ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

request அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Ramalingam K on Thu Sep 15, 2016 4:41 pm

தெரிந்து கொள்வோம்   தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)

 “தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”
                                      ஆத்திச்சூடி
                           (ஔவையார் அருளியது)


01. அறஞ் செய விரும்பு.


பதவுரை:
அறம் – தமக்கும் பிறருக்கும் இடையூறு விளைவிக்காதனவை.
செயல்  -  கடந்த கால நிகழ்வுகளை அனுபவமாகக் கொண்டு நிகழ்
காலத்திலும்   எதிர்காலத்திலும் எண்ணம் , சொல் ,செயல் ஆகிய
மூன்றினாலும் தூய்மையோடு வாழ்தல்.
விரும்புதல் – அழுத்தமாய்க்கருதுதல்; உறுதியாகக் கடைப்பிடித்தல்.

தெளிவுரை -
  கடந்த கால நிகழ்வுகளை தத்தம் அனுபவமாகக் கொண்டு, நிகழ் காலத்திலும் எதிர்காலத்திலும் எண்ணம் சொல் செயல் ஆகிய மூன்றினாலும் தூய்மைமைக் கடைப்பிடித்து, தமக்கும் பிறருக்கும் இடையூறு விளைவிக்காதனவற்றை வாழ்வில் உறுதியாக நடைமுறைப் படுத்தி ஒவ்வொருவரும் வாழவேண்டும்.
பாட்டியின் தொடக்க அறிவுரையே வெகு அற்புதம். பாட்டியின் தாள் போற்றி.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by மாணிக்கம் நடேசன் on Fri Sep 16, 2016 2:49 pm

நல்ல விளக்கம், நன்றி, தொடருங்கள்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Ramalingam K on Fri Sep 16, 2016 3:08 pm

தெரிந்து கொள்வோம்   தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)
                         “தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”
                                                          ஆத்திச்சூடி
                                              (ஔவையார் அருளியது)
02.       ஆறுவது சினம்.

பதவுரை:

ஆறு –அழிவு.

சினம் – பகைமை ; கோபம்; வெறுப்பு; கண்டிப்பு ;போர்.

தெளிவுரை :

   பகைமை, கோபம், வெறுப்பு, கண்டிப்பு , போர் ஆகிய வன்மைகளை முழுவதுமாக நீக்கி அவைகள் எவையும் இல்லாத வகையில் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிரு.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by T.N.Balasubramanian on Fri Sep 16, 2016 5:06 pm

ஆத்திச் சூடியை போற்றியே பின்பற்றுவோம் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Ramalingam K on Sat Sep 17, 2016 7:11 am


தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)
“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”
ஆத்திச்சூடி
(ஔவையார் அருளியது)

3. இயல்வது கரவேல்

பதப்பொருள் ;
இயல் - கூடியதாதல்;செய்யப்படுதல்; உடன்படுதல்; செய்யமுடிவது.
கரத்தல் - மறைத்தல்; கெடுதல்.
தெளிவுரை:
உன்னால் உனக்கே செய்துகொள்ள முடியக் கூடியனவற்றையும், பிறருக்குச் செய்ய முடிவனவற்றையும் என்னால் முடியவில்லையே என்று கபடமான முறையில் சொல்லிக்கொண்டிருக்காமல், அவற்றை உண்மையோடு நீயே செய்.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Ramalingam K on Sun Sep 18, 2016 5:18 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”

ஆத்திச்சூடி
(ஔவையார் அருளியது)

4. ஈவது விலக்கேல்
ஈ – > பவ்வீ > பணிவுள்ளவன்.
ஈவது = ஈ +அது > ஈயது> ஈவது
விலக்கு - வேண்டாததென்றுஒதுக்குகை
தெளிவுரை:
வாழ்வில் என்றும் பணிவுடைமையாகிய பண்பை வேண்டாததென்று ஒதுக்காதே.
அதாவது எப்போதும் பணிவுடன் வாழ்.

avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Ramalingam K on Mon Sep 19, 2016 4:58 pm


தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”

ஆத்திச்சூடி
(ஔவையார் அருளியது)

5. உடையது விளம்பேல்.

பதப்பொருள் :

உடைமை - சொந்தமானவை; உரிமையானவை.
விளம்பு - பேசு; சொல்.
விளம்பேல் – பேசாதே; சொல்லாதே.

தெளிவுரை:

இவ்வுலகில் இருக்கும் உன்னால் அனுபவிக்கப்படும் எதனையும் உனக்குச் சொந்தமானது என்று யாரிடமும் பேசாதே (அதாவது எல்லாவற்றிலிருந்தும் பற்றற்று வாழ்ந்து கொண்டிரு).

வியப்புரை:

உலக மானுட நிம்மதி முழுமைக்குமாவதை இரண்டே சொற்களில் சொல்லிவிட்டார், நம் தமிழ்ப்பாட்டி. முன் பாடலில் பணிவுடைமையை அறிவுறுத்தி, அடுத்ததாக இப்பாடலில் ஆசையைத் தவிர் என்று வாழ்வின் நிம்மதிக்கான உபதேசத்தை வெகு அழகாக கூறிவிட்டார். கௌதம புத்தர் இதற்காகவென ஒரு மதத்தையே ஏற்படுத்தினார். மிகப் பெரிய ஞானிகள் , மகான்கள் என்று கூறிக்கொண்டு சீருடை அணிந்தும், தம்மை வெவ்வேறு வகைகளில் சிறப்பித்துக் கொண்டும் இருப்பவர்கள் எல்லாம் சொல்லளவில் மட்டுமே பேசும் உபதேசம் ‘ஆசையைத் தவிர்’ . அதைச் சொல்லியதோடு , வாழ்ந்தும் காட்டியவர் நம் பாட்டி. அனைத்து நீதி நூல்கள், ஞான நூல்கள், யோக நூல்கள் மற்றும் பக்தி நூல்களின் சாராம்சத்தை போகிற போக்கில் இரு சொற்களில் சொல்லிச் சென்ற நம் பாட்டியின் அறிவுத்திறன், கவித்திறன் மற்றும் கல்வித்திறனை என்னென்று வியப்பது!
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Ramalingam K on Tue Sep 20, 2016 1:20 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”

ஆத்திச்சூடி
(ஔவையார் அருளியது)

6. ஊக்கமது கைவிடேல்.

பதப்பொருள்:

ஊக்கம் – உண்மை; முயற்சி.
அது – சுட்டுச்சொல்.
கை –செய்யத்தக்கது; கடைப்பிடித்தல்.
விடேல் - நீங்காதே;விலகாதே.

தெளிவுரை:

வாழ்வில் எப்போதும் உண்மையை விட்டு விலகாதே.

கருத்துரை:

உலகில் என்றும் மாறாமலும் அழியாமலும் இருப்பது எதுவோ அது, ‘உண்மை’ என்பதாகும். இது சம்ஸ்க்ருதத்தில் ‘சத்’ என்று சொல்லப்படுவது. சத்யம் என்றால் உண்மை. சத்யத்திற்கு எதிர்ச்சொல் அசத்யம். ஆனால் உண்மை அல்லாததற்கு நம் அழகு தமிழில் ‘பொய்’ எனும் தனிச்சொல்லே உண்டு.
உண்மை - உண்மை, வாய்மை, மெய்ம்மை என்று - மூன்று வழிகளிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டுவதாகும். கடைப்பிடித்தல் என்னும் சொல்லிற்குக் கைக்கொண்டு ஒழுகுதல் என்றும் பெயர்.
உள்ளத்தால் பொய்யாமை (உண்மை), வாயினால் பொய்யாமை (வாய்மை), உடம்பால் - மெய்யால் பொய்யாமை (மெய்ம்மை) என்று மூன்று வகையில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய இந்த ஒழுகலாற்றிற்குத் திரிகரண சுத்தி என்று பெயர்.
மனத்தாலும், சொல்லாலும், செயலாலும் ஆகிய மூவழிகளாலும் எவ்வழியிலும் தவறாமல் கைக்கொண்டு ஒழுகவேண்டுவதுதான் உண்மை . ஆதலால் ‘ உண்மையதனைக் கைவிடேல்’ என்பதை நம் பாட்டி, ‘ஊக்கமது கைவிடேல்’ என்று இன்னும் அற்புதமாக சுருங்கச் சொல்கிறார். நழுவ விடாமல் கைக்கொண்டு ஒழுக வேண்டுவதால் கைவிடேல் என்கிறார்.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by சிவனாசான் on Tue Sep 20, 2016 7:52 pm

அருமையான விளக்கம். நன்று.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2734
மதிப்பீடுகள் : 986

View user profile

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Ramalingam K on Wed Sep 21, 2016 8:13 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”

ஆத்திச்சூடி
(ஔவையார் அருளியது)

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4 ( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”

7. எண்ணெழுத் திகழேல்.

பதப்பொருள்:

எண் – அறிவு; இலக்கம். உணவு -
எழுத்து – கல்வி; தரித்திரம்; ஏழ்மை.
இகழேல் – அவமதிக்காதே.

தெளிவுரை:

i. கல்வி அறிவை ஒன்றோடொன்று ஒப்பிட்டு அவற்றுள் உயர்வு தாழ்வு பாராட்டி அவமதிக்காதே.
ii. செல்வந்தனோடு ஒப்பிட்டு கல்வியறிவாளனை அவமதிக்காதே.
iii. உண்ணும் உணவையும் ஒருவருடைய ஏழ்மையையும் அவமதிக்காதே.

கருத்துரை:

i. மனித வாழ்வின் மகிழ்ச்சிக்கும் மாண்பிற்கும் பற்பல துறைகளில் கல்வி அறிவு தேவைப்படுகிறது. அவை இலக்கியம், இலக்கணம், கணிதம், மருத்துவம், பொறியியல், கட்டடம், ஓவியம், சிற்பம், இயற்பியல், அறிவியல், வேதியியல் ,வானியல், கடல்வளம், தச்சுக்கலை, பொன்- இரும்பு முதலிய உலோகக்கலை,வண்ணம் தீட்டல் எனப் பல்வேறு வகைப்படுபவை. ஒவ்வொரு கல்வியாலும் மானுட வாழ்விற்கு அவ்வகையிலாகும் அறிவு கண்டிப்பாக தேவைப்படுகிறது. அவ்வாறான கல்வி அறிவில் உயர்வு தாழ்வு பாராட்டி அவற்றுள் பேதம் பார்த்து எவ்வகைக் கல்வியறிவையும் ஒன்றைவிட பிறிதொன்று தாழ்ந்தது என்று கருதக் கூடாது என்பது பொருள்.

ii. எண்ணெழுத்து என்றால் கல்விகற்ற அறிவாளன் என்னும் பொருளும் உண்டு. செல்வந்தனோடு ஒப்பிட்டு கல்வியறிவாளனை அவமதிக்காதே என்றும் பொருள் கொள்ளலாம்.

iii. உண்ணும் உணவு அது பசியைப் போக்கி, உடல் ஆரோக்கியத்தையும் கொடுக்குமானால் அதைத் தாழ்த்திப் பேசக் கூடாது. அதுபோலவே ஒருவருடைய ஏழ்மையையும் தாழ்த்திப் பேசக்கூடாது.

avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Ramalingam K on Fri Sep 23, 2016 10:03 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”

ஆத்திச்சூடி
(ஔவையார் அருளியது)

8. ஏற்பது இகழ்ச்சி

பதப்பொருள் :

ஏற்றல்- பிறிதொருவரை அண்டிப் பிழைத்தல்.
இகழ்ச்சி –அவமதிப்பு.

தெளிவுரை :

பிறரை அண்டிப் பிழைப்பு நடத்துதல் என்பது அவமதிப்பை உண்டாகும்.

கருத்துரை:

ஒருவர் தாமே சுயமாகவும் கௌரவமாகவும் வாழ்வதை விட்டு, எவ்வகை உறவாயினும் எத்தகை நட்பாயினும் அல்லது வேறு எவராயினும் அவர்களைச் சார்ந்து வாழ்தல் என்பது அவ்வாறு சார்ந்து வாழ்வருக்கு அவமதிப்பைத் தரும் என்பது கருத்து.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Ramalingam K on Sat Sep 24, 2016 10:34 am

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”

ஆத்திச்சூடி
(ஔவையார் அருளியது)

9. ஐய மிட்டுண்.

பதம் பிரித்த பாடல்
{ஐயம் இட்டு உண் }

பதப்பொருள் :

ஐயம் – நெருக்கம், அருகில் இருப்பவர்.
இடுதல் – கொடுத்தல்.
உண் – உண்ணுதல்; சாப்பிடுதல்.

தெளிவுரை:

உணவு உண்ணும்போது உன் அருகில் இருப்பவருக்கும் தேவைப்படுமாயின் அவருக்கும் கொடுத்து நீயும் சாப்பிடு.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Ramalingam K on Sun Sep 25, 2016 10:11 pmதெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”

ஆத்திச்சூடி
(ஔவையார் அருளியது)


10. ஒப்புர வொழுகு.

பதப்பொருள் :
ஒப்புரவு – ஒற்றுமை.
ஒழுகு- நெறிப்படி நட; கடைப்பிடி.

தெளிவுரை :

எவருடனும் பிரிவினை பாராட்டாது எல்லோரிடமும் ஒற்றுமையைக் கடைப்பிடித்து வாழ்.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by T.N.Balasubramanian on Mon Sep 26, 2016 5:39 pm

அன்றே சொன்னார்
நன்றே சொன்னார்
ஒளவை அன்னை,
"ஒப்புர வொழுகு."

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Ramalingam K on Tue Sep 27, 2016 6:51 am


தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”

ஆத்திச்சூடி
(ஔவையார் அருளியது)

11. ஓதுவ தொழியேல்

பதப்பொருள்:
ஓதல் – நேசித்தல்; வேட்டல்; விரும்புதல்.
ஒழிதல் – விடுதல்

தெளிவுரை:

எப்போதும் பிறரை அன்பு பாராட்டி நேசிப்பதை விட்டு விலகாதே.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by T.N.Balasubramanian on Tue Sep 27, 2016 8:39 am

அன்றே கூறினார் அருமையாக அவ்வையார் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Ramalingam K on Wed Sep 28, 2016 7:57 am

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”

ஆத்திச்சூடி
(ஔவையார் அருளியது)


12. ஒளவியம் பேசேல்.


பதப்பொருள்:

ஒளவியம் - பொறுமையின்மை.
பேசுதல் – சொல்லுதல்.

தெளிவுரை:

எதனையும் எப்போதும் யாரிடமும் பொறுமையின்றி அவசரப்பட்டுப் பேசாதே.
(எப்போதும் எங்கேயும் எவரிடமும் நிதானமாகவும் பொறுமையுடனும் பேசு).
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Ramalingam K on Thu Sep 29, 2016 6:46 am


தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”

ஆத்திச்சூடி
(ஔவையார் அருளியது)


13. அஃகஞ் சுருக்கேல்.

பதப்பொருள் :

அஃகம் - தானியம்; விலைப்பொருள்.
சுருக்குதல் - குறைத்தல்; உள்ளிழுத்தல்.

தெளிவுரை :

உணவு தானியங்களைக் குறைவாகப் பயிர்செய்து மக்களுக்கான உணவு உற்பத்தியைக் குறைத்துவிடாதே.
(உழவர்கள் மிகுதியான விளைநிலங்களில் பயிர் செய்து, மக்களுக்கான உணவு உற்பத்தியைப் பெருக்கி, உணவுப் பற்றாக்குறை நிலை இல்லாமல் செய்தல் வேண்டும்).
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by சிவனாசான் on Thu Sep 29, 2016 2:03 pm

நல்ல பதிவு .
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2734
மதிப்பீடுகள் : 986

View user profile

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Ramalingam K on Fri Sep 30, 2016 8:03 am


தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)

அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”
(ஔவையார் அருளியது)

14. கண்டொன்று சொல்லேல்.

பதப்பொருள்:

காணல் – மனத்தால் குறித்தல்; ஊகித்தல்; உத்தேசித்தல்; உத்தேசம்; விருப்பம்.

தெளிவுரை:

மனத்தில் தோன்றுவதை (ஊகிப்பதை) எல்லாம் வெளியில் சொல்லிக்கொண்டு இருக்காதே.
(எதையும் பேசுமுன் ஆராய்ந்து தெளிந்து பிறருக்கு நன்மை தரக்கூடிய உண்மையானவற்றை மட்டுமே பேசு)
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by M.Jagadeesan on Fri Sep 30, 2016 8:23 am

கண்ணால் கண்டதற்கு மாறாக வேறொன்றைச் சொல்லாதே !

என்று குழந்தைகளுக்கு ஒளவை சொல்கிறாள் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Ramalingam K on Fri Sep 30, 2016 8:36 am

ஆத்திச் சூடி அனைவருக்கும் நம் ஔவை தந்தது தானே ஐயா.

அதனைக் குழந்தைச் சொத்தாகவும் கொள்ளலாம்.

நாம் அனைவரும் பரம்பொருளின் குழந்தைகள் தானே .

ஔவையின் பார்வை உயர்நோக்கு.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by M.Jagadeesan on Fri Sep 30, 2016 8:57 am

நான் சொல்ல வந்தது வேறு . உங்கள் உரை மாறுபட்டு இருப்பதைக் குறிப்பிடுகிறேன் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Ramalingam K on Fri Sep 30, 2016 9:22 am

[You must be registered and logged in to see this link.] wrote:நான் சொல்ல வந்தது வேறு . உங்கள் உரை மாறுபட்டு இருப்பதைக் குறிப்பிடுகிறேன் .
[You must be registered and logged in to see this link.]

உரை மாறுபடவில்லை ஐயா.  ஆத்திச் சூடி  ஆரம்பப்  பள்ளிச் சிறார்களுக்கு ஓரளவு பொருந்துவது.

உண்மையில் பார்க்கப்போனால், அது பல்கலைக் கழகப் பேராசிரியர்களின் ஆராய்ச்சிக்கு உகந்த ஓர் அற்புதப் படைப்பு என்பது அடியனின்  கருத்து.

மதிப்பு  மிகுந்த  அந்த  வைரத்தைக்     கூழாங்கல்லாகக்  கருதி,   விளயாடும் சிறுவர்கள் போல்    தம் உண்டி வில்லில் வைத்து  மரக்கிளையில் இருக்கும் குருவியை  இதுவரை     நாம் அடித்து  விளையாடிக் கொண்டு இருந்தோமோ என எண்ணவைக்கின்றன அந்த அற்புத மொழிகள்.

அதனால்தான் ஐயா இப்பதிவிற்குத் "தெரிந்து கொள்வோம் தேன் தமிழை" என்று தலைப்பிட்டோம்.

  வணக்கம் ஐயா!  இவை மறுப்பல்ல - அடியனின் உள்ளத் தவிப்பு.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by M.Jagadeesan on Fri Sep 30, 2016 9:50 am

ஒரு பாடலுக்கு உரை எழுதும் முன்பாக , அப்பாடலுக்கு நம்முடைய ஆசிரியர்கள் எவ்வாறு பொருள் கூறினார்கள் என்பதை முதலில் மனதில் கொள்ளவேண்டும் .இரண்டாவதாக பிற உரையாசிரியர்களின் கருத்தை ஊன்றிப் படிக்கவேண்டும் .

இவ்விரண்டையும் விடுத்து மனம்போன போக்கிலே நாம் உரை எழுதக்கூடாது .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

request Re: அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum