு நினைத்த
காரியங்களையெல்லாம் நிறைவேற்றியதுடன், பதவி,
அந்தஸ்தையும் தந்த குரு பகவான்
இனி 2.8.16 முதல் 1.9.17 வரை விரயஸ்தானமான 12-ம்
இடத்துக்கு வருகிறார். சுபச் செலவுகள் அதிகரிக்கும்.

ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டி இருக்கும்.
மனக் குழப்பம் அதிகரிக்கும். வீண் கவலைகள் மனதை
வாட்டும். வழக்குகளில் எச்சரிக்கை தேவை.
-
------------------------------------------

விருச்சிகம் 83/100
-
கேள்விக் கணைகள் தொடுப்பதில் வல்லவர்கள் நீங்கள்.
இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு,
உங்களைப் பலவகைகளிலும் அலைக்கழித்த குருபகவான்,
2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில்
அமர்வதால், இனி முன்னேற்றம் உண்டாகும்.

எதிலும் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு
மரியாதை கிடைக்கும். கொடுத்த கடன் திரும்பும்.
கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும்.
புகழும் செல்வாக்கும் கூடும். மழலை பாக்கியம் கிடைக்கும்.
-
------------------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35936
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சி பலன் : 12 ராசிகளுக்கும் என்ன மார்க்?

Post by ayyasamy ram on Fri Jul 29, 2016 5:41 pm

-
தனுசு 58/100
-
வளைந்து கொடுக்கத் தெரியாதவர்கள் நீங்கள்.
இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்து
கொண்டு புதிய அனுபவங்களைத் தந்து, உங்களை
முன்னேற்றப் பாதையில் நடத்திய குருபகவான்,
2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில்
அமர்ந்து பலன் தரப்போகிறார்.

பத்தில் குரு, பதவிக்கு ஆபத்து என்று அச்சம் கொள்ள
வேண்டாம். ஓரளவு நன்மையே உண்டாகும். வேலைச் சுமை
அதிகரிக்கும். உங்கள் உழைப்பையும் திறமையையும்
வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள்.

சிலர் வேலையின் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிய
வேண்டி இருக்கும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான
விவாதங்கள் வரும்.
--
--------------------------------------------

மகரம் 90/100

-
மனச்சாட்சிப்படி நடப்பவர்கள் நீங்கள். இதுவரை உங்கள்
ராசிக்கு 8-ம் வீட்டில் அமர்ந்து மன இறுக்கத்தையும்,
வீண் அலைச்சல்களையும் கொடுத்து வந்த குருபகவான்,
இனி 2.8.16 முதல் 1.9.17 வரை உங்களின் பாக்கிய ஸ்தானமான
9-ம் வீட்டில் அமர்வதால், புதிய பாதையில் பயணித்து சாதிப்பீர்கள்.

பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும்.
தன்னம்பிக்கை கூடும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம்
கூடும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். குருபகவான்
தனது 5-ம் பார்வையால் உங்களின் ராசியைப் பார்ப்பதால்,
ஆரோக்கியம் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

புது பதவி, பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
-
----------------------------------------------

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35936
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சி பலன் : 12 ராசிகளுக்கும் என்ன மார்க்?

Post by ayyasamy ram on Fri Jul 29, 2016 5:45 pm

கும்பம் 73/100
-
மற்றவர்களின் வெற்றிக்காகப் பாடுபடுபவர்கள்
நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து
கொண்டு குடும்பத்தில் மகிழ்ச்சியையும், பதவி, புகழ்,
கௌரவத்தையும் தந்த குருபகவான்,
2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில்
மறைவதால், எதிலும் பொறுமையும் நிதானமும் தேவை.

நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டி இருக்கும்.
எவ்வளவுதான் பணம் வந்தாலும், பற்றாக்குறை நீடிக்கும்.
எந்த ஒரு விஷயத்தையும் குடும்பத்தினருடன் ஆலோசித்து
முடிவு செய்யுங்கள்.
எதிர்காலத்தைக் குறித்த அச்சம் வந்து போகும்.
உங்களது திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்.
-
------------------------------------------
-
மீனம் 87/100

-
இயற்கையை உணரும் சக்தி கொண்டவர்கள் நீங்கள்.
இதுவரை உங்கள் ராசிக்கு 6-ல் அமர்ந்துகொண்டு,
பலவகைகளிலும் உங்களை சிரமப்படுத்திய குருபகவான்
இனி 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில்
அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்க இருப்பதால்,
தன்னம்பிக்கை கூடும்.

தடைப்பட்ட திருமணம் கூடி வரும். கடனாகக் கொடுத்த பணம்
திரும்ப வரும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேருவீர்கள்.
சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
புது வேலை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்கள் புகழ் கூடும்.
-
----------------------------------------
நன்றி-விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35936
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சி பலன் : 12 ராசிகளுக்கும் என்ன மார்க்?

Post by பாலாஜி on Sat Jul 30, 2016 11:14 am

படிக்கும் பொழுது கூட இவ்வளவு மார்க் வாங்க வில்லையே ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சி பலன் : 12 ராசிகளுக்கும் என்ன மார்க்?

Post by ராஜா on Sat Jul 30, 2016 12:00 pm

@பாலாஜி wrote:படிக்கும் பொழுது கூட இவ்வளவு மார்க் வாங்க வில்லையே ...
ஹா ஹா ஹா ... நானும் இதையே தான் நினைத்தேன் தல
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5583

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சி பலன் : 12 ராசிகளுக்கும் என்ன மார்க்?

Post by தமிழ்நேயன் ஏழுமலை on Sat Jul 30, 2016 12:08 pm

கலியுகம் முடிந்து கிருத யுகம் தொடங்குகிறதா???
avatar
தமிழ்நேயன் ஏழுமலை
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 82
மதிப்பீடுகள் : 56

View user profile

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சி பலன் : 12 ராசிகளுக்கும் என்ன மார்க்?

Post by ayyasamy ram on Sat Jul 30, 2016 2:38 pm

@தமிழ்நேயன் ஏழுமலை wrote:கலியுகம் முடிந்து கிருத யுகம் தொடங்குகிறதா???
மேற்கோள் செய்த பதிவு: 1217529
-
கலியுகம் முடிய இன்னும் 4,26,896 ஆண்டுகள் உள்ளன.
அப்போது உலகம் முழுமையாக இருக்காதாம்.

இப்போது கலியுகத்தின் 5104ம் ஆண்டு தான் நடக்கிறது.
மொத்தம் 4,32,000 ஆண்டுகள். இப்போதே கலியுகத்தின்
கொடுமை எல்லை மீறி போய் விட்டது.

இனி காட்டுவாசிகள் போல நாகரீகமற்று போய் விடும்
அந்த பழைய காலம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு
இல்லை.

இந்த யுகத்தின் முடிவில் தர்மத்தை நிலைநாட்ட திருமால்
கல்கி அவதாரம் எடுப்பாரென்று புராணங்கள் கூறுகின்றன.
கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும்
-
-------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35936
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சி பலன் : 12 ராசிகளுக்கும் என்ன மார்க்?

Post by யினியவன் on Sat Jul 30, 2016 4:32 pm

நமக்கு உள்ள எப்பவும் களி யுகம் தான் புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சி பலன் : 12 ராசிகளுக்கும் என்ன மார்க்?

Post by Gaiyathri on Sat Jul 30, 2016 6:08 pm

ஒன்பது கிரகமும் ஒவ்வொரு மார்க் குடுக்குமே எதை எடுத்துக்கறது என்ன?

Gaiyathri
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 75
மதிப்பீடுகள் : 67

View user profile

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சி பலன் : 12 ராசிகளுக்கும் என்ன மார்க்?

Post by சிவனாசான் on Sat Jul 30, 2016 8:15 pm

இவை யாவும் பொதுவான பலன்கள். ஒவ்வொருவரின் தன் பிறந்த ஜாதக கிரக நிலையின்படி பலன் அறிவதுதான் உண்மை பலனாகும்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2859
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சி பலன் : 12 ராசிகளுக்கும் என்ன மார்க்?

Post by amebaa on Wed Aug 17, 2016 5:40 pm

87 மார்க் சூப்பர்
avatar
amebaa
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சி பலன் : 12 ராசிகளுக்கும் என்ன மார்க்?

Post by ChitraGanesan on Wed Aug 17, 2016 5:43 pm

மாக்கோ மார்க்
avatar
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 634
மதிப்பீடுகள் : 234

View user profile http://chitrafunds@gmail.com

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சி பலன் : 12 ராசிகளுக்கும் என்ன மார்க்?

Post by T.N.Balasubramanian on Wed Aug 17, 2016 6:33 pm

ஒரு சில ராசிகள் ,குரு பெயர்ச்சியால் நன்மை பெறுகின்றன . சில ராசிகள் அவ்வளவு நன்மை பெறுவதில்லை . அதனால்தான் முன்னோர்கள் , திருமணப் பொருத்தம் பார்க்கையில் ,வெவ்வேறு நக்ஷத்திர பொருத்தம் பார்த்து மணம் முடிப்பர் . கணவனுக்கோ /மனைவிக்கோ--யாரோ ஒருவருக்கு தீமை நடக்கும் போது மற்றவர் ஜாதக நற்பலனால் -தீமைகள் அதிகம் உணரப்படாது.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21747
மதிப்பீடுகள் : 8199

View user profile

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சி பலன் : 12 ராசிகளுக்கும் என்ன மார்க்?

Post by சிவா on Thu Aug 18, 2016 7:00 am

மகரம் ~ எனக்குத்தான் சூப்பர்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சி பலன் : 12 ராசிகளுக்கும் என்ன மார்க்?

Post by T.N.Balasubramanian on Thu Aug 18, 2016 8:35 am

@சிவா wrote:மகரம் ~ எனக்குத்தான் சூப்பர்
மேற்கோள் செய்த பதிவு: 1219034

தங்களின் பழைய மடல் ஒன்று நினைவுக்கு வருகிறது சிவா !
எந்தன் மகனுக்கும் மகர ராசிதான் .
வெற்றிகள் பல கிட்டட்டும் . வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21747
மதிப்பீடுகள் : 8199

View user profile

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சி பலன் : 12 ராசிகளுக்கும் என்ன மார்க்?

Post by மாணிக்கம் நடேசன் on Thu Aug 18, 2016 9:56 am

ஆஹா, அற்புதம், எனக்கு நூற்றுக்கு தொண்ணூரு. நான் படிக்கும் போது கூட பரிட்சையில நூற்றுக்கு ஐம்பதைக் கூட தாண்டியது கிடையாது. ஆமாங்க இது உண்மை. இப்போ இதுல எனக்கு அதிக மதிப்பெண்கள் கிடைச்சிருக்கு மங்கள மகரத்துக்கு இம்புட்டு மதிப்பா. இதுல ஓர்அதிசயம் என்னான்னா, எங்க மாம அங்களுக்கும் இதே ராசி தான். மாமனாருக்கும் மரமகனுக்கும் இல்ல இல்ல மருமனுக்கும் ஒரே ராசி. என்ன ஒற்றுமை

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4238
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சி பலன் : 12 ராசிகளுக்கும் என்ன மார்க்?

Post by சிவா on Thu Aug 18, 2016 3:53 pm

@மாணிக்கம் நடேசன் wrote:ஆஹா, அற்புதம், எனக்கு நூற்றுக்கு தொண்ணூரு. நான் படிக்கும் போது கூட பரிட்சையில நூற்றுக்கு ஐம்பதைக் கூட தாண்டியது கிடையாது. ஆமாங்க இது உண்மை. இப்போ இதுல எனக்கு அதிக மதிப்பெண்கள் கிடைச்சிருக்கு மங்கள மகரத்துக்கு இம்புட்டு மதிப்பா. இதுல ஓர்அதிசயம் என்னான்னா, எங்க மாம அங்களுக்கும் இதே ராசி தான். மாமனாருக்கும் மரமகனுக்கும் இல்ல இல்ல மருமனுக்கும் ஒரே ராசி. என்ன ஒற்றுமை
மேற்கோள் செய்த பதிவு: 1219048

ஆமாம், அருமையான ஒற்றுமை...
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சி பலன் : 12 ராசிகளுக்கும் என்ன மார்க்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum