ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 மூர்த்தி

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by முனைவர் ப.குணசுந்தரி on Sun Aug 07, 2016 10:42 pm

First topic message reminder :

சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்
(நற்றிணையிலிருந்து)

உடல் உறுப்புக்களுள் குறைத்தால்  வளரும் சிறப்புடையது மயிர். என்றாலும் அவ்வுறுப்பை  இழப்பதற்கு யாரும் விரும்புவதில்லை. ஏன் பெரியோர் முதல் சிறியோர் வரை ஆணோ? பெணணோ? யாராயினும் அவரவர் நிலைக்கு ஏற்றபடி அவ்வுறுப்பினைப் பேணி பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இதுகுறித்து  இன்று ஊடகங்களில் வரும் விளம்பரங்கள் எத்தனை?
            ஊரார்கண் படட்டும் படட்டும்
            உற்றார்கண் படட்டும் படட்டும்
            ஆடவர்கண் படட்டும் படட்டும்
            உண் கண்ணே பட ட்  டும்
                       
எனச் சீயக்காய்க்கு வரும் விளம்பரம் பெண்ணின் கூந்தலுக்கானது.      (மயிருக்கானது) நீண்டு வளர்ந்த கூந்தலின் (மயிரின்)  பின்னல் அசைவு அழகு. கூந்தலின் வளர்ச்சிக்கு ஆரோக்கியத்திற்கு மீரா  சீயக்காய்  நல்லது என வரும் விளம்பரம் உண்மையில் அழகுதான்.
ம்ருதுவான இயற்கையான தோற்றம் பெற்ற முடிக்காக ........................                     (ஃபாரவர் ( forever)  இருந்தால் அது வாழ்க்கைக்குப் புன்னகை சேர்க்கும் என வரும் கோத்ரேஜ் ஃபாரவர் விளம்பரம் ஆணின் இளநரைக்கு  இயற்கை வண்ணம் ஊட்டுவது தொர்பானது.
மயிர் உதிர்விற்கு, பொடுகுதொல்லைக்கு, இளநரைக்கு,  மயிருக்கு வண்ணம் ஊட்ட, மயிர் நீண்டு வளர, என மயிர் சார்ந்து வரும் விளம்பரம் எண்ணிறந்தவை.
எண்சான் உடம்பிற்குச் சிரசே பிரதானம் என்பர். அச்சிரசிற்கு அணி சேர்ப்பதால் மட்டும்  இவ்வுறுப்பு முக்கியத்துவம் பெறவில்லை. சிரசில் அதன் இருப்பும் வீழ்வும் மாற்றமும் சமூகத்தில் ஏற்படுத்திய மதிப்பீடுகள் தலையாயவை. நந்த வம்சத்து அழிவும் மகாபாரதத்தில் கௌரவர் அழிவும் இராமாயணத்தில் இராவணன் இலங்கை அழிவும் முடிந்த தலைமயிர் அவிழ்ந்து குலைந்ததால் ஏற்பட்டதாக இலக்கியமும் வரலாறும் பதிவு செய்துள்ளன. அவற்றை அறியுமுன் நம் தமிழ் இலக்கியங்களில் இவ்வுறுப்பு சமூக விழுமியம் சார்ந்து எவ்விதம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய என்னுள் ஆர்வம் எழுந்தது.
மயிர் எனும் உறுப்பு இச்சொல்லால் மட்டுமன்றி கூந்தல், ஓதி, கதுப்பு, குரல், குழல், குஞ்சி, முடி, அளகம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுவதை இலக்கியங்களில் காணலாம். இப்பெயர்கள் யாவும் ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவாக அன்றி தனித்தனியாகக் குறிக்கவும் வருகின்றன. என்றாலும் தொடரின் இப்பகுதியில் கூந்தல் எனும் சொல்லாட்சியே  மிகுதியும் பயன்படுத்தப்படுகிறது.

கறுத்து பொலிவுபெற்ற கூந்தல் – இளமை
இரவுக்குறி வரும் தலைவன் தன் வரவு அறிந்தால் வல்வில் ஓரியின் காடுபோல மணம் வீசுவதும் கருமையாய்த் திரண்டு தழைத்ததுமாகிய கூந்தலை உடைய தலைவி மகிழ்ந்து மயங்குவாள். ஆனால் தன் வரவைத் தலைவிக்கு உரைப்பார் இல்லையே என்று தோழி கேட்ப தன் நெஞ்சிற்குச் சொல்லும் போது (நற்.6: 9- 11) இளமைத் தன்மையுடன் இருக்கும் தலைவியின் கூந்தல் நிலையைத் தலைவன் மூலம் பரணர் குறிப்பிடுகிறார். இது போன்று தலைவியின் இளமைத் தன்மையைக் குறிக்க நற்றிணையின் பல்வேறு பாடல்களில் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. அவை அவிழ் இணர்த், தேம்பாய் மராஅம் கமழும் கூந்தல் (நற்.20: 2- 3) வடிக்கொள் கூழை (நற்.23: 2) இருஞ்சூழ் ஓதி(நற்.26: 7- 9) பொம்மல் ஓதி (நற்.;.71:11>129:3>274:6>293:7) தண் நறுங் கதுப்பும் (நற். 84:1) தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி (நற்.85:9) அம்சில் ஓதி (நற். 90:8> 105:7-10>324:8>355:8)  மெல் அம்சில் ஓதி (நற்.370:7) நாறுமயிர்க் கொடிச்சி (நற். 95:8) தேம்கமழ் ஐம்பால் (நற். 100:4) வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளோடு (நற்.139:7) குவளை நாறுங் கூந்தல் (நற். 262:7) இவள்;> ஒலி மென் கூந்தல்(நற்.265: 8-9) ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்;> ஆயமும் (நற். 295:2>3) வான்முகை இரும்போது கமழும் கூந்தல் (நற். 298:10>11) புனை இரங் கதுப்பின் மனையோள்(நற்.336:5) மின் நேர் ஓதி (நற்.339:9) இவளொடு போன்றனவாகும்.

நரை கூந்தல் - முதுமை

தலைவியைத் தலைவனுடன் உடன்போக்கு விடுக்கும் நிலையில் தோழி தலைவனிடம்

அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும்
பொன்நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
நீத்தல் ஓம்புமதி ………………………                                                         (நற். 10: 1-4)

என்று வரும் பாடலில் இளமையில் உன்னை நம்பி இன்று உன்னுடன் வரும் தலைவி தழுவலுக்குப் பயன்படாமல்  முதிர்ந்தாள் என்று கருதி வயது முதிர்ச்சியிலும் அவளைக் கைவிடாது பாதுகாப்பாயாக என்று கூறுமிடத்து வயதின் முதிர்விற்கு உடல் தளர்தலையும் கூந்தல் நரைப்பதனையும் ஓரம்போகியார் குறிப்பிடுகிறார்.
வேறொரு பாடலில் போதனார் எனும் புலவர் உடன்போக்கில் சென்ற தலைவியை நினைத்து இளமையில் அவள் எடுத்த முடிவின் தன்மையை வியக்கும் செவிலியை

அரிநிரைக் கூந்தற் செம்முது செவிலியர் (நற். 110:6)

என மெல்லிய நரைத்த கூந்தலையுடைய முதுமை உடையவள் என்று குறிப்பிடுகிறார்.

புலவர்கள் இளமையையும் முதிர்வையும் குறிக்க மயிரின் நிலையைப் பயன்படுத்தியதைப் போன்று சூழல் மாற்றத்திற்கு ஏற்ப மனிதர்களுக்குள் தோன்றும் பல்வேறு விதமான உணர்வுகளைக் குறிப்பிடவும் பயன்படுத்தியுள்ளனர். இளமையில் நரை முடித்து முறை செய்த கரிகாலன் பற்றிய குறிப்பு பழமொழி நானூற்றில் வருகின்றது. அன்றி இளநரை குறித்த பதிவைக் காணமுடியவில்லை.


கூந்தல் மணத்தல் – மகிழ்ச்சியின் அடையாளம்

முன்பு வினைவயிற் பிரிந்த காலத்தில் என் வருகையை அறிந்த தலைவி அதுவரையில் நீராட்டாது இருந்த தன் கூந்தலைக் கழுவி தூய்மை செய்து சில மலர்களைத் தன் திரண்ட கூந்தலிலே வைக்க அச்சமயத்தில் நான் உள்ளே நுழைந்தேன். என்னைக் கண்ணுற்ற தலைவி மகிழ்ச்சியில் முடித்திருந்த கூந்தல் அவிழ என்னை நோக்கி விரைந்து வந்து அணைத்துக் கொண்டாள்.

……………………………..மெல்லென
மண்ணாக் கூந்தல் மாசுஅறக் கழீஇ
சில்போது கொண்டு பல்குரல் அழுத்திய
அந்நிலை புகுதலின் மெய் வருத்துறாஅ
அவிழ் பூ முடியினள் கவைஇய
மடமா அரிவை மகிழ்ந்து அயர்நிலையே (நற்.42;7-12)

என்று தலைவன் தேர்ப்பாகனிடம் கூறி விரைந்து செல்லுமாறு கூறுவதாகக் கீரத்தனார் குறிக்கின்றார். கூந்தல் அவிழ்ந்து குலைதல் இங்கு மகிழ்ச்சியின் வெளிப்பாடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலத்தனார் எனும் புலவர் தலைவியுடன் தலைவன் கூடியிருக்கும் காலத்தில் மகிழ்ச்சியுடன் இருந்ததைக் காட்ட அவள் கூந்தல் மணமுற்றிருப்பதாகக் கூறுகின்றார்.அப்பாடல் வருமாறு

மாக்கொடி அதிரற் பூவொடு பாதிரித்
தூத்தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள்
சுணங்குஅணி ஆகம் அடைய முயங்கி (நற். 52 ;1– 4)

சல்லியங் குமரனார் தன் பாலைப்பாடலில் பொருள்வயிற் பிரியக் கருதிய தலைவன் தன்நெஞ்சுக்குக்  கூறுவதாக வருவதில் கிள்ளிவளவனின் அம்பர் நகரைச் சூழ்ந்தோடும் அரிசிலாற்றின் தெளிந்த கருமணல் போன்றது இவளுடைய விரிந்ததும் தழைத்து நீண்டதுமான கூந்தல் . அக்கூந்தலில் துயிலும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை இழக்க விரும்பவில்லை எனும்போது

அரிசில் அம் தண் அறல் அன்ன இவள்
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே          (நற். 141 ; 11 – 12)

என்ற கருத்து இடம்பெறுகின்றது. மற்றொருபாடலில்

பொன்னும் மணியும் போலும் யாழ நின்
நன்னர் மேனியும் நாறுஇருங் கதுப்பும்
………………………………………………………………………
யாதெனின் பிரிகோ  - மடந்தை
காதல் தானும் கடலினும் பெரிதே!. (நற்.166)

மேற்குறித்த பாடல்கள்  பொருள்வயிற் பிரிந்தால்  தலைவி மட்டுமல்ல தானும் துன்புறுவேன் என்பதைக் கூறவரும் தலைவனின் கருத்தாக அமைவன.

பெருங்கௌசிகனார் தம் முல்லைப் பாடலொன்றில் வினைமுற்றி வீடு வந்த தலைவன் அவ்வமயம் மழை பொழிவதைக் கண்டு வாழ்த்தியதாகக் கூறுகிறார். அதில் தலைவன் தன் மகிழ்ச்சிக்குக் காரணமான தலைவி கடை குழன்ற தாழ்ந்த கூந்தலை உடையவள் என்று  கூறுவதாக வருகின்றது. (கடைகுழன்ற கூந்தல் என்றால் கூந்தலின் இறுதிப்பகுதி சுருண்டிருப்பதை இது குறிக்கிறது)

வணர்ந்து  ஒலி கூந்தல் மாஅயோளோடு
புணர்ந்துஇனிது நுகர்ந்த சாரல் நல் ஊர்                 (நற். 139; 7- 8)

நக்கீரர் பாடலில் தலைவியின் தாழ்ந்து நீண்டதாக இருக்கும் கூந்தல் மழை வீழ்ச்சிக்கு உவமை சொல்லப்படுகிறது.
…………………………………………………..நின்
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு     ( நற். 197 :5>6)

இப்பாடலில் இக்காலத்தில் பெண்கள் நீண்ட முடியினராக இருந்துள்ளதனை அறியமுடிகிறது.

கூந்தல் புதுமணம் – தலைவி தலைவனுடன் கொண்டுள்ள நட்பறிய உதவுதல்

திருமணத்திற்கு முன்பு தலைவி தலைவனுடன் நட்பு கொண்டிருக்கும் காலத்து அவள் தோற்றம் பொலிவு பெறுவதுடன் கூந்தலும் புதிதாய் மணக்கிறது. இதைத் தொடக்கத்தில் அறியும் தாய் தலைவியிடம் கேட்கிறாள். தலைவி ஏதும் அறியாதவள் போன்று அன்றைக்கு விலகியதும் பிறகு தலைவனுடன் உடன்போக்கில்  ஈடுபட்டவுடன் தாய் தன் ஐயத்தை மீண்டும் நினைத்துப் பார்ப்பதாக வரும் பாடலில்

நறிய நாறும் நின் கதுப்பு என்றோளே (நற். 143 :10)

எனும் கருத்து இடம்பெற்றுள்ளது. தலைவியின் கூந்தலில் மணம் புதிதாக இருந்ததை முன்பே அறிந்தேன் பாதுகாக்கவில்லையே என்று கவலைப்படுவதாக வருகின்றது. மற்றொரு பாடலில் தோழி தலைவனிடம் தாய் எங்களிடம் தோன்றியுள்ள மாற்றத்தினை அறிந்து பெருமூச்செறிந்தாள் நாங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இற்செறிக்கப்படலாம் என்று வருகின்றது. அப்பாடல் வருமாறு

                      நெறிபடு கூழைக் கார்முதிர்பு இருந்த
வெறி கமழ் கொண்ட நாற்றமும் சிறிய
பசலை பாய்தரு நுதலும் நோக்கி
வறிது உகு நெஞ்சினள் பிறிது ஒன்று சுட்டி
வெய்ய உயிர்த்தனள் யாயே –
ஐய! – அஞ்சினம் அளியம் யாமே! (நற். 368:5-10)

தலைவியின் செறிந்த கருமையான நறுமணம் கமழும் கூந்தலில் புதுமணம் கமழ்வதைத் தாய் அறிந்துகொண்டாள் என்று கூறப்படுகிறது. தலைவியின் கூந்தல் புதிய மணம் பெறுவதனாலேயே அவள் தலைவனுடன் நட்பு கொண்டிருக்கிறாள் என்று கூறிவிட முடியுமா? ஆம் கூறிவிடலாம்  ஏனென்றால் தலைவி செல்லும் இடங்கள் வரையறைக்கு உட்பட்டவை. வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த நம் முன்னோர்கள் அதைத் தெளிவாக தமது நூல்களில் வரையறுத்துக் கூறியிருக்கிறார்கள்.
avatar
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 94
மதிப்பீடுகள் : 91

View user profile

Back to top Go down


Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by முனைவர் ப.குணசுந்தரி on Wed Aug 31, 2016 11:14 pm

மகிழ்ச்சி ஐயா. கேள்வியைத் தொடருங்கள்.
avatar
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 94
மதிப்பீடுகள் : 91

View user profile

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by முனைவர் ப.குணசுந்தரி on Wed Aug 31, 2016 11:48 pm

பதிற்றுப்பத்தின் தொடர்ச்சி

மகளிர் கூந்தல் பாயலாதல்

கூந்தலைப் பயன்படுத்துவதற்கு உரிமை உடையவராகப் பெண்கள் தத்தமக்குரிய தலைமகனைக் கருதினர் என்பதைப் பாடல் பதிவுகள் காட்டினாலும் அத்தலைமக்கள் எவ்வெவ் காலங்களில் எவ்வெவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தனர் என்பதையும் பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

பரணர் எனும் புலவர், மன்னன் மகளிரின் விரிந்த மெல்லிய கூந்தலாகிய படுக்கையில் படுத்துறங்கும் நாட்களினும் பாசறையில் துயிலாமல் விழித்திருக்கும் நாட்கள் பல என்று குறிப்பிடுகின்றார். இதன்மூலம் செங்குட்டுவன் தன் வாழ்வில் தலையாயச் செல்வமாகக் கருதியது படையினை என்பதும் மிகவும் விரும்பியது போரினை என்பதும் தெரியவருகிறது. அப்பாடலடி

உருப்பு அற நிரப்பினை ஆதலின் சாந்து புலர்பு
வண்ணம் நீவி வகை வனப்புற்ற
விரிமென் கூந்தல் மெல் அணை வதிந்து
கொல்பிணி திருகிய மார்பு கவர் முயக்கத்து
பொழுது கொள் மரபின் மென்பிணி அவிழ
எவன் பல கழியுமோ – பெரும! பல் நாள்
பகை வெம்மையின் பாசறை மரீஇ
பாடு அரிது இயைந்த சிறுதுயில் இயலாது
…………………………………………………….
(பதிற். ஐந்தாம் பத்து. 50 : 16 – 26)

என்பதாகும். இதற்கு முன்பு நற்றிணையின் பாடல் ஒன்றில் பொருள்வயிற் பிரியக் கருதிய தலைவன் தன் நெஞ்சு நோக்கிக் கூறுவதில் கிள்ளிவளவனின் அம்பர் நகரைச் சூழ்ந்தோடும் அரிசிலாற்றின் தெளிந்த கருமணல் போன்றது இவளுடைய விரிந்ததும் தழைத்து நீண்டதுமான கூந்தல். அக்கூந்தலில் துயிலும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை இழக்க விரும்பவில்லை என்று கூறுவதில் பொருளைக் காட்டிலும் தலைவியின் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி பெரிது என்ற கருத்து பெறப்படுகிறது. அப்பாடல்

அரிசில் அம் தண் அறல் அன்ன, இவள்
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே
(நற். 141: 11 – 12)
என்பதாகும்.(சமூக விழுமியம்: மயிர் தொடர் – 1 நற்றிணையிலிருந்து)

இவற்றிலிருந்து மனைவியின் கூந்தலைப் பாயலாக்கி படுத்துறங்குவது பொதுவில் கூறப்பட்டாலும் மன்னன் , குடிமகன் வாழ்வில் அந்நிகழ்வு பதிவு செய்யப்பட்ட நோக்கத்திற்கு ஏற்ப பொருள் வேறுபட்டமைவதை அறியமுடிகிறது.

தொடரும்......
avatar
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 94
மதிப்பீடுகள் : 91

View user profile

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by முனைவர் ம.ரமேஷ் on Thu Sep 01, 2016 6:31 am

அழகிய தொடர்... தொடர்ந்து நீளட்டும்...
avatar
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2156
மதிப்பீடுகள் : 233

View user profile http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by M.Jagadeesan on Thu Sep 01, 2016 8:41 am

" மயிர் " என்பது ஓர் அமங்கலமான சொல் . இச்சொல் சங்க இலக்கியங்களில் வந்துள்ளதா? திருக்குறளில் இச்சொல் வந்துள்ளது.

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை. ( மானம் - 964 )

இக்குறளில் " மயிரனையர் " என்ற சொல்லுக்குப் பதிலாக " முடியனையர் " என்ற சொல்லைப் பெய்தாலும் வெண்பா இலக்கணம் தளை தட்டாது . ஏன் அச்சொல்லைப் பயன்படுத்தவில்லை ? வள்ளுவர் காலத்தில்
" முடி " என்னும் சொல் வழக்கிலில்லையா ? " முடி " என்னும் சொல் மன்னனின் மணிமுடியை மட்டுமே குறித்ததா ?

" முடி திருத்தகம் " என்று இக்காலத்தில் விளம்பரப் பலகையில் பார்க்கிறோம். இந்த " முடி " என்னும் சொல் "மயிர் " கருத்திலே எப்போதிருந்து வழக்கில் வந்தது ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4881
மதிப்பீடுகள் : 2343

View user profile

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by முனைவர் ப.குணசுந்தரி on Thu Sep 01, 2016 10:49 pm

தொடர் – 3 பதிற்றுப்பத்தின் தொடர்ச்சி

செங்குட்டுவன் நாட்டுப் பெண்களின் கூந்தல்

கடல்பிறக்கோட்டிய குட்டுவனின் செல்வ மகிழ்ச்சியைப் பாடவரும் பரணர் தன் மூன்றாம் பாடலில் அவன் நாட்டுப் பெண்களைப் பற்றிக் கூறும்போது

கவரி முச்சி, கார்விரி கூந்தல்
ஊசல் மேவல், சேயிழை மகளிர்
(பதிற். ஐந்தாம் பத்து. 43 : 1 – 2)
என்று குறிப்பிடுகின்றார். இப்பாடலில் வரும் கவரி முச்சி என்பதற்கு உரையில் கவரி அணிந்த உச்சிக் கொண்டையினையும் மேகத்தைப் போன்ற விரிந்த கூந்தலையும் ஊசல் விளையாடுதலையும் செய்யும் செவ்விய ஆபரணங்களையும் உடைய மகளிர் என்று முனைவர் அ. ஆலிஸ் பொருள் தருகிறார். அதே நேரத்தில் பாடலின் விளக்கப்பகுதியில் கவரி என்பது கவரிமானின் மயிர் போலும் கூந்தல் என்றாயிற்று. முச்சியாகிய கூந்தல். முச்சி – கொண்டை, கார் – கருமை முற்றும் கருமை விரிந்த கூந்தல் என்பதனால் கார்விரி கூந்தல் என்றார் என்று விளக்கம் தருகின்றார். (பதிற்றுப்பத்து பக் . 137 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)

தமிழாய்வாளர் திரு க. கதிரவன் அவர்கள் கவரி என்பதற்கு அது பெண்களின் தலை அலங்காரத்துக்குப் போலி மயிராகப் பயன்பட்டது என்றும் ஊஞ்சலில் ஆடும் பெண்கள் தம் கூந்தலோடு கவரியை இணைத்துப் பின்னியிருந்தமையை இப்பாடல் உணர்த்துவதாகவும் குறிப்பிட்டு இன்றைக்குப் பெண்கள் பயன்படுத்தும் போலிமயிர் சவரி எனப்படுகிறது. யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளையின் அகராதி சவரி என்னும் சொல்லுக்கு கவரி என்றே பொருளுரைக்கிறது என்பதையும் உரிய ஆதாரங்களுடன் தெளிவாக எடுத்துரைக்கின்றார். அவர் எடுத்துக்காட்டும் பொருளே ஏற்புடையதாக இருக்கின்றது. (காண்க பக். 41 கவரி கருமை காளமேகம் இராசகுணா பதிப்பகம்)

தமிழாய்வாளர் திரு க. கதிரவன் அவர்களின் கவரி கருமை காளமேகம் எனும் தமிழாய்வுக் கட்டுரைத் தொகுப்பினை வாசிக்கத் தவறியிருந்தால் ஒருவேளை முனைவர் அ . ஆலிஸ் அவர்களின் உரையில் இடம்பெறும் பொதுவில் சொல்லப்பட்ட பொருளை ஏற்றுக்கொண்டு விளக்கப்பகுதியின் கருத்துமுரணைச் சுட்டிக்காட்டுவதோடு இத்தொடர் பயணித்திருக்கும்.

அரிசில்கிழார் எட்டாம் பத்தின் மூன்றாம் பாடலில் உயர்திணைமகளிர், ஆன்றோர் ……. மகளிர் என இருவகை மகளிர் பற்றிப் பதிவு செய்கின்றார். அவர்களில் உயர்திணை மகளிரை

……………….கூந்தல் ஒள் நுதல் பொலிந்த
நிறம்திகழ் பாசிழை உயர்திணை மகளிரும்
(பதிற். எட்டாம் பத்து 73: 4 – 5)
என்று குறிப்பிடுகின்றார். கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பகுதி பாடலில் சிதைந்துள்ளது. அதுபோன்று ஆன்றோர் எனும் வார்த்தையைத் தொடர்ந்து வரும் அடியும் சிதைந்திருப்பதால் அச்சொல்லிற்கான பொருளை முழுமையாக அறியமுடியவில்லை. ஆகையினால் மற்றவரைப் பற்றிய பதிவு இருந்தாலும் கூந்தலுடன் தொடர்புப்படுத்த இயலாததனால் இங்குத் தவிர்க்கப்படுகிறது. எனினும் முனைவர் அ.ஆலிஸ் அவர்கள் தம் உரையில் உயர்திணை மகளிரை குலமகளிர் என்றும் ஆன்றோர் என வருவதைப் பரத்தையர் என்றும் குறிப்பிடுகின்றார். இது ஆய்விற்குரியது.


தொடரும்..............

avatar
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 94
மதிப்பீடுகள் : 91

View user profile

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by M.Jagadeesan on Fri Sep 02, 2016 6:17 am

முனைவர் அவர்களுக்கு ,

கவரிமான் என்று ஒரு மான் உண்டு ; அது தன் மயிர்த் திரளிலிருந்து ஒன்றை இழந்தாலும் உயிர் வாழாது என்று சிலர் கூறுவர். இது தவறான கருத்து.

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின். ( மானம் - 969 )

பொருள் :
========
குளிர்காப்பாம் மயிரை நீங்கினால் ,குளிர் தாங்கமுடியாது உயிரை விடும் கவரிமா என்னும் விலங்கினைப்போல , சிலர் மானக்கேடு வருமெனின் தம் உயிரை விட்டுவிடுவர் .

எனவே கவரிமா என்பதே " கவரிமான் "ஆயிற்று .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4881
மதிப்பீடுகள் : 2343

View user profile

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by T.N.Balasubramanian on Fri Sep 02, 2016 6:51 am

கவரிமா என்ற விலங்கினைப் போல் எனில் ........
கவரிமா வும் கவரிமானும் வெவ்வேறா ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21118
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by M.Jagadeesan on Fri Sep 02, 2016 7:04 am

ஐயா !

கவரிமான் என்ற ஒரு மான் இனமே கிடையாது. அதன் உடலிலிருந்து ஒரு மயிர் நீங்கினால் உயிரை விட்டுவிடும் என்பதெல்லாம் கற்பனைச் செய்திகள் . அன்னம் என்ற பறவை , பாலையும் நீரையும் கலந்து வைத்தால் , அவற்றைத் தனித்தனியே பிரித்துவிடும் என்பதும் தவறான கருத்து. அதுபோலத்தான் இதுவும் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4881
மதிப்பீடுகள் : 2343

View user profile

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by முனைவர் ப.குணசுந்தரி on Wed Sep 21, 2016 3:49 pm

ஐயா வணக்கம்.
மயிர் எனும் சொல் பதினெண் மேற்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு மற்றும் காப்பியங்களிலும் இடம்பெற்றிருக்கின்றது. மேலும் மயிர் என்பது அமங்கலச் சொல் என்பது போன்ற பதிவை இதுவரை நான் பார்க்கவில்லை. படிப்பின் தொடர்ச்சியில் பதிவு கிடைத்தால் எழுதுகிறேன்.

தொடர்ந்து தாங்கள் குறளை எடுத்துக்காட்டி கேட்டிருக்கும் கேள்விகள்

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை. ( மானம் - 964 )

இக்குறளில் " மயிரனையர் " என்ற சொல்லுக்குப் பதிலாக " முடியனையர் " என்ற சொல்லைப் பெய்தாலும் வெண்பா இலக்கணம் தளை தட்டாது . ஏன் அச்சொல்லைப் பயன்படுத்தவில்லை ?

வள்ளுவர் காலத்தில்

" முடி " என்னும் சொல் வழக்கிலில்லையா ? " முடி " என்னும் சொல் மன்னனின் மணிமுடியை மட்டுமே குறித்ததா ?

" முடி திருத்தகம் " என்று இக்காலத்தில் விளம்பரப் பலகையில் பார்க்கிறோம். இந்த " முடி " என்னும் சொல் "மயிர் " கருத்திலே எப்போதிருந்து வழக்கில் வந்தது ? – என்பன.

வள்ளுவர் காலத்தில் முடி எனும் சொல் திருக்குறளின்வழி ஆய்வுசெய்தால் அச்சொல் தனித்து வரவில்லை. அச்சொல்லோடு தொடர்படைய சொற்கள் வழக்கில் இருந்தன என்பதற்கு எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு,

இதனை யிதனா லிவன்முடிக்கு மென்றாய்ந் - 517:1

முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர் - 640:1

முடிந்தாலும் பீழை தரும். – 658:2

சூழ்ச்சி முடிவு துணிவெய்த லத்துணிவு – 671:1

முடிவு மிடையூறு முற்றியாங் கெய்தும் – 676:1

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் – 908:1

சூழாமற் றானே முடிவெய்துந் தங்குடியைத் – 1024:1

மேல் எடுத்துக்காட்டப்பட்டிருக்கும் அடிகளில் இருந்து நிறைவேற்றுதல் நிறைவேறாமை என்ற பொருளில் முடியுடன் தொடர்புடைய சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதை அறியமுடிகிறதே அன்றி மயிர் எனும் பொருளில் எடுத்தாளப்படவில்லை என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

அடுத்து, முடி எனும் சொல் மயிர் எனும் பொருளில் எப்போதிருந்து வழக்கில் வந்தது என்பதைப் பதிவுகள்வழி கண்டறிய கால அவகாசம் தேவை. இக் கேள்வி என் ஆய்வோடு தொடர்புடையது என்பதனால் உறுதியாகத் தங்களுக்குப் பதில் எழுதுகிறேன்.

தொடர்ந்து கேள்வி எழுப்புங்கள். நன்றி.

avatar
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 94
மதிப்பீடுகள் : 91

View user profile

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by முனைவர் ப.குணசுந்தரி on Wed Sep 21, 2016 5:36 pm

ஐயா வணக்கம்.

ரமணியன் ஐயா அவர்கள் வினவிய கவரிமாவும் கவரிமானும் வெவ்வேறா ? என்ற கேள்விக்குரிய பதிலாக

கவரிமா என்பதே " கவரிமான் "ஆயிற்று என்ற தங்களின் விளக்கம் சரியானதே. கவரிமான் என்ற ஒருவிலங்கு இல்லை.அப்படியென்றால் கவரிமா என்பது எத்தகைய விலங்கு என்பதை அறிவதற்கான சிறுவிளக்கம்.

கவரி என்பது குட்டைக்கால்களுடன் குட்டைக் கழுத்தும் குட்டைக் காதும் குட்டை வாலும் கொண்ட எருமைக் குடும்பத்தைச் சார்ந்த விலங்கு. இதன் தோல் முழுவதும் மயிர் அடர்ந்திருக்கும். ………….. உடலில் வியர்வைச் சுரப்பிகள் மிகக் குறைவு. இவ்விலங்கு இந்தியா, நேபாள், சீனா, திபெத் ஆகிய நாடுகளில் இமயமலைப் பகுதிகளில் காணப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளின் பனிப்படர்ந்த மலைச்சிகரங்களிலும் காணப்படுகிறது. ……… கவரி ஆங்கிலத்தில் YAK எனவும் YARK எனவும் அழைக்கப்படுகிறது. இதன் விலங்கியல் பெயர் Bos primigenius Taurus, Bos primigenius indicus  என்பனவாகும் . இமயமலை அடிவாரத்தில் வசிக்கம் கவரியைப் பழக்கி வீட்டு விலங்காக வளர்க்கும் வழக்கம் இமயமலை அடிவார மக்களிடத்தில் இன்றும் காணப்படுகிறது. திபெத்தியர்களும் சீனர்களும் காஷ்மீர்க்காரர்களும் கவரியை வீட்டு விலங்காக வளர்க்கின்றனர். கவரியின் பாலை உணவாகக்கொள்கின்றனர். கவரி வாகனமாகவும் வண்டியிழுக்கவும் பயன்படுகிறது. … …………  இன்றைக்கும் கவரியிலிருந்து பெறப்படும் கவரி மயிர்  விசிறிகளும் போலி மயிரும் உலகளாவ விற்பனை செய்யப்படுகின்றன.

கவரியிலிருந்து பெறப்படும் போலிமயிர்   Yak hair எனவும் ஒவ்வாமை காரணமாக கவரிமயிர் ஒத்துக் கொள்ளாதவர்களுக்கென கவரிமயிர் போன்று போலியாகத் தயாரிக்கப்படும் போலிமயிர் Yaki hair எனவும் ஆங்கிலத்தில் வழங்கப்படுகிறது .

கவரிக்கு வியர்வைச் சுரப்பிகள் மிகவும் குறைவு. அதன் உடல் அடர்ந்த மூவகை மயிர்த் தொகுதியைக் கொண்டிருக்கிறது. இதனால் குளிர்காலத்தில்  கவரியின் உடலில் வெப்பம் தக்கவைக்கப்படுகிறது. இதே தகவமைப்பால் கோடைகாலத்தில் அதிக வெப்பத்தைக் கவரியால் தாங்க முடிவதில்லை. கவரியால் தாங்க முடிந்த வெப்பம் 16 டிகிரிதான். கோடைகாலத்தில் இமயமலையில் கவரி நீர்நிலைக்கு அருகில் அமைந்துள்ள சோலைகளில் அதிகமாய் உணவுண்ணாது அசையாது இருந்து காலத்தைக் கடத்தும். பதிற்றுப்பத்தும் புறநானூறும் நரந்தம் உண்டு நீர்நிலைக்கு அருகில் ஓய்ந்து படுத்திருக்கும் கவரிக் கூட்டத்தைத் தங்கள் பாடலடிகளில் குறித்திருக்கின்றன. (தகவலுக்கு நன்றி : கவரி கருமை காளமேகம் தமிழாய்வுக் கட்டுரைகள்  - க. கதிரவன் , இராசகுணா பதிப்பகம்)

நன்றி.
avatar
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 94
மதிப்பீடுகள் : 91

View user profile

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by முனைவர் ப.குணசுந்தரி on Wed Sep 21, 2016 7:16 pm

தொடர்ச்சி

கூந்தல் விறலியர்

மன்னனின் கொடைச் சிறப்பின் பதிவைக் கண்டிருக்கிறோம். அதுபோல அவனிடம் பரிசு பெற்ற பாணர், பாடினியர், கூத்தர், விறலியர் ஆகியோர் பெரும் பரிசுப்பொருட்களைத் தாம் மட்டுமே பயன்படுத்தாமல் தம் சுற்றத்தவருக்கு வழங்கி வாழும் முறைமையை அறிந்திருக்கிறோம். ஆனால் பரிசில்பெற்று வந்த பாணன் ஒருவன் தம்முடன் இருப்பவரை நோக்கித் தம்மை நாடிவருகின்றவர்க்கு உணவு சமைக்கக் கூறுவது குறித்த பதிவு ஒன்றினைக் காணும் வாய்ப்பினைப் பதிற்றுப்பத்தே வழங்கியுள்ளது. பாடவும் ஆடவும் செய்கின்ற விறலியர் உணவு சமைப்பதைக் கூறும் பாடல் இது.

உண்மின் கள்ளே! அடுமின் சோறே!
எறிகதிற்றி! ஏற்றுமின் புழுக்கே!
வருநர்க்கு வரையாது பொலங்கலம் தெளிர்ப்ப,
இருள்வணர் ஒலிவரும் புரிஅவிழ் ஐம்பால்,
ஏந்து கோட்டு அல்குல், முகில்நகை, மடவரல்
கூந்தல் விறலியர்! வழங்குக அடுப்பே!

(பதிற். இரண்டாம் பத்து 18:1 – 6)

இப்பாடலின் பெயர் கூந்தல் விறலியர் என்பது. இதற்கு விளக்கம் கூறும் பகுதியில் உரையாசிரியர் முனைவர் அ. ஆலிஸ்

வந்தார்க்குச் சோறு விரைவில் தருதல் பொருட்டு அடுப்புத் தொழிலுக்குரியர் அல்லாதவரும் தம் கலைத்திறமையைக் காட்டிப் பரிசில் பெறும் வரிசை மகளிருமான மகளிரும் அடுப்புத் தொழிலினை மேற்கொள்க என்றதனால் இச்சிறப்புக் கருதி இப்பாடலுக்குக் கூந்தல் விறலியர் என்பது பெயராயிற்று என்பர். ( பதிற்றுப்பத்து பக். 37 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)

கலைத்திறமையைக் காட்டும் விறலியர் இருண்ட வளைந்த தழைத்தல் பொருந்திய ஐந்து பகுதிகளையுடைய கூந்தலை உடையவர்களாக இருந்தனர் என்பதை அறியமுடிகிறது. (ஐந்து பகுதிகளை உடைய கூந்தல் என்பது குழல், அளகம், கொண்டை, பனிச்சை, துஞ்சை என்பன). தேடினால் இதுபோன்ற இலக்கியப் பதிவுகளை அறிந்துகொள்ள முடியும்.

பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தில் பரணர் தம் பாடலில் வண்டுகள் ஒலிக்கின்ற கூந்தலைக் கொண்டையாக முடிந்திருக்கின்ற விறலியர் தம் பேரியாழில் பாலைப்பண்ணை அமைத்து மன்னனுக்கு ஆதரவாகப் பகைவர்க்குப் பணியாத இயல்பையுடைய உழிஞைத் திணையைப் புகழ்ந்து பாடுவர் என்று விறலியரின் பாடல் திறமையைக் குறிப்பிடுகின்றார். அப்பாடல் வருமாறு

வண்டுகள் கூந்தல் முடிபுனை மகளிர்
தொடைபடு பேரியாழ் பாலை பண்ணி
பணியா மரபின் உழிஞை பாட

(பதிற். ஐந்தாம் பத்து 46:4 – 6)

காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் எனும் பெண்பாற் புலவர் ஆறாம்பத்தின் நான்காம் பாடலில் விறலியர் மன்னனின் வீரத்தைப் புகழ்ந்து பாடுவதாகக் கூறும் போது அவர்களின் தோற்றம் எப்படி இருந்தது என்பது பற்றியும் குறிப்பிடுகின்றார்.

வீங்கு இறைத் தடைஇய அமை மருள் பணைத்தோள்
ஏந்து எழில் மழைக்கண், வனைந்து வரல் இளமுலை
பூந்துகில் அல்குல் தேம்பாய் கூந்தல்
மின்இழை விறலியர் நின்மறம் பாட

(பதிற். ஆறாம்பத்து 54:3 – 6)

வருணனையில் விறலியரின் தோள், கண், மார்பு, அல்குல் எனத் தொடரும் வரிசையில் கூந்தலும் இடம்பெறுகின்றது. பதிற்றுப்பத்தில் விறலியரைச் சுட்டவரும் பாடல்களில் அவர்களின் கூந்தல் மலர் சூடியிருப்பதனால் வண்டுகள் மொய்க்க மணமுடையதாக இருப்பதையும் கொண்டை மற்றும் ஐம்பிரிவுகளாக்கி அழகுபட வைத்திருப்பதையும் காணமுடிகிறது.

கூந்தல் களைதல்

கணவனை இழக்கும் பெண்கள் மங்கல அணி மட்டுமல்லாது கூந்தலையும் இழப்பதைப் புறநானூற்றில் கண்டோம். அதைப் போன்றே பதிற்றுப்பத்தில் ஐந்தாம்பத்தின் பதிகமும் இக்கருத்தைப் பதிவு செய்கின்றது.

சேரன் செங்குட்டுவன் கற்பின் கனலி என்று போற்றப்படுகின்ற கண்ணகிக்குச் சிலை எடுப்பதற்காக இமயம் செல்கின்றான். தன்னைத் தடுத்து பகைப்போரை எல்லாம் வெற்றி கொள்கிறான். தான் நினைத்தது போன்றே கல்லெடுத்துத் திரும்பும் வழியில் தன்னால் தோற்கடிக்கப்பட்ட பகை மன்னரின் காவல் மரத்தை வெட்டியெடுப்பதுடன் கணவரை இழந்தமையால் மங்கல அணிகளை நீக்கிய அந்நாட்டுப் பெண்களின் மணமுடைய கற்றைக் கூந்தலைக் கயிறாகத் திரித்து அதனைக் கொண்டு, பகைமன்னனின் யானைகளை வண்டியில் பூட்டி அதன் மூலம் வெற்றிகொண்ட காவல் மரத்தைத் தன் நாட்டிற்குக் கொண்டுவருவதோடு வழி நெடுக தன்னை எதிர்த்தோரை எல்லாம் அழித்து வாகை சூடிய வீரமுள்ள குட்டுவனைப் பரணர் பத்துப் பாடல்களில் பாடியுள்ளார் என்று கூறி பதிகம் நிறைவுபெறுகிறது.

பதிகத்தில் செங்குட்டுவனிடம் தோற்ற பகைமன்னன் நாட்டுப் பெண்கள் பற்றிக் கூறும்போது

வால் இழை கழித்த நறும் பல் பெண்டிர்
பல் இருங் கூந்தல் முரற்சியால்
குஞ்சர ஒழுகை பூட்டி ………………..
(பதிற். ஐந்தாம் பத்து, பதிகம். 15 – 17)

என்கிறது. இதற்கு உ.வே.சா அவர்கள் கணவனை இழந்த மகளிர் இழை கழித்தல், “மெல்லியன் மகளிருமிழைகழித் தனரே’’ (புறம். 224: 17) வாலிழையென்றது முத்தாரத்தை, நறும்பல் பெண்டிரென்றது அவருடைய இயற்கை மணத்தைக் கூறியபடி. ஐம்பாலாதலின் பல்லிருங் கூந்தலென்றார். (குறுந். 19:5 உரை ஒப்பு) என்று குறிப்புரை எழுதிச் செல்கிறார்.

உ.வே.சா அவர்கள் சுட்டிக்காட்டும் புறநானூற்றுப்பாடலில் கரிகாலன் இறந்த போது மெல்லிய இயல்புடைய உரிமை மகளிரும் அருங்கல அணி முதலான அணிகளை நீக்கினர் என்று வருகின்றது. (புறநானூறு. பக் 532, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்) கூந்தலைக் களைந்தனர் என்ற நேரடிப் பதிவு இல்லை என்றாலும் அருங்கல அணி முதலான அணிகளை நீக்கினர் என்று கூறுவனவற்றுள் மயிர்களைதலும் இருந்திருக்கும். ஏனென்றால் கணவன் இறந்த போது மயிர் களைந்தனர் என்பதற்கான சான்றுகளை முன் தொடரில் கண்டோம். (புறம். 25,250,280)

அதுபோன்றே தோற்ற மன்னனை இழிவுபடுத்த அவர்களுடைய மகளிர்தம் கூந்தலைக் கொய்து கயிறாகத் திரித்த நன்னன் இழிசெயலும் பதிவு செய்யப்பட்டிருப்பதை அறிந்தோம். (நற். 270)

இந்நிலையில், செங்குட்டுவன் தோற்ற பகை நாட்டுப் பெண்களின் கூந்தலைக் கொய்து கயிறு திரித்தானா? அல்லது அப்பெண்கள் தம் கணவருக்காக வேண்டாமென்று கழித்துவிட்ட கூந்தலைக் கயிறாக்கினானா? என்பது புலப்படவில்லை.

பாடலில் அணிகலன் கழிக்கப்பட்டது கூறப்பட்டுள்ளதே அன்றி இக்கருத்து தெளிவுபடுத்தப்படவில்லை. முனைவர் அ. ஆலிஸ் அவர்கள் இவ்வடிகளுக்குக் கணவன் இறந்தமையால் அவன் மனைவியராகிய நல்ல பல பெண்கள் தூய அணிகலமாகிய முத்தாரத்தை நீக்கினர். அப்பெண்டிரது பலவாகிய கரிய கூந்தலைக் கொண்டு திரிக்கப்பட்ட கயிற்றினால் யானைகளை வண்டியில் பூட்டினான் என்று உரை எழுதுகிறார். (பதிற்றுப்பத்து, பக். 168, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)

இவர் உரையிலும் கூந்தல் பெண்களால் களையப்பட்டதா? அல்லது சேரன் தன் வஞ்சம் கருதி கழித்தானா? என்ற தெளிவில்லை.

இப்பதிகம் சுட்டிக் காட்டும் பல தகவல் சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டத்தில் நீர்ப்படைக் காதையிலும் (27:117 – 126, 179 – 191) நடுகற்காதையிலும் (28: 90 – 109) பதிவு செய்யப்படுகிறது.

இக்காதைகளில் சேரன் கண்ணகிக்குக் கல்லெடுத்து மீளும்போது ஆரியப் பேடியுடன் மறத்திறன் ஒழியாத அரசர்தம் மேம்பட்ட மொழியினைப் பெறாமல் மறுத்துரைக்கும் ஆயிரவரையும் உயிர் பிழைக்கத் தவவேடமிட்டுத் தப்பிச் செல்லக் கருதியவரையும் தோற்ற கனக விசயரையும் வெல்லும் போர்க்களத்தில் இருந்து தமிழ் மன்னர்களாகிய சோழ பாண்டியர் காண தமிழகம் கொண்டு வந்த செயலே இழிவாகக் கருதப்பட்டதெனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பகை நாட்டுப் பெண்களின் கூந்தலைக் கயிறாகத் திரித்த செயல் பற்றிய பதிவு இடம்பெறவில்லை.

ஆதலின் ஒருபக்கம் கண்ணகியைப் பெருமைப்படுத்துவதற்காக இமயம் சென்று கல்லெடுத்து கோயில் கட்டக் கருதும் சேரமன்னன் மறுபக்கம் தோற்ற பகை மன்னர்களை இழிவுபடுத்த போரில் கணவனின் இழப்பால் மங்கல அணியைக் கழித்து நிற்கும் பெண்களின் கூந்தலை அறுத்துக் கயிறாக்கி யானைகளை வண்டியில் பூட்டியிருப்பானா? என்பது எண்ணுதற்குரியது. அவ்விழி செயலைச் சேரன் செய்திருந்தால் வரலாற்றில் நன்னனைப் போன்ற இழி பதிவே அவனுக்கும் ஏற்பட்டிருக்கும் என்பது திண்ணம். எனினும் இப்பதிவு மேலும் ஆய்தற்குரியது.

தொடரும்.................


avatar
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 94
மதிப்பீடுகள் : 91

View user profile

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by M.Jagadeesan on Wed Sep 21, 2016 9:04 pm

முனைவர் அவர்களே !

தங்களுடைய நீண்ட நெடிய பதிவை இன்னும் நான் படிக்கவில்லை . படித்தபின் கருத்திடுகின்றேன் . அதற்கு முன்பாக ஓர் ஐயம் .

"கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் ஜானகியை
மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக் கருதி உடல்புகுந்து
தடவியதோ ஒருவன் வாளி!'

என்ற இராமாயணப் பாடலில் வருகின்ற கள்ளிருக்கும் மலர்க் கூந்தலும் , தேம்பாய் கூந்தலும் ஒன்றா ?

மேலும்

' தடவியதோ இராமன் வாளி ' என்று சொல்லாமல் " தடவியதோ ஒருவன் வாளி " என்று ஏன் சொல்லவேண்டும் ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4881
மதிப்பீடுகள் : 2343

View user profile

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by முனைவர் ப.குணசுந்தரி on Thu Sep 22, 2016 1:06 pm

வணக்கம்.

ஐயா கம்பராமாயணத்தில் கள் எனும் சொல் உள்ள பாடல்களாகக் கீழ்வரும் பாடல்களே இருக்கின்றன.

கள் அவிழ் கோதை- தேன் வழியும் கூந்தலையுடைய கைகேயியினது - 1501.
கள்   அவிழ்   கோதை   -  தேன்   சொரியும்  மலர் மாலையணிந்த;  -852.
கள்உற தேனைப்போல்; கனிந்த - சிவந்த;  - 4871.
கள் மணி வள்ளத்துள்ளே - கள்ளினை வார்த்த     அழகிய      கிண்ணத்தின்     உள்ளே;  -978.
கள்வாய் அரக்கி- கள்ஒழுகும் வாயை உடைய அங்கார தாரை; - 4823.
கள்ளை கவர் கண்ணியன் - தேனைஉண்கின்ற மலர் மாலையைஅணிந்தவனாகிய பரதன்;  - 2133.
கள்ளுடை வள்ளமும் - (தாம் அருந்தும்) மதுக் கிண்ணங்களும்;  - 3103.

தாங்கள் எடுத்துக்காட்டியிருக்கும்

"கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் ஜானகியை
மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக் கருதி உடல்புகுந்து
தடவியதோ ஒருவன் வாளி!'

எனும் இப்பாடலைத் தாங்கள் எங்கிருந்து எடுத்தீர்கள். பாடல் எண்ணும் படலமும் குறிப்பிட்டால் கருத்துசொல்ல ஏதுவாக இருக்கும். ஏனென்றால் தாங்கள் எழுப்பியுள்ள

' தடவியதோ இராமன் வாளி ' என்று சொல்லாமல் " தடவியதோ ஒருவன் வாளி " என்று ஏன் சொல்லவேண்டும் ?

என்ற கேள்விக்குரிய பதிலைத் தாங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடலைக் கொண்டு மட்டும் பொருள் கூற இயலாது. அப்பாடலுக்கு முன் பின் உள்ள பாடல்களைக் கொண்டு பதில் தர முயற்சிக்கின்றேன்.

நன்றி.
avatar
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 94
மதிப்பீடுகள் : 91

View user profile

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by முனைவர் ப.குணசுந்தரி on Thu Sep 22, 2016 1:37 pm

தொடர் - 4 சமூக விழுமியம் குறுந்தொகையிலிருந்து

முன்தொடர் சுருக்கம்

அரசியாக இருந்தாலும் குடிகளாக இருந்தாலும் பெண்கள் கணவன் என்றைக்கும் விரும்பும் தங்கள் கரிய, நீண்ட சுருண்ட கூந்தலை மென்மையுடையதாகவும் மணமுடையதாகவும் துவராத் தன்மையுடனும் வைத்திருப்பதையே விரும்புவதனைக் காணமுடிகிறது. மேலும் கண்ணகிக்குச் சிலை எடுக்கச் சென்ற சேரமன்னன் தோற்றோரை இழிவுபடுத்த அவர்தம் மகளிரின் கூந்தலைக் கொய்து கயிறாக்கும் இழிசெயலைச் செய்தானா? அல்லது கணவரை இழந்ததால் அந்நாட்டுப் பெண்கள் நீக்கிய கூந்தலைக் கயிறாக்கினானா? என்ற ஐயப்பாட்டுடன் தேடுதல் தொடர்ந்தது. இனி……………………..

தொடர் – 4

குறுந்தொகையில் இடம்பெறும் மயிர் எனும் உறுப்பு குறித்த பதிவுகளை இத்தொடர் முன்வைக்கிறது.
avatar
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 94
மதிப்பீடுகள் : 91

View user profile

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by M.Jagadeesan on Thu Sep 22, 2016 1:38 pm

மண்டோதரி புலம்பல் :
====================
வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்
எள்ளிருக்கும் இடமின்றி உயிர் இருக்கும் இடம் நாடி இழைத்த வாறோ
கள்ளிருக்கும் மலர்கூந்தல் சானகியை மனச்சிறையிற் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக் கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி

யுத்தகாண்டம் - இராவணன் வதைப்படலம் - பாடல் 237
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4881
மதிப்பீடுகள் : 2343

View user profile

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by M.Jagadeesan on Thu Sep 22, 2016 2:03 pm

நன்னன் செய்த இழிசெயல் என்ன ? பெண்கொலை புரிந்தானா ? ஆதாரத்துடன் விளக்கவும் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4881
மதிப்பீடுகள் : 2343

View user profile

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by முனைவர் ப.குணசுந்தரி on Thu Sep 22, 2016 4:04 pm

தொடர்ச்சி - தொடர் - 4 சமூக விழுமியம் குறுந்தொகையிலிருந்து

கூந்தல் இயற்கை மணமுடையதா?

இதுவரை அறிந்த பெரும்பான்மையான பதிவுகளில் பெண்கள் திருமணத்திற்கு முன்பாயினும் சரி திருமணத்திற்குப் பிறகாயினும் சரி எப்பொழுதும் தங்கள் கூந்தலுக்கு மணமுடைய பூக்களாலும் குளிர்ச்சியுடைய சந்தனத்தடன் பலவித நறுமணப்பொருட்கள் கூட்டிய குழம்பினாலும் மணமூட்ட விரும்புகிறவிதம் குறிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மகிழ்ச்சியுடன் இருந்தால் அவர்களின் கூந்தல் மணமூட்டப்பெற்று பொலிவுடன் இருப்பதையும் பிரிவுத் துயரில் மனம் வெதும்பியிருக்கும் சூழலில் கூந்தல் மணமூட்டப்பெறாமல் பொலிவழிந்து காணப்படுவதையும் முன் தொடர்களில் அறியமுடிந்தது. இதுவரையிலான என் படிப்பின் தொடர்ச்சியில் கூந்தல் இயற்கையிலேயே மணமுடையது என்ற கருத்தமைந்த பதிவை நற்றிணை, புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய நூல்களில் காணமுடியவில்லை. என்றாலும் மற்ற நூல்களில் தொடர்ந்து தேடுவோம்.

இறையனார் எனும் புலவர் இயற்கைப்புணர்ச்சியின் போது யாரொருவர் துணையுமின்றி இயல்பாக ஓரிடத்தில் தலைவன் தலைவியைச் சந்தித்து மகிழ்ச்சி அடைகிறான் என்றும் அதன்பின் அவன் தலைவியின் நலம் பாராட்டுவதாயும் பாடலைப் பாடியுள்ளார்.

அதில் அவர் தலைவன் மூலம் தலைவியின் கூந்தல் மணம் குறித்த    கேள்வி ஒன்றையும் பதிவு செய்கிறார்.

அக்கேள்வி பெண்களின் கூந்தல் இயற்கையில் மணமுடையதா? இல்லையா? என்பது குறித்த விவாதம் பெரிய அளவில் எழக் காரணமாயிருந்தது என்றால் அது மிகையாகாது. அப்பாடல் வருமாறு,

கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயில் இயல்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே? (குறுந். 21)

தலைவியுடன் இருந்த காலத்தில் தலைவியை விட்டு நீங்காதிருந்த வண்டினைக் காணும் தலைவன் அதனிடத்து பல மலர்களின் பரிச்சயம் உள்ளதால் நான் விரும்பும் பதிலைத் தராமல், எது உண்மையோ அதனைக் கூறுமோ? என்ற ஐயத்துடனேயே, தலைவியின் கூந்தலில் வெளிப்படும் மணத்தைக் காட்டிலும்  மணமுடைய மலரை நீ அறிந்திருக்கிறாயா? என்ற பொருள்படும்படியான செறி எயிற்று அரிவை கூந்தலின், நறியவும் உளவோ, நீ அறியும் பூவே? என்ற கேள்வியைக் கேட்பதாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதுவன்றி தலைவியின் கூந்தல் இயற்கை மணமுடையது. அவ்வியற்கை மணத்தைப்போன்று நன்மணம் கமழும் வேறு உயர்பூவை அறிந்திருக்கிறாயா? என்று கேட்கவில்லை. மேலும் இக்கருத்தை விளங்க எடுத்துக்காட்டும் திருவிளையாடல் புராணத்திலும் இறைவியாகவே இருந்தாலும் எப்பொழுதும் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் இல்லை. செயற்கை மணம்தான் என்ற கருத்து தெளிவாக எடுத்துக்காட்டப்படுகிறது.ஆனாலும் பாடல் பதிவில் இல்லாத ஒரு கருத்தை ஏன்? எதற்காக? அறிஞர்கள் திரித்து இன்னும் பொருள் கூறிவருகின்றனர் என்பது விளங்கவில்லை.

தொடரும்...................
avatar
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 94
மதிப்பீடுகள் : 91

View user profile

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by M.Jagadeesan on Thu Sep 22, 2016 4:27 pm

இப்பாடலின் ஆசிரியர் இறையனார் என்னும் தமிழ்ப்புலவர் . இந்தப் பெயர்தான் குழப்பத்திற்குக் காரணமாயிற்று .இறையனார் என்பதை கடவுள் என்று கொண்டு , இந்தப் பாடலை இயற்றியது சிவபெருமான் என்று முடிவு கட்டிவிட்டனர் .

உண்மையில் நம்முடைய தமிழ் இலக்கியத்தில் இறைவன் பாடியதாக எந்தப் பாடலும் இல்லை . திருவாசகத்தை மாணிக்கவாசகர் பாட சிவபெருமான் கேட்டதாக ஒரு வரலாறு உண்டு .

" உடையார் உன் வாசகத்தில் ஒரு பிரதி கருதினதே " என்ற மனோன்மணீய வரிகளால் இதை அறியலாம் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4881
மதிப்பீடுகள் : 2343

View user profile

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by ChitraGanesan on Thu Sep 22, 2016 5:17 pm

நல்ல பதிவு தொடருங்கள் பின்னர் PDF ஆக தாருங்கள்
avatar
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 634
மதிப்பீடுகள் : 234

View user profile http://chitrafunds@gmail.com

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by M.Jagadeesan on Thu Sep 22, 2016 6:00 pm

முனைவர் அவர்களுக்கு ,

தேன் + பாய் + கூந்தல் = தேம்பாய் கூந்தல் என்பது சரியா ?

தேன் + பா + அணி = தேம்பாவணி என்பது போல .

avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4881
மதிப்பீடுகள் : 2343

View user profile

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by Dr.S.Soundarapandian on Thu Sep 22, 2016 7:40 pm

குணசுந்தரி அவர்களுக்கு நன்றி !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4442
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by முனைவர் ப.குணசுந்தரி on Thu Oct 06, 2016 8:09 pm

சௌந்தரபாண்டியன் ஐயா அவர்களுக்கு நன்றி. :வணக்கம்:
avatar
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 94
மதிப்பீடுகள் : 91

View user profile

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by T.N.Balasubramanian on Thu Oct 06, 2016 8:15 pm

நல்ல பகிர்வு .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21118
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by முனைவர் ப.குணசுந்தரி on Thu Oct 06, 2016 9:05 pm

ஜகதீசன் ஐயா அவர்களுக்கு வணக்கம்.

தாங்கள் குறிப்பிடுவது

தேன் + பாய் + கூந்தல் = தேம்பாய் கூந்தல் என்பது சரியா ?

தேன் + பா + அணி = தேம்பாவணி என்பது போல . சரிதான் ஐயா.
avatar
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 94
மதிப்பீடுகள் : 91

View user profile

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by Ramalingam K on Thu Oct 06, 2016 9:08 pm

[You must be registered and logged in to see this link.] wrote:மண்டோதரி புலம்பல் :
====================
வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்
எள்ளிருக்கும் இடமின்றி உயிர் இருக்கும் இடம் நாடி இழைத்த வாறோ
கள்ளிருக்கும் மலர்கூந்தல் சானகியை மனச்சிறையிற் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக் கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி

யுத்தகாண்டம் - இராவணன் வதைப்படலம் - பாடல் 237
[You must be registered and logged in to see this link.]
இராமன் என்றாலும் ஒருவன் என்றாலும் யாப்பு மாறவில்லை -
எனினும் "ஒருவன்" என்னும் தன்னிகரற்ற பரம்பொருளே இராமன் என்னும் மானுடனாக வந்தான் என்ற ஒரு சூட்சுமத்தை அச்சொல்லில் கவிச்சக்ரவர்த்தி வைத்துள்ளார்.

இராவணனைப் பொருத்த மட்டில் மனிதர்கள் அற்ப பலம் உள்ளவர்கள். ஆகையாலேயே சாகா வரத்தில் மனிதரை அவன் பொருட்படுத்த வில்லை.

மண்டோதரி அன்னை சீதாவிற்கு நிகரான அழகு படைத்தவள் என்பது மட்டுமல்ல. மதிநுட்பம் நிறைந்தவள் அம்மாதரசி. அற்ப மானுடனால் தன் கணவனை வதைக்க இயலாது. ஆக, மானுட வடிவில் வந்துள்ளவன் அந்த "ஒருவனே" என்று புரிந்து கொண்டு புலம்புவதாவது கம்பரின் கவித்திறன்.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum