ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 viyasan

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 ஜாஹீதாபானு

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 ayyasamy ram

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மறைநெறி நவிலும் நிறைமொழி

View previous topic View next topic Go down

request மறைநெறி நவிலும் நிறைமொழி

Post by Ramalingam K on Sun Sep 18, 2016 5:37 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -3 ( நீதி நூல் )

{நீதிநூல் – மாயூரம் முனிசீப், வேதநாயகம் பிள்ளை அவர்கள் அருளியது}

அவையடக்கம்

வெயிலுக்கு இடும்விளக்குப் போலும்யான் நீதிநூல் கூறல்


1.வெயிலினைச் சோதிசெய்வான் விளக்கிடல் போலுங்காகங்
குயிலினுக் கிசையுணர்த்துங் கொள்கையே போலு நட்டம்
மயிலினுக் குணர்த்துங் கான வாரண மெனவும் யாவும்
பயிலுல கிற்கு நீதி பகரயான் துணிவுற் றேனால்.

பதப்பொருள்:

வெயில் – சூரியன்
சோதிசெய்தல் – காட்டுதல்.
விளக்கு – கைவிளக்கு.
நட்டம் – நாட்டியம்; ஆடல்கலை
கானம் – காடு
வாரணம் - வான் கோழி ; காட்டுக்கோழி என்னும் பறவை

தெளிவுரை:

கைவிளக்கைக் கொண்டு, சுயம் பிரகாசமான சூரியனைக் காண்பித்தல் போலவும்,
இயற்கையாகவே இனிமையாகப் பாடும் குயிலுக்குக் காகம் இசை கற்பிக்க முயலுதல் போலவும்,
அழகிய நட்டியத்தைத் தன் பிறவியிலேயே கொண்டு ஆடும் மயிலுக்கு, வான் கோழி நாட்டியம் கற்பிக்க முற்படுவதுபோலும்,
அனைத்து நீதிகளையும் கற்றுத் தெளிந்த ஞானியர் நிறைந்த இப்புவியில் வாழும் மக்களுக்கு நானும் நீதிநெறிகளை இந்நூலின் மூலமாகப் போதிக்க விழந்த என் துணிவை என்னென்பதுவோ!

விளக்கவுரை :

நூலாசிரியரின் அவையடக்கமே அட்டகசமாக இருக்கின்றது. சூரியனைக் காண்பிக்கக் கைவிளக்கைத் துணையாகக் கொள்வதும்,
குயிலுக்குக் காகம் பாடக் கற்பிப்பதும், மயிலுக்கு வான் கோழி நாட்டியம் கற்பிப்பதும் அவ்வவற்றின் அறியாமை.

அதுபோலவே தானும் ஞானம் நிறைந்த இவ்வுலக மக்களுக்கு நீதி சொல்ல ஆசைப்படுகிறனே என் அறியாமையை என்னென்பது என்று அழகாக நூலுக்கு அவையடக்கம் அமைத்தமை ஆசிரியரின் நுண்மான் நுழைபுலத்தை வெளிப்படுத்துவதை உணரமுடிகிறது.

avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: மறைநெறி நவிலும் நிறைமொழி

Post by Ramalingam K on Mon Sep 19, 2016 4:54 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -3 ( நீதி நூல் )

மறைநெறி நவிலும் நிறைமொழி

{நீதிநூல் – மாயூரம் முனிசீப், வேதநாயகம் பிள்ளை அவர்கள் அருளியது}


அவையடக்கம்

ஆன்றோர் அறிவித்த வற்றையே அவர் முன் கூறுவேன்

2
பானுவின் கதிரை யுண்ட பளிங்கொளி செய்தல் போலும்
வானுலாங் கொண்டல் பெய்யுமழையினைத் தழையில்தாங்கித்
தானும்பெய் தருவைப் போலுந் தமிழொரு மூன்றுமாராய்ந்து
ஆனுவார் கவிசொல் வோர்முன் அறிவிலேன் பாடலுற்றேன்.

பதப்பொருள்:

பானு- சூரியன்
பளிங்கு – பளிங்குக் கல்
வாந்- ஆகாயம்
கொண்டல்- மேகம்
தழை – இலை
தரு – மரம்.
ஆனுதல் – நீங்குதல் ; தெளிதல்

தெளிவுரை:

சூரியனிடம் இருந்து ஒளியைப் பெற்ற பளிங்குக் கல் அவ்வொளியைத் தன்னிலிருந்தே பிரகாசிப்பதாகக் காட்சியளிப்பது போலவும், வானில் இருக்கும் மேகங்களிடம் இருந்து பெய்யப்பட்ட மழைநீரைத் தம் மண்டிய இலைகளில் தாங்கிப் பின், தன்னிடமிருந்து மழைபெய்வதைப்போல் காட்சியளித்து நீரை உதிர்க்கும் மரத்தைப்போலவும், இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ் வல்லுநகர்கள் அவற்றைத் தெளியக் கற்று அவர்கள் எனக்குக் காலத்தால் முன்பாகச் சொன்னவற்றைத்தான் ஏதோ நான் சொல்லுவதுபோல் உலகிற்கு என்னுடைய அறியாமையால் இந்நூலைப் பாடுகின்றேன்.

விளக்கவுரை :

நூலாசிரியர் இந்நூலில் சொல்ல வரும் கருத்துக்கள் புதியவையைப் போல் தோன்றினாலும் அவைகள் அனைத்தும் முத்தமிழ் அறிந்த வித்தகர்களால் தனக்கு முன்னதாகவே உலகிற்குச் சொல்லப்பட்டவைதான் என்கிறார். இருந்தாலும் தனது அறியாமையால் மீண்டும் அவற்றையே கூறப்போகும் என் அறியமையை என்னென்பது என்பது பொருள்.
அழகானதும் அற்புதமானதும் ஆகும் இந்த அவையடக்கப் பாடல் நூலாசிரியரின் பணிவைப் பகர்கின்றது - எளிமையை எடுத்துரைக்கின்றது.

avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: மறைநெறி நவிலும் நிறைமொழி

Post by Ramalingam K on Tue Sep 20, 2016 1:18 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -3 ( நீதி நூல் )

மறைநெறி நவிலும் நிறைமொழி

{நீதிநூல் – மாயூரம் முனிசீப், வேதநாயகம் பிள்ளை அவர்கள் அருளியது}


அவையடக்கம்

3. ஊமையர் பாடலை ஒக்கும் என் பாட்டும்

முடவரே யாட அந்தர் முன்னின்று பார்த்து வக்கத்
திடமொடு மூகர் பாடச் செவிடர் கேட் டதிச யிக்கக்
கடலுல கினிற்கண் டென்னக் கனவினுங்கலையைத்தேரா
மடமையே னுலகநீதி வகுத்திடத் துணிந்தேன்மன்னோ.

பதப்பொருள் :
முடவர்- ஊனமுற்ற கால்களை உடையவர்.
அந்தர் – கண்பார்வையற்ற குருடர்கள்.
மூகர் – வாய்பேச முடியாத ஊமையர்
செவிடர்- காதுகேட்க முடியாத செவிடர்கள்
மடமையேன் – அஞ்ஞானியகிய நான்

தெளிவுரை:

கண்பார்வை இல்லாத குருடர்கள் என்று அறிந்து கொள்ளும் திறன் ஏதும் இல்லாத அறிவிலியாகிய கால்கள் ஊனமுற்றவன், அக்குருடர்கள் தம் நடனத்தைக் கண்டு மகிழ்வார்கள் என்று அவர்கள் முன்பாக நடனமாடுவது போலும்;
காதுகேளாத செவிடர்கள் என்று அறிந்து கொள்ளும் திறன் ஏதும் இல்லாத அறிவிலியாகிய பேசும் திறனற்ற ஊமையானவன், அச்செவிடர்கள் தம் பாடலைக் கேட்டு அதிசயம் அடைவார்கள் என்ற உறுதியுடன் பாடுவது போலும்;
கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் ஞான கலாசாலையைக் கனவில் கூடப் பார்க்காதவனும் , அங்கு ஞானம் என்பதை ஒருநாள் கூட கற்காத அஞ்ஞானியும் ஆகிய நான், எத்தகைய துணிவோடு இந்த நீதிநூலை வகுத்துப் பாடிட முயற்சி மேற்கொண்டேனோ !

விளக்கவுரை :

“குருடர்கள் முன்பாக கால்கள் ஊனமுற்றவன் ஆடுவது அறிவீனம். அதுபோலவே செவிடர்கள் முன்பாக ஊமைகள் பாடுவதும் அறிவீனம். ஆனால் கடல்சூழ் இவ்வுலகில் வாழும் ஞானியர்கள் முன்பாக கனவில்கூட ஞானசபையைக் காணாத நான், நீதி வகுத்துப் பாடத் துணிந்தது எந்த வகை அறிவீனம் என்பதோ! ”என்று தன்னைத் தாழ்த்தி அவையடக்கம் பாடுகிறார் நீதிபதி. ஆகா என்ன பணிவு! “வித்யா ததாதி வினயம் – கல்வி பணிவைத் தருகிறது” என்னும் வேதவாக்கியத்தை நூலாசிரியர் மெய்ப்பிக்கின்றார்.


avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: மறைநெறி நவிலும் நிறைமொழி

Post by சிவனாசான் on Tue Sep 20, 2016 8:12 pm

அருமையான பதிவு அன்பரே>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2779
மதிப்பீடுகள் : 1007

View user profile

Back to top Go down

request Re: மறைநெறி நவிலும் நிறைமொழி

Post by Ramalingam K on Wed Sep 21, 2016 7:34 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -3 ( நீதி நூல் )

மறைநெறி நவிலும் நிறைமொழி

{நீதிநூல் – மாயூரம் முனிசீப், வேதநாயகம் பிள்ளை அவர்கள் அருளியது}


அவையடக்கம்

பசுவை நோக்காது பாலைக் கொள்வதுபோல் பாட்டை நோக்காது பயனைக் கொள்க.

4
பயன்கொள்வோ ரதனை நல்கும் பசுவுரு விலதென் றோரார்
வியன்சினை வளைவு நோக்கார் விளைந்தீங் கனிப றிப்போர்
கயங்கொள்சே றகற்றித் தெண்ணீர் கைக் கொள்வா ரென்ன நூலின்
நயன்கொள்வ தன்றிப் பாவி னவையைநோக் கார்மே லோரே.

பதப்பொருள் :
பசு உரு- பால் தரும் பசுவின் உருவ அமைப்பு.
ஓர்தல் – சிந்த்திதுப் பார்த்தல்
வியன்சினை - மரக்கிளை
கயம் –கீழ்மை.
நயன் – நன்மைதரும் நீதி
அவை –பாடல்களின் எண்ணிக்கை.

தெளிவுரை:

பசுதரும் பருகும் பாலின் சுவையையும் அதன் நன்மையையும் கருதிப்பார்பவர்கள் அப்பசுவின் உயரம், நிறம், கொம்பின் நீளம், வயது, போன்ற உருவ அமைப்பை ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள்.
நன்கு முற்றிப் பழுத்த இனிய சுவைமிகு பழத்தை உண்பவர்கள், அது விளைந்த மரத்தின் கிளை கோணலாக இருப்பதைக் கருத மாட்டார்கள்.
மிகு தாகத்தால் வாடுபவர்கள், குடிக்கும் தெளிந்த தண்ணீரின் அடியில் கீழ்மையான சேறு இருப்பதை நினைத்துப் பார்க்க மாட்டார்கள்.
அதைப்போலவே என்பாட்டில் உள்ள நன்மை பயக்கும் நீதிநெறிகளை ஏற்றுக் கொள்ளும் சான்றோர்கள் பாடல்களின் எண்ணிக்கையை அதிகம் என்று சொல்லமாட்டார்கள்.

விளக்கவுரை :

நீதி நூலில் பாக்களின் எண்ணிக்கை 614 என்பது அதிக எண்ணிகையில் இருப்பினும் அவற்றைக் கருதாமல், அவற்றில் கூறப்பட்டுள்ள நல்ல நீதிகளைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்று நூலாசிரியர் விண்ணப்பிக்கின்றார்.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: மறைநெறி நவிலும் நிறைமொழி

Post by Ramalingam K on Sat Sep 24, 2016 1:31 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -3 ( நீதி நூல் )

மறைநெறி நவிலும் நிறைமொழி

{நீதிநூல் – மாயூரம் முனிசீப், வேதநாயகம் பிள்ளை அவர்கள் அருளியது}

அவையடக்கம்

கடலுக்கு நீர் தரும் மழைபோல் கற்பித்தாரிடத்தே ஒப்புவித்தேன்

5
வேலைவா யுண்ட நீரை மேகஞ்சிந் தினுமே சிந்துங்
காலிடைக் கொண்ட நீரைக் கழனியக் காற்கு நல்கும்
பாலர்கற் றவையா சான்பாற் பகர்வர்யான் நாலு ணர்ந்த
சீலர்பாற் கற்றதன்னோர் செவியுற நவின்றே னம்ம.

பதப்பொருள் :

வேலை –கடல்.
சிந்துதல் –தெளித்தல்.
கால் – வாய்க்கால்.

தெளிவுரை:

கடலில் இருந்து சூரியனின் வெப்பத்தால் தான் முகந்து குடித்த நீரை மேகமானது மீண்டும் அந்த நீரையே அக்கடலிலேயே தெளித்து மழையைப் பெய்வித்தல் போலவும்;

ஏரி, கிணறு மற்றும் ஆறு போன்றவற்றிலிருந்து வாய்க்கால் வழியாகத் தான் பெற்ற விளை பயிர்களுக்காகும் நீரை அதேபோன்ற வயலின் கிளை வாய்க்கால் வழியாகவே பயிர்களுக்கு விளைநீரைக் கொடுப்பது போலவும் ;

குருகுலத்தில் ஸ்ரீகுருதேவரிடமிருந்து தாம் கற்ற கல்வியை அந்த குருதேவரிடமே ஒப்புவித்துக் காட்டும் மாணாக்கன் போலவும்;

இவ்வுலகில் நன்நெறிகளில் வாழ்ந்த சான்றோர்களிடம் நான் கற்ற கல்வியறிவை, ‘நீதிநூல்’ என்னும் பெயரில் அதே உலகத்தோர் செவிகளில் சொல்லுகின்றேனே ! ஐயகோ என் இத்தகைய அறியாமையாகிய செயலை என்னவென்பது!!


விளக்கவுரை :

நீதி நூலில் தாம் சொல்லப்போகும் நீதிகளை இவ்வுலகத்தில் வாழ்ந்த மற்றும் வாழ்கின்ற சான்றோர்களிடம் தான் நான் கற்றேன். அதனையே உங்களுக்கும் சொல்கின்றேன். “என்னே என் அறியாமை” என்பது நூலாசிரியரின் அவையடக்கம்.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: மறைநெறி நவிலும் நிறைமொழி

Post by Ramalingam K on Sat Oct 01, 2016 5:04 pm


தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -3 ( நீதி நூல் )

மறைநெறி நவிலும் நிறைமொழி

{நீதிநூல் – மாயூரம் முனிசீப், வேதநாயகம் பிள்ளை அவர்கள் அருளியது}

அவையடக்கம்

முறையைப் பழிப்பதாம் என் பாட்டைப் பழிப்பது

6
கோவிலைப் பழிக்கி னோரெண் குணனையும் பழித்த தொப்பாம்
காவினைப் பழிக்கின் ஆண்டார் கடிமலர்ப் பழித்த தொப்பாம்
வாவியைப் பழிக்கிற் கொண்ட வண்புனல் பழித்த தாமென்
பாவினைப் பழிக்கி னீதிப் பயனையும் பழித்த தாமே.

பதப்பொருள் :

எண்குணன் –பரம்பொருள்; எளிதில் அணுகத்தக்கவன்
கா - பூஞ்சோலை
ஆண்டார் - உடையோர்.
வாவி -நீர்இலை
வண்புனல் - பயன்தரும் நீர்

தெளிவுரை:

கடவுளுக்கென அமைக்கப்பட்டுள்ள திருக்கோவில்களைக் குறைகூறினால் அது கடவுளையே குறைசொல்லுவதற்கு நிகரானதாக அமையும்.
நல்ல மணம் பரப்பும் மலர்களைக் கொண்டுள்ள பூங்காவைனைக் குறைகூறினால் அப்பூங்காவில் மலர்ந்திருக்கும் மணம் வீசும் மலர்களைக் குறைகூறுவதாக ஆகிவிடும்.
நீர்நிலைகளைக் குறைசொன்னால், அதிலுள்ள பயன்தரும் நீரையே பழித்ததாகும்.
அதுபோலவே, என் படைப்பாகிய “நீதி நூலில் உள்ள” படல்களைத் தாழ்த்திச் சொல்வதால் அது நீதியின் பயனையே தாழ்த்திச் சொல்வதாகிவிடும்

விளக்கவுரை :

கடவுளின் எட்டுக்குணங்களாக (1) தன்வயத்தனாதல், (2) தூயஉடம்பினனாதல், (3) இயற்கைஉணர்வினனாதல், (4) முற்றுமுணர்தல், (5) இயல்பாகவே பாசங்களினின்று நீங்கல், (6) பேரருளுடைமை, (7) முடிவிலாற்றலுடைமை, (8) வரம்பிலின்பமுடைமை ஆகியன சொல்லப்படுகின்றன. அவை சரி என்றால் உலகில் மீதியுள்ள குணங்கள் எல்லாம் பின் எவருடையது என்னும் கேள்விக்குப் பதிலிருக்காது.

அனைத்துமாகும் பரம்பொருளுக்கு நற்குணம், தீய குணம் என்ற பாகுபாடு ஏது ! உலகில் நேர்மறையாவதும் எதிர்மறையாவதும் பரம்பொருளே. அதுவே உண்மை -அதுவே பொய். ஒளியும் அதுவே- இருளும் அதுவே. ஆனாலும் அந்த எட்டு குணங்களும் சான்றோர்களுக்கானவை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

பரம்பொருளைப் பொருத்தவரை எண்குணன் என்பது எளிதில் அணுக முடிவது என்று பொருள் கொள்ளத்தக்கது. அதன் கூடவே எளிதில் அணுக முடியாதது என்பதும் கடவுளுக்குப் பொருந்தும். அதுதான் எல்லாமும் ஆயிற்றே!

கோலில்களில் இருப்பதாகக் கருதப்படும் தெய்வத்திற்கும், பூங்காவில் இருக்கும் மணம்வீசும் மலர்களுக்கும், நீர்நிலைகளில் இருக்கும் பயன்தரும் நீருக்கும் ஒப்பானதுதான் , தம் நீதி நூலில் தாம் கூறியுள்ள பாடல்கள் புகட்டும் நீதி என்று ஆணித்தரமாக புலவர் அவையடக்கம் பாடுகிறார். (இப்பாடலோடு அவையடக்கம் நிறைவுறுகிறது)
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: மறைநெறி நவிலும் நிறைமொழி

Post by Ramalingam K on Mon Oct 03, 2016 1:29 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -3 ( நீதி நூல் )

மறைநெறி நவிலும் நிறைமொழி
{நீதிநூல் – மாயூரம் முனிசீப். வேதநாயகம் பிள்ளை அவர்கள் அருளியது}

அதிகாரம் 2.

தெய்வத்தன்மையும் வாழ்த்தும்

கடவுளை அகத்தில் காண்பதே காட்சி

31

பொங்கலை ஆழி தாண்டிப் பொருப்புகள் கடந்தோ யாமல்
அங்குமிங் குந்தி ரிந்தே யழிந்துபோ முடலைக் காப்பாய்
எங்கணு முள்ளோன் றாளுன் னிருக்கையி னிருந்து போற்றிப்
பங்கமில் சுகம்பெற் றுய்யப் பாரமென் பகராய் நெஞ்சே. 15

பதம்பிரித்த பாடல்:

{ பொங்கு அலை ஆழி தாண்டிப் பொருப்புகள் கடந்து ஓயாமல்
அங்கும் இங்கும் திரிந்தே அழிந்துபோம் உடலைக் காப்பாய்
எங்கணும் உள்ளோன் தான் உன்னிருக்கையில் இருந்து போற்றிப்
பங்கம் இல் சுகம் பெற்று உய்யப் பாரம் என் பகராய் நெஞ்சே }

பதப்பொருள்:

பொருப்பு – மலை
பங்கம் - குற்றம்; குறை
பாரம் – சுமை; துயரம்.
பகர்தல் – நினைத்தல்.


தெளிவுரை :

பரம்பொருளைக் காணும் பொருட்டு , பொங்கிவரும் அலைகளையுடைய கடலைக் கடத்தலும் , மலைகளைச் சிரமப்பட்டு ஏறி அதற்கு அப்பால் செல்லுதலும், அப்போதும் ஓய்வுகொள்ளாமல், அங்கும் இங்குமாகத் திரிந்து அலைவதாலும், சீர்கெட்டுப் போகும் கிடைத்தற்கு அரியதாகிய உன் மானுட உடம்பைக் கொஞ்சமும் சிரமம் இல்லாமல்காப்பாற்றிக் கொள்வாயாக.

எங்கும் பரந்து நிறைந்துள்ள பரம்பொருள் உன்னிலும் உள்ளான். உனக்கு அண்மையிலும் சேய்மையிலும் உள்ளான். அப்பரம்பொருளை நீ இருக்கும் இடத்திலேயே இருந்துகொண்டு போற்றி
வணங்கி குறைவற்ற சுகத்தைப் பெற்று இல்வாழ்விலும் ஆன்ம மேம்பாட்டிலும் வளர்ச்சிகண்டு , உனக்குள்ள துயரம் என்னும் சுமையைப் போக்கிக் கொள்ள நினையுங்கள் மனிதர்களே!


விளக்கவுரை :

பரம்பொருள் எங்கும் உள்ளது. அதனைக் காலம், பொருள், ஆற்றல், உடல்நலம் ஆகியனவற்றை விரையும் செய்து தேடாமல் இருந்த இடத்திலேயே அறிந்து, உணர்ந்து, தெளிந்து , வணங்கி, வழிபட்டு மேன்மை அடைந்து துயரத்தைப் போக்கிக் கொள்ளுங்கள் என்பது கருத்து.

avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: மறைநெறி நவிலும் நிறைமொழி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum