ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைப் பிரபலங்கள்
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 SK

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 SK

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 SK

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 SK

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut
 thiru907

நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

ரவுத்ரம் பழகு!
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

முத்து முத்தாய்த் தத்துவங்கள்

View previous topic View next topic Go down

request முத்து முத்தாய்த் தத்துவங்கள்

Post by Ramalingam K on Sat Oct 01, 2016 5:37 am

முத்து முத்தாய்த் தத்துவங்கள் - மெய்ஞ்ஞானம்

1. சொல்லும் சொல்லும் செய்யும் செயலும் வேறானால் அவன் மனிதன்- ஜீவாத்மா.
சொல்லும் சொல்லே செய்யும் செயலானால் அவன் புனிதன் – மகாத்மா .
சொல்லும் செயலும் இல்லாதுபோனால் அவன் அனந்தன்- தேவன் - பரமாத்மா
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: முத்து முத்தாய்த் தத்துவங்கள்

Post by Ramalingam K on Sun Oct 02, 2016 7:03 am

முத்து முத்தாய்த் தத்துவங்கள் - மெய்ஞ்ஞானம்

2.
கர்மம் என்பது சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றாலும் செய்யப்படுவது.
கர்மத்தைச் செய்யாமல் இருப்பதைவிட செய்வது மேல் .
கர்மத்தின் பலன் நன்மையானால் உடனடி இன்பம் கிடைக்கும்.
கர்மத்தின் பலன் தீமையானால் உடனடி அனுபவம் கிடைக்கும்.
அனுபவ அறிவு நிகழ்கால இன்பத்தை விடவும் எதிர்கால நன்மைகளைப் பலமடங்காக்கும்.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: முத்து முத்தாய்த் தத்துவங்கள்

Post by Ramalingam K on Sun Oct 02, 2016 2:43 pm

முத்து முத்தாய்த் தத்துவங்கள் – மெய்ஞ்ஞானம்

3.
கர்மம் பாவம் அற்றதாக இருக்கவேண்டும்;
பாவமற்ற கர்மம் உண்ணும் உணவிற்கே ஆகவேண்டும்;
உணவோ உடம்பு, உயிர், மற்றும் மனத்தைப் பலப்படுத்த வேண்டும்;
அத்தகைய பலம் உலக ஆசைகளை அப்புறப்படுத்தவே வேண்டும்;
ஆசைகளின் நீக்கமே மீண்டும் பிறவாமைக்கு அடிபடைத் தேவை;
பிறவாமையே ஆன்மமுக்தி என்னும் பிரம்மானந்தம்;
பிரம்மானந்தமே நிலைத்து நீடிக்கும் பேரின்பம்.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: முத்து முத்தாய்த் தத்துவங்கள்

Post by Ramalingam K on Mon Oct 03, 2016 4:54 pm

முத்து முத்தாய்த் தத்துவங்கள் – மெய்ஞ்ஞானம்

4.
நாளும் கிழமையும் குறிப்பிடாமல் வீட்டிற்கு
எதிர்பாராமல் வரும் முன்பின் அறியாதவர்தான் விருந்தினர்.
மொத்தத்தில் விருந்தினர் என்றால் வழிப்போக்கர்கள் எனலாம்.

அதாவது – அதிதி = அ+திதி

திதி என்றால் நாள் (பிரதமை திதி – முதல்நாள் ; அஷ்டமி திதி- எட்டாம்நாள் )

அ = எதிர்மறைச்சொல்( தர்மம்-அதர்மம்; நியாயம் –அநியாயம்; திதி-அதிதி)

அன்னை, தந்தை, குருவைப்போல், அதிதியும் தெய்வமாக மதிக்கப்பட வேண்டியவர்

"அதிதி தேவோ பவ"

மற்றவர்கள் எல்லாரும் உறவினர்; நண்பர்- விருந்தினர்கள் அல்ல.

விருந்திற்கு உகந்தவர் விருந்தினர் - அதிதி
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: முத்து முத்தாய்த் தத்துவங்கள்

Post by Ramalingam K on Tue Oct 04, 2016 7:49 am

முத்து முத்தாய்த் தத்துவங்கள் – மெய்ஞ்ஞானம்

5.

ப்ரதக்ஷிணம்  प्रदक्षिणम् என்பது  நம் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கம்.

கோவில், திருமணம் போன்ற வைபவங்களில் இச்சொல் அடிக்கடி நம் காதில் விழும்.
நாமும் சொன்னபடி, கேட்டபடி செய்வோம்.

பெரும்பாலோர் அப்படி என்றால் என்ன என்றே தெரிந்து கொள்ளாமல் – சொன்ன வண்ணம் செய்பவர்கள்தான்.

இது ஒரு அற்புதமான சம்ஸ்க்ருதப் பதம் – இதற்கு நம் அழகு தமிழில் ‘வலம் வருதல்’ என்று பொருள்.

தக்ஷிண दक्षिण என்றால்  அச்சொல்லுக்குரிய  அநேக பொருட்களுள்,  தெற்கு என்பதும் வலப்பக்கம் என்பதும் உள்ளன.

ப்ர –प्र என்றால உயர்வான, நன்மை அளிக்கக்கூடிய என்பது பொருள்.

ஆக , ப்ரதக்ஷிணம்  प्रदक्षिणम् என்றால் மேலானதும்  நன்மைஅளிக்கக்கூடியதும் ஆகியதை , “ நீ இருக்கும் இடத்திலிருந்து உனக்கு எப்போதும் வலப்பக்கமாகக் கொண்டு அதனைச் சுற்றி வா” என்பது பொருள்.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: முத்து முத்தாய்த் தத்துவங்கள்

Post by Ramalingam K on Tue Oct 04, 2016 11:08 am

முத்து முத்தாய்த் தத்துவங்கள் – மெய்ஞ்ஞானம்

6.
பரம்பொருள் (கடவுள்) தத்துவம்:

தன்னில் தானாய்ப் பரம் பொருளைக் காண்பவன் ஞானி- ஆகையால்
பரம்பொருள் அவனிடமேயே அவனுக்குப் மிகமிக அருகிலேயே இருக்கிறது.

தன்னில் வேறாய்ப் பரம்பொருளைத் தேடுபவன் அஞ்ஞானி(மனிதன்) –ஆகையால்
பரம்பொருள் அவனிடமிருந்து மிகமிக எட்டமுடியாத தூரத்தில் இருப்பதாக அவனுக்கு ஆகிறது.

அதனால்தான், தலயத்திரை, தீர்த்த யாத்திரை எல்லாமும். ஆனாலும் பரம்பொருளை அவன் காணமுடியவில்லை. ஆனாலும் அங்கெல்லாம் கண்டதாக அவன் சொல்வதெல்லாம் பதுமைகளும் படங்களுத்தான்.

தன் சட்டைப்பைக்கு உள்ளேயே சாவியை வைத்துக் கொண்டு அதை அறிவதை விடுத்து உலகில் பிற எங்ஙனும் தேடினாலும் சாவி கிடைப்பதில்லை.
எனவேதான் பரம்பொருளைக் “கண்டவர் விண்டிலர் ; விண்டவர் கண்டிலர்” என்கிறார்கள்.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: முத்து முத்தாய்த் தத்துவங்கள்

Post by Ramalingam K on Wed Oct 05, 2016 6:50 am

முத்து முத்தாய்த் தத்துவங்கள் – மெய்ஞ்ஞானம்

7.
அலைபாயும் எண்ணங்களால் ஒருவனுக்கு அவனது மனமே சுமையாகிறது;
துன்பத்தை அனுபவிப்பவனுக்கு அவனது உடம்பே சுமையாகிறது.
சுமையை இறக்கி வைத்து சுகம்பெறவே ஆத்மவித்யா - இராஜயோகம்.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: முத்து முத்தாய்த் தத்துவங்கள்

Post by மாணிக்கம் நடேசன் on Wed Oct 05, 2016 10:03 am

நல்ல தொகுப்புக்கு நன்றி ஐயா.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4226
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

request Re: முத்து முத்தாய்த் தத்துவங்கள்

Post by T.N.Balasubramanian on Wed Oct 05, 2016 2:04 pm

ப்ரதக்ஷிணம் प्रदक्षिणम् என்பது நம் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கம்.

அருமையான விளக்கம் .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20853
மதிப்பீடுகள் : 8006

View user profile

Back to top Go down

request Re: முத்து முத்தாய்த் தத்துவங்கள்

Post by ஜாஹீதாபானு on Wed Oct 05, 2016 4:45 pm
avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30020
மதிப்பீடுகள் : 6993

View user profile

Back to top Go down

request Re: முத்து முத்தாய்த் தத்துவங்கள்

Post by Ramalingam K on Wed Oct 05, 2016 5:50 pm

முத்து முத்தாய்த் தத்துவங்கள் .9 – மெய்ஞ்ஞானம்.

உலகம் முழுவதும் எங்குமாக இருக்கும் பரம்பொருள் (கடவுள்) , உலகில் எங்குதான் இல்லை !
உருவமாகவும் அருவமாகவும் உலகமெலாம் இருப்பவை பரம்பொருளின் வெளிப்பாடுகளே !

பரம்பொருள் , நம்மிலும் “நான்” என்னும் தன்னறிவாக இருப்பது – இதைத்தான் “ப்ரக்ஞானாம் பிரம்மம் - தான் என்னும் தன்னறிவே பரம்பொருள்” என்கிறது ரிக்வேத மகாவாக்கியம்.

அதுபோலவே உலக இருப்புக்கள் யாவற்றிலும் தத்தம் சுய அறிவாக விளங்குவதும் பரம்பொருளேதான். இதைத்தான், “அயம் ஆத்மா ப்ரம்மம் - இங்கு இருப்பதெல்லாம் பரம்பொருள்” என்கிறது அதர்வண வேத மகாவாக்யம்.

இப்போது, நாம் தெரிந்து உணர்ந்து அறிந்துகொள்ள வேண்டுவதெல்லாம் – பரம்பொருள் அறியத்தக்கதா அல்லது அடையத்தக்கதா என்பதே.

ஆராய்ந்து பார்த்தால் , பரம்பொருள் அடையத்தக்கது அல்ல - ஏனெனில் அது நம்மிடமே எப்போதும் உள்ளது. அவ்வாறாகில், பரம்பொருள் அறியத்தக்கதே.

நம்மிலும் , உலக இருப்புக்கள் ஒவ்வொன்றிலும் அதன் இருப்பை அறிந்துகொள்ளும் அறிவைப் பெறுதலே அதனை அறிதல் ஆவது. ஆகவே பரம்பொருளை நாம் நம்மிலும், அதுபோலவெ பிற யாவற்றிலும் இருப்பதை அறிந்து கொள்வோம். கடவுளை அறிந்து நிம்மதியையும் அடைவோம் - வாழ்வில் ஆனந்தித்தும் இருப்போம்.

ஸ்ரீ குருவே நம:
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: முத்து முத்தாய்த் தத்துவங்கள்

Post by Ramalingam K on Thu Oct 06, 2016 10:46 am

முத்து முத்தாய்த் தத்துவங்கள் .10 – மெய்ஞ்ஞானம்

மனிதனின் எண்ணமும் செயலும் உயர்ந்ததானால் உடம்பிற்குப் பெருமை
- அந்நிலையில் உடம்பு ‘மெய்’ என்றாகிறது.

மனிதனின் என்ணமும் செயலும் தாழ்ச்சி அடைந்தால் உடம்பிற்குச் சிறுமை
- அந்நிலையில் உடம்பு ‘பொய்’ என்றாகிறது.

தத்தம் உடம்பு மெய்யா அல்லது பொய்யா என்பது அவரவர் கையில்.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: முத்து முத்தாய்த் தத்துவங்கள்

Post by T.N.Balasubramanian on Thu Oct 06, 2016 3:50 pm

நாளும் கிழமையும் குறிப்பிடாமல் வீட்டிற்கு
எதிர்பாராமல் வரும் முன்பின் அறியாதவர்தான்

அதிதி என்பவர்  மேற்குறிப்பிட்டவர்தான் .

ஆனால் ,
குறிப்பிட்ட நபர் ,குறிப்பிட்ட தினத்தில் ,ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் வாராது ,
அதிதியாக தாங்கள் பாவிக்கப் படவேணும் ,என்று நம் மீது வருத்தப்படும் போது ,
நமக்கு கஷ்டமாக இருக்கிறது .
ப்ரேக்பாஸ்ட க்கு வரவேண்டியவர்  லன்ச் டைமுக்கு வந்து விட்டு , இந்த நேரம்தான்
என் பிரேக் பாஸ்ட்  டைம் என்றால்  என்ன பண்ணுவது .
எனது  நண்பர் என்னைவிட 2 வயது பெரியவர் . அவர் வீட்டில் காலை சாப்பாடு  10 மணிக்கு முடிந்து விடும். 12 மணிக்குள் ஒரு குட்டி தூக்கமும் போட்டு எழுந்து விடுவார் .  எங்கள் வீட்டில் சாப்பாட்டு  டைம் 12 30 to 1 pm .தவறினால் 1.30 க்குள் . இல்லாவிட்டால் எனக்கு தலைவலி /அதனால் வாமிட்டிங் போன்றவை வரும் . ஆனால் நண்பர் வீட்டுக்கு சாப்பிட போனால் அவருடைய கால நேரங்களைதான் அனுசரிப்பேன் .  

அதிதி என்று சொல்லிக் கொண்டு அர்த்தம் புரியாமல் , நமக்கு பாடம் எடுக்கும் போது , அவர் நிலை கண்டு அழுவதா அல்லது சிரிப்பதா என்றே தோன்றுகிறது .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20853
மதிப்பீடுகள் : 8006

View user profile

Back to top Go down

request Re: முத்து முத்தாய்த் தத்துவங்கள்

Post by Ramalingam K on Thu Oct 06, 2016 7:53 pm

ஆனால் ஐயா ! நட்பும் உறவும் அதிதிகள் அல்லவே !

avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: முத்து முத்தாய்த் தத்துவங்கள்

Post by T.N.Balasubramanian on Thu Oct 06, 2016 8:10 pm

முன் பின் அறியாதவர்தானே அதிதி .
நாம் அறிந்த விஷயம்தான்.

ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20853
மதிப்பீடுகள் : 8006

View user profile

Back to top Go down

request Re: முத்து முத்தாய்த் தத்துவங்கள்

Post by Ramalingam K on Fri Oct 07, 2016 6:56 am

ஐயா !

வேதகால அதிதிகளில் :

சிலர் வரமளிக்க வருகை தந்துள்ளனர்;
சிலர் சோதிக்க வந்துள்ளனர்;
சிலர் உண்டுபோக வந்துள்ளனர்;

ஆனால் எல்லா அதிதிகளின் வரவும் இறுதியில் உலகம் முழுமைக்கும் ஆகும் இல்லறாத்தானுக்கு ஏதோ ஒரு வகையில் நன்மைதருவதாகவே இருந்துள்ளது.

நமது அன்னை அனுசூயாவின் அகத்திற்கு வந்த அந்த மூவர் உட்பட.
எல்லாம் நமக்கும் ஒரு பாடமும் படிப்பினையும்தான் என்பது அடியனின் கருத்து.avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: முத்து முத்தாய்த் தத்துவங்கள்

Post by T.N.Balasubramanian on Fri Oct 07, 2016 7:04 am

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20853
மதிப்பீடுகள் : 8006

View user profile

Back to top Go down

request Re: முத்து முத்தாய்த் தத்துவங்கள்

Post by ayyasamy ram on Fri Oct 07, 2016 7:23 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33554
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

request Re: முத்து முத்தாய்த் தத்துவங்கள்

Post by Ramalingam K on Fri Oct 07, 2016 4:34 pm

முத்து முத்தாய்த் தத்துவங்கள் .11 – மெய்ஞ்ஞானம்

நெஞ்சை அள்ளும் பஞ்ச கோசம்:

கோசம் என்றால் இருப்பிடம் என்றும் பொருள்.

மானுட உடம்பில் பரம்பொருள் ஐந்து கோசங்களைக் கொண்டு இயங்குகிறது.
1. அன்னமய கோசம் – உணவை இருப்பிடமாகக் கொண்டுள்ளது
2. ப்ராணமய கோசம் - காற்றை இருப்பிடமாகக் கொண்டுள்ளது
3. மனோமய கோசம் – மனத்தை இருப்பிடமாகக் கொண்டுள்ளது.
4. விஞ்ஞானமய கோசம் – அறிவை இருப்பிடமாகக் கொண்டுள்ளது
5. ஆனந்தமய கோசம் – துக்கமற்ற ஆனந்தத்தை இருப்பிடமாகக் கொண்டுள்ளது

avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: முத்து முத்தாய்த் தத்துவங்கள்

Post by Ramalingam K on Fri Oct 07, 2016 5:37 pm

முத்து முத்தாய்த் தத்துவங்கள் -13 . மெய்ஞ்ஞானம்
சின்முத்திரை கற்பிக்கும் ஞானம்:

சித்+ முத்திரை = சித்முத்திரை = சின்முத்திரை.
ஆக, சின்முத்திரை என்பது அறிவு பூர்வமான யோக முத்திரைகளில் ஒன்று.

வலதுகையின் சிறுவிரல், மோதிரவிரல், நடுவிரல் ஆகிய மூன்று விரல்களும் நிமிர்ந்து மேல்நோக்கி நிற்க, ஆட்காட்டி விரல் தாழ்ந்து பெருவிரலை(கட்டை விரல்)த் தொட்டுக் கொள்ள, பெருவிரல்(கட்டை விரல்) குனிந்து ஆட்காட்டி விரலை அன்போடு அனைத்து நிற்கும் அமைப்புதான்( காட்சிதான்) சின்முத்திரை.

இதில்:
சிறுவிரல் என்பது மானுட உடம்பு.
மோதிரவிரல் என்பது மானுட உயிர் – அது உடம்பை விடவும் உயர்ந்தது.
நடுவிரல் என்பது மானுட மனம்- அது உடம்பை விடவும் உயர்ந்தது.
ஆட்காட்டி விரல் என்பது ஜீவாத்மா .
பெருவிரல்(கட்டை விரல்) என்பது ஸ்ரீகுருதேவர்.

மானுட உடம்பில் இருந்து இயங்கும் ஜீவாத்மா, ஞானமே உருவாகிய ஸ்ரீ குருதேவரைச் சென்று உள்ளத் தூய்மையோடு பணிகிறது. பணியும் அந்த ஜீவனை, ஸ்ரீகுருதேவர் அன்புடன் ஏற்கிறார். அதன் விளைவாய் அந்த ஜீவனுக்கு ஆத்ம ஞானம் என்னும் இராஜயோகத்தைப் போதிக்கிறார்.

அதன் பயனாய்:

யோகாசனங்களால் நிலையான உடல் நலம் பெற்று மானுட உடம்பு உயர்வடைகிறது.
பிராணாயாமங்களால் உயிர் மேன்மை அடைந்து ஜீவன் நீடித்த ஆயுளைப் பெறுகிறான்.
தியான சாதகத்தால் பூரண அமைதி ஏற்பட்டு நிறைவான மனதின் நிம்மதி உண்டாகிறது.

இவ்வாறாக ஸ்ரீ குருதேவர் தம் ஞான போதனையால் சீடனின் உடம்பு, உயிர், மனம் ஆகியனவ்ற்றை மேம்படுத்தி, ஜீவனுக்கு ஆன்ம முக்தியை அளிக்கிறார் என்பதே இந்த சின்முத்திரையில் பொதிந்திருக்கும் முத்தான தத்துவம்.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: முத்து முத்தாய்த் தத்துவங்கள்

Post by T.N.Balasubramanian on Fri Oct 07, 2016 6:07 pmசின்முத்திரை .

நல்ல தகவல்

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20853
மதிப்பீடுகள் : 8006

View user profile

Back to top Go down

request Re: முத்து முத்தாய்த் தத்துவங்கள்

Post by Ramalingam K on Sun Oct 09, 2016 4:47 pm

முத்து முத்தாய்த் தத்துவங்கள் – மெய்ஞ்ஞானம்
14

உண்மை என்பது:

உள்ளத்தால் பொய்யாமை – உண்மை;
சொல்லால் (வாயால் ) பொய்யாமை- வாய்மை:
உடம்பின்( மெய்யின்) செயல்களால் பொய்யாமை – மெய்மை
என்று மூவகையிலும் பொருள் படும்.

உண்மையால் உண்டாகும் பயன்கள் :

மன உறுதி ( சித்த ஸ்திடம்) – எப்போதும் எங்கேயும் யாரிடமும் அஞ்சாமை;
மனத்தூய்மை( சித்த சுத்தி) – மன நிம்மதி ;
பற்றின்மை ( நிஷ்காமியம்) – உலகப் பொருட்கள் எதிலும் ஆசைப்படாமை என்னும் திருப்தி.
கிரம முக்தி ( கர்மயோகத்தால் ஆகும் முக்தி) –புண்ணிய பாவமற்ற செயாலால் விளையும் ஆத்ம முக்தி.

- முண்டக வேதாந்தம்
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: முத்து முத்தாய்த் தத்துவங்கள்

Post by Ramalingam K on Sat Oct 15, 2016 11:44 am

முத்து முத்தாய்த் தத்துவங்கள் – மெய்ஞ்ஞானம்

15

தீமை செய்பவர்களை மன்னித்துவிட வேண்டும் -

அவர்கள் மன்னிப்பிற்குத் தகுதியானவர்கள் என்பதால் அல்ல-

நமக்கு மன அமைதியும் நிம்மதியும் தேவை என்பதால்.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: முத்து முத்தாய்த் தத்துவங்கள்

Post by T.N.Balasubramanian on Sat Oct 15, 2016 1:28 pm

@Ramalingam K wrote:முத்து முத்தாய்த் தத்துவங்கள் – மெய்ஞ்ஞானம்

15

தீமை செய்பவர்களை மன்னித்துவிட வேண்டும் -

அவர்கள் மன்னிப்பிற்குத் தகுதியானவர்கள் என்பதால் அல்ல-

நமக்கு மன அமைதியும் நிம்மதியும் தேவை என்பதால்.
மேற்கோள் செய்த பதிவு: 1224424

ஆம் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20853
மதிப்பீடுகள் : 8006

View user profile

Back to top Go down

request Re: முத்து முத்தாய்த் தத்துவங்கள்

Post by Dr.S.Soundarapandian on Sun Aug 06, 2017 7:03 pm

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4401
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: முத்து முத்தாய்த் தத்துவங்கள்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum