ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ரமணியின் கவிதைகள்
 ரமணி

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
 ayyasamy ram

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 ayyasamy ram

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 ayyasamy ram

'ஹலோ' மூலம் திரையுலகில் அறிமுகமாகும் 'ப்ரியதர்ஷன் - லிசி' மகள்
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 ayyasamy ram

20 கிலோமீட்டர் சேஸ் பண்ணி வட மாநில கொள்ளையர்கள் கைது… தமிழக போலீஸ் அசத்தல் !!!
 பழ.முத்துராமலிங்கம்

பரிதாபத்தின் கைகள் -கவிதை
 ayyasamy ram

திரையுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா
 ayyasamy ram

கொடி வீரன் - விமர்சனம்
 ayyasamy ram

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 ayyasamy ram

அசாமில் 100 நாட்களில் 40 யானைகள் பலி
 ayyasamy ram

திரைப்படமாகிறது பால் தாக்கரே வாழ்க்கை வரலாறு
 ayyasamy ram

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
 ayyasamy ram

தினசரி கணக்கு மாதிரி தேர்வு தாளை (விளக்கமான விடைகளுடன்)
 Meeran

Notes from krishoba acadamy online coaching
 Meeran

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!
 பழ.முத்துராமலிங்கம்

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 பழ.முத்துராமலிங்கம்

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் ஆங்கில மொழி எப்படி வந்தது
 பழ.முத்துராமலிங்கம்

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 T.N.Balasubramanian

அறிமுகம் கவிதா மோகன்
 T.N.Balasubramanian

பாட்டி சொல்லும் பழமொழி | பாட்டியின் Scientific Facts
 T.N.Balasubramanian

உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்
 Meeran

குமுதம் & லைஃப் 13/12/17
 Meeran

நாளை பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்:
 ayyasamy ram

கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல்
 ayyasamy ram

திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
 ayyasamy ram

காதலித்ததால் 24 ஆண்டுகள் பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்!
 ayyasamy ram

விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
 SK

சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.!
 SK

விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு
 SK

மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
 SK

ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 SK

இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 SK

வாட்ஸ் அப் கலக்கல் & கார்ட்டூன்
 SK

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 SK

புதிய ஓட்டம் -- கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
 SK

மானிடம் கண்ட (ஏ)மாற்றம் கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

20-வது மாடியில் இருந்து விழுந்த மாடல் அழகி பலி
 SK

தங்க தமிழ் உலா ஜெர்மனி
 பழ.முத்துராமலிங்கம்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்
 ayyasamy ram

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி
 பழ.முத்துராமலிங்கம்

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 T.N.Balasubramanian

யானைகளின் வருகை 98: பிங்கோஸூம், டைகர் திருத்தமும்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
 ayyasamy ram

பாரடைஸ் பேப்பர்ஸ் தகவல்கள்
 ayyasamy ram

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம்

View previous topic View next topic Go down

நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம்

Post by ayyasamy ram on Sat Jul 30, 2016 11:57 am


பெங்களூரு,

கோவா, மராட்டியம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களில்
ஓடும் மகதாயி நதிநீர் பங்கீடு பிரச்சினை தொடர்பான வழக்குகள்
நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கர்நாடக மனு தள்ளுபடி


இந்தநிலையில் பெலகாவி, தார்வார், கதக், பாகல்கோட்டை
ஆகிய 4 மாவட்டங்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்த கர்நாடக
அரசு முடிவு செய்தது. இதற்காக மகதாயி நதியில் இருந்து
கலசா–பண்டூரி கால்வாய் திட்டம் மூலம் மல்லபிரபா நதிக்கு
7.56 டி.எம்.சி. தண்ணீர் கொண்டு வர அனுமதி வழங்க கோரி நடுவர்
மன்றத்தில் கர்நாடக அரசு இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது.

அந்த மனுவை நடுவர் மன்றம் நிராகரித்து கடந்த 27–ந் தேதி
தீர்ப்பளித்தது.

இதை கண்டித்து வட கர்நாடகத்தில் குறிப்பாக கதக், தார்வார்,
பெலகாவி உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுமக்கள் தீவிர
போராட்டம் நடத்தினர். அங்கு அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டு
தீவைக்கப்பட்டன.

நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்கு ஒட்டுமொத்த கர்நாடக மக்களும்,
அரசியல் கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர்.

பஸ்கள்–ஆட்டோக்கள் ஓடாது


இந்த நிலையில் கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ், மகதாயி நடுவர் மன்ற தீர்ப்பை கண்டித்து கர்நாடகத்தில் இன்று(சனிக்கிழமை) முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு பல்வேறு கன்னட சங்கங்கள், கன்னட திரைப்பட வர்த்தக சபை, அரசு ஊழியர் சங்கங்கள், அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம், வாடகை கார்கள் ஓட்டுனர் சங்கம், தனியார் பள்ளிகள் சங்கம் உள்பட நூற்றுக்கணக்கான சங்கங்கள் ஆதரவை தெரிவித்து உள்ளன. இதனால் மாநிலம் முழுவதும் பஸ்கள்–ஆட்டோக்கள் ஓடாது. வணிக நிறுவனங்கள், பள்ளி–கல்லூரிகள் மூடப்படுகின்றன.

அதுபோல் பெங்களூருவிலும் இன்று அரசு, தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்கள் ஓடாது. பெங்களூருவில் ஓட்டல்கள், திரையரங்குகள் மூடப்படும். சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்படுகின்றன. தனியார் பள்ளி–கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி–கல்லூரிகளும் செயல்படாது. கன்னட சங்கங்கள் சார்பில் பெங்களூரு டவுன் ஹாலில் இருந்து சுதந்திர பூங்கா வரை ஊர்வலம் நடத்தப்படுகிறது. இதில் கன்னட திரையுலகினரும் பங்கேற்க உள்ளனர்.

நூதன போராட்டம்


இந்த முழு அடைப்பு போராட்டத்தையொட்டி நேற்று வாட்டாள் நாகராஜ்
தலைமையில் கர்நாடக எம்.பி.க்களை(தேவேகவுடாவை தவிர) ஏலம்
விடும் நூதன போராட்டம் பெங்களூரு மெஜஸ்டிக்கில் நடைபெற்றது.

மகதாயி பிரச்சினையில் கர்நாடகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் எந்தவி
நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கண்டித்து அவர்களை ஏலம்
விடும் நூதன போராட்டம் நடைபெற்றது.

இதில் எம்.பி.க்களின் புகைப்படத்தை வைத்து வாட்டாள் நாகராஜ் ஏலம்
விட்டார். ஏலத்தொகை 25 காசில் இருந்து தொடங்கியது. போராட்டத்தில்
கலந்து கொண்டவர்கள் ஒரு ரூபாய் முதல் 5 ரூபாய் வரை எம்.பி.க்களை
ஏலம் எடுத்து சம்பந்தப்பட்ட எம்.பி.க்களின் புகைப்படத்தை பெற்றுச்
சென்றனர்.
-
முழுஅடைப்பு குறித்து போலீஸ் மந்திரி பரமேஸ்வர் கூறுகையில்,
“அமைதியான வழியில் போராட்டம் நடத்த வேண்டும். பொதுச்
சொத்துகளுக்கு சேதம் விளைவிக்க வேண்டாம். அசம்பாவித சம்பவங்கள்
நடைபெறாமல் தடுக்க மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது ச
ட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.
-
--------------------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32973
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம்

Post by ராஜா on Sat Jul 30, 2016 12:06 pm

இதே போல தாண்ட எங்களுக்கும் இருக்கும் , உங்களுக்கு வந்தா இரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா ?!


தமிழர்களே , பாருங்கள் ஒட்டுமொத்த கர்நாடகமும் ஸ்தம்பித்தது போயிருக்கிறது. ஆனால் இதே நிலை காவிரி பாசன பகுதிகளை ஒட்டிய விவசாயிகளுக்கு வந்தால்

சென்னை தமிழன் , மதுரை தமிழன் , திருநெல்வேலி தமிழன் என்று அவனவன் அவன் வேலையை பார்க்க போயிகிட்டே இருப்பான்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம்

Post by சிவனாசான் on Sat Jul 30, 2016 8:06 pm

தனக்கு வந்தால் தான் தலைவலி தெரியும் என்பார்களே>>>>>>>>>>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2745
மதிப்பீடுகள் : 1001

View user profile

Back to top Go down

Re: நதிநீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் இன்று முழு அடைப்பு போராட்டம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum