ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பசு மாடு கற்பழிப்பு
 ஜாஹீதாபானு

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ஜாஹீதாபானு

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

வணக்கம் நண்பர்களே
 ரா.ரமேஷ்குமார்

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இதனால்தான் இவர்கள் ஜெயிக்கிறார்கள்! #கரோலினா-சிந்து நட்புத் தருணங்கள்!

View previous topic View next topic Go down

இதனால்தான் இவர்கள் ஜெயிக்கிறார்கள்! #கரோலினா-சிந்து நட்புத் தருணங்கள்!

Post by ayyasamy ram on Sat Aug 20, 2016 1:40 pm

உலகக் கோப்பை கிரிக்கெட், உலகக் கோப்பை கால்பந்து
என பல விளையாட்டுப் போட்டிகள் நடந்தாலும் ஒலிம்பிக்
என்ற சொல்தான் விளையாட்டு உலகின் மந்திரச் சொல்.

உலகக் கோப்பை கால்பந்தில் 32 அணிகள்தான் விளையாடும்.
கிரிக்கெட் உலகக் கோப்பையிலும் அதிகபட்சம் 10 அணிகள்.
ஆனால் ஒலிம்பிக் அப்படியல்ல.. 206 நாடுகள் பங்கேற்கும் ஒரு
பிரமாண்டமான விளையாட்டுப் போட்டி.

இங்கே செல்வத்தில் கொழிக்கும் அமெரிக்காவும், சாப்பாட்டுக்கே
வழியில்லாத எத்தியோப்பியாவும் சரிசமம்தான். யாரும் ஹோட்டலில்
போய் தங்கிக் கொள்ள முடியாது. அனைவரும் சமம் என்பதை
உணர்த்தும் வகையில் ஒலிம்பிக் கிராமத்தில்தான் தங்க வேண்டும்.

ஏழை நாட்டு வீரனுக்கும், பணக்கார நாட்டு வீரனுக்கும் சமபந்திதான்.
எந்த வகையிலும் ஏற்றத் தாழ்வு ஒலிம்பிக் களத்தில் இருக்காது.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35960
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: இதனால்தான் இவர்கள் ஜெயிக்கிறார்கள்! #கரோலினா-சிந்து நட்புத் தருணங்கள்!

Post by ayyasamy ram on Sat Aug 20, 2016 1:40 pm

130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா தங்கத்துக்காக
தடுமாறிக் கொண்டிருக்கும் போது, 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட
சிங்கப்பூர் தங்கத்துடன் சிரித்துக் கொண்டிருக்கும்.

ஒரு காலத்தில் இங்கிலாந்திடம் அடிமைப்பட்டுக் கிடந்த ஃபிஜி,
ரக்பி செவனில் கிரேட் பிரிட்டனை துவம்சம் செய்து தங்கம் வென்ற
கதையும் ஒலிம்பிக் களத்தில்தான் அரங்கேறும்.

இங்கே யாரும் யாரையும் வெல்ல முடியும். போர்…போர் என கிடந்த
உலகத்தை விளையாட்டுபோட்டிகள் பக்கம் திருப்பி, அன்பையும்
ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட விளையாட்டு
போட்டிதான் ஒலிம்பிக்.

ரியோவில் அதனை நிரூபிக்கும் வகையில், பல சம்பவங்கள் அரங்கேறி
இருக்கின்றன. தோற்றாலும் ஜெயிச்சாலும் எதிர்த்து விளையாடுபவரை
அரவணைப்பதுதான் ஒலிம்பிக்கின் முக்கிய நோக்கம்.

ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்புக்கு எடுத்துக்காட்டாக இந்த ஒலிம்பிக்கில் பல
சம்பவங்கள் நடந்துள்ளன. பிய்ந்து போன காலணியை கழற்றி எறிந்து
விட்டு ஒற்றைக் காலணியுடன் ஓடிய எத்தியோப்பிய வீராங்கனை
டிப்ரோ.

5 ஆயிரம் மீட்டர் தொலை தூர தகுதி சுற்று ஓட்டத்தில் ஓடிக் கொண்டிருந்த
நியூசிலாந்து வீராங்கனை நிகி ஹம்ப்ளின் திடீரென்று மயங்கி விழுந்து விட,
அமெரிக்க வீராங்கனை அபே… ஓடுவதை நிறுத்தி விட்டு உதவி செய்தது
போன்ற நிகழ்வுகள், ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை ரியோவில் பிரதிபலித்தன.

இதையெல்லாம் மிஞ்சும் வகையில், நேற்று பேட்மிண்டன் இறுதிப்
போட்டியில் தன்னிடம் தோல்வியடைந்த சிந்துவை, கரோலினா சமாதானப்
படுத்திய சம்பவம் அமைந்து விட்டது. ரியோ ஒலிம்பிக்கை பொறுத்தவரை,
இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட மோதல்
இது. ஒலிம்பிக்கில் இதுவரை 4 இந்திய வீராங்கனைகள் மட்டுமே பதக்கம்
வென்றுள்ளனர். அனைத்துமே வெண்கலப்பதக்கங்கள்.

முதன்முறையாக ஒரு இந்திய வீராங்கனை வெண்கலத்தை தாண்டி
சென்றுள்ளார். அதனால், சிந்து மீது அத்தனை எதிர்பார்ப்பு. அவ்வளவு
அழுத்தமும் சிந்து மீது இருந்தது. இந்திய நாட்டின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பும்
சிந்து மீது இருக்கிறது என்பதும் கரோலினாவுக்கும் தெரியும்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35960
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: இதனால்தான் இவர்கள் ஜெயிக்கிறார்கள்! #கரோலினா-சிந்து நட்புத் தருணங்கள்!

Post by ayyasamy ram on Sat Aug 20, 2016 1:41 pm


-
கரோலினாவுக்கும் அழுத்தம் இல்லாமல் இல்லை. ஸ்பெயினும் நேற்று வரை,
ஐந்து தங்கப்பதங்கள்தான் வென்றிருந்தது.

பி.வி.சிந்துவும், கரோலினா மரினும் இதுவரை 8 முறை நேருக்கு நேர்
மோதியுள்ளனர். இதில், கரோலினா மரின் 5 முறையும் பி.வி.சிந்துவும்
3 முறை வென்றுள்ளனர்.

இந்த மோதல்களே அவர்களை நல்ல நட்புக்குரியவர்களாகவும் மாற்றியிருந்தது.
இந்த போட்டியில், முதல் செட்டை சிந்து கைப்பற்றினாலும் அடுத்த இரண்டு
செட்களையும் அபாரமாக விளையாடி கரோலினா வென்று விட்டார்.

தோல்வியடைந்த சிந்துவின் முகத்தில் அப்படியொரு சோகம் அப்பியது.
முகம் வாடிப் போனது. அதனை பார்த்த கரோலினாவும் வெற்றியால் மகிழ்ச்சி
அடையவில்லை. சிந்துவை வந்து கட்டிப்பிடித்து ஏய்… என ஆறுதல் சொல்கிறார்.
அணைத்துக் கொள்கிறார். சிந்துவோ… மரின் வீசிய ராக்கெட்டை எடுத்து,
அவரது பயிற்சியாளரிடம் கொடுக்கிறார்.

களத்தில் விளையாட்டு வீரர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதற்கு
உதாரணமாக இருவரும் நடந்து கொள்கின்றனர். ஒலிம்பிக்கின் நோக்கமும்
அதுதான் .வெற்றி தோல்வி இங்கு இலக்கு அல்ல.

பரஸ்பர அன்பும் நட்பும் பரவ வேண்டுமென்பதே ஒலிம்பிக்கின் நோக்கம்.
சோ… சிந்துவும் தோற்கவில்லை…. கரோலினாவும் வெற்றியடையவில்லை.
இங்கு ஒலிம்பிக் ஜெயித்திருக்கிறது.

வளர்க ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்…!

——————————————–

விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35960
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: இதனால்தான் இவர்கள் ஜெயிக்கிறார்கள்! #கரோலினா-சிந்து நட்புத் தருணங்கள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum