ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
 T.N.Balasubramanian

வே, வோ, கா, கி
 T.N.Balasubramanian

My Introduction.
 prajai

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 Dr.S.Soundarapandian

தாயை வணங்க வேண்டும்...! -
 Dr.S.Soundarapandian

இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
 Dr.S.Soundarapandian

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

பூரானை அடிக்காதீர்கள்!
 Dr.S.Soundarapandian

அப்துல்லாவின் அமைதி! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

என் அறிமுகம்
 ஜாஹீதாபானு

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழகத்திற்கு நாளை முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று 'ஸ்டிரைக்'
 ayyasamy ram

அதிசயமான சூரிய கிரகணம்
 T.N.Balasubramanian

பாரிஜாதம் என்பது பவளமல்லிகை - பொது அறிவு தகவல்
 ayyasamy ram

பாரீசில் இன்று தொடக்கம்: உலக மல்யுத்தத்தில் பதக்கம் வெல்வாரா சாக்ஷி மாலிக்?
 ayyasamy ram

உலக சாம்பியன் பட்டம் பெற்ற பளு தூக்கும் வீரர் தெருச்சண்டையில் பலி
 ayyasamy ram

சர்ச்சைக்குரிய நூலின் மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருதா?
 ayyasamy ram

சிங்கப்பூரில் அமெரிக்க போர் கப்பல் விபத்து: 10 மாலுமிகள் மாயம்
 ayyasamy ram

அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு
 ayyasamy ram

திருவரங்கன் உலா - ஸ்ரீ வேணுகோபாலன்
 kovarthanan

சினி துளிகள்! -தொடர் பதிவு
 ayyasamy ram

தமிழ்வாணன் - கேள்வி - பதில்களில் சில
 ayyasamy ram

உ.பி.யில் பயங்கரம்; போலீஸ், கிராம தலைவரால் 15 வயது சிறுமி பலாத்காரம், அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு
 ayyasamy ram

Putthagam vendi சோழ கங்கம் - சக்தி ஸ்ரீ
 Haneefhse1988

புத்தகம் வேண்டி
 Haneefhse1988

கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
 ayyasamy ram

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
 M.Jagadeesan

மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
 ayyasamy ram

இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினார்
 ayyasamy ram

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
 ayyasamy ram

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

நம்மைப் போல் - கவிதை
 ayyasamy ram

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
 ayyasamy ram

கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பாகிஸ்தான் மருத்துவமனையில் குண்டுவெடிப்பு: 75 பேர் பலி

View previous topic View next topic Go down

பாகிஸ்தான் மருத்துவமனையில் குண்டுவெடிப்பு: 75 பேர் பலி

Post by ayyasamy ram on Tue Aug 09, 2016 7:11 am

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம், குவெட்டா நகரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பில் 75 பேர் பலியாகினர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் வழக்குரைஞர்கள். போலீஸார், செய்தியாளர்களும் இந்த குண்டு வெடிப்பில் பலியானார்கள். நூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பலூசிஸ்தான் மாகாணத்தில் 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று மாகாண அரசு அறிவித்தது.

முன்னதாக, பலூசிஸ்தான் பார் கவுன்சில் தலைவர் பிலால் அன்வர் காஸி, காலையில் மர்ம நபர்களால் சுடப்பட்டார். பிரேதப் பரிசோதனைக்காக அவருடைய உடல் குவெட்டா அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, அங்கு ஏராளமான வழக்குரைஞர்கள், காவலர்கள் கூடியிருந்தனர். இந்தச் செய்தியை சேகரிக்க அங்கு பல செய்தியாளர்களும் வந்தனர்.

அப்போது மருத்துவமனையில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் 75 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் வழக்குரைஞர்கள். மேலும் போலீஸார், செய்தியாளர்கள், மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும் குண்டு வெடிப்பில் உயிரிழந்தனர். நூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் இருபது பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில் அந்த வட்டாரத்தில் இருந்த ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன.

குண்டு வெடிப்பைத் தொடர்ந்து மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆயினும் குண்டடிபட்டு இறந்தவர்கள் குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.

அந்த இடத்தை ஆய்வு செய்த வெடிகுண்டு நிபுணர்கள், இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என்று தெரிவித்தனர். எட்டு கிலோ எடையுள்ள வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக அவர்கள் கூறினர்.

இந்தத் தாக்குதலுக்கு தெஹ்ரிக்-ஏ-தலிபான் பயங்கரவாதக் குழுவின் ஒரு பிரிவான ஜமாதுல் அஹாரா பொறுப்பேற்றது. பாகிஸ்தானில் இஸ்லாம் மதத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்வரை இதுபோன்ற தாக்குதல்கள் தொடரும் என்று அந்தக் குழு வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பலூசிஸ்தான் மாகாண உள்துறை அமைச்சர் சர்பராஸ் புக்தி கூறியதாவது: முதலில் பலூசிஸ்தான் பார் கவுன்சில் தலைவர் பிலால் அன்வர் காஸி சுட்டுக் கொல்லப்பட்டதற்கும் மருத்துவமனை குண்டு வெடிப்புக்கும் உள்ள தொடர்பு குறித்து தற்போது எதுவும் தெரியவில்லை. இந்த இரட்டை சம்பவங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகளின் தோல்வியைக் காட்டுகின்றன. இது தொடர்பான விசாரணையை நானே நேரடியாக மேற்பார்வையிட்டு வருகிறேன்.

காயமடைந்தவர்களுக்கு வேண்டிய அனைத்து சிகிச்சைகளையும் அளிக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தாக்குதல் நிகழ்ந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்க கூடுதல் மருத்துவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பில் காயமடைந்த சிலர் வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்றார் அவர்.

குண்டு வெடிப்பைத் தொடர்ந்து ராணுவத்தினரும் போலீஸாரும் அந்த இடத்தில் குவிக்கப்பட்டனர்.

அதிபர், பிரதமர் கண்டனம்

குவெட்டா மருத்துவமனை குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹுசேன் கண்டனம் தெரிவித்தார்.

பிரதமர் நவாஸ் ஷெரீஃப் வெளியிட்ட கண்டன அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: நாட்டில் பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் செயல்பட்டு இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும். நமது பாதுகாப்புப் படையினரின் எண்ணற்ற தியாகத்தின் பயனாக பலூசிஸ்தான் மாகாணத்தில் அமைதி நிலவி வருகிறது. அதனைக் குலைப்பதற்கு நடக்கும் முயற்சிகளை முறியடிப்போம் என்றார் அவர்.

குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, மாகாண முதல்வர் சனாவுல்லா ஜெஹரி தலைமையில் பாதுகாப்பு நிலை குறித்து அவசரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு முதல்வர் கூறியதாவது: மருத்துவமனை துயர சம்பவத்தைத் தொடர்ந்து, பலூசிஸ்தான் மாகாணத்தில் 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும். அரசு கட்டடங்களில் அரைக்கம்பத்தில் தேசியக் கொடி பறக்கவிடப்படும். மாகாண அரசு சார்பான அனைத்துப் பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன என்று மாகாண முதல்வர் சனாவுல்லா ஜெஹரி தெரிவித்தார்.

தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30621
மதிப்பீடுகள் : 8961

View user profile

Back to top Go down

Re: பாகிஸ்தான் மருத்துவமனையில் குண்டுவெடிப்பு: 75 பேர் பலி

Post by ChitraGanesan on Tue Aug 09, 2016 10:13 am

கண்டனத்துகுறியது.
avatar
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 634
மதிப்பீடுகள் : 234

View user profile http://chitrafunds@gmail.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum