ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 M.Jagadeesan

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 T.N.Balasubramanian

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 T.N.Balasubramanian

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 பழ.முத்துராமலிங்கம்

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 பழ.முத்துராமலிங்கம்

ஏர்செல் நிறுவனம் திவால்
 பழ.முத்துராமலிங்கம்

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவா

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

எல்லாருக்கும் மேல ஒருத்தர் அங்க இருக்கார்...

View previous topic View next topic Go down

எல்லாருக்கும் மேல ஒருத்தர் அங்க இருக்கார்...

Post by muthupandian82 on Sat Sep 24, 2016 8:44 pm

உலகினர் அனைவரும் சொல்லும் ஒரே வார்த்தை மேல இருக்குற ஆண்டவன் எல்லார்த்தையும் பாத்துக்குவார்..வெளிநாட்டில் கூட தான் ஒரு தெய்வத்தை வணங்கி கொண்டிருந்தாலும் தன்னையும் அறியாமல்
"ஓ மை காட்" என்று அவர்களையும் அறியாமல் சொல்கின்றனர்..

                     அந்த நேரத்தில் மேலே இருக்கும் ஒருவராகட்டும், அல்லது காட் என்று சொன்னாலும் சரி, அவர் யாரென்று அறியாமல் சொல்வதுதான் வியப்பாக இருக்கின்றது..உலகத்தில் எந்த ஒரு வேதங்களாகட்டும், புராணங்களாகட்டும், சாஸ்திர சம்பிரதாயங்கள் ஆகட்டும், புனித நூல்கள் ஆகட்டும் எல்லோருமே ஒரு கடவுளையே சொல்லிக்கொண்டு இருக்கின்றோம் என புரிந்து கொள்வதில்லை.

                     இவ்வளவு குழப்பங்களையும் தீர்க்க வேண்டுமானால் அவர் மேலே இருந்து வர வேண்டும்..அவரை புரிந்துகொள்ள நாம் தூய்மை அடையவேண்டும்..அப்படி இருக்க மாட்டேன்,இப்படி இருக்க மாட்டேன் என்று சொல்பவர்கள் கூட காலத்தின் வலுக்கட்டாயம் அவர்கள் அந்த மாதிரி சூழ்நிலைக்கு தள்ளப் படுகின்றனர்.உதாரணமாக மாமிச விரும்பியாக இருக்கும் ஒரு மனிதருக்கு டாக்டர் உங்கள் இருதயத்துக்கு ஆபத்து உடனே நிறுத்தி விடுங்கள் என்று சொன்னால் மறு பேச்சுபேசாமல் மனிதன் நிறுத்திவிடுகின்றான் இதே கடவுளின் வார்த்தையாக இருந்தால் அவன் ஆயிரம்முறை யோசிக்கின்றான்.. சந்தர்ப்ப சூழ்நிலை மேலும் கர்மவினை அவனை காலத்தின் கட்டாயத்தில் தள்ளி விடுகின்றது..

                    எதெல்லாம் உலகத்தின் இன்பம் என்று நினைத்தானோ அதெல்லாம் காலத்தின் கட்டாயத்தில் அவன் விடவேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டே தீருகின்றது..அதற்க்கு பிறகு
அந்த மனிதனால் கடவுளுக்காக வாழும் வாழ்க்கையும் போய் வியாதியை நல்லாக்குவதற்கு வாழ்க்கையில் போராடியே மரணத்தை அடைய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது..இதனால் விலைமதிக்க முடியாத மனிதவாழ்க்கை.. விலங்கை விட கேவலமாய் ஆகிவிடுகின்றது..

                          இப்படிப்பட்ட மனிதன் தான் மனித பிறவியின் அருமை தெரியாமல் விலங்காகவாவது பிறந்திருக்கலாம் என்று சொல்வது..சரி, மேலான பரம்பொருள் யார்?அவரின் வேலை என்ன?எல்லா மதங்களும் எதையெதையோ சொன்னாலும் மேலான இறைவன் ஒருவன் தான் என்று முடிக்கின்றன..

                          எந்த மதமும் இறைவன் எங்கள் மதத்தை சேர்ந்தவர் என்று எந்த புராணங்களிலோ..புனித நூல்களிலோ இல்லை,அல்லாஹ் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர் என்றோ ,யெஹோவாஹ் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்றோ, சிவா இந்து மதத்தை சேர்ந்தவர் என்றோ அந்த தெய்வங்கள் யாரிடமும் சொல்லவில்லை அந்தந்த தேசங்களை சேர்ந்தவர்கள் அந்த ஒரு இறைவனை வணங்கும் பொழுது அவர்கள் உருவாக்கிய அந்த மதத்துடன் இறைவனையும் இணைத்துவிட்டனர்..

                          உண்மையில் உலகில் இருந்த ஒரேதர்மம் சனாதனதர்மம் மட்டும் தான், சனாதன தர்மம் இருந்தபொழுது அங்கே கோவில்கள் எதுவும் இல்லை..உலகில் உள்ள அனைவருமே சனாதன தர்மத்தில் தெய்வங்களாகவே பூமியில் வாழ்ந்தனர், அங்கே வேறெந்த மதமும் இல்லாத காரணத்தால் பிறரிடம்நாங்கள் சனாதன தர்மத்தைசேர்ந்தவர் என்று சொல்லிக் கொள்ளும் வாய்ப்பில்லை..

                           சனாதன தர்மத்தின் தலைவன் ஸ்ரீ கிருஷ்ணர் ஒரே ராஜ்ஜியம், ஒரேமொழி, ஒரேதேசம், ஒரேகுலம், ஒரே பாஷை இதுதான் சனாதன தர்மம்.. மற்றபடி பதவியில் வித்யாசம் உள்ளது, பாகு பாடு என்பது கிடையாது.. உண்மையில் அந்த உலகம் ஒரு மலர்த்தோட்டம். சித்திரங்களில் ஸ்ரீ கிருஷ்ணரின் கால்களில் செருப்பு அணிந்துள்ளதாக காண்பித்திருப்பது கூட தவறானதாகும்.

                           சொர்க்கத்தில் எங்கேயாவது முள் இருக்குமா என்ன? இந்த ஒரு தர்மம் பூமியில் இல்லாமல் போனதால் இந்த தர்மத்தை படைக்க இறைவன், கடவுள், பகவான் என்றெல்லாம் அழைக்கப்படும்
ஈசன் பூமியை நோக்கி ஜோதியாக களம் இறங்குகின்றார் கீதையை சொல்வதற்காக... யார் சனாதன தர்மத்தின் தலைவனாக இருந்தாரோ.. அதாவது..ஸ்ரீ கிருஷ்ணர் தன்னுடைய இறுதி பிறவியை எட்டியவுடன் அவரது இறுதி பிறவியில் பிரவேசமாகும் ஜோதியான பிறப்பு, இறப்பிற்கு அப்பாற்பட்ட தந்தை ஈசன் அவரது இறுதிப்பிறவிக்கு பிரம்மா என்று பெயர் வைத்து அவர் வாயின் மூலம் பிறவிகளின் ரகசியங்க ளையும், கீதை ஞானத்தையும் உலகிற்கு கொடுக்கின்றார்..

                           இதனால்தான் சக்ராயுதத்தை கிருஷ்ணருக்கு சிவபெருமான் கொடுத்ததாக உதாரணம் உள்ளது.கீதையை கடவுள் சொன்ன காரணத்தால் ஸ்ரீமத் பகவத்கீதை என்று சொல்லப்பட்டுள்ளது, உலகில் வேறெந்த சாஸ்திரங்களிலும் இப்படி இல்லை..ஆனால், நடந்த தவறென்ன கீதையை சொன்னவரை விட்டு விட்டு கீதையால் உருவான ஸ்ரீ கிருஷ்ணரின் பெயரை போட்டுவிட்டனர்.

                           உலகில் உள்ள எல்லா புனித நூல்களும் இறைவன் படைத்த சொர்க்கமாகிய சனாதன தர்மத்திற்கு செல்லவே வழி சொல்கின்றன.. ஆனால், மதம் என்னும் சங்கிலியால் கட்டுண்டிருக்கும் மனிதனுக்கு உண்மையை அறிந்துகொள்ள அவன் மதம் அனுமதிப்பது இல்லை..ஏனென்றால், அவன் அந்த கோட்பாடுகளை மீறினால் இறைவனால் தண்டிக்கப்படுவான் என்று சொல்லி வைத்துள்ளன..

                            இன்னும் கலியுகம் 40,000ம் வருடம் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் மனிதனின் நிலையெல்லாம், இன்னும் சில வருடங்களில் ஏற்படும் இயற்கை சீற்றங்களிலும்,உலக போர்களிலும் கலியுகம் முடிவுக்கு வந்தது என்று புரியவரும். அப்பொழுது தெரிவதால் என்ன புண்ணியம்? ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளைவதால் யாருக்கும் புண்ணியமில்லை..எனவே, எனக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவத்தை ஒருவர் விட்டாரென்றால் பரமாத்மாவை உணர்ந்து அவருடைய கீதை ஞானத்தை கேட்க முடியும்.. இல்லாவிட்டால் வெறும் கனவு..

                          எப்படி, நாயன்மார்கள்,ஆழ்வார்கள் வாழ்ந்த காலத்திலும் அவர்களுக்கு அவமரியாதையை
எற்படுத்தியவர்கள் உண்டு..அது இப்பொழுது வரை தொடர்ந்தாலும் சத்தியம் தன்னை எப்பொழுதும் நிலை நிறுத்தும்..வாய்மையே வெல்லும்..வாழ்த்துக்கள்..ஓம்சாந்தி..கலியுக இறுதியில் இறைவன் தந்தை சிவனால் பிரம்மாமூலம் கொடுக்கப்பட்ட ராஜயோகத்தை இலவசமாக கற்றுக்கொள்ளுங்கள்..

முகநூல் - சிவத்தந்தையின் கண்மணிகள் ..
avatar
muthupandian82
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 215
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: எல்லாருக்கும் மேல ஒருத்தர் அங்க இருக்கார்...

Post by Ramalingam K on Sat Sep 24, 2016 9:25 pm

எல்லாருக்கும் அப்பால் மேலே அங்கே இருக்கும் அவர்தான் எல்லாருக்கும் உள்ளேயும் இங்கேயும் இருக்கிறார்- மனச்சாட்சியாக.

நமக்குள் இருப்பதை  உள்முகமாக நோக்காமல் அண்ணாந்து பார்த்தவர்கள் பயன் பெற்றதாகத் தெரியவில்லை.

ஊனுக்குள் நீ நின்று உளவுவதை அறியாமல்
கானம் மலை கடந்து கால் அலுத்தேன் பூரணமே -- பட்டினத்தார்

என்னை அறியாமல் எனக்குள்ளே நீ இருக்க
உன்னை அறியாமல் உடல் அலுத்தேன் பூரணமே --பட்டினத்தார்

முகத்தின் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தின் கண்கொண்டு காண்பதே ஆனந்தம் -- திருமூலர்.

திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
புரையற்று இருந்தான் புரிசடை யோனே   --திருமூலர்

Within we the hidden கோட்
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: எல்லாருக்கும் மேல ஒருத்தர் அங்க இருக்கார்...

Post by சிவனாசான் on Sun Sep 25, 2016 5:27 pm

நல்ல பதிவு ஆன்மீகப்பதிவு. நன்றி அன்பர்களே>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2779
மதிப்பீடுகள் : 1007

View user profile

Back to top Go down

Re: எல்லாருக்கும் மேல ஒருத்தர் அங்க இருக்கார்...

Post by ayyasamy ram on Sun Sep 25, 2016 5:43 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34401
மதிப்பீடுகள் : 11088

View user profile

Back to top Go down

Re: எல்லாருக்கும் மேல ஒருத்தர் அங்க இருக்கார்...

Post by Ramalingam K on Sun Sep 25, 2016 7:06 pm


“ சனாதன தர்மத்தின் தலைவன் ஸ்ரீ கிருஷ்ணர் ஒரே ராஜ்ஜியம், ஒரேமொழி, ஒரேதேசம், ஒரேகுலம், ஒரே பாஷை இதுதான் சனாதன தர்மம்”

என்னும் பதிவுக் குறிப்பை எவ்வாறு விளையாட்டிற்குக் கூட ஏற்பது!

அதற்கு எந்தவித ஆதாரமும் இருப்பதாகத் தெரியவில்லை. அது தவறாகப் புரிந்து கொண்டமை.

பல்வேறு மதம், இனம், மொழி, நாட்டின் சீதோஷ்ணநிலை, கலாச்சாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால் இந்த முறை உலகில் எப்போதும் சாத்தியப்படாது.

ஆனால் சனாதன தர்மம் என்பது நமது பாரத தேசத்தின் கலாச்சாரம்- உன்னதமான உயர்ந்த கலாச்சாரம் – உலகில் எல்லா இடத்திலும், எக்காலத்திலும், எல்லா மதம், மொழி, இனம், கசாச்சாரம் முதலானவற்றைக் கடைப்பிடிப்பவர்களாலும் மேற்கொள்ள இயலும் ஒரு அற்புத ஒழுகலாறு.

அது எவ்வாறு எனில் சொற்களிலேயே பொருளும் உள்ளதே !

சனாதன தர்மம் = சத்+ ஆதனம் + தர்மம்.

சத் – எப்போதும் அழிவற்றது – மாற்றத்திற்குள்ளாகாதது
ஆதனம் – செல்வம்; சொத்து.
தர்மம் – பாவம் அற்ற வினையால் செயல்படுவது.

ஆக, சனாதன தர்மம் என்றால், “யாருக்கும் தீங்குதரக்கூடிய பாவச் செயல்களில் ஈடுபடாது, எக்காலத்திலும்- எவ்விடத்திலும் மாறாததும் அழியாததும் ஆகிய உண்மை நெறியைக் கடைப்பிடித்து எவராலும் வாழ்தல் என்னும் நெறிமுறைதான் உண்மையான சொத்து(செல்வம்) ” என்று பொருள்.

இந்த சனாதன தர்மம் தான் நம் தாய்த்திருநாட்டின் உயிர்நாடி வேத காலத்தில் – ஆனால் இப்போது !!!

இந்த தர்மத்தை ஸ்ரீமத் பாகவத தசம ஸ்கந்தத்திலோ( ஸ்ரீக்ருஷ்ணனின் முழு வரலாறும் கூறும் பகுதி) அல்லது மகாபாரதத்திலோ எங்காவது நம் பிரியமான கண்ணன் – பிந்நாளைய ஸ்ரீக்ருஷ்ணன் கடைப்பிடித்துள்ளதாக ஏதாவது ஒரு சம்பவம் சொல்ல முடியுமோ.

நம் கண்ணன் - கள்வன்; மாயன்; நேயன்; மனிதன் சமயத்திற்கேற்ப வாழவேண்டும் என்னும் தத்துவத்தைத் தந்த தத்துவ மேதை; முள்ளை முள்ளால் எடுத்தான் – அதாவது சூழ்ச்சியைச் சூழ்ச்சியால் முறியடித்தான். ஸ்ரீக்ருஷ்ண பகதர்கள் அதனை லீலை –விளயாட்டு என்று கொண்டாடுகிறார்கள். அடியனும் க்ருஷ்ணப் ப்ரேமிதான் - அதற்காக ஸ்ரீக்ருஷ்ணனை எவ்வாறு சனாதன தர்மத்தின் தலைவன் என்று ஏற்கமுடியும்!!!

எப்பொருள் யார்வாய்க் கேட்பினும் அவற்றின் மெய்ப்பொருள் காண்பதே அறிவு என்கிறதே நம் தமிழ் வேதம்- திருக்குறள்.கொஞ்சம் சிந்திப்போமா . . . . . . . .
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: எல்லாருக்கும் மேல ஒருத்தர் அங்க இருக்கார்...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum