ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வாரத்தில் இரண்டு நாட்கள் முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்…!
 ayyasamy ram

ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்…
 ayyasamy ram

நீ…நீயாக இரு….!
 ayyasamy ram

நூல்கள் தேவையா !!!!!
 Senthil Krishna

ஜியோபோன் விநியோக தேதி மாற்றம்; வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!
 ayyasamy ram

மாற்றுதிரனாளிகள் சிறுதொழில் தொடங்கிட உதவி
 கனகராஜ் பசுமைசங்ககிரி

கக்கனுக்குப் பேரன் என்பதே பெரும் பாக்கியம்! - ஹரிசேகரன் ஐ.பி.எஸ்.
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
 ayyasamy ram

இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
 ayyasamy ram

அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
 ayyasamy ram

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 vashnithejas

2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் )
 MANOJMAHE

இது வாட்ஸ் அப் கலக்கல்
 ayyasamy ram

கிரிக்கெட் வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது
 ayyasamy ram

மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
 ayyasamy ram

போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
 ayyasamy ram

மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
 ayyasamy ram

2க்கு மேல் பெற்றால் வேலையில்லை : சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
 ayyasamy ram

மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணம்: டிராய் குறைப்பு
 ayyasamy ram

நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
 ayyasamy ram

ஆங்கில நாவல்கள் தமிழில்
 Saravana2945

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
 T.N.Balasubramanian

என்னவென்று நான் சொல்ல" - முத்துலட்சுமி ராகவன் 1 முதல்3 பாகம் வரை
 ANUSUYA DHURGAIMUTHU

12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
 ayyasamy ram

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
 ayyasamy ram

"தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்?
 Pranav Jain

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Pranav Jain

Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
 Pranav Jain

பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
 ayyasamy ram

சஸ்பென்ஷன்’ பாலம்
 ayyasamy ram

புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
 ayyasamy ram

முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
 ayyasamy ram

பாசனத்திற்கு காவிரி நீரை பயன்படுத்த அரசு தடை
 ayyasamy ram

ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
 ayyasamy ram

மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
 sinjanthu

இலவசமாக தரவிறக்கம் -லட்ஷ கணக்கில் புத்தகங்கள்
 sinjanthu

(REQ) சிவகாமி பர்வம் பாகுபலி பாகம் 1
 sinjanthu

மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
 ayyasamy ram

அரசியலில் விவகாரம் : துணை ஜனாதிபதி, ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் அடுத்தடுத்து ஆலோசனை
 M.Jagadeesan

உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
 ayyasamy ram

தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 T.N.Balasubramanian

சண்முகத்தின் சயாம் மரண ரயில் என்ற நாவல் தேவை
 pon.sakthivel

அறிமுகம்
 T.N.Balasubramanian

முத்துலட்சுமி ராகவன்- " அம்மம்மா கேளடி தோழி" 1 முதல் 5 பாகம் வரை
 ANUSUYA DHURGAIMUTHU

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 மகேந்திரன்

என். சீதாலக்ஷ்மி யின் " மலரும் இதழே" தமிழ் நவல்
 ANUSUYA DHURGAIMUTHU

என் . சீதாலக்ஷ்மி-யின் " அன்பில்லார் எல்லாம் " தமிழ் நவல்
 ANUSUYA DHURGAIMUTHU

ஏபிசிடியே தெரியாது, இவரெல்லாம் நாட்டை எப்படி ஆள்வார்? கமலுக்கு சுப்பிரமணியன் சுவாமி கேள்வி
 M.Jagadeesan

ஜாக்கியின் காதல் பரிசு..!
 vashnithejas

பூவே இளைய பூவே
 ayyasamy ram

இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..
 anikuttan

iசென்னையில் மழை -விளையாட்டில் வெற்றி மழை.-கிரிக்கெட் /பேட்மிண்டன்
 ayyasamy ram

நீ நடக்குமிடமெல்லாம் அழகு ! (ஸ்வீடன் மொழிப்பாடல்)
 sinjanthu

தொடத் தொடத் தொல்காப்பியம்(459)
 Dr.S.Soundarapandian

வீழ்வதற்கல்ல! - கவிதை
 Dr.S.Soundarapandian

தலைவருக்கு எது அலர்ஜி?
 Dr.S.Soundarapandian

முரண்கள்- கவிதை
 Dr.S.Soundarapandian

செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
 Dr.S.Soundarapandian

அழகுத் தேவதை ! (இத்தாலிய நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by முனைவர் ப.குணசுந்தரி on Sun Aug 07, 2016 10:42 pm

சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்
(நற்றிணையிலிருந்து)

உடல் உறுப்புக்களுள் குறைத்தால்  வளரும் சிறப்புடையது மயிர். என்றாலும் அவ்வுறுப்பை  இழப்பதற்கு யாரும் விரும்புவதில்லை. ஏன் பெரியோர் முதல் சிறியோர் வரை ஆணோ? பெணணோ? யாராயினும் அவரவர் நிலைக்கு ஏற்றபடி அவ்வுறுப்பினைப் பேணி பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இதுகுறித்து  இன்று ஊடகங்களில் வரும் விளம்பரங்கள் எத்தனை?
            ஊரார்கண் படட்டும் படட்டும்
            உற்றார்கண் படட்டும் படட்டும்
            ஆடவர்கண் படட்டும் படட்டும்
            உண் கண்ணே பட ட்  டும்
                       
எனச் சீயக்காய்க்கு வரும் விளம்பரம் பெண்ணின் கூந்தலுக்கானது.      (மயிருக்கானது) நீண்டு வளர்ந்த கூந்தலின் (மயிரின்)  பின்னல் அசைவு அழகு. கூந்தலின் வளர்ச்சிக்கு ஆரோக்கியத்திற்கு மீரா  சீயக்காய்  நல்லது என வரும் விளம்பரம் உண்மையில் அழகுதான்.
ம்ருதுவான இயற்கையான தோற்றம் பெற்ற முடிக்காக ........................                     (ஃபாரவர் ( forever)  இருந்தால் அது வாழ்க்கைக்குப் புன்னகை சேர்க்கும் என வரும் கோத்ரேஜ் ஃபாரவர் விளம்பரம் ஆணின் இளநரைக்கு  இயற்கை வண்ணம் ஊட்டுவது தொர்பானது.
மயிர் உதிர்விற்கு, பொடுகுதொல்லைக்கு, இளநரைக்கு,  மயிருக்கு வண்ணம் ஊட்ட, மயிர் நீண்டு வளர, என மயிர் சார்ந்து வரும் விளம்பரம் எண்ணிறந்தவை.
எண்சான் உடம்பிற்குச் சிரசே பிரதானம் என்பர். அச்சிரசிற்கு அணி சேர்ப்பதால் மட்டும்  இவ்வுறுப்பு முக்கியத்துவம் பெறவில்லை. சிரசில் அதன் இருப்பும் வீழ்வும் மாற்றமும் சமூகத்தில் ஏற்படுத்திய மதிப்பீடுகள் தலையாயவை. நந்த வம்சத்து அழிவும் மகாபாரதத்தில் கௌரவர் அழிவும் இராமாயணத்தில் இராவணன் இலங்கை அழிவும் முடிந்த தலைமயிர் அவிழ்ந்து குலைந்ததால் ஏற்பட்டதாக இலக்கியமும் வரலாறும் பதிவு செய்துள்ளன. அவற்றை அறியுமுன் நம் தமிழ் இலக்கியங்களில் இவ்வுறுப்பு சமூக விழுமியம் சார்ந்து எவ்விதம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய என்னுள் ஆர்வம் எழுந்தது.
மயிர் எனும் உறுப்பு இச்சொல்லால் மட்டுமன்றி கூந்தல், ஓதி, கதுப்பு, குரல், குழல், குஞ்சி, முடி, அளகம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுவதை இலக்கியங்களில் காணலாம். இப்பெயர்கள் யாவும் ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவாக அன்றி தனித்தனியாகக் குறிக்கவும் வருகின்றன. என்றாலும் தொடரின் இப்பகுதியில் கூந்தல் எனும் சொல்லாட்சியே  மிகுதியும் பயன்படுத்தப்படுகிறது.

கறுத்து பொலிவுபெற்ற கூந்தல் – இளமை
இரவுக்குறி வரும் தலைவன் தன் வரவு அறிந்தால் வல்வில் ஓரியின் காடுபோல மணம் வீசுவதும் கருமையாய்த் திரண்டு தழைத்ததுமாகிய கூந்தலை உடைய தலைவி மகிழ்ந்து மயங்குவாள். ஆனால் தன் வரவைத் தலைவிக்கு உரைப்பார் இல்லையே என்று தோழி கேட்ப தன் நெஞ்சிற்குச் சொல்லும் போது (நற்.6: 9- 11) இளமைத் தன்மையுடன் இருக்கும் தலைவியின் கூந்தல் நிலையைத் தலைவன் மூலம் பரணர் குறிப்பிடுகிறார். இது போன்று தலைவியின் இளமைத் தன்மையைக் குறிக்க நற்றிணையின் பல்வேறு பாடல்களில் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. அவை அவிழ் இணர்த், தேம்பாய் மராஅம் கமழும் கூந்தல் (நற்.20: 2- 3) வடிக்கொள் கூழை (நற்.23: 2) இருஞ்சூழ் ஓதி(நற்.26: 7- 9) பொம்மல் ஓதி (நற்.;.71:11>129:3>274:6>293:7) தண் நறுங் கதுப்பும் (நற். 84:1) தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி (நற்.85:9) அம்சில் ஓதி (நற். 90:8> 105:7-10>324:8>355:8)  மெல் அம்சில் ஓதி (நற்.370:7) நாறுமயிர்க் கொடிச்சி (நற். 95:8) தேம்கமழ் ஐம்பால் (நற். 100:4) வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளோடு (நற்.139:7) குவளை நாறுங் கூந்தல் (நற். 262:7) இவள்;> ஒலி மென் கூந்தல்(நற்.265: 8-9) ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்;> ஆயமும் (நற். 295:2>3) வான்முகை இரும்போது கமழும் கூந்தல் (நற். 298:10>11) புனை இரங் கதுப்பின் மனையோள்(நற்.336:5) மின் நேர் ஓதி (நற்.339:9) இவளொடு போன்றனவாகும்.

நரை கூந்தல் - முதுமை

தலைவியைத் தலைவனுடன் உடன்போக்கு விடுக்கும் நிலையில் தோழி தலைவனிடம்

அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும்
பொன்நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
நீத்தல் ஓம்புமதி ………………………                                                         (நற். 10: 1-4)

என்று வரும் பாடலில் இளமையில் உன்னை நம்பி இன்று உன்னுடன் வரும் தலைவி தழுவலுக்குப் பயன்படாமல்  முதிர்ந்தாள் என்று கருதி வயது முதிர்ச்சியிலும் அவளைக் கைவிடாது பாதுகாப்பாயாக என்று கூறுமிடத்து வயதின் முதிர்விற்கு உடல் தளர்தலையும் கூந்தல் நரைப்பதனையும் ஓரம்போகியார் குறிப்பிடுகிறார்.
வேறொரு பாடலில் போதனார் எனும் புலவர் உடன்போக்கில் சென்ற தலைவியை நினைத்து இளமையில் அவள் எடுத்த முடிவின் தன்மையை வியக்கும் செவிலியை

அரிநிரைக் கூந்தற் செம்முது செவிலியர் (நற். 110:6)

என மெல்லிய நரைத்த கூந்தலையுடைய முதுமை உடையவள் என்று குறிப்பிடுகிறார்.

புலவர்கள் இளமையையும் முதிர்வையும் குறிக்க மயிரின் நிலையைப் பயன்படுத்தியதைப் போன்று சூழல் மாற்றத்திற்கு ஏற்ப மனிதர்களுக்குள் தோன்றும் பல்வேறு விதமான உணர்வுகளைக் குறிப்பிடவும் பயன்படுத்தியுள்ளனர். இளமையில் நரை முடித்து முறை செய்த கரிகாலன் பற்றிய குறிப்பு பழமொழி நானூற்றில் வருகின்றது. அன்றி இளநரை குறித்த பதிவைக் காணமுடியவில்லை.


கூந்தல் மணத்தல் – மகிழ்ச்சியின் அடையாளம்

முன்பு வினைவயிற் பிரிந்த காலத்தில் என் வருகையை அறிந்த தலைவி அதுவரையில் நீராட்டாது இருந்த தன் கூந்தலைக் கழுவி தூய்மை செய்து சில மலர்களைத் தன் திரண்ட கூந்தலிலே வைக்க அச்சமயத்தில் நான் உள்ளே நுழைந்தேன். என்னைக் கண்ணுற்ற தலைவி மகிழ்ச்சியில் முடித்திருந்த கூந்தல் அவிழ என்னை நோக்கி விரைந்து வந்து அணைத்துக் கொண்டாள்.

……………………………..மெல்லென
மண்ணாக் கூந்தல் மாசுஅறக் கழீஇ
சில்போது கொண்டு பல்குரல் அழுத்திய
அந்நிலை புகுதலின் மெய் வருத்துறாஅ
அவிழ் பூ முடியினள் கவைஇய
மடமா அரிவை மகிழ்ந்து அயர்நிலையே (நற்.42;7-12)

என்று தலைவன் தேர்ப்பாகனிடம் கூறி விரைந்து செல்லுமாறு கூறுவதாகக் கீரத்தனார் குறிக்கின்றார். கூந்தல் அவிழ்ந்து குலைதல் இங்கு மகிழ்ச்சியின் வெளிப்பாடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலத்தனார் எனும் புலவர் தலைவியுடன் தலைவன் கூடியிருக்கும் காலத்தில் மகிழ்ச்சியுடன் இருந்ததைக் காட்ட அவள் கூந்தல் மணமுற்றிருப்பதாகக் கூறுகின்றார்.அப்பாடல் வருமாறு

மாக்கொடி அதிரற் பூவொடு பாதிரித்
தூத்தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள்
சுணங்குஅணி ஆகம் அடைய முயங்கி (நற். 52 ;1– 4)

சல்லியங் குமரனார் தன் பாலைப்பாடலில் பொருள்வயிற் பிரியக் கருதிய தலைவன் தன்நெஞ்சுக்குக்  கூறுவதாக வருவதில் கிள்ளிவளவனின் அம்பர் நகரைச் சூழ்ந்தோடும் அரிசிலாற்றின் தெளிந்த கருமணல் போன்றது இவளுடைய விரிந்ததும் தழைத்து நீண்டதுமான கூந்தல் . அக்கூந்தலில் துயிலும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை இழக்க விரும்பவில்லை எனும்போது

அரிசில் அம் தண் அறல் அன்ன இவள்
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே          (நற். 141 ; 11 – 12)

என்ற கருத்து இடம்பெறுகின்றது. மற்றொருபாடலில்

பொன்னும் மணியும் போலும் யாழ நின்
நன்னர் மேனியும் நாறுஇருங் கதுப்பும்
………………………………………………………………………
யாதெனின் பிரிகோ  - மடந்தை
காதல் தானும் கடலினும் பெரிதே!. (நற்.166)

மேற்குறித்த பாடல்கள்  பொருள்வயிற் பிரிந்தால்  தலைவி மட்டுமல்ல தானும் துன்புறுவேன் என்பதைக் கூறவரும் தலைவனின் கருத்தாக அமைவன.

பெருங்கௌசிகனார் தம் முல்லைப் பாடலொன்றில் வினைமுற்றி வீடு வந்த தலைவன் அவ்வமயம் மழை பொழிவதைக் கண்டு வாழ்த்தியதாகக் கூறுகிறார். அதில் தலைவன் தன் மகிழ்ச்சிக்குக் காரணமான தலைவி கடை குழன்ற தாழ்ந்த கூந்தலை உடையவள் என்று  கூறுவதாக வருகின்றது. (கடைகுழன்ற கூந்தல் என்றால் கூந்தலின் இறுதிப்பகுதி சுருண்டிருப்பதை இது குறிக்கிறது)

வணர்ந்து  ஒலி கூந்தல் மாஅயோளோடு
புணர்ந்துஇனிது நுகர்ந்த சாரல் நல் ஊர்                 (நற். 139; 7- 8)

நக்கீரர் பாடலில் தலைவியின் தாழ்ந்து நீண்டதாக இருக்கும் கூந்தல் மழை வீழ்ச்சிக்கு உவமை சொல்லப்படுகிறது.
…………………………………………………..நின்
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு     ( நற். 197 :5>6)

இப்பாடலில் இக்காலத்தில் பெண்கள் நீண்ட முடியினராக இருந்துள்ளதனை அறியமுடிகிறது.

கூந்தல் புதுமணம் – தலைவி தலைவனுடன் கொண்டுள்ள நட்பறிய உதவுதல்

திருமணத்திற்கு முன்பு தலைவி தலைவனுடன் நட்பு கொண்டிருக்கும் காலத்து அவள் தோற்றம் பொலிவு பெறுவதுடன் கூந்தலும் புதிதாய் மணக்கிறது. இதைத் தொடக்கத்தில் அறியும் தாய் தலைவியிடம் கேட்கிறாள். தலைவி ஏதும் அறியாதவள் போன்று அன்றைக்கு விலகியதும் பிறகு தலைவனுடன் உடன்போக்கில்  ஈடுபட்டவுடன் தாய் தன் ஐயத்தை மீண்டும் நினைத்துப் பார்ப்பதாக வரும் பாடலில்

நறிய நாறும் நின் கதுப்பு என்றோளே (நற். 143 :10)

எனும் கருத்து இடம்பெற்றுள்ளது. தலைவியின் கூந்தலில் மணம் புதிதாக இருந்ததை முன்பே அறிந்தேன் பாதுகாக்கவில்லையே என்று கவலைப்படுவதாக வருகின்றது. மற்றொரு பாடலில் தோழி தலைவனிடம் தாய் எங்களிடம் தோன்றியுள்ள மாற்றத்தினை அறிந்து பெருமூச்செறிந்தாள் நாங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இற்செறிக்கப்படலாம் என்று வருகின்றது. அப்பாடல் வருமாறு

                      நெறிபடு கூழைக் கார்முதிர்பு இருந்த
வெறி கமழ் கொண்ட நாற்றமும் சிறிய
பசலை பாய்தரு நுதலும் நோக்கி
வறிது உகு நெஞ்சினள் பிறிது ஒன்று சுட்டி
வெய்ய உயிர்த்தனள் யாயே –
ஐய! – அஞ்சினம் அளியம் யாமே! (நற். 368:5-10)

தலைவியின் செறிந்த கருமையான நறுமணம் கமழும் கூந்தலில் புதுமணம் கமழ்வதைத் தாய் அறிந்துகொண்டாள் என்று கூறப்படுகிறது. தலைவியின் கூந்தல் புதிய மணம் பெறுவதனாலேயே அவள் தலைவனுடன் நட்பு கொண்டிருக்கிறாள் என்று கூறிவிட முடியுமா? ஆம் கூறிவிடலாம்  ஏனென்றால் தலைவி செல்லும் இடங்கள் வரையறைக்கு உட்பட்டவை. வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த நம் முன்னோர்கள் அதைத் தெளிவாக தமது நூல்களில் வரையறுத்துக் கூறியிருக்கிறார்கள்.
avatar
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 94
மதிப்பீடுகள் : 91

View user profile

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by ChitraGanesan on Mon Aug 08, 2016 10:43 am

தொடருங்கள் பெண்களின் கூந்தலுக்கு மணமுண்டோ
avatar
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 634
மதிப்பீடுகள் : 234

View user profile http://chitrafunds@gmail.com

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by singai on Mon Aug 08, 2016 11:55 am

மிகவும் சிறப்பாக இருந்தது. ஒரு வேண்டுகோள். ஊடகங்களில் வரும் வாசகர்கள் அனைவரும் ஒன்றுபோல் இருக்க வாய்ப்பில்லை. வேறுபட்ட இரசனையுடன் அணுகுவார்கள். இலக்கிய ஆக்கங்கள் கதை போல் படிக்க முடியாது. படித்து புரிந்து உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அதனால் நீண்ட உங்கள் தொடரை சிறு பகுதியாக வெளியிட்டால் படிப்பவர்கள் கருத்திடவும்,சந்தேகம் கேட்கவும் வழி பிறக்கும்.

பாலையில் நக்கீரனின், -நின் தாழ்ந்தொலி கதுப்பின் வீழ்ந்த காலொடு- என்பதில் மழை வீழ்ச்சி என்பதை மழையினாலேற்பட்ட நீர்வீழ்ச்சி என படிக்கலாமா? ஏனெனில் மலையில் இருந்து விழும் மழை நீர் வீழ்ச்சி நீண்ட கூந்தலைப் போல் இருப்பதைக் காண முடிகிறது.அல்லது பாலை-வனப்- நிலப் பாடல் என்பதால் மலை இல்லா ,மழை நீர் வீழ்ச்சி எனக் கொள்ளலாமா?

தொடக்கத்தில் உள்ள உண் கண்ணே என்பதை உன் கண்ணே எனவும்,எண்சான் என்பதை எண் சாண் எனவும் படிக்கலாமா அல்லது வேறு விளக்கம் உண்டா?

நன்றி.தொடருங்கள்.
avatar
singai
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 106
மதிப்பீடுகள் : 125

View user profile

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by Dr.S.Soundarapandian on Tue Aug 09, 2016 9:48 pm

மீண்டும் சந்திப்போம்
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3816
மதிப்பீடுகள் : 1993

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by முனைவர் ப.குணசுந்தரி on Thu Aug 11, 2016 12:43 am

தோழமைக்கு வணக்கம்.

தாங்கள் எழுப்பியுள்ள பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டோ? எனும் கேள்விக்கு உரிய என்
பதிலினைக் குறுந்தொகை நூலின் தரவுகள் கொண்டு எழுதியிருக்கிறேன்.

பொதுவாக வியர்க்கும் எவ்வகை உயிரினத்திற்கும் அதன் வாழிடம் மற்றும் உணவுமுறை சார்ந்து உடலில் மணம் வீசுவது என்பது இயல்பு. அம்மணம் விரும்பக் கூடியதா? இல்லையா? என்பதை அவ்வுயிரினத்தோடு சேர்ந்து வாழுகிற பிறிதொரு உயிரினத்தைச் சார்ந்ததாக அமையும்.

இச்சூழலில் அனைவரும் விரும்பக் கூடிய மணம் என்பது இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்துவதனாலேயோ அல்லது இயற்கை மற்றும் செயற்கைப் பொருட்களைப் பயன்படுத்துவதனாலேயோ கிடைக்கிறது. குறுந்தொகைப் பதிவுகள் அனைத்தும் பெண்களின் கூந்தல் மலர்களாலும் மண்ணாலும் பலவகை நறுமணப் பொருட்களாலும் மணமூட்டப்படுவதையே குறிப்பிடுகின்றன. ஆகையினால் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் இருக்கிறதா? இல்லையா? என்றுஎழுப்பப்படும் கேள்வி எனக்கு அர்த்தமற்றதாகவே தோன்றுகிறது.

இது குறித்த விளக்கமான பதிவைத் தங்களுக்கு நான் வேறொரு தொடரில் தருகின்றேன்.

தோழமைக்கு நன்றி.


avatar
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 94
மதிப்பீடுகள் : 91

View user profile

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by முனைவர் ப.குணசுந்தரி on Thu Aug 11, 2016 1:36 am

தோழமைக்கு வணக்கம்.

தங்கள் பாராட்டுதலுக்கு நன்றி. தாங்கள் குறிப்பிட்டது போன்று இனி தொடரைச் சிறுசிறு பகுதிகளாகவே தருகின்றேன். ஏனென்றால் தங்களைப் போன்றோர் எழுப்பக் கூடிய வினாக்கள்தான் என் தேடுதலை விரிவுபடுத்தும்.

தாங்கள் இப்பகுதியில் இடம்பெற்றிருக்கும்

பாலையில் நக்கீரனின், -நின் தாழ்ந்தொலி கதுப்பின் வீழ்ந்த காலொடு- என்பதில் மழை வீழ்ச்சி என்பதை மழையினாலேற்பட்ட நீர்வீழ்ச்சி என படிக்கலாமா? ஏனெனில் மலையில் இருந்து விழும் மழை நீர் வீழ்ச்சி நீண்ட கூந்தலைப் போல் இருப்பதைக் காண முடிகிறது.அல்லது பாலை-வனப்- நிலப் பாடல் என்பதால் மலை இல்லா ,மழை நீர் வீழ்ச்சி எனக் கொள்ளலாமா?

என்று தாங்களே கேள்வியையும் கேட்டு விளக்கமும் அளித்துள்ள முறை எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

உண்மையில் - நின் தாழ்ந்தொலி கதுப்பின் வீழ்ந்த காலொடு என்ற தொடருக்கு உனது தாழ்ந்து தழைந்த கூந்தலைப் போல இறங்கிய மழை வீழ்ச்சியோடு என்பது பொருள்.

இதில் வரும் வீழ்ந்தகால் என்பது மழைபெய்ய இறங்கும் நீர்வீழ்ச்சியைக் குறிக்கும்.

ஆகவே தாங்கள் முன் குறித்தது போன்று மலையில் இருந்து விழும் மழை நீர் வீழ்ச்சியே பெண்களின் நீண்ட கூந்தலுக்கு ஒப்பு காட்டப்படுள்ளது.

மேலும் தாங்கள் எழுப்பியுள்ள தொடக்கத்தில் உள்ள உண் கண்ணே என்பதை உன் கண்ணே எனவும்,எண்சான் என்பதை எண் சாண் எனவும் படிக்கலாமா அல்லது வேறு விளக்கம் உண்டா?

என்று கேட்டிருக்கின்றீர்கள் உண்மையில் தாங்கள் சுட்டிக்காட்டியது போன்றுதான் ( உன் கண்ணே, எண் சாண் ) படிக்க வேண்டும். உன் - உண் எனவும் சாண் - சான் எனவும் பிழையாக வந்துள்ளது.

சொற்பிழை என்று சுட்டிக்காட்டாமல் அதற்கு வேறு விளக்கங்களும் இருக்கக் கூடுமோ என்று கருதிய தங்களின் என் மீதான மதிப்பீட்டிற்கு மனங்கனிந்த நன்றி.

இனிவரும என் எழுத்துக்களின் மீதான கவனத்தை அதிகப்படுத்திக் கொள்கிறேன்.

தோழமைக்கு நன்றிavatar
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 94
மதிப்பீடுகள் : 91

View user profile

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by முனைவர் ப.குணசுந்தரி on Thu Aug 11, 2016 1:38 am

ஆகவே தாங்கள் முன் குறித்தது போன்று மலையில் இருந்து விழும் மழை நீர் வீழ்ச்சியே பெண்களின் நீண்ட கூந்தலுக்கு ஒப்பு காட்டப்படுள்ளது. (காட்டப்பட்டுள்ளது.)
avatar
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 94
மதிப்பீடுகள் : 91

View user profile

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by M.Jagadeesan on Thu Aug 11, 2016 10:06 am

நற்றிணையில் ஒவ்வொரு பாடலாக எடுத்துக்கொண்டு விளக்கம் கொடுத்திருந்தால் , சிறப்பாக இருந்திருக்கும் .

தங்களுடைய சீரிய முயற்சி தொடரட்டும் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4741
மதிப்பீடுகள் : 2309

View user profile

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by ChitraGanesan on Thu Aug 11, 2016 10:28 am

நன்றி
avatar
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 634
மதிப்பீடுகள் : 234

View user profile http://chitrafunds@gmail.com

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by singai on Thu Aug 11, 2016 11:14 am

நற்றிணைக்கும் மற்ற சங்க இலக்கியங்களுக்கும் பலர் பொருள் குறி விளக்கம் தந்துள்ளார்கள். இப்படி ஒரு பொருளை வைத்து புதிய முறையில் விளக்கம் தருவதும் நன்றாகவே உள்ளது.
தொடர்ந்து எழுதுங்கள். பின்னர் ஒன்றாக மின்நூலாக தொகுத்து வெளியிடலாம்.இலவசமாக மின் நூல் ஆக்க இணையங்கள் பல வசதி செய்து தருகின்றன.

[You must be registered and logged in to see this image.]

மின் நூலாக தொகுக்கும் பொது பொருளுக்கு உரிய படத்தையும் சேர்க்கலாம்.
avatar
singai
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 106
மதிப்பீடுகள் : 125

View user profile

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by M.Jagadeesan on Thu Aug 11, 2016 1:15 pm

ChitraGanesan wrote:தொடருங்கள் பெண்களின் கூந்தலுக்கு மணமுண்டோ
[You must be registered and logged in to see this link.]

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் கிடையாது என்பதை அவ்வையார் பின்வரும் புறநானூற்றுப் பாடல் மூலம் குறிப்பாகச் சொல்லுகிறார்.

சிறியகட் பெறினே, எமக்கீயும் மன்னே;
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே;
சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே;
பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே;
என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும் மன்னே;
அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே;
நரந்தம் நாறும் தன் கையால்
புலவு நாறும் என்தலை தைவரும் மன்னே;

அவ்வையும் , அதியனும் கொண்ட நட்பு உலகறிந்தது . அவன் அன்பு மிகுதியால் அவ்வையின் புலால் மணம் வீசுகின்ற தலையைத் தடவிக் கொடுப்பானாம் .

இதிலிருந்து என்ன தெரிகிறது ? தலை முடியை நன்கு நாம் பராமரிக்காவிட்டால் அது துர்நாற்றம் வீசத் தொடங்கிவிடும் என்பது தெரிகிறதல்லவா ? ஆகவே கூந்தல் மணம் என்பது , அதன்மீது நாம் தடவுகின்ற வாசனைத் திரவியங்கள் மற்றும் பூக்களின் மணமேயாகும் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4741
மதிப்பீடுகள் : 2309

View user profile

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by ராஜா on Thu Aug 11, 2016 1:51 pm

ஆரம்பிச்சாச்சா தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி....

அன்பு மலர் அன்பு மலர்


[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.] உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை [You must be registered and logged in to see this link.] படிக்கவும்.
[You must be registered and logged in to see this image.] ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத்[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப்[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] என்னைத் தொடர்பு கொள்ள[You must be registered and logged in to see this link.]
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30667
மதிப்பீடுகள் : 5530

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by விமந்தனி on Fri Aug 12, 2016 10:41 am

தொடர் மிகவும் அருமை. தொடர்ந்து எழுதுங்கள். உங்களது எளிய விளக்கங்கள் நற்றிணையின் சுவையினை நன்கு உணரமுடிகிறது. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]
avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by விமந்தனி on Fri Aug 12, 2016 10:57 am

singai wrote:மிகவும் சிறப்பாக இருந்தது. ஒரு வேண்டுகோள். ஊடகங்களில் வரும் வாசகர்கள் அனைவரும் ஒன்றுபோல் இருக்க வாய்ப்பில்லை. வேறுபட்ட இரசனையுடன் அணுகுவார்கள். இலக்கிய ஆக்கங்கள் கதை போல் படிக்க முடியாது. படித்து புரிந்து உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அதனால் நீண்ட உங்கள் தொடரை சிறு பகுதியாக வெளியிட்டால் படிப்பவர்கள் கருத்திடவும்,சந்தேகம் கேட்கவும் வழி பிறக்கும்.
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]
avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

சமூக விழுமியம் : தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து) தொடர்ச்சி

Post by முனைவர் ப.குணசுந்தரி on Sat Aug 13, 2016 1:39 am

நற்றிணையின் தொடர்ச்சி

அவள் தன்னை அலங்கரித்துக் கொள்ளப் பயன்படுத்தும் பொருட்கள் அவள் நிலம் சார்ந்ததாகவே இருக்கும். அவள் தந்தையோ தமையனோ வேற்றுப்புலம் சென்றாலும் அங்கிருந்து பூ கொண்டுவந்து கொடுத்ததாகப் பதிவில்லை. ஆகையினால் அவள் கூந்தல் மணம் வேறுபட்டிருப்பதற்குக் காரணம் தலைவன் தன் நிலத்துப் பூவினையோ அல்லது அவள் நிலத்துப் பூவினையோ தலைவிக்குச் சூட்டுதலே ஆகும். இதற்குரிய பதிவுகளும் நற்றிணையில் இடம்பெற்றுள்ளன. ஆகவே திருமணத்திற்கு முன்பு பெண்ணின் கூந்தல் வேறுபட மணம் வீசினால் அதற்கு ஒரே காரணம் அவள் வேற்று நிலத்து ஆடவனுடன் நட்பு கொண்டிருக்கிறாள் என்று கருத இடமளித்தது.

தலைவன் தலைவிக்குப் பூச் சூட்டி மகிழ்பவன் என்பதை நம்பிகுட்டுவன் எனும் புலவர் நெய்தல் பாடலில் இப்படி குறித்துள்ளார்.

இருங்கழி பொருத ஈர வெண்மணல்
மாக்கொடி அடும்பின் மா இதழி அலரி
கூந்தல் மகளிர் கோதைக் கூட்டும்
காமர் கொண்கன் நாம் வெங்கேண்மை ( நற். 145: 1-4)

இப்பாடலில் தலைவி ஒருவனுடன் நட்புகொண்டிருக்கிறாள் என்பதை அறியும் அன்னை, தலைவியை வெளிச் செல்லாதவாறு வீட்டுக் காவலில் வைக்கின்றாள் (இற்செறித்தல்). அதனை அறியாது தலைவன் இரவில் தலைவியைக் காணவந்து சிறைப்புறத்து ( வீட்டிற்கு அருகாமையில் உள்ள இடம்) நிற்கின்றான். அதை அறியும் தோழி, தலைவன் தலைவியை விரைந்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவன் காதில் விழும்படி கூறுவதில் இக்கருத்து இடம்பெறுகின்றது. அதாவது,

நெய்தல் நிலத்து மணற்பரப்பில் படர்ந்து வளரும் தன்மையுடையது வலிய அடும்பங் கொடி. அதில் பூத்திருக்கும் பெரிய இதழுடைய மலர்கள் பெண்கள் தங்கள் கூந்தலில் சூடும் மாலைக்கு உரியனவாகும். அப்பூக்களைக் கண்டோர் விரும்பும் தன்மையுடையவனான நெய்தல் நிலத்திற்குரிய தலைவன் தான் விரும்பிய தலைவியின் கூந்தலில் சூட்டி மகிழ்ந்திருக்கின்றான். இந்நிகழ்வு தலைவி தலைவனுடன் நட்பு கொண்டிருந்த போது நடந்திருக்கிறது.
இன்று இற்செறிக்கப்பட்டுள்ள போது தலைவனுடன் தலைவிக்கு நட்பு இல்லாத சூழலில் அன்னை தலைவனுடன் தலைவி நட்புகொண்டிருப்பது போலவே அறமில்லாமல் பேசுகிறாள். அவன் எங்கே இருக்கிறான் என்றும் கேட்பாள் உன்னைப் பற்றி எனக்குத்தானே தெரியும் என்று கூறுவதாகப் பாடலில் வருகின்றது.

இதிலிருந்து பெண்கள் தங்கள் கூந்தலில் சூடும் பூக்களுள் ஒன்று அடும்பங்கொடிப் பூ என்பதும் அப்பூவினைத் தலைவன் தான் விரும்பும் பெண்ணுக்குச் சூட்டி மகிழ்வான் என்பதும் தெரியவருகின்றது.

பெண்களுக்குப் பூவினைத் தான் சூடிக் கொள்வதைக் காட்டிலும் தான் விரும்பும் தலைவன் தனக்குச் சூட்டிவிடுவதில்தானே இரட்டிப்பு மகிழ்ச்சி இன்றும்.

கருவூர் கோசனார் எனும் புலவர் பாடலிலும் தலைவன் தலைவிக்குப் பூச் சூட்டவரும் நிகழ்வு பதிவுசெய்யப்படுகிறது.

ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணத்திற்கு முன்பு இருக்கும் சமூகக் கடமை என்பது வேறு திருமணத்திற்குப் பிறகுள்ள கடமை என்பது வேறு. ஆதலின் தலைவன் தன் வாழ்க்கைத் துணையாக ஒருபெண்ணைத் தேர்ந்தெடுத்துவிட்டால் சமூகத்தில் அவனுக்குப் பொறுப்பு கூடுகிறது.

தலைவன் திருமண வாழ்வில் தாம் செய்ய வேண்டிய அறங்களுக்குப் பொருளாதாரம் அவசியம் என்பதை உணர்ந்திருப்பதால் அதைப் பெறுவதற்காக திருமணத்திற்கு முன்பே பொருள் தேடிச் செல்ல நினைக்கிறான். பிரிந்து செல்லும் முன் விரும்பும் பெண்ணிடம் இல்லறக்கடமையை எடுத்துக்கூறுவதுடன் இப்பிரிவு தற்காலிகமானது. உறுதியாகக் கார்காலத்தில் திரும்பி வந்து அக்காலத்தில் பூக்கும் தேன்சிந்தும் மலர்களை உன் அழகிய நீலமணி போன்ற கூந்தலில் சூடுவேன் எனக்காகக் காத்திரு என்று அவள் மனம் ஏற்கும்படியாகச் சத்தியம் செய்து பிரிந்து செல்கின்றான். அப்பாடல்

அரும்பு அவிழ் அலரிச் சுரும்பு உண் பல் போது
அணிய வருதும் நின் மணிஇருங் கதுப்பு என
எஞ்சா வஞ்சினம் நெஞ்சு உணக் கூறி
மைசூழ் வெற்பின் மலை பல இறந்து (நற். 214: 4 – 7)
என்பது.
தலைவன் சத்தியம் செய்து திரும்பி வருவேன் என்று குறிப்பிட்டுச் சென்ற கார்காலம் வந்துவிட்டது. தலைவன் வரவில்லை. அவன்வரத் தாமதமாவதை உணர்ந்து அச்சத்துடன் சத்தியம் செய்திருக்கிறானே கார்பருவத்தை அவன் ஒருவேளை அறியவில்லையோ சத்தியத்தை மீறினால் அவனுக்குத் துன்பம் வந்துவிடுமே என்று தலைவி அவன் உரைத்துச் சென்ற மொழிகளை நினைத்துப் பார்ப்பதாக இப்பாடல் வருகின்றது.

தலைவன் தலைவிக்குப் பூச்சூடி மகிழ்வதால்தான் தலைவியின் மகிழ்வோடு அவளுடைய கூந்தலும் மணம் பெறுகிறது.
avatar
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 94
மதிப்பீடுகள் : 91

View user profile

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by singai on Sat Aug 13, 2016 12:13 pm

படித்து முடித்த போது ..............
அரிவை கூந்தலின்நறியவு முளவோநீ யறியும் பூவே; என்ற குறிஞ்சிப் பாடல் வரியையும் ,

நரந்த நாறுங் குவையிருங் கூந்தல்;
யானயந் துறைவோ டேம்பாய் கூந்தல்

என்ற குறுந்தொகை பாடல் வரிகளையும் இத்தருணத்தில் எண்ணிப் பார்க்கிறேன்.

நன்றி.
avatar
singai
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 106
மதிப்பீடுகள் : 125

View user profile

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by singai on Sat Aug 13, 2016 12:21 pm

தனித்தனி பதிவாக இல்லாமல்,ஒரே தலைப்பில் தொடர்ந்து எழுதினால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன். தொடர்ந்து படிப்பதற்கும் இலகுவாக இருக்கும்.
மற்றவர்கள் கருத்து என்னவோ அறியேன்?
avatar
singai
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 106
மதிப்பீடுகள் : 125

View user profile

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by விமந்தனி on Sat Aug 13, 2016 3:29 pm

தொடர் பதிவுகளை ஒரு திரியின் கீழேயே தொடர்ந்து பதிவிடுங்கள். அப்பொழுது தான் படிப்பவர்களுக்கும் தொடர்ந்து வருவது சற்று சுலபமாகவும், சுவாரசியம் குறையாமலும் இருக்கும். ஆகவே இத்திரியினை உங்களுடைய முந்தைய திரியுடன் இணைத்து விடுகிறேன். இத்தலைப்பில் தொடரும் பதிவுகளை இனி இதிலேயே பகிர்ந்துகொள்ளுங்கள். புன்னகை


[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]
avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by ராஜா on Sat Aug 13, 2016 3:47 pm

விமந்தனி wrote:தொடர் பதிவுகளை ஒரு திரியின் கீழேயே தொடர்ந்து பதிவிடுங்கள். அப்பொழுது தான் படிப்பவர்களுக்கும் தொடர்ந்து வருவது சற்று சுலபமாகவும், சுவாரசியம் குறையாமலும் இருக்கும். ஆகவே இத்திரியினை உங்களுடைய முந்தைய திரியுடன் இணைத்து விடுகிறேன். இத்தலைப்பில் தொடரும் பதிவுகளை இனி இதிலேயே பகிர்ந்துகொள்ளுங்கள். புன்னகை
அருமை அக்கா நன்றி


[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.] உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை [You must be registered and logged in to see this link.] படிக்கவும்.
[You must be registered and logged in to see this image.] ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத்[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப்[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] என்னைத் தொடர்பு கொள்ள[You must be registered and logged in to see this link.]
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30667
மதிப்பீடுகள் : 5530

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by M.Jagadeesan on Sat Aug 13, 2016 4:00 pm

singai wrote:படித்து முடித்த போது ..............
அரிவை கூந்தலின்நறியவு முளவோநீ யறியும் பூவே; என்ற குறிஞ்சிப் பாடல் வரியையும் ,
[You must be registered and logged in to see this link.]

இது குறுந்தொகை வரிகளல்லவா ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4741
மதிப்பீடுகள் : 2309

View user profile

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by ChitraGanesan on Sat Aug 13, 2016 5:16 pm

பின்னூட்டம் எழுதுங்க
avatar
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 634
மதிப்பீடுகள் : 234

View user profile http://chitrafunds@gmail.com

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by singai on Sat Aug 13, 2016 5:19 pm

ஆமாம் குறுந்தொகையில் குறிஞ்சி நிலப் பாடலாக வருகிறது. மற்ற இரண்டு வரிகளும் நினைவில் இருந்த வரிகள். எந்த இடம் என்று சரியாக ஞாபகம் வரவில்லை என்பதால் தனியாக தந்திருந்தேன்.
avatar
singai
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 106
மதிப்பீடுகள் : 125

View user profile

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by T.N.Balasubramanian on Sat Aug 13, 2016 6:59 pm

அருமையான அர்த்தமுள்ள பங்களிப்புகள் .
தொடர்ந்து அனைவரும் பங்கு கொள்ளவும் .

நவீன உலகில் , முடி குறுக்கி ,
பூவை வைக்க முடியில்லாது ,
பூவைகள் எண்ணிக்கை முடிவில்லாது இருக்கிறதே .சோகம் சோகம்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20482
மதிப்பீடுகள் : 7842

View user profile

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by M.Jagadeesan on Sat Aug 13, 2016 7:51 pm

உயர்ந்த இடத்தில் இருக்கும்போது
...உலகம் உன்னை மதிக்கும் - உன்
நிலைமை கொஞ்சம் இறங்கிவந்தால்
...நிழலும் கூட மிதிக்கும் !

என்ற கண்ணதாசனின் வரிகள் மனிதனுக்கு மட்டுமல்ல : மயிருக்கும் பொருந்தும் . தலையிலே இருக்கின்ற வரையில்தான் மயிருக்கு மதிப்பு ; உதிர்ந்துவிட்டால் அவ்வளவுதான் ! கூட்டித் தள்ளி குப்பையில் சேர்த்துவிடுவோம் .நமக்கு அழகுசேர்த்த மயிரென்று , உதிர்ந்த மயிரை யாரும் பெட்டியில் வைத்துப் பூட்டிப் பாதுகாப்பதில்லை . மனித வாழ்க்கையும் இப்படித்தான் .
செல்வமும் , வறுமையும் சகடக்கால்போல மேலது கீழா , கீழது மேலா மாறி மாறி வரும் .  " செல்வம் " தன் பெயருக்கு ஏற்ப ஓரிடத்தில் நில்லாமல் " செல்வோம் " என்று சொல்லிக்கொண்டே இருக்குமாம் . சேரும்காலம் வந்துவிட்டால் , செல்வம் சேர்ந்துகொண்டே இருக்கும். கடலிலே கொட்டினாலும் , கரையாது பெருகிக்கொண்டே இருக்கும் . அப்படிப்பட்ட செல்வம் , போகும் காலம் என்று வந்துவிட்டால் , எப்படிக் கட்டிக் காத்தாலும் நம்மைவிட்டுப் போய்விடும் .
வாழ்வாங்கு வாழ்ந்தவன் வறுமையின் பாற்படுவது வெட்கப்படவேண்டிய விஷயமல்ல . அந்த வறுமை எப்படி வந்தது என்பதே கேள்வி . கொடுத்துக் கொடுத்து ஒருவன் ஓட்டாண்டியானால் அது தவறல்ல ! குடித்துக் குடித்து ஒருவன் ஓட்டாண்டியானால்தான் தவறு . வேசி வீட்டிற்குச் சென்று காசைத் தொலைத்தால்தான் தவறு . கோவலனுக்கு ஏற்பட்ட வறுமை நாணத்தக்கது . அறஞ்சாரா நல்குரவு .
சலம்புணர் கொள்கைச் சலதியோடு ஆடிக் குலம்தரு வான்பொருள் குன்றம் தொலைத்தவன் . அவனுக்கு ஏற்பட்ட வறுமையைக் கண்டு வெட்கப்படுகிறான் . அவனுடைய வாயினாலேயே " இலம்பாடு நாணுத்தரும்
எனக்கு " என்று கூறுகிறான் . இத்தகு மாந்தரை " நிலையின் இழிந்த மாந்தர் " என்று அய்யன் வள்ளுவர் குறிப்பிடுகிறார் . அவர்கள் தலையின் இழிந்த மயிருக்குச் சமானவர்கள் என்பது ஐயனின் கருத்து.

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை .

என்பது ஐயனின் வாக்கு .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4741
மதிப்பீடுகள் : 2309

View user profile

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by முனைவர் ப.குணசுந்தரி on Sun Aug 14, 2016 11:53 am

தோழமைக்கு வணக்கம்
சமூக விழுமியம் : மயிர் எனும் இத்தொடரில் சமூகத்தில் காலந் தோறும் அவ்வுறுப்பிற்கு வழங்கப்பட்டு வந்த மரியாதையினை, அவ்வுறுப்பின்வழி உணர்த்தப்பட்ட மதிப்பீடுகளைத் தெரிந்துகொண்டு அவற்றை முறைப்படி பதிவுசெய்யவேண்டும் என்பதற்காகச் செவ்விலக்கியங்களில் இருந்து தொடங்கியிருக்கிறேன்.
முதலில் ஆய்வுக்கட்டுரையாக இல்லாமல் தொடராக வெளியிட விரும்பி இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். நற்றிணை என்றால் அதன் 400 பாடல்களில் இவ்வுறுப்பு குறித்து என்னென்ன பதிவுசெய்யப்பட்டிருக்கிறதோ அவற்றை முதலில் தொகுத்து தரவுகளின் அடிப்படையில் தலைப்பிட்டு எழுதுகிறேன். ஆகையினால் பாடல்களின் துணை இல்லாமல் எழுதுவதில்லை.
நற்றிணையில் தொடங்கி இன்றைய இலக்கியங்கள் வரை ஒவ்வொரு இலக்கியத்திலும் உள்ள முழுமையான தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும் என்பதே என் அவா. தங்களைப் போன்ற அறிஞர்களின் கருத்து என் தேடுதலைச் செம்மைப்படுத்தும். இறைவனும் துணைநிற்பாராக.
avatar
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 94
மதிப்பீடுகள் : 91

View user profile

Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum