ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் புக்
 Meeran

வரலாறு பகுதி முழுவதும் எளிதில் புரிந்து கொள்ள வகையில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை SHORTCUT PDF
 Meeran

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

விவாக ரத்து ! (கிரேக்கப் பாடல்)
 krishnanramadurai

ஏர்செல் நிறுவனம் திவால்
 krishnanramadurai

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 Dr.S.Soundarapandian

இளமையான குடும்பம்..!
 Dr.S.Soundarapandian

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

செய்க அன்பினை
 மூர்த்தி

திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த உழைப்பு
 மூர்த்தி

ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!
 Pranav Jain

மனங்களை மையல் கொள்ள செய்த மயிலு!
 Pranav Jain

கடைசி நிமிடம் வரை திக்...திக்...! கோப்பையை வென்றது இந்தியா
 ayyasamy ram

பச்சை நிற ஆடையில் ஜொலித்த ஸ்ரீதேவி! - கடைசி தருணங்கள்
 ayyasamy ram

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ponsubha74

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 ayyasamy ram

நடிகை ஸ்ரீதேவி காலமானார்
 ayyasamy ram

மதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா
 ayyasamy ram

என்னை பற்றி
 T.N.Balasubramanian

தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
 krishnanramadurai

முன்னும் பின்னும் திரும்பிய நந்தி!
 ayyasamy ram

அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
 ayyasamy ram

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம் செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம்.

View previous topic View next topic Go down

சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம் செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம்.

Post by மூர்த்தி on Sat Oct 01, 2016 5:29 pm

பதிவு நீளமானது என்பதால் பிரித்து தரப்பட்டுள்ளது.

1956-ஆம் ஆண்டில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, அதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது தமிழ்நாடு தான். மக்களின் மொழி என்ன என்பது முக்கியம் இல்லை. அங்கு உள்ள நிலம் யாருக்கு அதிகம் உரிமைப்பட்டதாக உள்ளது. அதை வைத்து சம்பந்தப்பட்ட மாநிலத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்றுதான் முடிவும் செய்யப் பட்டது.

அதன்படி கேரள எல்லையை ஒட்டி இருக்கும் தமிழ் நிலப்பகுதிகள் கேரளாவுடன் இணைக்கப்பட்டன. ஆனால், தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவைப் பிரிக்கும் போது நடந்தது என்ன தெரியுமா?
அந்தச் சமயத்தில், தெலுங்கு மொழி பேசும் மக்கள் நெல்லூர், சித்தூர் பகுதிகளில் கணிசமான எண்ணிகையில் இருந்தனர். ஆனால், நிலத்தின் உரிமையாளர்கள் தமிழர்களாகவே இருந்தனர். இருந்தாலும், சட்ட விதிகள் தலைகீழாக மாறிப் போயின. அந்தப் பகுதிகள் ஆந்திராவுக்குக் கொடுக்கப்பட்டது.

அப்போது அமைக்கப்பட்ட படாஸ்கர் கமிஷன், ‘நிலம் யாருடையது என்பது முக்கியம் அல்ல. வாழும் மக்களின் மொழிதான் முக்கியம்’ என்று சொல்லி எல்லாப் பகுதிகளையும் ஆந்திராவுடன் இணைத்தது. முதலில் சொன்னது என்ன. நிலத்திற்கு யாரிடம் அதிகமாக உரிமை இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். அது நடுவண் அரசு போட்ட கட்டளை. ஆனால், பிரிக்கும் போது கதையே வேறு மாதிரியாகப் போனது. வாழும் மக்களின் மொழிதான் முக்கியம் என்று சொல்லி, தமிழ்நாட்டுக்குச் சொந்தமான நிலத்தை எல்லாம் அண்டை மாநிலங்களுக்குத் தாரை வார்த்தார்கள்.

மங்கலங்கிழார், ம.பொ. சிவஞானம் போன்றோர் மட்டுமே படாஸ்கர் கமிஷனின் முடிவை எதிர்த்து தீவிரமாகப் போராடினார்கள். இராஜாஜியும் இவர்களுக்கு ஆதரவாக இருந்தார். இருந்தாலும், தமிழத்தின் அப்போதைய திராவிடக் கழக அரசியல்வாதிகள், (அண்ணாதுரை, கருணாநிதி) இந்த முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை. அதுதான் உண்மையிலும் உண்மை. தமிழகத்துக்கு திருத்தணி, வள்ளிமலை, திருவாலங்காடு போன்ற பகுதிகள் மட்டுமே கிடைத்தன.
avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 885
மதிப்பீடுகள் : 452

View user profile

Back to top Go down

Re: சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம் செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம்.

Post by மூர்த்தி on Sat Oct 01, 2016 5:30 pm

1960-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி, புதிதாக வரையறுக்கப்பட்ட எல்லைகளின்படி தமிழ்நாட்டுக்குச் சொந்தமான 32,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பகுதி ஆந்திராவுக்குப் போய்ச் சேர்ந்தது. எல்லையில் இருந்து எங்கேயோ இருக்கிற சேலம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்தும் 525 சதுர கிலோமீட்டர் பகுதி ஆந்திராவுக்கு வழங்கப்பட்டது. இதில் ஆரணியாறு அணைக்கட்டும் ஆந்திராவுக்குப் போய்ச் சேர்ந்தது. ஆக, அப்படி நடந்த கொடுக்கல் வாங்கலில் திருப்பதி பறிபோனது. காளஹஸ்தி போனது. நந்தி மலையும் போனது.

நந்தி மலை மட்டும் தமிழ்நாட்டுடன் இருந்து இருந்தால், இப்போது தலைவிரித்தாடும் பாலாற்றுப் பிரச்சினை வந்து இருக்கவே இருக்காது.

சென்னை நகரம் தங்களுக்கு வேண்டும் என்று முதலில் ஆந்திரா கேட்டது. முடியாது என்று தமிழர்கள் மறுத்து விட்டார்கள். அதனால் பல நிலப் பகுதிகளை தமிழர்கள் இழக்க வேண்டி வந்தது. 

திருப்பதியைக் கொடுக்கிறோம், அதற்குப் பதிலாக, எங்களுக்குச் சென்னையைக் கொடுங்கள் என்று ஆந்திரா பிடிவாதம் பிடித்தது. தமிழர்கள் முடியவே முடியாது என்று மறுத்து விட்டனர். திருப்பதியை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். சென்னையை நாங்கள் வைத்துக் கொள்கிறோம் என்று சென்னை நகரத்தைத் தக்க வைத்துக் கொண்டார்கள்.

சென்னை விவகாரத்தில் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் சிலபல போராட்டங்களை நடத்தின. ஆனால், கர்நாடகா விஷயத்தில் உஹூம். தூங்கி விட்டார்கள். செம தூக்கம். திருடு போனதுகூட தெரியாமல் தூங்கி இருக்கிறார்கள். அப்பேர்ப்பட்ட தூக்கம். வயிறு எல்லாம் பற்றிக் கொண்டு எரிகிறது என்று இப்போது தமிழர்கள் அங்கலாய்த்து என்ன பயன்.

காவிரி எங்கே உற்பத்தி ஆகிறது என்பது தெரியுமா. குடகு மலையில் உற்பத்தியாகிறது. குடகு மலை எங்கே இருக்கிறது தெரியுமா. முன்பு தமிழ்நாட்டில் இருந்தது. இப்போது கர்நாடகாவில் இருக்கிறது.

தமிழில் குடக்கு என்றால் மேற்கு என்று பொருள். அங்கு வாழும் மக்கள் பேசும் மொழி கூர்க் மொழி. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலத்திற்கு கன்னடர்களுக்கும் கூர்க் மக்களுக்கும் அரசியல் ரீதியாக விரோதங்கள். அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வார்கள். அப்படி சண்டை போடும் போது தமிழர்களும் கூர்க் மக்களுடன் சேர்ந்து கொள்வார்கள். அதனால், தமிழர்களுக்கும் கூர்க் மக்களுக்கும் நல்ல சுமுகமான உறவு முறைகள் இருந்தன. இப்போதும்கூட இருக்கின்றன. கலப்பு கல்யாணம் காட்சி எல்லாம் நடந்து இருக்கின்றன. நடந்தும் வருகின்றன.

தமிழ், மலையாளம், இருளா, கொடகு, கோடா, தோடா, கன்னடம், படகா, துளு ஆகிய இந்த ஒன்பது மொழிகளும் தென் திராவிட மொழிகள் ஆகும். திராவிட மொழிகளில் தமிழுக்கு அடுத்து வரும் மொழி மலையாளம். சிலப்பதிகாரம், பதிற்றுப்பத்து, புறநானூறு போன்ற சங்க இலக்கியங்கள் சேர நாட்டில் உருவானவை. சேர நாடு என்றால் கேரளம். சிலப்பதிகாரத்தைப் பற்றி நாம் எவ்வளவு பெருமையாகப் பேசினாலும், அது கேரள மண்ணில் இருந்து வந்தது. அதை மறந்துவிடக் கூடாது.
avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 885
மதிப்பீடுகள் : 452

View user profile

Back to top Go down

Re: சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம் செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம்.

Post by மூர்த்தி on Sat Oct 01, 2016 5:31 pm

கன்னட மொழி, கர்நாடக மாநிலத்தில் பேசப்படும் மொழி. கர்நாடகம் எனும் வடசொல் திரிந்து கன்னடம் ஆனது. இருளர்கள் பேசும் மொழி இருளா. நீலகிரி மலைப் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள்தான் இந்த இருளர்கள்.

கொடகு மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது. அந்த மொழியில் இலக்கியங்கள் இல்லை. நீலகிரி மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடி இனத்தினர் கோடர்கள். இவர்கள் பேசும் மொழி கோடா மொழி. ஏறக்குறைய 900 பேர் கோடா மொழியைப் பேசுகின்றனர்.

நீலகிரி மலைப் பகுதிகளில் வாழும் மற்றொரு பழங்குடி இனத்தவர் தோடர்கள். இவர்கள் பேசும் மொழி தோடா மொழி. 800 பேர் பேசுகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர்ப் பகுதிகளில் வாழும் படகர்கள் பேசும் மொழி படகா மொழி. 70 ஆயிரம் மக்கள் இந்த மொழியைப் பேசுகின்றனர். படகா மொழி கன்னட மொழியோடு நெருங்கிய தொடர்பு உடையது. 

மைசூர் மாவட்டத்தில், சந்திரகிரி, கல்யாணகிரி ஆறுகள் ஓடுகின்றன. அந்த இரு ஆறுகளுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியில் துளு மொழி பேசப்படுகிறது. ஐந்து இலட்சம் பேர் துளு மொழி பேசுகின்றனர். தென் திராவிடக் கிளையில் இருந்து துளு, கன்னடம், கோடா, தோடா, கொடகு, மலையாளம் போன்றவை படிப்படியாகப் பிரிந்து சென்ற மொழிகளாகும்.

சரி. கூர்க் மக்கள் விஷயத்திற்கு வருவோம். மொழிவாரி மாநிலப் பிரிவினை வந்த போது ‘மொழி, கலாச்சார அடிப்படையாக இருக்கும் தமிழ்நாட்டோடு நாங்கள் சேர்ந்து கொள்கிறோம்’ என்று கூர்க் மக்கள் பகிங்கரமாகச் சொன்னார்கள். அதை அப்போதைய தமிழ்நாட்டுத் தலைவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏன் என்றால் கூர்க் மக்கள் எண்ணிக்கையில் அதிகம் இல்லை. இந்தச் சின்ன அல்வாத் துண்டுகள் தேவை இல்லை என்று நினைத்து இருக்கலாம்.

கூர்க் மக்கள், தமிழ்நாட்டுடன் இணைய ஆசைப்பட்டு, கன்னடர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தினர். போராட்டம் செய்தனர். அந்த நேரம் பார்த்து, தமிழர்கள் கொஞ்சம் கண் காட்டி இருந்தால் போதும். கூர்க் மக்கள் ஓடோடி வந்து தமிழர்களுடன் ஒட்டிக் கொண்டு இருப்பார்கள்.

அவர்கள் அப்படி தமிழகத்தோடு இணைந்து இருந்தால், தமிழ்நாட்டு வரலாற்றையே திருப்பிப் போட்டு இருக்கலாம். குடகு நாடு தமிழ்நாட்டுடன் வந்து சேர்ந்து இருக்கும். காவிரித்தாய் கண்கலங்கி இருக்க மாட்டாள். காவிரிப் பிரச்சினை என்கிற ஒரு பிரச்சினையே வந்து இருக்காது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் பதராகிப் போய் இருக்காது.

ஆனால், கன்னடர்கள் திட்டமிட்டுப் போராடினார்கள். அதனால், முறைப்படி தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய பெங்களூரு, மைசூர் மாவட்டத்தின் ஒரு சில இடங்கள், கோலார் தங்கவயல் போன்ற பொன்னான பூமிகள் கர்நாடகாவுக்குத் தாரை வார்க்கப்பட்டன.
avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 885
மதிப்பீடுகள் : 452

View user profile

Back to top Go down

Re: சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம் செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம்.

Post by மூர்த்தி on Sat Oct 01, 2016 5:41 pm

உண்மையிலேயே பெங்களூரு நகரம் தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய இடம். திருப்பதியும் தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய இடம். 1956-இல், இந்தியாவின் மாநிலங்கள் மொழி வாரியாகப் பிரிக்கப்பட்டன. ஒரு மாநிலத்துடன் வேறொரு மாநிலத்தில் உள்ள ஒரு பகுதி இணைக்கப்பட வேண்டும் என்றால் முதலில் நிலத் தொடர்பு இருக்க வேண்டும். அடுத்து மொழித் தொடர்பு இருக்க வேண்டும். அதுதான் நடுவண் அரசு முதலில் சொன்ன விதி முறை.

பெங்களூரு (Bangaloore) பிரச்சினை ஓசூரில்(கன்னடச் சொல்-புதிய ஊர் என்பது பொருள்.சோழர் காலத்தில் செவிடபாடி) ஆரம்பிக்கிறது. ஓசூர் என்பது இப்போது தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பகுதி. வடக்கே தமிழக - கன்னட எல்லையில், பெங்களூருக்கு மிக அருகில் இருக்கிறது. இந்த ஓசூரில் 1950-களில் தெலுங்கு பேசுவோர் 45 சதவிகிதம் இருந்தனர். அடுத்து, கன்னடம் பேசுவோர் 40 சதவிகிதம் இருந்தனர். தமிழ்மொழி பேசுபவர்கள் 10 சதவிகிதம் மட்டுமே இருந்தனர். எஞ்சியவர்கள் வடநாட்டுக்காரர்கள்.

ஓசூரில் தெலுங்கு பேசும் மக்களே அதிகமாக இருந்தனர். அந்தத் தெலுங்கு பேசும் மக்கள் பல நூறு ஆண்டுகளாக ஆந்திராவோடு நிலத்தொடர்பு இல்லாமல் இருந்தனர். மொழி வாரியாக நிலப் பகுதிகள் பிரிக்கப்படும் போது ஓசூர் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லி விட்டது ஆந்திரா.

ஓசூர் என்பது ஒரு வறண்ட பூமி. நிறைய பொட்டல் காடுகள். மொழுக்கையான குன்றுகள். வழுக்கலான மலைகள். மொட்டையான தாவரங்கள். இயற்கையான முறையில் பச்சைகள் வளர்வது ரொம்பவும் கடினம். அதனால் அங்கே விவசாயமும் குறைவு. விளைச்சலும் குறைவு.

ஆந்திராவோடு நிலத் தொடர்பு இல்லை என்பதால் ஓசூர் எங்களுக்கு வேண்டாம் என்று ஆந்திரா மறுத்து விட்டது.அடுத்து 40 விழுக்காட்டு மக்கள் கன்னடர்கள். ஆக அடுத்த நிலையில் கன்னடம் பேசுவோர் அதிகம் இருந்ததால் அதைக் கர்நாடகா மாநிலத்துடன் தானே இணைத்து இருக்க வேண்டும்.

கர்நாடகாவும் வேண்டாம் என்று சொல்லி விட்டதால், தமிழகத்திற்கு மனமுவந்து கொடுக்கிறோம் என்று சொல்லி ஓசூரை விட்டுக் கொடுத்து விட்டார்கள். ஆனால் கன்னடம் அங்கேதான் தன் சாணக்கியச் சதுரங்கக் காய்களை நல்லபடியாக நகர்த்தி இருக்கிறது. அப்போது பெங்களூரு நிலப்பகுதி தமிழகத்திற்குச் சொந்தமாக இருந்தது. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு பெங்களூரு விவகாரம் தலைதூக்கியது. அதாவது பெங்களூருவை யாருக்கு கொடுப்பது என்கிற விவகாரம். அப்போது தான் கன்னடம் தன் துருப்புச் சீட்டைத் தூக்கிப் போட்டது.

நாங்கள் ஓசூரைப் கொடுத்து விட்டோம். ஓசூரில் கன்னட மக்கள் அதிகம் இருந்தாலும் நாங்கள் பெருந் தன்மையுடன் ஓசூரைத் தமிழகத்துக்குக் கொடுத்து இருக்கிறோம். அதே மாதிரி பெங்களூருவில் அதிகமான தமிழர்கள் இருந்தாலும் பெங்களூருவைத் தமிழகம் எங்களுக்குத் தர வேண்டும் என்றது.

பெங்களூரில் கன்னடம் பேசும் மக்களை விட தமிழ் பேசும் மக்களே அதிகம். கன்னட மக்கள் அதிகம் உள்ள ஓசூரை நாங்கள் கொடுக்கும் போது தமிழர்கள் அதிகம் உள்ள பெங்களூரை ஏன் எங்களுக்குக் கொடுக்கக் கூடாது.

பெங்களூரு நிலப்பகுதி தமிழகத்திற்குச் சொந்தமானது. வேறுவழி இல்லாமல் பெங்களூருவைத் தமிழகம் கன்னடத்திற்குத் தானம் செய்தது. தமிழர்கள் அழுது கொண்டே பெங்களூருவை வழி அனுப்பி வைத்தார்கள்.

தமிழகம் அதற்குச் சொந்தமான பல நிலப் பகுதிகளை இழந்ததற்கு முக்கியக் காரணம் வேறு யாரும் இல்லை. அப்போது தமிழகத்தில் இருந்த வாய்ச்சவடால் அரசியல்வாதிகள் தான். அவர்களிடம் மண் சார்ந்த உணர்வு கொஞ்சம்கூட இல்லாமல் போனதுதான் வேதனையிலும் வேதனை.

இப்போது அழுது புலம்பி என்ன பயன். கொஞ்சம் கெட்டிக்காரத் தனமாக இருந்து இருந்தால் இப்போது தலைவிரித்தாடும் காவிரிப் பிரச்சினையும் வந்து இருக்காது. முல்லைப் பெரியாறு பிரச்சினையும் வந்து இருக்காது.
avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 885
மதிப்பீடுகள் : 452

View user profile

Back to top Go down

Re: சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம் செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம்.

Post by T.N.Balasubramanian on Sat Oct 01, 2016 5:56 pm

வயிற்றெரிச்சலை கிளப்பும் விரிவான அருமையான தகவல்கள் மூர்த்தி .
Facts and Figures இப்போது நமக்கு உதவாது .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21175
மதிப்பீடுகள் : 8099

View user profile

Back to top Go down

Re: சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம் செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம்.

Post by M.Jagadeesan on Sat Oct 01, 2016 6:45 pm

அறியாதன அறிந்துகொண்டோம் ! நல்ல பதிவு !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4913
மதிப்பீடுகள் : 2346

View user profile

Back to top Go down

Re: சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம் செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம்.

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum