ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எல்லாம் பிறர்க்காகவே!
 ayyasamy ram

பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
 ayyasamy ram

ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
 ayyasamy ram

அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
 ayyasamy ram

இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
 ayyasamy ram

ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கவிதை
 Dr.S.Soundarapandian

நதிக்கரை - கவிதை
 Dr.S.Soundarapandian

மிஸ்டர் பெத்தேரி படுக்கை அறையில் ! (பின்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஈச்ச மரங்களுக்கு மேலே அவள் முகம் ! (ஈராக் நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

பின்லாந்தில் எல்லாம் இருக்கிறது ! (பின்லாந்து நாட்டின் இசைப்பாடல்)
 Dr.S.Soundarapandian

மின் நூல்கள்
 aeroboy2000

ஆங்கில நாவல்கள் தமிழில்
 aeroboy2000

தொடத் தொடத் தொல்காப்பியம்(461)
 Dr.S.Soundarapandian

முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
 Dr.S.Soundarapandian

புகைப்படம் - கவிதை
 Dr.S.Soundarapandian

நீ என்ன தேவதை – கவிதை
 Dr.S.Soundarapandian

எனக்குன்னா எரிச்சல் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

வேலன்:-புகைப்படத்தினை வேண்டியவாறு மாற்றி பயன்படுத்திட -Cpix
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

அந்த நாள் -செப் 22 --2016
 T.N.Balasubramanian

அறிமுகம் சந்திரசேகரன்
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
 ayyasamy ram

2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
 ayyasamy ram

பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
 ayyasamy ram

7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
 ayyasamy ram

இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
 ayyasamy ram

நான் சாகவில்லை!
 Dr.S.Soundarapandian

விஷ சேவல் கோழி மீன்
 Dr.S.Soundarapandian

வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

. விநோதமான வேலை!
 Dr.S.Soundarapandian

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
 Dr.S.Soundarapandian

வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
 Dr.S.Soundarapandian

‘மெர்சல்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் -தீபாவளிக்கு வெளியாகிறது
 ayyasamy ram

உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
 ayyasamy ram

தொலைந்து போன நாட்கள் – கவிதை
 ayyasamy ram

பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
 ayyasamy ram

ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
 ayyasamy ram

இந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்
 ayyasamy ram

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
 T.N.Balasubramanian

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி
 ayyasamy ram

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
 ayyasamy ram

மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
 ayyasamy ram

சின்னச் சின்ன வரிகள்!
 Pranav Jain

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் மேஜிக் எதுவுமில்லை - மன்மோகன் சிங்
 Pranav Jain

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
 T.N.Balasubramanian

கார்பொரேட் விளம்பரமும் & வேர் கொண்ட பருப்பு பாகுபட்டு
 T.N.Balasubramanian

ஐபோன் பரிசு
 T.N.Balasubramanian

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 T.N.Balasubramanian

குந்தியும் நிஷாத பெண்களும்
 ayyasamy ram

கா(த)ல் பந்து – கவிதை
 Dr.S.Soundarapandian

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Dr.S.Soundarapandian

நான் விட்டுவிடமாட்டேன் !
 Dr.S.Soundarapandian

ஆறு உனக்குள் ஓடுகிறது ! (தென் கொரியாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
 Dr.S.Soundarapandian

இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
 Dr.S.Soundarapandian

செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
 Dr.S.Soundarapandian

முத்து லட்சுமி ராகவன் " பூ கோலம் போடவா"
 ANUSUYA DHURGAIMUTHU

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஔவையின் அகவலில் யோக நெறி

View previous topic View next topic Go down

request ஔவையின் அகவலில் யோக நெறி

Post by Ramalingam K on Sat Sep 17, 2016 8:01 am

தெரிந்து கொள்வோம் தன் தமிழை 5. (ஔவையார் அகவல்)  
தமிழ்ப்பாட்டி தரும் தகைமிகு யோக நெறி
(ஔவையார் அருளிய விநாயகர் அகவல்)

ஒன்றேயாகிய பரம் பொருளை ஔவையார் ஸ்ரீ குருதேவராகவே காண்பதாக அகவல் வரிகள் அமைந்துள்ளன. இந்த அகவல் ஒரு அற்புதமான யோக நூல். அகவலின் இறுதி அடி, “வித்தக விநாயக! விரைகழல் சரணே”  என்று முடிவடைகிறது. ஆகையால் அகவலின் இரண்டிரண்டு அடிகளையும், ‘வித்தக விநாயக’ என்பதை முன்னிட்டு பொருள் கொள்வது ஔவையின் உபதேசத்தைப் புரிந்து கொள்ள உதவும்.

நாயகர் என்றால் மேலானவர்- தலைவர் என்று பொருள். அதாவது இவ்வுலகில் வாழும் அனைத்து உயிரிகளுக்கும் மேலானவர் – தலைவர் - உயர்ந்தவர் என்பது பொருள்.

‘வி’ என்பது உயர்வு சிறப்பு கருதி வந்த பெயர் முன்னொட்டு.  

ஆக விநாயகர் என்றால் உயினினங்களில் மேலானவற்றிற்கெல்லாம் மேலானவர் என்பது உண்மைப்பொருள். அவர் குருதேவரைத் தவிற வேறு யாராக இருக்க முடியும்!

வித்தகம்   என்றால் அறிவு; கல்வி;  சின்முத்திரை  என்று பொருள்.
ஆக “வித்தக விநாயக” என்னும்  சொற்றொடர், “சின்முத்திரையிட்டு அறிவின் திருவுருவாய் விளங்கி மானுடப் புறக்கண்களுக்குக் காட்சியாகும் பரம்பொருளேயாகிய ஸ்ரீகுருதேவா !” என்ற அறிவுப் பூர்வமான பொருள் கொள்ளப்படுகிறது.

அதன்படி ஔவையார் அருளிய விநாயகர் அகவலின்  அடுத்த இருஅடியின் பொருளைக் காண்போம் :

வித்தக விநாயக!
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்ப  (4)

பொன் – தங்கம் போன்ற பிரகாசம்.
அரை – இடை; அருமை ; விருப்பின்மை;
ஞா – பொருந்தி இருத்தல்.
பூ -  பூமி; பிறப்பு; மென்மை; அழகு.
துகில் -  ஆசாரம்; ஒழுகலாறு.
ஆடை – செம்மைகட்டுதல்; நலம் பாராட்டுதல்.
வன்னம் – எழுத்து; கல்வி; இலக்கணம்.
மருங்கு – நூல்.
வளர்தல் –மிகுதல்.
அழகு –சிறப்பு; நற்குணம்.
எறித்தல்  - ஒளிவீசுதல் ; பரத்தல் ; பெருமையுடன் கூடிய புகழை அடைதல்

தெளிவுரை :

சின்முத்திரையிட்டு அறிவின் திருவுருவாய் விளங்கி மானுடப் புறக்கண்களுக்குக் காட்சியாகும் பரம்பொருளேயாகிய  ஸ்ரீகுருதேவா !

உலக இருப்புக்கள் யாவற்றிலும் பற்றின்மை ( விருப்பு-வெறுப்பு இல்லாமை) என்னும் உயர்ந்த ஒழுக்கத்தைச் செம்மையாகக் கடைப்பிடித்து , மென்மைகூடிய அழகோடு சுத்த தங்கம் போல் ஒளிர்பவர் தாங்களே !
இலக்கண , இலக்கிய நூல்களின் ஞானத்தில் மிகுந்தவராய் நற்குண சீலராய் பெருமையுடன் கூடிய புகழை உடையவரும்  தாங்களே !
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: ஔவையின் அகவலில் யோக நெறி

Post by Ramalingam K on Sun Sep 18, 2016 5:05 pm

தெரிந்து கொள்வோம் தன் தமிழை 5. (ஔவையார் அகவல்)  

தமிழ்ப்பாட்டி தரும் தகைமிகு யோக நெறி

(ஔவையார் அருளிய விநாயகர் அகவல்)

வித்தக விநாயக!
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்           (6)

பதப்பொருள்:
பேழை - பெட்டி; பெருமை; உயர்வு.
வயிறு - உதரம்; உள்ளிடம்; மனம்.
பாரம் – பொறுப்பு.
பெரும்பாரம் – பெரிய பொறுப்பு.
கோடு – மலை; உயர்வு, உறுதி.
வேழம் – யானை; இனிப்பு .
முகம் ; வாய்; சொல்.
விளங்குதல் - ஒளிர்தல்; தெளிவாதல்; விளக்கமாதல்; பளபளப்பாதல்; பெருகுதல்; மிகுதல்; அறிதல்.
சிந்தூரம் – சந்தன அங்கி.

தெளிவுரை :

சின்முத்திரையிட்டு அறிவின் திருவுருவாய் விளங்கி மானுடப் புறக்கண்களுக்குக் காட்சியாகும் பரம்பொருளே ! ஸ்ரீகுருதேவா !

      மானுடர்களை ஆத்ம வித்யாவால் உய்வித்து அவர்களுக்கு ஆன்ம விடுதலையை அளிக்கவேண்டும் என்னும் உயர்ந்த பெரிய பொறுப்பை  உள்ளத்தில் கொண்டு அப்பொறுப்பை  நிறைவேற்றுவதில் மலையைப் போல் உயர்ந்தும் உறுதியாகவும் இருப்பவர் தாங்களே!
இனிய சொல்லமிர்தம் கொண்டவர் ; சந்தன வண்ண அங்கியில் விளக்கமாகுபவரும்  தாங்களே!
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: ஔவையின் அகவலில் யோக நெறி

Post by Ramalingam K on Mon Sep 19, 2016 5:06 pm

தெரிந்து கொள்வோம் தன் தமிழை 5. (ஔவையார் அகவல்)

தமிழ்ப்பாட்டி தரும் தகைமிகு யோக நெறி

(ஔவையார் அருளிய விநாயகர் அகவல்)

வித்தக விநாயக!
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் (8)

பதப்பொருள்:

அஞ்சு –அச்சம்.
கரம் –கை; திடம்.
அங்குசம் -விரல்
பாசம் - அன்பு
நெஞ்சம் –அன்பு.
குடிகொள்ளுதல்- நிலையாக குடியிருத்தல்.
நீலம் - இரக்கமுள்ள மனம்
மேனி- உடல்; அழகு.


தெளிவுரை :

சின்முத்திரையிட்டு அறிவின் திருவுருவாய் விளங்கி மானுடப் புறக்கண்களுக்குக் காட்சியாகும் பரம்பொருளே ! ஸ்ரீகுருதேவா !

உலக மானுடரின் அச்சத்தைப் போக்கக் கூடிய சின்முத்திரை பூண்ட திடமான கையை உடையவர் தாங்களே! தம்மை அண்டியவர்களுக்கு அன்போடு தொடு தீட்சை(ஸ்பர்ச தீட்சை) அளிக்கும் கைவிரல்களைக் கொண்டுள்ளவரும் தாங்களே !

தங்களிடமே அன்பு நிலையாகக் குடிகொண்டுள்ளது; பிறர்பால் இரக்க குணம் கொண்ட முழுவதும் அழகே உருவானவர் தாங்களே !
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: ஔவையின் அகவலில் யோக நெறி

Post by Ramalingam K on Tue Sep 20, 2016 1:21 pm

தெரிந்து கொள்வோம் தன் தமிழை 5. (ஔவையார் அகவல்)

தமிழ்ப்பாட்டி தரும் தகைமிகு யோக நெறி

(ஔவையார் அருளிய விநாயகர் அகவல்)

வித்தக விநாயக!
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)

பதப்பொருள் :

நால்தல் – துலங்குதல்.
வாய் - வாக்கு
நாலிரு - எட்டு
புயம் -திசை
மூன்று – கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்னும் முக்காலம்
கண் –அறிவு.
மும்மதம் – மூன்று + மதம்
மதம் – மகிழ்ச்சி
சுவடு- அடையாளம்.

தெளிவுரை:

சின்முத்திரையிட்டு அறிவின் திருவுருவாய் விளங்கி, மானுடப் புறக்கண்களுக்குக் காட்சியாகும் பரம்பொருளே ! ஸ்ரீகுருதேவா !
உலகின் எட்டு திசைகளிலும் வாழும் மக்கள் எல்லோராலும் ஏற்கப்பட்டு அவர்கள் யாவரும் முன்னேற்றம் அடையும் வகையில் ஞானோபதேசம் அளிக்கக்கூடியவர் தாங்களே !
கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்னும் முக்கால நிகழ்வுகளையும் அறியும் ஆற்றலுடையவர் தாங்களே! அதேபோல் துயரம் என்பதே எப்போதும் இல்லாமல் முக்காலத்திலும் மகிழ்ச்சி குடிகொண்டு, ஆனந்தத்தின் அடையாளமாக இருப்பவரும் தாங்களே !

avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: ஔவையின் அகவலில் யோக நெறி

Post by Ramalingam K on Wed Sep 21, 2016 8:18 pm

தெரிந்து கொள்வோம் தன் தமிழை 5. (ஔவையார் அகவல்)

தமிழ்ப்பாட்டி தரும் தகைமிகு யோக நெறி

(ஔவையார் அருளிய விநாயகர் அகவல்)

வித்தக விநாயக!
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் (12)


பதப்பொருள் :

இரண்டு –இரட்டிப்பான.
செவி - காது>கேள்வி>கல்வி>உசாவுதல்; ஆலோசித்தல்.
இலங்கு- தவசி.
பொன் –அணிகலன்; அழகு; ஒளி.
முடி – உயர்வு; உச்சி.
திரளுதல் – மிகுதல்.
முப்புரி – திறனாய்தலில் சிறத்தல் (Standard assessment).
நூல் – புத்தகம் > ஞானம்.
திகழ் - விளங்குதல் .
ஒளி – பிரகசம்; புகழ்.
மார்பு – நெஞ்சம் ; உள்ளம்; மனம்; அகம்.


தெளிவுரை:

சின்முத்திரையிட்டு அறிவின் திருவுருவாய் விளங்கி, மானுடப் புறக்கண்களுக்குக் காட்சியாகும் பரம்பொருளே ! ஸ்ரீகுருதேவா !

இகவழ்விற்கான வித்யா ஞானம், பரவாழ்விற்கான ஆத்மஞானம் ஆக இரட்டிப்பு ஞானத்தையும் ஆராய்ந்து தெளிந்து பிறருக்கு உபதேசிப்பவர் தாங்கள் அல்லவோ!

கடுமையான இராஜயோக நெறிகளாகும் தவத்தையே தம் அணிகலனாகக் கொண்ட உயர்ச்சியாகுபவரும் தாங்களே!

உருவாகவும் அருவாகவும் விளங்கும் உலக இருப்புக்கள் எதனைப் பற்றியும் திறனாய்தலில் மிகுந்த சிறந்த ஞானத்தைத் தன்னகத்தே கொண்டு புகழுடன் பிரகாசிப்பவர் தாங்களே!
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: ஔவையின் அகவலில் யோக நெறி

Post by Ramalingam K on Fri Sep 23, 2016 10:01 pm

தெரிந்து கொள்வோம் தன் தமிழை 5. (ஔவையார் அகவல்)

தமிழ்ப்பாட்டி தரும் தகைமிகு யோக நெறி

(ஔவையார் அருளிய விநாயகர் அகவல்)

தமிழ்ப்பாட்டி தரும் தகைமிகு யோக நெறி
(ஔவையார் அருளிய விநாயகர் அகவல்)

வித்தக விநாயக!
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே! (14)


பதப்பொருள் :

சொற்பதம் – இத்தன்மையது என்று பிறருக்கு விளங்கும் வகையில் வாயால் சொல்லி புரியவைத்தல்.
கடத்தல்- தாண்டுதல்;கடத்தல்.
துரியம் –தியான நிலை.
மெய்ஞ்ஞானம் - மெய்யறிவே ஆகும் பிரபஞ்சப்பேராற்றல்
அற்புதம் – வியப்பு.
நிற்றல் – நிலைத்து இருத்தல்.
கற்பகம் – வேண்டியதைத் தருவது.
களிறு- மதயானை

தெளிவுரை:

சின்முத்திரையிட்டு அறிவின் திருவுருவாய் விளங்கி, மானுடப் புறக்கண்களுக்குக் காட்சியாகும் பரம்பொருளே ! ஸ்ரீகுருதேவா !

இத்தன்மையது என்று பிறருக்கு விளங்கும் வகையில் வாயால் சொல்லிப் புரியவைக்க முடியாத வகையில் அந்த நிலைக்கு அப்பாலாகிய தியானத்தில் அமர்ந்து மெய்யறிவே ஆகும் பிரபஞ்சப்பேராற்றலை ஆத்ம தரிசனமாகக் காணும் பேறுபெற்றவர் தாங்களே!
மானுடராய்ப் பிறந்து மானுடருடன் மானுடராகவே வாழ்ந்துகொண்டிருந்தும் அனைவர்களிடம் இருந்து மாறுபட்டு விளங்கும் தங்களின் வாழ்வும் இருப்பும் வியப்பிற்குரியதே ! வேண்ட நினைப்பதை அறிவோய் நீ ! வேண்டக் கிடைப்பதை அருள்வோய் நீ ! நிலைத்து உறுதியாய் இருப்பதில் மதயானையைப் போல் சற்றும் பிறழாது தம் தவ ஒழுகலாறுகளில் நிலைத்து இருப்பவரும் தாங்களே !
(குறிப்பு - வேண்டுவதும் அருளுவதும் ஆத்ம ஞானம்)
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: ஔவையின் அகவலில் யோக நெறி

Post by Ramalingam K on Sat Sep 24, 2016 10:37 am

தெரிந்து கொள்வோம் தன் தமிழை 5. (ஔவையார் அகவல்)

தமிழ்ப்பாட்டி தரும் தகைமிகு யோக நெறி

(ஔவையார் அருளிய விநாயகர் அகவல்)

வித்தக விநாயக!
முப்பழ நுகரும் மூஷிக வாகன!
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டி (16)

பதப்பொருள் :

முப்பழம்- முப்பலன் > வினைப்பலன்> பழவினை(சஞ்சித கர்மம்), நுகர்வினை(பிராரப்த கர்மம்),
ஏறுவினை(ஆகாமிய கர்மம்) ஆகிய மூன்று வினைப்பயன்கள்.
நுகர்தல் – அனுபவித்தல்.
மூஷிகம் – எலி > இன்பம்,உற்சாகமுடைமை, களிப்பு, மகிழ்ச்சி,மதப்பு,அடக்கமுடைமை.
வாகனம் – ஆசாரம்; ஒழுக்கம்.
இப்பொழுது – இந்த இப்பிறவியில்.
என்னை – அடியேனை.
ஆட்கொள்ளுதல் –அடிமைகொள்ளுதல்.
வேண்டி –குறைநீக்க வேண்டுதல்.


தெளிவுரை:

சின்முத்திரையிட்டு அறிவின் திருவுருவாய் விளங்கி, மானுடப் புறக்கண்களுக்குக் காட்சியாகும் பரம்பொருளே ! ஸ்ரீகுருதேவா !
பழவினை(சஞ்சித கர்மம்), நுகர்வினை(பிராரப்த கர்மம்), வருவினை(ஆகாமிய கர்மம்) ஆகிய மூன்று வினைப்பயன்களையும் தவறாமல் தாமும் அனுபவித்துக்கொண்டு தம்மை நாடியவர்களையும் முறையாக அனுபவிக்கச் செய்வித்தும், ஆனாலும் அவற்றால் உண்டாகும் இன்பதுன்ப விளைவுகள் இயல்பானவையே என்று அவைகளைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை அளிப்பதும் தாங்களே! எவ்வளவு அமானுட ஆற்றல் உடையவராய் இருந்த போதிலும் அடக்கமுடைமையையே தங்களது அன்றாட ஒழுகலாறாகவும் கொண்டு விளங்குவதும் தாங்களே!

இந்த இப்பிறவியில் அடியேனையும் தங்களின் அடிமையாக ஏற்றுக் கொண்டு அடியனின் பிறவித்துயராகிய குறைகளைப் போக்கி அடியனக்கு ஆன்ம முக்தி அருள விழைந்ததும் தாங்களே !
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: ஔவையின் அகவலில் யோக நெறி

Post by Ramalingam K on Wed Oct 05, 2016 5:51 am

தெரிந்து கொள்வோம் தன் தமிழை 5. (ஔவையார் அகவல்)

தமிழ்ப்பாட்டி தரும் தகைமிகு யோக நெறி
(ஔவையார் அருளிய விநாயகர் அகவல்)

வித்தக விநாயக!
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்து (18)

பதப்பொருள் :
தாயாய் – அடியனைப் பெற்றெடுத்த அன்னையாகவே ஆகி.
எனக்கு - அடியனௌக்கு
தான் – தாங்களாகவே
எழுதல் – ஆத்ம வித்யாவைத் தொடங்கி வைத்தல்
அருளல் - கருணையோடு கற்பித்தல்.
மாய்தல் - அழிதல்
பிறவி – பிறப்பு –இறப்பு என்னும் சுழற்சி.
மயக்கம் –அறிவின் திரிபு ; அஞ்ஞானம்; அறியாமை.
அறுத்தல் –நீக்குதல்.

தெளிவுரை:

சின்முத்திரையிட்டு அறிவின் திருவுருவாய் விளங்கி, மானுடப் புறக்கண்களுக்குக் காட்சியாகும் பரம்பொருளே ! ஸ்ரீகுருதேவா !

அடியனைப் பெற்றெடுத்த அன்னையாகவே ஆகி அடியனுக்குத் தாங்களாகவே முன்விரும்பி
ஆத்ம வித்யாவைத் தொடங்கி வைத்து அதனைக் கருணையோடு கற்பிப்பவரும் தாங்களே !

முடிவே இல்லாமல் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும் பிறப்பு-இறப்பு என்னும் சுழற்சிக்குக் காரணமாகிய உலக இருப்புக்களின்பால் அடியனுக்கு இருக்கும் அடியனுடைய அறியாமையை நீக்கி அறிவுத்தெளிவைத் தந்தருளுபவரும் தாங்களே!
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: ஔவையின் அகவலில் யோக நெறி

Post by Ramalingam K on Fri Oct 07, 2016 4:51 pm

தெரிந்து கொள்வோம் தன் தமிழை 5. (ஔவையார் அகவல்)

தமிழ்ப்பாட்டி தரும் தகைமிகு யோக நெறி
(ஔவையார் அருளிய விநாயகர் அகவல்)

வித்தக விநாயக!
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)

பதப்பொருள் :

திருந்துதல்- செவ்வையாதல்; மேன்மையாதல்.
முதல்- அனைத்திற்கும் முதன்மையாதல்.
ஐந்தெழுத்து- குருவேநம என்னும் ஐந்தெழுத்து மகாமந்திரம்.
தெளிவு – விளக்கம்; மன அமைவு.
பொருந்துதல் – அடைதல்.
வருதல்- தாமாகவே தேடி வருதல்.
என் -அடியன் .
உளம் – நெஞ்சகம்.
தன்னில் –அதனில் .
புகுதல் –நுழைதல்.

தெளிவுரை:
 
சின்முத்திரையிட்டு அறிவின் திருவுருவாய் விளங்கி, மானுடப் புறக்கண்களுக்குக் காட்சியாகும் பரம்பொருளே ! ஸ்ரீகுருதேவா !

உலகில் இருக்கும் அனைத்து மகா மந்திரங்களிலும் முதன்மையானதும், செவ்வையானதும், மேன்மையானதும் ஆகிய  “குருவேநம” என்னும் ஐந்தெழுத்து மகாமந்திரத்தை அடியனுக்குப் பொருள் விளக்கம் தந்ததோடு அடியனது மனதில் அம்மந்திரமே எப்போதும் அமைந்திருக்குமாறு கருணையோடு அருளியதும் தாங்களே!

மேலும் அடியனைத் தேடிவந்து தாங்களாவே அடியனுடைய நெஞ்சகத்தில் அடியனுக்கு தெரிவிக்காமலேயே நுழைந்து அடியவன் வேறு - தாங்கள் வேறு என இருமை அல்லாமல் தங்களோடு அடியனையும் இரண்டறக் கலப்பித்து இருவரையும் ஒன்றேயாக வேதிசெய்வித்து அருளுவதாவதும் தாங்களே!

"நீயென நானென வேறில்லை  என்னும் நினை வருளித்
தாயென மோன குருவாகி வந்து தடுத் தடிமைச்
சேயெனைக் காத்தனையே பரமேநின் திருவருளுக்குக்
கேயென செய்யும்  கைம்மா  றுளதோ  சுத்த ஏழையனே"  - தயுமான சுவாமிகள்
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: ஔவையின் அகவலில் யோக நெறி

Post by Ramalingam K on Sun Oct 09, 2016 3:26 pm

தெரிந்து கொள்வோம் தன் தமிழை 5. (ஔவையார் அகவல்)

தமிழ்ப்பாட்டி தரும் தகைமிகு யோக நெறி
(ஔவையார் அருளிய விநாயகர் அகவல்)

வித்தக விநாயக!
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென (22)

பதப்பொருள்

குரு வடிவாகி – ஸ்ரீ குருதேவராக உருவம் எடுத்து அவதரித்து.
குவலயம் தன்னில்- இப்பரந்த பூமியில்.
திருவடி வைத்துத் – தம் திருவடிகளைப் பதிப்பித்து.
திறம் இது – வல்லமையோடு அறிந்து தெரிந்து கொள்ளவேண்டுவது இராஜயோக நெறிகளாகிய இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தரணை, தியானம், சமாதி ஆகிய இவைகளே என்று.
பொருள் என - மெய்ப்பொருளாகிய பரமாத்மாவை அடையும் மார்க்கம் என்றுஅறிந்து தெளிதல்.

தெளிவுரை:

சின்முத்திரையிட்டு அறிவின் திருவுருவாய் விளங்கி, மானுடப் புறக்கண்களுக்குக் காட்சியாகும் பரம்பொருளே ! ஸ்ரீகுருதேவா !

இப்பரந்த பூமியில் , ஸ்ரீ குருதேவராக உருவம் எடுத்துத் தாங்கள் அவதரித்ததோடு, தம் திருவடிகளை இங்கே பதிப்பித்து இப்பூமியில் மனிதரோடு மனிதராக வாழ்ந்துகொண்டு ஒவ்வொரு மானுடனும் ஆர்வத்துடனும் முழுமுயற்சியோடும் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டுவது இராஜயோக நெறிகளாகிய இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தரணை, தியானம், சமாதி ஆகிய அட்டாங்க யோக நெறிகளே என்றும் அந்நெறிகளே மெய்ப்பொருளாகிய பரமாத்மாவை அடையும் மார்க்கம் என்று அறிந்துகொள்ளவும் அந்நெறிகளில் யாவரும் தெளிவு பெறவும் அருளுவதாவதும் தாங்களே!
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: ஔவையின் அகவலில் யோக நெறி

Post by Ramalingam K on Fri Oct 14, 2016 5:48 pm

தெரிந்து கொள்வோம் தன் தமிழை 5. (ஔவையார் அகவல்)

தமிழ்ப்பாட்டி தரும் தகைமிகு யோக நெறி
(ஔவையார் அருளிய விநாயகர் அகவல்)

வித்தக விநாயக!
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே (24)


பதப்பொருள் :

வாடுதல் – மனதாலும் உடலாலும் வருத்தப்படுதல்.
வகை –தன்மை.
மகிழ்தல் – சுகம் பெறுதல்.
அருளல் –.கருணையோடு அளித்தல்.
கோடு – நடுவுநிலைமை.
ஆயுதம் – கருவி.
கொடுவினை - பாவம் புண்ணியம் என்னும் துயரத்தைத் தரும் வினைப்பயன்கள்.
களைதல் - நீக்குதல்.

தெளிவுரை:

சின்முத்திரையிட்டு அறிவின் திருவுருவாய் விளங்கி, மானுடப் புறக்கண்களுக்குக் காட்சியாகும் பரம்பொருளே ! ஸ்ரீகுருதேவா !

உலக வாழ்வின் நிமித்தமாக அடியனால் ஆற்றப்படும் செயல்களின் விளைவுகளால் மனதாலும் உடலாலும் வருத்தப்படாதத் தன்மையில் அடியேனுக்குச் சுகத்தைக் கருணையோடு அளிப்பதும் தாங்களே !

உலக உயிர்கள் அனைத்திடமும் அடியனின் வாழ்வின் நிமித்தமாக செய்யப்படும் அனைத்து விதமான செயல்பாடுகளிலும் நடுவுநிலைமை என்னும் கருவியால் செய்விக்கச்செய்து அடியனுக்குப் பாவம் புண்ணியம் என்னும் துயரத்தைத் தரும் வினைப்பயன்கள் புதியதாக ஏற்படாமலும் மேலும் முன்னதாகவே என்னிடம் இருக்கும் அத்தகைய வினைப்பயன்கள் என்னை விட்டு நீங்குமாறும் கருணையோடு அருளுவதும் தாங்களே !

[நம் பாட்டி குறிப்பிடும் சுகம் ஆத்ம வித்யா பழகலாறுகளால் கிடைக்கப்பெறுவது].
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: ஔவையின் அகவலில் யோக நெறி

Post by Ramalingam K on Wed Oct 19, 2016 8:06 pm

தெரிந்து கொள்வோம் தன் தமிழை 5. (ஔவையார் அகவல்)

தமிழ்ப்பாட்டி தரும் தகைமிகு யோக நெறி
(ஔவையார் அருளிய விநாயகர் அகவல்)

வித்தக விநாயக!
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி (26)

பதப்பொருள் :

உவட்டுதல் – மிகுதல்; திகட்டுதல்.
உபதேசம் –ஞானபோதனை.
புகட்டுதல் –உட்புகுத்துதல்.
செவி – காது; கேள்வி ஞானம்.
தெவிட்டுதல் –நிறைதல்.
ஞானம் –மெய்ஞ்ஞானம்; பிரபஞ்சப் பேராற்றலாகும் பரம்பொருளைப் பற்றிய அறிவுடைமை.
தெளிவு –விளக்கம்.
காட்டுதல் –அறிமுகம் செய்வித்தல்.


தெளிவுரை:

சின்முத்திரையிட்டு அறிவின் திருவுருவாய் விளங்கி, மானுடப் புறக்கண்களுக்குக் காட்சியாகும் பரம்பொருளே ! ஸ்ரீகுருதேவா !

கற்கக் கற்கப் போதும் என்று எப்போதுமே தெவிட்டாத மெய்ஞ்ஞான போதனைகளை அடியவனின் காதுகள் வழியாக, கேள்வி ஞானமாகக் கற்பித்து , அத்தகைய மெய்ஞ்ஞானம் அடியனுக்குள் நிறைந்து இருக்குமாறு செய்வித்து, மேலும் பிரபஞ்சப் பேராற்றலாகும் பரம்பொருளைப் பற்றிய அறிவுடைமை விளக்கங்களையும் அடியனுக்கு அறிமுகம் செய்வித்து அருளுவதாவதும் தாங்களே !

avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: ஔவையின் அகவலில் யோக நெறி

Post by Ramalingam K on Thu Oct 27, 2016 11:00 am

தெரிந்து கொள்வோம் தன் தமிழை 5. (ஔவையார் அகவல்)

தமிழ்ப்பாட்டி தரும் தகைமிகு யோக நெறி
(ஔவையார் அருளிய விநாயகர் அகவல்)

வித்தக விநாயக!
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளி (28)

பதப்பொருள் :

ஐம்புலன் – மெய், வய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து செயற்புலன்கள்.
அடக்குதல் – நெறிப்படுத்துதல்.
உபாயம் – வழி ; இராஜயோக நெறி என்னும் வழி.
இன்பு – இனிமை; இன்பம்.
உறுதல் – சம்பவித்தல், அமைத்தல் .
கருணை –அருள்; தயை.
இனிது –நன்மையாவது.
அருளல் – இரக்கப்பட்டுக் கொடுத்தல்.

தெளிவுரை:

சின்முத்திரையிட்டு அறிவின் திருவுருவாய் விளங்கி, மானுடப் புறக்கண்களுக்குக் காட்சியாகும் பரம்பொருளே ! ஸ்ரீகுருதேவா !

தத்தம் போக்கிற்கு அலைந்து திரியும் மெய், வய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து செயற்புலன்களையும் நெறிப்படுத்துதலுக்கு உகந்த வழியாக, ஆத்ம வித்யா என்னும் இராஜயோக நெறிகளை அடியேனுக்குப் பயிற்றுவித்து அவற்றைச் சரியாகப் பழகவும் செய்வித்தமை தாங்கள் இயல்பாகவே அடியனிடம் கொண்டுள்ள கருணையினாலும், மற்றும் அனைவருக்கும் நன்மை அளிக்கவேண்டும் என்னும் தங்களின் இரக்க குணத்தாலும் அனைவருக்கும் இன்பத்தை உண்டாக்கும் தயையினால் அருளியது தாங்களே !
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: ஔவையின் அகவலில் யோக நெறி

Post by Ramalingam K on Fri Oct 28, 2016 4:56 am

தெரிந்து கொள்வோம் தன் தமிழை 5. (ஔவையார் அகவல்)

தமிழ்ப்பாட்டி தரும் தகைமிகு யோக நெறி
(ஔவையார் அருளிய விநாயகர் அகவல்)

வித்தக விநாயக!
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)

பதப்பொருள் :

கருவி –குழப்பம்; மயக்கம்; மருட்சி
ஒடுங்குதல் - அடங்குதல்
கருத்து - விவேகம்
அறிவித்தல் -கற்பித்தல்
இருவினை – பாவம்,புண்ணியம் என்னும் இரு வினைகள்.
அறுத்தல்- நீக்குதல்
இருள் – அஞ்ஞானம்; மாயை
கடிதல் -ஓட்டுதல்

தெளிவுரை:

சின்முத்திரையிட்டு அறிவின் திருவுருவாய் விளங்கி, மானுடப் புறக்கண்களுக்குக் காட்சியாகும் பரம்பொருளே ! ஸ்ரீகுருதேவா !

மானுட வாழ்வில் உண்டாகும் குழப்பங்களை உண்டு பண்ணும் மயக்கம் முழுமையையும் தடுத்து நிறுத்தி, அம்மயக்கத்திலிருந்து விடுபடும் மெய்ஞ்ஞானத்தைக் கற்பித்து, அதன் விளைவாக வாழ்வின் செயல்பாடுகளில் உண்டாகும் பாவம் புண்ணியம் என்னும் இரு வினைப் பயன்களையும் நீக்குவதும், இறுதியில் அஞ்ஞானம் மொத்தமாக அகன்ற நிலையில் மெய்ப்பொருளைப் பாரெங்கும் காட்சியாக்குவதும் தாங்களே !
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum