ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

நீங்கள் யாவரும் நலம்தானே?
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

நன்றி
 SK

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ருத்ர வீணையை வாசிக்கும் ஒரே பெண் கலைஞர் ஜோதி ஹெக்டே

View previous topic View next topic Go down

ருத்ர வீணையை வாசிக்கும் ஒரே பெண் கலைஞர் ஜோதி ஹெக்டே

Post by ayyasamy ram on Sun Sep 04, 2016 4:36 pm


-
ருத்ரவீணை என்கிற பெயரே நாம் கேள்விப்பட்டிராதது.
இசைக்கலைஞர் பலருக்கும் கூட அப்படியொரு வாத்தியம்
இருப்பது தெரியாது. அப்படிப்பட்ட அபூர்வ இசைக்கருவியில்
ஈடுபட்டு, உலக அளவில் கவனம் ஈர்த்துக் கொண்டிருப்பவர்
ஜோதி ஹெக்டே.

அபூர்வமானதொரு விஷயத்தில் ஈடுபட்டிருப்பது ஒரு சாதனை
என்றால், காலம் காலமாக பெண்களுக்கு மறுக்கப்பட்டு வந்த
அந்த இசைக்கருவியில் இன்று நிபுணத்துவம் பெற்று,
ஒன் உமன் ஷோ நடத்திக் கொண்டிருப்பது ஜோதியின் மெகா
சாதனை!

ஜோதியின் தொடர்பைத் தேடிக் கண்டுபிடிப்பதில் இருந்த
சிரமம், அவரிடம் பேசுவதில் இருக்கவில்லை. மொழி தெரியாத
நிலையிலும் நமது கேள்விகளை உதவியாளர் துணையுடன்
பொறுமையாகக் கேட்டுக் கொண்டு விளக்கமாகப் பேசிய
நேர்த்தியே சொல்கிறது அவர் எத்தனை ஒரு மகா கலைஞர் எ
ன்பதை!

இனி ஜோதி ஹெக்டே உடன்... ``சின்ன வயசுலேருந்தே படிப்பை
விடவும் கலைத்துறையிலதான் எனக்கு ஈடுபாடு அதிகமா
இருந்தது. டான்ஸும் பெயின்டிங்கும் அவ்ளோ பிடிக்கும்.
ஒருவேளை நான் ருத்ரவீணைக் கலைஞராகாம இருந்திருந்தா,
நிச்சயம் ஒரு பிரமாதமான ஓவியராகியிருப்பேன்...’ -
எடுத்த உடனேயே வெளிப்படையான பேச்சில் மனம் கவர்கிறார்
ஜோதி.
-
----------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33019
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: ருத்ர வீணையை வாசிக்கும் ஒரே பெண் கலைஞர் ஜோதி ஹெக்டே

Post by ayyasamy ram on Sun Sep 04, 2016 4:37 pm


-

-
``எங்கப்பா சத்யநாராயண் கிருஷ்ணகுடி, ஃபாரஸ்ட் ஆபீசரா
இருந்தவர். காலேஜ்ல மியூசிக்கும் ஒரு பாடமா இருக்கிற
மாதிரியான படிப்பைத் தேர்ந்தெடுத்தேன். என்னோட குரு
டாக்டர் பிந்து மாதவ் பதக் இடம் சிதார் கத்துக்கிட்டேன்.
ஒருமுறை காலேஜ்ல அவர் ருத்ரவீணை வாசிச்சதை முதல்
முறையா பார்த்தேன். அதுவரை அப்படியொரு இசைக்கருவியை
நான் பார்த்ததில்லை. அது எழுப்பின ஒலி என்னை வசீகரிச்சது.
-
சிதார் ஓசைக்கும், ருத்ரவீணையோட ஓசைக்கும் மாபெரும்
வித்தியாசத்தை உணர்ந்தேன்.
-
மிக மிக அரிதான நபர்களால மட்டும்தான் ருத்ரவீணை
வாசிக்கப்பட்டதாகவும், குறிப்பா பெண்கள் யாரும்
வாசிச்சதில்லைன்னும் அவர் சொன்ன தகவல்கள் எனக்கு
ஆச்சரியத்தைக் கொடுத்தது. எனக்கு ருத்ரவீணை வாசிக்கக்
கத்துக் கொடுக்கச் சொல்லி அவர்கிட்ட கேட்டேன்.
-
`இது பெண்களுக்கான இசைக் கருவியே இல்லை. பெண்களால
இந்தக் கருவியைக் கையாளவே முடியாது’னு சொல்லி
மறுத்துட்டார். நான் விடாம அவர்கிட்ட கேட்டுக்கிட்டே இருந்தேன்.
எங்கப்பாவையும் பேசச் சொன்னேன். கடைசியில ஒருவழியா
சம்மதிச்சார் என் குருஜி!
-
`ருத்ரவீணை வாசிக்கிறது பெண்களுக்கு உகந்ததில்லை.
உங்க பொண்ணு ரொம்ப அடம் பிடிக்கிறதால எங்க வீட்ல
மூலையில முடங்கிக் கிடக்கிற பழைய ருத்ரவீணையை
அவளுக்குத் தந்து சொல்லித் தரேன்.
-
அதை வாசிக்க ஆரம்பிச்சதும் அவளே அது வேண்டாம்னு முடிவு
பண்ணிடுவா’னு குருஜி, எங்கப்பாகிட்ட சொல்லி யிருந்தது
எனக்குத் தெரியாது. எப்படியோ குருஜி சம்மதம் சொன்னதுல
எனக்கு சந்தோஷம் தாங்கலை. கையை அறுத்துக்கக்கூடாதுங்கிற
பயத்துல கூர்மை முழுக்க மழுங்கின ஒரு கத்தியைக் குழந்தைகிட்ட
கொடுக்கிற மாதிரியான கண்டிஷன்லதான் அந்த ருத்ரவீணை
என்கிட்ட வந்தது.
-
ஆனாலும், அந்த ருத்ரவீணையை வச்சுக்கிட்டே என் குருஜி எனக்கு
சொல்லிக் கொடுத்த பயிற்சிகளை ரெண்டே நாள்ல முடிச்சிட்டேன்.
அப்பதான் குருஜிக்கு என்னோட உண்மையான ஆர்வம் தெரிய
வந்தது. அப்பாவுக்கும் அவருக்கும் இடையில நடந்த ரகசிய
உரையாடலை அப்படியே மறந்துட்டு, எனக்குப் புது ருத்ரவீணை
வாங்கித் தரச் சொன்னார்
-
அப்பாகிட்ட. 16 வயசுல எனக்குக் கிடைச்ச அந்த
ருத்ரவீணையைதான் இப்ப வரை வாசிச்சிட்டிருக்கேன்.
-
சிதார் கத்துக்கிட்டதைவிட சீக்கிரமா ருத்ரவீணையைப் பழகினேன்.
பத்து வருஷங்கள்ல கத்துக்க வேண்டிய விஷயங்களை ஒரே
வருஷத்துல கத்துக்கிட்டதா என் குருஜி பாராட்டினார். அதுக்கு
அடுத்த வருஷமே அகிலபாரதிய ஆகாஷ்வாணி சங்கீத் ஸ்பர்தா
நடத்தின ருத்ரவீணை போட்டியில முதல் பரிசு வாங்கினேன்.
-
ஆல் இந்தியா ேரடியோவோட ஆஸ்தான வாசிப்பாளரானேன்.
கர்நாடகா யூத் ஃபெஸ்டிவல்ல தொடர்ந்து மூணு வருஷங்கள் பரிசு
வாங்கினேன். அப்பலேருந்தே ருத்ரவீணையும் என் வாழ்க்கையில
ஒரு அம்சமாயிடுச்சு...’’ - நீண்ட அறிமுகத்துக்குப் பிறகு
ருத்ரவீணையைப் பற்றியும் நமக்கு அறிமுகம் செய்கிறார் திருமதி
ஹெக்டே.
-
------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33019
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: ருத்ர வீணையை வாசிக்கும் ஒரே பெண் கலைஞர் ஜோதி ஹெக்டே

Post by ayyasamy ram on Sun Sep 04, 2016 4:38 pm


-
இசைக்கருவிகளுக்கெல்லாம் தாய் ருத்ரவீணை. கம்பியுள்ள
இசைக்கருவிகள் எல்லாம் இதற்குப் பிறகே
வடிவமைக்கப்பட்டவையாம். பார்வதியின் ரூபத்தை அடிப்
படையாகக் கொண்டு சிவபெருமானால் படைக்கப்பட்ட
இசைக்கருவி இது என்கின்றன புராணங்கள்.

ஆரம்ப காலங்களில் தேவலோகத்தில் ஆராதனைக்கு மட்டுமே
இசைக்கப்பட்ட கருவியாம். ரிஷிகளும் முனிவர்களும் வேதங்கள்
உச்சரிக்கும் போது கூடவே இந்த ருத்ரவீணையும் மீட்டப்படுமாம்...
குறிப்பிட்ட பிரிவினரால் மட்டுமே, அதுவும் அவர்கள்
புனிதமானவர்களாகக் கருதப்பட்டால் மட்டுமே இந்தக் கருவியைத்
தொடவும் வாசிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது அந்தக்
காலத்தில்.

``ருத்ரவீணையைப் பத்தி இன்னும் இப்படி நிறைய மர்மங்கள்
இருக்கு. அதையெல்லாம் அறிவியல்தான் வெளிச்சத்துக்குக் கொண்டு
வரணும். மத்த இசைக்கருவிகளைப் போல, ருத்ரவீணையை யார்
வேணா வாங்கிட்டு வந்து வீட்ல வச்சிட முடியாது.

ஒவ்வொரு கலைஞரோட பிரத்யேகத் தேவைகளுக்கேற்ப
உருவாக்கணும். தயாரிப்பு மட்டுமல்ல... இந்தக் கருவியை
வாசிக்கிறதும்கூட ஒவ்வொரு கலைஞரோட உடல் மற்றும் சுவாசத்தோட
சம்பந்தப்பட்டது. ருத்ரவீணை எழுப்பற ஒலியானது வேற எந்த இசைக்
கருவியோட ஒலியோடவும் ஒப்பிட முடியாதது.

இதோட தந்திகள் ரொம்பவும் திக்கா இருக்கும். மீட்டறதும் ரொம்பக்
கடினமானது. மூணரைலேருந்து 5 கிலோ வரை எடை கொண்ட
ருத்ரவீணையை நம்ம மேல வச்சுத் தாங்கிட்டுத்தான் வாசிக்கணும்.

பயணங்களின் போது இதைத் தனித்தனியா பிரிச்சு, ரொம்ப
பத்திரமா எடுத்துட்டுப் போகணும். பெண்களுக்கு ஏற்றதில்லைனு
சொல்ல இதெல்லாம்தான் காரணங்கள். ஆதிகாலத்துல இந்தக்
கருவியை சில இனத்து ஆண்கள் மட்டும்தான் தொடணும்,
வாசிக்கணும்னு எழுதப்படாத விதி இருந்திருக்கு. பெண்கள்
ருத்ரவீணையை வாசிச்சாங்கன்னா, அவங்களுக்குக் குழந்தை
பிறக்காதுனு சொல்லப்பட்டது. இந்தக் கருவியை வஜ்ராசன நிலையில
உட்கார்ந்தபடிதான் வாசிக்கணும். அந்த நிலை பெண்களோட
கர்ப்பப்பைக்கு நல்லதில்லைங்கிறதுதான் காரணமா இருக்கணும்.

இதைப் பத்தி முதல் முதல்ல கேள்விப்பட்டதும் எங்கம்மா என்னை
இதை வாசிக்கவே விடலை. அப்போ எனக்குக் கல்யாணமாகலை.
ஆனா, எனக்கு அப்பவே ருத்ரவீணையின் மேல அளவுகடந்த காதல்.
-
-------------------------
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33019
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: ருத்ர வீணையை வாசிக்கும் ஒரே பெண் கலைஞர் ஜோதி ஹெக்டே

Post by ayyasamy ram on Sun Sep 04, 2016 4:38 pm

-
என்னால எக்காரணத்துக்காகவும் அதை வாசிக்காம இருக்க
முடியலை. அப்புறம் எனக்குக் கல்யாணமாகி, பையன் பிறந்தது
எல்லாம் தனிக்கதை. இன்னிக்கும் ருத்ரவீணையை பெண்கள்
வாசிக்கிறது தொடர்பான சர்ச்சை தொடர்ந்துட்டுதான் இருக்கு.

கர்ப்பமா இருந்தபோது என்னால வஜ்ராசன நிலையில உட்கார்ந்து
வாசிக்க முடியலைனு சுகாசனத்துல உட்கார்ந்து வாசிச்சேன்.
பிரசவத்துக்குப் பிறகும் அந்த நிலையையே தொடர்ந்தேன்.
-
மற்றபடி எப்பவோ சொல்லப்பட்ட மூட நம்பிக்கைகளை இப்பவும்
நம்பிட்டிருக்கிறதுல எனக்கு உடன்பாடில்லை...’’ - அழகான
அறிவியல் விளக்கங்களுடன் பேசுகிறவர், இந்தக் கலையைக்
கற்றுக் கொண்டதன் பின்னணியில் தான் சந்தித்த சவால்களையும்
போராட்டங்களையும் பற்றித் தொடர்கிறார்.
-
‘`என்னோட குரு பதக்ஜி ஹூப்ளியில இருந்தார். அதனால அந்த
ஏரியாவுலயே ஒரு காலேஜ்ல நானும் சேர்ந்தேன். காலையில
7 மணிக்கு நான் அவர் இடத்துக்குப் போகணும். ஒன்றரை மணி
நேரம் கிளாஸ் எடுத்துட்டுக் கிளம்பிடுவார். மறுபடி சாயந்திரம்
5 மணிக்குத்தான் வருவார். அதுவரை சாப்பாடு, தண்ணியெல்லாம்
மறந்து, அவர் சொல்லிக் கொடுத்ததையே பிராக்டீஸ்
பண்ணிட்டிருப்பேன். சாயந்திரம் வந்து, சொல்லிக் கொடுத்ததை
நான் சரியா வாசிக்கிறேனானு பார்த்து, தவறுகள் இருந்தா
திருத்துவார்.
-
தப்பே இல்லைனாதான் புதுப்பாடம் எடுப்பார். இதனால என்னால
பல நாட்கள் காலேஜ் போக முடியாது. பிரின்சிபால் கூப்பிட்டு
கன்னாபின்னானு திட்டியிருக்காங்க. காரணம் தெரிஞ்ச பிறகுதான்
சமாதானமானாங்க.
-
குருஜி பிந்து மாதவ் பதக்கிட்ட 15 வருஷங்கள் கத்துக்கிட்டேன்.
அப்புறம் பண்டிட் இந்துதர் நிரோடி, உஸ்தாத் ஆஸாத் அலிகான்...
இப்படி பெரிய பெரிய ஜாம்பவான்கள்கிட்ட பயிற்சி எடுத்துக்கிற
வாய்ப்பு கிடைச்சது. என்னோட முதல் குரு பதக்ஜி, `அவளுக்கு
என்கிட்டருந்து எப்படி ஞானத்தை வாங்கணும்னு தெரியும்.

என்கிட்டருந்து எல்லா ஞானத்தையும் வாங்கிக்கிட்டா’னு
ஒருமுறை சொன்னார். மாணவர்கள்கிட்டருந்து திறமையை
வரவழைக்கப் போராடற ஆசிரியர்களுக்கு மத்தியில
ஆசிரியர்கள்கிட்டருந்து முழு ஞானத்தையும் வாங்கணும்னு
நினைக்கிறதுதான் மாணவர்களோட லட்சணம்.
இன்னிக்கு என் ஸ்டூடன்ட்ஸுக்கு அதைத்தான் சொல்லிக்
கொடுக்கறேன்.

என்னோட ஆர்வம் தெரிஞ்சு அதுக்கு மதிப்பளிக்கிற வகையில
நல்ல ஆசிரியர்கள் அமைஞ்சதுகூட ஒருவகையில வரம்தான்னு
சொல்வேன். ஆஸாத் உஸ்தாத் அலி ஒரு இஸ்லாமியரா இருந்தாலும்,
அவங்க சமூகத்துல பெண்கள் இசை கத்துக்கிறதுக்கெல்லாம்
தடை இருந்த போதும், எனக்கு உதவினார்.

பொண்ணு தானே... இவளுக்கு எதுக்கு இந்த ஆசையெல்லாம்னு
நினைக்காம, என் திறமையையும் ஆர்வத்தையும் மதிச்சு கத்துக்
கொடுத்த ஆசிரியர்கள் கிடைச்சது என்னோட பாக்கியம்’’
என்கிறவர், தன் குடும்பத்தாரின் ஒத்துழைப்பையும் இங்கே
நன்றியுடன் நினைவு கூர்கிறார்.

``கச்சேரிக்காக பல நாட்கள் வெளியூர்ல தங்க வேண்டியிருக்கும்.
குடும்பத்தாரோட சப்போர்ட் இல்லைனா ரொம்பக் கஷ்டம். அந்த
வகையில நான் ரொம்ப லக்கி. கணவர், மகன், மருமகள்னு
எல்லாரும் எனக்கு ரொம்பவே சப்போர்ட் பண்றாங்க.

சிர்சி பக்கத்துல ஒரு அமைதியான கிராமத்துல வாழ்ந்திட்டிருக்கோம்.
நிறைய பசுமாடுகள், நாய்கள், பூனைகள் வளர்க்கறோம்.
மாடுகளுக்கு ஹிந்துஸ்தானி ராகங்களோட பெயர்களை வச்சிருக்கோம்.
காலையில எழுந்ததும் பால் கறக்கறது, சமைக்கிறது, வீட்டு
நிர்வாகம்னு பிசியா இருப்பேன். அறுவடை சீசன்ல விவசாயத்துல
இறங்கிடுவேன். இத்தனை வேலைகளுக்கு இடையிலயும் இசை
எனக்கு முக்கியம்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33019
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: ருத்ர வீணையை வாசிக்கும் ஒரே பெண் கலைஞர் ஜோதி ஹெக்டே

Post by ayyasamy ram on Sun Sep 04, 2016 4:39 pm


இசைக்கு ஆண், பெண் பேதமெல்லாம் இல்லை. ருத்ரவீணை வாசிக்கக்
கத்துக்க மிகப்பெரிய கமிட்மென்ட்டும் பொறுமையும் இருந்தா
யாருக்கும் அது சாத்தியம்தான்’’ என்கிற ஜோதிக்கு ஒரே ஒரு ஆசை.

``இதுவரை தமிழ்நாட்டுல, குறிப்பா சென்னையில கச்சேரி பண்ணாதது
ஒரு பெரிய குறை. சென்னை இசை ரசிகர்களை சந்திக்கிற நாளுக்காக
காத்திட்டிருக்கேன்...’’ - ஆசையைச் சொல்கிறவரின் தனி ஆவர்த்தன
அமர்க்களத்துக்காக நாமும் காத்திருக்கிறோம் ஆவலுடன்!

"ருத்ர வீணையை யார் வேணா வாங்கிட்டு வந்து வீட்ல வச்சிட முடியாது.
ஒவ்வொரு கலைஞரோட பிரத்யேகத் தேவைகளுக்கேற்ப உருவாக்கணும்.
தயாரிப்பு மட்டுமல்ல... இந்தக் கருவியை வாசிக்கிறதும்கூட ஒவ்வொரு
கலைஞரோட உடல் மற்றும் சுவாசத்தோட சம்பந்தப்பட்டது."

"என்னால பல நாட்கள் காலேஜ் போக முடியாது. பிரின்சிபால் கூப்பிட்டு
கன்னாபின்னானு திட்டி இருக்காங்க. காரணம் தெரிஞ்ச பிறகுதான்
சமாதானம் ஆனாங்க."
-
----------------------------
குங்குமம் தோழி
படங்கள்- இணையம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33019
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: ருத்ர வீணையை வாசிக்கும் ஒரே பெண் கலைஞர் ஜோதி ஹெக்டே

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum