ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 ayyasamy ram

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 ayyasamy ram

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 ayyasamy ram

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

வரிசையாய் எறும்புகள்
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

மலைகளின் நகரம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 பழ.முத்துராமலிங்கம்

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

சபாஷ் சிபி! - அமெரிக்க வேலையைத் துறந்து, சாதிக்கும் கோவை இளைஞர்!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
 பழ.முத்துராமலிங்கம்

வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!
 பழ.முத்துராமலிங்கம்

மெகா ஸ்டார் குடும்பத்திலிருந்து விஜய் சேதுபதியுடன் ஒரு புது ஹீரோயின்! தமிழுக்கு எண்ட்ரி - போட்டோ உள்ளே
 பழ.முத்துராமலிங்கம்

அன்று குழந்தை நட்சத்திரம் இன்று நாயகி
 பழ.முத்துராமலிங்கம்

இந்த நடிகையின் தலையை வெட்டுபவருக்கு ரூ.5 கோடி பரிசு என அறிவிப்பு: பாதுகாப்பை அதிகரித்தது காவல் துறை!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 karthikraja777

கல்கி 26.11.17
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 பழ.முத்துராமலிங்கம்

சிலந்தி வலை... நத்தையின் பல்... ஸ்டீலை விட வலிமையான 10 பொருள்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற 11 பழங்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
 thiru907

மாலை பேப்பர் 17.11.17
 சிவனாசான்

செழுமை தரும் சேமிப்பு! - திருப்பூர் விவசாயியின் புதுமை நீர் மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திருவலஞ்சுழி – கோயில்

View previous topic View next topic Go down

திருவலஞ்சுழி – கோயில்

Post by ayyasamy ram on Thu Sep 01, 2016 6:10 am

கோயில்

கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம், மூன்று
திருச்சுற்றுகள், ஐந்து மண்டபங்கள், மூன்று விமானங்கள்
கொண்டு கோயில், நுழைந்ததும், உள்ள மிக விஸ்தாரமான
பிராகாரம், அதில் ஒரு திருக்குளம். குளத்தின் மேல் கரையில்
‘ஜடா தீர்த்த விநாயகர்’ சிறிய சன்னதி ஒன்றில்
குடிகொண்டுள்ளார்.

இரண்டாவது வாயிலில் பஞ்சமூர்த்தி சுதை வடிவங்கள்.
இது கட்டை கோபுரம் கொண்டுள்ளது.

இதைக் கடந்து இரண்டாவது பெரிய பிராகாரத்தில், மூலவரின்
கோபுரத்திற்கு முன்பாக ஸ்வேத விநாயகருக்கென்று தனிக்
கோயில். இக்கோயிலுக்கென கொடி மரம், நந்தி மண்டபம்
எல்லாம் உண்டு.

அழகிய வேலைப்பாடுகள் கொண்ட 36 தூண்கள் அமைந்த
மண்டபம், விநாயகர் கோயிலுக்கு தனி அழகைத் தருகின்ற
ஒரே கல்லில் குடைந்து செய்யப்பட்ட பலகணி சிற்பியின்
கலைத் திறனைக் காட்டுகி்ன்றன.

இந்த விநாயகரின் கருவறையை இந்திரன் விருப்பத்திற்கு
ஏற்ப தேவலோக சிற்பி விஸ்வகர்மாவே கட்டினார் என்று ஐதிகம்.

விநாயகர் கோயில் மூலஸ்தானம் காயத்ரி மண்டபம் என்று
அழைக்கப்படுகிறது. காயத்ரி மந்திர 24 அட்சரங்களுக்கு ஏற்ப
24 தூண்கள். எல்லாம் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள்
கொண்டவை காண்போரை வியக்கச் செய்பவை.

கருவறையில் கலச நிலைப்படி, கலசத்தேர் மாடம், கலச மஞ்சம்
ஆகியவற்றின் மேல் விநாயகர் தந்தம், அங்குசம், பாசம், மோதகம்
ஏந்திய நிலையில் வெண்மையான தோற்றத்தில் ஒரு முழ நீளமே
கொண்டவராக அமர்ந்துள்ளார். இவரை வழிபட்டால் மணப்பேறு,
மகப்பேறு கிட்டுவதாகச் சொல்கிறார்கள்.

ஆலயத்தின் பிரமாண்டம் நம்மை பிரமிக்க வைக்கிறது. மனிதர்கள்
கட்டியதா, பூதங்களும் சிவ கணங்களும் சேர்ந்து கட்டியதா என்று
வியப்படைச் செய்யும் விதமாக அமைந்துள்ளது.

அரசன் ஒருவன் செய்த தெய்வ குற்றத்திற்காக கண் பார்வை
இழந்தான். இத்தலத்து ஈசனை வேண்டி விரதமிருந்த பலனால்,
மீண்டும் கண்ணொளி பெற்றான். நேர்த்திக்கடனாக அவன் கட்டிய
மண்டபம் ஒன்று, ‘அபராத மண்டபம்’ எனும் பெயரில் விளங்குகிறது.
மற்றும் அலங்கார மண்டபம் நிறைமணி மண்டபம் உற்சவ மண்டபம்
ஆகியனவும் உள்ளன.

மூன்றாம் வாயிலைக் கடந்ததும் வருவது முதல் திருச்சுற்று.
அதன் தென்புறம் நவசக்தி லிங்கம், மேற்கில் தல விநாயகரான
வலஞ்சுழி விநாயகர், சோம தேவன், வள்ளி – தெய்வானை சமேத
சுப்பிரமணியர், வடக்கில் தேவர்கள் பூஜித்த லிங்கம் ஆகியோர்
பிரதிஷ்டைச் செய்யப்பட்டுள்ளனர்.

தெற்கு பிராகார இடதுபுற நீண்ட மண்டபத்தில் 32 சிவலிங்கங்கள்
ஒரே வரிசையில் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்த
சிவலிங்கத்திற்கும் மேலே சுவரில் அதன் பெயர்கள் எழுதி
வைக்கப் பட்டுள்ளது.

கருவறைப் புறச்சவர், பிறைகளில் பிட்சாடனர், நடராஜர்,
நர்த்தன கணபதி ஆகியோருக்கு அடுத்தபடியாகவே
தட்சிணாமூர்த்தி உள்ளார். நடராஜர் மற்றும் பிட்சாரடனர் சிற்பங்கள்
எழிலார்ந்தவையாக உள்ளன. நடராஜர் கையில் பாம்பு உள்ளது.

இக்கோயிலில் நவகிரக சன்னதி கிடையாது.

அதனால் கோஷ்டத்தில் பிரம்மா, துர்க்கை, அர்த்தநாரீசுவரரை
அடுத்து, சனீஸ்வர பகவானுக்கு தனி சந்நதி உள்ளது. சனீஸ்வரர்
கிழக்கு முகமாக இருக்க, நேர் எதிரே சூரியன், மேற்கு முகமாக
நிறுவப்பட்டுள்ளார். ஒருவரையொருவர் பார்த்தபடி இங்கு
சனீஸ்வரருக்கும் சூரியனுக்கு தனித்தனி பூஜைகள் உண்டு.

மூலவர் கபர்தீஸ்வரர் லிங்க வடிவில் கருவறையில் எழுந்தருளியுள்ளார்.
தெய்வ சாந்நித்யம் பரிபூரணமாகத் திகழும் சந்நதி. இவர் வலஞ்சுழி நாதர்
என்றும் அழைக்கப்படுகிறார்.

அம்பாள் பெரிய நாயகி எனும் பெயரில் தனிச் சந்நதியில் உள்ளார்.
அஷ்டபுஜ காளியும் எட்டுக் கரங்களுடன் தனிக்கோயில் கொண்டுள்ளார்.

காவிரியும் அரிசிலாறும் இத்தலத்தில் இரண்டு புண்ணிய தீர்த்தங்கள்.
கோயிலுக்குள் இருக்கும் திருக்குளம் – ஜடா தீர்த்தம், சிவனின்
ஜடாமுடியுள் உள்ள கங்கையின் பெயரால் அமைந்தது.

கோயிலில் நான்கு கால பூஜை நந்திக்கு பின்புறம் இருந்தே ஆராதனை
நடத்துகின்றன. பத்து நாள் பிரமோற்சவம் உண்டு. ஒன்பதாம் நாள்
விழாவில் இந்திரனுக்கென தனி பூஜை உண்டு. பத்தாம் நாள் பஞ்சமூர்த்தி
ஊர்வலம் சென்று தீர்த்தவாரி நடைபெறுகிறது.

அருகிலுள்ள அறுபடை தலமான சுவாமிமலைக் கோயிலின் உபகோயில்
இது. திருஞான சம்பந்தரால் தேவாரத்திலும் திருநாவுக்கரசரால்
திருத்தாண்டகத்திலும் பாடப்பெற்ற தலம்.

சம்பந்தர் இத்தலத்து ஈசனை வணங்கும்போது ‘என்ன புண்ணியம்
செய்தனை நெஞ்சே…’ என்று மனமுருகிப் பாடுகின்றார்.
பல சிறப்புகள் கொண்ட இத்தலத்தை நீங்களும் சென்று வழிபட்டு
வரலாமே.

எங்கே இருக்கு: கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில்
திருவலஞ்சுழி உள்ளது.

தரிசன நேரம்: காலை 6-12; மாலை 4-8

———————————————

– ஆர்.சி. சம்பத்
குமுதம் பக்தி செய்திகள்:
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32459
மதிப்பீடுகள் : 10733

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum